பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நகராட்சி தலைவர்

3 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Jul 17, 2026, 3:55:38 AMJul 17
to

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய நகராட்சி தலைவர்


தேவகோட்டை : 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார். தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்து, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில், தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், தனது தந்தையின் நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் இரவுச்சேரி காசிலிங்கம் மற்றும் தளக்காவயல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வன்மீகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவி ரித்திகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை முத்துலட்சுமி நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சரவணன் சிறப்பாக செய்திருந்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வர்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி எழுதுபொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.

படவிளக்கம்:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அனைத்து மாணவர்களுக்கும் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வர்ணங்கள் உள்ளிட்ட கல்வி எழுதுபொருட்கள் அடங்கிய பைகளை தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார். நிகழ்வில் இரவுச்சேரி காசிலிங்கம் மற்றும் தளக்காவயல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வன்மீகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்புரை வழங்கினார்.

IMG_6243.JPG
IMG_6237.JPG
IMG_6229.JPG
IMG_6233.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages