- இரண்டுந்தான். த்ராவிடம் என்ற ஸம்ஸ்கிருதச் சொல் அடிப்படையில் தமிழ் என்ற பாஷைப் பெயரின் திரிபு ஆகும். விந்திய மலைகளுக்கு
அப்பால் வழங்கும் ஆர்ய பாஷைகள் பேசும் தேசங்களுக்கு, கௌட தேசம் என்பதன் பெயரால் பஞ்ச-கௌடம் என்ற பெயர் அமைந்தது.
அதே போல, சிந்தி-கூர்ச்சுரம் (> கூர்ச்சரம் > குச்சரம் , குஜராட்), மஹாராஷ்ட்ரம், ஆந்திரம் (இப்போது தெலுங்கு கானம் = தெலுங்கானம் தனி மாகாணம்), கருநாடகம், திராவிட தேசம் ஐந்தும் முதன்மையான த்ராவிடத்தின் பெயரால் பஞ்ச-த்ராவிட தேசம் என ஸம்ஸ்கிருத நூல்களிலே அழைக்கப்பட்டன. அதைக் கண்டுதான், ஏறத்தாழ 25+ பாஷைகள் திராவிட பாஷைகள் என அழைக்கப்படுகின்றன. த்ராவிட < தமிழ். பஞ்ச த்ராவிடம் என்பது தொல்-தமிழ் (Proto-Dravidian) பரவலாக, அன்றும் இன்றும் வழங்கும் நாடுகள்.
ஆரியன் X திராவிடன் என்ற இனவாதத்தைப் பெரியார் கட்டமைக்க ஆரம்பித்தார். அதனாலேயே, த்ராவிட கக்ஷிகள் ஸம்ஸ்கிருதப் பெயரைக் கொண்டாடுகின்றன. இப்பொழுது, தமிழ்நாடு மட்டுந்தானே இதில் இருக்கிறது. எனவே, தமிழர் என்ற பேரையே பயனபடுத்தலாமே என்ற கோஷங்கள் எழுகின்றன. த்ராவிட கக்ஷிகள் என்ன காலப்போக்கில் செய்யும் எனப் பார்க்கவேண்டும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெரியார் ஈவேரா பற்றி 1994-ல் ஆற்றிய சொற்பொழிவு:
வல்லம் பெரியார் கல்லூரியில் பேசின பேச்சு.
https://youtu.be/BOMIIYcQJsQ சிஎஸ் போன்றோர் இந்திரா காந்தியிடம் வழங்கிய ஆலோசனை அதிமுக வேரூன்ற உதவிற்று. இனி, தில்லி தர்பார், பாஜக, அதிமுகவுடன் இணையுமா? அதிமுக காலப்போக்கில் இருக்குமா? எனப்தெல்லாம் விடையறியா வினாக்கள். ஈவேராவிடம் விலகி, அண்ணாதுரை தம்பிகட்கு வாழ வழி செய்து கொடுத்தார். அண்ணாயிஸம் பற்றிக் கம்யூனிஸ்ட்கள் கருத்துரை.