என் மகன் எனக்கு கற்றுக் கொடுக்கிறான் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்ட நிகழ்வில் பெற்றோர் மகிழ்ச்சி

5 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Mar 21, 2023, 5:39:16 AM3/21/23
to


என் மகன் எனக்கு கற்றுக் கொடுக்கிறான் 

எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்ட நிகழ்வில்

 பெற்றோர் மகிழ்ச்சி 

 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

                           ஆசிரியை செல்வமீனாள் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் நிகழ்வு குறித்து சுருக்கமான கண்ணோட்டம் வழங்கினார். என் பேச்சு, என் மேடை  என்கிற தலைப்பில் பள்ளி மாணவ-மாணவிகள் எண்ணும் எழுத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள பாடல்கள் ஆடல்கள் ஆகியவற்றை பாடி, ஆடி காண்பித்தனர்.

                             பெற்றோர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் கற்றல் உபகரணங்களை பெற்றோர்கள் அனைவரும் பார்வையிட்டனர். ஆசிரியர்கள் அதனை விரிவாக விளக்கிக் கூறினார்கள்.

                         பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து வகுப்பறை செயல்பாடுகளில் பங்கேற்க வைக்கப்பட்டனர். ஒரு சொல் ஒரு புதிர் என்கிற செயல்பாட்டையும் ,குழுக்கள்  உருவாக்குதல் தொடர்பான செயல்பாடும், அத்தை வீட்டுக்கு பயணம் போகிறோம் என்கிற செயல்பாடும் நடத்தப்பட்டது.

                             பெற்றோர்கள் ஆர்வத்துடன் செயல்பாடுகளில் பங்கேற்றனர். செயல்பாடு முடிந்தவுடன் பெற்றோரும் மாணவர்களும் எண்ணும் எழுத்தும்  பதாகையில் தங்களது கையெழுத்து பதிவு செய்தனர்.

                           எண்ணும் எழுத்தும் வந்தபிறகு தங்கள் குழந்தைகளின் கற்றல் எவ்வாறு மாறி உள்ளது என்பதை பெற்றோர்கள் மகிழ்வுடன் பேசினார்கள் .எண்ணும் எழுத்தும் எவ்வாறு தங்களுடைய குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதையும் விரிவாக விளக்கினார்கள்.ஏராளமான பெற்றோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

                                நிறைவாக பெற்றோர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சுய படம் எடுத்துக் கொண்டனர். ஆசிரியை முத்துலட்சுமி நிகழ்வை ஒருங்கிணைத்தார் .ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்ட நிகழ்வு பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை செல்வ மீனாள் கற்றல் கொண்டாட்ட நிகழ்வினை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து நடத்தினார்.

 

வீடியோ :  முதல் வகுப்பு படிக்கும்  எனது மகள் மைக் பிடித்து பேசுவது எனக்கு பெருமையாக உள்ளது. பெற்றோர் மகிழ்ச்சி பேச்சு  

https://www.youtube.com/watch?v=qrYv2h8CWG0

https://www.youtube.com/watch?v=BqKqVKnb4kM

https://www.youtube.com/watch?v=T-C7AZYiClM


IMG_5691.JPG
IMG_5673.JPG
IMG_5629.JPG
IMG_5617.JPG
IMG_5638.JPG
IMG-20230321-WA0121.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages