பெரிய புராண ஞானக்கனாவியல்-2

431 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Aug 29, 2014, 9:54:14 AM8/29/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

 

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

முனைவர் கி.லோகநாதன், 29-8-14

 

இடுகை 1

 

அறிமுகம்

 

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

ஞானக் கனாவியல் என்பது புதிய ஒன்றல்ல, மிகத் தொன்மையானது, சுமேருத் தமிழ் காலத்திலிருந்து தமிழர்களிடையே வளர்ந்து வந்துள்ள ஓர் கலை. நாகரீக தொடக்க கலத்தில் இறைவன் தன்னை மக்களுக்கு ஞானக்கனவுகள் வழியாகவே உணர்தியுள்ளது தெரிகின்றது. மிகத் தொனமையான சமய வாழ்க்கையில்  mythology  எனப்படும் புராணங்களே மிகுதியாகப் பயின்றுள்ளதை எகிப்து சுமேரியா  அக்காடியா பாரசீகம் கிரேக்கம் போன்ற தொன்மையான நாகரீகங்களில் காணலாம். ஞானக் கனா வல்லவர்களாக பண்டையோர் இருந்திருக்கின்றனர்  என்பது சுமேருத் தமிழ் இலக்கியங்கள் நமக்கு நலமே உணர்த்துகின்றன.

 

அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமானின் அற்புதமான படைப்பாகிய பெரிய புராணத்தின் நாயன்மார் வாழ்க்கையை வர்ணிக்கும் விளக்கும் நடையில் பல மிக ஆழமான உளவியல் உண்மைகள் இருப்பதை, இந்த ஞானக்கனாவியல் கண்டு அல்சைப் பார்ப்போருக்குத் தெரியும்.

 

இப்பொழுது திருநீலகணட குயவனார் வர்ணனையில் புதைந்துகிடந்த  ஆழ்வுளவியல் உண்மைகளை விதந்தெடுத்து விளக்கியப் பின்னர், அடுத்த்தாக வேடன் கண்ணப்ப நாயனார் கதையை எடுத்துக்கொள்கின்றேன். இங்கு கதையின் மையக் கருவை கீழ்கண்டவாறு பார்க்கலாம்

நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார்.

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.

 

இக்கதையில்:

1, திண்ணன் ஓர் காட்டுப் பன்றியோடு பொராடி அதனைக் கொல்வது.

2. திருகாளத்தி மலையில் குடுமிதேவர் என்ற சிவலிங்கத்தை பத்தி மேலிடக் காண்பது

3. வாயில் நீர் சுமந்து தலையில் செருகி வந்த மலர் இலைகளால் பன்றி இறைச்சியையும் படைத்து அபிசேகம் செய்வது

4, இவை எல்லாம் ஆகம விதிப்படி அமையாது போக சிவகோசாரியார் எனும் சிவாச்சாரியார் மனம் நொந்து இறைவனிடம் முறையிடுதல்.

5. இறைவன் கண்ணப்பரின் உண்மையான பத்தியைக் காட்ட சிவலிங்கத்தின் கண்களில் அடுத்தடுத்து குருதி வழியச் செய்து அதனால் கண்ணப்பர் அன்பு மீதூர தன் கண்களையே இடந்து சிவலிங்கத்திற்கு அப்ப முயல்தல்

6. இடது கண்ணை எடுக்க முயலும் போது இறைவன் தோன்றி ‘நில்லு’ என்று கூறி அதனைத் தடுத்தல், வீடுபேறு நல்கல் போன்றவை

 

பொதுவாகப் பலர், தீவிர சைவர்களும் இந்தக் கதையை ஓர் ஞானக் கனாவாக புரிந்துகொள்வதில்லை. உண்மையிலேயே திண்ணனார் இறைவனுக்கு ப்ன்றி இறைச்சியைப் படைத்தார் கண்களை இடந்து அப்பினார் என்றே கொள்கின்றன. இதனையே அசைவப் படையலுக்கு ஏதுவாகவும் காட்டுவர்.

ஆனால் ஞானக் கனா என்று கொண்டால் இப்படிப்பட்ட அர்த்தங்கள் பொருந்தாது என்று தெரியவரும். கண்ணப்பர் சுவையான பன்றி இறைச்சியையும் படைக்க வில்லை, ஊனகண்களையும் தோண்டி எடுத்து சிவலிங்கஹ்த்டின் மேல் அப்பவிலை, எப்படி கல்லாகிய ஓர் சிவலிங்கத்தின் கண்களில் குருதி வழியும் என்றும் புரியவில்லை.

இவை எல்லாம் ஞானக் கன்வுகளில் தான் நடக்கும் என்பது தெளிவு

ஆக இவற்றை யெல்லாம் ஓர் ஞானக் கனவாக் கொண்டு ஆய்ந்ட்தால்தான்  இவர் கதையில் புதைந்து கிடக்கும் ஆழுண்மைகள் வெளிப்படும். அவற்றை வெளிப்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கம்.

 

உத்தேசமாக நான் கூறவிருப்பவை:

1, ஓர் பன்றியை விரட்டிப் படித்து  கொல்லல் என்பது அகத்தே திருமால் அவதாரமாகிய  வராகத்தோடு பொராடி வென்று அதன்வழி சிவபெருமான் திருமாலிற்கு மேல குன்றில் இருப்பதை உணர்ந்து அவனை அறிந்துத் தெளிய முற்படல்

2. பன்றி இறைச்சி என்பது வராக அவதாரத்தைக் கொல்வதின் வழி அடையப்படும் ஆழ்ஞானங்கள் ஆகும். இவற்றை இறைவனுக்குப் படைக்க, இறைவன் வீடுபேறு மகிழத் தரும் சிவஞானம் அருளல்

3. கண்களை இடந்து சிவலிங்கத்தின் மேல் அப்பல், ஊனக் கண் பார்வை போக்கி ஞானக் கண பார்வை பெற்று அதன் வழி சிவஞானம் மகிழ்தல் ஆகும்.

 

இவைதான் சேக்கிழார் பெருமான் கூறும் கருத்துக்களா இல்லை இவை எல்லாம் நான் புகுத்தும் கற்பனைகளா?

இவை நான் புகுத்தும் கருத்துக்கள் அல்ல, மாறாக சேக்கிழார் பெருமானே குறிப்பாக ஆனால் மிகத் தெளிவாக உனர்த்தும் கருத்துக்கள் என்பதை அவர் தம பாடல்களைக் கொண்டே தெளிபடுத்த இருக்கின்றேன்.

 

தொடரும்

உலகன்

 

 

 

K. Loganathan

unread,
Aug 30, 2014, 3:45:54 AM8/30/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 2

 இனி சேக்கிழார் பெருமானின் பன்றி வேட்டை வர்ணனைக்கு வருவோம், இந்த வர்ணனையில் அவர் யாதைத்தான் குறிப்பாக உணர்த்துகின்றார் என்பதை பல் கோணங்ளிiல் விசாரிப்போம்

 50. கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு 0699-1

 பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் 0699-2

 வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலங் கவர் வென்றி மேவு மாறு   0699-3

 காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் 0699-4

 

 51. மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு     0700-1

 எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரிச் 0700-2

 சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக்    0700-3

 கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள் 0700-4

 

இங்கு வரும் இரண்டு பாடல்களில் சூராட்டி எனும் தேவாரட்டியை அழைத்து அவள் அருள்மொழியைக் கேட்க, குறிகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன ஆயினும் அவனுக்கு தந்தையைவிட இன்னும் மேம்படுமாறு வேட்டைகள் அமையும் என்று கூற நம்மால் ஒருவாறு ஊகித்துக்கொள்ள முடிகின்றது. அமையப் போகின்ற வேட்டை ஓர் சாதரரண வேட்டை அல்ல, வேறொரு வகையான வேட்டை என்று.

அந்த வேட்டைதான் என்ன? கீழ்வரும் பாடல்கள் விளக்குகின்றன

87. இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிரக்       0736-1

 கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்    0736-2

 பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி    0736-3

 மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில்      0736-4

 

 88. போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு       0737-1

 ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்       0737-2

 தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்   0737-3

 ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் 0737-4

 

 89. நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில் 0738-1

 காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்      0738-2

 கூடினர் விடு பகழிகளடு கொலை ஞமலிகள் வழுவி 0738-3

 நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்      0738-4

 

 90. குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இடக் குரல் நீள்       0739-1

 பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடித்   0739-2

 துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்      0739-3

 சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில்       0739-4

 இங்கு இறைவனின் திருவிளயாடல் தொடங்குவதைக் காண முடிகின்றது. ஓர் ஏனம் வீசப்படும் எல்லா வலைகளையும் மீறி கருமேகங்களைப் போல கருத்து  இடியென முழங்கி எரி உமிழ் செங்கண்களொடுத் திகழ்ந்து முடுகிய கடு விசையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகின்றது. அந்த வீர வேடர்களும் அந்தப் பன்றியை விட்ட பாடிலை. விடாது இவர்களும் துரத்த ஆனால் மிகத் தந்திரமாக அந்த வராகம் திண்ணனை மாத்திரம் தனியாக அதனை விரட்டுமாறு விளையாடி முடிவில் அவன் தோழர்கள் நாய்களோடு பின் தொடர, அந்த காட்டுப் பன்றி  ‘அடல் வன் திறலோடு படர் நெறி நெடிதோடி” ஓர் குன்று அருகே திண்ணனைக் கொண்டு வந்து விட்டு விடுகின்றது!

வராகத்தை வைத்து  இறைவன் ஆடும் திருவிளையாடல் இப்பொழுது புரியத் தொடங்குகின்றது. வந்து சேர்ந்துள்ள குன்று அருகே தான் திருகாளத்தி கோயில்  இருக்கின்றது அங்குதான் குடுமிதேவர் சிவலிங்கமும் இருக்கின்ன்றது.  திண்ணன் அங்கு வரவேண்டும். அதற்காகத் தான் இந்த பன்றி வேட்டையே. தன் தந்தையாரை விஞ்சிய பெருமை இவருக்கு வந்தமை வேட்டை இது.

ஆனால் அந்த பன்றியை திண்ணன் என்ன செய்கின்றார்? அதன் பொருள் என்ன?

91. அத் தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்       0740-1

 கைத் தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி    0740-2

 மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி       0740-3

 குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்     0740-4

 

 92. வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த 0741-1

 மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு நாணன்      0741-2

 காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்       0741-3

 ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார்   0741-4

 

பிறர் அந்த கடுந்திறல் பன்றியை வில்லிருந்து அம்பு விட்டு தூரத்திலிருந்து கொல்ல நினைத்திலர். ஆனால்  சினந்தெழுந்து  நேராக மோதி சுரிகை எனும்  சுடர்விடு ஆயுதத்தால் குத்தி  உடலைப் பிளந்து கொல்கின்றார் மறவர் குல தலைவராகிவிட்ட திண்ணன்.  விசையில் மீண்டும் ஆழக் குத்த அந்த ஏனமும் இரண்டு துண்டாகி விழுகின்றது. இந்த வீரச் செய்கைக் கண்ட தோழர்கள் காடனும் நாணனும் திண்ணன் ஆடவன் ஆகிவிட்டான் என்று வியந்து அவன் அடியில் தாழந்தாராம்.

உண்மையில் என்ன தான் நடக்கின்றது?

இந்த வராகத்தினை விரட்டிச் சென்று குத்திக் கொன்றதால்தான்  திண்ணன் ஓர் தீவிர சைவன் ஆகின்றான். குடுமிதேவர் எனும் சிவலிங்கத்தை நோக்கி அளப்பரிய பத்தியோடு செல்கின்றான். ஆனால் இந்த அடிப்படை சமய மாற்றம் திருமால் அருளாலேயே நடக்கின்றது. திருமால் வராக அவதாரம் எடுத்து திண்ணன் தன்னை விரட்டி கொல்லுமாறு விளையாடி அதன் வழி அவன் அகத்திலே புதந்து கிடக்கும் சிவலிங்கத்தை உணர்த்தி அவனை ஓர் தீவிர சைவன் ஆக்குகின்றான்.

இங்கு சிவனே திருமாலின் வராக அவதாரம் எடுத்து வைணவம் தரும் உலக மயக்குக் கெடுத்து அதற்கு மேலாகிய குன்றுச்சியில் சுடரும் சிவஞானமாகிய அந்த குடுமிதேவர் சிவலிங்கத்தை நாடிச் செல்லுமாறு ஓர் திருவிளையாடல் புரிகின்றான்.

அப்படி என்றால் இந்த வராக அவதாரம் என்னதான் செய்கின்றது? அதனைக் கொல்ல ஓர் ஆடவன் எப்படி ஓர் தீவிர சைவன் ஆகின்றான்?

இதனை அடுத்தக் கட்டுரையில் அலசுவோம்

தொடரும்

உலகன்

 

 

 

 

K. Loganathan

unread,
Sep 2, 2014, 3:29:55 AM9/2/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 3

 

 வேடன் திண்ணனின் தொழிலிற்கு ஏற்ற முறையில் வராகவேட்டை ஓர் ஞானக்கனாவியல் நிகழ்ச்சி, இறைவனின் திருவிளையாடல். இல்லையேல் அந்த வேட்டையின் இறுதியில் குடுமிதேவர் எனும் சிவலிங்கம் வீற்றிருக்கும் திருகாளத்தி மலைக்கோயில் பக்கம் வந்திருக்க மாட்டார்.  ஆனால் எப்பேற்பட பன்றி வேட்டை இது, அது ஞானக்கனா என்றால் அதன் பொருள்தான் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள, முதலில் நாம் திண்ணனார்பால் எழுந்துள்ள அடிப்படை ஆளுமை மாற்றங்களைக் காணவேண்டும். அவை சேக்கிழார் பெருமானின் கீழ்வரும் பாடல்களில் தெளிவாகின்றன.

 93. மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற       0742-1

 உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்     0742-2

 சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து    0742-3

 வெற்றி கொள் வேட்டைக் காடு குருகுவோம் மெல்ல என்றார்       0742-4

 

 94. என்று அவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே       0743-1

 நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்       0743-2

 நின்ற இப் பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட     0743-3

 குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்       0743-4

 

 95. பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே       0744-1

 இங்கிது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்      0744-2

 அங்கது நோக்கிச் சென்றார் காவதம் அரையில் கண்டார்    0744-3

 செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை       0744-4

 

 96.  நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்       0745-1

 காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்   0745-2

 சேணுயர் திருக் காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே     0745-3

 கோணமில் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் 0745-4

 

 97.  ஆவதென் இதனைக் கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்       0746-1

 போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல் மேல்       0746-2

 மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்      0746-3

 தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம்       0746-4

 

வேட்டையாடி பன்றியினைக் கொன்ற பிறகு தாகமும் பசியும் வருத்த நீர்வேட்டும் உணவு வேட்டும் திண்ணன் வினாவ நாணன் ஓர் தேக்கிற்கு அயலாய் திருகாளத்தி மலையை சுட்டி அங்கோர் தெள்ளிய நீரின் அருவி ஓடுகின்றது என்று கூற  உடன் திண்ணனார் அங்கு செல்வோம் என்று கூறி அனைவரும் அங்கு செல்கின்ற்னர். நாணன் நற்காட்சியேக் கிட்டும் குடுமித்தேவரைக் கண்டு வழிபடவும் செய்யலாம் என்று கூறி ஊக்குவிக்க, திண்ணன் அத்திசை நோக்கிச் செல்ல, தன்னுள் ஓர் பெரும் மாற்றம் நேர்வதைக் காண்கின்றார். 

1,

தன் உள்ளத்தில் பெரும் பாரம் குறைவதுபோல் உணர்கின்றார்

2.

அந்த சிவலிங்கத்தை தரிசிக்க அளப்பரிய ஆசை பொங்கிப் பொங்கி எழுவதையும் உணர்கின்றார்

3

பிற விருப்பங்கள் எல்லாம் எழாது போக குடுமித் தேவரைக் காண வேண்டும் வழிபட வேண்டுமெனும் விருப்பே விருப்பாகி அவரை முற்றிலுமாக ஆட்கொள்கின்றது

சேக்கிழார் அழகிய ஆழமான நுட்பத்தோடு திண்ணன் செய்த பன்றி வேட்டையின் பொருளை இங்கு உணர்த்தி அருளுகின்றார். சாதாரண வேட்டை களைப்பை பசியை தாகத்தை உண்டு பண்ணும் ஆனால் இங்கு? சிவஞானப் பசியும் சிவஞானத் தாகமும் அல்லவா தோன்றியுள்ளன!

அப்படி என்றால் இந்தப் பன்றி வேட்டை என்பது எத்தகைய வேட்டை?

இதனை உணர்ந்துகொள்ள நாம் அடிமுடி தேடி திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்றதையும் பிரம்மா அன்னப்பறவை அவதாரம் எடுத்து விண் படர்ந்து தெடிய கதையை இங்கு நாம் நினைவு கூர வேண்டும்

திருமாலின் வராக அவதாரம்

திருமால் ஆதியும் அந்தமும் இலா அருட்பெருஞ்சோதியாய சுத்த சிவனின் அடியைத் தேடி கண்டு மகிழ்வேன் என்று வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் குடைந்து அகந்து கீழே சென்று முடிவே காணாது தோற்றது இங்கு நினைவு கூரத் தக்கது. சுத்த சிவன் குன்றுச்சியில் சிவலிங்க வடிவில் காத்துக்கொண்டிருக்க, திண்ணன் எனும் அந்த வேடன் வந்து தரிசிக்காமல் இரூக்க, அந்த அஞ்ஞானத்தால் வரும் உதாசீனம் போக்கவே இங்கு இந்த பன்றி வேட்டை. சுத்த சிவனே இங்கு திருமால் அவதாரமாகிய வராகமாக வந்து பூமிக்குள் குடைந்து குடைந்து செல்வதொழித்து அடர்ந்த பல மரங்ககளும் செடிகொடிகளும் விலங்குகலும் நிறைந்த காட்டின் ஊடே குடைந்து குடைந்து பலரோடு பின் தமியனாய் பயணிக்கச் செய்வதும் ஓர் அஞ்ஞானம் போக்கும் ஓர் கல்வி யாத்திரைதான்.

அறிவின் செலவினை நாம் வகுத்துப் பார்க்கும்போது தன்னுள் இருக்கும் மறையுலகை அகழ்ந்து காணும் அகழ்மானம் என்றும் விண்படர்ந்து வெளியுலகம் காணும் புறமானம் என்றும் இருவகைப்படும் அன்னப்பறவை புறமானம், வராகம் அகழ்மானம்(archeductive movement) ஆகும். மானம் என்றால் இங்கு செலவு பயணம் யாத்திரை என்றாகும்.  ஆக வராக அவதாரத்தால் ஆகுவது அகழ்மானங்கள், ஒருவன் தன்னுள் இருக்கும் அஞ்ஞான இருள் உலகை, மறைபொருளை குடைந்துக் குடைந்து உட்புகுந்து அறிந்து தெளிந்து மறைவினைப் போக்குவது ஆகும்.

 The exploration of the Unconscious within so that everything becomes a matter of clear consciousness.  Thus the destruction of the mystical within

திண்ணன் காட்டிடையே வராகம் இட்டுச்செல்ல நடத்திய யாத்திரை, உண்மையில் தன்னுள் தானே தன் அறிவின் உள்ளே இருக்கின்ற அறியாமை இருளின் ஊடேப் பயணித்து அதன் உட்கிடக்கைகளை- மரஞ்செடி கொடிகள் கனிகள் விலங்குகள் போன்றவற்றை -- அறிந்து அகத்திருள் போக்குவதாகும்

பிறகு ஏன் அந்த நல்ல வராகத்தைக் கொல்ல வேண்டும், கத்தியால் குத்தி இரண்டாக பிளந்து கொல்ல வேண்டும்?

இங்கும் ஞானக்கனாவியல் உதவுகின்றது.

கனவுகளில் ஒருவர் இன்னொரு உயிரை வெட்டிக்கொல்லல் போன்று வந்தால் அல்லது யாதோவோர் வகையில் கொல்வதாக வந்தால், அது அந்த உயிரை தன் வாழ்க்கையில் தொடர்ந்து இராதது போல் தொலைப்பது மறைப்பது என்றாகும்.

இங்கு  அதுதான் பொருளுமாகும். வராக அவதாரத்தில் பணி முடிய, வேண்டிய அளவிற்கு அகத்துச் செறி ஞான அந்தகாரம் போக்கப்பட்டுவிட, அகத்தே சுத்தசிவம் இருக்கின்றது ஆழ ஆழ என்ற தெளிவு வந்து விட, வராக அவதாரத்தின் பணி முடிகின்றது. அது கொன்று இல்லாது போக்கப்படுகின்றது. இல்லையேல் இந்த அகழ்மான ஞான யாத்திரை ஓர் முடிவிற்கு வராது தொடர்ந்துகொண்டே இருக்கும் சிவனை அடைந்து வீடுபேறு மகிழ முடியாது.

தொடரும்

உலகன்

 

 

K. Loganathan

unread,
Sep 2, 2014, 10:17:26 PM9/2/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
திரு புரு

நல்ல பல கேள்விகள். மிக்க நன்றி. கனவுகள் கண்டு அவற்றின் பொருளை உணர்ந்து வாழ்க்கையை திருத்துவது என்பதெல்லாம் தமிழர்களிடையே மறைந்து வரும் ஓர் கலையாகும். இப்பொழுது சோதிடம் எண் கணிதம் என்றெல்லாம்  பல பொய் கலைகள் ஆக்கிரமித்து இந்த தொன்மையான ஆழுளம் சான்ற கலைகளை கொன்று விட்டன,. வர்ண சிந்தனை சாதீய எழுச்சி போன்றவை இதன் காரண்மாக இருக்கலாம்,

சரி கேள்விக்கு வருவோம்:  யார் இந்த வேடன் கண்ணப்பர் கனவினை கண்டிருக்கக்கூடும்?

அவரோடு தொடபுடைய சித்தர் போன்ற ஒருவர் இந்த கனவைக் கண்டு அவரிடமோ அல்லது அவரைச் சார்ந்தவ்ரிடமோ சொல்ல, அது பலரிடையே பரவி ஓர் கதையாகி வழக்கில் வர, அதுவே பின் பாடப் பெற்று அறிஞர் பெருமக்களால் ஆயப்பட்டு அதன் அருமைகள் போற்றப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது

நாட்டார் கதைகள் போல் ஆகி பின் இலக்கிய சிறப்பு பெருகின்றன.

இந்த கனவினைக் கண்டது கதையின் தொடகததில் வரும் தேவராட்டி எனும் அந்த அம்மையாராக இருக்கலாம். அக்காலத்தில் இத்தகைய் திறன் உடைய மாதர்களே சாமியாடி தேவராட்டி என்றெல்லாம் ஆகி மக்களுக்க் நல் வழி காட்டியுள்ளனர்.

தமுழியின் மம்மு எனும் கனவு சான்ற சுமேருத் தமிழ் கதையிலும் கன்வுகளை கேட்டு அறிந்து பொருள் கூறும் திறனை கெஸ்தினண்ணா எனும் அம்மையாருக்கே உரியதாக சொல்லபப்டுகின்றது

இந்தனமையோர்களே அகத்திய சித்தர்கள் ஆகிவிட்டனர்.

பெண்பால் சித்தர்கள் செய்த நற்காரியம் ஆண்பால் சித்தர்கட்கும் ஆக கெஸ்தின் அண்ணா அகஸ்தியர் ஆகின்றார் போலும்

எனக்கும் நிறைய ஞானக் கனவுகள் வரும் என் தாயாருக்கும் இப்படியே, என் தமக்கையாருக்கும் இப்படியே.  என் தாயருக்கு ஓர் கனவு வந்தால் அது நல்லது என்றும் கெட்டது என்றும் பொதுவாகத் தெரியும் என் தந்தையார் உய்ரோடு இருந்தபோது அவர்கள் இருவரும் மணிக் கணக்கில் கனவுகளைப் பற்றி பேசி மகிழ்வதை நான் இளவயதிலேயே கேட்டிருக்கின்றேன்

எங்கள் உறவினராக ஓர் பெரியவர் இருந்தார், வெள்ளையன் தண்டல் என்று அவருக்குப் பேர், என் தாயாருக்கு கனவுகளைப் பற்றி ஐயங்கள் யாதும் இருந்தால் அவரைப் போய் சந்தித்து பொருள் கேட்டு தெளிவடைவார்.

இது திருச்சி மாவட்ட  முத்தரையர்கள் கிராம வாழ்க்கையின் மலேசியத் தொடர்ச்சி,

இப்போதெல்லாம் இப்ப்டி இல்லை,

உலகன்


On Wed, Sep 3, 2014 at 8:38 AM, purushotha...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com> wrote:
 

I have few doubts, who in fact had the dream? The seeking or searching for feet, head or extents are again dreams or teasers of one another, say my dream of visva roopa, everywhere seeing vishnu his chest only, not the usual whole body expansion. Many tales say shiva appear in the form of adiyar or veda or sometimes as a paarpanar, so on. If we see serendipity realization which happens to the dreamer, may be we have to locate the person, as the story or dream is retold, we would also become dreamers and serendipity realization might happen of several types...

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (4)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Sep 15, 2014, 12:20:10 AM9/15/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 4

 

மேலே திண்ணனின் பன்றி வேட்டை ஓர் ஞானக் கனவே என்றும் அந்த பன்றியும் திருமால் அவதாரமாகிய வராகமே என்றும், அது அடிமுடி தேடியக் கதையில் வராக அவதாரத்துத் திருமால் பூமியைக் குடைந்து சென்றது போல, இங்கு அநத வராகம் வழி திண்ணன் ஓர் அடர்ந்த காட்டினைக் குடைந்து செல்ல வைத்து முடிவில்  குடுமிதேவர் வீற்றிருக்கும் திருகாளத்திக்கு கொண்டு வந்து விடுகின்றது.

இது ஏனைய தெய்வ வழிபாடுகளை விட்டு சிவ வழிபாட்டின் சிவலிங்க தரிசனத்தின் மேல் ஆர்வம் பிறக்குமா செய்கின்றது

இனி இந்த வராக அவதாரம் எடுத்து திருமால்  செய்யும் உதவியே இந்த பன்றி வேட்டை என்பதை உறுதி செய்யும் வகையில் திண்ணனின் அடுத்த நிகழ்வு, திருகாளத்திக் குன்றின் மேல் ஏறும் நிகழ்வு அமைக்கின்றது.

இதன் பொருள் என்ன என்பதை சேக்கிழார் பெருமான் மிகத் தெளிவாகவே தன் பாடல்களில் உணர்த்துகின்றார். எப்படி என்பதைக் காண்போம் அடுத்து.

 

99  ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு       0748-1

 வாங்கு வில் காடன் தன்னை மரக் கடை தீக் கோல் பண்ணி       0748-2

 ஈங்கு நீ நெருப்புக் காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு      0748-3

 நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்       0748-4

 

 100 அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்     0749-1

 தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம் 0749-2

 களி வரும் மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு    0749-3

 குளிர் வரு நதி ஊடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார்     0749-4

 

 101 கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி       0750-1

 அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட      0750-2

 இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலைப் பெருந்தேன் சூழ்ந்து       0750-3

 மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான்       0750-4

 

 102. முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன       0751-1

 அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி    0751-2

 மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி      0751-3

 என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும்       0751-4

 

 103. நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏறத் தாமும்    0752-1

 பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி       0752-2

 ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர்     0752-3

 நீணிலை மலையை ஏறி நேர் படச் செல்லும் போதில்      0752-4

 

 104. திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே       0753-1

 அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்       0753-2

 தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்    0753-3

 பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்       0753-4

 

சிந்தனைத் தெளிவு

குளிர் தரும் நதியூடு ஏகி திண்ணன் திருகாளத்தி  குலவரை சாரல் சேர்ந்தார் எனும் பொழுது ‘அணைந்த ஆற்றின் தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்” என்று கூறுகின்றார்.  சிந்தையினிலே தடையாக இருந்த பல ஐயங்களும் திரிபுகளும் மற்றும் பல மறைப்புக்களும் நீங்க, ஓர் ஆழமான அற்புதமானத் தெளிவு பிறக்கின்றது.  ஆக பன்றி வேட்டை எனும் ஞானக் கனவில் திண்ணனார் அகத்திருந்த அஞ்ஞானங்கள் பல போயகல இந்த ஞானத் தெளிவு வந்திருப்பதை நோக்க, பன்றி வேட்டை ஓர் ஞானக் கனவே என்பது உறுதியாகின்றது.

இது உண்மையென்றால், இன்னொரு உண்மையும் தெளிவாகின்றது. இறைவன் இருக்கின்றார் என்பது மாத்திரம் அல்ல. தக்காருக்கு தானே ஞானக் கனாக்கள் வழி ஞானபோதனையும் செய்வான் என்பதே. சாத்திரங்களையும் மறைகளையும் ஓதித்தான் ஞானம் பெற வேண்டும் என்பதில்லை,  நல்லது செய்து வந்தால் இறைவனே ஞானாசிரியனாக அமர்ந்து ஞானக் கானாக்கள் வழி சிவஞானம் புகட்டவும் செய்வான் என்பதும் இங்கு ஓர் உண்மயாகின்றது

நமசிவாய மந்திரம்

 இனி திண்ணனார் அடைந்தத் தெளிவு எப்படிப்பட்டத் தெளிவு என்பதையும் சேக்கிழார் பெருமான் குறிப்பாகவே உணர்த்துகின்றார்.  பாட்டு 101இல் தேன் ஈக்களின் ரீங்கார வோசையை ‘அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட’ என்று கூறும் போது திண்ணனார் மலை ஏறும் போது ‘நமசிவாய’ எனும் மந்திர ஓசையாகவே தேனீக்களின் ரீங்கார ஓசையக் கேட்டதாக கூறுகின்றார். இதுவரை  எல்லாத் தெய்வங்கட்கும் மேலாக ‘நமசிவாய” எனும் ஓசை ஐந்தையே தனது திருநாமமாக கொண்டிருக்கும் மந்திரத் தெருமேனியாக சிவபெருமான் இருப்பதை அறியாதிருந்து ஆனால் இப்பொழுது அதனை அறிந்தவராக திண்ணன் குன்றுச்சி செல்ல விழைகின்றார்.  இந்த புதிய ஞானத் தெளிவே திண்ணனார் பன்றி வேட்டையில் காரணமாக மகிழ்ந்த ‘சிந்தை தெளிவு” என்பது தெளிவு. சித்த மாயைகளும் பிற மயக்குகளும் விலக, அக்த்தே ஓர் ஆழமான தெளிவு உண்டாக ஆழத்தின் ஆழத்தில் சிவபெருமான் மந்திரத் திருமேனியில் ‘நமசிவாய’ எனும் நாமத்தொடு இருப்பதை அறிந்து பெருங் காதலில் வீழ்ந்தவராக குன்றேறுகின்றார்.

இங்கு சேக்கிழார் பெருமான் திண்ணனார் அகத்தே எழும் மிக அற்புதமான சிவபத்தியை தெளிவாகவே விளக்குகின்றார் பாடல் 102-இல்

இந்த ஞானத் தெளிவு “முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன, அன்பு” எனும் போது இந்த சிவபத்தி இந்த பிறவியில் தற்செயலாக நேர்ந்த ஒன்றல்ல, எத்தனையோ பிறவிகள் எடுத்து பல புண்ணியத் தவங்கள் செய்ததின் விளைவே என்றும் அது முடிவிலா இன்பம் ஆன அன்பு எனும் போது அதுவே வீடுபேற்றை, மீண்டும் பிறவாமையை ஈட்டித் தரவல்லது என்றும் உணர்த்துகின்றார்.

வீடுபேறு நல்க வல்ல சிவபத்தியும் நமசிவாய மந்திரப்பொருளை அறிதலும் யாருக்கும் தற்செயலாக நேரும் வாய்க்கும் ஒன்றல்ல, அது முற்பிறவிகளில் செய்கின்ற பல ஞான தவங்களின் விளைவு என்றாகின்றது.

தத்துவச் சோபானம்: ஐயர் ஆதல்

பாட்டு 103-இல் ஆழமான மெய்யறிவுச் சிந்தனை விளங்கும் ஓர் வரியே குன்றுச்சிக்கு ஏறும் யாத்திரைப் பற்றிய வர்ணனை. அது ‘பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம்” என்பதாம் . சோபானம் என்றால் ‘படிக்கட்டு” என்று பொருள்படும். சைவ சமயத்தில் தத்துவங்கள் 36 என்பர். அதனை விரித்து 96 என்பாரும் உளர். பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களும் இந்த 36 தத்துவங்களின் பின்னலில் உடம்பெடுத்து உழல்கின்றன. இவற்றை நீங்கவே தான் சிவமாகிய இறைவனை அடைய முடியும். இதுவே தத்துவ சுத்தி எனப்படும் ன்உபாயமாகும். படிகள் வழியாக குன்றேறி உச்சி அடைந்து ஆங்கே இறைவனை தரிசித்தல் என்பது ஓர் ஞான யாத்திரை. இது படிப்படியாக நடக்கும் ஒன்று, குன்றேறி ஓர் சரியை போன்ற சடங்கு போன்ற பயிற்சி தான். ஆனால் அதன் உண்மை என்ன வென்றால், படிப்படியாக இந்த 36 தத்துவங்களையும் விட்டு நீங்கி சுத்தமாகுதலே யாகும்.

திண்ணனார் குன்றேறுவது ஓர் ஞான கனா என்று எடுத்துக்கொண்டால், அவர் ஆழமான தத்துவ சிந்தனையில் வீழ்ந்து ஞானத் தெளிவுகள் பலபெற்று தத்துவக் கழற்சி செய்து சுத்தமாகின்றார் என்று பொருள் படும். யாது மறைபொருளாக இருப்பதுபோக்கி தெளிபொருளாகின்றதோ அதனின்று கழற்சியும் மெய்யாகின்றது.

இந்த ஞானப் பயணம் எப்படிப்பட்டது? அதனை ஏன் சேக்கிழார் பெருமான் < ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர்> என்று ஓத வேண்டும்?

இங்கு ‘ஐயர்’ என்பது வர்ணதர்ம பிராமணன் அல்ல, வேடராகிய நம் திண்ணன் தான். முன்பு எவ்வாறு நீலகண்ட குயவனார் ‘வேதியர்’ ஆனாரோ அதேப் போல இங்கு  வேடனாகிய திண்ணன், தான் பெற்ற பக்குவச் சிறப்பால் ‘ஐயர்’ ஆகின்றார். யார் இறைவன் செம்பொருள் சிவனாக இருக்கின்றாரன் என்றும் அவன ஆணைப் படியே எல்லாம் நடக்கின்றதென்றும் அறிந்து எல்லா தத்துவங்களையும் நீங்கி சுத்தமாகி அவனை ஆடையவேண்டும் என்று எண்ணி அதற்காக கடுமையாக உழைக்க்கின்றார்களோ அவர்கள் எல்லாம் ‘ஐயர்’ ஆகின்றார்கள்,

யார் ஆன்மதத்துவம் வித்தியா தத்துவம் சிவதத்துவம் என்றெல்லாம் ஆகி 36 ஆக விரிந்து ஆன்மாக்களுக்கும் பிறப்பூம் அத்ற்கேற்ப அந்தகரணங்கள் புறங்கரணங்கள் என்றெல்லாம் சமைந்து நிற்கின்றதோ அதனை எல்லாம் விட்டு நீங்கி சுத்தமாகிடவேதான் இறைவனை அடைந்து வீடுபேறு மகிழ முடியும். யார் அதனை நோக்கி பயனிக்கின்றார்களோ அவர்கள், எப்படிப்பட்ட பிறப்பும் தொழிலும் அமைந்தாலும் இந்தப் பக்குவத்திற்கு வர, ‘ஐயர்’ ஆகின்றனர், ‘வேதியர்’ ஆகின்றனர்.

ஐயர் ஆதல் எவ்வாறு?

யார் மேலே விளம்பியவாறு தத்துவச் சுத்தி செய்து சுதந்திரம் ஆகின்றார்களோ அவர்களே ‘தான் யார்க்கும் குடியல்லாது , தான் யார்க்குங் குடியல்லாத் சங்கரனையேச்” சாரும் தறுகண்மையின் சுத்தர் அல்லது ஐயர் ஆகும். இதுவே பாடல் 104 இல் வெளிப்படுகின்றது இவ்வாறு :< தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல நீங்கிப்பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்>

இங்கு முன்னை சார்பு எல்லா விடுதல் என்பது அனைத்துப் பற்ருக்களையும் துறந்து சுத்தமாதல் என்பதொடு சுதந்திரமும் ஆதலாகும். இனச் சார்பு சாதிச் சார்பு சமயச் சார்பு தொழிற் சார்பு மொழிச் சார்பு என்று எவ்விதச் சார்பும் இல்லாது சுதந்திரமாதல். இப்படி எல்லாச் சார்புகளையும் தொலைத்து சுத்தமாகவேதான் ஓர் ஆன்மா பொங்கி எழும் அருட்பெருஞ்சோதி அருள பொருவில் அன்பே தானாகி ஆகவே அனபே தான் என்று நிற்கும் சிவனோடு ஒத்து நிற்கும் என்பதாம். இங்கு ‘பொருவு” என்றால் ‘ஒப்பு’ என்று பொருள்படும்  ‘பொருவில்’ என்பது ஒப்பற்ற என்று பொருள்படும்

இது இறைவன் மேல் ஆராக் காதல் என்றும் படும்

இந்த பொருவில் அன்புதானே திண்ணனாரை ‘கண்ணப்ப நாய்னார்’ ஆக்கியது. அது எவ்வாறு அமைந்தது என்பதை இனி காண்போம்

தொடரும்

உலகன்

 

 

 

K. Loganathan

unread,
Sep 17, 2014, 3:40:02 AM9/17/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 5

 

 திண்ணனார் பன்றி வேட்டைக் கனாவின் வழி ஞான கண் திறப்பட்டவராக  சிவலிங்க வடிவில் தனைக் காட்டியருளும் சிவபெருமானை நேராக தரிசிக்க பேரார்வங் கொண்டவராக மலை ஏறுகின்றார். பொதுவாக குன்றேறி உச்சியிலே இருக்கும் கோயிலை அடைந்து அங்கு பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வத்தைக் கண்டு பூசை செய்வதே பல தெய்வங்கள் தொடர்பாக நடந்து வரும் ஓர் சடங்காகும். இது மிக்த தொன்மையான ஓர் வழிபாட்டு முறையாகும். ஆனால் ‘குன்றேறுதல்’ என்றால ஞானக் கனவில் என்ன பொருள் எனும் போது சேக்கிழார் பெருமான் மிக அழகாக விளக்கி விடுகின்றார். குன்று என்பது ‘தத்துவச் சோபானம்” அதாவது 36 தத்துங்களின் அடுக்கு படிக்கட்டு. அவற்றை மிதித்து மேலே ஏறிச் செல்வது தத்துவக் கழற்சி செய்து சுத்தமாகுவதாகும்.

 

இந்த தத்துவக் கழற்சி செய்து சுத்தமாகுதலே மெய்கண்ட சாத்திரங்களில் வெகுவாக ஆராயப்படும் ‘தத்துவ சுத்தி’ ஆகும். இதனை ‘தசகாரியம் ‘என்றும் கூறுவர். 14ஆம் நூற்றாண்டு சிற்றம்பல நாடிகளின் ‘துகறுபோதம்’ அதனை சார்ந்து எழுந்த ‘துகளறு போதக் கட்டளை’ போன்ற நூற்களும் இன்னும் பலவும் இந்த தத்துவ சுத்தியை வெகுவாக விளக்கும்

 மிகத் தொன்மையான ஓர் சமய சடங்கிற்கு இப்பொழுது அதன் உண்மைதான் என்ன என்பதை விளக்கும் வகையில் சேக்கிழார் பெருமான் திண்ணனின் மலை ஏறும் செயலின் மெய் வடிவமாகிய தத்துவ சுத்தி செய்தலை திறன்பட விளக்குகின்றார்.

 

சாதாரணமாக குன்றேறி உச்சிக்கோயில் அடைந்து தெய்வத்தை தொழுவதற்கும் இவ்வாறு தத்துவ சோபானம் ஏறி தத்துவ சுத்தி செய்வதற்கும் என்ன வேறுபாடு?

தத்துவங்கள் அனைத்தையும் கழன்று சுத்தமாகுதல் என்பது பாசங்களையும் உலக பற்ருக்களையும் நீங்கி சுத்தமாகி ஆகவே இனி இறைவனே எல்லாம் என்ற ஆராத் தெய்வக் காதலி ‘பொருவில் அன்பு” பெருக, இறைவனைத் தவிர்த்து வேறொன்றும் நினைக்கத் தெரியா மூமுட்சுத்துவம் வந்தமையும். அந்த நிலையில் தான் திண்ணனார் இப்பொழுது விளங்கிட அவரும் ‘ஐயர்’ என்றும் விளக்கப்படுகின்றார்.

 

சிவனடியார் எனினும் அமையும்

 

இனி அடுத்தது என்ன? சேக்கிழார் பெருமான் எவ்வாறு யாதைக் கூறுகின்றார் என்பதை பார்ப்போம்.

 

106.  நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்       0755-1

 வடிவெலாம் புளகம் பொங்க மலர்க் கண்ணீர் அருவி பாய 0755-2

 அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று       0755-3

 படி இலாப் பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற       0755-4

 

 107.  வெம் மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல்       0756-1

 கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்      0756-2

 உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்       0756-3

 இம் மலைத் தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் 0756-4

 

 108. கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்தப்   0757-1

 பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து    0757-2

 மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற    0757-3

 அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான் 0757-4

 

 109.  வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டிக்       0758-1

 குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி 0758-2

 ஒன்றிய இலைப் பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான்       0758-3

 அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்       0758-4

 

 110. உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்       0759-1

 திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை   0759-2

 எண்ணிய இவைகொலாம் என்று இது கடைப் பிடித்துக் கொண்டு அவ்       0759-3

 அண்ணலைப் பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட 0759-4

 

 111 இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே       0760-1

 இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை 0760-2

 இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால       0760-3

 இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று       0760-4

 

 112. போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீளப் போவர்   0761-1

 காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆப் போல்வர்       0761-2

 நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே 0761-3

 கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்       0761-4

 

திண்ணனாரின் சிவதரிசனம்

இப்பாடல்கள் பொருள் நிறைந்தவை என்பதொடு பேரிதும் தவாறப்புரிந்து கொள்ளப்டவை என்று படுகின்றது. சாக்கிராவத்தைக்கும் சொப்பான்வத்தைக்கும் உள்ள பெரும் வேறுபாடுகளை கருத்டில் கொள்லாதெ பேதமையால் வந்த பிழைகள் என்றே நினைக்கின்றேன்

ஒப்பு இல்லாத பேரன்போடு திண்ணனார் இறைவனைக் கண்டதும் அவர் கருத்தில் உதிப்பது, இறைவனது தனிமையே. கடுஞ்சின வேடர்களும் கரடி புலி சிங்கம் போன்ற கொடூர விலங்குகளும்  நிறைந்திருக்கும் ஓர் பெருங்காட்டில் எவ்வாறு சிவபெருமான் தனியனாக இருக்கின்றார்? என்று கேட்டு மனம் நோகின்றார்.

ஆயினும் பொருள் என்ன?

இங்கு திண்ணனாருக்குக் கிடைக்கின்ற சிவதரிசனம், தானே தனக்குத் தலைவனாகிய தன்னக்கு ஒப்பார் மிக்கார் யாரும் இல்லாத தனியனாகிய  மூல முதற்பொருளாகிய சிவனின் தரிசனம்! ஏனைய தெய்வங்களோடும் மற்றும் சிவகணங்களோடும் இல்லாது தன்னந் தனியனாக அனைத்தையும் கடந்து தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது தற்சொரூப நிலையில் இறைவனை தரிசிக்கின்றார் திண்ணனார் இங்கு

இதனை பிறருக்கு தன்னைக் காட்டும் தடத்தலக்கணத்திற்கு வேறாக தன் சொரூபலக்கண்ணத்தைக் காட்டுவது என்றும் கொள்ளலாம்

அப்படிப்பட்ட இறைவனுக்கு யாரோ பச்சிலை பூ தெள்ளிய நீர் ஆகிவற்றோடு  பூசை நடந்திருப்பதைக் கண்டு மனம் நொந்து யார் செய்தது இதை என்று நாணனைக் கேட்க , இது ஓர் பார்ப்பான் செய்ததாக இருக்கலாம் என்கின்றார்.  இங்கு ஆகம விதிப்படி செய்யப்படும் பூசையை பற்றியே கேள்வி எழுகின்றது.

திண்ணனாருக்கு இது உண்மையான பூசையல்ல.   உண்மையான பூசை என்பது இறைச்சியை  இட்டு பூசிப்பதுதான் என்கின்றார் < இவர் தமைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும்>

 இலையும் தழையும் பூவும் நீரும் படைப்பது உண்மையான படையல் அல்ல, இவற்ரொடு அல்லாது  தான் கொன்ற பன்றி இறைச்சிப் போன்று மாமிசம் படைக்க வேண்டும் என்று திண்ணனார் எண்னுகின்றார். மேலும் இறைவனை ஒர் கணமேனும் பிரிய ஒண்ணாவகை ஆரக் காதலில் கட்டுண்டு கிடக்கும் திண்ணனார் அந்த காதலின் வெளிப்பாடாகவே இறைச்சியை படைக்க வேண்டும் என்கின்றார். மேலும் மற்றவர் யாரையும் இடைத் தரகராகக் கொண்டில்லாது தானே தக்க இறைச்சித் துண்டைத் தேர்ந்து கொண்டு வந்து படைப்பேன் என்றும் நினைத்து அவ்வாறே செயல்படுகின்றார்: < நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே,கோதறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்>

ஊன் படைப்பதின் உட்பொருள்

பச்சிலையும் பூவும் நீரும் கொண்டு பூசிப்பது பார்ப்பான் அல்லது ஆகமவிதிப்படி செய்யும் சிவாச்சாரியார் தொழில். இவற்றோடு இறைச்சியையும் படைத்து பூசிப்பது ஆராக காதலின் அன்பன் தொழில்.  ஆக இறைச்சியைப் படைப்பது அதுவும் இங்கு தான் கொன்ற பன்றியின் இறைச்சியைப் படைப்பது என்பதின் பொருள் என்ன? சாதாரண மக்கள் கறுப்புசாமிக்கு படைக்கும் கருவாடு போன்றும் காளிக்கு ஆடுகளை வெட்டி பலியிடுதல் போன்றதுமாகிய ஓர் கொடுரச் செயலாகுமா?

அன்பே தானாகி ஓர் கன்று பசுவைப் பிரிய முடியாது அன்பினால் கட்டுண்டு கிடப்பது போல் ஆராக காதலின் சிவபத்தனாக விளங்கும் திண்ணனார் இறைவனுக்கு கருவாடு போன்ற மாமிசப் பொருட்களை படைக்கும் அற்ப பாமரன் அல்ல.   வேடனாக பிறந்திருந்தாலும் மிருகங்களை வேட்டையாடுதலையே தொழிலாகக் கொண்டிருந்தாலும், இந்த ஞனாக் கனா போதனைக்குப் பிறகு பக்குவத்தில் மிக மிக உயர்ந்து இறைவனை தற்சொரூப நிலையில் கண்டு அயராக் காதலில் கட்டுண்டு கிடப்பவர். இந்நிலையைல் பன்றி இறைச்சியைப் படைப்பது என்பதை ஓர் ஞனாக்கனா என்று கொண்டால் அதன் பொருள் என்ன?

வராக அவதாரம் திண்ணனார் எடுத்த ஓர் அவதாரம் திருமால் உதவியால். தானே ஓர் பன்றியாக அவதாரம் எடுத்து பெருங்காட்டில் திரிந்து அதன் வழி தன் அஞ்ஞான இருளைக் கெடுத்து எல்லா தெய்வங்கட்கும் அப்பால் அவற்றின் தலைவனாக தனக்கு யாரும் தலைவன் இல்லாது முழுமுதற் கடவுளாக சிவபெருமான் இருப்பதை இந்த வராக அவதாரத்தினால் அறிய வந்தவர், ஆழமான சிவஞானத் தெளிவு பெற்றவர்.

அந்நிலையில் இறைவனுக்கு படைகக்கூடியது தன்னையே தன் அகாங்காரத்தையே  ஆகும் என்றாக தான் எடுத்த ப்ன்றி அவதாரத்தினை இப்பொழுது தானே அதனை கொன்று கீழே கிடத்தி விட்டு சுதந்திரமாகி சிவபத்தனாக எழுந்திருக்கின்ற வேளையில், இறைவனுக்குப்  படைத்து இன்னும் சுத்தமாக உதவுவது தனது பழைய அவதாரமே யாகும், தன் உயிரின் பழைய வடிவமே யாகும்.

ஏன் இப்படி?

தனது பழைய பண்பின் உயிரை இறைவனுக்கே படைத்து விட்டால்தான் அது த்ன்னை மீண்டும் தாக்கி பக்குவத்தில் உயர முடியாது கீழே கிடக்குமா செய்யும்.

அந்தப் பார்ப்பானைப் போல அல்லது ஓர் சிவாச்சாரியார் போல  ஆகம விதிப்படி பூசை செய்வது வேறு, ஆறாத அன்பின் பெருக்கால தன்னையே தன் அகங்காரத்தையே பலியிட்டு அது தன்னை மீண்டும் பற்றா வகை சுத்தமாகுதலே உணமையான பூசை என்பதாக இங்கு உண்மையான பூசையின் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது.

நாமே இறைவனுக்கு நம்மையே பலியிட்டு பூசை செய்ய வேண்டும்.  இதனை ஓர் பார்ப்பான் நமக்காக  செய்ய முடியாது.

தொடர்ந்து இதனைப் பற்றி இன்னும் சிந்திப்போம்

தொடரும்

உலகன்

 

 

 

K. Loganathan

unread,
Sep 17, 2014, 8:23:53 PM9/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
அன்பர் திரு அரிசோனன அவர்கலே

மிக்க நன்றி, ஞானக் கனாவிவியல் என்பது இந்து சமயத்தை நலமே புரிந்துகொள்ளத் தேவைப்படும் ஓர் ஆய்வுத் துறையாகும். திருமூலர் போன்ற சித்தர்களால் பெரிதும் வளர்க்கப்பட்ட துறை. ஆனால் இன்று அது பரவ்லாக் அறியபடாதிருக்க, பல பிழையான கருத்துக்கள் பலகி விட்டன. குறிப்பாக பெரியபுராணத்தில் வரும் நாயன்மார்கள் பற்றி.

நேராக அர்த்தம் கொண்டு மாமிசம் படைப்பதெல்லாம் பொருந்துவதே என்ற்வாறு சிலர் கூறுவதெல்லாம்  அறியமையே யாகும்

அதேப் போலத்தான் தெய்வீக வன்முறை. அதன் பொருளே வேறு.

இவற்றைப்பற்றி எல்லாம் விளக்கங்கள் தொடரும்

உலகன்

2014-09-18 1:28 GMT+08:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//அந்நிலையில் இறைவனுக்கு படைகக்கூடியது தன்னையே தன் அகாங்காரத்தையே  ஆகும் என்றாக தான் எடுத்த ப்ன்றி அவதாரத்தினை இப்பொழுது தானே அதனை கொன்று கீழே கிடத்தி விட்டு சுதந்திரமாகி சிவபத்தனாக எழுந்திருக்கின்ற வேளையில், இறைவனுக்குப்  படைத்து இன்னும் சுத்தமாக உதவுவது தனது பழைய அவதாரமே யாகும், தன் உயிரின் பழைய வடிவமே யாகும்.//

மிக நல்ல விளக்கம்.  எப்பொழுதும் திருமுறைகளில் உட்பொருளைக் காணவேண்டும் என்பார்கள்.  எனவே, உட்பொருள் விளக்கம் கண்டு மெய்யறிவு கொண்டேன்.
வணக்கம்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Sep 20, 2014, 3:12:12 AM9/20/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 6

 

தமிழக சமயமே இந்து சமயம்

மெதுவாக ஆனால் உறுதியாக கண்ணப்ப நாயனார் கதை வழி சேக்கிழார் பெருமான் உணர்த்தும் அன்பினை வற்புறுத்தும் பத்தி இயக்கத்தின் தோற்றத்தை இயலபை வெளிப்படுத்தும் சமய வரலாறு வெளிப்படுகின்றது.  நையாயிகம் சார்ந்த வேதநெறிகள் புத்தம் சமணம் போன்றெல்லாம் அறிவின் செருக்காகிய அளவையியல் வழி மெய்ப்பொருள் யாதென்று நிறுத்தலாம் என்று செல்ல. ‘பிரமா கரணம் பிரமாணம்’ என்றவாறு இறைவனது அருளையெல்லாங் கண்டுகொள்ளாது அறிவின் துணையுடன் தக்க அளவைகள் உதவியோடு உண்மையை நிறுத்தி விடலாம் என்று சமயத்தை வளர்க்க அதனால் உணர்ச்சிகள் எனும் சுவைகள் (feelings, emotions)  என்பவை வளர்க்கப்படாது போக, திண்ணனார் கதை வழி எவ்வாறு பத்தி இயக்கம் அறிவோடு அன்பினையும் வற்புறுத்தி ஓர் மாபெரும் புரட்சியை செய்தது என்ற வர்லாறு மெதுவாக புலனாகின்றது.

இது நிச்சயமாக கடை சங்கத் தமிழ் வளர்த்த அகத்திணை வழக்கின் பெருங்கொடையாகும்.

கடைச் சங்க இலக்கிய அகப்பொருள் புறப்பொருள் பண்பாட்டின் உயர்நிலைப் பக்குவ எழுச்சியே பத்தி எழுச்சியாகும், இதுவே தேவாரத் திருமுறைகள் திவ்விய பிரபந்தங்கள் தோன்றுவதற்கு மூல காரணம.

சுவையுணர்வின் பண்பாடு( aesthetic culture)  அறிவுணர்வின் பண்பாட்டொடு நலமே வளர்க்கப்டவேதான் பத்தி எழுச்சியேத் தோன்றி சமணம் புத்தம் மீமாம்சம் போன்ற வேத நெறிகளை எல்லாம் வீழ்த்தி மிகத் தொன்மையான சைவமும் வைணவமும் மறுமலர்ச்சி கண்டு வீறுகொண்டெழுந்து பாரதத்தையே மீண்டும் இந்து தேசமாக்கியது

இன்று புத்தமும் சமணமும் ஏறக்குறைய வழக்கிழந்து கிடக்க, யாகத்தை மையமாக கொண்ட வேதநெறியும் ஒரு சில பிராமணர்களாலேயே போற்றப்பட, எல்லா மக்களுக்கு உரியதாய் கோயில்களை மையமாக் கொண்ட பத்தி நெறியே  இந்து சமயமாக திகழ்வதற்குக் காரணம் கடைச் சங்க அகத்திணை இலக்கையத்தின் காரணமாக எழுந்த தமிழக பத்தி இயக்கமே யாகும். தமிழர்களின் சமயமே இன்று உலகெங்கும் பரவி இருக்கும் இந்து சமயமாகத் திகழ்கின்றது.

 

அன்பு எனும் மெய்பத்தியும் தன்னையேப் பலியிடலும்

 

அறிவ ஆதிக்கம் செருக்கினை வளர்க்க அன்பின் ஆதிக்கம் தன்னையே பலியிட்டு அகங்காரத்தை துடைத்தொழிக்கும் பண்பினது என்பது திண்ணனார் கதையில் வரும் பன்றி இறைச்சி படைத்து பூசை செய்வதின் உள்ளர்த்தம் நமக்கு விளக்குகின்றது. இலை தழைகள் பூக்கள் தூநீர் போன்றவற்றைக் கொண்டு பார்ப்பான் செய்யும் பூசை ஓர் உணர்வற்ற மரபு சார்ந்த  உயிரற்ற யந்திரச் சடங்கு. தனது பன்றி அவதாரத்தின் அந்த வராகத்தின் இறைச்சியையே படைத்து சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்வது, தன்னையேத் தந்து அகங்காரத்தையே பலியிட்டு பூசை செய்வது.

எங்கே ஆழமான அன்பிருக்குமோ ஆங்கேயே தன்னையே பலியிடலும் இருக்கும். ஓர் தாய அன்பு மீதூர தன் குழந்தையின் நலத்திற்கு தன் உயிரையே பலியிடத் தயங்க மாட்டாள். பொதுவாக ஓர் உயிர் தான் நேசிக்கும் பிற்தோர் உயிரின் நலத்திற்கு தன் உயிரையே கொடுக்கவும் தயங்காது.

இது தான் தூய ஆழமான மெய்யான அன்பின் பண்பு. கடைச் சங்கத் தமிழ் இந்த உறவின் மெய்ய்பாட்டில் பண்பாட்டை பெரிதும் பல நூற்றாண்டு காலமாக வளர்த்திருக்க, இந்த பண்பாட்டிற்கு புறம்பாக வந்த அறிவின் செருக்கின் சமயங்களாகிய நையாயிக அளவை வாத புத்தம் சமணம் மீமாம்சம் போன்றவற்றை வீழ்த்தி கீழேத் தள்ளி வீறுகொண்டெழுகின்றது மெய்பத்தியின், தூய ஆழமான அன்பின் சைவ வைண பத்தி இயக்கம்

அந்த புரட்சியை தொடங்கி வைத்த தொன்மையான நாயன்மார்களில் ஒருவராக திண்ணனார் விளங்க சேக்கிழார் பெருமான் அவர் தம் கதையைக் கூறும் வகையில் பத்தி இயக்கத்தின் மூலத்தையும் நலமே விளக்குகின்றார். இறைவன் உண்டெனக் கொண்டாலும் அன்பின் அவனை ஆழ நேசித்து தன்னையே தன் அகங்காரத்தையே பலியிட்டால் அன்றி மோட்சம் இல்லை என்பதை உனர்த்தும் வகையில் கதை செல்கின்றது.

 

இனி இந்த மெய்யான பூசை என்பது ஓர் பார்ப்பான் செய்வது அல்ல மாறாக தானே தன்னையே பலையிட்டுச் செய்வது என்பது இன்னும் எவ்வாறு விளக்கம் பெருகின்றது என்பதைக் காண்போம்.

 

114. முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்       0763-1

 பின்பு வந்து அணைய முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி       0763-2

 அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்       0763-3

 பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார்   0763-4

 

 115. காடனும் எதிரே சென்று தொழுது தீக் கடைந்து வைத்தேன்       0764-1

 கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்      0764-2

 மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று       0764-3

 நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்       0764-4

 

 116. அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு       0765-1

 வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான்      0765-2

 இங்கும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏகப் போந்தான்       0765-3

 நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்       0765-4

 

 117.  என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்      0766-1

 முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்   0766-2

 வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க 0766-3

 இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு   0766-4

 

 118. கோலினில் கோத்துக் காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ       0767-1

 வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச்       0767-2

 சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை   0767-3

 ஏலவே கோலிக் கூட அதன் மிசை இடுவார் ஆனார்       0767-4

 

 19. மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே       0768-1

 அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்       0768-2

 பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு    0768-3

 தரும் பரிசு உணரான் மற்றைத் தசை புறத்து எறியா நின்றான்       0768-4

120.  தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்று இதனைத் தீர்க்கல்       0769-1

 ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு 0769-2

 மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டைக் கானில்       0769-3

 ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார்       0769-4

 

 121 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்    0770-1

 ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி       0770-2

 மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த    0770-3

 தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார் 0770-4

 பத்தியின் பித்து

மேலே வரும் பாடல்கள் அறிவின் துறைகள் எல்லாம் அடங்க எவ்வாறு அன்பின் துறைகளே திண்ணன் அகத்தே மேம்பட்டு நிற்க, அதனால் ஆகும் அகமாற்ரங்கள விளக்குவதாக அமைகின்றன.

முதலில் இறைவன் பால் காதல் மேம்பட்டு ஓர் பித்தனே போல ஆக ஆங்கு பிறதுறை ஆர்வம் எல்லாம் கெடுகின்றது< முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர்> முன்பு இருந்த பல துறைகல பால் இருந்த வேட்கைகள என்னால் அந்த பன்றி அவதாரம் எடுத்து முடிவில் அதனைக் கொன்றதோடு முடிகின்றது. இது அன்பின் ஓர் இலக்கணமாகும். யாதன் பால் ஆழமான அன்பு வளர்கின்றதோ அதனால் சிந்தனை எல்லாம் நினைவு எல்லாம் அதன்பாலேக் குவிந்திட, ஏனைய துறைகள் மேல் மறதி வந்துவிடுகின்றது. இது ஓர் வகையான பற்று நீங்கள் அல்லது பாசங்களிலிருந்து நீங்குதல் ஆகும்.

காலம் மறத்தல்

அடுத்ததாக யார் ஆரக் காதலில் கட்டுண்டு கிடக்கின்றார்களோ அவர்கட்கு காதலின் மூலப்பொருள் அருகே இருக்கும்போது காலவுணர்வு இல்லாது போகும் என்பதால் பிற பிற காரியங்களைப் பற்றிய நினைவே தோன்றாது. திண்ணனின் வேட்டையை முடித்து வீடு திரும்புவது தாமதம் ஆகிவிட, அதற்கு காரணம் திண்ணன் உச்சிகோயிலில் இருக்கும் இறைவன்பால் கொண்ட காதலே யாகின்றது. கீழ்வரும் சொற்களால் சேக்கிழார் பெருமான் இதனை நலமே உணர்த்துகின்றார்.:< அங்கிவர் மலையில் தேவர் தம்மைக் கண்டு அணைத்துக் கொண்டு,  வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும்பு என்ன நீங்கான்>

இங்கு ‘வங்கி’ என்றால் ஓர் கரை போன்றதோர் வேலி. அதனை இறுகப் பற்றிக்கொண்டு   ஓர் சிறிதும் நீங்கவே மறுக்கும் வல் உடும்பு போல் இறைனைப் பற்றிக்கொண்டு ஒரு கணமேனும் விட்டு விலகா அன்பு முற்றிய உயிரோடு உயிர் கலந்த நிலையாகும்

இந்நிலையில் சுட்டுக்கால வுணர்வின் உலகை மறத்தலும் குறிப்புக்கால வுணர்வின்( intentinal time)  தன்னை மறத்தலும் நடப்பதின் காலவுணர்வு இல்லாது போகின்ற அகச் சூழல் பிறக்கின்றது.

மேலும் சில இலக்கணங்களை சேக்கிழார் பெருமான் விளக்குகின்றார்: தம சாதி குலம் பொறுப்பு என்பன வெல்லாம் இல்லாது பொகின்றனவாம் < நம்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு> என்பதொடு ஒப்பும் பல கூறுகின்றார்.

மால் கொள்ளல்

இனி திண்னன் தான் ஆழ நேசிக்கும் இறைவனுக்கு கடும் பசி இருக்குமென்று  கருதி அவனுக்கு பன்றி இறைச்சியின் சிறந்த பகுதிகளையே நன்றாக வாட்டிப் படைப்பதிலேயே கருத்தாக இருக்க, இது மால் கொண்ட நிலை அதாவது ஓர் மயக்க நிலை என்றே பிறருக்குப்படுகின்றது. இதனை இவ்வாறு கூறுகின்றார் சேக்கிழார் பெருமான் < என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்      0766-1 முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்> தன்னை மறக்கின்றார். தன் கடமையை மறக்கின்றார். மேலும் சுற்றம் சூழல் அனைத்தையும் மறந்து இறைவனது நினைவாகவே அவருக்கு படைக்க வேண்டிய படையலைப் பற்றி நினைவாகவே இருக்கின்றார். இதுவொரு சாக்கிரம் இழந்த வேறொரு சொப்பனாவத்த போன்ற அவத்தையில் இருப்பது போன்ற ஓர் நிலையாகும்.  சுய நினைவு இழந்து இறைவன் நினைவாகவே இருப்பது. இதுபோன்ற உளநிலகைள் ஆழமான காதலில் வருவனவே யாகும்;

உடன் வந்தாரும் திண்ணனின் இந்த தீவிர பத்தியைக்கண்டு யாதும் செய்ய முடியாது தேவராட்டியிடமே எடுத்துச் சொல்லி பரிகாரம் காண வேண்டும் என நினைத்து திண்ணனை தனியாக விட்டுவிட்டு அகல திணணனும் அதனை எல்லாம் அறியாது இறைவனுக்கு உணவு படைப்பது  பற்றியே சிந்தித்தவாறு இருக்கின்றார்,

திண்ணனின் இறைச்சி அர்ச்சனை:

இனி எவ்வாறு திண்ணன் தன் படையலை தயாரிக்கின்றார் என்பதையும் விளக்குகின்றார் சேக்கிழார் பெருமான் ; < மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே 0768-1அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்>

மிக சிறப்பாக தேர்ந்த பன்றி இறைச்சியை நன்றாக வாட்டி வாயில் அதுக்கி அதனை விடாது வாயில் கொண்டு படையலுக்குச் செல்கின்றான், மற்றவர்கள் அனைவரையும் மறந்து. கீழ் வரும் பாட்டு பல சிறப்புகளைக் கொண்டது

<121 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்    0770-1

 ஊன் அமுது அமைத்துக் கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி       0770-2

 மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த    0770-3

 தூ நறும் பள்ளித் தாமங் குஞ்சி மேல் துதையக் கொண்டார்>

இங்கு கல்லை என்பது இலைகளை கோர்த்து செய்யப்பட்டத் தட்டு. தான் சுவைத்து மகிழ்ந்து நல்லது எனத் தேர்ந்த வாட்டிய பன்றி இறைச்சியை இந்த கல்லையில் வைத்து ஆனால் சிவலிங்கத்தை நீராட்டுவதற்கு மா நதி நன்னீரை தன் வாயிலேயே அடக்கிகொண்டு கொய்த மலர்கள் மாலையாக தன் முடிமேலேக் கிடத்தி உலகை எல்லாம் மறந்து மீண்டும் குன்றேறி இறைவனுக்கு பூசை செய்யப் புறபப்டுகின்றார்.

இங்கு வாட்டிய இறைச்சியின், வாயில் நிரப்பிய தூநீர் ஆகியவற்றின் சின்னமப் பொருள் என்ன? கனவில் இவை வந்தால் அவற்றின் பொருள் என்ன?

பன்றி இறைச்சி என்பது தான் எடுத்த பன்றி அவதாரமும் அதனைக் கொன்று அதன் கூறுகளாக விளங்கும் இறைச்சியை வாட்டலும் என்னவாக இருக்க முடியும்?

தனது ஞானத் தேடலில் சிந்தனைக் கூறுகளில் மத்தியக் கூறுகளைத் தேர்ந்து அவற்றை நன்றாக தீயிட்டு வாட்டி அதாவது தீய்த்து இன்னும் சுத்தமாக்கி அதனையே இறைவனுக்குப் படைத்து  அவற்ரை தன்னிடமிருந்து முற்றாக போக்குவதகாகும். இது பூர்வ கன்மங்களை எல்லாம் ஞானத் தீயில் வாட்டி எரித்து பின் இறைவனுக்குப் படைத்து முற்றிக்லும் தொலைத்தல் ஆகும்.

வாயினில் சுத்த நீர் நிரைத்து அதன் வழியே சிவலிங்கத்தை நீராட்டுவது என்பது, ஈரமாகிய அன்பே நிரைந்த சொற்களால் இறைவனைப் போற்றிப் பாராட்டித் தொழுவதாகும்.

மெய்யடியார் பூசை

ஓர் தொழிலாகச் செய்யும் ஓர் பார்ப்பானின் அல்லது ஓர் சிவச்சாரியாரின் பூசை வேறு,  மெய்யடியார் ஒருவர். தனது அகங்ககரத்தையே அதற்கு காரணமாக இருக்கும் பூர்வ கன்மத்தையே வாட்டி ஞானத் தீயில் பொசுக்கி இறைவனுக்குப் படைத்து தான் சுத்தமாகுதலே மெய்யடியார் பூசையாகும். அதனைத் தான் திண்ணனார் செய்ய விருக்கின்றார். அதுபொழுது ஒப்புக்கு மனனம் செய்து ஆனால் ஓர் யந்திரமாக பூசகர்கள்  ஓதும் மந்திரங்கட்கு வேறாக சாதாரண மொழியில் ஆனால் அன்பெனும் ஈரம் நிறைந்த சொற்களால் தான் அறிந்த மொழியில் உள்ளம் நெக்குருக தான் அறிந்து முறையில் இறைவனைப் போற்றுவதே மெய்யடியார் பூசை என்பதாக பூசையைப் பற்றிய ஓர் விளக்கத்தையும் நாம் காண்கின்றோம் இங்கு.

இன்னொன்றையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

மெய்யடியார் பூசைகள் பெரும் பெரும் கோயில்களில்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. அகத்து ஆங்காரத்தையே பலயிட்டு அன்பு மீதூர ஆரக் காதலின் நெக்குருக தனக்குத் தெரிந்ததை ஈர நெஞ்சோடு இறைவனை எவ்வடிவில் எங்கு தொழுதாலும் அதுவே மெய்யான உணமையான பத்தியின் தொழுகை ஆகின்றது. அதன் வழி அகங்காரம் கெட மெய்யான அகச்சுத்தமும் விளைகின்றது.

சேக்கிழார் பெருமானின் கருத்தும் இதுவே என்றும் தெரிகின்றது.

தொடரும்

உலகன்

 

K. Loganathan

unread,
Sep 23, 2014, 8:36:11 AM9/23/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 7

 

சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தை ஞானக்கனாவியல் கண் கொண்டு அலசிட, அதன் நுட்பங்கள் பல வெளிப்ப்ட, என் உள்ளத்தில் ஓர் வருத்தமும் எழுகின்றது. இத்தனை ஆண்டுகளாக இந்த அற்புதமான ஞானக்களஞ்சியத்தை சொற்களஞ்சியத்தை படித்து ஆராயாது விட்டேனே என்னே என் மடமை என்ற வருத்தம் தான் அது.  தெய்வ அருளின்றி இத்தகைய நூற்கள் எழா வென்பது சேக்கிழார் பெருமானின் சொல்லாட்சியும் அவற்றின் வழி வெளிப்படுகின்ற ஆழமான ஞானமும் சிந்தனை புரட்சியும் உறுதி செய்கின்றன.

ஓர் மனிதனால் இத்தனைத் துறை அறிவுகளை அழகிய தமிழில் இவ்வளவு அழகாக கூறவும் முடியுமா என்று வியக்கின்றேன். தமிழ் மொழியின் தனி திறத்தையும் வளமையையும் கண்டு வியக்கின்றேன்,

எவ்வாறு சோழ அரசர்கள் வீறுகொண்டெழுந்து உலகையே ஆண்டார்களோ அதேப் போலத்தான் சேக்கிழார் பெருமான் போன்ற சைவப் புலவர்களும்,  தங்களது சொல்வன்மையால் ஞானப் புலமையால் இன்றும் உலகை ஆள்கின்றார்கள்

இனி நம் ஆய்வினைத் தொடர்வோம்.

மேலே உண்மையான பத்தியின் இலக்கணத்தைக் கண்டோம். எங்கே ஆழமான அன்பு இருக்கின்றதோ அங்கு தான் காதலிக்கும் உயிருக்காக பொருளுக்காக தன்னையே பலியிடல் நடக்கும் என்றும் இதுவே திண்ணனார் எனும் வேடரின்  சிவபத்தியில் வெளிப்படுகின்றது என்றும் சேக்கிழார் பெருமான் காட்டியுள்ளார்.

இனி அடுத்தடுத்து எவ்வாறு மெய்யான பூசை என்பது  மந்திரங்களை ஓதி பார்ப்பானும் சிவாச்சாரியர்களும் செய்கின்ற பூசைகள் அல்ல மாறாக தன்னையே தன் அகங்காரத்தையே பலியிட்டு இறைவனுக்குப் படைத்து எச்சில் நீராகிய ஈரமான அன்பே வெளிப்பட்டு நிற்கும் சொற்களில் போற்றி பாராட்டுவது என்று கண்டோம்.

 

இதன் வளர்ச்சியையே அடுத்துக் காணவிருக்கின்றோம்.

 

கீழ் வரும் பாடல்கலைப் பாருங்கள்.

122 தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் 0771-1

 புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி      0771-2

 இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி   0771-3

 நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்       0771-4

 

 123. இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின்       0772-1

 முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்       0772-2

 வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை       0772-3

 விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார்       0772-4

 

 124. தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி       0773-1

 மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச்   0773-2

 சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை       0773-3

 இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து       0773-4

 

 125. கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு       0774-1

 அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்    0774-2

 பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால    0774-3

 அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்       0774-4

 

 126. அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்       0775-1

 மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்       0775-2

 இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு   0775-3

 பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்       0775-4

 

 127. அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்    0776-1

 வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளாச்       0776-2

 செவ்விய அன்பு தாங்கித் திருக் கையில் சிலையும் தாங்கி   0776-3

 மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்      0776-4

 

 128. சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும் 0777-1

 கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை     0777-2

 ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே 0777-3

 நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார்      0777-4

 

இறைவனது பசி

 இறைவன் திண்ணாருக்கு ஓர் கற்சிலை அல்ல, ஓர் சித்திரம் அல்ல, மந்திரத் திருமேனியும் அல்ல, தன்னைப்போல ஓர் உயிர், தனக்கு இருக்கும் பசி போல அந்த இறைவனுக்கும் பசியுண்டு என்று எண்ணி < இனிய எம்பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார்>,.

ஆனால் இந்த பிரபஞ்சமேத் தானாக  இருக்கும் இறைவனுக்கு எப்பேற்பட்ட பசி அதுவும் படைக்கின்ற பதமான வாட்டிய இறைச்சியும் உண்டு மகிழ்ந்த பிறகு?

இறைவனது பசி ஆணவச் செருக்கால் அலமந்துத் திரியும் ஆன்மாக்களை சுத்தம் செய்து பதப்படுத்தும் வகையில்  ஆங்காரத்தை உண்ணும் பசியே பசியாக இருக்கின்றது

மேலும் என்ன பசி?

மலர்கட்குப் பசி மஞ்சன நீருக்குப் பசி. ஆனால் இவற்றின் பொருள்தான் என்ன?

திண்ணனார் இறைவன் உணவின்றி நீரின்றி இளைத்துவிட்டான் என்று நினைத்து வெற்பின் உச்சி சென்று  அங்கு < முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில் வளைத்த பொற் செருப்பால் மாற்றி>  என்பதொடு < வாயின் மஞ்சன நீர் தன்னை விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார்> என்கின்றார் ஆழமான பொருண்மைகள் பல விளங்குமாறு.

மலர் என்பன சிந்தனையிலே தோன்றும் அழகு தூயமை போன்றவை. ஓர் விருட்சம் தழைத்து செழித்து வளர்ந்த பிறகே தக்க பருவம் வரும் போது அழகிய வண்ண வண்ன மலர்களை வெளிபடுத்தும். மாந்தர்களும் இவ்வாறே நல்ல பக்குவப்பட்ட பிறகே அழகிய தூய்மையான சுத்தமான சிந்தனைகளை வெளிப்படுத்துவர். நின்மலனாகிய சுத்தத்தின் சுத்தமாகிய தூயமையின் தூய்மையாகிய இறைவன் இப்படிப்பட்ட தூய்மைகளையே விரும்புவான். அப்பட்டிப்பட்டவற்றிற்கு பசியோடு காத்திருப்பான்.

திண்ணனார் அவற்றை தன் செருப்புக் கால்கொண்டு அணிவித்தாலும் அவை அழகிய சுத்தமான தூய்மையான பொருட்களே என அவற்றை நலமே ஏற்ருகொள்கின்றான். இங்கு புற சுத்டம் அல்ல அக  சுத்தமே விளங்குகின்றது.

அதேப் போல வாயிலிருந்து உமிழும் மஞ்சன நீரும். இதன் பொருளை சேக்கிழார் பெருமான் நன்றாகவே உணர்த்தியருளுகின்றார். ‘அன்பு உமிழ்வார் போன்று” திண்ணனார் உமிழ்ந்தார் எனும் போது அதன் பொருள் விளங்குகின்றது. இறைவனை போற்றுதற்கு மந்திரங்கள் வேதாமக சுலோகங்கள் எல்லாம் தேவையில்லை, நெஞ்சிலிருந்து வரும் அன்பான பாமர சொற்களே போதும். உள்ளன்போடு ஈர நெஞ்சத்தோடு உளம் நெக்குருக எம்மொழியில் பிதற்றினாலும் அதுவே இறைவனுக்கு செய்யக்கூடிய உணமையான அர்ச்சனையாகும்.

ஓர் தொழிலாக ஓர் கடமையாக விதிப்படி மந்திரங்களை ஓதி நேரப்படி பூசைகள செய்யும் பார்பனர்களும் சிவாச்சாரியர்களும் நாணி தலை குனியும்படி உண்மையான அர்ச்சனை என்ன என்பதை சேக்கிழார் நலமே உணர்த்தி ஞானம் புகட்டுகின்றார்.

இங்கு இன்னொரு பொருண்மையும் இருப்பதாகத் தெரிகின்றது. எச்சில் பரிமாற்றம் ஆழமான உயிரோடு உயிர் கலந்த காதலர்கள் செய்வர் என்பதொடு அது அமுதமாகவே மாறி அளப்பரிய இன்ப சுகத்தத் தரும்  இங்கு அந்நியம் இன்மை பொருளாகின்றது. அதுபோலத்தான் இங்கு திண்ணனார் இறைவனோடு அந்நியமின்மையின் அத்துவித அன்பில் திகழ்கின்றார்

பதமான இறைச்சி இன்னமும் வேண்டும்

இறைவனுக்கு படைத்த இறைச்சி மலர்கள் போலனறி நீர்போல் அன்றி தனிச் சிறப்புடையது. அது வேறொரு பொருள் உடையது என்பதாக சேக்கிழார் பெருமான் குறிப்பாய் உனர்த்துகின்றார். யாது அப்பொருள்?

சேக்கிழார் பெருமான் சொற்களைக் காண்போம்

திண்ணனார் தான் நன்றாக உருசிபார்த்து தேர்ந்து எடுத்து வாயில்  அதுக்கி< பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்> என்று விண்ணப்பித்த கையோடு < அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் மன்னனார் திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்  இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு பன்னெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்> என்கின்றார் சேக்கிழார் பெருமான் அழகிய கவிதை நயத்தோடு.

இனி நல் ஊன் அமுது இன்னமும் வேண்டும் என்ற சொற்களால் திண்ணனார் எவ்வாறு இறைவனது திருவுள்ளத்தை புரிந்துகொண்டிருக்கின்றார் என்பதை நலமே சொற்படுத்துகின்றார் சேக்கிழார் பெருமான்.

மேலே நாம் விளம்பியவாறு  பனறி அவதாரத்தைக் கொன்று அதன் இறைச்சியை பக்குவ[ப்படுத்தி வாட்டி வதக்கி படைத்த ஊன் அமுதை இறைவன் நலமே ஏற்றுக்கொண்டு அமுது செய்தாலும், அந்த பசி அடங்காதாம். இவ்வாறு திண்ணனார் புரிவு அமைந்துள்ளது, அப்படி என்றால் என்ன?

 இறைச்சிப் படைப்பது தன் தூய சிந்தனைக்கு மேலாக நல்ல ஈரமான சொற்களுக்கு மேலாக தன் உயிரையே, தன்னையே தன் அகங்காரத்தையேப் படைத்து தன் ஆணவச் செருக்கையெல்லாம் போக்கி  ‘தான்’ எனும் மமதையைக் கெடுப்பதாகும்

இது ஒருவகையான தீக்கையாகும். இறைவன தீண்ணனாரின் வராக அவதரத்த்தை கொன்று தீய்த்து அதனை உண்டு அமுது செய்து திண்ணனாருக்கு சிவதீக்கை செய்வதாகும். அது இப்பொழுதுதான் தொடங்கி இருக்கின்றது. இந்த ஆணவச் செருக்கழிப்பும் அதனால் வரும் ஆணவமலத் தொந்தனையை அந்த அநாதியே ஆன்மாவைச் செறிந்திருக்கும் அந்த பொல்லாத ஆணவத்தை தீய்த்து இல்லாது போக்குவது இன்னும் தொடரவிருக்கும் ஒன்று. வீடுபேறு அருளப்படும் வரை அது தொடரும்.

அதைத்தான் சேக்கிழார் பெருமான் குறிப்பா இங்கு உணர்த்தி அடுத்து வரவிருக்கும் திருவிளையாடல்கள் எத்தன்மையாக இருக்கும் என்பதையும் குறிப்பாக உணர்த்தி அருளுகின்றார்.

இனி துண்ண்னார் இவ்வாறு செய்வத்ற்கேல்லம் இன்னொரு காரணமௌம் உண்டு. இறைவான் எங்கோ தூறத்தில் சிலைஅகள் வழியாக உலகைன் வழியாக வெல்லாம் ஊய்த்துணரும் ஓர் தூரப் பொருள் அல. திண்ணனாருக்கும் இறைவன் மிக அணுக்கமாக நேராக காட்சித் தந்த உயிர்ப்பொருள் இதனை கீழ்வரும் சொற்களில் சேக்கிழார் பெருமான் வெளிப்படுத்தி அருளுகின்றார்.

திண்ணனார் இறைவனை நேராகத் தரிசித்துக்கொண்டே இரவினைக் கழித்தாராம் : < ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார்>

திண்ணனாருக்கு நுதலியப் பார்வை அருளப்பட, இறைவனை மந்திர வடிவில் தரிசிக்கும் பேறும் பெற்றவர் என்கின்றார் இங்கு. பின் இதற்கு மேல் என்ன? வீடுபேறு தானே?

இவற்றையெல்லாம் அடுத்து காண்போம்

தொடரும்

உலகன்  

 

 

 

 

 

K. Loganathan

unread,
Sep 25, 2014, 12:39:19 AM9/25/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 8

 

திருவிளையாடல் நலமேத் தொடர்கின்றது. திண்ணனார் செய்த அர்ச்சனை பூ சொரிந்து வாயிலிருந்து நீர் உமிழ்ந்து வாட்டிய பன்றி இறைச்சியை வைத்து அதாவது தூய சிந்தனைகளோடு ஈரமான அன்பு நிறைந்த சொற்களோடு தன் உயிரையே பலியிடு வண்ணம் பொருவில் அனபு காட்டி திண்ணார் செய்து அகன்ற பூசைக்குப் பின், ஆகம விதிகள் மாறாத வகையில் மரபு அர்ச்சனை செய்ய வருகின்றார் சிவகோசாரியார் எனும் பெருந்தவ முனிவர்.

 

முறைப்படி செய்யும் ஆகம வழிபாடு

135. எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்   0784-1

 கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்   0784-2

 மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு   0784-3

 செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்     0784-4

பண்டைய காலத்திலிருந்து மரபுகளை பாதுகாக்கும் சீர் ஆகமத்தில் விளக்கப்பட்ட பூசனைக்கு ஏற்ப எவ்வித திரிபும் பிழையும் இன்றி, அன்றே கொய்த மலரொடும் புனலொடும் நீலகண்டத்து மலை மருந்தாகிய சிவபெருமானை வழிபட வருகின்றார் அதனை ஓர் தவமாகவே செய்யும் முனிவர் சிவகோசாரியார் எனும் சிவாச்சாரியர்.

136. வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு     0785-1

 சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு    0785-2

 வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி    0785-3

 இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் 0785-4

 

 137.  மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்      0786-1

 தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து   0786-2

 போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்     0786-3

 ஆவதோ எனப் பதறி அழுது விழுந்து அலமந்தார்   0786-4

ஆனால் இறைவனக்கு திண்ணனார் செய்த பூசையின் எச்சங்களாக வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு பதறி அகல மிதித்து ஓடி “அபச்சாரம், அபச்சாரம்’ என்று அலறிவாறு ‘ யார் இதனை செய்திருப்பார்கள்?, புனிதம் கெட்டதே’ என்று மனம் நொந்து கேட்கின்றார். யாரோ ஓர் வேடர் தான் செய்திருக்க வேண்டும் அதுவும்  எதற்கும் அஞ்சா வேடர் ஒருவனே கள்ளமாக வந்து யாரும் அறியாவகை இந்த அபச்சரத்தை செய்திருக்க வேண்டும் என்று புலம்புகின்றார், ஈசனுக்கு இப்படிபட்ட அர்ச்சனைகள் ஆவதோ என்று அரற்றி அழுது விழுந்து நோகின்றார்

இங்கு ‘அனுசிதம்’ என்ற சொல் வருகின்றது. இது “பொருந்தாதது, தவறு குற்றம் தீமை’ என்றெல்லாம் பொருள்படும் ஓர் வடமொழிச் சொல் என்ற தெரிகின்றது.

ஆகம விதிப்படியே  பூசனைகள் நடக்க வேண்டும் எனும் நியதி வர, அதற்குப் புறம்பாக செய்யப்ப்டுவது ‘குற்றம். தவறு’ என்றெல்லாம் ஆகின்றது.

 138. பொருப்பில் எழுஞ் சுடர்க் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்       0787-1

 இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்       0787-2

 செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்       0787-3

 விருப்பின் ஒடும் திருமுகலிப் புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்       0787-4

விடியற்கால பூசனை காலந் தாழ்ந்தாலும் பரவாயில்லை உடன் அந்த சிவகோசாரியர் அந்த ‘அசுத்தங்களை’ எல்லாம் துடைத்துப் போக்கி கோயிலை அல்லது பீடத்தை சுத்தமாக்கி பின் தன் உடம்பையும் சுத்தமாக்க மலையடி வந்து திரு முதலி எனும் ஆற்றில் மூழ்கி குளித்து மீண்டும் திருகோயிலிற்கு விரைகின்றார்.

இங்கு ‘சுத்தம்’ என்பது பீடத்தில் விதிக்குப் புறம்பானவை இல்லாதிருப்பது என்பதொடு உடம்பின் சுத்தமும் ஆகௌம்

 

 139. பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து       0788-1

 தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி 0788-2

 வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை      0788-3

 முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்       0788-4

 

 140. பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்       0789-1

 துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள்    0789-2

 அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு 0789-3

 தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார்    0789-4 

இது சேக்கிழார் எழுதும் சிவகோசாரியார் சிந்தனை ஓட்டம்.   ஆகம விதிப்படி பூசனையை இந்த வேடர் செய்யாது போக, பழுது அல்லது தீட்டு அல்லது குற்றம்(அபச்சாரம்) புகுந்தது என்று  அவை எல்லாம் தீர பவித்ரமான அல்லது தெய்வீகமான பூசை செய்வதற்கு ஆகம விதிப்படி ‘முழுது முறையின்” முடித்து இறைவனைத் தொழுதார் என்றும் மேலும் மறை மொழி மந்திரங்களை ஓதி துதித்து சிவபெருமானை வணங்கி பின் மன நிறைவோடு சினமெல்லாம் தணிந்து அந்த முனிவர் தனது தபோவனம் சேர்ந்தார் என்கின்றார் சேக்கிழார் பெருமான்

ஆகம பூசையும் அன்பின் பூசையும்

திண்ணனார் கதை வழி சேக்கிழார் பெருமான் உணர்த்த வருவதே அன்பின் பூசனையே வீடுபேற்றௌ ஈட்டத் தரும் ஆகமவிதிப்படி செய்யப்படும் பூசையல்ல என்பதே.

ஆகம விதிகள் தோன்ற அங்கு ‘அனுசிதம்’ அல்லது ‘அபச்சாரம்’ எனும் குற்றம் முறைகேடு தவறு என்பனபோன்ற கருத்துக்களும் பூசனைத் தொடர்பாக எழுகின்றதை சேக்கிழார் பெருமான் நலமே உணர்த்துகின்றார்.  சோழப் பேரரசின் முதலமைச்சராக இருந்த சேக்கிழார் அரசியலை வாழ்ந்தவர், ஆகவே அதனை நலமேத் தெரிந்தவர். இவ்வாறு ஆகம பூசனையை விளக்குவதின் வழி என்னதான் உணர்த்த வருகின்றார்?

ஓர் ஆன்மாவிற்கு இறைவானுக்கும் இடையே உள்ள ஓர் தனிப்பட்ட உறவு எவ்வாறு அரசியல் ஆக்கப்ப்டுகின்றது என்பதை நலமே விளக்குகின்றார்.

விதிகள் இருக்கத்தான், சட்டங்கள் இருக்கத்தான்  அவற்றை மீறுதல் எனும் குற்றங்கள் இருக்கின்றன. பூசனைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற முறையில் அரசியல் ஆக்கப்பட, விதிமீறல்கள் எனும் அபச்சாரங்கள் வழக்கிற்கு வருகின்றன.

சிவகோசாரியார் கவலை மன வருத்தம் துக்கம் துயரம் வேதனை எல்லாம், இந்த விதிமீறலைப் பற்றியேத் தவிற, திண்ணனார் போன்ற வேடர்களின் பொருவில் அன்ப வழி இறவனைன் பசி போன்றவற்றைப் பற்றி அல்ல, மெய்பத்தியின் அல்ல.

ஆகம பூசைகள் ஞானக்குருடுகளின் பூசனை

ஆகமவிதிகளே நிரைந்திருக்கும் உள்ளத்தின்  சிவகோசாரியர் ஓர் ஞானக் குருடு, மரபுகளின் சிறைக் கைதி, விதிகளின் அடிமை. சுத்தம் தூய்மை என்பதெல்லாம் விதிப்படி ஒழுகுவதிலேயே அடங்கி விடும் அன்பின் தூய்மை சுத்தம் என்பதற்கெல்லாம் அங்கு இடமில்லை, ஓர் தபோ வனத்தில் தரப்படுகின்ற பயிற்சியின் வழி மந்தரங்களை மனனம் செய்து ஒப்புவிக்கின்ற உயிரற்ற யந்திரங்களாகவே சிவச்சாரியார்கள் செயல்படுகின்றனர்.

தூய அனபின் மெய் பத்தியின் எழு செயல்கட்கு சட்டத் திட்டங்கள் விதிமுறைகள் என்பது யாதுமில்லை, ஆகவே அனபின் வழி எழுக்கின்ற பூசனகட்கு அனுசிதம் என்றோ அபச்சாரம் என்றோ யாதுமில்லை. யாண்டு விதிகள் கொண்டுவரப்பட்டு இப்படித்தான் பூசனை இருக்க வேண்டும் இந்த மந்திரங்களை இந்த மொழியில் தான் ஓதவேண்டும் , இந்த குடிபிறப்பில் உள்ளவர்கள்தான் இப்படிப்பட்ட பூசனைகள் செய்ய வேண்டும் என்றவாறு பூசனைக்ள்ள் அரசியல் ஆக்கப்ப்டுகின்றதோ ஆங்கு இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையே உள்ள மெய்யன்பு சிதைக்கப்படுகின்றது.

ஆகமங்கள் பத்தி இலக்கியங்களும் அல்ல பாமரர்களின் ஈரச் சொற்களும் அல்ல. அவை அரசியல் சாசனங்கள், மாந்தர்கள் தனிப்பட்ட முறையில் இறைவனோடு ஒன்றித்து தான் அறிந்த முறையில் உறவாடி மகிழ்வதை தடை செய்ய வந்த அரசியல்வாதிகளின் சட்டத் திட்டங்கள்.

இறைவனுக்கு உகந்தது இந்த ஆகம விதிகள் அல்ல மாறாக பாமரத்தின் உண்மையான அன்பின் வெளிப்பாடும் அதனோடு வரும் பூசனைகளுமே என்பதே திண்ணனார் கதை வழி சேக்கிழார் பெருமான் நமக்கு உணர்த்தும் ஞானத் தெளிவு ஆகும்.

எப்படி என்பதை அடுத்துக் காண்போம்

தொடரும்

உலகன் 

K. Loganathan

unread,
Sep 25, 2014, 3:33:50 AM9/25/14
to MEYK...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com
Dear Puru

Thank-you, but I cannot follow your thoughts. Do you mean the VarNasrama Dharma originally not in SumeruTamil or even in the Vedas, came to being there as part of Hindu culture only because there came to be sociopolitical intervention in the various ritual practices in the Temples?

Please expand a bit on your views as I am really curious as to how the VarNa system came into being in the Vedas where as a matter of fact the Vedas do not promote it.

Loga

On Thu, Sep 25, 2014 at 3:27 PM, purushotha...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com> wrote:
 

I think the question asked by Loga regarding varnasram is answered here or extended from this story

__._,_.___
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Oct 4, 2014, 7:19:41 AM10/4/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 9

 

சிவகோசாரியர் என்னும் தபோ வனத்து முனிவராகிய சிவாச்சாரியாருக்கும் படிப்பறிவில்லா பாமர வேடனான திண்ணனுக்கும் இறையன்பில் என்ன வேறுபாறு, ஏன் திண்ணன் படைத்த சுட்ட பன்றி இறைச்சியும் பிறவும் விதிப்படி இல்லாத அபசாரங்கள் அல்லது சிதைவு எனும் அனுசிதம் ஆகிட, முடிவில் ஏன் திண்ணனுக்கே இறைவன் வெளிப்பட்டு வீடுபேறு நல்குகின்றான்?

 

சேக்கிழார் பெருமான் இக்கதையின் வழி இந்த அற்புதமான ஞானக்கனா வழி கூற வரும் மெய்ஞான விளக்கத்தையும் இன்னும் சிறிது காண்பம்.

 

கீழே வரும் சேக்கிழார் பெருமான் பாடலகளில் திண்ணனாரின் காதல் முதிர்ச்சியைக் காண்கின்றோம். இதன்வழி மெய்பத்தியின் அர்ச்சனைக்கும் ஆகமவிதிப்படி நடக்கும் பூசைக்கும் என்னதான் வேறுபாடு என்பது தெளிவாகின்றது, மிக அழகாக. இதன் வழி சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உணமையின் அநாதிபொருளியலும்  நல்லத் தெளிவு பெறுகின்றது,

 

50.  ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்       0799-1

 ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்      0799-2

 ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்       0799-3

 தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார்     0799-4

 

 151. இப் பரிசு திரு அமுது செய்வித்துத் தம்முடைய       0800-1

 ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்    0800-2

 எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி    0800-3

 அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார்      0800-4

 

 152. மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்       0801-1

 தாம் முயலும் பூசனைக்குச் சால மிகத் தளர்வு எய்தித்      0801-2

 தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால்   0801-3

 ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால் 0801-4

 

 153. நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின்       0802-1

 ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு       0802-2

 பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக் 0802-3

 காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்     0802-4

 

 154. முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் 0803-1

 இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத்       0803-2

 தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற   0803-3

 அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?       0803-4

பன்றியொடு பிற மிருகங்கள் வேட்டை

தொடக்கத்தில் காட்டுப் பன்றிகளையே வேட்டையாடி கொன்று இறைச்சியை வாட்டி குடுமிதேவர்க்கும் படைத்து மகிழ்ந்தவர் இப்பொழுது காட்டில் திரியும் மான் மரை கலை கடமை போன்ற மிருகங்களையும் வேட்டையாடி இறைச்சியை தேனொடு கலந்து தீயில் பதமாக வாட்டி முன்பு போல் இலைகளால ஆன கல்லை எனும் தட்டில் படைத்து வாயிலிருந்து உமிழ்ந்த நீரால அபிசேகம் செய்து இறைவனுக்கு அமுது படைகத்து அர்ச்சிக்கின்றார்.

இவ்வாறு செய்யச் செய்ய அன்பு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை, இதனால் காதல் பித்தேறி இரவிலும் உறங்காது பகலில் வேட்டையாடி இறைவனுக்கு தவறாது ஊன் அமுது படைத்து மகிழ்வதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தார். இதனை சேக்கிழார் பெருமான் இவ்வாறு மொழி படுத்துவார்< எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி 0800-3அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார்>

இங்கு நாம் தனித்துக் கருத வேண்டியது இவ்வாறு திண்ணனார் விடாது அயர்வின்று வேட்டையாடி பல்வகை ஊன் உணவுகளைப் படைத்து படைத்துப் பூசிக்க, திண்ணனாருக்கும் இறைவன் அன்பு எனும் பத்தி அதிகரிக்கின்றதேத் தவிர குறையவில்லை,

ஊன் அமுது படைக்கப்படைக்க ஏன் இறைபத்தி கூடிக்கொண்டே போகவேண்டும்? அப்படி என்றால் ஊன் அமுது படைப்பது என்றால் என்ன? சாக்கிராவத்தையில் வருவது போன்று விலங்களை வேட்டையாடி கொன்று அறுத்து வாட்டி படைப்பதா? அப்படி என்றால் எல்லாருமே எளிதில் காணவரும் மிருகங்கலை எல்லாம் கொன்று இறைவனுக்குப் படைத்து வீடுபேறு அடைந்து விடலாமே?

அப்படி முடியாது. ஊன் அமுது படைப்பதின் பொருள் வேறு. அது சொப்பனாவத்தைச் செயல். ஆனால் அதன் பொருள்தான் என்ன?

மிக ஆழமான சைவச் சித்தாந்தியாகிய சேக்கிழார் இதனையும் நலமே விள்க்காது விடவில்லை,

 

ஊன் உணவு படைப்பதின் மெய்ப்பொருள்

இவ்வாறு வேடன் திண்ணனார் விடாது ஊன் உணவு படைத்தவாறு இருக்க அங்கு வரும் தபோவனத்து சிவகோசாரியர் அதனைக் கண்டு மனம் நொந்து தளர்வு எய்தி < தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால் 0801-3ஆமுறையில் அர்ச்சனை செய்து அந் நெறியில் ஒழுவாரால்>. அன்பினை வளர்க்க உதவிய ஊன் படையல் ஆகம விதிப்படி நோக்க அதற்குப் புறம்பாக அமைய அதனை நீக்கி ஆகமங்களில் விதித்தபடியே அர்ச்சனை செய்து தன் கடமையைச் செய்து வந்தாராம்.

என்ன செய்வதென்று அந்த சிவாச்சாரியருக்கும் தெரியவில்லை, திண்ணனார் தந்தையாருக்கும் தெரியவில்லை. யாதொவோர் அசாதாரணமான ஒன்று நடக்கின்றது, திண்ணனாரை பழைய இயல்புநிலைக்குக் கொண்டு வர்முடியவில்ல.  சேக்கிழார் பெருமான் இதனை இவ்வாறு கூறுவார்:< பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக் 0802-3காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்> திண்ணன் தந்தையாராலும் அவரை பழைய வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை, அந்த தபோ வனத்து சிவாச்சாரியாராலும் அந்த ஊன் அர்ச்சனையை நிறுத்த முடியவில்லை,

அப்படி என்றால் எப்படிப்பட்ட பூசை அது?

நடப்பது இறையருளால் மெய்யாகும் தீக்கையாகும். பக்குவம் வந்திட இறைவன் ஆட்கொண்டு திண்ணனாருக்கு இறைவன் செய்யும் தீக்கை யாகும் இது. இது< இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத் 0803-2தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற> .  நடப்பது ஓர் தீக்கை. அங்கு நல்வினை தீவினை எனும் கன்மத்தளையும் ஆணவம் கன்மம் மாயை எனும் மலம் மூன்று போக்கப்பட்டு செம்பு பொன்னாகுமாறு உடம்பு பொன்னாக சுடருமா வேத்தியல்  நடக்கின்றதாம்.

இதனால் ஆவதென்ன?

ஆன்மாவும் அதனைத் தாங்கி வரும் உடம்பும் சுத்தமாக < அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?>

அன்பும் விலங்கு குணங்களும் .

அகக் கசடுகள் எல்லாம் போக இறைவனைப் போல அன்பே தானாக எழுகின்றார் திண்ணனார். அதனல்தான் இரவும் பகலும்  இறைவனையே நினைத்து பூசை செய்கின்றார் அதாவது இறைவனது தீக்கைக்கு ஆளாகின்றார்.

பல விலங்களைக் கொன்று  இறைவனுக்குப் படைப்பது என்பது ஆன்மாவாகிய கருங்காட்டில் அகக் கசடுகளாகிய கீழான விலங்கு குணங்களை --- குரோதம் வெறுப்பு பரநிந்தனை அவமதிப்பு எள்ளல் கொல்லல் தொலைத்தல் விரட்டல் அடிமை படுத்தல் அடக்கல் ஒடுக்கல் போன்ற எல்லா அன்பிற்குப் புறம்பான விலங்கு குணங்களையெல்லாம் வேட்டையாடி கொன்று ஞானத் தீயில் வாட்டி மீண்டும் அந்த விலங்குக்ள் அகத்தே எழாவகை இறைவனுக்குப் படைத்து விடுவதே உண்மையான அர்ர்சனையாகும்.

இறைவன் அகத்திருந்து முடுக்க, திண்ணனார் பெருங்காடாகிய  தன் உள்ளத்திலேயே அல்லும் பகலுமாகத் திரிந்து அங்கே ஒளிந்துகிடக்கும் தீய எண்ணங்கள் என்னும் விலங்குகளை தேடிப் பிடித்து வேட்டையாடிடி கொன்று வாட்டி தீய்த்துப் பொசுக்கி இறைவனுக்குப் படைத்து தன் அகத்தே  இல்லாது போக்குவதே மெய்யான அர்ர்சனை யாகின்றது.

இந்த ஊன் அர்ர்சனையில்தான் அகத்துச் செறி ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களும் தொடைத்து ஒழிக்கப்பட ஆனமா பரிசுத்தமாகி அன்பே தானாக எழுகின்றது.

இது ஆகம விதிப்படி செய்யபப்டும் பூசையல்ல, மாறாக இறைவனே நடத்தும் சிவதீக்கையின் வெளிப்பாடாகிய பூசை.

இதுவே மெய் பூசை.

இதன் விரிவை அடுத்துக் காண்போம்

தொடரும்

உலகன்

 

 

 

K. Loganathan

unread,
Oct 4, 2014, 9:14:12 AM10/4/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
 டாக்டர் கணேஷ் 

 மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர். பலர் கண்ணப்பரின் அன்பினையும் அவரது அர்ச்சனையும் தவறாகப் புரிந்துகொண்டு அன்பிற்குப் புறம்பான செயல்களை அர்ர்ச்சனை பேரில் செய்கின்றார்கள்,

ஞானக்கனாவியல் கண்கொண்டு பார்த்தால்தான் உட்பொருளும் உண்மையும் விளங்குகின்றது.

மிருகங்களைக் கொன்று இறைச்சியை வாட்டி இறைவானுக்குப் படைத்தல் என்பது அகத்தே இருக்கும் விலங்குகளை வேட்டையாடிக் கொன்று இறைவனுக்குப் படைத்து சுத்தமாகுதல் என்ற பொருளை சேக்கிழார் பெருமான் மிக அழகாக மும்மலங்களோடும் தீக்கையோடும் தொடர்பு படுத்தி விளக்குகின்றார்.

இது சைவசித்தாந்தம் தரும் மெய்பொருளாகும். இதுவே சரியான பொருளுமாகும்.

உலகன்

2014-10-04 20:35 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

அன்புள்ள முனைவர் உலகன்,
தங்கள் கருத்தைச் சுருங்கச் சொன்னால், இறைவனுக்கான   பூசையில் அன்பே முக்கியமாகிறது. மாணிக்கவாசகரும் 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்  ...' எனப் பாடி  இதனைக் காட்டுகிறார்.
கண்ணப்பர் கதையைச் சொல்பவர் சிலர், கடவுளை எப்படியும் கும்பிடலாம் என்று எண்ணுகிறார்களே தவிர உயர்ந்த அன்பையும் அதன் தேவையையும் உணர்வதில்லை. இது இன்றைய  நிலையாக உள்ளது.
தங்கள் எழுத்து தொடரட்டும்.
க. கணேசலிங்கம்


From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>; Tolkaa...@yahoogroups.com; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; vall...@googlegroups.com
Sent: Saturday, 4 October 2014, 7:19
Subject: [MEYKANDAR] Re: பெரிய புராண ஞானக்கனாவியல்-2

__._,_.___

Posted by: "Dr.K.Ganesalingam" <kganes...@yahoo.com>
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 4, 2014, 11:06:42 AM10/4/14
to vallamai, MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com
அருமையான விளக்கங்கள் ஐயா.
கனவோடு இணைப்பதுதான் புரியவில்லை. 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-10-04 18:44 GMT+05:30 K. Loganathan <k.ula...@gmail.com>:

 மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர். பலர் கண்ணப்பரின் அன்பினையும் அவரது அர்ச்சனையும் தவறாகப் புரிந்துகொண்டு அன்பிற்குப் புறம்பான செயல்களை அர்ச்சனை பேரில் செய்கின்றார்கள்,

ஞானக்கனாவியல் கண்கொண்டு பார்த்தால்தான் உட்பொருளும் உண்மையும் விளங்குகின்றது.

மிருகங்களைக் கொன்று இறைச்சியை வாட்டி இறைவானுக்குப் படைத்தல் என்பது அகத்தே இருக்கும் விலங்குகளை வேட்டையாடிக் கொன்று இறைவனுக்குப் படைத்து சுத்தமாகுதல் என்ற பொருளை சேக்கிழார் பெருமான் மிக அழகாக மும்மலங்களோடும் தீக்கையோடும் தொடர்பு படுத்தி விளக்குகின்றார்.

இது சைவசித்தாந்தம் தரும் மெய்பொருளாகும். இதுவே சரியான பொருளுமாகும்.

உலகன்

From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>

பெரிய புராண ஞானக்கனாவியல்-2
 
கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்
 
இடுகை 9
 
சிவகோசாரியர் என்னும் தபோ வனத்து முனிவராகிய சிவாச்சாரியாருக்கும் படிப்பறிவில்லா பாமர வேடனான திண்ணனுக்கும் இறையன்பில் என்ன வேறுபாறு, ஏன் திண்ணன் படைத்த சுட்ட பன்றி இறைச்சியும் பிறவும் விதிப்படி இல்லாத அபசாரங்கள் அல்லது சிதைவு எனும் அனுசிதம் ஆகிட, முடிவில் ஏன் திண்ணனுக்கே இறைவன் வெளிப்பட்டு வீடுபேறு நல்குகின்றான்?

கீழே வரும் சேக்கிழார் பெருமான் பாடலகளில் திண்ணனாரின் காதல் முதிர்ச்சியைக் காண்கின்றோம். இதன்வழி மெய்பத்தியின் அர்ச்சனைக்கும் ஆகமவிதிப்படி நடக்கும் பூசைக்கும் என்னதான் வேறுபாடு என்பது தெளிவாகின்றது, மிக அழகாக. இதன் வழி சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உணமையின் அநாதிபொருளியலும்  நல்லத் தெளிவு பெறுகின்றது,

நடப்பது இறையருளால் மெய்யாகும் தீக்கையாகும். பக்குவம் வந்திட இறைவன் ஆட்கொண்டு திண்ணனாருக்கு இறைவன் செய்யும் தீக்கை யாகும் இது. இது< இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத் 0803-2தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற> .  நடப்பது ஓர் தீக்கை. அங்கு நல்வினை தீவினை எனும் கன்மத்தளையும் ஆணவம் கன்மம் மாயை எனும் மலம் மூன்று போக்கப்பட்டு செம்பு பொன்னாகுமாறு உடம்பு பொன்னாக சுடருமா வேத்தியல்  நடக்கின்றதாம்.
இதனால் ஆவதென்ன?
ஆன்மாவும் அதனைத் தாங்கி வரும் உடம்பும் சுத்தமாக < அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?>
அன்பும் விலங்கு குணங்களும் .
அகக் கசடுகள் எல்லாம் போக இறைவனைப் போல அன்பே தானாக எழுகின்றார் திண்ணனார். அதனல்தான் இரவும் பகலும்  இறைவனையே நினைத்து பூசை செய்கின்றார் அதாவது இறைவனது தீக்கைக்கு ஆளாகின்றார்.
பல விலங்களைக் கொன்று  இறைவனுக்குப் படைப்பது என்பது ஆன்மாவாகிய கருங்காட்டில் அகக் கசடுகளாகிய கீழான விலங்கு குணங்களை --- குரோதம் வெறுப்பு பரநிந்தனை அவமதிப்பு எள்ளல் கொல்லல் தொலைத்தல் விரட்டல் அடிமை படுத்தல் அடக்கல் ஒடுக்கல் போன்ற எல்லா அன்பிற்குப் புறம்பான விலங்கு குணங்களையெல்லாம் வேட்டையாடி கொன்று ஞானத் தீயில் வாட்டி மீண்டும் அந்த விலங்குக்ள் அகத்தே எழாவகை இறைவனுக்குப் படைத்து விடுவதே உண்மையான அர்சனையாகும்.

K. Loganathan

unread,
Oct 4, 2014, 8:58:21 PM10/4/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
 திரு வினைதீர்த்தான் அவர்களே

 மிக்க நன்றி. இனி இடையிடையே கனவு ஆராய்ச்சுயையும் சேர்த்து எழுதுகின்றேன்.  சேக்கிழார் பெருமான் கனவு ஆராய்ச்சியின் பல நுட்பங்களை தெரிந்தவ்ராக இருக்கின்றார். அவர் காலத்தில் கனவு ஆராய்ச்சி மேலோங்கி இருந்திருக்க வேண்டும். மக்களும் ந்லமே அறிந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் இல்லையேல் இந்த வடிவில் பெரிய புராணம் எழுந்திருக்காது என்பதொடு திருமுறைக்ளில் ஒன்றாக சேர்க்கப்பட்டிருக்வும் முடியாது.

உலகன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

K. Loganathan

unread,
Oct 5, 2014, 9:39:56 PM10/5/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 10

 

 நாம் தொடர்வதற்கு முன் ஓர் கேள்வி எழுந்துள்ளது. கதையில் எந்தப் பகுதி கனவு எந்தப் பகுதி நனவு என்பதைப் பற்றியது. சேக்கிழார் பெருமானின் வர்ணனை இதை எளிதில் பிரிதறியத் தரவில்லை, இதனை ஊக்கித்தே பெற வேண்டி இருக்கின்றது, கனவு ஆய்வில் பட்டோருக்கு இது ஓரளவு எளிதான வித்தையே. ஆனால் அத்தகைய ஆய்வில் ஈடுபடாதோருக்கு சற்று சிக்கலான விசயமே யாகும். ஆயினும் அன்பேத் தானாக வரும் திண்ணன் வேட்டையாடி பல மிருகங்களைக் கொன்று இறைச்சியை வாட்டி இறைவனுக்குப் படைக்க படைக்க, அன்பு இன்னும் அதிகரித்துக்கொண்டே பொயிற்று எனும் போது, மிருக வேட்டை சாக்கிராவத்தை அல்ல, மெய்யாக காட்டில் மிருகங்களை வேட்டையாடிய கொலைத் தொழில் அல்ல, மாறாக ஞானக் கனாவில் நடந்த ஓர் தீக்கையே அது என்று தெளிவாகின்றது. மும்மலங்களை வாட்டிப் போக்குவது என்று சேக்கிழார் பெருமான் வெளிப்படையாக்வே விளகக்மும் தருகின்றார். அனல் நிகழ்ச்சிகலை வர்ணிக்கும்போது எவ்வாறு ஓர் கனவினைக் காணும் போது அது உண்மையே என்ற உணர்வோடே நாம் கனவு காண்கின்றோமோ அவ்வாறே நிகழ்ச்சி வர்ணனையும் அமைகின்றது. தொகுத்து ஆழப் பார்க்கும் போதே அது சொப்பனாவத்தை என்று விளங்குகின்றது.

 

ஆயினும் சில சமயங்களில் இது கனவு என்று வெளிப்படையாகவும் கூறப்படுகின்றது. அதனை இப்பொழுது இங்கும் காணலாம்

 

கனவில் சிவபோதனை

 

கீழ் வரும் இரண்டு பாடல்களில் இறைவன் எவ்வாறு ஞானக் கனவில் தோன்றி ஞானபோதகம் செய்கின்றார்ன் என்பதை வெளிப்படையாகவே சேக்கிழார் பெருமான் வர்ணிக்கின்றார்

155 அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப   0804-1

 மன்னிய ஆகமப் படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு   0804-2

 என்னுடைய நாயகனே இது செய்தார் தமைக் காணேன்     0804-3

 உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என   0804-4

 

 156. அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே 0805-1

 மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி   0805-2

 வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்    0805-3

 நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள் என்று 0805-4

சிவகோசாரியார் கோயில் சந்நிதியில்  ஆகம விதிப்படியே அர்ச்சிக்கும் அவர் கண்களுக்கு அபச்சாரமாக திண்ணன் எனும் சிவபத்தன் அவன் அறிந்த நெறியில் அர்ச்சித்ததுப் போக,  கண்டிக்க அவர் யார் என்றும் அறியாது கிடக்க மனம் நொந்து இறைவனே திருவருள் கொண்டு இந்த அபசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று இறைஞ்ச அன்றிரவு உறக்கத்தின் போது இறைவன் கனவில் < மின் திகழும் சடை மவுலி வேதியர்> என இறைவன் தோன்றி  திண்ணனார் செயலை எல்லாம் விளக்கி ஓர் அழகிய ஞானபோதனையே நிகழ்த்துகின்றார்.

இங்கு நாம் உடன் உணர வேண்டியது: அருள் உள்ளவருக்கு இறைவன நேரே கனவில் தோன்றி ஞானபோதகம் புகட்டுவான் என்றும் இப்படி அருள் இல்லாதாரையே சாத்திரம் ஓதலே வழி, படிப்பே பெருந்தவம் என்றவாறு விரட்டுவான் நேராக போதிக்கமாட்டான் என்பதாம். இதனால் படிப்பறிவே இல்லாத காடனும் வேடனும் குயவனும் வண்ணானும் இன்னும் இதனைப் போன்று கல்லாது மேலும் படிப்பினை மையப்படுத்தி வாழும் பார்ப்பனர்கள் கற்றறிந்த புலவர்களாகள்  போன்று இல்லாதோரும் பெருஞ் சிவஞானிகளாக  நேரான  கனாவழி எழும் சிவபோதத்தால் உயர முடியும் என்பதைத்தான்.

சொப்பனாவத்தை  இறைவனது நேர் போதனைக்கு ஏற்ற ஓர் அவத்தை என்பதை அறியாதாரே படிப்பாவத்தையே ஞானாவத்தை என்றவாறு எண்ணி சாத்திரப் பேய்களாகத் திரிவர் என்பதாம்

இனி இறைவன் கனாவழி நடத்தும் சிவஞானபோதம்தான் என்ன? இதனை ஒவ்வொரு பாடலாய்க் காண்போம்

 

 157. அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்       0806-1

 அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும் 0806-2

 அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்   0806-3

 அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார்       0806-4

புறத்தே நோக்காது அவன் அகத்தை உள்ளத்தை நோக்கினால் அவன் வடிவு எல்லாம் < நம் பக்கல் அன்பு> என்பதொடு அவன் அறிவின் வேகம் எல்லாம் <நமை அறியும் அறிவு> என்றும் இவ்வாறான உளநிலையில் ஆகமவிதிகட்கு வேறுபட்டதாகவும் மாறுபட்டதாகவும் இருந்தாலும்<அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம்> என்கின்றான் இறைவன். இறைவனை ஆழ நேசித்தல் அதன் காரணமாக அவனை மிகத் தெளிவாக அறியவிரும்புதல் என்பனவே இறைவனது அளவுகோல். அவற்றைக் கொண்டே அவன் ஆன்மாக்களை அளக்கின்றான். மாந்தர்கள தம் அறிவின் செருக்கால் படைக்கப்ப்ட்ட அரசியல் சார்புடைய அதிகார மாட்சியின்  ஆகம விதிகள் போன்ற விதிகள் இறைவனுக்கு அளவுகோல்கள் அல்ல,

 

158. பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்

அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்

விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த

செருப்படி அவ்விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.

மேலும் தான் ஆவேசித்து குடுமித் தேவர் எனும் சிவலிங்க வடிவில் பிரதிட்டையாகி நிற்கும் கருவறையில் அதனை சுத்தம் செய்யும் பொருட்டு அகத்தே அன்பே பெரும் காற்றொடு வரும் புயல்போன்ற வெள்ளமாக எழுந்து நிற்க ஆங்கு அவன் செருப்படி பட்டாலும் அது இளம்பருவ ஓர் சேயின் மெல்லிய பாதங்களின் மிதியை விட சுகமாக இருக்கின்றதாம். இங்கு அளப்பரிய அன்பே விதிப்படி இல்லாத ஓர் செயலும் இறைவனால்  போற்றும்படியான ஒன்றாகின்றது.

 

159. உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்

பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்

ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப்

பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்.

மேலும் பொதுவாக தீட்டு எனப்படும் வாயுமிழும் எச்சிலோடு கலந்த புனல் புனிதமாம். அதுவும் கங்கை நீர் மற்றும் புனித தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தூய நீரைவிட  புனிதமாம். எப்படி? எல்லாம் நெஞ்சுருக அன்பு மீதுற ஒழிவின்றி யாண்டும் அவன் உருவெல்லாம் பெருகி அவன் முகமெங்கும் ஒழுகுதலால் அவன் வாயுமிழ் எச்சில் நீறும் புனிதமாம் அளப்பரிய மெய்யன்பு எச்சில் நீரையும் குற்றம் யாதுமில்லாப் புனித நீர் ஆக்கிவிடுகின்றது! ஒருவனின் உயிரோடு உயிர்கலந்த உறவின் திருமகள் வாயுமிழ் எச்சிலும் அமுதம் ஆவதுபோல.

 

160. இம்மலைவந் தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே

மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்

செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை

எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா

இனி வேடன் தன் சிரசில் செருகிய மலர்களை சொரிதல் எவ்வாறு ஏற்புடைத்தாகும்? தூய்மை கெட்டவை அன்றோ? அவை ஏறகனவே அணியப்பட்டவை அன்றோ? எனும் போது, இறைவனுக்கு இத்தகைய மலர்களும் இலைகளும் அயனொடு திருமால் மற்றும் ஏனைய தேவர்கள் எல்லாம் விரும்பி புனை எல்லா மலர்களையும் விட சிறந்தனவாம், புனிதமாம்.  காரணம் அவன் அன்பு நிறைந்த உடம்பில் விரிந்தன போல் அன்பினையேத் தாங்கி வருதலால் அவை எனக்கு ஒவ்வுவதாம் என்கின்றான் இறைவன்!

 

161. வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்

நையுமனத் தினிமையினால் நையமிக மென்றிடலால்

செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்

எய்யும்வரிச் சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய.

இனி யாகம் செய்யும் வேதநெறியோர் இடும் அவியில் வரும் அசுவம் போன்ற மிருகங்களின் இறைச்சியைவிட, இந்த வேடன் வாட்டி மென்று சுவைத்து படைக்கும் ஊன் படையல் இறைவனுக்கு இனியவாம். ஏன் அப்படி?  வேத வேள்வியில் அன்பில்லை, யாதாவது யாசித்தல் தான், வரம் வேண்டி அரசர்கள் செய்யும் அசுவமேதயாகம் போன்ற வேள்விகளே அவை. இங்கு அதிகாரம் ஆற்றல் செல்வம் வேட்டல் போன்றவையே. ஆனால் இங்கு அன்பே மேவந்து நிற்க, அந்த அன்பின் காரணமாகவே இறைச்சி பதமாக வெந்துவிட்டதா என்று அறியவே முன்கூட்டியே வாயில் மெல்லல் அதுக்கல் போன்றவை நடத்தலின். அவை இறைவனுக்கு இனிய படையல் ஆகின்றன.  ஆடம்பர வேள்விக்கும் அடக்கமான அன்பே மேவந்த நிற்கும்  ஊன் படைய;ஆகிய தன் மும்மலங்களை அறுத்தல் என்பதற்கும் உள்ள வேறுபாடு மீண்டும் அன்பே ஆகின்றது. வெள்ளப்பெருக்கென அகத்திலிருந்து எழும் அன்பே காரணமாகின்றது

 

162. மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்

இன்பமொழித் தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்

முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ

அன்பில்நினைந் தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல.

இனி திண்ணன் ஓர் வேடன், பாமரன். அவனுக்கு வேத மந்திரங்கள் தெரியாது.  மாமுனிவர்கள்  புனைந்த ஞானங்கள் நிறைந்த தோத்திரங்கள் தெரியாது. சிவாச்சாரியார்கள் ஆழமான சிந்தனைகளை அகப்படுத்திய சொற்களைக் கொண்டும் மந்திரங்களைக் கொண்டும் புனை பத்ததிகள் யாதும் தெரியா. ஆயினும் அகம் நெகிழ தூய அன்பால் நிறைந்த கனிவான பாமரச் சொற்களே அதுவும் என்னைத் தவிர்த்து வேறு யாதையும் வேண்டியும் போற்றியும் பாடா சாதாரண பாமரச் சொற்களே நல்ல மிக நல்ல என்கின்றான் இறைவன்!     

 163.  உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்       0807-1

 எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்       0807-2

 மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து       0807-3

 புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார்     0807-4

இவை எல்லாம் சாதாரண சொற்கள் அல்ல. இறைவன் எந்த சான்றுமின்றி இதை சொல்ல்வில்லை என்றும் சேக்கிழார் பெருமான் கூறி மறுநாள் ஓர் திருவிளையாடல் நடத்தி திண்ணனின் அளப்பரிய உயிரொடு உயிர் கலந்த அன்பினை, உள்ளம் நெக்குருக நெஞ்செல்லாம் நிறைந்து இறைவனது நலத்தைத் தவிற வேறு யாதையும் கருதா திண்மையின் உண்மையை அந்த சிவாச்சாரியார் நேரில் காணுமா செய்ய இருப்பதாகக் கூறுகின்றான்.

இதனோடு திண்ணனார் கதை ஓர் அழகிய முடிவிற்கு வருகின்றது. உணமையான பூசை தான் அர்ச்சனை தான் யாது என்பதை நாம் நலமே சிந்துக்குமாறு செய்து இந்த புராணம் முடிகின்றது.

எப்படி என்று அடுத்துப் பார்ப்போம்

தொடரும்

உலகன்

 

 

 

 

 

 

K. Loganathan

unread,
Oct 7, 2014, 11:24:52 PM10/7/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 11

 

 சமய நெறி வகைகள்

 

 உலக நெறிகளில் அதுவும் சமயம் சார்ந்த நெறிகளில் பொதுவாக மூன்று வகை நெறிகள் உண்டு: அன்பு நெறி அறிவியல் நெறி அதிகார நெறி என்றவாறு மூன்றுண்டு. இங்கு ஆய்வு நெறியாகிய அறிவியல் நெறி அன்பு நெறிக்குள் அடங்கும் அதிகார நெறிக்கும் உதவும். ஆயினும் அது தனித்து நிற்க்கக்கூடியது மாகும். இங்கு திண்ணனார் கதையில் காட்டப்படும் நெறி மும்மலங்களத் துடைத்தொழித்து சுத்தமாகி அன்பே தானாக நிற்கும் ஆய்வு சார்ந்த அன்பு நெறி யாகும். இங்கு ஆய்வு  என்பது அணுத்டுவம் தரும் மும்மலங்கள் தொலக்கைப்பட அன்பு தானே வளரும் என்ற உண்மையாகும். பார்ப்பன நெறி என்றும் சிவாச்சாரியர் நெறி என்றும் வேதநெறியும் ஆகம நெறியும் விதிப்படி செல்லும் நெறிகள் என, அங்கு ஆய்வு நெறி அதிகார நெறிக்கு அடங்கி யாது வேதங்கள் ஆகமங்கள் போன்றவற்றால் விதிக்கப்படுகின்றதோ அவையே சரி உபசாரமே அபசாரம் அல்ல என்றும் மாறானவையே அனுசிதம் அபச்சாரம் என்றும் அல்லது தப்பு தவறு குற்றம் தகாதது என்றெல்லாம் பகரப்பட்டு ஒதுக்கப்படுவனவாகும். இது அரசாட்சி சார்ந்த அதிகார நெறியாகும் வேதங்கள் ஆகமங்கள் போன்றவை மனிதனால் இயற்றப்பட்டாலும் அது மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு அவை இறைவனால் பகரப்பட்டவை அப்புருஷகம்   சுயம்பு என்றெல்லாங்  கூறப்ப்ட்டு மறுக்க முடியாத பிரமாணங்கள் ஆக்கபப்டுகின்றன.

இங்கு திண்ணனார் அனபு பிள்ளை லோகாசாரியார்  எமும் வைணவ ஆச்சாரியார் கூறும் பிரபத்தி போன்று தோன்றும். சிரீ வசன பூஷணம் எனும் வைணவ இரகசிய கிரந்தத்தில் அல்லது நூலில் இவ்வாறு கூறுவார்:

 

சூத்திரம் 23: பிரபத்திக்குத் தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகார நியமமும் பல நியமமும் இல்லை

 

திண்ணனார் அளப்பறிய அன்பு நெறி பட்டவர் என்பதின் இவ்வாறான எந்த நியமனங்களும் விதிகளும் அதிகாரங்களும் இல்லை யென்றாலும், பிரபத்தியாகிய இறைவனையே முற்றிலும் சரணடைதல் என்பதில்லை, இவர் அகத்தே செறிந்திருக்கும் தீய குணங்கள் துகள்கள் மலங்கள் தூசுகள் போன்ற விலங்குகளை வேடையாடி கொன்று ஞானத்தீயில்  பொசுக்கி  வாட்டி இறைவனுக்கேப் படைத்து சுத்தமாகின்றார். இது சரணாகதி அல்ல. சுயத்தின் கழற்சி ஊழ்ச்சி வினைகள் ஆகும்

 

சேக்கிழார் பெருமான் கருத்தில் ஆய்வு சான்ற அன்பு நெறியே நெறி அதுவே உயர்ந்தது இறைவனுக்கு ஏற்றது அறிவு சார்ந்த ஒன்றாயுனும் அதிகார நெறி அல்ல, வேதாகம பிரமாண நெறி அல்ல என்று விளக்குகின்றார், திண்ணன் ஓர் பார்ப்பான் ஓர் சிவாச்சாரியார் என்ற மூவரையுங் கொண்டு வந்து ஓர் நல்ல ஞானபோதகம் நடத்டுகின்றார்.

 

எப்படி என்பதை கீழ்வரும் பாடல்களில் காணலாம்

 

168.  இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்       0812-1

 மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை முறை தீங்கு செய்ய 0812-2

 இத் தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்   0812-3

 அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில்       0812-4

 

 169. அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு       0813-1

 திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று   0813-2

 துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்   0813-3

 வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் 0813-4

 

 170. வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர் 0814-1

 சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக்   0814-2

 கொந்தவர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப் 0814-3

 பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்       0814-4

 

 17.1 விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது       0815-1

 ஒழிந்திடக் காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள     0815-2

 அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா   0815-3

 எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் 0815-4

 

 172. வாளியுந் தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா       0816-1

 மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ? விலங்கின் சாதி       0816-2

 ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ? அறியேன் என்று    0816-3

 நீளிருங் குன்றைச் சாரல் நெடிதிடை நேடிச் சென்றார்       0816-4

 

குருதியை நிறுத்த முடியாது தவித்து முடிவில்:

 

177 மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக் 0821-1

 கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டும்       0821-2

 இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச் செயல் என்று பார்ப்பார்       0821-3

 உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்       0821-4

 

 178.  இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்       0822-1

 அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று   0822-2

 மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்       0822-3

 முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப   0822-4

 

 179. நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்       0823-1

 குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி    0823-2

 நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற 0823-3

 ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்   0823-4

 

திருவிளையாடல் தொடங்குகின்றது. நிச்சயமாக இதுவும் கனா வடிவில் இறைவன் சிவகோசாரியாருக்க் காட்டும் அதன் வழி போதிக்கும் ஒன்றாகும். எப்படி குடுமித் தேவர் எனும் சிவலிங்கத்திற்கு கண்கள் இரண்டு உண்டு. அவற்றில் ஒன்றில் திடுமென குருதி கசிகின்றதாம். < அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு       0813-1திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று   0813-2 துண்ணென உதிரம் பாய இருந்தனர்>

இறைவன் ஆணயிட்டவாறு சிவகோசாரியர் திண்னன் வருவதற்கு முன்பே திருகோயில் சென்று அங்கே ஓர் தூணின் பின்னால் மறைந்துகொண்டு நடப்பதை எல்லாம் காண, திண்ணனார் அன்பின் வல்லமையைக் காட்டுதற்கு திடுமென அந்த சிவலிங்கத்தின் கண்கள் இரண்டில் ஒன்றிலிருந்து குருதி வழிந்தோடும்படி செய்கின்றான். இதுபோன்ற நிகழ்வுகள் கனவில் தான் நடக்கும், மெய்யாக அல்ல, கருங்கல்லால இயன்ற சிவலிங்கம் இறைவனைக் காட்டி நின்ற ஓர் மூர்த்தமாக இருந்தபோதிலும் அது  கண்களோடு கூடிய ஓர் சீவன் அல்ல, ஆக இதுவும் ஓர் கனவு என்பது உறுதியாகின்றது.

ஆயினும் கனவில் இறைவனது கண்கள் ஒன்றிலே குருதி வழிகின்றது என்று கண்டு திண்ணனார் பெரும் பதட்டத்தில் பரிவில் வீழ்கின்றார்  எல்லா அர்ச்சனைப் பொருட்களோடு வந்தவர் அவற்றை கை நழுவ விட்டு< வந்தவர் குருதி கண்டார் மயங்கினார்> என்பதொடு < பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்>  என்கின்றார் சேக்கிழார் பெருமான். ஓர் தாய் தன் சேயின் கண் ஒன்றில் குருதி வழிந்தால் எவ்வாறு பதறி துடித்து பிதற்ருறுவாளோ அதேப் போலத்தான் திண்ணனாரும் இங்கு. அதன் பின் என்ன?

குருதி வழிவது எப்படி? யார் இந்த  பாதகத்தை செய்திருக்கலாம்? எந்த மூலிகை மருந்தைக் கொண்டு இதனை நிறுத்தலாம் கண் சுகமாக மருத்துவம் செய்யலாம் என்று தேடி பல மூலிகை மருந்துகளை பிழிந்து ஊற்றினாலும் குருதி நின்றபாடில்லை. < மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக் காளத்திக்    0821-1கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழியக் கண்டு> என் செய்வது அறியாது திகைத்து நிற்க, மனதில் ஓர் உபாயம் தோன்றுகின்றது.  < உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்> என்றவாறு இறைவனே குருதி வழியும் கண்ணை எடுத்துவிட்டு நல்ல கண்ணாகிய தன் கண்னையே இடந்து அங்கு அப்பினால் குருதி வழிவது நின்று விடுமே? என்றவாறு சிந்தித்து அப்படியே செய்கின்றார்.

அப்பொழுது ஓர் அதிசயம் நடக்கின்றது்< இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்       0822-1அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று     0822-2 மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண் 0822-3 முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப> என்ன நடந்தது? <179. நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றேப் பாய்ந்தார்    0823-1 குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி 0823-2 நன்று நான் செய்த இந்த மதி>

தன் கண்ணை இடந்து குருதி வழியும் சிவலிங்கத்து கண்ணை அகற்றி அங்கு தன் கண்னை வைக்க, உடன் குருதி வழிதல் நிற்க இவர் மட்டற்ற மகிழ்சிப் பெருக்கில் பெருந்தோள்களை அசைத்து பேரானந்தக் கூத்தாடுகின்றார். களிப்பின் மிகுதியாலே உன்மத்தர் போல ஆகின்றராம்.

ஆனால் சோதனை நிற்கவில்லை, சிவஞானபோதம் தொடர்கின்றது.

எபடி என்பதை அடுத்துக் காண்பம்

தொடரும்

உலகன்

K. Loganathan

unread,
Oct 9, 2014, 12:15:08 AM10/9/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 12

 

சமய வாழ்க்கையில் அதிகார நெறி வேதாமங்கள் போன்றவற்றை சுருதிகள் என்று கொண்டு அவையே பிரமாணஙகள் ஆகவே அதிகாரங்கள் என்று ஆய்நிற்க, யார் அவற்றைக் கற்று மேம்பட்டிருக்கின்றார்கலோ அவர்கலே அதிகாரிகள் என்றவாறு அவர்களது கருத்தாக்கங்கள் செல்லும். ஆனால் இதுவோர் கற்பிதம் தான். உணமையில் அப்படி யில்லை, இறைவன் என்றும் வாழும் ஓர் சித்துப் பொருள்.  ஒரு சிலருக்கு ஓர் காலத்தில் வேதாகமங்களை வெளிபடுத்திவிட்டு பிறகு மறைந்துவிடவில்லை, மரணம் அடைந்துவிடவில்லை. அவன் என்றும் இருக்கின்றான் என்றும் யாதவதோர் வகையில் போதித்துக்கொண்டே இருக்கின்றான். மெய்கண்டார் தமது சிவஞானபோதத்தில் இதனைப் பற்றி பேசும்போது இறைவன் சகலருக்கு உலகில் பின் நின்றும் மெய்யறிவு விசாரணை வல்ல பிரளயாகலருக்கு ஓர் மானிட குரவர் வடிவில் முன் நின்றும் ஆண்வ மலமே எஞ்சியுள்ல விஞ்ஞானகலருக்கு அகத்திருந்து தானே குருவாக எழுந்து போத்திப்பான் என்கின்றார்.

இங்கு ஆகம நெறியின் தபோ வனத்து முனிவராகிய சிவகோசாரியாருக்கும், கொடுந்தொழில் வேடனாகிய திண்ணனாருக்கும் ஞானக்கனவு வழியாக போதிப்பதைக் காண,  இவ்விருவருமே விஞ்ஞானகலராக இருக்க வேண்டும் என்று தெரிகின்றது.

ஞானக் கனவு என்பது இறைவனது போதனாமுறை. பலவாறு முயன்று சிந்தித்து யார் அகத்துகசடுகளை எல்லாம் போக்கி சுத்தமாகி நிற்கின்றார்களோ அவர்கட்கு சிவஞானபோதகம் செய்ய ஞானக்கனவுகள் ஓர் ஞானபோதக உத்தியாக பயன்படுகின்றது

இங்கு அதிகார நெறியின் கற்பிதக் கணக்கின் அதிகாரி என்பார் இறைவனது நேரடி போதனைகட்கி ஆளாகும் விஞ்ஞானகலர் அல்ல. அதிகார நெறிக்கு அப்பாற்பட்ட ஞான ஆய்வு நெறியின் யார் அகச்சுத்தம் எய்தி நிற்கின்றார்களோ அவர்கட்கு இறைவன தக்க ஞானக் கனாவழி தானே போதித்து வீடுபேறு அருளுகின்றான்,

 

அவ்வகையில் தான் இங்கு வேடனாகிய திண்ணனுக்கும் தபோ வன முனிவராகிய சிவகோசாரியாருக்கும் ஞானக்கனா வழி சிவஞான போதகம் நடக்கின்றது

 

இங்கு கல்லினால் இயன்ற சிவலிங்கத்திற்கு இரண்டு கண்கள் இருப்பதும் அவற்றில் ஒன்றிலிருந்து குருதி கசிவதும் இயல்பான நிகழ்ச்சிகள் அல்ல. உடன் கனவு ஆராய்ச்சி வல்லார்கள் இதனையும் சொப்பனாவத்தை வழியாக இறைவன் நடத்துகின்ற திருவிளையாடல் என்று உடன் ஊகிக்கலாம்

இது பாதி கதைதான். ஒருக் கண்ணில் குருதி வழிய தனது கண்களில் ஒன்றையே தோண்டி எடுத்து அப்ப, நல்ல கண் அமைகின்றது, தன் கண்ணே சிவலிங்கக் கண்ணாக அமைந்துவிடுகின்றது. ஆனால் இன்னொரு கண்ணும் இருக்கின்றதே?  அது எப்படி?

 

இந்த இரண்டாவது கண்ணிலும் குருதி வழியத் தொடங்குகின்றதாம், சேக்கிழார் பெருமான் இதனை எல்லாம் இவ்வாறு பாடுவார்.

 

180. வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார் தம்   0824-1

 நலத்தினைப் பின்னும் காட்ட நாயனார் மற்றைக் கண்ணில் 0824-2

 உலப்பில் செம் குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர்     0824-3

 குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்       0824-4

வலக்கண் பிரச்சினை நிற்க, இப்பொழுது எஞ்சி நிற்கின்ற இடது கண்ணிலும் குருதி வழிகின்றது. இதனை திண்ணனார் காண்கின்றார். இங்கு திண்ணனாரை வேடர் குலத்தில் பிறந்தாலும் குலப் பெருந்தவத்தால் <உம்பர் மேலார்> என்று அவரை சேஎக்கிழார் பெருமான் பாராட்டுவதைக் காணக

 181 கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று       0825-1

புண்டரு குருதி நிற்க மற்றைக் கண் குருதி பொங்கி   0825-2

 மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்       0825-3

 உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று       0825-4

 

இதனைக் கண்டு பதறவில்லை, கையில்தான் ஓர் உபாயம் இருக்கின்ரதே! இன்னொரு கண்ணும் இருக்கின்றதல்லவா? அதனை இடந்து அப்புவேன் என்று முடிவிற்கு வருகின்றார்

 

 182. கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு       0826-1

 எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி       0826-2

 உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு    0826-3

 திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்     0826-4

 

நுதல்விழி நாட்டத்தின் முக்கண்ணாகிய இறைவனது இடத் கண்ணிற்கும் த்ன் கண்ணை இடந்து அப்ப எண்ணும் அவர் குருதி வழியும் கண்ணில் தன் இடது காலை ஊன்றி ஓர் பகழி கொண்டு தன் இடது கண்ணையும் தோண்டி எடுக்க முயலிம் போது, இதனைக் கண்டு பொறுக்கவில்லை தேவர் தெவனாகிய மகாதேவனுக்கும் எல்லா தேவர்கட்கும்

 183. செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட       0827-1

 அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்       0827-2

 தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக       0827-3

 கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற      0827-4

இப்பொழுது திண்ணன் எனும் பேர் மறைய கண்ணப்பர் என்ற பேரே பேராக, இறைவனே ஓர்  மூன்று வகை நாகனக்களை  அணியாக புரளும் கங்கணர் அந்த தோண்டும் கையைத் தடுக்க, ‘கண்ணப்பா நிற்க!” என்று ஆணை இடுகின்றார்.

 

 184. கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்       0828-1

 ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்       0828-2

 ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள     0828-3

 வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப     0828-4

திண்ணனார் தன்   கண்ணை இடந்து அப்பும் போதும், ஊனம் உற்ற போது இன்னொரு கண்ணையும் தோண்ட அவர் முனைந்தபோதும், அந்த தபோ வனத்து ஞான மாமுனிவர் அதனை எல்லாம் காண்கின்றார்.  இந்த அரிய செயலைக் கண்டு நான்முகன் முதலாய தேவர்கள வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் ஆர்த்து மலர் மாரி சொரிந்து வாழ்த்துகின்றனர்.

 

 185. பேறினி இதன் மேல் உண்டோ? பிரான் திருக் கண்ணில் வந்த       0829-1

 ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை   0829-2

 ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தில்       0829-3

 மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார் 0829-4

இறைவன் வெளிப்பட்டு விடலை வெள்ளெற்றின் மேல் காட்சித் தந்தவர்,  தன் இடதுகண்னை இடந்திட சென்ற லண்ணப்பரின்  அக் கையை தன் திருகரத்தால் பற்றி என் வலப்பக்கத்தில் என்றும் மறிலாது இருக்கக் கடவாய் என்று வீடுபேறு நல்குகின்றார்

 

இதனோடு கதை முடிகின்றது. ஆனால் கேள்விகள் பல எழுகின்றன. அதில் முக்கியமான கேள்வி: ஏன் கண்கள்? காதுகள் மூக்கு என்றவாறு ஏன் இல்லை? திண்ணனாரின் ஊனக் கண்களை முக்கண்ணானாகிய நுதல்விழி நாட்டத்து இறைவனாகிய அவனுக்கே தன் கணகளை அப்புவது என்றால் என்ன பொருள்?

ஏன் இடது கண்ணை தோண்டப்போகும் போது அது தடுத்டு நிறுத்தப்படுகின்றது?

யாதொவொன்று மிக ஆழமான அழிவில் உண்மை இந்த கண்கள் விளையாட்டில் உண்டு போல் தெரிகின்றது. அதுதான் என்ன?

இதனை அடுத்து ஓர் தனி மடலில் காண்போம்

தொடரும்

உலகன்

K. Loganathan

unread,
Oct 11, 2014, 7:30:44 AM10/11/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 13

 

 அன்பர்களே

ஞானக் கனா இறைவனது போதனா உத்தி

 

சேக்கிழார் பெருமான் கண்ட கண்ணப்ப நாயனார் கதையின் அல்லது புராணத்தின் முடிவிற்கு வந்துவிட்டோம் ஓர் சிக்கலில் மாட்டிக்கொண்டோம். ஞானக் கனா என்பது தொல்கால முதலே இறைவனுக்கு ஓர் போதனா உத்தி. அதன் வழியாகவே இறைவன் தக்காருக்கு போதித்து ஞானம் புகட்டியுள்ளான். முதற் சங்கத் தமிழாகிய சுமேருத் தமிழில் இதனை பரக்கக் காணலாம். ஆனால் இந்த போதனாமுறை ஓர் வகையில் மறைக்கப்பட்டு மறுக்கப்ப்ட்ட ஒன்றாகி விட்டது. ‘கனவு காண்பது” என்றால் ஏதோ கறபனையில் மிதப்பது பொய் உலகில் சஞ்சரிப்பது என்றெல்லாம் இழிவாகிட அதனை யாரும் சட்டை செய்யாது கவனிக்காது விட்டு விடுகின்றனர். கனவுகளின் பண்பு இவ்வாறு இழிந்து போவதற்குக் காரணம் வேதாந்தச் மரபாக இருக்கலாம். இவர்களே சாக்கிரத்திற்கும் சொப்பனத்திற்கும் உள்ள வேற்றுமைகளை இகழ்ந்து சாக்கிரமே சொப்பனம் தான் உலக அறிவு சொப்ப்னம் போலானது, அது ஓர் மித்தியா ஞானம் அத்தியாசம் ஆரோபிதம் என்றெல்லாம் கூறி சாக்கிரத்திற்கும் சொப்பனத்திற்கும் இருக்கின்ற அடிப்படை வேற்றுமைகளை மறக்கச் செய்து யாதார்த்தமும் சொப்பனம் தான் என்பது போன்ற ஓர் மயக்கத்தை பரப்ப்பிவிட்டு சென்றுள்ளனர். இதற்கு ஓர் காரணமும் இருக்கின்றது

வேதாந்தம் முற்றிலும் ஓர் அதிகார நெறி. வேதங்களே பிரமாணம் ஆக யார் வேதங்களைக் கற்று இருக்கினார்களோ அவர்கட்கே மெய்யான சமய வாழ்க்கையின் அதிகாரிகள் என்றவாறு ஓர் கற்பிதம் உருவாக்கி அதன் அடிப்படையில் வேதம் உணர்ந்த வேதியர்களே தக்க அதிகாரிகள் ஆக்கி சமய வாழ்க்கைக்கு மற்றோரைவிட தாங்களே அதிகாரம் உடைய்வர்களாக ஆகிக்கொண்டனர்.

 

இதைக் கண்டு தமிழர்களாகிய சிவாச்சாரியார்கள் தங்கள் பழைய தமிழ் ஆகமங்களை வடமொழி படுத்தி  சிவாச்சாரியார்கட்கே அதனை உரித்தாக்கி தாங்களும் வேதியர்களைப் போல அதிகாரிகள் ஆக்கிகொண்டு வடமொழியிலேயே அர்ச்சனை செய்வதில் தீவிரங் காட்டத் தொடங்கினர் போலும்

 

இந்த் நெறியில் செல்கின்ரவர்களே விதிப்படி மந்திரம் ஓதி அர்ச்சனை செய்திகின்ற பார்ப்பானும் சிவாச்சாரியார்களும்

 

இவர்கள் மறுக்கின்ற ஞானக் கனா வழி இறைவன் தக்காருக்குத் தானே போதிப்பான் ஆகவே வேதங்களும் ஆகமங்களும் அறியாதவர்களும் சிவஞானம் பெற்று இறைவனது இணையடிகளைச் சேரலாம் என்பதே சேக்கிழார் பெருமான் உணர்த்தும் மெய்ஞானம்  என்று நினைக்கின்றேன் இங்கு அதனை வற்புறுத்துமாபோல், சிவகோசாரியாருக்கு சிவபோதகம் மிகத் தெளிவாக ஞானக் கனா வழியே நடப்பதாகவும் பாடுகின்றார்.

 

கண் விளையாட்டும் ஞானபோதனையும்

 

இவ்வகையில் மிகத் தெளிவாகத் தெரியும் இந்த கண் விலையாட்டு வழி இறைவன் நடத்துகின்ற போதனை, தன்னை மீறி வேதங்களும் ஆகமங்களும் அதிகாரம் உடையவை அல்ல என்பதே. தக்காருக்கு தானே வெளிப்பட்டு ஞானக் கனா வழி போதிக்க பிறகு எதற்கு வேதாமகங்களை ஓதுதல் அவை விதிக்கும் வழி அர்ச்சனை செய்தல் போன்றவை?

இறைவன தானே ஞனக்கனா வழி போதிக்கின்றான். அந்தப் பொதனைக்கு யார் ஆளாகின்றார்களோ அவர்களே விடுபேறு மகிழ்கின்றார்கள் வேதப் பார்ப்பானும் ஆகம விதிப்படி இயங்கும் சிவாச்சாரியர்களும் அல்ல என்றே சேக்கிழார் பெருமான் உணர்த்துகின்றார்

ஆனால இந்த கண் விளையாட்டின் வழி போதிக்கப்படும் சிவஞானம் தான் யாது?

 

முதலில் ஏன் கண்களை வைத்து இந்த விளையாட்டு?

அடுத்து ஏன் வலதுகண் போக்கப்பட இடது கண் தோண்டபப்டும்போது இறைவனே அதனைத் தடுத்து விடுகின்றான் என்பதொடு வீடுபேறும் நல்குகின்றான்?

கண் என்பது காண்டல் அல்லது பார்த்தல். ஆக பார்வை என்பது ஞான வாழ்க்கையில் ஓர் முக்கியமான ஒன்றாகின்றது. படித்தால் வேதம் ஓதுவதால் ஆகமங்களை ஓதுவதால் ஞானம் வரும் என்பது பிராமணீயம். ஆனால் பார்வைகள் பல அவற்றில் மேலான பார்வைகள் அருளப்பெற்று தனது பார்வை இறைவனது பார்வையோடு ஒன்றித்து நின்று ஒன்றாக்குவதே சமயவாழ்க்கையின் மெய்யான பண்பு என்று செல்வது அனபு நெறி.  இங்கு மேலான பார்வைகள் ஒருவனுக்கு அமையாது தடுப்பது அகத்தடைகளாகிய மும்மலம-- ஆணவம் கன்மம் மாயை என்பன, ஆய்ந்து ஆழமாக சிந்தித்து மெய்யறுவேத் தேற்றி பொய்யறிவைப் போக்கி வாழ்ந்தால் ஆழமான பார்வைகள் வந்தமையும் கிட்டாத ஞானமும் கிட்டும் என்பதே சேக்கிழார் பெருமான் உணர்த்தும் மெய்யறிவாகும்

 இது உடன் நமக்கு தொல்காப்பியத்தில்  ஒருவன் தான் கண்ட ஓர் ஆழமான உண்மையை பிறருங்காண வைக்கும் ஏரணவியல் சான்ற காண்டிகை உரை நினைவிற்கு வருகின்றது, காண்டிகை உரை என்பதௌ தான் கண்டதை பிறருங்காணவைத்டு உடன்பாடு கொண்டு வருவது. மற்றும் ‘ஒத்த காட்சி உத்தி” எனும் பார்வைகளை மையப்படுத்தி எழுந்த 32 உத்திகளும் நினைவிற்கு வருகின்றன.

மேலும் அப்பர் பெருமானின் “ காண்பார் ஆர் கொல் கண்ணுதல் காட்டாக்கலே” என்ற தத்துவக் கிளவியும் திருமூலரின் உபதேசம் முப்பதில் வரும் வரலாற்று சிறப்புமிக்க “ களிம்பு அறுத்தான் கண்ணுதல் நந்தி, களிம்பு அறுத்தான் கண் விழிப்பித்து’ என்ற கண்விழிப்பிக்கும் இறைவனது திருவிளையாடலும் நினைவிற்கு வருகின்றது

அதுதான் இங்கு அதாவது களிம்பாகிய மும்மலம் போக்கி கண் விழிப்பிப்பது நடக்கின்றது.

எப்படி?

இதுதான் ஞனாக்கனாவாகிய மிருகவேட்டையின் ஞானப்பொருள்-  உள்ளுறைப்பொருண்மை.  Hermeneitic Semiotic Meaning)

இதனை சேக்கிழார் பெருமானே மிகth தெளிவாக கூRiவிடுகின்றார், அகத்தடைகளாக மேலான பார்வைகள் வந்தமையாது தடுப்பன ஆணவm கன்மம் மாயை எனும் மும்மலங்கள். அவற்றை வாட்டி தீய்த்து ஆன்மாவிலிருந்து வெளியாக்குவதே காட்டு விலங்குகளாக இவற்றௌ வேட்டையாடிப் பிடித்து கொன்று வாட்டி வதக்கி பதப்படுத்தி இறைவனுக்குப்து படைத்து தன் ஆன்வாவிலிருந்து அகற்றுவது, அதன்வழி சுத்தமாகுவதொடு அன்பேத் தானாகுவது.

 

154. முன்பு திருக் காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்   0803-1

 இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கைத்       0803-2

 தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற   0803-3

 அன்பு பிழம் பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?

 

இப்படி அகத்துச் செறி மும்மலங்களைப் போக்கி சுத்தமாகி அன்பேத் தானாகி நிற்றலே உண்மையான சமய வாழ்க்கை,

இது அதிகார் நெறியாகிய பார்ப்பானின் வேதநெறியுமல்ல, சிவாச்சரியார்களின் ஆகமநெறியும் அல்ல. அதிகாரப் பயிற்சியின் வழி அகத்தைச் சுத்தம் செய்து அன்பினை வளர்க்க முடியாது, பிறரை அடிமைபடுதத்தான் முடியும் அது உண்மையான சமய வாழ்க்கை அல்ல. மக்கள் நடுவே வெறுப்பையும் எதிர்ப்பையுமே ஈட்டித் தரும்

சரி புரிகின்றது. ஆனால் ஏன் வலதுகண்ணை தோண்டி எடுத்திட அனுமதிக்கும் இறைவன், இடது கண்ணை எடுக்க விடவில்லை?

 

இதில் யாதோ ஓர் ஆழமான போதனை இருக்கின்றதா?

 

இருக்கின்றது.  அடுத்து இதனைக் காண்போம்

 

தொடரும்

 

உலகன்

K. Loganathan

unread,
Oct 11, 2014, 11:09:19 PM10/11/14
to meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

 

பெரிய புராண ஞானக்கனாவியல்-2

 

கண்ணப்பர்: ஓர் ஞானக் கனாவியல் அலசல்

 

இடுகை 14 (கடைசி)

வலது கண் இடது கண் பேதம்

இந்த கண் விளையாட்டு உண்மையில் கண்விழிப்பு விளையாட்டு என்றும் அது ஓர் புதையடுக்காய் நிற்கும் பாரவைகளில் ஆழமான பார்வைகள் ஆதிக்கப்பார்வையாக்கும் உத்தி என்றும் கண்டோம். ஆனால் அதில் ஏன் வலது கண்ணிற்கும் இடதுகண்ணிற்கும் ஓர் பேதம்?

குருதி வழிய வலது கண்ணைத் தோண்டி வெளியாக்கி சிவலிங்கத்தின் குருதி வழியும் வலது கண்ணை எடுத்துவிட்டு அப்ப குருது வழிவது நின்று விடுகின்றது. ஆனால் அதேப்போல இடது கன்ணிலு, குருதி வழியத் தொடங்க, தன் இடதுகண்ணை இடந்து அப்ப முயலும் போது அது இறைவனாலே தடுத்து நிறுத்தப்படுகின்றது.

இது ஏன்? என்பதே நம் கேள்வி.

இதற்கு தக்கவொர் விளக்குமும் உண்டு, அதனை இங்கு சிறிது விளக்குவதே நம் நோக்கம்

 

நாதவிந்துக்களும் சிவலிங்கமும்

 

சிவலிங்கம் நாத விந்துக்களின் இணைப்பு. தூணாக நிற்பது நாதம் பீடமாக இருப்பது விந்து. இதனை சிவம் என்றும் சத்தி என்றும் கூறுவர். தனக்கென எவ்வுருவம் இல்லாதி இறைவன் நாதத்தவத்தோடு ஒன்றிட, ஆண்மையின் சிவன் ஆகிட, விந்துவோடு ஒன்றிட பெண்மையின் சத்தி யாகின்றான்(ள்). இரண்டும் இணைந்து நிற்கும் போது ஆதாரத் தலமாக் சத்தியே பீடமாக அமைய அதனில் எழும் தூணாக இலிங்க வடிவ சிவன் என்பதாம்

 

மேலும் இந்த நாதவிந்துகள் நம் உடம்பிலும் இருக்கின்றன. நமது உடம்பே ஓர் சிவலிங்கம் தான் நமது மூளையின் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிலும் உண்டு. நாதம் இடது பக்க மூளையிலும் விந்து வலது பக்க மூளையிலும் மிக்கிருந்து ஆட்சி செய்கின்றன. இவை கத்திரிக்கோல் போன்ற இடம் மாறி உடம்பில் நாதத்தின் ஆண்மை வலது பக்க உடம்பிலும்,  விந்துவின் பெண்மையின் ஆதிக்கம் இடது பக்க உடம்பிலும் உண்டு,

இவ்வாறே அர்த்தநாரி வடிவத்து இறைவன் உருவத் திருமேனி அமைவதைக் காண்கின்றோம்

இது கண்களுக்கும் ஒக்கும், வலது கண் நாதத்தின் ஆணமையின் அறிவின் கண் என்றிருக்க இடது கண் விந்துவின் சத்தியின் அன்பின் அருளின் கண்ணாக இருக்கின்றது.  ஆக இந்த கண்களில் அமையும் பார்வையும் வேறாக இருக்கும். வலது கண் அறிவனைத் தேடும் அதிகாரத்தைத் தேடும் பார்வையாக இருக்க, இடது கண்ணோ அன்பினை அருளைத் தேடும் கண்ணாக பார்வையாக் இருக்கும்

 

வலது கண் ஞானக் கண்

 

இப்பொழுது புரிகிறது. திண்ணனாரின்  வலது ஊனக் கண் சாதாரண உலகியல் அறிவையே வளர்த்துக்கொண்டு செல்ல அந்த பார்வையையே வளர்க்க அது இழக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது, அதனைத் தோண்டி எடுத்து சிவலிங்கத்திலன் மேல் அப்புவது சாதாரண்ச் உலகியல் அஞ்ஞானத்தை சிவப்பார்வையின் சிவஞானம் ஆக்குவதாகும்

 வலதுகண் இழந்த திண்ணனார் உண்மையில் தன் கண் சிவலிங்கத்தில் இருக்க அவரது பார்வை சிவபார்வையாகிட அவர் சிவஞானை யாகின்றார். எப்படி?

இது இதுவரை அதற்குத் தடையாக இருந்த இறைவனின் திரோதகம் நீக்கப்படுவதாகும். இந்த ஞானக் கனா வழி இறைவனே திண்ணனாருக்கு திரோதகம் நீக்கப்பட அவர் ஞானம் சிவஞனாமே ஆகிவிட்டது என்பதை உனர்த்துகின்றார்,

 

இடது கண் அனபு கண்

 

அப்படியென்றால் இடது கண் விந்துவின் ஆட்சியில் அம்மையின் ஆட்சியில் இயங்கும் அன்பு கண் அருட் கண் ஆகும்

 

திண்ணனார் அனபே வடிவாக முற்றிலும் ஆய்விட்ட நிலையில் அதற்கு மேல் அன்பு பாராட்டுவது முடியாத ஒன்றாகி இருக்க, அளப்பரிய சிவ அன்பின் இடது கண்ணை அவர் இழக்க வேண்டியதில்லையே! அதனால் தான் அதனைத் தானே வெளிப்பட்டுத் தடுக்கின்றான் இறைவன்.

 

அன்பு முற்றி இறைவனைபோன்று அன்பே தானாகி நிற்கும் திண்ணனாருக்கு வேண்டியது திரோதக நீக்கமேத் தவிர, மும்மலங்கள் நீக்கி அன்பேத தானாகுவது அல்ல. அந்நிலைக்கு பெயர்ந்துவிட்ட உயர்ந்துவிட்ட திண்ணனாருக்கு திரோதக நீக்கமே வேண்டப்படுவதாக, அதுதான் இடது கண் தோண்டப்படுவது தடுக்கப்படுவதால் உணர்த்தப்படும் உண்மையாகும்

 

முடிவுரை:

 சிவஞானபோதம் போன்ற மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றி சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளை மிக ஆழமாக போதிக்கும் முன்பே சேக்கிழார் பெருமான் மிகத் தெளிவாக அதனை புரிந்துகொண்டு மிக அழகிய முறையில் நாயன்மார்கள் புராணம் வழி அதனை மெய்ஞானமாக உணர்த்தியிருகின்றார். இதன் வழி மெய்கண்ட சாத்திரங்கள் எழுவதற்கு அடிகோலியவராகவும் இருக்கலாம்,

கண்ணப்ப நாயனார் மிகத் தொன்மையான நாயனார் ஆகும். இவர் சங்க காலத்தவராக அல்லது சங்க மருவிய காலத்தவராக இருக்கலாம். பண்டே இவரைப் பற்றியய பல பாடல்கள் உண்டு.  இவர் வாழ்க்கையை ஆய்ந்தே சைவ சித்தாந்தமும் புதிய ஆழங்களை பெற்று வளர்ந்திருக்கலாம் என்று தெரிகின்றது.

 

முற்றும்

 

 

 

 

 

 

 

 

K. Loganathan

unread,
Oct 12, 2014, 12:36:48 AM10/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com
திரு அரிசோனன்

 மிக்க நன்றி. இது உண்மயுங் கூட. அகத்திருந்து இறைவன் உணர்த்தவே பார்வைகளை முதன்மையாக வைத்து நான் எழுதிய அழிவிலியலுண்மையும் ஆகும். அதுவே சேக்கிழார் பெருமானை நான் சரியாக புரிந்துகொள்ள உதவியுள்ளது, சேக்கிழார் பெருமானுக்கும் இறைவனே அகத்திருந்து இதனை உணர்த்தி இருக்க வேண்டும். இல்லையேல் இவ்வளவு அழகாக சூக்குமாக இந்த ஆழ் ஞானத்தை உணர்த்தியிருக்க முடியாது.

நானும் இந்த கட்டுரைகளை எழுதியத்  தெளிவின் அப்படியே எனை மறந்து இறையருளை நினைந்து ஓர் மிதப்பில் இருக்கின்றேன்

உலகன் 

2014-10-12 12:21 GMT+08:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//வலது கண் நாதத்தின் ஆணமையின் அறிவின் கண் என்றிருக்க இடது கண் விந்துவின் சத்தியின் அன்பின் அருளின் கண்ணாக இருக்கின்றது.  ஆக இந்த கண்களில் அமையும் பார்வையும் வேறாக இருக்கும். வலது கண் அறிவனைத் தேடும் அதிகாரத்தைத் தேடும் பார்வையாக இருக்க, இடது கண்ணோ அன்பினை அருளைத் தேடும் கண்ணாக பார்வையாக் இருக்கும்//

//அன்பு முற்றி இறைவனைபோன்று அன்பே தானாகி நிற்கும் திண்ணனாருக்கு வேண்டியது திரோதக நீக்கமேத் தவிர, மும்மலங்கள் நீக்கி அன்பேத தானாகுவது அல்ல. அந்நிலைக்கு பெயர்ந்துவிட்ட உயர்ந்துவிட்ட திண்ணனாருக்கு திரோதக நீக்கமே வேண்டப்படுவதாக, அதுதான் இடது கண் தோண்டப்படுவது தடுக்கப்படுவதால் உணர்த்தப்படும் உண்மையாகும்//

அருமையான தத்துவ விளக்கம் அய்யா!

 தங்களின் சிவ தத்துவ விளக்கம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.  இவ்விளக்கத்தைத் தங்கள் மூலமாக வழங்கியதும் அவனின் திருவருளே!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages