On Tuesday, October 31, 2017 at 6:00:05 AM UTC-7, ramaNi wrote:தமிழ் - ஸமஸ்க்ருத அகராதி
இந்தப் புத்தகம் அது காணும் வலைதளத்தில் தரவிறக்க இயலவில்லை.
வேறேதேனும் தரவிறக்கத் தளமோ, அல்லது வேறு தமிழ் வடமொழி அகராதியோ கிடைக்குமா? அச்சிப் பிரதியாகவேனும் கிட்டுமா? தெரிந்தோர் சொல்லக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் இணையப் பல்கலைக்கு எழுதலாம். எழுதுவேன். இதனை இடம்பெறச் செய்வோம்.
இணையப் பல்கலை நிறுவனர் கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா.செ.கு.) இன்றில்லை. மற்றவர்கள் யார் என்று சில இ-மெயில்கள் பெற்றுத் தரலாம்.
இன்னின்ன நூல்கள் வேண்டும் என கோரிக்கை வைத்தால் ஒருகாலத்தில் நடக்கும். பலரும் எழுதினால் சற்று வேகமாக நடக்கும்.
பல நாள்கள் இணையப் பல்கலை தளங்கள் இயங்கமாட்டா. முக்கியமான இலக்கண நூல்களை archive.org தளத்தில் ஆடிப்பிம்பதளமாக வைத்தால் எப்போதும் அவை இருக்கும். அமெரிக்க அரசாங்க ஆதரவுடன் archive.org தளம் இருப்பதால்.
தமிழ்த்தாய் தன் இன்முகம் இணையத்தில் காட்டத் தொடங்கியுள்ளாள். ஹார்வர்டில் தமிழ்ப் பீடம்! தமிழர்கள் ஆர்வம் இத்தோடு நில்லாது
இன்னும் பல பீடங்களை ஆய்வினில் சிறந்த மேனாட்டுப் பல்கலைகளில் நிறுவ வேண்டும். ஆலம் விதை போன்றது. அளவில் மிக நுண்ணிது,
எனினும் நீண்ட காலப் பயன் பெரிது. பல அரிச்சுவடி கற்பிப்போரும், தமிழ்நாட்டு விரிவுரையாளர், பேராசிரியர்கள் வந்துபோக
இவ்விருக்கைகள் மிக உதவும்.
தமிழ்த்தாய்க்கு ஆலயம் தமிழ்நாட்டு அரசு எளிதில் செய்யலாம். இரண்டு லட்சம் புஸ்தகங்கள் படிப்பாரும், பேணுவாரும் இன்றி
வேரில் பழுத்த பலாவாய் அழிந்து கொண்டுள. அவற்றை பிடிஎப் (பக்கங்களை விடாமல், பூர்த்தியாக) செய்து இணைய உலா
வரவைத்து விட்டாலே தமிழ் பல நூற்றாண்டுகள் வளரும், என்றும் வாழும். மிகக் குறைந்த செலவில் அரசாங்கங்கள் செய்ய வேண்டிய பணி.
ஆறாம்திணைத் தெய்வம் கூகுளாண்டவரின் தோற்றம்
அன்புடன்
நா. கணேசன்
அன்னம் என்பது என்ன பறவை (சங்க இலக்கியத்தில்)? விரிவாக எழுதியுள்ளேன்.
நெஞ்சுரம் மிக்கவை. இமயம் ஆண்டுக்கு இருமுறை தாண்டுபவை.
நம்மை நாடி பல மில்லியன் ஆண்டுகளாக திபெத்தில் இருந்து தென்னகம் வலசை வருபவை.
ஆதலான், ஸூப்பர்-பெர்ட் என்பர் பறவையியலார். அதனை
சங்க இலக்கியச் சான்றோர்களும் விவரித்துளர்.
உங்கள் ‘மடவன்னம்’ சவலை வெண்பா வெகு அழகு!
மடவன்னம்!
(வண்ணச் சவலை வெண்பா)
தனதந்த தான தனதந்த தான
தனதந்த தான தனன
மிகுசிந்தை யோட விளைவிந்தை யாக
முகமன்றி லாடு முழுமை
அவள்வந்த போது அவைவண்ண மாக
அவனின்று காணு மழகு.
அவள்கண்க ளாட அணிதங்க மாட
நவநங்கை யாடு நளியில்
உடல்பந்து போல ஒருவிந்தை யாக
மடவன்ன மாடு மழகு.
--ரமணி, 05/11/2017