நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//
நாச்சியார் திருமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
எந்த மாதத்திற்காவது திரு என்ற அடைமொழி சேர்த்து சொல்கிறோமா? மார்கழிக்கே அந்தப்பெருமை இல்லை ஆனால் ஆடிக்கு உண்டு.
நானும் மெதுவா கேட்கறேன்:)ஆடிப்பழமொழிகளை அள்ளிவீசப் போவதுயாரு?ஆடிவெள்ளிக்கு அருமையான அம்மன் பாடல்களை கொடுக்கப்போவது யாரு?ஆடித்தபசு சங்கரன்கோயில் விவரம் எழுதபோவது யாரு?ஆடி பற்றின திரைப்பாடல்களை தேடித்தரபோவது யாரு ?:)
அன்புடன்ஷைலஜா.// ...நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//
நாச்சியார் திருமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ//
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2014-07-23 6:56 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
இந்திரனுக்குப் போட்டியாக இந்திராணிகளும் களத்தில் குதிப்போம் ஷைலு! :-)
ஹலோ தமிழ்நாட்டு இந்திரனுக்கு இந்திராணியெல்லாம் கிடையாதுங்க. குடிக்க வெறும் அமிழ்து மட்டுந்தேன் ஜிகிர்தண்டா மாதிரி. போரில் வீரமணமடைந்த தமிழ் மறவர்கள் வதியும் இடம் அது. போரிட்டு வீரமடைய இயலாத பெண்களுக்கு அங்கே இடமில்லை. அது ஆண்களுக்குமட்டும் என்று முழுக்க முழுக்க ஆண்கள் வாழும் உலகம்.வீரர்கள் வாழும் இடமாக்கும்எல்லாத்துலயும் ரிசர்வேஷன் கோட்டா கேட்டா எப்புடி?மதஎசுஇந்திரன்
2014-07-23 7:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:ம்ம் 'நயம் பட உரைக்கும் நக்கீரன்' என்ற புதுத்திருநாமம் விரைவில் வருமோ?:)அடுத்த பேர் கள்ளபார்ட் கருநா(க்)கன் என்று வைக்க ஆசைராஜ பார்ட் தெரியும் ஸ்த்ரீ பார்ட் தெரியும் கள்ளபார்ட் தெரியலியே. உங்களுக்குத் தெரியுமாமதஎசுஇந்திரன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--எங்க வீட்டில் கேழ்வரகுக் கூழ் தான் செய்வோம். ஆடிக்கூழ் தெரியாது. இணையத்தில் தேடியதில் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.நவாலி சோமசுந்திரப்புலவர் ஆடிக்கூழ்: தேவையானவைஒரு கைப்பிடி வறுத்த பயறுகால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியதுஒரு பேணி - பச்சரிசி மாஅரைமூடித்தேங்காய்ப்பால்பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டுமிளகுத்தூள் தேவையான அளவுசீரகத்தூள் தேவையான அளவுஏலக்காய் - தேவையான அளவுமுதலில் சுத்தமாக கழுவிய வாணலியில் அல்லது பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...கலவை 1இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.
பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...இங்கே தமிழ்நாட்டில் இதோடு எல்லா தானியங்களையும் சேர்த்துச் செய்கின்றனர். தானியங்களை முழுதாகவே போடுகின்றனர். பெரிய காளவாய் அடுப்பில் காய்ச்சுவதால் நன்கு குழைந்துவிடும் என எண்ணுகிறேன். நன்றி. வணக்கம்..தமிழ்நாட்டில் மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட வேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.//தமிழ்நாட்டில் ஆடிக்கூழ் செய்யும் முறை மேலே உள்ளது. எல்லா தானியங்களையும் போட்டு இந்த மருந்துக்கலவையைத் துணியில் முடிந்து உள்ளே போட்டுப் பின் கஞ்சி காய்ச்சி தானம் செய்வார்கள்.2014-07-26 16:25 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:ஆடி ரதம் இழுக்கும் தோழிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இயன்றால் கலந்து கொள்கிறேன்.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
”ஒரு மகள்தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன் – செங்கண் மால்தான் கொண்டு போனாரே” – என்று மனதைத் தேற்றிக்கொள்கிறார்.
ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்துறங்கிய இடம் இன்றும் மேல அடையவளைஞ்சான் தெருவில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாகயுள்ளது. இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம் காண ரம்மியமானது!
*******************************************************************************
ஆண்டாள் மகிமையை தொடரவும் .
தேமொழி ஆண்டாள்படம் ஒண்ணு அட்டகாசமா கொடுங்க
பின்குறிப்பு ...பேராசிரியரைப்போல பெயர்மாற்றம்திருவாடிப் பூரம் தினத்திற்காக மட்டும் செய்துகொண்டிருக்கிறேன்( என் தாயின் பெயர் ஆண்டாள்தான்)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
//இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு
ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து//
திருவாடிப் பூர நன்நாள்
மீள்பதிவு
சூரியனும், சந்திரனும் தினம் உதிப்பது போல்
திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தவள்
என்னும் பெருமை கொண்ட ஆண்டாளின்
அவதார,அல்லது உதித்த தினம்
திருவாடிப் பூரம் என்று நம்மால்
கொண்டாடப்படுகிறது
" திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே "
கி.பி. 716 - நள வருடம் - ஆடி மாதம் - எட்டாம் நாள் - சுக்ல பட்சம் - பஞ்சமி திதி - செவ்வாய்க் கிழமை - பூர நட்சத்திரம் - துலா லக்னம்
ஆண்டாள் ஐந்து வயதுக் குழந்தையாய், பூமித் தாயின் அம்சமாய்,
பட்டர் பிரான் கண்டெடுக்க, திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள்!
கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி
ஆண்டாள்
அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம்
சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில்
பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே
துளசிச் செடியின் கீழே கொத்திக்
கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக்
கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை”
என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை
நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும்
ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.
விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும்
வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் துளசி
இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல்
ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத
நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு
கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய
தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று
எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று
தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும்
முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி
பல நாள் நடந்தது.
ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதையை சூடிய மாலையோடு பார்க்க
நேர்ந்தது. அவர் மிகவும் மனம் வருந்தி “இப்படிச் செய்யலாமா?
எம்பிரான் மாலையை நீ சூடலாமா?” என்று கேட்ட அவர் அன்று அம்மாலையை எம்பிரானுக்குச் சாத்தவில்லை.
அன்றிரவு எம்பெருமான் ஆழ்வார் கனவில் தோன்றி
“இன்று நமக்கு மாலை சாத்தாதது ஏன்?” என்றார்.
ஆழ்வார் தன் மகள் அதைச் சூடிய தவறைச்
சொல்லி மன்னிக்க வேண்டினார்.
இறைவனோ “ஆண்டாள் சூடிய மாலையே,நல்ல மணமுடையதும்
நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” என
அறிவித்தார். பெரியாழ்வார் அன்று முதல் ஆண்டாளைப்
பூமிப் பிராட்டியாகவே கருதலானார். சூடிக் கொடுத்த நாய்ச்சியாரும்
மார்கழிநீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று,
திருப்பாவை, நாச்சியார்திருமொழி ஆகிய பிரபந்தங்களைப்
பாடி அருளினார்.
மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு
மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக்
கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை
மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண
நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு
இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,
தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத்
திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,
திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். இவற்றுள்
அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு
ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து
அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்
காணலானாள்.
ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என
ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.
அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்
திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்
கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.
ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம்
சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப்
பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச்
சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில்
உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.
ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட
பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த
சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை
பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”
ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை
அடைந்தனர்.
அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்
பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.
ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார்
வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால்
சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீது
கால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க
மறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப்
பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில்
உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.
இவ்வரலாற்றை ஒட்டி என் மனதில் எழுந்த கவிதை
துளசிப் பாவை
துளசி வனத்தில் உதித்த,
தபசி திருவரங்கன் உபாசி
பெரியாழ்வார் கண்டெடுத்த
இளவரசி
திருவாடிப்பூர திரு நாளில் தேடி
எடுத்த அவதார லக்ஷ்மி இவள்
கோபால விலாசம் தேடிய திருப்பாவை
பகல் பத்து ராப்பத்து ,முப்பத்து நாளும்
முப்போதும் எப்போதும் முழுமையாய்த்
தவமிருந்தாள் விழித்திருந்தாள்
இப்பாவை நோன்பிருந்தாள் பாவை நோன்பிருந்தாள்
திரு பாவை நோன்பிருந்து திருப்பாவை தானெழுதி
முன்னைப் பயன் பெற விரதமிருந்தாள்
திருவரங்கன் அணைப்பாவை ,
என்றென்றும் துணைப்பாவை தானாக
விண்ணவர் போற்றும் திருவரங்கனை
அவ்வரங்கனை தான் மாலை சூட
தான் சூடிய பூமாலையை பாமாலையாய்
அவனுக்களித்தாள், அவனும் களித்தான்
கிணறே கன்னாடியாய், கிளியே தோழியாய்
தானே அரங்கனாய் தான் வடிவெடுத்து
தன் கழுத்தே அரங்கனாய் பாவித்து
மாலை தனை அணிவித்து தண்ணீரிலே
தன் பிம்பம் அரங்க பிம்பமாய்க்
அந்தரங்க பிம்பமாய்க் கண்டு
தானும் அவனும் ஒன்றாகி
கிளி கொஞ்சும் தோள்கள் கொண்ட
கோதை திருமாலைத் தானடைந்து
தவழ்ந்த மாலை தவழும் மாலை
அவ்வரங்கனுக்கே தோள் கொஞ்சும்
கிளியானாள் துளசி மாலை போலானாள்
பெரியாழ்வார் விதிர் விதிர்த்தார் –
அடியாராய் தான் நினைத்த தன் மகள்
கோதை அரங்கனின் திரு அடியாளாய்
ஆனகதை அறியாரோ பெரியாழ்வார்
அபசார மென்ரெண்ணி அவர் துடித்தார்
அலைமேலே பள்ளி கொண்ட
திருமாலின் தாரமிவள் என்றவர் அறியாரோ?
அதனால்தான் தான் சூடிக் கொடுத்தாள்
சுடர்கொடி யாள் ஆண்டாள்
அரங்கனையும் ஆண்டாள்
அறியாரோ பெரியாழ்வார் அறியாரோ
ஆனாலும் அளவில்லா பக்தியது
அரங்கன்மேல்
திருப்பாவை தனை ஆண்ட
திருவரங்கன் தாரமிவள்
தனக்கேயாம் என்றுரைத்தான் திருமாலே
இவள் தொடுத்து தானணிந்த
ஒருமாலை தினமும் தன்
தோளின் திருமாலை என்றுறைத்தான்
திருமாலே
தெளிந்தாண்டார் பெரியாழ்வார்
பெற்றெடுத்த பெண்பிள்ளை
இல்லை இவள் கண்டெடுத்த
துளசிக் கிள்ளை
பெரியாழ்வார் கண்டெடுத்த
பெண்ணாழ்வார் சின்னாழ்வார்
அன்புடன்
தமிழ்த்தேனீ
அனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளைசொற்கள் உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net2014-07-30 10:32 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:ஆஹா அருமையான பதிவு கீதா வரேன் அக்காரடிசில்முடிச்சிட்டு மேலும் உங்கபதிவுக்கு எழுத ...2014-07-29 19:33 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.திருவாடிப் பூரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாளின் இயற்பெயர் கோதை ஆகும். திருமாலின் மூன்று சக்திகளாய்க் குறிப்பிடப் படும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி என்ற மூவரும் சேர்ந்து ஓருருவாய் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததாய் ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கே முதல் மரியாதை. கருவறையில் ஆண்டாள் வலப்புறம் இருக்க இடப்புறம் கருடாழ்வாரோடு பெருமாள் காட்சி அளிப்பார். இந்த அமைப்பு வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காண முடியாத ஒன்றாகும். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களும் அவரின் சங்கும் எம்பெருமானின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்றவை பூமியில் ஆழ்வார்களாக அவதரித்துப் பெருமானின் புகழை இனிய தமிழ்ப்பாமாலைகளால் பாட பார்த்தாள் பிராட்டி! தான் மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் பூமியில் அவதரித்தாள். எம்பெருமானைத் தவிர வேறொருவரை மனதாலும் நினைக்க இயலாது என்பதை அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே உறுதிபடத் தெரிவித்தாள். தான் சூடிக்களைந்த மாலையையே ரங்கமன்னாருக்கும் அளிக்க அவனும் மிகவும் உவப்புடன் அதை அணிந்து கொண்டான்.ஆனால் இதை ஒரு நாள் நேரில் பார்த்த பெரியாழ்வாரோ மனம் நொந்து போய் அந்த மாலையை ரங்கமன்னாருக்குச் சாற்றவில்லை. ஆனால் என்ன அதிசயம்! அன்றிரவே ரங்கன் ஆழ்வாரின் கனவில் வந்து ஆண்டால் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெளிவுபடக் கூறினான். மேலும் கோதை யார் எனவும், அவள் தனக்கெனவே, தன்னைத் துதிக்கவும், பாமாலைகளால் வாழ்த்திப் பாடவுமே அவதரித்தவள் என்பதையும் தெளிவாக்கினான். பெரியாழ்வார் தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தைச் செல்வம் சாட்சாத் தாயாரின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டு எம்பெருமானையே மனதால் ஆண்ட அவளைத் தம் வாயால் அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்க ஆரம்பித்தார். ஆண்டாளும் தினமும் பெரியாழ்வார் கட்டிக்கொடுக்கும் மாலையைத் தான் சூடிக்கொண்டே ரங்கனுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு மட்டுமா? ரங்கனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதாயும் கனவு கண்டாள்! அதுவும் எப்படி!வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துநாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம்மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூதமுத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்நம்மையுடையவன் நாராயணன் நம்பிசெம்மையுடைய திருக்கையால் தாள் பற்றிஅம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்!என்றும் கூறும் ஆண்டாள், அவள் காலத்திலேயே சகோதரர்கள் உடனிருக்கத் தான் பொரியிட்டதையும் கூறுவதுவரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டுஎரிமுகம் பார்த்தென்னை முன்னே நிறுத்திஅரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்துபொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவாம்.நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான்நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நேர்ந்து வைத்தேன்நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்எறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ!ஆஹா! தடான்னா என்ன சும்மாவா! பெரிய பெரிய அண்டாக்கள். அதிலே நூறு தடா வெண்ணெய் காய்ச்சி, நூறு தடா அக்கார வடிசில். இதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியவை என்னன்னா, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் எனக்குத் தெரிந்து அண்டாக்களில் தான் சமைப்பார்கள். இதுவும் ஆண்டாள் காலத்திலேயே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அது போகட்டும்! இந்தப் பிரார்த்தனையை வாய்மொழியாக நேர்ந்து கொண்டதோடு இல்லாமல் பாமாலையாகவும் பொறித்து வைத்த ஆண்டாளுக்குத் தன் காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!ஆனால் இதற்கெனப் பொறுப்பு வேறொருத்தரிடம் கொடுக்கப் பட்டுவிட்டது என்பதும், அதுவும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவரால் நிறைவேற்றப்பட்டதையும் நாம் அறிய வருகிறோம். ஆம். ஸ்ரீராமாநுஜர் அவதரித்து, உபதேசம் பெற்றுத் தம் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் திருமாலிருஞ்சோலைக்கும் சென்றிருந்தார். அங்கே ஆண்டாளின் வாய்மொழிப் பிரார்த்தனையையும், அது நிறைவேறாமல் இருந்ததையும் அறிந்து கொண்டவர் அவளுக்காகத் தாம் அதை நிறைவேற்றி வைக்கிறார். அத்துடன் அதை மறந்தும் விட்டார். அதன் பின்னர் சில திவ்ய தேசங்கள் சென்று ஆண்டாளின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கே சந்நிதிக்குள் நுழைகிறார் ஸ்ரீராமாநுஜர். ஜலங், ஜலங், ஜலங், சலங்கைச் சத்தம், க்ணிக், க்ணிக், க்ணிக், மெட்டி ஒலி. ஓர் அழகான விக்கிரஹம் போன்ற பெண்ணுரு இளநகையுடன் நடந்து வருகிறது. பெண்ணா? விக்கிரஹமா?? கோயிலில் பூஜை செய்யும் பட்டாசாரியார்களில் இருந்து அனைவரும் திகைப்புடன் பார்க்க, கருவறையில் அர்ச்சாவதாரமாக இருந்த ஆண்டாளைக் காணவில்லை.அவள் தான் நடந்து வருகிறாள். அதுவும் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து, “என் அண்ணாரே!” எனக் கூப்பிட்ட வண்ணம் வருகிறாள். அனைவருக்கும் வியப்பு.. இப்படி ஆண்டாளாலேயே அண்ணன் என அழைக்கப்பட்டதால் ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்தி, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே “கூறப்படுகிறாள். இப்படிப் பல வகையிலும் சிறப்புப் பெற்ற ஆண்டாளை ரங்க மன்னார் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாயும் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கட்டளையிட்டானாம். அதன்படி ஸ்ரீரங்கம் சென்றனர் இருவரும். அங்கே சந்நிதிக்குச் செல்லும் போதே ஆண்டாள் திடீரென ஒளிமயமாகக்கருவறையில் ஐக்கியம் ஆகப் பெரியாழ்வார் பரிதவித்துப் போனாராம். ஒரு சிலர் காவிரிக்கரையிலேயே குளிக்கையில் ஆண்டாள் மறைந்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் எப்படியோ ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெருமானோடு ஐக்கியமானது குறித்துச் சந்தேகமே இல்லை. பெண்ணைப் பெருமாளிடமே ஒப்படைத்தாலும் பெண்ணைப் பெற்றவருக்கு மன வருத்தம் இருக்குமே. புலம்புகிறார்.
ஒருமகள் தன்னை உடையேன்,உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.

ஒருமகள் தன்னை உடையேன்,உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.
முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.
ஷைலூ வழக்கம்போல தூள்! எப்படி நாமிருவரும் ஒரே பாசுரத்தில் இந்தப் பதிவை ஆரம்பித்தோம்,வியப்பாக இருக்கிறது. கீதாவின் பதிவு நிறைய விஷயங்களை நிறைவாகச் சொல்லுகிறது. தேமொழி போட்டிருக்கும் ஆண்டாள் படங்களும், மேகலாவின் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் அழகானவை. பவளாவின் அம்மன் பாடல் அருமை.//அபயமளிக்கும் நற்றுணை வேதமாம் அன்னையாய்பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்//அருமையான வரிகள். பாராட்டுக்கள் ஷைலூ, கீதா, தேமொழி, மேகலா, மற்றும் பவளா எல்லோருக்கும்.பள்ளமடை:பள்ளத்தை நோக்கி நீர் பாய்வது தான் இயற்கை. நடக்கக்கூடிய ஒன்று; இயல்பானது. அதுபோலத் தான் ஒரு பெண் ஆணைக்கண்டு மோகிப்பதுவும். ஆழ்வார்கள் என்னதான் நாயிகா பாவனையில் பெருமாளைக் கண்டு மோகித்தாலும், ஆண்டாளின் பாடல்களைப் போல வருமா என்பது தான் 'பள்ளமடை' க்கு அர்த்தம்.நாச்சியார் திருக்கோலத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறான். பக்கத்தில் பராசர பட்டர். 'எப்படி என் நாச்சியார் திருக்கோலம்? உங்கள் நாச்சியார் மாதிரியே இருக்கிறேன், இல்லையா? பட்டர் தலைகுனிந்து மெதுவான குரலில் சொல்லுகிறார்: 'என்னதான் பொருத்தமான வேஷம் போட்டாலும் எங்கள் தாயாரின் கருணை விழி உனக்கு இல்லையே!' என்கிறார். இதுதான் பள்ளமடை என்பது.பாராட்டுக்களுக்கு நன்றி சுபா, ஷைலூ.அன்புடன்,ரஞ்சனி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
ஆடிப்பெருக்கும் ஆட்டனத்தியும்!
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளை 'ஆடிப் பெருக்கு' என்று நாம் கொண்டாடி வருகின்றோம். இந்நாளில் சித்திரான்னங்கள் பலவற்றைத் தயாரித்து காவிரியாற்றங்கரையில் அமர்ந்து உண்டு மகிழ்வது வழக்கம். அத்தோடு, பல மங்கலப் பொருட்களை ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரிக்குப்’ படைத்தின்புறுவது உள்ளிட்ட பல்வேறு நற்செயல்களும் நடைபெறும். அவ்வினிய வேளையில் காவிரியின் புதுவெள்ளத்தோடு மக்களின் மகிழ்ச்சி வெள்ளமும் சேர்ந்தே பாயும் என்பதில் ஐயமில்லை!
ஆயினும், ஆடிப்பெருக்கை ஒரு பெருவிழாவாகக் கொண்டாடும் வழக்கம் நம் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை இவ்விழாவும் பின்னாளில் ஆன்மீக அருளாளர்கள், பௌராணிகர்கள் போன்றோரால் ஏற்படுத்தப்பட்டுப் பிரபலம் அடைந்திருக்கக் கூடும். ’கங்கையின் மேலாய காவிரி’ என்று போற்றி, பூவிரியும் சோலைகள் நிறைந்த இக்காவிரியை ஓர் புனித ஆறாக – வழிபடு தெய்வமாக மாற்றிவிட்டனர் நம் சமயச் சான்றோர் என எண்ணுதற்கு இடமுண்டு. எனவே ஆடிப் பெருக்கை மகத்துவம் நிறைந்த ஓர் நன்னாளாகக் காட்டுதற்கு இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைத்தில.
எனினும், ஆடியின் புதுப்புனலில் நிகழ்ந்த ஓர் அற்புத (இலக்கிய) நிகழ்வை இத்தருணத்தில் நம் தோழியரோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
கி.பி முதல் நூற்றாண்டின் பிற்பகுதி…
அளவற்ற பொன்னும் மணியும் துஞ்சும் எழில்கொஞ்சு காவிரிப்பூம்பட்டினப் பெருநகர். அதனை ஆண்டு வருகின்றான் பீடும், பெருமையும் மிக்க சோழ மன்னனான கரிகாற் பெருவளத்தான்!
புதுப்புனல் பாய்ந்துவரும் ஆடி மாதத்தின் ஒரு நன்னாளில் ’கழாஅர்’ எனும் காவிரியாற்றின் துறையில் கரிகாலன் நீர்விழாக் கொண்டாடிக்கொண்டிருந்த சமயமது…
ஆட்டத்தில் வல்லவனான சேர மன்னன் ’ஆட்டன் அத்தி’ அவ்விழாவில் நீர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத வண்ணமாய் அடித்துச் செல்லப்பட்டுவிட்டான் அவன். என்னே விபரீதம்!
விழாவைக் காணவந்திருந்த அனைவரும் இந்த அசம்பாவிதம் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர். இவ்விபத்தினால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த கரிகாலன் மகளும், ஆட்டன் அத்தியின் மனைவியுமான ஆதிமந்தி, “என் கணவரைக் காப்பாற்றுவார் இல்லையா? காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அவரைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கூக்குரலிட்டுக்கொண்டே கண்ணீரருவி பாய்ந்தோடக் காவிரியின் கரையோரமாய் வெகுதூரம் ஓடினாள்; காவிரி கடலில் கலக்கும் இடத்தருகே வந்து நின்றாள் மூச்சிரைக்க!
என்ன வியப்பு! திடீரென்று ஒரு இளம் பெண் தோன்றினாள் கடலின் நடுவே. சுயநினைவற்ற நிலையில் இருந்த அத்தியைத் தன் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு கடற்கரையோரமாய் வந்தாள் அந்த அணங்கு. அதனைக் கண்ட ஆதிமந்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. விரைந்தோடிச் சென்று தன் கணவனைப் பற்றினாள். நல்ல வேளை! அவன் உயிரோடுதான் இருந்தான். ஆதிமந்தி அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது? மறுவாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் தன் கணவனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாள் ஆதிமந்தி.
அது சரி….கடல் நடுவே திடீரென்று தோன்றி ஆட்டன் அத்தியைக் காத்த அந்தக் கன்னி யார்? ஒருவேளை…தன் கடற்காதலனோடு கலந்திருந்த காவிரியன்னைதான் அந்த அதிசயப் பெண்ணோ?
’இல்லை’
என்கிறது தமிழிலக்கியம். அவள் பெயர் ‘மருதி.’ அவளை அத்தியின் காதலி என்று சொல்வாரும்
உண்டு. எது எப்படியோ…அத்தியைக் காத்த அந்த மாதரசி மருதி பாராட்டப்பட வேண்டியவளே அல்லவா!
இந்த இனிய வரலாற்று நிகழ்வால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றைச் ’சேர தாண்டவம்’ எனும் பெயரில் நாடகமாகவும், கவியரசு கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் சுவையான குறுங்காவியமாகவும் இவ்வரலாற்றைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோழன் கரிகாலனின் அருமை மகளாகிய இந்த ஆதிமந்தியே தமிழிலக்கியத்தில் பெண்பாற் புலவர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஆதிமந்தியார் ஆவார்.
ஆதிமந்தியார் எழுதிய குறுந்தொகைப் பாடலொன்று நம் பார்வைக்கு…
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே. (குறுந்: 31)
(இதன் பொருள்: வீரர்கள் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் பெருமைமிக்க என் தலைவனை நான் கண்டேனில்லை. யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கையிலுள்ள சங்கு வளையல்களை நெகிழச் செய்த தலைவனும் ஓர் ஆடுகள மகனே.)
தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தைத்தான் இப்பாடலாய் வடித்துள்ளாரோ ஆதிமந்தியார்?
அன்புடன்,
மேகலா
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நாளை ஆடிப் பெருக்கு!...“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துகருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி! காவேரி!கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன்திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!” (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்).காவிரியின்
நீரின்றி அமையாது உலகு!
பொதுவாக தண்ணீரை சக்தியின் மறுவடிவமாகவே பார்க்க வேண்டும். வன தேவதைகளைப் போல் ஆற்று தேவதை, நதி தேவதைகளும் உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.நம்பாரத நாட்டில் நதிகளை நாம் புனிதமாகவே கருதுகிறோம்.
ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது கூட தண்ணீரை தெய்வமாக மதிப்பதன் உள்அர்த்தம்தான்ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.
பதினெட்டு என்கிற எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்பு!
,
18 நாட்கள் போர் மகாபாரதத்தில்
18 பாகங்கள் பகவத்கீதைக்கு
18 சித்தர்கள்
18 படிக்கட்டுகள் சபரிமலைதெய்வத்திற்கு
இன்னும் பல இருக்கலாம் இவ்வகையில் ஆடிக்குப்பதினெட்டாம் நாள் சிறப்பு!
இன்று ஆடிப்பதினெட்டு!
மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டபின் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை!
பதினெட்டாம் பெருக்கன்று திருச்சி தஞ்சைப்பகுதி மக்கள் கோலாகலமாய் காணப்படுவார்கள்
அம்மாமண்டபம் கல்லணைமுக்கொம்பு என திருச்சியைச்சுற்றிய பகுதிகள் திருவிழா போல மாறிவிடும்.
படித்துறையில் மக்கள் வெள்ளம் காவிரிவெள்ளத்தை ஆர்வமுடன் கண்டு களிக்கும். மிட்டாய் பலூன் கடைகள் முளைக்கும.
. மேட்டிலும் படுகையிலும் பாய்ந்து மண்ணைப்பொன்னாகி மகிழ்ச்சி விளைவிக்கும் காவிரியை வாழி என வாழ்த்துகிறார்கள்!மஞ்சள் குங்குமம பூமாலை தந்து கருகமணிபோட்டு அனுப்புவார்கள். அந்திசூரியனின் நிறம்பட்டு மேனிக்கு இளம்சிவப்புவண்ணச்சேலையை சுற்றிவிட்டதுபோல ஆடிச்செல்வாள்.
காவிரியில் நீர் வற்றி மணலில் ஊறும் எறும்புகள் தெரியும் காலம் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது அப்போதெல்லாம் நம் கண்களில்தான் காவிரி.
...<span style="font:13p