இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (57) மூளைக் காய்ச்சல் குருவி

242 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 8, 2015, 2:04:50 AM11/8/15
to A K Rajagopalan, தமிழ் சிறகுகள், Thamizhthendral, வல்லமை, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, pals...@googlegroups.com, bcc: Ganchu, ganesh, Geetha Natarajan, Gopi, Gopi Rajagopal, H. Venkatesh, Jayashree Iyer, K.N.Rajalakshmi, Kiran Iyer, Kumar, Kumar Kalpat, Kumar Subramanim, Lalitha Rajagopalan, Mani, mythili, Nandha Kishore, Nimmu Kumar, Nisha Iyer, Prasanna, R. Ganesh, Raj Sriram, Rajaram Naraayanan, Ram Kalpat, Ram Kalpat, Ramnath Iyer, Ramu, sashisri, Sekhar @ Krishnan Kalpat Subramanian, Shankar, Srikant, Sundaram N M, Swaroon Sridhar, V rajaraman, vidhya sundar, vidh...@hotmail.com, crazy.mohan, Dr. Udhayaraja, Indhu Madhavan, jayasree shanker, Koothanainar SRS, Krishnan V.R., Mohan Aiyaswami, Muralidharan Sourirajan, N.Srinivasan, Narasimhan C R, narender...@rediffmail.com, P. N. Subramaniam, Padma Vasantharaajan, R. Vaidhyanathan, Rajagopal Subramaniyam, Raji, Ramakrishnan K S, Ramalakshmi Rajan, Ramya, Shoba, Subashini Tremmel, subramanian Subramanian, Sulochana Suriyanarayanan, Sumathy Ramesh, sundar rajagopal, Suri siva, Velaydham Sankaranarayanan, velayudan sankaranarayana, VV Ramesh, அப்பண்ணா, ச. கம்பராமன், சுந்தர்ஜி ப்ரகாஷ், Kaviyogi Vedham

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (57)

மூளைக் காய்ச்சல் குருவி

Inline image 1

மூளைக் காய்ச்சல் குருவி (Brain fever bird) என்றொரு பறவை.  குயிலினத்தைச் சேர்ந்த பறவை இது.  அதற்கு விஞ்ஞான ரீதியாய் அளிக்கப் பட்ட பெயர் hierococcyx varius என்பதாகும்.

தமிழ் நாட்டில் இப் பறவையை ‘குசில்’ என்று அழைப்போரும் உண்டு.  ‘விசில்’ (சீட்டி) அடிப்பது போன்று கீச்சுக் குரலில் கூவிடும் குயில்  இது என்பதால் வந்திருக்குமோ அந்தப் பெயர்!

வட இந்தியாவில் இதன் பெயர் “பீ கஹான்?” (“காதலி எங்கே?”  காரணம் அது துணை தேடிக் கூவிட எழுப்பும் ஒலி பீ கஹான் என்போலத் தானே இருக்கிறது!

இந்தப் பறவைக்கும், நம் தோட்டங்களில் காணும் குரலுக்கு இலக்கணமான குயில் போலவே, கூடு கட்டி, முட்டையிடுக் குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரையூட்டி வளர்த்திடத் தெரியாது.  வேறு பறவைகளின் கூடுகளில் தான் முட்டையிடும்.  இப் பறவையின் முட்டையின் நிறம், தவிட்டுக் குருவியின் முட்டை போன்றே அழகான நீலப் பச்சை நிறம்.  அதனால் இந்தப் பறவை தவிட்டுக் குருவியின் கூட்டைத் தேடி அதில் முட்டை இடும்.

Inline image 2

(தவிட்டுக் குருவியின் முட்டைகள்)

முட்டையில் இருந்து வெளி வந்த சில நாட்களுக் குள்ளாகவே தவிட்டுக் குருவையின் முட்டைகளை நெட்டி நெட்டி வெளியே தள்ளி விடும் வீட்டை ஆக்கிரமித்த இந்தத் திருடன்.  சூதறியா தவிட்டுக் குருவியும், அதன் குழந்தைகளைக் கொன்ற கொலை பாதகனுக்கு உணவு ஊட்டி வளர்த்திடும்.

ஒரு கொலை பாதகன் முட்டைகளை வெளித் தள்ளுவதை  கீழுள்ள யூட்யூப் காணொளியில் பார்க்கலாம். (காணொயில் இருப்பது தவிட்டுக் குருவியின் கூடு அல்ல)

https://www.youtube.com/watch?v=SO1WccH2_YM

இப் பறவைக்கு இரண்டு விசேஷங்கள் உண்டு.  ஒன்று இதன் உணவுப் பழக்கம்.  மற்றொன்று துணை தேடும் காலத்தில் ஆண் பறவை பெண் பறவையை ஈர்த்திடக் கூவி அழைத்திடும் விதம்.

கம்பளிப் பூச்சியைக் கண்டால் நம்மில் பலருக்கும் குலை நடுக்கம்.  காரணம் அவை நம் மேல் பட்டாலே போதும்.  அடுத்த ஐந்து நாட்களுக்கு அரிப்பு தாங்க முடியாது.  பல பறவைகளும் கம்பளிப் பூச்சிகளை உண்பதைத் தவிர்த்திடும்.  ஆனால் அதே கம்பளிப் பூச்சி இந்தப் பறவைக்கு மிகவும் பிடித்த உணவு.

குளிர் காலத்தில் இருக்கும் இடம் தெரியாது இருந்திடும் இப் பறவையின் ஆண் குருவி கோடை காலம் ஆரம்பித்த உடனே (மார்ச்சு மாதம்) தனது சங்கீத பாடத்தினை ஆரம்பித்திடும்.  இதன் கூவல் “ப்ரெய்ன் ஃபீவர்… ப்ரெய்ன் ஃபீவர்” என்று சொல்வது போல இருக்கும். ஆனால் அதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், முதலில் மெல்ல ஆரம்பித்திடும் “ப்ரெய்ன் ஃபீவர்” என்ற ஒலி போகப் போக அதன் தொனி அளவிலும், சுருதியிலும் ஏறிக் கொண்டே போகும்,  இப்படி சுமார் ஆறு அல்லது ஏழு முறை கூவிய பின் திடீரென நின்று விடும்.  சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் முதலில் இருந்து துவங்கும் அதே பாணியில்.

இதோ ஒரு மூளைக் காய்ச்சல் குருவி கூவிடுது பாருங்கள் உங்களுக்காக:

https://www.youtube.com/watch?v=N078QZW

(இந்த வகைக் குயில் கூவிடுவதையும், கம்பளிப் பூச்சியினை ஆவலுடன் உண்பதையும் நான் கோடியக் கரையில் (Point calimere) (நேரில் கண்டு ரசித்திருக்கிறேன்.)

08-11-2015                       நடராஜன் கல்பட்டு

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 8, 2015, 2:13:44 AM11/8/15
to A K Rajagopalan, தமிழ் சிறகுகள், Thamizhthendral, வல்லமை, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, pals...@googlegroups.com, bcc: Ganchu, ganesh, Geetha Natarajan, Gopi, Gopi Rajagopal, H. Venkatesh, Jayashree Iyer, K.N.Rajalakshmi, Kiran Iyer, Kumar, Kumar Kalpat, Kumar Subramanim, Lalitha Rajagopalan, Mani, mythili, Nandha Kishore, Nimmu Kumar, Nisha Iyer, Prasanna, R. Ganesh, Raj Sriram, Rajaram Naraayanan, Ram Kalpat, Ram Kalpat, Ramnath Iyer, Ramu, sashisri, Sekhar @ Krishnan Kalpat Subramanian, Shankar, Srikant, Sundaram N M, Swaroon Sridhar, V rajaraman, vidhya sundar, vidh...@hotmail.com, crazy.mohan, Dr. Udhayaraja, Indhu Madhavan, jayasree shanker, Koothanainar SRS, Krishnan V.R., Mohan Aiyaswami, Muralidharan Sourirajan, N.Srinivasan, Narasimhan C R, narender...@rediffmail.com, P. N. Subramaniam, Padma Vasantharaajan, R. Vaidhyanathan, Rajagopal Subramaniyam, Raji, Ramakrishnan K S, Ramalakshmi Rajan, Ramya, Shoba, Subashini Tremmel, subramanian Subramanian, Sulochana Suriyanarayanan, Sumathy Ramesh, sundar rajagopal, Suri siva, Velaydham Sankaranarayanan, velayudan sankaranarayana, VV Ramesh, அப்பண்ணா, ச. கம்பராமன், சுந்தர்ஜி ப்ரகாஷ், Kaviyogi Vedham
எனது மடலில் விட்டுப் போன வரிகள்:

மூளைக் காய்ச்சல் குருவி படம் பிடித்தது: நிதிங்க் பூத்துள்ளி.

தவிட்டுக் குருவி முட்டை படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 8, 2015, 9:43:29 AM11/8/15
to A K Rajagopalan, தமிழ் சிறகுகள், Thamizhthendral, வல்லமை, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, pals...@googlegroups.com, bcc: Ganchu, ganesh, Geetha Natarajan, Gopi, Gopi Rajagopal, H. Venkatesh, Jayashree Iyer, K.N.Rajalakshmi, Kiran Iyer, Kumar, Kumar Kalpat, Kumar Subramanim, Lalitha Rajagopalan, Mani, mythili, Nandha Kishore, Nimmu Kumar, Nisha Iyer, Prasanna, R. Ganesh, Raj Sriram, Rajaram Naraayanan, Ram Kalpat, Ram Kalpat, Ramnath Iyer, Ramu, sashisri, Sekhar @ Krishnan Kalpat Subramanian, Shankar, Srikant, Sundaram N M, Swaroon Sridhar, V rajaraman, vidhya sundar, vidh...@hotmail.com, crazy.mohan, Dr. Udhayaraja, Indhu Madhavan, jayasree shanker, Koothanainar SRS, Krishnan V.R., Mohan Aiyaswami, Muralidharan Sourirajan, N.Srinivasan, Narasimhan C R, narender...@rediffmail.com, P. N. Subramaniam, Padma Vasantharaajan, R. Vaidhyanathan, Rajagopal Subramaniyam, Raji, Ramakrishnan K S, Ramalakshmi Rajan, Ramya, Shoba, Subashini Tremmel, subramanian Subramanian, Sulochana Suriyanarayanan, Sumathy Ramesh, sundar rajagopal, Suri siva, Velaydham Sankaranarayanan, velayudan sankaranarayana, VV Ramesh, அப்பண்ணா, ச. கம்பராமன், சுந்தர்ஜி ப்ரகாஷ், Kaviyogi Vedham
மூளைக் காய்ச்சல் குருவியின் குரல் கொண்ட யூட்யூப் லிங்க் வேலை செய்ய வில்லை.  பதிலாக இந்த லிங்கைப் பார்க்கவும்:

2015-11-08 12:34 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:

Hari Krishnan

unread,
Nov 8, 2015, 10:01:32 AM11/8/15
to vallamai

2015-11-08 20:13 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
மூளைக் காய்ச்சல் குருவியின் குரல் கொண்ட யூட்யூப் லிங்க் வேலை செய்ய வில்லை.  பதிலாக இந்த லிங்கைப் பார்க்கவும்:

2015-11-08 20:13 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
மூளைக் காய்ச்சல் குருவியின் குரல் கொண்ட யூட்யூப் லிங்க் வேலை செய்ய வில்லை.  பதிலாக இந்த லிங்கைப் பார்க்கவும்:

இந்தப் பறவையின் கூவல் ப்ரெயின் ஃபீவர்.. ப்ரெயின் ஃபீவர் என்று சொல்வதைப் போலிருப்பதால் இந்தப் பெயர் என்று கென்னத் ஆன்டர்சன் சொல்கிறார்.  அவருடைய Nine Man Eaters and One Rogue புத்தகத்திலிருந்து:

All at once the strident belling of an alarmed sambar
broke the silence and was persistently followed by a succes
sion of similar calls from a spot I judged to be about half
a mile away. These were followed by the sharp cry of
spotted-deer, and echoed up the nullah by a restless brainfever
bird in his weird call of 'brain-fever, brain-fever', re
peated in rising crescendo.
I breathed a sigh of relief and
braced my nerves and muscles for final action. My friends,
the night-watchmen of the jungle, had faithfully accom
plished their task and I knew the tigress was approaching
and had been seen.

(The Man Eater of Jowlagiri--ஆட்கொல்லிப் புலியின் வரவுக்காகக் காத்திருந்த சமயத்தில்)

பறவையின் கூவலைக் கேட்டால் அது அப்படிச் சொல்வதுபோல்தான் இருக்கிறது.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Nov 8, 2015, 10:43:05 AM11/8/15
to vallamai

2015-11-08 20:31 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
இந்தப் பறவையின் கூவல் ப்ரெயின் ஃபீவர்.. ப்ரெயின் ஃபீவர் என்று சொல்வதைப் போலிருப்பதால் இந்தப் பெயர் என்று கென்னத் ஆன்டர்சன் சொல்கிறார்.  அவருடைய Nine Man Eaters and One Rogue புத்தகத்திலிருந்து:

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் வீட்டுக்கருகில் இது கத்திக் கொண்டிருந்தது.  கென்னத் ஆன்டர்சனின் வர்ணனை நினைவுக்கு வர  'இதென்ன, இதுதான் அந்த ப்ரெயின் ஃபீவர் கூவலா' என்று யூட்யூபில் தேடியபோது நான் பார்த்ததும் இதே விடியோவைத்தான்.  காட்டுக் கத்தல் கத்தும்.  :)

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 8, 2015, 10:50:19 AM11/8/15
to வல்லமை
ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஒரு முறை கோடியக் கரை சென்று வந்த போது இப்பறவையில் குரலை பதிவு செய்திருந்தேன் ஒரு கேசெட்டில்.  அந்த கேசெட் இப்போது எங்கோ தொலைந்து விட்டதோ (அதுவும் பறந்து விட்டதோ அந்த மூளைக் காய்ச்சல் குருவி போலவே?)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 8, 2015, 5:21:26 PM11/8/15
to வல்லமை, மின்தமிழ், housto...@googlegroups.com

On Sunday, November 8, 2015 at 7:50:19 AM UTC-8, Natrajan Kalpattu Narasimhan wrote:
ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபதுகளில் ஒரு முறை கோடியக் கரை சென்று வந்த போது இப்பறவையில் குரலை பதிவு செய்திருந்தேன் ஒரு கேசெட்டில்.  அந்த கேசெட் இப்போது எங்கோ தொலைந்து விட்டதோ (அதுவும் பறந்து விட்டதோ அந்த மூளைக் காய்ச்சல் குருவி போலவே?)

குசில் பறவையின் குரலை இங்கே கேட்கலாம்:
சிரீஷ்குமார் பாட்டீல் எழுதுகிறார்:
Published on Sep 30, 2014

The common hawk-cuckoo (Hierococcyx varius), popularly known as the brainfever bird, is a medium-sized cuckoo resident in the Indian subcontinent. It bears a close resemblance to the Shikra, a sparrow hawk, even in its style of flying and landing on a perch. The resemblance to hawks gives this group the generic name of hawk-cuckoo and like many other cuckoos these are brood parasites, laying their eggs in nests of babblers. During their breeding season in summer males produce loud, repetitive three note calls that are well-rendered as brain-fever, the second note being longer and higher pitched. These notes rise to a crescendo before ending abruptly and repeat after a few minutes; the calling may go on through the day, well after dusk and before dawn.The common hawk-cuckoo is a medium- to large-sized cuckoo, about the size of a pigeon (ca. 34 cm). The plumage is ashy grey above; whitish below, cross-barred with brown. The tail is broadly barred. The sexes are alike. They have a distinctive yellow eye ring. Subadults have the breast streaked, similar to the immature shikra, and there are large brown chevron marks on the belly At first glance they can be mistaken for a hawk. When flying they use a flap and glide style that resembles that of sparrowhawks (especially the shikra) and flying upwards and landing on a perch they shake their tails from side to side.During summer months, before the monsoons, the males are easily detected by their repeated calls but can be difficult to spot. The call is a loud screaming three-note call, repeated 5 or 6 times, rising in crescendo and ending abruptly. It is heard throughout the day and frequently during moonlit nights.Like many other cuckoos, this species is a brood parasite, preferring babblers mainly in the genus Turdoides (possibly the only host) and also reportedly on laughing-thrushes of the genus Garrulax.Its breeding season is March to June, coinciding with that of some of the Turdoides babblers. A single egg is laid in each nest, blue, like that of the host. The hatchling usually evicts the eggs of its host and is reared to maturity by foster parents, following them for nearly a month.T C Jerdon noted that it may not always evict the host and that young birds may be seen along with young babblers.When moving with a flock of babblers the chick makes a grating kee-kee call to beg for food and the foster parents within the group may feed it.

N. Ganesan

unread,
Nov 8, 2015, 10:42:57 PM11/8/15
to வல்லமை, housto...@googlegroups.com, mintamil

On Saturday, November 7, 2015 at 11:04:50 PM UTC-8, Natrajan Kalpattu Narasimhan wrote:

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (57)

மூளைக் காய்ச்சல் குருவி

Inline image 1

மூளைக் காய்ச்சல் குருவி (Brain fever bird) என்றொரு பறவை.  குயிலினத்தைச் சேர்ந்த பறவை இது.  அதற்கு விஞ்ஞான ரீதியாய் அளிக்கப் பட்ட பெயர் hierococcyx varius என்பதாகும்.

தமிழ் நாட்டில் இப் பறவையை ‘குசில்’ என்று அழைப்போரும் உண்டு.  ‘விசில்’ (சீட்டி) அடிப்பது போன்று கீச்சுக் குரலில் கூவிடும் குயில்  இது என்பதால் வந்திருக்குமோ அந்தப் பெயர்!

கல்பட்டாரே,

எம். ஏ. பாத்ஷா, மா. கிருஷ்ணன், பேரா. க. இரத்தினம் (கீரனத்தம், கோவை, தமிழ்ப் பேரா. + பறவையியலர்) குசில் என்ற பெயரை ப்ரெய்ன் ஃஃபீவர் பறவைக்கு பதிவு செய்துள்ளனர். குசிலின் குரல் ’brainfever, brainfever, brainfever," என கேட்டதாக நம் ஊருக்கு வந்த வெள்ளைக்காரர் புதுப்பெயர் கொடுத்துள்ளனர். அதனை நாம் மொழிபெயர்க்க தேவையில்லை. ஏனெனில், மூளைக்காய்ச்சலுக்குக் காரணம் இந்தப் பறவை என தவறாகப்
புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். 

--------------------

சிவந்த நிறம் போர்த்தியதால் செம்போத்து என்கிறோம். செம்பு கப்பிரத்தியம் பெற்று செம்புகம் (அ) செம்பகம் ஆகிறது. 
இது குகில் (> குசில் > குயில்) இனம். ஆதலால் செம்போத்துக்கு குக்கில் எனவும் பெயர்: சில குயில் இனங்களுக்கு குசில் 
என்றே பெயர். இசை, நாட்டியம், நடிப்பு இவற்றில் சிறந்தோர்  குசிலவர் (தெலுங்கில்). எனவே, Kuchipudi நடனம். 
தெலுங்கில் குசில் பெயரால் கலையே இருக்கிறது. இலங்கையிலும் இப் பறவை பெயரை மக்களுக்கு வைக்கின்றனர்.
குசில் குணசேகர என்னும் துடுப்பாட்டக்காரர் (க்ரிக்கெட் விளையாடி) இப்பறவை பெயர் காண்கிறோம். 

குக்கில் என்னும் செம்போத்து - இலக்கியத்தில் (பழைய மடல்):
நாட்டுப்புறங்களில் உள்ள குயில் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை செம்போத்து. சிவப்பு நிறம் இறக்கைகளில் போர்த்தி இருப்பதால்
செம்போ(ர்)த்து = செம்போத்து. செம்பு நிறத்தில் உள்ளதால் செம்புகம் எனவும் பெயர். செம்போத்தை மக்கள் வளர்த்திப் பழக்குதல் இல்லை.
அ. மாதவையா மகன் மா. கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் எழுதியுள்ள குறிப்பு:
http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk05/images/lkk05169.jpg

கோழி இனத்தைச் சேர்ந்தது செங்காடை. இதனைச் செம்பூழ் என்று சங்க இலக்கியம் கூறும். காடைச் சாதிப் பறவைகளை
இன்னொரு மடலில் பார்க்கலாம். செம்பூழ்ப் பறவையை வளர்த்தலாம். வாரணம் என்றால் யானை, கோழி, பூழ் (=காடை) இனங்களின்
ஆண். இவற்றைப் போரிடச் செய்யப்பழக்குவதுண்டு. இலக்கியம் 3 வகை வாரணப் போர்களையும் பதிந்துள்ளது.
தமிழ் விக்கிபீடியாவில் செம்பூழ் பறவைப் பேரை செம்போத்துடன் இணைத்துப் போட்டிருக்கிறார்கள். ஆனால்,
செம்போத்து (= குக்கில், இது குகில் இனம்) வேறு. செம்பூழ் (பூழ் = காடை இனம்) வேறு. திருத்தப்படவேண்டியது.
கிராமத்துக்காரர்களைக் கேட்டால் செங்காடை (= செம்பூழ். பூழ் < புழுதி. புழுதியில் வாழும், புழுதி நிறமான பூழான், பூழி/பூணி (திருப்பூணித்துறை) ) அடையாளம் காட்டுவர். குக்கில் எனப்படும் குகில்/குயில் இனஞ்சார்ந்த செம்போத்து வேறான பறவை.
செம்பூழை, இன்னும் பல வகைக் காடைகளை புதையுள்ள தோட்டத்தில் வளர்த்தலாம் - கோழி போல. ஆனால், செம்போத்தை வளர்த்த முடியாது.

கூ என்னும் ஒலிக்குறிப்பு கூகு (அ) கூவு என்ற வினைச்சொல் ஆகிறது. கூகு- கோகிலம். கன்னடத்தில் குகில். தமிழில் குயில் ஆகிறது.
(1) விடிகாலை > விடியால/வெடியால (பேச்சுவழக்கு) (2) சாகிபு > சாயபு (3) உகிரு > உசிரு > உயிர் (4) சகசிரம் > சாசிரம்/சாயிரம் > ஆயிரம் ...
போல, தமிழ் குகில் என்னும் வார்த்தையைக் குயில் ஆக்குகிறது. குயில் < குகில் (கூகு- = கூவு- என்னும் வினை).

நா. கணேசன்

“போத்தொடு வழங்கா மயிலு மெழாலும்.” என்கிற தொல்காப்பிய உரையில் வரும் போத்து = செம்போத்து.

-------------------------------------------
குயில் இனத்தைச் சார்ந்த செம்போத்து குக்கில் எனப்படுகிறது.
முல்-/முன்- : முலை/முல்லை. அதுபோல், குகில்/குக்கில் < கூகு-. குகில் = குயில். குக்கில் = செம்போத்து
சமணர்களின் திருப்பாவையை யாப்பருங்கல உரை:
'(42) கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந்
தாழியு ணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் 
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியு 37மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.'
 
     மேல் நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்று வரையறத்துச் சொன்னார் (கா. 33); இஃது ஐந்தடியான் வந்த தாயினும் ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின் பாற்படுத்தி வழங்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. இஃது அவினயனார் காட்டியது.
-------------------
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
                கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்
                குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை        பொருகாடை
           குயில்பு றாமயில் 
குக்கில் சுரும்பினம்
                வனப தாயுத மொக்கு மெனும்படி
                குரல்வி டாஇரு பொற்குட மும்புள            கிதமாகப்

------------------------------------------------------------------------------------------------------------------------------------
செம்போத்து என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், அப்பொருட்கு அது பெயரென்க. பெருவண்ணான், பெருங்கொல்லன் என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், பண்பாவது தமக்குள்ள தோரியல்பு: ஈண்டப்பெருமையியல் பன்மையான், அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முற்றா முலையெனுஞ் சக்கர வாக முதல்வநின்கைப்
பொற்றா மரையிற் பகன்மகிழ் கூர்தலும் பொங்கிருளிற்
பற்றா நினது முகமதி யாலுயிர்ப் பாவைமுகத்
துற்றார் சகோரங் களித்தலுங் குன்றத் துறுவனவே.

சகோரம் - நிலவருந்துபுள். இதனைச் "சகோரஞ் செம்போத்துக் குக்கில்" என்றார் பிறரும் (திவாகரம்). இதனை நடுநாட்டிற் கள்ளிக்காக்கை எனக் கூறுவர். ஏனைய நாடுகளில் செம்போத்து, போத்து எனக் கூறுவர்.
-------------------------------------------------------------------------------------------------------------
தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்
குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா ரட்ட களத்து.

(ப-ரை.) செங்கண்மால் - செங்கட்சோழன், தப்பியார் - பிழைத்தாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், தெரிகணை - ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் - வேல்களாலும், திறந்த - திறக்கப்பட்ட, எல்லாவாய் (உம்) - எல்லாப் புண்களின் வாய்களினின்றும், குருதி படிந்து - (ஒழுகும்) உதிரத்திற் படிந்து, உண்டகாகம் - (அவ்வுதிரத்தை) உண்ட காகங்கள், உரு இழந்து (தம்முடைய) நிறத்தை இழந்து, குக்கில் புறத்த - செம்போத்தின் புறத்தையுடையவாகிய, சிரல்வாய் - சிச்சிலிக் குருவி போன்ற வாயையுடையவாயின எ-று.

வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை ‘உண்ணு நீ ரூட்டிவா' என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் - செம்போத்தாதலை ‘குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே' என்னும் பிங்கலந்தையான் அறிக சிரல் - சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; ‘புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்' என்பது சிறுபாண்.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Nov 8, 2015, 11:41:43 PM11/8/15
to வல்லமை
செம்போத்து பற்றிய எனது கட்டுரை "மழலைகளுக்கு" எழுதியது.

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (29) செம்போத்துக் குருவி

Inline image 1

(செம்போத்துக் குருவி – படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து)

செம்போத்துக் குருவி என்றொரு பறவை.  இது அண்டங் காக்காய் போன்று இருக்கும் உருவ அளவில்.  இதன் உடல் மின்னும் கருப்பு நிறத்திலும் இறக்கைகள் செம்பட்டை நிறத்திலும் இருக்கும்.  இதன் அலகுகள் காகத்தின் அலகுகளை விட சற்றே குட்டையாக வளைந்து இருக்கும்.  கண்கள் குயிலின் கண்களைப் போன்று, கரு விழியைச் சுற்றிலும் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.  இதன் வால் சிறகுகள் காகத்தின் வால் சிறகுகளையும் விட சற்று நீளமாகவும், தரையில் நடந்திடும் போது அவ்வப்போது தரையைத் தொட்டுக் கொண்டும் செல்லும்.

உருவத்தில் குயில் போலத் தோன்றினாலும், செம்போத்துக் குருவியின் குரல் சற்று வினோதமானது.  அது உரத்த குரலில் “பாங்க்….பாங்க்….பாங்க்” என்று கத்தும்.  அந்த ஒலி எண்ணை கண்டிடாத ராட்டிணம் எழுப்பும் ஒலி போன்றிருக்கும்.  

செம்போத்துக் குருவி தரையில் சருகுகளுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளையும், செடிகளின் விதைகளையும் உண்ணும்.  இப்படித் தன் உணவைத் தரையிலேயே தேடிக் கொள்வதால் இது அதிகமாக உயரத்தில் பறப்பதில்லை.

குயில் இனத்தை சேர்ந்தாலும் குயிலைப் போல் அல்லாது செம்போத்துக் குருவி கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்த்திடும்.

செம்போத்துக் குருவி, பெரிய பந்து போன்று குச்சிகள், காய்ந்த புல், இலைச் சரகுகள் இவற்றால் கட்டப்பட்ட கூட்டினை அடர்ந்த புதர் போன்ற செடிகளுள் அமைத்திடும்.  கூட்டிற்குள் செல்லும் வழி வட்ட வடிவில் பக்க வாட்டில் அமைக்கப் படும்.  கூடு கட்டுதல், அடை காத்தல், இரை தேடி குஞ்சுகளுக்கு ஊட்டல் ஆகிய பணிகளில் ஆண் பெண் இரு குருவிகளுமே பங்கேற்கும். 

இயற்கையில் தான் எத்தனை காட்சிகள் நாம் பார்த்து ரசிக்க!

நடராஜன் கல்பட்டு

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages