திருவிடம் (திரு+இடம் < drAviDa (Skt.) )

52 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 19, 2021, 12:47:12 PM8/19/21
to vallamai, housto...@googlegroups.com
திருவிடம் (திரு+இடம் < drAviDa (Skt.) )
------------------------------------

Niranjan Bharati asked:
> திருவிடம் என்ற சொல் தான் திராவிடம் என்று திரிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்
> அது உண்மை இல்லையா?

NG> இல்லை.

Prof. Kanaka Ajithdas> கி.  பி.   470 ல்  மதுரையில் வச்சிரநந்தி என்பவரால்  திரமிள சங்கம் வைத்து நடத்தப்பட்டது
> என்பது திகம்பர தரிசன சாரம் என்ற நூலால் அறியப் படுகிறது . க.ப.அறவாணன், சைனரின் தமிழிலக்கண நன்கொடை

NG> சுமார் 40+ ஆண்டுகளாக நான் அறிந்த செய்திகள். ஆங்கில நூல்களில், கட்டுரைகளில் 100+ ஆண்டுகளாக உள்ளவை.
> தமிழர் பலருக்கும் புதிதாய் தெரிவன. ஏனெனில், இவை பற்றி எழுதும், பேசும் பேராசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில்
> எடுத்துச் செல்வோர் மிகக் குறைவு.

NVK Ashraf> நிரஞ்சன், எதாவது கட்டுரையில் படித்தீர்களா? நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.

NG> drAviDa > tiruviDam ~ done more than a century ago. will write that history briefly. Explaining Sanskrit and other languages' words in Facebook, Wap groups etc., in this kind of Tamil way has a long history. One such is this: tiruviTam for DramiDa/DraviDa < tamiz. Viruthai Sivagnana YogikaL in 1908 started a Tamil scholars club at Kurralam. Bharatiyar's life story has a connection with Viruthai YogikaL also. Its name is "tiruviTar kazakam" from which all Dravidian parties have the "kazhakam" attached to their names: DK, DMK,ADMK (becuase Indira Gandhi threatened to ban, ADMK became AIADMK), MDMK, ... There could be more. Virudai is VirudupaTTi then.

விருதை சிவஞானயோகிகள்( 1840-1924) திருக்குற்றாலத்தில் 19.11.1908 அன்று திருவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த திருவிடர் கழகத்தின் கோவில்பட்டி கிளையின் 18 ஆவது ஆண்டு விழா கோவில்பட்டி போர்டு ஹைஸ்கூலில் நடந்தது.  திருவிடம் எனப் பூரணலிங்கம் பிள்ளை வடிவமைத்த சொல்லை, திருவிடர் கழகம் என்று தமிழர்களுக்குப் பயன்படுத்தினார் விருதை சிவஞானம்.

த்ராவிட என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லை முதலில், திருவிடம் (= திரு+ இடம்) என்று விளக்கியவர் மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை ஆவார். ஆனால், த்ராவிட- < த்ரமிள < தமிழ் என்பது தெளிவு. M. S. Purnalingam Pillai was the first scholar to give this explanation, drAviDa < tiru + iTam, which is obviously incorrect linguistically. Also, note that "tiru" itself is a prakritization of "shrii", as seen nampi + shrii >> nampUtiri (nowadays, we have padmashrii).

தமிழிலே, கல்லூரிப் படிப்பு கற்ற சைவ வேளாளர்கள் வில்லியம் ஜோன்ஸ், எல்லிஸ்-கால்ட்வெல், (பின்னர் ஜான் மார்ஷல், வீலர் தொல்லியல் அறிவிப்புகள்) கண்டுபிடிப்புகளை உள்வாங்கும் கால கட்டம் இது. இது பற்றி சிக்காகோ உலகத் தமிழ் மாநாட்டில் விரிவாகப் பேசினேன் (2019). சலபதியின் நூல் படிக்கவேண்டிய ஒன்று: https://www.bookmybook.in/product/dravida-iyakkamum-velalarum/

பாவாணர் தமிழ் இந்தியா என்ற நூலில் “திருவிடம்” என எம். எஸ். பூர்ணலிங்கம்பிள்ளை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்ட ஞாபகம். Tamil India ஆங்கிலத்தில் எழுதியதாகும். அதில் எங்கே திருவிடம் என்ற விளக்கம் உள்ளது? நூலின் வலைக்கண் தருகிறேன். தரவிறக்கிப் படித்தபின் சொன்னால் நன்றிபல.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0006809_TAMIL_INDIA.pdf

https://koottanchoru.wordpress.com/2009/04/29/எம்எஸ்பூர்ணலிங்கம்-பிள/
திருநெல்வேலிக்கருகேயுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற சிற்றூரிலே 1866ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி பிறந்தவர் பூர்ணலிங்கம். அவ்வூர்ச் சிவன் கோயிலுள்ள பெருமானின் பெயர் பரிபூர்ணக்ருபேசர் அல்லது பூர்ணலிங்கம் என்பது. அங்கு வாழும் மக்கள் தம் குழந்தைகளுக்கு பூரணலிங்கம் என்ற பெயரிடுவது இன்னமும் வழக்கில் உள்ளது. இவரது பெற்றோர் திரு. சிவசுப்பிரமணியப் பிள்ளை, திருமதி வள்ளியம்மை என்பவர்கள்.
Also,
https://www.dinamani.com/editorial-articles/2009/jun/14/திறனாய்வுச்-செம்மல்-முசிபூரணலிங்கம்-பிள்ளை-25494.html

பிற பின்!
நா. கணேசன்

seshadri sridharan

unread,
Aug 20, 2021, 2:58:12 AM8/20/21
to வல்லமை
தமிழ், திராவிடம் இரண்டும் வேறு வேறு எப்படி?

தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர்ச்சொல். ஆனால் திராவிடம் என்றால் தென்னகத்தை குறிக்கும் சமஸ்கிருத இடப்பெயர்ச் சொல். பின்னர், குஜராத்தின் மொழி குஜராத்தி, சிந்தின்  மொழி சிந்தி, பஞ்சாபின் மொழி பஞ்சாபி, அசாமின் மொழி அசாமி, வங்கத்தின் மொழி வங்காளி என்பது போல திராவிட என்ற இடத்தில் வழங்கும் மொழியும் இடப்பெயரை ஒட்டியே திராவிடம் எனக்   குறிக்கப்பட்டது.  ஆந்த்ரதிராவிட பாஷா, திராவிடாந்த்ரா தமிழில் இருந்து வேறுபடுத்திக் காட்ட அவ்வாறு குறிக்கப்பட்டது.  அத்தோடு நில்லாமல் இன்று திராவிடம் என்ற சொல் பொதுவாக தெலுங்கர், கன்னடர், மலையாளியரையும் குறிப்பதாக அமைந்துவிட்டதால் தமிழை மட்டுமே குறிப்பதாகாது. இப்படி திராவிடத்திற்கு மூன்று வெவ்வேறு பொருள் இருக்க  தமிழ் என்ற சொல்லுக்கு இப்படி மூன்று வெவ்வேறு பொருள் இல்லை. எனவே,  திராவிடம் என்றால் தமிழ், தமிழ் என்றால் திராவிடம் என்று பொருள் உரைப்பது தமிழரை ஏமாற்றும் உத்தியாகும்.    

அகல் விளக்கு இருளை விரட்டத்தான் ஏற்றப்படுகிறது ஆனாலும் அது தன் அடியில் இருளை அப்படியே வைத்துள்ளது. இது வேடிக்கையானது, முரணனானது, நகைப்பிற்கு உரியது. அது போலத்தான் சமசுகிருதத்தை ஒழிக்கிறேன், ஆரியத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இயக்கத்திற்கு சமசுகிருத்திலேயே "திராவிடம் " என்று பெயர் சூட்டியது ஒரு நகைமுரண் ஆகும். அதிலும் வெள்ளைத்தோல் ஆரியர்களான நாயுடு, ரெட்டி, ராஜு உள்ளிட்ட தெலுங்கர், கன்னடரை , இதாவது தமது மொழியில் 80% சமசுகிருத சொல் கொண்டவரை உடன் வைத்துக்கொண்டு சமசுகிருதத்தை  ஒழிக்கிறேன், ஆரியத்தை ஒழிக்கிறேன் என்று தமிழர் புறப்பட்டது ஒரு நகைமுரண் அன்றோ? இதனால் மொத்த தமிழரையும் தவறாக வழிநடத்தி ஈவேராவின் வாயால் தமிழரை அவமானப்படச் செய்தனரே.


N. Ganesan

unread,
Aug 20, 2021, 8:36:37 AM8/20/21
to vallamai
On Fri, Aug 20, 2021 at 1:58 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> தமிழ், திராவிடம் இரண்டும் வேறு வேறு எப்படி?
>
> தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர்ச்சொல். ஆனால் திராவிடம் என்றால் தென்னகத்தை குறிக்கும் சமஸ்கிருத இடப்பெயர்ச் சொல். பின்னர், குஜராத்தின் மொழி குஜராத்தி, சிந்தின்  மொழி சிந்தி, பஞ்சாபின் மொழி பஞ்சாபி, அசாமின் மொழி அசாமி, வங்கத்தின் மொழி வங்காளி என்பது போல திராவிட என்ற இடத்தில் வழங்கும் மொழியும் இடப்பெயரை ஒட்டியே திராவிடம் எனக்   குறிக்கப்பட்டது.  ஆந்த்ரதிராவிட பாஷா, திராவிடாந்த்ரா தமிழில் இருந்து வேறுபடுத்திக் காட்ட அவ்வாறு குறிக்கப்பட்டது.  அத்தோடு நில்லாமல் இன்று திராவிடம் என்ற சொல் பொதுவாக தெலுங்கர், கன்னடர், மலையாளியரையும் குறிப்பதாக அமைந்துவிட்டதால் தமிழை மட்டுமே குறிப்பதாகாது. இப்படி திராவிடத்திற்கு மூன்று வெவ்வேறு பொருள் இருக்க  தமிழ் என்ற சொல்லுக்கு இப்படி மூன்று வெவ்வேறு பொருள் இல்லை. எனவே,  திராவிடம் என்றால் தமிழ், தமிழ் என்றால் திராவிடம் என்று பொருள் உரைப்பது தமிழரை ஏமாற்றும் உத்தியாகும
>

" தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர்ச்சொல். ஆனால் திராவிடம் என்றால் தென்னகத்தை குறிக்கும் சமஸ்கிருத இடப்பெயர்ச் சொல். "
- இரண்டுந்தான். த்ராவிடம் என்ற ஸம்ஸ்கிருதச் சொல் அடிப்படையில் தமிழ் என்ற பாஷைப் பெயரின் திரிபு ஆகும். விந்திய மலைகளுக்கு
அப்பால் வழங்கும் ஆர்ய பாஷைகள் பேசும் தேசங்களுக்கு, கௌட தேசம் என்பதன் பெயரால் பஞ்ச-கௌடம் என்ற பெயர் அமைந்தது.
அதே போல, சிந்தி-கூர்ச்சுரம் (> கூர்ச்சரம் > குச்சரம் , குஜராட்), மஹாராஷ்ட்ரம், ஆந்திரம் (இப்போது தெலுங்கு கானம் = தெலுங்கானம் தனி மாகாணம்), கருநாடகம், திராவிட தேசம் ஐந்தும் முதன்மையான த்ராவிடத்தின் பெயரால் பஞ்ச-த்ராவிட தேசம் என ஸம்ஸ்கிருத நூல்களிலே அழைக்கப்பட்டன.  அதைக் கண்டுதான், ஏறத்தாழ 25+ பாஷைகள் திராவிட பாஷைகள் என அழைக்கப்படுகின்றன. த்ராவிட < தமிழ். பஞ்ச த்ராவிடம் என்பது தொல்-தமிழ் (Proto-Dravidian) பரவலாக, அன்றும் இன்றும் வழங்கும் நாடுகள்.

ஆரியன் X திராவிடன் என்ற இனவாதத்தைப் பெரியார் கட்டமைக்க ஆரம்பித்தார். அதனாலேயே, த்ராவிட கக்ஷிகள் ஸம்ஸ்கிருதப் பெயரைக் கொண்டாடுகின்றன. இப்பொழுது, தமிழ்நாடு மட்டுந்தானே இதில் இருக்கிறது. எனவே, தமிழர் என்ற பேரையே பயனபடுத்தலாமே என்ற கோஷங்கள் எழுகின்றன. த்ராவிட கக்‌ஷிகள் என்ன காலப்போக்கில் செய்யும் எனப் பார்க்கவேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெரியார் ஈவேரா பற்றி 1994-ல் ஆற்றிய சொற்பொழிவு:
வல்லம் பெரியார் கல்லூரியில் பேசின பேச்சு. https://youtu.be/BOMIIYcQJsQ   சிஎஸ் போன்றோர் இந்திரா காந்தியிடம் வழங்கிய ஆலோசனை அதிமுக வேரூன்ற உதவிற்று. இனி, தில்லி தர்பார், பாஜக, அதிமுகவுடன் இணையுமா? அதிமுக காலப்போக்கில் இருக்குமா? எனப்தெல்லாம் விடையறியா வினாக்கள்.  ஈவேராவிடம் விலகி, அண்ணாதுரை தம்பிகட்கு வாழ வழி செய்து கொடுத்தார். அண்ணாயிஸம் பற்றிக் கம்யூனிஸ்ட்கள் கருத்துரை.

இப்பொழுது கோவில்களில் எல்லா ஜாதிகளும் அர்ச்சகர் என அமல்படுத்தத் தொடங்கியுளது தமிழ்நாட்டு அரசாங்கள். எத்தனை பர்செண்டேஜ் ஆண்டுதோறும் எனப் பார்க்கவேண்டும். வெறும் கண்துடைப்பா?
தொல்லியல் முதுமுனைவர் இரா. நாகசாமி அவர்கள், சங்க இலக்கியத்தின் முக்கியப்பாடல்களில் ஒன்றாகிய ‘கலந்தொடா மகளிர்’ முருகின் கோட்டத்தில் மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை அனுப்பினார். எங்கள் உறவினர் சுவாமி சித்பவானந்தர், அவருடன் படித்த ஈழத்துச் சுவாமி விபுலானந்தர் எல்லாம் முறையாக கல்கத்தாவில் இராமகிருஷ்ணர் மடத்தில் ஸம்ஸ்கிருதம் பயின்று பரப்பினோர் ஆவர். எல்லோரும் அர்ச்சகர் ஆனால், இந்தியாவின் இரு செம்மொழிகளிலும் பயிற்சி, புலமை அவசியம். நடக்கிறதா எனப் பார்ப்போம்.

NG

> --
> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPS6yTghMbu3eAbnysVMJ%3DwspLmWR%3D_19%3D1yqeMwqb-qtQ%40mail.gmail.com.


Virus-free. www.avg.com

kanmani tamil

unread,
Aug 20, 2021, 11:29:11 AM8/20/21
to vallamai
திரு + இடம் = திருவிடம் > திராவிடம் என்பது; எல்லாமே தமிழில் இருந்து தோன்றியது எனச் சொல்வது போன்ற வாதம். 

அதை ஒத்த பிற சில மாற்றங்களேனும் கிடைக்காத வரை அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. 

இக்கருத்து தோன்றிய காலம் மொழியியல் பெரிதும் தமிழகத்துள்
பயிலாத காலம் எனத் தோன்றுகிறது. 
சக 

N. Ganesan

unread,
Aug 20, 2021, 11:34:28 AM8/20/21
to vallamai, housto...@googlegroups.com
On Fri, Aug 20, 2021 at 10:29 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
திரு + இடம் = திருவிடம் > திராவிடம் என்பது; எல்லாமே தமிழில் இருந்து தோன்றியது எனச் சொல்வது போன்ற வாதம். 

அதை ஒத்த பிற சில மாற்றங்களேனும் கிடைக்காத வரை அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. 

இக்கருத்து தோன்றிய காலம் மொழியியல் பெரிதும் தமிழகத்துள்
பயிலாத காலம் எனத் தோன்றுகிறது. 
சக 

ஆம். எல்லாம் தமிழாகச் சொல்லும் போக்கு, பாவாணர் நூல்கள் பலவற்றில் காணலாம்.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Aug 21, 2021, 12:51:43 PM8/21/21
to Santhavasantham
There is a fanciful etymology for drAviDa created by Tamil Vellalas a century+ ago. I located the source in English, tiruviTam > drAviDa, an explanation by M. S. Purnalingampillai, Tamil India, 1927. (IITS, Madras, 1999 edition). page 12. is given below. In Tamil writings, this etymology must have been current for at least 3 decades before, as Virudai Sivagnana YogikaL had his "tiruviDar kazhakam" inaugurated in 1908 itself (in KuRRaalam temple, as Pothikai Mountain is supposed residence of Agastya).

"In its widest sense Tamilaham at present lies all the world over, wherever the enterprising Tamils have found their home [2].

  The name, Dravida, a modification of Tiru(v)idam, a land of shrines, was applied to Tamilaham by immigrants for some geographical reason or other, and has nothing to do with the word Tamil or the Tamilar, as some oriental scholars have fully imagined."
"[2] Wherever money is t be made, wherever a more apathetic or a more aristocratic people is willing to be pushed aside, thither swarm the Tamils, the Greeks or Scots of the East; the least superstitious and the most enterprising and persevering race of Hindus.  - Bishop Caldwell"

Occasionally, CNA, EVR also used this explanation for Dravida.
http://www.annavinpadaippugal.info/kavithaigal/thirumbippar.htm
http://thamizhoviya.blogspot.com/2009/03/blog-post_1672.html

tiruvArUr ara. tiruviDam, M.A., - an author's name:
https://www.periyarbooks.in/periyar-books.html?SID=r936g4lpeb8b82s3t3pq923936&authors=1278&limit=6

BTW, I also located the original source for the term, Kumarik KaNDam in Tamil. In late 19th century, by a Jaffna Tamil scholar. I will come to that later. It is significant that prof. Sumathi Ramasamy (Dept. of History, Duke Univ.) who did lot of research and wrote a book on Lemuria/Kumarik KaNDam wrote that Kumarik KaNDam came into Tamils' writings in 1930s. Obviously, this fiction of Kumarik KaNDam - based on Lemuria continental shift and plate tectonics in Geology - got started in late 19th century itself. These are some ways how Tamil elites started internalizing Western advances in Science and Linguistics.

N. Ganesan
Reply all
Reply to author
Forward
0 new messages