Re: [MinTamil] கல்வெட்டுகளில் பாடல்

51 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 19, 2017, 6:44:01 AM11/19/17
to மின்தமிழ், vallamai, Santhavasantham, drepi...@gmail.com, Ramachandran Nagaswamy, Poongundran R


2017-11-18 22:29 GMT-08:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் கீழகரம் என்னும்
ஊரில் உள்ள ஆதிபுரீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று
பாடல் வடிவில் அமைந்துள்ளது. நன்னிலம் கல்வெட்டுகள்
தொகுப்பாசிரியை : திருமதி. ஆ.பத்மாவதி.

கல்வெட்டு :
1 வேழ முகன்றனை
2 பெற்றாதியப்பரவி
3 (வி)டையுடையாரேழை
4 இடங் கொண்டடிய்
5 ய வகை கிய்யீசனெ
6 ங்கோனாழ் நெடுங்
7 கடல் நஞ்சையுண்ட
8 ம்பலத்தாடி நண்ணு
9 கீழையகம் தொழுதா
10 ல் மேலை வீடுங்கிடை
11 க்குமற்றே

பாடல் வடிவம்:

வேழமுகன்றனை பெற்றாதியப்பரவி விடையுடையார்
ஏழை இடங்கொண்டடிய்ய வகை கிய்யீசனெங்கோன்
ஆழ் நெடுங்கடல் நஞ்சையுண்டம்பலத்தாடி நண்ணு
கீழையகம் தொழுதால் மேலை வீடுங்கிடைக்குமற்றே

சுந்தரம்.


அன்பின் சுந்தரம்,

இதுவும் கட்டளைக் கலித்துறையே. முனைவர் ஆ. பத்மாவதி குறிப்பிடவில்லை போலும்.

வேழ முகன்றனைப்பெற் றாதிப் பரவி, விடையுடையார்
ஏழை இடங்கொண்  டடியுய் வகைக்கீய்  ஈசனெங்கோன்
ஆழ நெடுங்கடல் நஞ்சையுண் டம்பலத் தாடிநண்ணுங்
கீழை யகம்தொழு தால்மேலை வீடுங் கிடைக்குமற்றே

ஏழை இடங்கொண்டு அடியார் உய்யும் வகைக்கு ஈய்கிற(=அருள்கிற) ஈசன் எம்கோன்.
- எனப் பிரித்து வாசித்துப் பொருளுணர்க.
 
---------

சென்ற வாரம் கொங்குநாட்டில் கிடைத்துள்ள அதிகமான் கல்வெட்டில்
நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் அருமை.

சீரணி = மிலிட்டரி மார்ச் அல்லது மிலிட்டரி பரேட்



இதனை, மிலிட்டரி மார்ச் நடக்கையில் அவ்வீரர்களின்
காதலியர், மனைவிமார் கண்களில் நீர் ததும்பப்
பார்ப்பார்கள். தொடங்கும் போர் என்று முடியும்?
கணவன் வீடுதிரும்புவானா? உடல் அங்கம் குறையாமல்?
- என்றெல்லாம் அம் மங்கையர் கவலைகொள்வர் அன்றோ.
அதைக் குறிக்கும் அழகிய பாடல். அந்த சீரணியின்
அணிவகுப்பில் அதிகன் நிலங்கள் யாவும் பங்குபெற்றன.
அதிகன் சேர வங்கிசத்தான். எனவே அவர்களின் சிலைக்கொடி
ஏந்திச் செல்கின்றனர் வீரர்கள். அச் சீரணிகளுக்கும்,
ஏந்தும் விற்கொடிக்கும் இராம-இராவண யுத்தத்தின் ஈரணிகளைச்
சேர்த்தாலும் இணையில்லை என்பது இக் கட்டளைக் கலித்துறை.

போளூர் திருமலையிலே வள்ளுவர் பாடும் எண்குணத்தான்
என்னும் தீர்த்தங்கரருக்கும், யக்‌ஷ, யக்‌ஷிகளுக்கும் சிற்பங்கள்
எடுத்து சமணப்பள்ளியை ஆதரித்தவர் இந்த அதிகமான்களே.
லட்டிகம் என்ற கர்நாடகா ஊரிலும் அதிகமான்களின் கல்வெட்டுப்
பாடல்கள் கிட்டியுள்ளன. எல்லாவற்றையும் நல்லமுறையில்
வாசித்து வரலாற்று ஆசிரியர்கள் இந்தப் பிற்காலப் பாண்டியர்
வரலாற்றை எழுதவேண்டும். வடமொழி, தென்மொழி இரண்டிலுமாக
இந்தியச் செம்மொழிகளில் இக் கல்வெட்டுகள் உள்ளன.

