பி. இரத்தினசபாபதி என்பார் எழுதிய ‘உலகளாவிய தமிழ்’ என்னும் கட்டுரை கண்டேன்.
நா. கணேசன்
5.உலகளாவிய தமிழ்
பாடச்சுருக்கம்
உலகளாவிய தமிழ் என்னும் தலைப்புடைய இக்கட்டுரையில் தொன்மைக் காலம் முதல் இன்றுவரை தமிழர்கள் புவிப்பரபின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு சென்றனர் என்று அறியப்படுகிறது. அறியத் தக்க நிலவியல் சான்றுகளிலிருந்தும் பிற வரலாற்று ஆவணங்களிலிருந்தும் உலகப் பரப்பில் தமிழர்கள் பரவியதால், அவர் தம் மொழியும் உலககெங்கும் பரவிய தன்மை முதலில் விளக்கப்படுகிறது. மிகத்;தொன்மைக் காலத்திலிருந்து இன்று வரை தமிழர்களின் புலம் பெயர்வுகள் நிகழ்ந்துகொண்டிருப்பதால் அவற்றின் அடிப்படையில் அவர்தம் மொழி உலகெல்லாம் பரவிய நிலை விளக்கப்படுகிறது. உலகுகெங்கும் மொழி பரவிநிற்பதை மொழியுள் அமைந்துள்ள அகச்சான்றுகள் மொழியில் ஏற்பட்ட தாக்கங்;கள் ஆகியன கொண்டு நிறுவப்படுகின்றன.
இரண்டாவதாக, தமிழ் உலகெங்கும் பரவி இன்றும் வளமாக வாழ்ந்துகொண்டிருப்பதை மொழியியியல் வல்லுநர்கள் கருத்தின் அடிப்படையில் எடுத்துக்காட்டப்படுகிறது. எனவே இப்பாடம் வரலாற்று அடிப்படையில் மொழி உலகெங்கும் தளைத்தோங்கிவரும் நிலை, மொழியில் நோக்கில் பல மொழிகளுக்கு ஊட்டம் தந்து வரும் போக்கு ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன.
பாட அமைப்பு
5.0 முன்னுரை
5 .1 புவியியல், வரலாற்று அடிப்படை
5.1.1 சிதறுண்ட தமிழ்
5.1.2 நல்லுறவுத் தமிழ்
5.1.3 வீரம் விதைத்த தமிழ்
5.1.4 புலம் பெயர்ந்தோர் தமிழ்
5.1.5 வளமாக வாழ்வோர் தமிழ்
5.1.6. உலக நாடுகளில் தமிழர்கள்
5.2 பயன்பாட்டு மொழியியல் நோக்கில உலகளாவிய தமிழ்
5.2. 1 இன்றைய நிலை
5.2. 2 பல நிலைகளில் தமிழ்
5.2.3 இறவாத் தன்மை பெற்ற மொழி
5.2. 4 தனிப்பண்பு கொண்ட மொழி
5.2. 5 பல்கலைக் கழகத் துறைகளில் தமிழ்
5.2. 6 தமிழ் இதழ்கள்
5.2. 7 யுனெஸ்கோ வெளியீடு
5.2.8 எங்கெங்கும் தமிழ்ச் சங்கம்
தன் மதிப்பீடு 1 வினாக்கள்
5. 3 தமிழும் திராவிட மொழிகளும்
5.3.1 தமிழாகவே இருந்த திராவிட மொழிகள்
5.3.2 எண்ணுப்பெயர் ஒற்றுமை
5.3. 3 கன்னடத்தில் தமிழ்
5.3. 4 தெலுங்கில் .
5.3.5 மலையாளத்தில் தமிழ்
5.4 வடமாநிலங்களில தமிழ்
5.4. 1 வட திராவிட மொழிகளில் தமிழ்
5.4. 2 .மக்களின் ஒலிப்பில் தமிழ்
5.5 இன்றைய தமிழரின் கடமைகள்
5.5 முடிவுரை
தன் மதிப்பீடு 2 வினாக்கள்
தன் மதிப்பீடு 1 விடைகள்;
வினாக்கள்5.0 முன்னுரை
புவிப் பரப்பில் முதன் முதலாகத் தோன்றிய மொழி தமிழ் முதலில் தோன்றியதோடு இன்றும் நிலைபெற்றுப் புதுமைகளை ஏற்றுப் புதுப்பொலிவுடன் திகழும் மொழி. இது தமிழ்நாட்டளவில் மட்டுமல்லாது உலக அளவில் பரவியுள்ளதை புவியியல் வரலாற்று அடிப்படையில் ஐந்து நிலைகளில் காணமுடிகிறது.
அடுத்த நிலையில் , இந்தியாவில் ஏற்கப்பட்ட 22 மொழிகளுள் ஒன்றாகத் திகழும் தமிழ் இன்;றைய நிலையில் உலகில் எங்கெல்லாம் கற்கப் படுகிறது, பேணப்படுகிறது, வளர்க்கப்படுகிறது என நோக்கி உளகளாவிய தமிழாக பயன்பாட்டு மொழியியல் அடிப்படைகில் காணமுடிகிறது
5 .1 புவியியல், வரலாற்று அடிப்படை
ஏறத்தாழ 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்புவிபரப்பு உருவாகியது. மாந்தரினம் தோன்றியது. மொழி உருப்பெற்றது. இவற்றைப் பற்றி யெல்லாம் தமிழின் முதன்மை என்னும் பாடத்தில் பாh;த்தோம். மாந்தரினம் உருவாகி அதன் பின்னர் மொழி உருவாகித் தமிழாகத் தழைத்து இன்று வரை அது உலகெல்லாம் பரவியதை;
1. ஒரே நிலப்பகுதியாய் உருப்பெற்ற புவிப்பரப்பு சிதறுண்டபோது பரவிய தமிழ்,
2. நாகரிக வளா;ச்சியால் நாடுகளில் எல்லாம் நல்லுணர்வால் நிலைபெற்ற தமிழ,;
3. வேந்தர்கள் தம் வீரத்தை வெளிப்படுத்திய போது விதைக்கப்பட்ட தமிழ,;
4. வாழ்க்கைத் தேவைகள் உந்தப் புலம் பெயர்ந்தோரால் பேசப்பட்;ட தமிழ,;
5. வாழ்ககை வளம் வேண்டி வையகப் பரப்பெல்லம் ஏகியோர் பேசிவரும் தமிழ்
எனத் தமிழ் இன்றைய நிலையில் உலகெல்லாம் பரவியிருப்பதைக் காணலம். இவற்றை முறையே. 1. சிதறுண்ட தமிழ், 2.நல்லுறவுத் தமிழ், 3. வீரத்தமிழ், 4. புலம் பெயர்ந்தோர் தமிழ், 5. வளமாக வாழ்வோர் தமிழ் எனச் சுருக்கமாகச் சொல்லலாம் இவ்வைந்தும் புவியியல் மற்றும் வரலாற்றுச் சிந்தனை அடிப்படையில் அமைவனவாகும்.
5.1.1 சிதறுண்ட தமிழ்
விவிலியத்தில் நோவா என்பார் பற்றிய திருவாக்குகளில் , கடவுள் 40 நாட்கள் தொடர்ந்து காற்று வீசிடவும் மழை பெய்திடவும் செய்தார்: நீh; பிரளயம் ஏற்பட்டது எனச் சொல்லப்படுகிறது (ஆதியாகமம் திருவாக்கு 4). யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கணியன்; பூங்குன்றனர் பாடடிய புறநானூற்றுச் செய்யுளில் (புறநானூறு: செய்யுள்192) மாந்தர் வாழ்க்கை நிலை பற்றிக் கூறும்போது ‘கல்பொருதிரங்கு மல்லா; பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம்”எனக கூறுகிறார். இவையெல்லாம் கற்பனைக் கூற்றுகளாகத் தோன்றலாம். ஆனால் அக்கற்பனைக்கு புவிக்கோளத்தில் ஏற்பட்ட நிகழ்வு உள்ளாந்த உந்தலாகவோ, தம் முன்னோர்களில் உயிரணுவில் (புநநெ) ஊறிய உணர்வின் வெளிப்பாடாகவோ இருக்கும்.
உலோக காலம், புதிய கற்காலம், பழைய கற்காலம் என்பன வெல்லாம் வரலாற்றுப் பதிவுகளுக்கு முந்தைய காலங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கான புதை பொருள்கள் கிடைத்துள்ளன. அப்பொருள்களைக் கொண்டு அக்காலங்;களில் மேல் கீழ் எல்லைகளை நிலவியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். தொன்மை மிக்க இக்காலங் களுக்கெல்லாம் முன்பாக மிகத் தொன்மைக் காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவே கணியன் பூங்குன்றனாரையம் விவிலியப் பெரியோர்களையும் நீர்ப் பெருக்கைப் பற்றிக் கூறுவைத்துள்ளது. அந்த ஆழிப்பேரலை அழிவு குமரிக்கண்டம் உருப்பெருவதற்கு முன்னர் ஏற்பட்டதாகும். புவியியல் வல்லுநர் நோக்கில் அதுவே அளப்பரிய முதல் கடல்கோள். அது நிகழும் முன்னர் அங்கு தமிழின் தொன்மை வடிவம் உருப்n;பற்றது. சொல்லற்கரிய அக்கடல்கோளின் அலைக்களிப்பால் புவிக்கோளத்தில் அமைந்திருந்த ஒரே நிலப்பரப்பு சிதறுண்டது. பல கண்டத் துண்டங்களாகியது. “நீh; வழிப் படூஉம் “ எனக் கணியன் பூங்குன்றனார் சொன்னதற்கேற்ப மாந்தரினம், தமிழின் தொடக்க வடிவத்தை சொத்தாகக் கொண்டிருந்த மாந்தரினம் சிதறுண்டது. சிதறிய மாந்தர்கள் எடுத்துச் சென்ற தமிழ் மொழியின் ஒலிச் சுவடுகள் உறவுப் பெயர்களிலும் இன்றியமையா ஏவல் வினைகளிலும் இன்று காணப்படுகிறது. (மா, பா, போ முதலியன). அச் சிதறல் நிகழ்ந்தது ஏறத்தாழ 50000 ஆண்டுகளுக்கு முன்னராக இருக்கலாம்
5.1.2 நல்லுறவுத் தமிழ்
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் ஏற்றபட்ட புவிச் சிதறலுக்குப் பின்னர்தான் லெமூரியா அல்லது குமரிக் கண்டம் உருவாகியது. குமரிக்கண்டம் குமரி மiலையையும் ப‡றுளி ஆற்றினையும் கொண்டிருந்தது. தென்மதுரையில் தலைச் சங்கம் இயங்கத் தொடங்கியது. 4440 ஆண்டுகள் தலைச் சங்கம் இயங்கியதாக இறையனார் களவியலுரை உரை கூறியதை முன்னரே பார்த்தோம். வாய்மொழியாக நிலவிப் பின்னர் ஏட்டில் பதியப்பட்ட இச்செய்தியில் ஆண்டுக்கணக்குத் தவறாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் தென்மதுரையும் குமரிக்கோடும் அழிவுற்றதுதை அறியவும் அகத்தியம் என்னும் அரும் இலக்கண நூலும் தென்மதுரைச் சங்க காலத்தில் ஆக்கப்பட்டதை அறியவும் பிற்கால இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிh;” என்னும் உலகளாவிய பார்வை இலக்கியத்தில் பதிக்கப்பட்ட காலம் தலைச் சங்க காலமாகும். அக்காலக் கட்டத்தில் இன்றைய இமயமலை இருந்ததில்லை. ஆனால் ஆப்பிரிக்காவும் ஆஸ்;திரேலியாவும் குமரிக்கண்டத்தோடு இணைந்த பகுதிகள். அந்நிலப் பரப்பெல்லாம் சங்கத்தில் ஆய்ந்த தமிழ் பரவியது. சங்கம் புரந்த ( ளிழளெநசiபெ ) பாண்டிய மன்னர்கள் தங்கள் பண்பாட்டு, வணிக உறவுகளை மேற்குத் திக்கு நாடுகளான ரோம். கிரேக்கம் முதலிய நாடுகளோடு கொண்டிருந்தனர். அந்த நல்லுறவால் தமிழ் மொழி உலக நாடுகளுக்குப் பரவியது. தியூத்தானியம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் காணப்படும் சொற்கள் அந் நல்லுறவால் சென்றனவாகும்.
தென்மதுரையில் தமிழாய்ந்த சங்கம் கடலுக்கு இரையாயிற்று. பின்னர் கபாடபுரத்தில் இடைச் சங்கம் இயங்கத் தொடங்கியது. அக்காலக் கட்டத்தில்தான் நீர்ப்பகுதியாக இருந்த இமயமும் மேலெழுந்து அங்கும் அரசுகள் தோன்றின. தென்மதுரை இழப்பிற்குப் பின்னர் பாண்டிய மன்னர் தாம் இழந்த நாடுகளுக்கு ஈடாக வடக்கேயுள்ள நிலப்பகுதிகளை சேரர், சோழ மன்னர்களிடமிருந்து பெற்றதாக உரையாசிரியா நச்சினார்க்கினியர் தெரிவிக்கிறார். அவ்வாறு பாண்டியர் பெற்ற நிலப்பரப்பு போர் வழி வந்ததன்று. மாந்தநேய அடிப்படையில் இழந்தவர்களுக்கு இருப்போரால் வழங்கப்பட்டதாகும். அத்தகைய நல்லுறவு அன்று மொழிப் பரிமாற்றங்களும் தாக்கங்களுக்கும் வழிவகுத்தது. இன்று வடமொழியில் காணப்பெறும் தமிழ் சொற்களில் பெரும்பாலன இடைச் சங்கம் காலத்தில் கலந்தனவாகும். தொல்காப்பியம் தோன்றியது இக் கால அளவில்தான். வடமொழியில் தமிழின் தாக்கம் ஏற்பட்டதுபோல் தமிழிலும் அம்மொழியின் தாக்கம் ஏற்பட்டது. ஆகையால்தான்
5.1.3 வீரம் விதைத்த தமிழ்
நல்லுறவோடு பன்னாட்டு உறவு கொண்டிருந்த தமிழர்களின் வாழ்வில் வேத ஆகம ஊடுருவலால் (இடைச்சங்க கால இறுதியில்) மாற்றங்கள் ஏற்பட்டன. இடைச் சங்க கபாடபுரமும் கடலுள் சென்றது. கபாடபுரத்தைக் கொண்டது. முடியாட்சியின் முதன்மை மேலோங்கியது. கபாடபுரத்தைக் கொண்ட கடல் இலங்கை நிலப்பரப்பினைத் தமிழகத்திலிருந்து பிரித்தது. வையைக் கரை மதுரையில் கடைச்சங்கம் நிறுவப்பட்டது. மன்னர்கள் தங்கள் ஆட்சி மேலாண்மையினைக் காட்டிட அண்டைநாடுகளோடும் கடல் கடந்த நாடுகளோடும் போரிட்டனர். ஆட்சி நிலையில் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் அங்கெல்லாம் தமிழர்களின் மொழிச் செல்வாக்கும் மிகுந்தது. இந்தியாவின் வடபகுதி, ஜாவா, சுமத்திரா எனக் கடல் கடந்த பகுதிகள் எனத் தமிழ்மொழிப் பயன்பாடு மிகுந்தது. மக்கள் நல்லுறவு கொண்டிருந்தாலும் மன்னர்களின் மேலாண்மைச் செறுக்கு நிலவியதால் தமிழுக்கு இடம் தந்த அந்நாட்டினர் தமிழர்களைப் பகைத்தனர். எனினும் இனிய தமிழ்மொழி அவர்களை ஈர்த்தது.
தமிழ் மன்னர்கள் பிற நாடுகளுக்கு போர்மேற் சென்றதைப் போல பிற நாட்டவர் ஆட்சியும் தமிழகத்தில் ஏற்பட்டது. அந்நிலையில் அரபுச் சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் அரபு மொழியிலும் கலப்பது இயல்பாயிற்று. இன்றைக்குத் தமிழில் வழங்கிவரும அரபு, பாரசீயச் சொற்கள் அதனால்தான்.
5.1.4 புலம் பெயர்ந்தோர் தமிழ்
தமிழகத்திற்கு ஐரோப்பியர் வருகை பண்பாட்டு நிலையிலும் ஆட்சி நிலையிலும் பெரும் மாற்றத்ததை ஏற்படுத்தியது. கிறித்தவ சமயச் சானறோர்களின் சமயப் பணி விரைவுற்றது. தமிழர்களின் பயணப் பரப்பு விரிந்தது. ஐரோப்பிய நாடுகளுக்குத தங்கள்; வாழ்கை வளம் தேடிச் செல்லவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்கா. அப்போது புலம் பெயர்ந்தோர் மரபினர் இன்று ஐரோப்பிய நாடெங்கும் வாழ்கின்றனா;. அவர்கள் தமிழை மறந்தாலும் , அவர்கள் மேற்கொண்டுவரும் பண்பாட்டுச் செயல்பாடுகள் அவர்களைத் தமிழா;களாக இனங்காட்டிக்கொண்டிருக்கிறது.
இவர்களைத் தவிர பிறிதொரு முறையிலும் புலம்பெயர்வு நடந்துள்ளது. இந்திய நாட்டை வணிகச் சந்தையாக்கிய இங்கிலாந்து, பிரான்சு, போலந்து முதலிய நாட்டினர் தங்கள் நாட்டிற்குப் பணியாளர்களாக பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைத்தான் கொண்டுசென்றனர். அவர்களும் தம் மரபினரின் தாயகம் நீங்கி, தாம் சென்றடைந்த நாடடையே தம் நாடாகக் கொண்டு வாழ்கின்றனர். அவர்களும் மிகப் பெரும்பான்மையினர் தமிழ்மொழியை மறக்காமல். அந்தந்த நாட்டு மொழிச்சாயல் பெற்று தமிழ்மொழியைப் பேசிவந்தாலும் தமிழ் வளர்ச்சிப் பணிகள் உலகளாவிய நிலையில் பரவவேண்டுமென விரும்புகின்றனர்;: செயல்படுகின்றனர். மொரிசியஸ்;, சிங்கப்பூர், மலேசிய, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் இவ்வகையினா;. இவர்களுள் பலர் தமிழர்களின் பண்பாட்டு சாயலைக் கொண்டவர்களாவும் சிலர் மறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
5.1.5 வளமாக வாழ்வோர் தமிழ்
ஆட்சி நிலையில் தமிழா;கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட்டாலும் அவர்கள் தம் அறிவாற்றலை பெருக்கிக்; கொள்ளத் தவறிதில்லை. பிரிட்;டன் ஆட்சியில் தமிழர்கள் அடிமைப் பட்டிருந்தாலும் அவர்கள் புகுத்திய கல்விமுறையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இயந்திரப் பொறியியல், மருத்துவம், கட்டிடவியல், மின் பொறியியல், மின்னணுப் பொறியியல், கல்வியியல் எனப் பல்வேறு அறிவுத் துறைகளில் தங்களை வளப்படுத்திவந்தனர். அவர்களுடைய அறிவுத் திறத்திற்கு ஈடுகொடுக்கத் தக்க பணிவாய்ப்புகள் தமிழ்நாட்டில் அருகியதால் வளமான வாழ்க்கை நாடி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இன்றுவரை சென்றவாறுள்ளனர். பிற நாடுகளுக்கு அவர்கள் சென்றபோதும தமிழ் உணர்வோடு தமிழ் அமைப்புகளை ஏற்படுத்திவருகின்றனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திற்குச் சென்;றால் தமிழகத்திலிருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும்;. தமிழும் தமிழா; பண்பாடும் நிலைக்கின்றன.
5.1.6. உலக நாடுகளில் தமிழர்கள்
இன்றைய நிலையில் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் தமிழ்கள் வாழ்கின்றனர். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தமிழ் எங்கள் உணர்வுக்கு நீர்” என தமிழர்கள் வாழ்ந்து வாழ்வில் ஒளிர மொழிஞாயிறு ஞா.தேவநேயப்;;பாவாணா; தமிழ்நாட்டினா; ஆற்றவேண்டிய கடைமைகளையும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் தமிழ் வரலாறு என்னும் நூலுள் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். ( பாவாணர் தமிழ் களஞ்சியம் 6, பக். 127-130). அவற்றுள், வெளிநாட்டினில் வாழ்வோர் ஏற்கவேண்டிய கடமைகள் பற்றி மற்றும் இங்கு சுருக்கமாகத் தரப்படுகிறது.
1. உண்மையான தமிழ் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதுதல்.
2. பிறமொழிகளில் பயின்றுவரும் தமிழ்ச் சொற்களைத் திரட்டி ஆராய்தல்.
3. ஓவ்வொரு பெருநாட்டிலும் தமிழ்ப் பேராசிரியர்களைப் பணியமர்த்துதல்.
4. தமிழ்ப் பணபாட்டை உலகறியச் செய்யும் முகவர் குழுவை ( ) உலகம் சுற்றிவரச் செய்தல்
5. தமிழர் பெரும் எண்ணிக்கையில் உள்ள நாடுகளுக்கு இந்திய தூதாண்மைக் குழுவில் தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உள்ளோரைப் பணியமர்த்துதல்.
6. ஆக்ஸ்போர்ட் அகரமுதலி, பிரித்தானியா கலைக்களஞ்சியம் போன்ற நூல்களில் காணப்படும் ததமிழர் பற்றிய தவறான குறிப்புகளை நீக்குதல்.
5.2 பயன்பாட்டு மொழியியல் நோக்கில உலகளாவிய தமிழ்
இன்றைக்கு உலக மொழிகளாக விளங்குகின்ற ஆங்கிலம் பிரெஞ்சு, ஜெர்மன், உருசியன் ஆகிய மொழிகள் தனி மொழியாகத் தோற்றம் பெறாத காலத்திலேயே இலக்கிய வளத்தோடு உயர்தனிச் செம்மொழியாய் பொலிந்தது தமிழ் என்பது அறிஞா; பெருமக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
இந்திய மொழிகளிலேயே தமிழ்மொழிதான் இலங்கை , மலேசியா, கயானா, தென் ஆப்பிரிக்கா, பர்மா, பிஜி, மொரிசியஸ் , மடகாஸ்கர், வியட்நாம், மார்ட்டினிக், டிரினிடார் முதலிய நாடுகளில பேசப்பட்டுவருகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தனக்கென ஒரு வரலாற்றையும் வாழ்வையும் வகுத்துக்கொண்ட பெருமையுடையது இந்;தியப் பெருநாடு. இந்நாட்டின் தென்பகுதியில் மிகத் தொன்மைக் காலத்திலேயே பிறந்த தமிழுக்கு உலக மொழிகள் பலவற்றின் தோற்றத்திற்கு வழிவகுத்த பெருமை உண்டு. இன்றைய உலக மொழியாகிய ஆங்கிலம் பிறப்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே சிறந்ததொரு இலக்கியப் பரப்பினையும் இலக்கண வரம்பினையும் கொண்டு வாழ்ந்தது தமிழ்மொழி. மிகத் ;தொன்மைக் காலத்திலேயே இம்மொழி பிறமொழிகள் கிளைத்திட வழிவிட்டதால் கால வௌ;ளத்தில் அதன் முதன்மையினை அறிய தடைகள் பல ஏற்பட்டன. அவற்றுள் ஒன்று ஆரியச் சார்பாய் ஏற்பட்ட சமயம் சார்ந்த பண்பாடாகும். சுமய நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் ஊறிய மக்கள் அவற்றிலிருந்து விடுபட இயலாமல் ஆரியம் சார்ந்த சமத்கிருதத்தினைப் போற்றத் த்லைப்பட்னர். இருப்பினும் இன்றைய வரலாற்று மொழியியல் வளர்ச்சி தமிழின் முதன்மையினை வெளிக்கொணரத் தொடங்கியுள்ளது. ஆனால் அந்த ஆய்வகள் எல்லாம் சமத்கிருதத் தோற்றத்திற்குப் பிற்பட்ட கால அளவினைப் பற்றியதாக உள்ளதால் தமிழிலிருந்து தோற்றம் பெற்ற மொழிக் குடும்பங்களைப் பற்றிய நுண்மையாக ஆராயவில்லை. எடுத்துக்காட்டாக மராட்டியமொழி பற்றி மொழியியல் ஆய்வாளா;கள் கொண்டுள்ள கருத்தினைக் குறிப்பிடலாம். மராட்டிய மொழி ஒரு காலத்திய திராவிட மொழியின் பேச்சு வடிவமாக இருந்தது. சமத்கிருதத்திலிருந்து கிளைத்ததாகக் கொண்ட கருத்து இப்பபோது மாறிவருகிறது. பிராகிருத மொழியின் பேச்சு மொழி என்ற அளவில் இப்போது கருத்து மாறியுள்ளது. அதிலுள்ள எகர, ஒகர ஒலிகள். உறவுப் பெயர்கள் முதலியன அமமொழியினை திராவிடச் சார்பினதாய்க் காட்டுகின்றன.
