ஓணம்பாக்க நாகமலை கல்வெட்டு

10 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 4, 2026, 7:22:07 AM (2 days ago) Jul 4
to வல்லமை, hiru thoazhamai
                                                                                                                ஓணம்பாக்க நாகமலை கல்வெட்டு

image.png        image.png


#வசுதேவ_சித்தாந்த #படாரர்_செய்வித்த_தேவாரம்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
An inscription on the south side of this bas relief (miniature temple) describes that,
this image of Sri Parswanatha Bhagwan /temple was constructed by
Muni Sri Chaturvamsati Sthavaka Vasudeva Siddhanth Patara at nagamalai hills,Onampakkam.
Nagamalai, Onampakkam, Mathuranthagam Taluk, Kanchipuram District, Tamil nadu.

ஓணம்பாக்கத்தில் உள்ள நாகமலை/ குரத்தி மலை /கருப்பங்குன்று எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் இம்மலை பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.

மலைக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றதும் கிழக்கு நோக்கிய
ஸ்ரீ பார்ஸ்வநாதரின் திருவுருவம் செதுக்கப்பட்ட பாறையைக் காண்கிறோம்.

அழகுற அமைக்கப்பட்டுள்ள தேவ கோட்டம் /கோவில் போன்ற அமைப்பில்
ஸ்ரீ பார்ஸ்வநாத பகவான் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்.

காயோத்சர்க நிலையிலான பகவானின் தலையின் மீது ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. அண்ணலின் இடது புறம் ஸ்ரீ பத்மாவதி இயக்கியும் வலப்புறம் மண்டியிட்ட நிலையில் ஸ்ரீ தரணேந்திர இயக்கனும் தொழுத நிலையில் காணப்படுகின்றனர்.
இருபுறமும் சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன.
பாறையின் மேற்பகுதியில் கி.பி.7 _8ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.
"ஸ்ரீ சதுத்வீம்
சதி ஸதாவ கவ
ஸுதேவ சித்தா
ந்த படாரர்
ஜெய்வித்த
தேவாரம்"
பின் வருவது பேராசிரியர் முனைவர் த.ரமேஷ் அவர்களின் பாடம்.
"ஸ்ரீ சதுர் விம்
சதி ஸ்தாபக வ
சுதேவ சித்தா
ந்த படாரர்
செய்வித்த
தேவாரம்"
பேராசிரியரின் பாடமே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
தேவாரம் எனும் சொல்லுக்கு,
i) (அரசர்) தனியாக வழிபடும் வீட்டுக் கோவில்
("நம் தேவாரத்து திருப்பதியம் பாடும்"_SII,viii,749.)
ii) விக்கிரகம்
("ஸ்வஸ்திஸ்ரீ வேலி கொங்கரையர் புத்தடிகள் செய்வித்த தேவாரம்"_EI,xxix,28(i) )
எனக் கல்வெட்டுச் சொல்லகராதி (ப.333)
பொருள் கூறுகிறது.
எனவே ஸ்ரீ சதுர்விம்சதி ஸ்தாபக வசுதேவ படாரர் எனும் சமண முனிவர் இக்கோவிலை / இத்திருவுருவத்தைச் செய்வித்தார் எனக் கொள்ளலாம்.

சதுர்விம்சதி என்றால் 24 என்று பொருள்.
Chaturvimsati Stava (or Stotra): Also known as the Logassa sutra, this is a very common daily prayer / hymn that praises and pays obeisance to all 24 Tirthankaras. [1, 2]
Reply all
Reply to author
Forward
0 new messages