ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை 108 வாகன பொறுப்பாளர்கள் பிரியங்கா, மருதுபாண்டியன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு தொடர்பான பரிசோதனைகளை செய்தனர். தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்கள். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.