தெற்கே, பாண்டிநாட்டில் சீரான அணியணியாய்ச் செய்யும்
மிட்டாயைச் சீரணி என்கிறார்கள்:

சீரணி - ஒழுங்கான மக்கள் படை என்ற பெயரில்
சுற்றுச்சூழல் போன்ற பராமரிப்புக்கு சீரணிப்படை
ஏற்படுத்தினார் அண்ணா. ஊர் ஊருக்கு சீரணி அரங்குகள்
கட்டப்பட்டன. திமுக, அதிமுக கொள்கைகளை
பரப்பாளர்கள் பேசிப் பரப்பினர். அப்போது டிவி, மொபைல்ஸ்
இல்லாத காலம். த்ராவிட கக்ஷிகளின் இப்போதைய
பேச்சுகளைப் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ளார், நகைச்சுவையாக:
வாழும் தமிழ்

20+ ஆண்டு இருக்கும். புலவர் செ. ராசு அண்ணன்
150+ பக்கம் சைக்லோஸ்டல் தட்டச்சிய தாள்களில்
கல்வெட்டுப் பாடல்களைத் தண்செய் தமிழ்ப்பல்கலையில்
வேலை பார்த்தபோது அனுப்பிவைத்தார்கள். அதில்
இப்பாடல்கள் எல்லாம் இருக்கும். தேடி எடுக்கிறேன்.

பிற பின்!

நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 19, 2017, 7:08:47 AM11/19/17
to மின்தமிழ், vallamai, Santhavasantham, drepi...@gmail.com, Ramachandran Nagaswamy, Poongundran R
      - என இருக்கணும். sorry for typo.

N. Ganesan

unread,
Nov 19, 2017, 7:47:43 AM11/19/17
to Santhavasantham
பாரில் பறந்து பட்டொளி வீசும் தாயின் மணிக்கொட்டியை வந்தித்தார் பாரதியார்.
நாமக்கல் கவிஞர் இந்தியாவுக்குக் கொடி, அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழு
தேர்ந்தெடுத்தபோது, வாழ்த்தினார்.

1947-ன் அரிய காணொளி. பாரதமாதா விடுதலை அடைகிறாள்.
இந்திய ராணுவத்தின் சீரணி வகுப்புக் காண்க:
(சீரணி - மிலிட்டரி மார்ச். இதனை 12-ஆம் நூற்றாண்டின் அதிகமான் கல்வெட்டுப்
பாடலிலே கல்லில் பொறித்துளர்.)

நாமக்கல் கவிஞர் கவிதை - இந்தியக் கொடி
கொடி வணக்கமது செய்வோம்-நாட்டின்
குறைகள் நீங்கியினி உய்வோம்
முடி வணங்கிஅதைப் போற்றி-அதன்
மூன்று நிறக்குறிகள் சாற்றி.
(கொடி)
 
புதுமையான கொடி பாரீர்-வேறு
பூத லத்திலிலை தேரீர்
முதுமையா யெவர்க்கும் பொதுவாம்-வாழ்வின்
முறையைக் காட்டுவது இதுவாம்.
(கொடி)
 
பச்சையான ஒரு தோற்றம்-நமக்குப்
பக்தி வேண்டுமெனச் சாற்றும்
இச்சையான பொருள் கூடப்-பக்தி
இருக்க வேணுமதை நாட.
(கொடி)
 
துய்ய வெள்ளை நிறக் காட்சி-உண்மை
துலங்கு மென்பதற்குச் சாட்சி
மையமாக நிற்கும் மர்மம்-சத்யம்
மதங்கள் யாவினுக்கும் தர்மம்.
(கொடி)
 
துறவின் வர்ணமந்தக் காவி-உலகின் 
துக்கப் பூட்டினுக்குச் சாவி
சிறையும் வீடுமதற் கொன்றே-என்னும்
சேதி ஓதுவதற் கென்றே.

இணையிலாக் கொடி

இந்திய நாட்டில் இணையிலாக் கொடியே
       இலங்குவாய் என்றும் வயங்கொலி பரப்பி
தந்திரம் மோசம் தன்னலம் கருதா
       சத்தியம் நிறைந்த உத்தம வாழ்வின்

எந்திரப் பேயின் இறுமாப்பு அழிந்து
       ஏழ்மையும் தாழ்மையும் இல்லாது ஒழித்துச்
சந்திர சூரியர் வந்துபோம் வரையிலும்
       தன்னர சாட்சியின் சின்னமாய் நிற்பாய்!       1

பாரத நாட்டின் பகையிலாக் கொடியே!
       பன்னலம் மிகுந்த உன்னுடை நிழலில்
ஊரெலாம் செழித்து உயிரெலாம் களித்து
       யாரொடும் எவரும் அன்பே அறமென
பாரிடைக் கடவுள் படைத்ததன் பொருள்கள்
       பங்கிட மூளும் பகைத்தி றம்குன்றி
நேரிய வாழ்வில் நியாயம் நிலவிடும்
       நீதிசேர் அரசின் சோதியாய் நிற்பாய்!       2

ஆருயிர் நாட்டின் அரசியற் கொடியே!
       ஐம்புலன் வென்று செம்பொருள்கண்ட
வீரிய ஞான வித்தகர் தங்கி
       வேதம் வளர்த்த இமய மலையின்
ஊரிய மனிதன் உளம்மிக மகிழ
       உன்னதச் சிகரத் துச்சியில் நின்று
பாருள யாரும் பணிந்திடு மாறு
       பற்பல ஊழி பறந்திடு வாயே!       3


இலங்கையிலே இராவணன் தொடங்கி, கடைசித் தமிழ் மன்னன் சங்கிலி அரசன் வரை
யாழ்க்கொடி தான். அதனால் தான், யாழ்ப்பாணம் என்ற பெயர்.
2008-ல் எழுதினேன்:
மேலும் 2500 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் ஈழத்தில் வதிகிறார்கள். எனவே யாழ்ப்பாணம் எனும் பேர் 17-ஆம் நூற்றாண்டுப் பெயர் என்பது தொல்லியற் சான்றுகளுக்குப் பொருந்தாக் கட்டுக்கதை என்பது தெளிவு.

யாழ்ப்பாணம் என்ற பெயரை ராவணன், சிவ பக்தன், யாழ் மீட்டியது என்ற தொன்மக் கதையுடன் தொடர்புபடுத்துவதும் உண்டு.

For example, see
"The current account of the founding of Jaffna is purely mythical, whether we regard the tale of the blind lutist, or the still more legendary story of Siva, Susangita and the lute of Ravana. " (Sinhalese Place Names in the Jaffna Peninsula By B. Horsburgh, C.C.S.THE CEYLON ANTIQUARY [VOL. II, Part 1] July, 1916 ).

திருக்கேதீச்சரத்தைப் பற்றிக் குறிக்கையில் இராவணன் ஆட்சி, அவனது வீணைக்கொடி பற்றிய தமிழ்ச்சைவக் குறிப்புகளுண்டு [1]. பாளி இலக்கியமான ராஜாவளியில் யாழ்நகர் அருகே இராவணன் இருந்ததைக் கூறுகிறது. Ancient Jaffna By C. Rasanayagam, pg. 9,
"the gods who presided over the destinies of Ceylon became enraged and caused the sea to deluge the land. Once before during the epoch called 'Duvapara yuga' on acoount of the wickedness of Ravana, the whole space from Mannar to Tutucorin in which were the fortress of Ravana with 25 palaces and 40000 streets were swallowed by the sea. So now, in this time of Tissa Raja, king of Calany, 100,000 large towns of the description called Pattunagam (paTTanam), ..."

ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம், 1912 (2001 மறுபதிப்பு: க. குணராசா) நூலகம்.நெட் தளத்தில் கிடைக்கிறது. பக். 14,
"யாழ் கொடி: யாழ்பாடியுடைய கொடி யாழைக் கையிலேந்திய சயமகட் கொடி. அது மிதுனக் கொடியெனவும் படும். அதுவே சங்கிலியரசன் இறுதியாகவுள்ள யாழ்ப்பாணத்து அரசரெல்லாம் கொண்ட கொடியாம். யாழ்ப்பாடி சாதியிலே தொண்டை மண்டலத்துயர்குடிச் சைவ வேளாண்முதலி யாழ்ப்பாடியினது திருவுருவச் சிலையைப் [*] பின்வந்த அரசர் தமது கோட்டை வாயிலிலே போற்றி வந்தனர்.

[*] யாழ்ப்பாடி திருவுருவச் சிலையொன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல ஸ்தானத்தில் அமைத்து வைத்தல் நம்மவர் கடனாம்."

மிதுனக்கொடி: கின்னரியாகிய மகரயாழ் அமைந்த கொடி. ஆண் பெண் கின்னர மிதுனங்கள்
இசைப்பது மகரயாழ் (கம்பன்). காமனுக்குக் கொடி மகர மீனாம். செயமகள் = துர்க்கை.

ஈழத்தில் வெற்றி அடைந்தபின்னர் புலிக்கொடி நாட்டிற்கு. யாழ் நகருக்கு மகரயாழ் கொடி சிறப்பு. நானும் ஆய்வுரை நிகழ்த்த ஈழநாட்டுப் பல்கலைக் கழகம் அன்றுச் செல்வேன்.
விரைவில் தமிழ் வடமொழி சான்றுகளைக் கட்டுரை யாத்துத் தருவேன். கவியரசர் கண்ணதாசன் 1970களிலே தீர்க்கதரிசனமாகப் பாடினார்:

-----------------------

வரலாறு வேறு விதம் ஆகிவிட்டது. செங்கொடி என்னும் இளம்பெண் மறைந்தபோது
கவிஞர் வாலி எழுதிய கவிதை:

புலிக்கொடி வரைந்த தமிழ்நாட்டு ஓவியர் நடராஜன்


2017-11-19 3:43 GMT-08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

இதுவும் கட்டளைக் கலித்துறையே. முனைவர் ஆ. பத்மாவதி குறிப்பிடவில்லை போலும்.

வேழ முகன்றனைப்பெற் றாதிப் பரவி, விடையுடையார்
ஏழை இடங்கொண்  டடியுய் வகைக்கீயும்  ஈசனெங்கோன்

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2017, 10:56:47 AM11/19/17
to vallamai, மின்தமிழ், Santhavasantham, drepi...@gmail.com, Ramachandran Nagaswamy, Poongundran R

20+ ஆண்டு இருக்கும். புலவர் செ. ராசு அண்ணன்
150+ பக்கம் சைக்லோஸ்டல் தட்டச்சிய தாள்களில்
கல்வெட்டுப் பாடல்களைத் தண்செய் தமிழ்ப்பல்கலையில்
வேலை பார்த்தபோது அனுப்பிவைத்தார்கள். அதில்
இப்பாடல்கள் எல்லாம் இருக்கும். தேடி எடுக்கிறேன்.

பிற பின்!

நா. கணேசன்


நீங்க ஒரு தமிழ்ச்சுரங்கம். வளர்க நும் தொண்  du ( nhm failed at this point)
 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Nov 19, 2017, 7:26:32 PM11/19/17
to மின்தமிழ், vallamai


2017-11-19 7:56 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


நீங்க ஒரு தமிழ்ச்சுரங்கம். வளர்க நும் தொண்டு.

நன்றி, வேந்தே!

N. Ganesan

unread,
Nov 20, 2017, 8:15:50 AM11/20/17
to மின்தமிழ், dorai sundaram, vallamai, housto...@googlegroups.com


2017-11-19 4:06 GMT-08:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
அருமையான விளக்கம். கீழகரம் என்று தற்போது வழங்கும் ஊர்,
கல்வெட்டில் கீழையகம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, 
கீழையகத்துச் சிவனைத் தொழுதால் மேலையகம் ( வீடு ) 
கிடைக்கும் என்பது அழகான முரண் அணிப் பாடல் வரி. 
அதிகமான் கல்வெட்டுப் பாடலையும் சீராக்கியது சிறந்ததோர்
பணி. நன்றி.
சுந்தரம்.

முனைவர் ஆ. பத்மாவதியுடன் பேசினேன். பாடலைக் கேட்டு மிக
மகிழ்ந்தார். ஒரே மகன் அட்லாண்டாவில் இருப்பவர். மகப்பேற்றுக்கு
வருவதாய் இருந்தது. அதற்குள் காரில் நேர்ச்சி. சுபா வந்து 2 நாள்
கூட இருந்தபின் ஒரே தளர்ச்சி என்றார். முழுதுமாகக் குணமாக
வேண்டுவோம்.

---------------------

முக்கியமாக, Duty, Dignity, Discipline என்னும் மிலிட்டரி வாசகத்தை
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என மொழிபெயர்த்தார் அண்ணா.
ஆனால், பின்வந்த கட்சிகள் அந்த ஒழுங்கில் இருந்து வழுவிவிட்டனர்.

அண்ணா தேர்ந்தெடுத்த “சீரணி” என்னும் மிலிட்டரி மார்ச் ஒழுங்கு
அதியமான் கல்வெட்டில் வருதல் அருமை.

நா. கணேசன்

 

ஏழை இடங்கொண்  டடியுய் வகைக்கீயும்  ஈசனெங்கோன்

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/037633a7-75f7-4eb1-84ca-66ca6e680c0e%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages