பாடல் சொல்லும் செய்தி- II

23 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 11, 2026, 1:02:31 AM (4 days ago) Jul 11
to vallamai
நற்றிணை- 355

தோழி தலைவனிடம் கூறுகிறாள்...
"புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவாய் உறுக்கும் 
கைபோல் காந்தட்
குலைவாய் தோயும் 
கொழுமடல் வாழை
அம்மடல் பட்ட அருவித் தீநீர்
செம்முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம்சில் ஓதிஎன் தோழி 
தோட்துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும் அது நீ
என்கண் ஓடி அளிமதி
நின்கண் அல்லது 
பிறிதுயாதும் இலளே"
- ஆசிரியர் அறியப்படவில்லை.

பொருள்:
மகனைப் பெற்றெடுத்த 
பூப்போன்ற கண்ணை உடைய தாய் தன் கையால் தன் முலையைப் பற்றி 
மகனுக்குப் பாலூட்டுவது போலக்; காந்தளின் 
கைவிரல் போன்ற பூவானது
வாழைப் பூவைப் பற்றும்.
கொட்டும் அருவியில் இருந்து  தெறிக்கும் நீர் வாழைப்பூவின் மடலில் இருந்து இறங்க; அதைச் செம்முக மந்தி பருகும்; வளமிகுந்த நாட்டின் தலைவனே! நீண்ட காலம் நண்பராயினோர் கொடுத்தால்; கொடுப்பது நஞ்சு எனத் தெரிந்தாலும் சிறந்த நாகரிகர் அதனை உண்பர். இது உலகியல்பு. நீ வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உன் மனைவியின் தோளில் துயிலாவிட்டாலும்; அவள் மீது இரக்கம் காட்டி  அவளைத் தழுவிக் கொள். நீண்ட காலம் பழகிய  என் சொற்கள் உனக்கு நஞ்சு போலத் தோன்றினாலும்; நாகரிகமாக அதை ஏற்றுக் கொள்வாயாக. 

 உள்ளுறை விளக்கம்:

செம்முக மந்தி = செம்மையான; பண்பிற் சிறந்த தலைவி 

அருவித் தீநீர் = தலைவனின் இளமை நலம் (ஆண்மைச் சிறப்பு)

உனது நாட்டில் நீர்வளம் மிகுந்து இனிமை பொருந்திய  அருவி கொட்ட;  அந்நீர் வாழைப் பூவின் மடலில் பட்டுத் தெறிக்கச்; செம்முக மந்தி அங்ஙனம் சொட்டும் நீரைப் பருகித் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். 
(மகப் பெற்ற தலைவியோடு நீ பாயலில் பொருந்தித் துயில இயலாதாயினும்;) உன் மனைவியை அன்போடு தழுவிக் கொண்டாலே அவள் ஆவல் தீர்ந்து இன்புறுவாள். 

வாழை குலைதள்ள; அக்குலையின் கொழுமடல் பூவைக் காந்தள் பொருந்திய  காட்சி ஈன்றவள் தன் கைகளால் மகவுக்கு முலைவாயுறுப்பது போலத் தோன்றும். 

சிறப்பான செய்திகள்:

முதன்முதலாகத் தாயிடம் பாலருந்த முற்படும் குழந்தைக்குத் தாய் துணை செய்வதையே இவ்வுவமை காட்சிப் படுத்துகிறது. 

பிறந்த குழந்தையின் வயிற்றுள் இருக்கும் காட்டுப்பீ 'பசேர்' என வெளியேறி; முடிந்த பின்னர்... பிறந்து சில மணி நேரம் கழித்தே மகவுக்குத் தாய்ப்பால் ஊட்ட முற்படுவது சென்ற நூற்றாண்டு வரை வழக்கில் இருந்த பாரம்பரிய நடைமுறை ஆகும். அதற்கு முன்னர் சேனை என்று பெயர் பெறும்; துளியளவுப் பூண்டு ஊறிய சர்க்கரை நீரே கொடுப்பர். தற்போது இந் நடைமுறை மாறிப் பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்ட மருத்துவர் வற்புறுத்துகின்றனர்.

"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க 
நாகரிகம் வேண்டு பவர்"
என்ற குறள் கருத்து சில சொல் மாறுபாடுகளோடு பாடலில் இடம் பெற்று இருப்பதால்; 'நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாக ரிகர்' என்ற தொடர் ஒரு சொலவடையாகப் பண்டைத் தமிழகத்தில் வழங்கிய உண்மை புலப்படுகிறது.

சக 

Raju Rajendran

unread,
Jul 12, 2026, 4:52:41 PM (2 days ago) Jul 12
to vall...@googlegroups.com
திருக்குறள் சங்ககாலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம்

வெள்., 10 ஜூலை, 2026, 10:02 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsVL56ohwaM6os4-%2B-p61VVC8SRkU98xcM3nzcWXMJXJQ%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jul 12, 2026, 10:05:27 PM (2 days ago) Jul 12
to vallamai
புறநானூறு - 371

"அகன்தலை வையத்துப் 
புரவலர்க் காணாது
மரந்தலைச் சேர்ந்து பட்டினி  வைகி
போதஅவிழ் அலரி நாரின் 
தொடுத்து
தயங்குஇரும் பித்தை 
பொலியச் சூடி
பறையொடு தகைத்த 
கலப்பையென் முரவுவாய்     
ஆடுறு குழிசி பாடுஇன்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண்பூ 
உறைப்ப
குறைசெயல் வேண்டா நசைய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆர்இடை நீந்திக் 
கூர்வாய் இரும்படை நீரின் 
மிளிர்ப்ப
வருகணை வாளி....... 
அன்புஇன்று தலைஇ
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை
வில்ஏர் உழவின்நின் நல்இசை உள்ளி
குறைத்தலைப் படுபிணன் 
எதிர போர்பழித்து
யானை எருத்தின் வாள்மடல் 
ஓச்சி
அதரிதிரித்த ஆள்உகு கடாவின்
மதியத்தன்ன என் விசிஉறு 
தடாரி
அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்
பணைமருள் நெடுந்தாள் பல்பிணர்த் தடக்கை
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும
களிற்றுக் கோட்டன்ன 
வால்எயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய 
வெண்நிணச் சுவையினள்
குடர்த்தலை மாலைசூடி உணத்தின
ஆனாப் பெருவளம் 
செய்தோன் வானத்து
வயங்குபல் மீனினும் வாழியர் பலஎன
உருகெழு பேய்மகள் அயர
குருதித் துகள்ஆடிய களம் 
கிழவோயே"

பொருள்:
'பரந்து அகன்ற இவ்வுலகிலே புரவலரைக் காணாததால்; மரத்தின் அடியில் பட்டினியோடு இருந்தோம். பொழுது சாய அலர்ந்த பூக்களை நாரில் தொடுத்து; கரிய நீண்ட தலைமுடிமேல் அழகுடன் சூடிக்கொண்டு; பறையொடு கூடிய இசைக் கருவிகள் அடங்கிய பையோடு திறந்த வாயை உடைய சமையல் செய்யும் பானையைச் சிதையாத படித் தூக்கிக் கொண்டு மன்றத்திலிருந்த வேப்பமரத்திலிருந்த ஒளிபொருந்திய பூக்கள் உதிர; சோற்றுக்குரிய அரிசி இல்லாததால்; மிக இன்றியமையாத வேறு எச்செயலையும் செய்ய விரும்பாமல்; பொருள் தேடுவதிலேயே விருப்பமுடையவனானேன். அரிய வழிகள் பல கடந்து; கூர்மையான படைக்கருவிகள் அவைகளின் இயல்பிற்கேற்பச் சுழல; அம்புகள் அன்பில்லாமல் பகைவர் மேற்சென்று … ஒலிக்கும் முரசு முழங்கும் புகழ் நிறைந்த பாசறையில் வில்லால் போர் செய்யும் உனது நல்ல புகழை நினைத்து; தலைகள் வெட்டப்பட்ட உடல்கள் குவிய; பிணக்குவியலை அழித்து யானைகளாகிய எருதுகளைப் பனைமடலால் ஓச்சி; ஆளாகிய வைக்கோலை அடித்து உதறிய களத்தில்; முழுமதி போல் தோன்றி வாரால் இறுகக் கட்டப்பட்ட தடாரிப் பறையை அதன் அகன்ற கண் அதிரும்படி அடித்து; ஆகுளிப் பறையைக் கொட்டிக்கொண்டு; பறை போன்ற நெடிய கால்களும் சொர சொரப்புடைய பெரிய கையும் புள்ளிகள் நிறைந்த முகமும் உடைய யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று வந்தேன். பெரும! பன்றியின் கொம்பு போன்ற வெண்ணிறமான பற்களால் கடித்து இழுத்து; கொழுப்புக் கலந்த வெண்மையான தசையைத் தின்று சுவைப்பவளாய்க்; குடலைத் தலையில் மாலையாக அணிந்து கொண்டு; உண்ணுதற்குக் குறையிலாது பெருவளம் பொருந்த பிணங்களைத் தந்த இவ்வேந்தன் வானத்தில் விளங்கும் பல விண்மீன்களை விடப் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் கூத்தாடும் குருதி கலந்த செந்தூள் பறக்கும் போர்க்களத்திற்கு உரிமையுடையவனே'

விளக்கம்:
பாசுபத நெறியில் கணவனை இழந்தோர் சிற்றின்பம் துறந்தனர்; சிவத்துடன் தம்மை இணைத்துக் கொண்ட அடையாளமாகப் பிணத்தை எரித்த சாம்பலைப் பூசினர்; உலகாயத இன்பங்களிலிருந்து விலகிக் காலத்தைக்  கழித்தனர்; ‘தெய்வத்தன்மை பொருந்தியோர்’ எனும் பொருளில் பேய்ப்பெண்டிர் எனப்பட்டனர். மகப்பேறு இல்லாத விதவைகள் சுடுகாட்டில் சடங்கு  ஆற்றினர். (https://en.wikipedia.org/wiki/Pashupata_Shaivism);
(Vibhuthi also refers to ashes from the… cremation of bodies… wear ashes on their bodies as a symbol of renunciation
அப்படிச் சடங்காற்றிப் பிணத்தைத் தின்னும் இழிநிலையை அடைந்தவராகவே அவரைப் பண்டைத் தமிழ்ப் பாடல்கள் காட்டுகின்றன. தம்மை ஆதரிக்க யாரும் அற்ற நிலையை அடைந்ததால் இத்தகு வாழ்க்கை முறை அவர்கட்கு அமைந்தது என்பதை இன்னும் சில பாடல்கள் தெளிவாக்குகின்றன.

சக

kanmani tamil

unread,
Jul 13, 2026, 1:19:59 AM (2 days ago) Jul 13
to vallamai
ஐங்குறுநூறு- 70
"பழனப் பல் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர் நறியர் நின் பெண்டிர்
பேஎய் அனையம்யாம் சேய் பயந்தனமே"
(பரத்தையரோடு பொழுது போக்கி நெடிது துய்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. கிழத்தி கூற்றுப் பத்து- ஓரம்போகியார் பாடியது)

பொருள்:
'வயலில் மேயும் மீன்களை அருந்துவதற்காக நாரை வயலோரம் உள்ள மருதமர உச்சியில் அமர்ந்திருக்கும் வயலும் அதற்கு நீர் தரும் பொய்கையும் கொண்ட ஊரை உடையவன் நீ. உன்னோடு தொடர்பு கொண்டுள்ள பெண்கள் தூய்மையானவர்கள்; நறுமண அலங்காரத்தோடு திகழ்பவர். நான் உன் மகனைப் பெற்றுப் பேஎய் போன்று இருக்கிறேன்' எனச் சொல்லி மனைவி ஊடுகிறாள்.

சிறப்புப் பெறும் செய்திகள்:
மகப்பெற்ற செய்தியைத் தன் வாயாலேயே அறிவிக்கும் கிழத்தி தன்னைத் தானே பேயோடு உவமிப்பதன் காரணமும் பாடலிலேயே குறிப்பாக உள்ளது. 
தலைவன் விரும்பி நாடும் பெண்கள் தூய்மையாகவும் நறுமண அலங்காரத்துடனும் இருக்கின்றனர். ஆனால் கருவுயிர்த்த பெண்ணிடம் அவ் இரண்டையும் எதிர்பார்க்க இயலாது. ஏனெனில் பிள்ளை பெற்றவளிடம் இயற்கையாகவே தோன்றும் வாடை (புனிறு) ஒருபுறம்; குழந்தையைப் பராமரிப்பதால் ஏற்படும் வாடை ஒருபுறம்; பூச்சூடவோ அலங்கரித்துக் கொள்ளவோ அனுமதிக்காத பாரம்பரியம் ஒருபுறம் என அவளது வாழ்க்கையில் இக் காலக்கட்டம் கிட்டத்தட்ட கைம்பெண் ஆன பாசுபத சமயத்தைச் சேர்ந்தவள் போன்றதாக இருக்கும். மகப்பெற்றுப் புனிற்றுக் காலம் முடியும் வரை தாயானவள் கணவனோடு சேர்ந்து இன்பம் துய்ப்பதை சமுதாயம் அனுமதிப்பது இல்லை (இதற்காகத் தான் மூன்று மாதங்கள் வரை தாய் வீட்டில் விட்டுவைக்கப் படுவர்.)

பிறருக்கு முன்னால் அலங்காரம் இன்றி; உண்ணுவதைக் கூட மறைத்தே செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவள் தெய்வத் தன்மை உடையோராகப் போற்றப் பெறும் பாசுபத சமயக் கைம்பெண் என்னும் பொருளில் தன்னைப் 'பேஎய்' என்கிறாள். 


சக 

kanmani tamil

unread,
Jul 13, 2026, 11:07:37 PM (2 days ago) Jul 13
to vallamai
புறநானூறு-62

"வருதார் தாங்கி அமர்மிகல்  யாவது
பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டு
குருதிச் செங்கைக்  கூந்தல்  தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தல் பறைச்சீர்தூங்க             
பருந்துஅருந்து உற்ற  தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந்தனரே குடை  துளங்கினவே
உரைசால் சிறப்பின் முரைசு 
ஒழிந்தனவே
பல்நூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்   
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறை
களம்கொளற்கு உரியோர் 
இன்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர்  மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கு 
அமைந்தனரே        
வாடாப் பூவின் இமையா  நாட்டத்து
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால் 
பொலிகநும் புகழே"

திணை- தும்பை 
துறை- தொகைநிலை
சேரமான் குடக்கோ நெடுஞ்
சேரலாதனும் சோழன்  வேற்பல்  தடக்கைப் பெருவிறற் கிள்ளியும் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது. 

பொருள்:
இனி எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப்போர்க்களத்தில் சண்டையிட்டு மாண்ட வீரர்களின் புண்ணில் பட்ட  சிவந்த கையால் தமது தலையில் அடித்துக் கொண்டு அழுததால் குருதி தோய்ந்த
கூந்தலுடன் காணப்பட்ட பேய்ப் பெண்கள் மேன்மேலும் கொட்டுகின்ற பறையின் தாளத்திற்க்கேற்ப ஆடுகின்றனர். இறந்த வீரர்களின் உடலைப் பருந்துகள் உண்கின்றன. அத்தகு படையோடு சினந்து அறவழியில் போர்புரிந்த வீரம் பொருந்திய வேந்தர் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன; மிகுந்த புகழ் பெற்ற முரசுகள் வீழ்ந்தன. குருதி சிந்திய பல நூறு வீரர்கள் அடங்கிய படைகளும் வேறு இடம் இல்லாதபடி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில் களத்தைத் தம்முடையதாக்கி வெற்றி முழக்கம் செய்வோர் இல்லாமல் காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. வேந்தரின் மனைவியர் பசுமையான கீரைக்கறியை உண்டு; குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய்த் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத பூக்களையும் இமைக்காத பார்வையையும் நறுமணம் கொண்ட அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர்.' 

விளக்கக் கருத்துகள்:
போரில் புண்பட்டுக் குருதி சோர இறந்த கணவரின் உடலைத் தீண்டிச் சிவந்த கைகளால் கூந்தலை அலைத்து அழுதோரைப்; 
'பேய்ப்பெண்டிர்' என அழைப்பதால்; அச் சொற்றொடர் கைம்பெண்டிர்க்கு உரியது என்பது உறுதி ஆகிறது. 

இதே நிலை 3.3.'26 அன்று பதிந்த பட்டி.240-270க்கு உரிய விளக்கத்திலும் இடம்பெற்று உள்ளது.

பாசுபதத்தைப் பின்பற்றுவோர் பண்டைத் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்கு இப்பாடல்கள் சான்றாகின்றன. 

சக 
 

kanmani tamil

unread,
Jul 14, 2026, 8:39:48 PM (7 hours ago) Jul 14
to vallamai

புறநானூறு 372

"விசிபிணித் தடாரி விம்மென 
ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிர்ஒளி 
வலம்பட மின்னி
கணைத்துளி பொழிந்த 
கண்கூடு பாசறை
பொருந்தாத் தெவ்வர் அரிந்த 
தலைஅடுப்பின்
கூவிள விறகின் ஆக்குவரி 
நுடங்கல்
ஆனா மண்டை வன்னிஅம் 
துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் 
புதுவோர்க்கு எல்லாம் 
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் 
சால்கஎனப்
புலவுக்களம் பொலிய 
வேட்டோய்நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம்எனவே"
திணை- வாகை; 
துறை- மறக்கள வேள்வி.
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை மாங்குடி கிழார் பாடியது. 

பொருள்:
'வெற்றியைத் தரும் வாள் மின்னலைப் போல ஒளி வீச; அம்புகள் மழை போலப் பொழியப்; பேரிடத்தை வளைத்துக் கட்டிய பாசறையில் வீற்றிருக்கும் வேந்தே! விலங்குகள் கூட உண்ண மறுக்கும் தன்மையினதாக; மனம் பொருந்தாப் பகைவரின் அரிய தலைகளே அடுப்பாக; கூவிளமரக் கட்டைகளே விறகாக; வீழ்ந்தோரின் மண்டையோடே அகப்பையாக; வன்னி மரக் கொப்பு அகப்பையின் காம்பாக; நெல்லரிசிக் கூழை மகப்பேறில்லா வேளிர்குல மகள் துழாவிச் சமைக்க; அதைச் சடங்காற்றும் தலைவன் கொற்றவைக்குப் படைக்க எடுத்து உயர்த்திக் காட்ட; கலயத்தின் சூடான வாயிலிருந்து வந்த தெய்வத் தன்மை பொருந்திய புனிதநீர்  அமைவதாக எனத் திருமண விழாவிற்கு வந்த விருந்தினர் மேல் தெளிப்பது போல் அங்கு இருந்தவர் மீதெல்லாம்
தெளித்துப்; புலால் நாறும் போர்க்களம் விளங்க மறக்கள வேள்வி செய்தவனே!  இறுகக் கட்டிய தடாரிப் பறை இம்மென ஒலிக்கும்படி அறைந்து; உன்னைப் பாராட்டிப் பாடி வந்ததன் காரணம் உனது மார்பில் நிலவொளி திகழ விளங்கும் ஆரத்தைப் பரிசாகப் பெறுவதற்காகவேயாம்.

சிறப்புச் செய்திகள் 

மகப்பேறில்லா வேளாளர் குலப்பெண் (=ஈனா வேண்மாள்) ஈமச் சடங்கை ஆற்றுவதில் பங்கேற்றுப் பிணவூன் சமைப்பவளாக இப் பாடலில் காட்சிப் படுகிறாள். பாசுபதம் பண்டைத் தமிழகத்தில் காலூன்றி இருந்த சமயம் என்பதையும்; அதைப் பின்பற்றியோர் பிணத்தைச் சமைத்துப் படையலாக்கி வழிபட்டனர் என்பதையும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். 
சக 
Reply all
Reply to author
Forward
0 new messages