உலக தண்ணீர் தினம்

9 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Mar 21, 2026, 4:58:12 AM (12 days ago) Mar 21
to

உலக தண்ணீர் தினம்

கவிதை,பேச்சு,ஓவியம்  மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் 

தண்ணீரை மாசு படுத்த கூடாது. தண்ணீரை வீணாக்க கூடாது. மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீரை சேகரித்து நம்முடைய அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்கவேண்டும் . . - தோட்டக்கலை உதவி இயக்குனர்    அறிவுரை 


தேவகோட்டை - உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


                       நிகழ்ச்சியில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை  தோட்டக்கலை உதவி இயக்குனர் பெப்பின் இளம்பரிதி மாணவர்களிடம் பேசுகையில்,தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. உலகில் நான்கில் மூன்று பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது, 

                                           தண்ணீர்  கடலாகவும், பெருங்கடல் களாகவும், ஏரிகளாகவும் , குட்டையாகவும் , ஆறுகளும், நிலத்தடி நீராகவும், வானில் வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய மேகக்கூட்டங்கள் ஆகவும் எல்லா வடிவத்திலும் தண்ணீர் உள்ளது.

                                     நமது உடலில் 65 முதல் 70 சதவிகிதம் நீரால் உருவானது. நீர் இல்லை என்றால் நம் உடலில் எந்த வேலையும் செய்யாது. 

                                    உலகம் உருவான உடனே தண்ணீர் உருவானது. அதில்தான் உயிரினங்களே தோற்றுவிக்கப்பட்டது. 

                                     தண்ணீரில் உருவான முதல் உயிரி பாக்டீரியா. பாக்டீரியாவின் வளர்ச்சி அடைந்தது. அடுத்து இரு வாழ்  உயிர் இனங்கள் உருவாகின. டைனோசர் உருவாகியது.

                                  எல்லாம் தாண்டி பாலூட்டிகள் உருவாகின. மனிதர்கள்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து 6 அறிவுடன் வாழ்கிறார்கள்.

                             நம்முடைய அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். மொத்த தண்ணீரில்  ஒரு பர்சன்டேஜ் மட்டுமே குடிக்கும் தண்ணீராக உள்ளது. தண்ணீர் மிக மிக முக்கியமானது.

                                   அதனால்தான் இந்தியாவில் உள்ள முக்கிய ஆறுகள் எல்லாம் பெண்களின் பெயரை வைத்து  வணங்குகிறார்கள். கங்கை, கோதாவரி, பிரம்மபுத்திரா என்று  வணங்குகிறார்கள்.

                       அதனால்தான் தண்ணீர் மிக முக்கியமானதாக உள்ளது. தண்ணீரை மாசு படுத்த கூடாது. தண்ணீரை வீணாக்க கூடாது. மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீரை சேகரித்து நம்முடைய அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்கவேண்டும் . என்று பேசினார்.


                                         தண்ணீர் சேமிப்பு தொடர்பாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விஜய் கண்ணன், ,ரித்திகா,நந்தனா, ,ஜாய் லின்சிகா , ஜெபிகா , நவீன், ஸ்டெபி ஆகியோருக்கு செடிகளை  வழங்கினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். 


பட விளக்கம் ; உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை, பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தேவகோட்டை  தோட்டக்கலை உதவி இயக்குனர் பெப்பின் இளம்பரிதி  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செடிகளை  வழங்கினார்.. பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.                 

வீடியோ : 











IMG_5186.JPG
IMG_5175.JPG
IMG_5187.JPG
IMG_5183.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages