தவம், அவம் வேர் பொருள்

26 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Apr 7, 2022, 1:11:29 AM4/7/22
to வல்லமை
தவம், அவம் வேர் பொருள்

தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு (அதிகாரம்:தவம் குறள் எண்:266)

வள்ளுவர் காலத்தில் தவம், அவம் ஆகிய சொற்கள் பொது வழக்கத்திலிருந்தன போலும். ஆனால் இன்று இவை பேச்சு வழக்கொழிந்து பொருள் அறியாமல் போய்விட்டன. தவம், அவம் இரண்டும் எதிர் எதிர் பொருள் (antonym) தரும் சொற்கள். எப்படி?
அவநெறி, அவநம்பிக்கை, அவப்பெயர், அவ மதிப்பு, அவமானம், அவமரியாதை ஆகிய சொற்களில் முன்னொட்டாக அவம் பயில்கிறது. இதன் பொருள் கீழான (low) என்பதே.
இதற்கு எதிராக மேலான என்னும் பொருளுடையதே தவம் என்னும் சொல். தவ்வு > தாவு என்றால் உயர்ந்து எழுதல். இதிலிருந்து கிளைத்ததே தவம் என்னும் சொல். தவம் என்றால் உயர்தல் (elevate). இதாவது குண்டலினியை மேலே உயர்த்தும் செய்கை தான் தவம், தியானம் என்பது. ஆனால் சமசுகிருத வழிநின்று எரித்தல் பொருளை கொண்டு உடலை எரித்தார் போல வருத்தும் துறவு வாழ்க்கை என்கின்றனர் மிகப் பலர். உமது கருத்து என்ன அறிஞர்களே? எரித்தர் கருத்து என்றால் வள்ளுவர் ஏன் தவம், அவம் என்று எதுகை மோனையில் எதிர் எதிர் பொருளாக இச்சொற்களை பயன் படுத்த வேண்டும்?

N. Ganesan

unread,
Apr 7, 2022, 6:00:58 AM4/7/22
to வல்லமை
தவம், அவம் இரண்டும் வெவ்வேறு வார்த்தை. வேர் ஒன்றல்ல.

N. Ganesan

unread,
Apr 7, 2022, 6:16:53 AM4/7/22
to vallamai, housto...@googlegroups.com
தவம், அவம் இரண்டும் வெவ்வேறு வார்த்தை. வேர் ஒன்றல்ல.

தபஸ், தப்த மார்க்கம் - யோகத்தால் விளையும் சூட்டைக் குறிக்கும். தபஸ் > தவம் என ஆகும்.
கொங்குநாட்டுப் பெண் ஒருவரின் பெயரை 2020-ல் விளக்கி உள்ளேன். இதுபோன்ற பெயர்கள்
தமிழர் வாழ்வில் மறைந்து வருகின்றன.

திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்). சமண வழியிலே நூல் செய்தவர். சிவகாசி மு. ராமச்சந்திரன்
சொல்வதுபோல், பலவற்றை மக்களும், அரசும் கடைப்பிடிப்பதில்லை. தேவர் தாம் தமிழில்
முதன்முதலாக, ஏராளமான பிராகிருதச் சொற்களை இலக்கியத்தில் ஆள்கிறார்.
தவம் (ப்ராகிருதம்) < தபஸ் (சமற்கிருதம்). தேவர், வேளிர் குலத் தோன்றல் என நூல் செய்தவர்
நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆவார்.

-------------------------------------------------------------


தவசாயி அம்மாள் :: பெயர்க் காரணம்

 தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார், தவசாயி அம்மாள் நிறைவாழ்வு வாழ்ந்து 93 வயதில் மறைந்தார். அப்பெயரின் பொருளைச் சில நண்பர்கள் வாட்ஸப் குழுக்களில் வினவியிருந்தனர். 


தப்த-/ தபஸ்- என்பது தவம் என்று தமிழில் தற்பவம் ஆகும். கோபம் > கோவம்; பாபம் > பாவம், ... போல, தபஸ் > தவசு, தவம் என்றாகும். மனஸ் > மனசு, மனம் ஆதற் போல. தபஸ்/தவம் = வெப்பம். காவேரி டெல்ட்டா பகுதியில், தவசிப்பிள்ளை = சமையல்காரன். தவம் செய்பவரும் தவசி. உ-ம்: காஞ்சி பெரியவர் ஒரு தவசி. தபஸ் > தவசு + ஆயி = தவசாயி. அவர்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் குலதெய்வங்கள் ஒன்றில் பெயர் ஆகலாம். அருந்தவநாயகி பல பெரிய சிவாலயங்களில் அம்பாள் பெயர். தவச்செல்வி, தவக்கொடி, ... இப்பொழுது, தவசாயி என்னும் பெயர் அருகிவிட்டது. வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த தவசாயி அம்மாளுக்கு நினைவஞ்சலி. -ஆயி என முடியும் பழைய தமிழ்ப் பெண்பெயர்கள்: நீலாயி, பச்சாயி, ஓச்சாயி, பேச்சாயி, முத்தாயி, தவசாயி, பொன்னாயி, ..... நாகப்பட்டினத்தில் நீலாயதாக்ஷி. மக்கள் நீலாயி என்று பெயர் வைப்பர். குங்கிலியக் கலய நாயனார் பெயர் நீலாயி எனக் குலோத்துங்க சோழன் கல்வெட்டு உண்டு (தேவாரம், தருமை ஆதீனம்). கோவை அருகே பேரூரில் அம்மன் பெயர்: பச்சைநாயகி. பச்சாயி, பச்சையம்மாள், மரகதவல்லி, மரகதாம்பிகை, ... எனப் பெயர். நீலம், பச்சை எல்லாம் கௌரியின் கருமை நிறங்காட்டும் பெயர்கள். கௌரி பெயர்க்காரணம்: Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:  Dravidian word for Gauṛ bison and Tibetan yak http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

சென்ற வாரத்தில் அவரது மகன், முதல்வர் ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்: http://nganesan.blogspot.com/2020/10/htsc-fundraiser-oct10-2020-dinamalar.html

 Dr. N. Ganesan

 





 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/891f8ccf-7572-4af9-b9c9-e392bc793386n%40googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 7, 2022, 6:31:27 AM4/7/22
to vallamai
நீங்கள் வழக்கமாகச் சொல்லும்  மொழிமுதல் மெய் (retroflex) நீங்கி வழங்கும் சொல் இல்லை எனும்போது...

அந்த மாற்றம் ஐயத்திற்கு உள்ளாகிறதே!
சக 

N. Ganesan

unread,
Apr 7, 2022, 6:42:52 AM4/7/22
to வல்லமை
On Thursday, April 7, 2022 at 5:31:27 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
நீங்கள் வழக்கமாகச் சொல்லும்  மொழிமுதல் மெய் (retroflex) நீங்கி வழங்கும் சொல் இல்லை எனும்போது...
அந்த மாற்றம் ஐயத்திற்கு உள்ளாகிறதே!

retroflex இல்லையே. தவம், அவம் இரண்டிலும்.

மேலும், ”அவலாகொன்றோ, மிசையாகொன்றோ”.

தவம், அவம் இரண்டும் தொடர்பில்லாதவை. வெவ்வேறு தாதுமூலம்.

seshadri sridharan

unread,
Apr 7, 2022, 8:03:59 AM4/7/22
to வல்லமை
  தவ்வு + அளை = தவளை. உயர எழும்பும் ஓர்  உயிரி. தாவு + அம் = தாவம்  > தவம். இப்படி எளிய உயர்ச்சி பொருள் இருக்க ஏன் எரிதர் பொருளை கொள்ள வேண்டும்? 
  

//சிவ சாமி < facebook 


குண்டலினி ஓகம் செய்கையில் சுழுமுனை நாடி அக்னி கம்பம் போல் எரியும். அதை தணிக்கவே நீர் ஊற்றி அபிசேடனம் செய்வர் வெளி உடலை பாதிக்காமல் இருக்க . மேல் நோக்கி எரியும் அந்த சூட்டினில் தான் குண்டலினி சக்தி புருவ மத்தியில் சேரும். அது சேரும் வரை உணர்ச்சிப்பெருக்கெடுப்புகளுக்கு ஆட்க்கொள்ளாது மன அமைதி காப்பதே தவ வலிமை. உயர்தல் தவத்தின் பொருள், எரித்தல் தவத்தின் வெளிப்பாடு (symptom)//

ஆக உயர்தல் இல்லாமல் எரிதல் இல்லை அன்பரே. எனவே தவம் என்றால் உயர்தல் என்ற முதற்பொருளே பொருந்தும்.                                                                                     https://ta.quora.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/answers/348614511?prompt_topic_bio=1

seshadri sridharan

unread,
Apr 7, 2022, 8:05:55 AM4/7/22
to வல்லமை
On Thu, 7 Apr 2022 at 15:31, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தவம், அவம் இரண்டும் வெவ்வேறு வார்த்தை. வேர் ஒன்றல்ல.

நான் எதிர்  எதிர் பொருள் என்று தானே காட்டினேன். ஓரே வேர் என்று எங்குமே சொல்லவில்லையே.

seshadri sridharan

unread,
Apr 7, 2022, 8:16:22 AM4/7/22
to வல்லமை
On Thu, 7 Apr 2022 at 15:47, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

தவம், அவம் இரண்டும் வெவ்வேறு வார்த்தை. வேர் ஒன்றல்ல.

தபஸ், தப்த மார்க்கம் - யோகத்தால் விளையும் சூட்டைக் குறிக்கும். தபஸ் > தவம் என ஆகும்.
கொங்குநாட்டுப் பெண் ஒருவரின் பெயரை 2020-ல் விளக்கி உள்ளேன். இதுபோன்ற பெயர்கள்
தமிழர் வாழ்வில் மறைந்து வருகின்றன.

திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்). சமண வழியிலே நூல் செய்தவர். சிவகாசி மு. ராமச்சந்திரன்
சொல்வதுபோல், பலவற்றை மக்களும், அரசும் கடைப்பிடிப்பதில்லை. தேவர் தாம் தமிழில்
முதன்முதலாக, ஏராளமான பிராகிருதச் சொற்களை இலக்கியத்தில் ஆள்கிறார்.
தவம் (ப்ராகிருதம்) < தபஸ் (சமற்கிருதம்). தேவர், வேளிர் குலத் தோன்றல் என நூல் செய்தவர்
நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆவார்.
 

நான் இது காறும் சமசுகிருதம் என்று நம்பிவரப்பட்ட சொல்லை சமசுகிருதம் அல்ல என்று மறுத்து அதன் தமிழ் மூலத்தை காட்டியுள்ளேன்.  தவம் என்றால் உயர்வு.

N. Ganesan

unread,
Apr 7, 2022, 8:18:01 AM4/7/22
to vallamai
On Thu, Apr 7, 2022 at 7:16 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

நான் இது காறும் சமசுகிருதம் என்று நம்பிவரப்பட்ட சொல்லை சமசுகிருதம் அல்ல என்று மறுத்து அதன் தமிழ் மூலத்தை காட்டியுள்ளேன்.  தவம் என்றால் உயர்வு.

Not really.

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/MCPmAi-fIWE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQX%3Dha1n5JZu0_wYEcAmNhrMfNrPD3tZOcy45XhJjxuPg%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Apr 7, 2022, 8:39:38 AM4/7/22
to வல்லமை
On Thu, 7 Apr 2022 at 17:34, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
  தவ்வு + அளை = தவளை. உயர எழும்பும் ஓர்  உயிரி. தாவு + அம் = தாவம்  > தவம். இப்படி எளிய உயர்ச்சி பொருள் இருக்க ஏன் எரிதர் பொருளை கொள்ள வேண்டும்? 


பாற்கடலை கடைந்த போது சந்திரனும் இலக்குமியும் தோன்றினர். இலக்குமிக்கு முன் தோன்றியவள் மூத்தோள், மூதேவி, தவ்வை என்று வணங்கப்பட்டாள். தவ்வு +ஐ = தவ்வை இதாவது உயர்ந்தோள் என்பது பொருள்.  தவ்வு என்பது உயர்வுக் கருத்து சொல்.  தவ்வு > தாவு + அம் = தாவம் > தவம்.

seshadri sridharan

unread,
Apr 13, 2022, 1:26:50 AM4/13/22
to வல்லமை
I have already given hundreds of examples in my 200 linguistic articles, but I will give you only a few here because the title of my article is ‘Brahmins are living wonders’.
1.B/P= V
Rig Veda said taPas/penance= Tamil Veda Tirukkural and Purananuru changed it to ‘taVam’.
Rig Veda said asVa= Avestan language said ‘asPa’.
This covers an area from Iran to South India covering a period of 4000 years at least
எனது 200 மொழியியல் கட்டுரைகளில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உதாரணங்களைத் தந்திருக்கிறேன் ஆனால் சிலவற்றை மட்டும் தருகிறேன் ஏனென்றால் எனது கட்டுரையின் தலைப்பு 'பிராமணர்கள் வாழும் அதிசயங்கள்'
1. B/P = V
ரிக் வேதம் சொன்னது தபஸ்/தவம்= தமிழ் வேதம் திருக்குறள் மற்றும் புறநானூறு அதை தவம் என்று மாற்றியது.
ரிக் வேதம் வ என்றது= அவஸ்தான் மொழி 'அஸ்ப' என்றது.
இது ஈரான் முதல் தென்னிந்தியா வரையிலான ஒரு பகுதி குறைந்தது 4000 ஆண்டுகள் உள்ளடக்கியது.

Reply all
Reply to author
Forward
0 new messages