5.2. 1 இன்றைய நிலை
பிராகிருதமா? திராவிடமா? இக்கருத்துப் பிணக்கு ஒருபுறம் இருக்க, இன்றைய நிலையில் தமிழின் உலகளாவிய நிiலையினைப் பற்றி வரலாற்று மொழியில் அறிஞர்கள் கூறுவனவற்றை நோக்குவோம்.
இன்றைய நிலையில் ஆங்கில மொழி உலக மொழியாகக் கருதப்படுகிறது. ஏன்? நாடுகள் பலவற்றில் தாய்மொழிய உள்ளது. உலக அளவில் ஏற்பட்ட தொழில் புரட்சிக்குப் பின்னர் ஆங்கிலேயர்களின் Nடிமலாண்மை மிக்க குடியேற்றத்தால் அம்மொழிக்கு உயர்வும் உலக மொழி என்னும் தகுதியும் கிடைத்தன. இதைக் கொண்டு இம்மொழி பிறவற்றிலிருந்து மேம்பட்தென்றோ, தோற்றத் தொன்மையுடைதென்றோ கூறிவிட முடியாது. மொழியின் முதன்மைப் பணியே மக்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவுவதுதான். அந்த வகையில் தமிழ் இன்று உலகில் பலநாடுகளில் பேசப்பட்டு வருகிறது. உலக மொழி என்னும் தகுதி தமிழுக்குத் தரப்படாவிட்டாலும் பன்னாட்டு தகவல் பரிமாற்ற மொழியாகத் திகழ்கிறது. இதன் வரலாற்றுச் சிறப்பு, இலக்கிய மேன்மை ஆகியனவற்றால் நாடுகள் பலவும் தமிழ்க்கல்வியின் ஆர்வம் காட்டுகின்றன.
5.2. 2 பல நிலைகளில் தமிழ்
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பது மட்டும் பெருமைக்குரியதன்று. உலகநாடுகள் பலவற்றிலும் ஆட்சிமொழித் தகுதி பெற்றுள்ளது. இலங்கை, மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக, துணை ஆட்சிமொழியாக, செய்திப் பரவல் தொடர் மொழியாக இலக்கிய மொழியாக பயன்பட்டுவருகிறது. மேலும் இ;ந்தோனேஷியா, மொரிஷியஸ், டிரினிடாட், முதலிய நாடுகளில் தாய்மொழியாகப் பேசப்பட்டுவருகிறது. இங்கிலாந்து அமெரிக்கா, உருஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோசுலவேக்கியா, முதலிய நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இவ்வாறாக, உலக அனவில் தமிழ் வளர்ச்சி பெற்றுவருதைக் காணமுடிகிறது.
உலகில் இன்றைய நிலையில் எத்தனையோ மொழிகள் உள்ளன. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளதாக மொழியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனா;. எனினும் வரையறுத்துக் கூற இயலாதவாறு மொழியின் எண்ணிக்கை உள்ளது. முன்னர் குறிப்பிட்டதுபோல எல்லா மொழிகளுக்கும் தொன்மைத் தாயாக இருப்பது தமிழ்மொழிக் கூறுகளைப் பெறுமளவு பெற்றிருந்த தொன்மை மொழி. ஆனால் அந்தத் தொன்மை அறுதியிட்டு நிலைநாட்டப்படாத நிலையில் மொழி ஆய்வாளர்களின் ஆய்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
5.2.3 இறவாத் தன்மை பெற்ற மொழி
கணக்கிலடங்கா மொழிகள் கொண்ட உலகத்தில் சில, பலகோடி மக்களால் பேசப்படுகின்றன. சில ஒரு சில இலட்சம் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. வேறு சில ஆயிரம் மக்களால் பேசப்படுகின்றன. நூற்றுக் கணக்கான மக்களால் பேசப்படும் மொழிகளும் உள. நூறு, ஆயிரம் என்ற அளவில் பேசப்படுவன விரைவில் பேச்சு மொழியிலிருந்துங்கூட அழிந்துவிடும். அவ்வாறு அழிந்த மொழிகள் பல உள.
இந்திய நாட்டில் மட்டும 3000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகக் கூறுவர். ஆனால் இந்நாள் வரை அனைத்து மொழிகளும் முழுமையாக ஆராயப்படவில்லை. அறிந்த வரையில் மொழியியலாளர்கள் இந்தியாவில் பேசப்படும் மொழிகளை நான்கு பெரும் பிரிவுகளில் ;காண்கின்றனர்.
1.இந்தோ - ஆரிய மொழிகள்,
2. திபேத்திய பர்மிய மொழிகள்,
3. ஆஸ்டிக் மொழிகள்,
4. திராவிட மொழிகள் என்பன அவை.
இந்தோ ஆரிய மொழிகளின் தொன்மைக்கால வேர் திராவிட மொழிகளில் உள்ளன வென்றபோதும் அவைவளர்ந்த நிலையில் திராவிட மொழிகளோடு மாறுபட்டுள்ளமையால் அவ்வினம் இன்றளவும் மொழியியலாளர்களால் தனி இனமாகக் கருதப்படுகிறது. இந்தோ ஆரிய மொழிகளில் தோற்றமாகக் கருதப்படும் சமத்கிருதம் இன்று வழக்கிழந்த மொழியாகியுள்ளது. எனினும் பிற இந்தோ ஆரிய மொழிகளுக்குத் தாயாகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் குறிபிடுவது போல, ஆரியம் போல் அழியாமல் தமிழ் என்றும் இளமையுடனும் வளமையுடனும் தளைத்து வருகிறது.
5.2. 4 தனிப்பண்பு கொண்ட மொழி
திராவிட மொழிகளுள் தமிழ்தான் மிகப் பழைமையான மொழி என்பதும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளிலும உலக நாடுகளுக்கெல்லாம் பரவியதென்பதும் இன்றைய மொழியியலாளர்களின் கருத்து.
இந்தோ - ஆரிய மொழி உருப்பெறுதற்கு முன்னரே திராவிட மொழிகள் பல வழக்கிலிருந்தன. மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்; பட்ட கல்வெட்டுகள் திராவிட மொழியைச் சார்ந்தவை என ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். இன்றும் , பிராகுவி மொழி பலுசிஸ்தானத்திலும், மால்டோ மொழி வங்களாத்திலும் குரூக் ,கோண்டி முதலிய மத்திய இந்தியாவிலும் பேசப்பட்டுவரும் திராவிட மொழிகள். இந்நிலை கொண்டு தொன்மைத் திராவிடத்தின் கூறுகளைப் பெருமளவில் பெற்றுள்ள தமிழின் கால மூப்பினை அறியலாம். தமிழ் பேசிய மக்கள் மிகப் பன்னெடுங் காலமாகவே தங்களுக்கென சிறந்ததோர் இலக்கியப் மரபினை உருவாக்கி அதனைக் கட்டிக்காத்து வந்தனர். வேத காலத்திற்குப் பின்னர் தமிழர் ஆரிய மொழியான சமத்கிருத்துடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் தனக்குரிய தனிப் பண்புகளைப் பேணி வந்திருத்தலை அன்று முதல் இன்று வiரை காணமுடியும். ஆனால் காலப் போக்கில் சமயம் , வாழ்வுச் சடங்குகள் போன்றனவற்றில் எல்லாம் சமத்கிருத மொழியின் செல்வாக்கு ஊடுருவியிருப்பதைக் காணலாம்.
சமத்கிருத மொழியில் காணப்படும் நாமடி ஒலிகள் பற்றி பாட் என்பார், இவ்வொலிகள் இம்மொழியில் ஏராளமாகக் காணப்படுகின்றன வென்றும் இவையனைத்தும் இந்தியா நாட்டில் பேசப்பட்ட பிறமொழிகளின் பிற மொழிகளிலிருந்து வந்தவை எனக் குறிப்பிடுகிறார். திராவிட மொழிகளில் விரிவான ஆய்வினை மேற்கொண்ட கால்டுவெல் சமத்கிருதத்தில் திராவிடச் சொற்கள் பல கலந்திருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்;. எனினும் அவர் குறிப்பிடாத பல சொற்களை பாவணர் அவர்கள் திராலிட மொழிக் குடும்பத்தின என நிறுவியுள்ளார். இன்றைக்கும் பல மொழிநூல் வல்லுநர்கள், சமத்கிருத்தை மையமாக வைத்தே தம் ஆய்வுகளைத் தொடங்குவதால் தமிழின் முதன்மை அறியப்படாமலிருப்பதாக மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணா; கூறுகிறார்.
5.2. 5 பல்கலைக் கழகத் துறைகளில் தமிழ்
இந்திய அரசு தமிழ் மொழியைச் செவ்வியல் மொழியாக 2004ஆம் ஆண்டு அறிவித்தது. அவ்வறிவிப்புக்கு முன்னரே உலக நாடுகளில் தமிழின் தொன்மை உணரப்பட்டது. உலக நாடுகளில் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ்த்துறைகள் நிறுவப்பட்டுள்ளன. மொழியைக் கற்பதற்கு ஆர்வம் ;கொண்ட பிற நாட்டு மாணவர்களும் தமிழை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். உலக அளவில் தமிழ் கற்கப்பட்டுவருவதற்கு நாடுகள் பலவற்றிலுள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் துறைகளும் இருக்கைகளும் அமைக்கப்ட்டுள்ளமையினைச் சான்றாகக் காட்டலாம்.
Ø இந்தோனேஷியா பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறையில் தமிழும் கற்பிக்கப்படுகிறது.
Ø யு+ட்ரெட் மாநிலப் பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறை தமிழ்ப் பிரிவினைக் கொண்டுள்ளது.
Ø இலெய்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை நிறுவப்பட்டுள்ளது.
Ø யுஃட்ரெஹ் பல்கலைக் கழகத்திலுள்ள துறைகளுள் தமிழ் கற்பிக்கப்படும் துறையும் ஒன்று. செக் நாட்டைச் சார்ந்த திராவிட மொழிப் பேராசிரியர் கடந்த 2007 வரை அப்பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தார்.
Ø செக் நாடு பிராகில் உள்ள கீழ்திசைக் கல்வி நிறுவனத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறது டாக்டர; கமில் சுவலபில் அங்கு பேராசிரியராகப் பணியாற்றியபோது தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார்.
Ø திராவிட மொழிகளில் ஆர்வமுள்ள டாக்டர் வாசெக் சார்லஸ் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் படிப்புகளை ஊக்குவித்துவருகிறார்.
Ø டென்மார்க்கில் உள்ள ஸ்கேண்டினேவியன் ஆசிய நிறுவனத்தில் தமிழ் ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துவருகின்றன.
Ø ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் பல்கலைக் கழகத்தில் இந்தியவியலுக்கென தனித்துறை உள்ளது. அங்கு தமிழுக்கென தனிப்பிரிவு இயங்குகிறது.
Ø மியான்மர் நாட்டின் இரங்கூனில் உள்ள தாகூர் கல்லூரியில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
Ø போலந்து நாட்டிலுள்ள வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
Ø பிரான்சு, ஜெர்மனி. ரஷ்யா, இங்கிலாந்து என ஐரோப்பிய நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் முதுகலை அளவில் கற்பிக்கப்படுகிறது.
Ø அமெரிக்கா, பெர்க்ளியயிலுள்ள கலிபோர்போர்னியா பல்கலைக் கழகத்தில் ஈழமாணவர்களும் அமெரிக்க மாணவர்களும் முதுகலைத் தமிழ்க் கற்றுவருகின்றனா;. இந்திய அரசு தமிழ்மொழியைச் செம்;மொழி என அறிவிப்பதற்கான ஆக்கக் கருத்துரைககளை வழங்கிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜியார்ஜ் ஹார்ட் இங்கு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
Ø அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன், சிக்காக்கோ, பென்சில்வேனியா முதலிய பல்கலைக் கழகங்களிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
Ø ருஷ்யத் தலைநகரான மாஸ்கோவிலுள்ள வானொலி நிலையத்திலே தமிழுக்கெனத் தனியாக ஒரு துறை இருந்து வருகிறது. இந்தியத் தமிழரோடு மட்டுமன்றிஇ உலக நாடுகளிலுள்ள தமிழரோடெல்லாம் தொடர்பு கொள்ளவும் மாஸ்கோ வானொலி நிலையத்திலுள்ள தமிழ்த்துறை பயன்பட்டு வருகிறது. இந்தியப் பெருநாடு விடுதலை பெற்ற பின்னர்தான் ருஷ்ய வானொலி நிலையத்திலே தமிழுக்குத் தனித்துறை கிடைத்திருக்கிறது.
Ø இந்தியா விடுதலை பெற்ற பின்னர்தான் அமெரிக்க வானொலியான ”வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா'விலும் தமிழுக்குத் தனி இடம் தரப்பட்டது.
Ø இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் வானொலி (பி.பி.ஸி.) நிலையத்திலே மிகவும் சக்தி படைத்த அமைப்பாக தமிழ்த்துறை இயங்கி வருகிறது
தமிழின் இன்னோசை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதை மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.
5.2. 6 தமிழ் இதழ்கள்
தமிழர் குடியேறி வாழும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகிய நாடுகளிலும் தமிழ் நாளேடுகள் தமிழரால் நடத்தப்படுகின்றன. ஒன்றிரண்டு நாளேடுகள் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் குடியேற்றப் பகுதிகளல்லாத பிரிட்டன், ருஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் ஏடுகள் வெளியிடப்படுகின்றன. இலண்டனில் குடியேறி வாழும் தமிழர் தங்கள் சொந்த முயற்சியால் கடந்த ஆறு ஆண்டுகளாக ”லண்டன் முரசு' என்ற பெயரில் தமிழ் மாத வெளியீடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்கக் குடியரசின் சார்பில் செய்திப் பிரசுரங்களும், சித்தாந்தப் பிரசார நூல்களும் தமிழில் வெளியிடப்படுகின்றன. சோவியத்இ அமெரிக்க ஏடுகளும் நூல்களும் மிகவும் மலிவான விலையில் தமிழகத்தில் விற்கப்படுகின்றன.
5.2. 7 யுனெஸ்கோ வெளியீடு
ருஷ்யாவின் தேசிய மொழியான ருஷ்ய மொழியில் தமிழ் இலக்கியங்களில் சிறந்தவை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் சிலப்பதிகாரம்இ பாரதியாரின் தேசிய கீதங்கள்இ தொல்காப்பியம் ஆகிய தமிழ் இலக்கிய - இலக்கண நூல்கள் மாஸ்கோவில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்கள் ருஷ்யாவின் பிரதேச மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள சர்வதேச ஸ்தாபனமான யுனெஸ்கோவின் சார்பில் ”கூரியர்' என்னும் பெயரில் 15 மொழிகளில் மாத இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா யுனெஸ்கோவின் துணை இயக்குநராக இருந்தபோது ”கூரியர்' தமிழ் மாத வெளியீட்டைக் கொண்டுவர ஏற்பாடு செய்தார் என்பது நன்றியுடன் நினைவிற் கொள்ளத்தக்கதாகும். இந்திய மொழிகளில் தமிழ்இ இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டுமே ”கூரியர்' வெளியிடப்பட்டு வருகிறது. இவற்றுள்ளும் முதன் முதலில் வெளிவந்தது ”தமிழ் கூரியர்' தான். பத்தாண்டுகள் கழித்தே இந்தியில் வெளிவந்தது.
உலகிலுள்ள நூலகங்களிலெல்லாம் மிகவும் பெரியது லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள நூலகம். அதிலேஇ தமிழ் நூல்கள் - குறிப்பாகஇ பழைய ஓலைச் சுவடிகள் நிறைய சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய நூலகங்களில் தேடிக் கிடைக்காமல் போனவற்றை பிரிட்டிஷ் மியூசியத்தில் தாம் பெற்றதாக டாக்டர் உ.வே.சா. கூறியுள்ளார். பாரிசிலுள்ள நூலகத்திலும் தமிழ் ஓலைச் சுவடிகளைக்காண முடிகின்றது.
5.2.8 எங்கெங்கும் தமிழ்ச் சங்கம்
நியூயார்க், லண்டன், பாரிஸ் போன்ற பெருநகரங்களில் தொழில் காரணமாகக் குடியேறி வாழும் தமிழர்கள் தங்களுக்கெனத் தமிழ்ச் சங்கங்கள் அமைத்துக்கொண்டு தங்களிடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றனர். சர்வதேச ரீதியிலான தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைமை அலுவலகம் சென்னையில் இருந்துவரக் காண்கிறோம். இந்திய மொழிகளிலேயே சர்வதேச அளவில் வளர்ச்சிபெறும் வாய்ப்பு தமிழுக்குத்தான் அதிகமாகக் கிடைத்து வருகிறது என்பதனை நினைத்து தமிழ் மக்கள் பெருமிதம் கொள்ளலாம்.
தன் மதிப்பீடு 1 வினாக்கள்
1. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே தமிழ் உலகெங்கும் பரவியதற்கான சூழல் யாது?
2. நல்லுறவுத் தமிழ் என தமிழ்மொழி அழைக்கப்படுவதேன்:
3. தமிழ் உலகெங்கும் பரவியமையினை அறிவதற்கான ஐந்து சூழல்கள் யாவை?
4. உலக அளவில் தமிழ்ப்பண்பாடு காணப்படுவதை எவ்வாறு அறியவியலும்?
5. பிற மொழிகளில் தமிழ் கலந்துள்ளமைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
5. 3 தமிழும் திராவிட மொழிகளும்
தமிழின் தொன்மை, முதன்மை, தனித்தன்மை ஆகியனவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டிய கால்டுவெல் திராவிட மொழிகள் 12 என்றும் அவற்றுள் திருந்திய மொழிகள் 12 எனவும் திருந்தா மொழிகள் 12 எனவும் குறிப்பிட்டார். ஆனால் தற்போதைய ஆய்வு முடிவுகள், திராவிட மொழிகளின் எண்ணிக்கையினை 29 எனக் காட்டுகின்றன. இவற்றிற்கொலலாம் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் திகழ்வது தமிழ் என மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வரையறுத்து உரைத்துள்ளார். திராவி மொழியில் அமைந்துள்ள தமிழ்க் கூறுகளும் குறிப்பாக திராவிட இலக்கியப் போக்கில் ஆழ வேரூன்றிய தமிழ் இலக்கண இலக்கியக் கூறுகளும் சமத்கிருத இலக்கண ஆசிரியர்களால் மறுக்கப்படாவிடினும் அறவே மறைக்கப்பட்டுள்ளன.
5.3.1 தமிழாகவே இருந்த திராவிட மொழிகள்
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென் திராவிட மொழிகள் மூன்றும் தொடக்க நிலையில் முழுக்க முழுக்க தமிழாகவே இருந்தது. நாளடைவில் திரிந்தவை என்பதற்குக் கீழ்க்காணும் சான்றுகள் காட்டப்படுகின்றன.
1. கடைச் சங்க காலத்திற்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இவற்றிற்குவேற்று மொழி இருந்திருப்பின்; பழந்தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் அவற்றின் பெயர் சுட்டப்பட்டிருக்கும். ஆந்திரர் என்பது ஆய் அண்டிரன் மரபினரது இனப்பெயரேயன்றி மொழிப்பெயரன்று.
2. ஏனையத் திராவிட மொழிகளின் தோற்றம் பிராகிருத மொழித் தோற்றத்திற்குப் பிந்தியது. பிராகிருத மொழி வேதகால ஆரியர்கள் வருகைக்கும் சமத்கிருதத்திற்கும் இடைப்பட்டது. அப்பொழுது தமிழொன்றே இந்தியாவில் வழங்கிய மொழி.
3. ஏனைய திராவிட மொழிகளின் அடிப்படை தொல்காப்பிய நெறிக்குப் பொருந்திவருகிறது. பாணினி இலக்கணத்திற்குப் பொருந்தவில்லை. தொல்காப்பியத்திற்கு மூலநூலானதும் தென்னாட்டில் தோன்றியதுமான ஐந்திர இலக்கணத்தின் வழி வந்த காதந்திர நெறிகளையே தெலுங்கு, மராட்டிய, கன்னட இலக்கண ஆசிரியர்கள் போற்றியுள்ளனர்.
4. ஏனைய திராவிட மொழிகளில் ழ, ற, ன சிறப்பெழுத்துகளின் ஆட்சியைக் குறைக்க வடமொழியாளர்கள் பெரிதும் முயன்று எழுத்து அழிவுப் பணி செய்துள்ளனர். எனினும் எ, ஒ குறில் ஆட்சியை அவர்களால் மாற்ற இயலவில்லை.
5. தெலுங்கில் அச்ச தெலுங்கு இயக்கம், கன்னடத்தில் பழங்கன்னட இயக்கம், மலையாளத்தில் பச்ச மலையாள இயக்கம் என்பன தோன்றி வடமொழிக் கலப்பினை எதிர்த்தன. ஆனால் தமிழ் பெருமக்களின் வடமொழி எதிர்ப்பு மட்டுந்தான் வெற்றியடைந்தது. இவ்வெற்றி தமிழின் தனித்தன்;மையினையும் தனித்து இயங்கும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.
பிறதிராவிட மொழிகளில் தமிழச் சொற்கள் இன்றைய நிலையில் தமிழில் வழக்கிழந்த ஆனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வழக்கிலுள்ள சொற்கள் பல. அவற்றுள் சில அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
தெலுங்கு கன்னடம் மலையாளம்
அடிவாள் புன் - சேவல் கோடகத்தி (கோத்தி) - குரங்கு நூநெய் (நூ- எள்) - எண்ணை ஊரேகல் - ஊர்வலம் கன்னு - மகப்பேறு நேர்ப்பு - கல்வி தன்னு - உதை நுவர் (நோரு)(நுவல்) - வாய் பால் - பங்கு நள் - கருமை காமுகர் - கலைஞர் கொள்கொடை கொடுக்கல் வாங்கல் துப்பம் - நெய் நிறைதரல் - முடிவுறல் பொழில் - நகரம் அறிகை - விசாரணை தோள் மரம் - பக்க மரம் இரியர் - பெரியர் முகிழ் - தயிர் முளவு - முயல் அமல் - இரட்சை வன்தீ - காட்டுத் தீ உப்பாடு - ஊறுகாய் வல்லித்த - இயன்ற நெடியரி - முழு அரிசி எந்து - எவ்வாறு பின்வலித்தல் - திரும்பப் பெறுதல் ஒடுவில் - இறுதியில் புல்புறம் - மேய்ச்சல் நிலம் நோ;கேடு - பொய் பொக்கம் - உயரம் கடுங்கை - கொல், குறும்பு
5.3.2 எண்ணுப்பெயர் ஒற்றுமை
மொழியில் எண்ணுப் பெயர்களின் தோற்றம் பழைமையானது. மாந்தரின் ஏரணச் சிந்தனை (தர்க்கம்) எழுந்த காலத்தில் எண்களைப் பற்றிய ஆக்கம் ஏற்பட்டிருக்கலாம். எண்ணுப் பெயர்கள் பல திராவிட மொழிகளில் ஒரே தன்மையான ஒலிப்புகளைக் ;கொண்டுள்ளன. இந்தியாவில் மட்டும் திராவி இன மொழிகளாக இந்நாள் ;வரை 30 மொழிகள் இனங்காணப் பட்டுள்ளன. எனினும் அவற்றின் ஒற்றுமைக கூறுகள் அனைத்தும் முழுமையாக ஆராயப்படவில்லை. ஆய்வுகள் நிகழ்ந்த அளவில் எட்டுமொழிகளுக்கான எண்ணுப் பெயர் வருமாறு:
எண் தமிழ்
தெலுங்கு
கன்னடம்
துளு
மலையாளம்
கூர்க்
கோலமி
பிராகுயி
மூலத் திராவிடம்
1 ஒன்று ஒக்கட்டி ஒந்து onji onnu ஒந்நு oṇṭa Okkod asiṭ *oru(1)
2 இரண்டு ரெண்டு எரடு raṇdu randu ரண்டு Indiŋ irāṭ irāṭ *iru(2)
3 மூன்று மூடு மூரு mūji mūnnu மூந்நு Mūnd Mūndiŋ musiṭ *muC
4 நான்கு நாலுகு நாலக்கு nālu nālu நாலு Nākh Nāliŋ čār (II) *nāl
5 ஐந்து ஐது ஐது ainu añcu அண்சு pancē (II) ayd(3) panč (II) *cayN
6 ஆறு ஆறு ஆறு Āji āru ஆறு soyyē (II) ār(3) šaš (II) *caru
7 ஏழு ஏடு Ēlu Ēlu ēzhu ஏழு sattē (II) ēḍ(3) haft (II) *eẓu
8 எட்டு எணிமிதி எண்ட்டு ēṇma eṭṭu எட்டு aṭṭhē (II) enumadī (3) hašt (II) *eṭṭu
9 ஒன்பது தொம்மிதி ஒம்பத்து Ormba onbatu ஒன்பது naiṃyē (II) tomdī (3) nōh (II) *toḷ
10 பத்து பதி ஹத்து pattu pathu பத்து dassē (II) padī (3) dah (II) *pat(tu)
இனி , தற்போதைய நிலையில் தென்னிந்திய திராவிட மொழிகளில் தமிழ்மொழித் தன்மைகள் காணப்படுவதை நோக்குவோம்.
5.3. 3 கன்னடத்தில் தமிழ்
தென்னக நான்மொழிகளுள் பழங்கன்னடம் பழந்தமிழுக்கும் பழகு தமிழுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. பழங்கன்னட இலக்கியத் தொடர்கள் தமிழிலிருந்து வேறுபடுத்தப்பட இயலாதவை என்பதற்குச் சான்றாக, வட்டாராதனை என்னும் நூலின் பகுதிகள் சுட்டப்படுகின்றன.
கன்னடம்: மர்தள கஹலாதி த்வனிகளும் எனித்து எனித்து ஆ புலி கேள்கும் அனித்து அனித்து அஞ்சி குகையுள அடங்கி இர்ந்தது.
தமிழ்: மத்தளம், காகளம் முதலியவற்றின் ஓசைகளை எனைத்து எனைத்து அந்தப் புலி கேட்குமோ அனைத்து அனைத்து அஞ்சி குகையுள் அடங்கியிருந்தது.
தக்கணப் பகுதி முழுவதும் வாழ்ந்த பழங்குடி மக்கள் தமிழர்களே என்றும் , கன்னடம் கருநாடகம் எனப் பெயரிட்டவர்கள் தமிழர்களே என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுற சையத்
துடனுரைபு பழகுதமிழ்த் திரி நிலங்களும்
என்பது அகத்திய நூற்hபா. (இந்நூற்பா மயிலைநாதரால் நன்னூல் 161 இன் உரையில் காட்டப்பட் டுள்ளது.)
‘கருநாடு” என்பது கரிசல் மண் எனப் பொருள்படுவதாகக் கொள்ளல் தவறாகும்.; “நாடு என்பது கன்நாடு என்றாகி கன்னாடு, கன்னடம் என்றாயிற்று” எனக்கொள்வதே முறை.”பெருங்கல் வைப்பின் நாடு கிழவோனே”, ‘கல்நாடன்” முதலிய தொடர்களில் கல் மலையும் குன்றுப் பகுதியும் நிறைந்த பகுதியைக் குறிக்கிறது. கல்நாடு - குன்றுகள் நிறைந்த நாடு. ஆந்திரத்திலுள்ள இராயல சீமைப் பகுதியும் கல் நாடே. அறை - ராய் . ராய் என்பது கல்லைக் குறித்ததாதல் கிரேக்க வேரினை உடை Pநவநச என்னும் பெயருக்குரிய தமிழாக்கமாக இராயப்பர் என்பதை வீரமாமுனிவர் கொண்டார். கன்னட இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் கருநாடர் என்னும் சொல் பயிலவில்லை. வீரசோழியத்தில் ‘கன்னாடர்” என்வும் பிராகிருதத்தில் ‘ கன்னாட” எனவும் மராத்தியில் ‘கானட” எனவும் கன்னடம் குறிக்கப்படுகிறது.
கருநாடகம் என்னும் சொல் அக்காலத்தில் மராட்டிய மாநிலைத்தைக் குறித்தது. ‘கருநாடு” என்றால் பெரிய நாடு எனப் பொருள்படும். கன்னடத்தில் இன்றும் ‘கருமாட” என்பது பெரிய மாளிகையைக் குறிக்கிறது. தராதந்திரம் என்னும் மராட்டிய நூல் மராட்டிய நாடடிற்கு கர்னாடக் என்னும் பெயரும் வழங்கப்பட்டதாகக் கூறுகிறது. பெரிய நாடு என்னும் பொருளில் சமத்கிருதத்தில் மஹாராஷ்ரா என்னும் வழக்கு ஏற்பட்டது. அச்சொல்தான் மராட்டியம் எனத் தமிழ்ப்படுத்தப்பட்டது. கலிங்கத்துப் பரணியில் கருநாடர்,வடுகும் தமிழும் குழறிப் பேசினரேயன்றிக் கன்னடம் பேசியதாகக் குறிப்பிடவில்லை.
சிலப்பதிகாரக் கதை கன்னட நாட்டுப் புறங்களில் சந்திராவின் கதையாக வழங்கிவருகிறது. தமிழ்ப் பண்பாட்டுக்கே உரிய திருமணமுறை அகநானூற்றில் காணப்படுகிறது. அம் முறை இன்றளவும் கன்னடநாட்டில் பின்பற்றப்பட்டுவருகிறது. தெலுங்கு நாட்டுப் புறங்;களிலும் ஒரிசாவிலுள்ள தோபி வகுப்பார் திருமணங்களிலும் தமிழகத்துக் கசவர் பழங்குடிகளிடமும் இம்மணமுறை இன்றும் காணப்படுகிறது.
முழுநிலா நாட்களில் விழாக் கொண்டாடுதல், இன்னியம் அல்லது பறை முழங்க நள்ளிரவில் முதன்முதல் அறுவடை விழாச் செய்தல் ஆகிய பழந்தமிழ் வழக்கங்கள் இன்றும் குடகு மக்களிடையே முழுமையாகவும் தஞ்சைப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களிடை ஓரளவும் காணப்படுவதை புலமை முத்திங்களிதழ் எடுத்துக்காட்டியுள்ளது. இளங்கோவடிகள் மணவறைக் கட்டிலை மங்கல நல்லமளி எனக் குறிக்கிறார். மங்கலம் என்னும் சொல்லாட்சி குடகு மக்ளிடையே இன்றும் விழாக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. (கன்னி மங்கல- திருமணம், கெமிகுத்தி மங்கல - காதுகுத்து விழா, பய்த்தாண்டெக்கு அளெப்ப மங்கல - பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு எடுக்கப்படும் விழா)
தமிழகத்துப் பெரிய புராணம் கன்னட நாட்டுச் சிவனடியார்களுக்கு தெய்வ மணம் கமழும் பெரும் நூலாகத் திகழ்கிறது. இதன் உள்ளடக்கம் அக்காலத்திலேயே கன்னடச் சிவனடியார்களால் பல நூல்களாக ஆக்கபட்டுள்ளது. ‘சிவகணத ரகளெகள்” என்பது 63 சிவனாடியார்கள் பற்றிக் கூறும் கன்னட இலக்கியம். “நம்பி யண்ணன ரகளெகள் “ என்பது நம்பி ஆரூரர் பற்றியது. “சத்தியேந்திர சோழ சரித” ;என்;பது சம்பந்தர் பற்றிக் கூறுகிறது. சேக்கிழார் பிள்ளை நாயனார் எனப்படுகிறார். சிவனடியார் அறுபத்து மூவரும் புராதனர் என்றும் கன்ன நாட்டுச் சிவனடியார்கள் நூதனர் என்றும் அழைக்கப்படுகின்றனர். கன்னட இலக்கண நூலான சப்த மனு தருப்பணம், ழகர எதுகை கொண்ட 181 உரிச்சொற்களின் பொருள் கூறிப் பழங்கன்னடத்தின் தனித்தன்மை நிறுவப்படுகிறது.
தென் கன்னட நாட்டில் வேலனின் வெறியாட்டும் அதன்கண் பாடப்பெறும் பாடல்களும் தமிழ் கன்னடத்திலிருந்து வேறுபட்டதன்றென்பதை காட்நிற்கின்றன. இன்றும் மைசூர் அண்மையிலுள்ள திருவரங்கப் பட்டினத்திலுள்ள திருமால் கோயில் பாடப்படுவது சிதைந்த வடிவிலுள்ள நாலாயிரத் திவ்விய பிரபந்தம். 300- 400 ஆண்டுகளுக்கு முன் மைசூரில் குடியேறிய ஐயங்கார் வகுப்பினர் சிதைந்த தமிழைப் பேசிவருகின்றனர். அதுதான் தம் தயாமொழி எனப் பெருமையுடன் கூறிவருகின்றனர். இடைக் கால கன்னட மன்னர் ஒருவர் நாட்டுப் புற மகளிற்கென்;றே வள்ளைப் பாடல்களை ( உலக்கைப் பாட்டு) மிகுதியாக எழுதித்தந்தாராம். ஆவற்றிற்கு ‘ஓவணிகே ஒணக்கே ஹாடு” என்று கன்னடத்தில் பெயர் வழங்குகிறது.
5.3. 4 தெலுங்கில் தமிழ்
தெலுங்கு என்னும் சொல் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் வழக்கில் இல்லை என இராமகிருஷ்ண சாஸ்திரி தம் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை புகழ்பெற்று விளங்கிய ஆந்திர சாதவாகனர் காலத்தில் பிராகிருத இலக்கியங்களே புகழ்பெற்றிருந்தன. தெலுங்கு மொழியின் சுவடே சிறிதும் அறியப்படவில்லைi. பிராகிருத இலக்கியங்களில் தெலுங்குச் சொற்களாகச் சுட்டப்பட்டவை அனைத்தும் தமிழ்ச் சொற்களே.
தெலுங்கில் கி.பி.ஏழாம் நூற்றாண்டு வரை தமிழுக்கே உரிய சிறப்பு ழகரம் இருந்தது என்பது ஆந்திரநாட்டுக் கல்வெட்டுகளால் புலனாகிறது. யுவாங் சுவாங், கோதாவரி ஆற்றைக் கடந்ததும் தமிழ்நாட்டைக் கடந்ததாகக் கூறுகிறார். இன்றும் குச்சரம் ;, மராத்தி, இந்தி மொழிகளைப் பேசும் மக்களின் பேச்சுமொழியில் ழகர ஒலிப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். தெலுங்கரில் முற்போக்கு எண்ணமுடைய சிலர் தெலுங்கு எழுத்துகளில் வலியப் புகுத்தப் பட்டிருக்கும் வேண்டாத வடவெழுத்துகளின் சிலவற்றையேனும் நீக்கவேண்டு மென்றனர். பங்காரு அய்யா என்னும் தனித் தெலுங்கு அறிஞர் ‘ஆந்திர மண்ணின் தோன்றிய பெருமக்கள் மீது காப்பியம் பாடாமல் வடநூல் பாரத இராமயணக் கதைகளைக் தெலுங்கில் எழுதியமையால் தெலுங்கின் மேன்மை அழிந்துவிட்டது” என்றும் “தாய்மொழியை மறந்தவன் இறந்தவனே” ( தல்வி நுடினி மறசின வாடு சச்சின வாடே) என்றும் தெலுகுநுனிநாடி என்னும் தம்நூலில் தம் மொழிப் பற்றினை வெளிப்படுத்தியுள்ளார்.
தெலுங்குப் புலவர் ஒருவர், தெலுங்கு தனிமொழி என்று நிலைநாட்டக் ‘ கோடலு”, (மருகள்), வல்லநாடு (சுடுகாடு), நூன (எண்ணெய்) ஆகியனவற்றைக் குறிப்பிட்டுக் கோடலு என்பதை மென்மை ஆலு எனப் பிரித்து மென்மையான பெண் எனப் பொருளுரைத்தார். ஏனையவற்றை வேர் அறியவியலா பழஞ்சொற்கள் என்னார். இதற்கு மறுப்புரையாக பேராசிரியர் மதிவாணன் அவர்கள் கீழ்க் குறித்தவாரான விளக்கத்தைத் தம் ‘தமிழும் திராவிட மொழிகளும் “ என்னும் கட்டுரையில் தந்துள்ளார்.
தெலுங்கு தமிழ்
கோடலு (மருமகள்): கோடல் - பிறர் வீட்டிலிருந்து கொண்ட பெண். கொளல்- கொள்ளல்- கோடல். கொள்வினை, கொடுப்பினை என்பது குறிப்பிடத் தக்கது. லு பெண்ணைக் குறிக்கும் விகுதி (தெலுங்கில்)
வல்லநாடு (சுடுகாடு): வௌ;காடு - ஆள் இயங்காக் காடு. வெண்களமர் - பிறரைக் n;காண்டு வேளாண்மை செய்பவர். வௌ; என்பது செயற்பாடா மையினைக் குறிக்கும் . இச்சொலு hழங்கன்னடத்தில் பௌ;காடு எனக் காணப் படுகிறது (தமிழின் வ கன்னடத்தில் ப ஆதல் காண்க)
நூனா (எண்ணெய்): நூ- நெய் - நல்லெண்ணெய்- நூ -எள் . தெலுங்கிலும் நூகுல் என்பது எள்ளினைக் குறிக்கும். நோலை - எள்ளுருண்டை
ஆரிய இலக்கண இலக்கியத் கூறுகள் தெலுங்கில் விரைந்து புகுத்தப்பட்ட அளவில் தமிழ் இலக்கண இலக்கியத் தாக்கம் ;அம்மொழியில் ஏற்படாமையால் தெலுங்கு சமத்கிருதத்திலிருந்து கிளைத்ததாகக் கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னடம்.. மலையாளம் ஆகியன ஒரு தாய்வயிற்றின எனக் கூற முற்படுவோர். தமிழின் தொன்மை நோக்கிப் பொறாமைப் படுபவரே. நடுநிலையோடு சிந்தித்தால் தென்னகத் திராவிட மொழிகள் அனைத்தும் தமிழின் குழந்தைகள் என்பது புலப்படும்.
தெலுங்கு இலக்கண நூலாகிய பால வியாகரத்தில் ராமுடு, தம்முடு (இராமன், தம்பி) என்னும் சொற்களின் பழைய வடிவத்திற்கு ராமுன், தம்முன் என ஆண்பால் னகர ஒற்றுக் கூறப்பட்டிருந்தும் சமத்கிருதப் புலவர்கள், தெலுங்கில் உள்ள னகர ஒற்றை நீக்கிவிட்டு நகர ஒற்றைப் பயன்படுத்தி அச்சொற்கள் சமத்கிருதச் சொற்கள் என நம்பவைத்தனர். னகர மெய்யீற்றுச் சொற்களுக்குத் தெலுங்கில் ‘த்ருதப்ரக்ரதமு” என்று பெயர் உள்ளது. எழுவாய் ( முதல் வேற்றுமை) பெயர் தோன்று நிலையாகவே நின்று வேற்றுமை உருபு எதனையும் கொள்ளாது என்பது தொல்காப்பிய நெறி. இதனையே அனைத்துத் திராவிட மொழிகளும் கொண்டிருக்கும்போது, தெலுங்கில் மட்டும் முதல்வேற்றுமைக்கு சமத்கிருதத்தைத் தழுவி உருபு கொள்ளப்பட்டிருப்பது, சமத்கிருத வெறியர்கள் திராவிட மொழியை அழிக்க நினைத்த சதிவேலைகளுள் ;ஒன்றாகும்.
தெலுங்குச் சொற்களில் பத்து விழுக்காட்டுச் சொற்களுக்கு மட்டுமே ‘டு” ஈறும் ஐந்து விழுக்காட்டுச் சொற்களுக்கு ‘மு” ஈறும் உள்ளன. எஞ்சிய 85 விழுக்காட்டுச் சொற்கள் எழுவாயாகும் நிலையில் ஈறு எதுவும் பெறாத நிலையில் தெலுங்கில் எழுவாய் வேற்றுமைக்குச் சமத் கிருதம் போல் உருபு உண்டு என்பது தவறான கருத்தாகும். மொழிகளின் வரலாறு இவ்வாறிருக்க, சமத்கிருதத்தின் மேலாண்மையை வலுப்படுத்தவும் மாநில மொழிகளின் தனித்தன்மையைச் சீரழிக்கவும் இலக்கணம் வகுக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டால் அந்த இலக்கணமுறையினைத் தாய்மொழியினர் உதறித் தள்ளிவிடுவர். இந்திய ஒருமைப்பாடு பேசுவோர் மொழி வாயிலாகவே அதனை ஏற்படுத்தவேண்டுமே யன்றி பிற வழிகள் பயன்படா.
5.3.5 மலையாளத்தில் தமிழ்
மலையாளம் தமிழின் கிளைமொழியாக இருந்து பின் தனிமொழியாக வளர்ந்தது. என்று கால்டுவெல் அவர்கள் கூறுகிறார். கேரள பாணினியம் என்னும் இலக்கண நூலும் இக்கருத்தையே கொண்டுள்ளது. கேரள அரசு1941இல் வெளியிட்ட1100 கல்வெட்டுகளில் 835 தமிழ் கல்வெட்டுகளே. 14ஆம் நூற்றாண்டுவரை கேரளத்தில் ஆட்சி மொழி செற்தமிழாகவே இருந்ததென வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிலப்பதிகாரம் தோன்றிய சேரநாட்டில் அதன் எச்சமாக இன்றும் கண்ணகியின் வரலாறு நல்லம்மை தோற்றப்பாட்டாகப் பாடப்பட்டுவருகிறது. கேரள மலையன்மாpன் தெய்வமான ஒற்றை முலைச்சியைப் பாலை மரத்தடியில் அவர்கள் ;வழிபடுகின்றனர். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் எழுதுவரிக் கோலமே இன்றும் மலையாளத்தில் கதகளியாட்;டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டம், தென்காசி வட்டத்திலுள்ள கணக்கப்பிள்ளை வலசை என்னும் சிற்றூரில் உள்ள குளத்தூரையனாh; மீது பாடப்பெற்ற குளத்தூரையனார் நொண்டி நாடகம் தமிழ்நாட்டில் இன்று எங்கும் கிடைக்கப் பெறாததும் இதுவரை அச்சேறததுமான மிக அண்மைக்கால நொண்டிநாடகங்களுள் ஒன்றாகும். அது; திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பனைஓலை ஏட்டில் உள்ளது. இவற்றை யெல்லாம் நோக்கும்போது மலையாளமும் தமிழும் பல நூற்றாண்டுகளாக ஒன்றியிருந்து மொழிகள் எனத் தெரிகிறது.
நாக பகவதியை வழிபட்டுவரும் புலையர் இனத்தவரிடத்தில் தென்னை மடல் குதிரை ஏறிவரும் பழைய மடலேறும் வழக்கத்தின் சாயலைக் காணமுடிகிறது. திருவனந்தபுரம சிவன் கோயிலில் ஆண்டுதொறும் மார்கழித் திங்களில் சாக்கியர் கூத்து நடைபெறுகிறது. இது சேரன் செங்குட்டுவன் மீது கூத்த சாக்கியன் ஆடிய கூத்தின் வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பழந்தமிழகத்து நாட்டுபுறக் கலைகளில் பல இன்றும் மலையாளத்தில் உள்ளன. பாணன்,கனியன் ஆட்டங்கள், காளி நாடகம், பாணத்தோற்றம், குறத்தியாட்டம்ட, கைகொட்டிக்களி, வெளிச்சப் பாடு, விளக்கைச் சுற்றி அமர்ந்து பாடும் பாடல், விடுகதை அல்லது வினை விடை வடிவலமைந்த ஏழாமத்தி, யாத்ரகாளி, சாக்கியர் என்பர்ர் எட்டுநாள் நடத்தும் கூத்தாகிய கூடியாட்டம், நங்கையரின் நன்மொழிக் கூத்தாகிய பாடகம், கதகளி, தெய்யாட்டம், மோகினி யாட்டம், துள்ளல், களி, கூத்து, குடகு மொழியாரின் கொடிச்சிப் பாட்டு ஆகியன கலைத் துறையினரால் முறைப்பட ஆயப்படின் தமிழும் மலையாளமும் ஒரு பண்ப்hட்டின் கீழ் வாழ்ந்தென வெளிப்படும். இவையெல்லாம் தமிழும் மலையாமுன் வெவ்வேறவையல்ல எனக் காட்டக் கூடிய சான்றுகளாகும்.
மலையாளத்தில் நடைபெறும் விடுகதை அல்லது வினாவிடை வடிவிலான ஏழாமத்திப் பாடல்வகை தொல்காப்பியத்தில் பிசி என்று கூறப்படுகிறது. இது விடிய விடிய நடைபெறும் பாட்டும் உரைநடையும் கலந்த நகைச் சுவை விருந்தாகும். இது கன்னட நாட்டில் கருங்கூத்த எனவும் (யக்ஷ கானம்) ஆந்திரத்தில் புர்ர கத எனவும் வினாவிடைக் கதையுரைக் கோவை (கதா கலாச் சேபம்) எனவும் நிலவி வருகின்றன. ஏனையத் திராவிட இதன் தமிழ் மூலத்தை அறியாதிருக்கின்றனர்.
முத்தமிழ் இலக்கண இலக்கியக் கூறுகள் அனைத்துத் திராவிட மொழிகளிலும் இருப்பதற்கு எண்ணற்ற பண்பாட்டு;ச சான்றுகள் காணப்படுகின்றன. முதுசொல் என்று தொல்காப்பியத்தில் கூறப் படும் பழமொழி இலக்கிய வகை ஒரே கருத்திலும் ஒரே சொல்லாட்சியுடயுடனும் திராவிட மொழிகளில் காணப்படுகின்றன. இவற்றின் அளவு மலையாள மொழியில் மிகுதியாகும். ‘பழஞ் சொல்லினும் பதரில்லா”, ‘ஊணினு மும்பு உப்பேரி”, ‘வாக்கினு மும்பு பழஞ்சொல்லு” முதலிய மலையாளப் பழமொழிகள், பழமொழிகளில் பயனில்லாதன எவையுமில, உணவு பரிமாறும் முன் இலையில் உப்பு வைத்தல், ஏற்புடைய பழமொழியைக் கூறித் தொடங்குதல் முதலிய தமிழ்ப் பண்பாட்டுச் செயல்களை இம்மொழிகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பரமேசுவர நாயர் என்பவர் மலையாளம் தமிழ் மொழி மலையாளத்திலிருந்து பிரிந்தன்றெனக் கூறியிறுப்பது (1968இல்) இங்கு மறுக்கவேண்டியதாகும்.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்டிய டாக்டர் கால்டுவெல் கருத்தை உலகமே ஏற்று தமிழின் சேய்மொழிகளாக தெலுங்கையும் கன்னடத்தையும் மலையாளத்தையும் துளுவையும் கூறி வருகிறது. ஏதோ ஒரு மூலத்திராவிட மொழியில் இருந்து தமிழும் மலையாளமும் பிறந்ததாக பரபேசுவரன் நாயர் கூறுவது கட்டுக்கதை.
இதே நூலில் தொடர்ந்து பொய் எழுதிய பரமேசுவரன் நாயர் தடுக்கி விழுகிறார்.
“தமிழ் என்ற சொல்லுக்கு இன்று வழக்கில் உள்ள பொருளில் மலையாளத்தை எக்காலத்திலும் தமிழ் என்று குறிப்பிட்டதில்லை. மூலத் திராவிட மொழியின் பிரிவுகள் என்ற கருத்தில் கன்னடத்தை கரிநாட்டுத் தமிழ் என்றும் துளுவை துளு நாட்டுத் தமிழ் என்றும் சொல்லி வந்ததைப் போலவே மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றும் சொல்லி வந்தார்கள்”
என அவரே எழுதுகிறார். இக்கூற்றிலிருந்து தமிழ் என்ற சொல்வழக்கு மிகப் பழங்காலத்தது என அறியலாம்.
5.4 வடமாநிலங்களில தமிழ்
பிராகிருதம் சமத்கிருதத்தற்கு முந்திய மொழி. இம்மொழியினை இனிமை ஊட்டுவதுதிராவிடமொழிக் கூறுகள். அதலிருந்து வெளிப்படவே ஆரியர்கள் சமத்கிருதத்தை உருவாக்கினர். சமத்கிருதம் உண்டாக்கப்பட்ட மொழியே யன்றி மக்களிடம் உருவாகிய மொழியன்று.
பிராகிருத இலக்கிய இலக்கணக் கட்டுக்கோப்பில் தமிழின் தாக்கமே வடமொழித் தாக்கத்தினும் விஞ்சி நின்றது. பிராகிருதப் புலவர்கள் வடமொழியை வல்லொலி மொழி என இகழ்ந்தனர். பிராகிருதம் தமிழைப் போன்றே சமத்கிருதச் சொற்களை மெல்லொலிச் சொற்க்ளாக மாற்றிக்கொண்டதால்; பிராகிருதம் இன்மொழி, பாட்டுமொழி எனப் பாராட்டப்பட்டது. கி.பி. முதல் நூற்றாண்டில் ஆளன் என்னும் சாதவாகன மன்னன் எழுநூறு அகப்பாடல்களை ‘காதா சப்தசதி” என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தான். அதிலுள்ள பாடல்கள் பல கடைச்; சங்க காலச் செய்யுள்களின் மொழிபெயர்ப்பாகவே காணப்படுகின்றன. திணை, துறை வகுக்கப்படாத பாடல்களைக் கொண்டது. பிராகிருதத்தில் உள்ள ‘காதா சப்தசதி” . ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடிய புறநானூற்றில் உள்ள “என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே” (புறம் 175), என்னும் வரி சொற் பிறழாமல் பிராகிருதப் புலவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளது. சமத்கிருதத்தில் இத்தகைய தனிநிலைப் பாடல்களான அகப்பாடல் வகை இன்மையால் இந்நூலை கோவர்த்தனாச் சாரியார் என்பவர் ‘ஆரிய சப்தசதி” என்னும் பெயரில் சமத்கிருதத்தில் மொழி பெயர்த்தள்ளார். இதிலிருந்து தமிழ் இலக்கிய இலக்கணக் கூறுகள் மிகப் ;பழங்காலத்திலேயே பிராகிரு மொழியைத் தாக்கியுள்ளமை அறியப்படும். ஆனால் இன்றைய நாளில் பிராகிருத , சமத்கிருத வல்லுநர்கள் இவ்வுண்மையினை மறைத்துவருகின்றனர். வடநாட்டு அரசன் ஆரியன் பிரகதத்தனுக்கு (அசோகருக்குப் பின் மூன்றாவதாக அரசுகட்டிலேறியவன்) தமிழ் அறிவிக்க கபிலர் குறிஞ்சிப் பாட்டு இயற்றியமை அக்காலத்தில் இந்தியாவின் வடபுலத்தே வாழ்ந்தோர்தமிழ் கற்க விரும்பியதற்குச் சான்றாகிறது.
புழந்தமிழில் ‘தொன்மை” என்றும் இந்;திய மொழிகள் அனைத்திலும் “ சம்பு காவியம் “ என்றும் அழைக்கப்படும் உரையிடை யிட்ட பாட்டுடைச் ;செய்யுள் அமைப்பு தமிழிலிருந்து பிற மொழிகள் பெற்ற கொடையாகும். இதனை சமத்கிருதத்திற்கோ பிராகிதத்திற்கு உரியது எனகூறுவது அறியாமை யாகுமெனப் பேராசிரியா; மதிவாணன் தெரிவிக்கிறார். பிராகிருத மொழி உருப்பெறாத அப்பழங்காலத்திலேயே செய்யுளும் ;உரைநடையும் விரவி வரும் பாங்கு, தமிழ் மொழிக்குரிய தனித் தன்மையாக மிகப் பழங்காலத்திலேயே ஏற்பட்டது. இதனைத் தொல்காப்பியம்,
தொன்மை தானே
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே
எனக் குறிக்கிறது.
5.4. 1 வட திராவிட மொழிகளில் தமிழ்
பிராகுவி, குவி, ஓரோவான் முதலிய தமினத்தைச் சார்ந்த மொழிகள் வட திராவிட மொழிகள் எனப்படுகின்றன. பத்தாம் நூண்டாளவில் மராத்திய மொழியும் குஜராத் மொழியும் திராவிட மொழிகளில் சேர்த்தெண்ணபட்டன. இன்று அவற்றை ஆரியமெமாழிகள் என்கின்றனர். ஆரியச் சொற்கள் அம்மொழிகளில் மிகுந்திருப்பதால் ; மொழி நூலார் அவற்றை ஆரிய இனத்தைச் சார்ந்ததாகக் கூறுகின்றனர். அம்மொழிகளில் உள்ள உறவுப் பெயர்களில் பெரும்பான்மை தமிழிலுள்ள உறவுச் சொற்களுக்கு இயைந்து வருவதால் அவற்றையும் திராவி மொழிகள் எனக்கொள்வதே பொருந்தும். ‘ஒரு மொழி தொடக்க காலத்தில் எவ்விதம் முகிழ்த்தது எனறு கண்டறிய மொழிநூலாரை நம்பிப் பயனில்லை. மொழி ஆராய்ச்சியாளர்கள் தாம் சரியான வரையறை தரமுடியும்.” எனப் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.
அவ்வாறே கி.மு. 1000க்கு முன்னர்; வட இந்திய மக்களின் பேச்சு மொழியாக இருந்த பைசாச பிராகிருதமும் அதனின்று கிளைத்ததும் தாயானதுமான பாலி பிராகிருத மொழிகளும் தமிழினின்று திரிந்த திராவிட மொழிகளேயாகும். இம்மொழிகள் அக்கால பிராகிருத மொழிகள் ஆதலால் அவற்றிலும் தமிழ் கலந்துள்ளது.
ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுமையும் நாவலம் என்னும் பெயரிலிருந்த நிலப்பரப்பு சேரர்களின் ;ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ‘குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரன்” எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. கைபர், போலன் குகை வழி ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது சிந்வெளியின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழே என்றும் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து வேதங்களைப் படைத்தனர். இருக்கு வேதத்தில் ‘பஞ்ச ஜன்” எனக் குறித்திருப்பது ஐந்து நிலப் பாகுபாட்டினைக் கொண்டருந்த ( குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல் , பாலை) தமிழர்களையே என்றும், இவ்வுண்மை பல ஆய்வாளர்கள் உணரவில்லை என்பது வருந்தற்குரியது என்றும் பி.தி. சீனிவாச ஐயங்கார் கூறுகிறார். மேலும் இருக்கு வேதத்தில் வரும் பணீஸ் என்னும் மக்கள் வடநாட்டுத் தமிழ்ப் பண்ணைக் காரர்கள் என்றும் அவர் கூறுகிறார். இன்றும் நிலக் கிழார்களைப் பெரிய பண்ணை, சிறிய பண்ணை எனக் கூறும் வழக்கு ஊர்ப்புறங்களில் காணப்படுகிறது. சிந்துவெளி நாகரிக காலத்தில் தொடர்ச்சியறாமல் இந்தியாவின் வடபகுதி முழுமையும் வாழ்ந்த மக்கள் தமிழரே. அவர்தம் மொழி பின்னர் ஆரியர்களின் பேச்சுமுறையால் பிராகிருதமாயிற்று. பின்னர் சமத்கிருதம் என ஆக்கப்பட்டது. ‘சமஸ்” என்பது சமைத்தல், பதப்படுத்தல் எனப் பொருள்படுவது. இச்சொல்லின் வேர்கூட தமிழே.
பிராகிருதம் என்பது தனிமொழியென்றும் அது சமத்கிருதத்திலிருந்து தோன்றியதன்று என்றும் பிராகிருத மொழிப் பேராசிரியர் ஜகதீஷ் சந்திர செயின் குறிப்பிட்டுள்ளார். பிராகிருத மொழியில் எகர, ஒகரக் குறில் எழுத்துகள் உட்பட தமிழ்க கூறுகள் பல உள்ளன. பைசாச பிரகிருதம் துருக்கி, சீனக் கல்வெட்டுகளில ;காணப்படுவதுகொண்டு தமிழ்மொழி அங்கெல்லாம் தழைத்ததென அறியமுடிகிறது.
பௌத்த நூலில் வரும் ‘தமலிகா” (தமிழகம்) என்னும் சொல் இந்தியா முழுமையும் குறிப்பதாக இருப்பதும் இச் செய்தி றுழசடன நுவாழெடழபல என்னும் நூலில் இடம்பெற்றிருப்பதும் வட இந்திய மொழிகளில ;ஆழ வேரூன்றியுள்ள தமிழின் தாக்கத்தைக் காட்டப் போதுமானவையாகும்.
தொல்காப்பியம் ஐந்திர இலக்கணத்தின் வழிப்பட்டது. ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியர் என தொல்காப்பியா; பற்றி அந்நூலுக்குச் பாயிரம் தந்த பனம்பரனார் கூறுகிறார். பிராகிருத இலக்கண மரபான காதந்திர மரபும் பாலி மொழியின்; இலக்கண நெறியான கச்சாயன மரபும் ஐந்திரத்தின் தாக்கம் பெற்றவை எனக் கூறப்படுகின்றன. ஆ ரியர் வருகைக்கு முன்னும் பின்னும் ஐந்திர இலக்கணம் இந்தியாவின் ஒரே இலக்கணமாக விளங்கியது எனவும் அது 2500 நூற்பாக்களைக் கொண்டதெனவும் ‘இந்தியாவின் புத்த சமய வரலாறு” என்னும் நூலில் தாராநாதா; குறிப்பிடுகிறார். அந்நூல் பாணினீயத்தை விடப் பன்மடங்கு பெரியது. சுமத்கிருத மொழியும் ஐந்திர இலக்கணத் தாக்கத்தால் உயிரெழுத்து மெய்யெழுத்து முறைவைப்பினையும் வளைநா ஒலிகளையும் தமிழிலிருந்து கடன்பெற்றிருக்கிறது. பெரிதும் ஆரியத் தாக்கம் பெற்ற வட இந்திய மொழிகள், வாக்கிய அமைப்பில் திராவிடமாகவும் சொல்வளத்தில் ஆரியமாகவும் உள்ளன வென்பது கால்டுவெல் கருத்து.
மராட்டிய பிராகிருதத்தின் பேச்சுமொழியாக இன்றும் திகழ்ந்து வரும மராத்தி மொழியின் சொற்பிறப்பியல் அகரமுதலி முன்னுரையில் அதன் ஆசிரியர் மோகன் வொர்த் அவர்கள் அம்மொழி ஆரிய இனத்தைச் சார்ந்ததன்று எனக் கூறியுள்ளார். ஆரிய மொழியில் இல்லாததும் தமிழின மொழிகளுக்கே உரியதான எகர ஒகரக் குறில் ஒலிப்பு மராத்தியிலும் வட இந்தியாவின் சில மொழிகளிலும் காணப்படுகின்றன. அவையெல்லாம் தமிழின மொழிகளின் கிளைப்பே யன்றி வேறல்ல. மராத்திய மொழியின்; இலக்கிய வழக்கிலும் எகர வடிவம் அஃறிணைப் பன்மைப் பெயர்ச்சொற்களின் ஈறாகவும் மூன்றாம் வேற்றுமை உருபாகவும் தன்மைப் படர்க்கை நிகழ்கால ஈறுகளாகவும் வந்து குறிலாகவே ஒலிக்கப்படுகின்றன.
5.4. 2 .மக்களின் ஒலிப்பில் தமிழ்
இந்தியாவின் வட மாநிலங்களிலுள்ள கத்தியவாட், தார்வாட் என வல்லின மெய் ஈற்றில் முடிவுறும் இடப்பெயர்களை பொதுமக்கள் கத்தியவாடி, தார்வாடி என தமிழைப்; போன்று உயிஈறாகவே ஒலிக்கின்;னர். சகுந்தலர என்னும் பெண்;பாற் பெயர்ச்சொல் சவுந்தலா என பிராகிரு மொழியில் ஒலிக்கப்படுகிறது. வடநாட்டு மக்களின் பேச்சு மொழி, நாட்டுப்பாடல், விடுகதை, பழமொழி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தால் அவர்கள் மொழி முந்தைய தமிழின மொழிகளுள் ஒன்றாகவிருக்கும் என்னும் முடிவுக்கு வரவியலும்.
நாட்டுப் பாடல்களில் கும்பி, கோலாட்ட வகைகள், திருமணவாழ்த்துப் பாடல்கள், தெய்வ வாழ்த்து (தேவ பாடாண்) வகைகள், நகையாட்டு, ஏற்றப் பாட்டு, உலக்கைப் பாட்டு (வள்ளை), ஏர்க்களப் பாட்டு அறுவைப் பாட்டு, காலநடை மேய்ப்புப் பாட்டு முதலியன அனைத்தும் திராவிட மொழிகளின் தன்மையினை ஒத்தமைகின்றன.
கால அளவைக் கணிக்க வியலாதிருக்கும் பல நாட்டுப் பாடல்களை ஆராயின் தமிழ்மொழி உலகளாவிய நிலையில் பரவியிருந்ததை அறியவியலும்.
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி
ரண்டு குளம் பாழ் ஒண்ணுலே தண்ணியே இல்லை
தண்ணியில்லாக குளத்திலே மண்ணெடுத்தவர் மூணு பேரு
ரண்டு பேரு முடவர் ஒருத்தனுக்குக் கையே இல்லை
கையில்லாக் குயவன் செய்த பானை மூணு
ரண்டு பானை பச்சை ஒண்ணு வேகவேயில்ல
வேகாத பானையில போட்டரிசி மூணரிசி
ரண்டு அரிசி பச்சை ஒண்ணு வேகவேயில்ல
வேகாத சோற்றுக்கு வந்த விருந்து மூணுபேரு
ரண்டுபேரு பட்டிணி ஒருத்தர் சாப்பிடவேயில்லை
இந்த நகைச்சுவை நாட்டுப்புறப் பாடல் (சிறுவர் பாடல்) தமிழில் உள்ளவாறே மராட்டி, கன்னடம், கலையாளம், தெலுங்கு எனப் பல திராடவிட மொழிகளில் உளளன. ஏனைய இந்திய மொழிகளிலும் இது போன்ற பாடல்கள் உள்ளனவா என்பது ஆய்விற்குரியது. இவையன்ன ஆய்வுகளால் தமிழின் உலகளாவிய நிலை மேலும் வெளிப்படும்.
5.5 இன்றைய தமிழரின் கடமைகள்
உகளாவிய நிலையில் தமிழர்களும் தமிழும் பரவியிருக்கு இன்றைய நிலையில், தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டோருக்கு மிகப் பல பொறுப்புகள் உள்ளன. தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு எனப் பேசிவோர் உலக நோக்கில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழரின் மேன்மைக்கும் பணியாற்றவேண்டிவர்களாய் இருக்கவேண்டும். தன்மேன்மைக்காக மட்டும் தமிழ், தமிழர் பற்றியப் பேசுதல் தவிர்க்கப் படவேண்டும். உலக நோக்கில் விரைவிலி நிகழத்த வேண்டிய இன்றியமையாப் பணிகளையும் உணர்ந்து முன்னின்று முனைந்து நிறைவேற்ற வேண்டியதும் தமிழர் பொறுப்பு என வலியுறுத்திய டாக்டர் பொற்கோ அறிஞா;களும் மக்கள் தலைவர்களும் சிந்தித்துச் செயல்படவேண்டியனவாகக் கூறுவதாவது:
Øபிற நாடுகளில் வாழும் தமிழகக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
Øவரலாற்றுப் பண்பாட்டு நோக்கில் பிற நாடுகளுடன் தமிழகத்துக்கு உள்;ள தொடர்பு மேலும் ஆராயப்படவேண்டும்.
Øஉலக மொழிகளில் பிற நாட்டு மொழிகளோடு தமிழ் மொழிக்கு உள்ள தொடர்பு நன்கு ஆராயப்படவேண்டும்.
இத்தகைய பணிகள் உலக நாடுகளிடையே ஒத்துணர்வையும் நல்லுறவையும் வளர்ப்பதோடு மொழியியல், பண்பாடு, வரலாறு ஆகிய துறைகளில் புதிய உண்மைகளையும் நமக்கு வழங்கக் கூடும். தமிழ் இன மொழிகளை உணர்த்தும் பணி சாலச் சிறப்புடையதாகும். ‘இந்தியாவை மட்டுமல்லாமல் இந்த ஞாலத்தையே ஒரு மொழியின் பரப்பாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் (கலைஞர் தந்த செம்மொழி, ப. 129)” என்பது இவண் கருதத்தக்கது. இந்த முயற்சியின் வெளிப்பாடாக புலம் பெயர்ந்த தமிழர்களில் தேவையினை உணர்ந்து தமிழ்க் கல்வித் தொண்டாற்றிவரும எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத் தமிழ்ப்பணி விளங்குகிறது.
முடிவுரை
அருந்தமிழ், ஒண்டமிழ், பைந்தமிழ் எனப் பல சிறப்புகளுக்குரிய தமிழ்மொழி கணிப்பரிய காலத் தொன்மையுடையதுபோது, எண்ணரிய மக்க்ளால் உலகமெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இதன் தோற்ற காலத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்ட சூழல்களால் இம்மொழி உலகம் எங்கும் பரவும் வாய்ப்புப் பெற்றது. அச்சூழல்கள் ஐந்துவகைப்பட்டதாகக் காணப்படுகிறது. மேலும், காலத் தொன்மையுடைய இம்மெமாழியின் இயல்பும் வளமும் பல மொழிகளை உருவாக்குவதற்கு ஏதுவாயின. இதன் மொழி அமைப்புக் கூறுகள், சொல்வளம் முதலிய இதன் உலகளாவிய செல்வாக்கிற்குக் காரணமாய் இருந்தன. உலகமொழிகள் அனைத்திற்கும் முதுபெரும் தாயாக விளங்கும் இம்மொழி உலகம் எங்கும் பரவிநிற்பினும் இதன் எதிர்கால வளா;ச்சியும் நிலைப்பும் ;நோக்கித் தமிழகத் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களும் கடமைகள் பல எதிர் நோக்கியுள்ளன.
தன்மதிப்பீடு 2 : வினாக்கள்
1.இந்தியாவில் பேசப்படும் மெமாழிகளை எத்தனை வகையாக மொழியிலார் பிரிக்கினனர்? அவை எவை?
2. தமிழ் மொழிக் கூறுகள் தெலுங்கு மொழியில் காணப்படுவதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
3. தமிழ் மொழியின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் வாழ்வேர்ஆற்றவேண்டிய கடமைகள் யாவை?
4. வட ந்திய மாநில மக்களின் வாய்மொழியில் தமிழ் மணம் கமழ்வதை எவ்வாறு அறியமுடியம்?
5. மராட்டிய மொழி திராவிட இனத்தைச் சார்ந்ததெனக் காட்டும் சான்று எது?தன்மதிப்பீடு 1 தன்மதிப்பீடு 1 விடைகள்
1. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே தமிழ் உலகெங்கும் பரவியதற்கான சூழல் யாது?
இயற்கைச் சீற்றத்தால் உலகப் பரப்பு சிதறுண்டது. அப்போது மக்கள் உலகப் பரப்பெங்கும் சிதறினர். ஆதலால் அவர்கள்பேசிய மொழியும் உலகெங்கும் பரவும் வாய்ப்பு ஏறபட்டது.
2. நல்லுறவுத் தமிழ் என தமிழ்மொழி அழைக்கப்படுவதேன்?
தமிழ் மக்களும் மன்னர்களும் வெளிநாட்டு மக்களோடு வணிகத் தொடர்பு கொண்டனர். அதன் காரணமாக இவர்களுடைய மொழி அவர்கள் N:பசும் மொழியோடு கலந்தது. ஆகவே இம்மொழி நல்லுறவுத் தமிழ் எனப்பட்டது.
3. தமிழ் உலகெங்கும் பரவியமையினை அறிவதற்கான ஐந்து சூழல்கள் யாவை?
1.உலகப் பரப்பு சிதறுண்டது 2. வுணிகத் தொடர்பு,
3. தமிழ் மன்னர்களின் படையெடுப்பு 4.வாழ்க்கைத் தேவை நாடிஉலக நாடுகளுக்குச் சென்றமை 5. கல்வி ஆற்றல் பெற்று பிற நாடுகளுக்குச் சென்றமை.
4. உலக அளவில் தமிழ்ப்பண்பாடு காணப்படுவதை எவ்வாறு அறியவியலும்?
தமிழ் நாட்டு வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியன பலநாடுகளில் காணப்படுவதைக் கொண்டு தமிழ்ப்பண்பாடு உலக அளவில் காணப்படுவதை அறியவியலும்.
5. பிற மொழிகளில் தமிழ் கலந்துள்ளமைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
தமிழில் உள்ள உறவுப்பெயர்கள், ஏவல் வினை ஒலிப்புத் தன்மைகள், எண்ணுப் பெயர்கள் முதலினவற்றின் சாயல் பிற மொழிகளில் காணப்படுகின்றன.
தன்மதிப்பீடு 2 : விடைகள்
1.இந்தியாவில் பேசப்படும் மெமாழிகளை எத்தனை வகையாக மொழியிலார் பிரிக்கினனர்? அவை எவை?
2. தமிழ் மொழிக் கூறுகள் தெலுங்கு மொழியில் காணப்படுவதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
தெலுங்கு தமிழ்
கோடலு (மருமகள்): கோடல் - பிறர் வீட்டிலிருந்து கொண்ட பெண். கொளல்- கொள்ளல்- கோடல். கொள்வினை, கொடுப்பினை என்பது குறிப்பிடத் தக்கது. லு பெண்ணைக் குறிக்கும் விகுதி (தெலுங்கில்)
3.. வட ந்திய மாநில மக்களின் வாய்மொழியில் தமிழ் மணம் கமழ்வதை எவ்வாறு அறியமுடியம்?
முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி
ரண்டு குளம் பாழ் ஒண்ணுலே தண்ணியே இல்லை
தண்ணியில்லாக குளத்திலே மண்ணெடுத்தவர் மூணு பேரு
ரண்டு பேரு முடவர் ஒருத்தனுக்குக் கையே இல்லை
கையில்லாக் குயவன் செய்த பானை மூணு
ரண்டு பானை பச்சை ஒண்ணு வேகவேயில்ல
வேகாத பானையில போட்டரிசி மூணரிசி
ரண்டு அரிசி பச்சை ஒண்ணு வேகவேயில்ல
வேகாத சோற்றுக்கு வந்த விருந்து மூணுபேரு
ரண்டுபேரு பட்டிணி ஒருத்தர் சாப்பிடவேயில்லை
இந்த நகைச்சுவை நாட்டுப்புறப் பாடல் (சிறுவர் பாடல்) தமிழில் உள்ளவாறே மராட்டி மொழியில் உளளது.
4. மராட்டிய மொழி திராவிட இனத்தைச் சார்ந்ததெனக் காட்டும் சான்று எது?
ஆரிய மொழியில் இல்லாததும் தமிழின மொழிகளுக்கே உரியதான எகர ஒகரக் குறில் ஒலிப்பு மராத்தியிலும் வட இந்தியாவின் சில மொழிகளிலும் காணப்படுகின்றன. அவையெல்லாம் தமிழின மொழிகளின் கிளைப்பே யன்றி வேறல்ல.
வினாக்கள்
1. உலகெங்கும் தமிழ் பரவியதற்கான சூழல்களைச் சுருக்கமாக விளக்குக.
2. நல்லுறவால் தமிழ் நாடுகள் பலவற்றிற்கும் பரவியமைக்கு எடுத்துக்காட்:டுத் தருக.
3. தமிழர்கள் வாழும் நாடுகளுள் எவையேனும் பத்தினைக் குறிப்பிடுக.
4. வட இந்தியாவிலுள்ள திராவிட மொழிகள் குறித்து எழுதுக.
5. சுமத்கிருத மொழி தமிழ்மொழிக்கு பிந்தியது என்பதை நிறுவுக.
6. தமிழ் மொழியின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் வாழ்வோர் ஆற்றவேண்டிகடமைகள் யாவை?
7. தமிழ் உலகளாவிய மொழி- எவ்வாறு?
பார்வை
இரா. மதிவாணன், ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழாமலர் (1981), ‘தமிழும் திராவிட மொழிகளும்” பக் 154- 157
டாக்டர் ச.அகத்தியலிங்கம், “ உலக மொழிகளும் தமிழும்”, ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு விழாமலர் (1981), பக். 369-376
அகநானூறு
புலமை, ‘குடகுநாட்டில் இரவரியார்”, ஏப்ரல்- சூன் 1975, பக். 60-70.
சா.கணேசன் & பிறர், கையேடு (1969) , கலைக்காட்சிக் குழு, இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு, சென்னை
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்க மலர் (1981), மதுரை
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர். பாவணர் தமிழ்க் களஞ்சியம்; தொகுதிகள் 1- 7 (2009), தமிழ் மண் பதிப்பகம், சென்னை
அ.இராகவன் ,தமிழக சாவாக் கலைத ; தொடா;புகள் (1967), சென்னை
பொன். கோதண்ட ராமன் , உலகில் தமிழும் தமிழா;களும் (1976). சென்னை
தெ.பொ. மீனாட்சிசுந்தரன், தமிழும் பிற பண்பாடும் ( 1973),
முனைவர் பி.இரத்தினசபாபதி, “ஞாலத் தமிழும் தமிழரும்” (122-130), கலைஞா; தந்த செம்மொழி (2010), சென்னை
ஆந்திரநாட்டு அகநானூறு (1976) , தாய்நாடு பதிப்பகம்
S.Ramakrishna Sastry, Annals of Oriental Research( 1952), Madras University
P.T.Srinivasa Iyengar. History of Tamils (1929), Madras University,
Dr. S.Thaninayakam, Tamil Studies Abroad (1968), Kulalmpur
பின்னிணைப்பு
தமிழர்கள் வாழும் உலக நாடுகள்
இந்தோனேசியா
இத்தாலி
இரஷ்யா
இலங்கை (ஈழம்)
ஜப்பான்
ஜமைக்கா
ஸ்பெயின்
ஹங்கேரி
ஈரான்
ஈராக்
‡பிரஞ்சுகயானா
டீரினிடாடு
உகாண்டா
நர்சே
நியூ காலிடோனியா
கயானா
கம்போடியா
குவாடிலோப்
பஹ்ரின்
பாக்கிஸ்தான்
பிஜித் தீவுகள
பின்லாந்து
பிரிட்டன்
ஐக்கியஅமெரிக்கா
தாய்லாந்து
தான்சேனியா
துருக்கி
மார்ட்டினிக்
மலேசியா
மியாமர்
ஆஸ்திரியா
ஆஸ்திரியா
நெதர்லாந்து
போh;ச்சுக்கல்
பெரு
தென்னாப்பிரிக்கா
தென்கொரியா
மொரிசியஸ்
டென்மார்க்
செனிகால்
சீனா
சிங்கப்பூh;
சவுதிரோபியா
சுரினாம்
வடகொரியா
ரீயூனியன்
ஏகிப்து
எத்தியோப்பியா
பி.இரத்தின சபாபதி