பகுதி - 1
ஆய கலைகள் அறுபத்து நான்கில் காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவர்தம் கண்களுக்கும், கருத்துக்கும் ஒருங்கே விருந்து படைப்பவை ஆடற்கலையும், நாடகக் கலையுமே! அதிலும் மெய்ப்பாடுகள் (உடலில் தோன்றும் உணர்வு வெளிப்பாடுகள்; வடமொழியில் இதனை ‘ரசங்கள்’ என்பர்) சிறப்பாய் வெளிப்படுவது ஆடற்கலையிலேயே என்றால் அது மிகையன்று. மெய்ப்பாடுகளை எட்டு என்று கொள்வர் ’ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்; வடநூலாசிரியர்கள் இவற்றை ஒன்பது என்று கொண்டு ’நவரசங்கள்’ என்பர்.
இன்று மிக உயர்ந்ததாய்ப்
போற்றப்படும் ஆடற்கலை முற்காலத்தில் இத்தகைய சிறப்பைப் பெற்றிருக்கவில்லை. இக்கலை ‘கணிகையர்க்கே’
உரியது என்பதுபோல் குலமகளிரால் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதை இலக்கியங்கள்
நமக்கு அறியத்தருகின்றன.
கலைகளில் உயர்ந்த இவ்வாடற்கலையில் நல்ல தேர்ச்சிபெற்று, தன் ஈடிணையற்ற கலைத்திறனால் அனைவரையும் பெரிதும் கவர்ந்த ‘ஆடலரசி’ ஒருத்தியைச் சிலப்பதிகாரம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. அவள் வேறுயாருமல்லள்! ’சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய்’க் கணிகையர் குலத்தில் பிறந்தும் ஒப்பற்ற கற்பரசியாய் வாழ்ந்த ‘மாதவியே’ அம்மாதரசி!
சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்று காதை’ மாதவியின் நாட்டியச் சிறப்பையும், நளினத்தையும் அற்புதமாய் விளக்குகிறது. தேவமகளிரில் ஒருத்தியான ஊர்வசியின் மரபைச் சேர்ந்தவளாய்க் கருதப்படும் மாதவி, ‘ஆடல், பாடல், அழகு’ என்ற மூன்றிலும் ஒன்றில்கூடக் குறைவுபடாதவள் என்று இளங்கோவடிகளால் போற்றப்படுகின்றாள். தன்னுடைய 5ஆம் அகவையில் ’தலைக்கோல் ஆசான்’ என்று அழைக்கப்பெறும் நாட்டிய ஆசிரியரிடம் நடனம் பயிலத்தொடங்கிய அவள் 7 ஆண்டுகள் இடைவிடாப் பயிற்சிக்குப்பின் தன் 12-ஆம் அகவையில் சோழமன்னன் முன்னிலையில் தன் நாட்டிய அரங்கேற்றத்தை வெகுசிறப்பாய் நிகழ்த்துகின்றாள்.
”ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்
ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி…” என்று அவள் அரங்கேற்றம்
பற்றிப் பேசுகிறது அரங்கேற்று காதை.
அவள் ஆடலின் அற்புதத்தைக்
கண்டு வியந்த சோழமன்னன் அவளுக்குச் சிறந்த ஆடலரசி என்ற பொருளில் தரப்படும் ’தலைக்கோலி’
பட்டத்தையும், ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னையும், பச்சைமாலை ஒன்றையும் பரிசாய்த் தருகின்றான்.
”தலைக்கோ லெய்தித் தலையரங்கு
ஏறி,
விதிமுறைக்
கொள்கையின்
ஆயிரத்
தெண்கழஞ்சு
ஒரு
முறையாகப்
பெற்றனள்”
என்பது அடிகள் வாக்கு.
மாதவியின் ஆடலை மன்னன் மட்டுமல்லாது, மேட்டுக்குடியைச் சேர்ந்த பிரமுகர் பலரும் வைத்தவிழி வாங்காமல் கண்டுகளித்திருந்தனர். அதில் ’ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடியை’ச் சேர்ந்த கோவலனும் ஒருவன். அவள் ஆடலிலும் அழகிலும் கள்ளுண்ட வண்டாய் மயங்கியிருந்த அவனை மாதவியும் கவனிக்கத் தவறவில்லை. கலைநுணுக்கம் அறிந்தவனாய்த் தன் நாட்டியத்தை இரசித்த அவன்மீது அவளுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
அவன் உள்ளத்தை இன்னும் தெளிவாய் அறிந்துகொள்ள விரும்பியவள், தான் பரிசாய்ப் பெற்ற பச்சைமாலையைக் கூனி ஒருத்தியின் கையிற்கொடுத்து 'இம் மாலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுவது; இவ்வளவு பொன் கொடுத்து இதனைப் பெறுவோர் மாதவிக்கு மணமகனாவர்' எனக் கூறச்செய்து, நகரத்து நம்பியர்(ஆண்கள்) திரிகின்ற வீதியில் அவளை நிற்கச் செய்திருந்தாள்.
அவள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அழகன் கோவலனும் அம்மாலையை ஆவலுடன் வாங்கிக் கூனியுடன் மாதவி மனையை அடைந்தான். அதன்பின்னர், தன்னருமை மனைவி கண்ணகியையும், அவளோடு நடாத்திக்கொண்டிருந்த இல்லறத்தையும் முற்றும் மறந்தான்; மாதவியை விட்டு நீங்கா விருப்புடையவன் ஆயினான் என்று அவன் மனநிலையைத் தெளிவாய் விளக்குகிறது சிலப்பதிகாரம்.
இவ்வாறு கோவலனும்
மாதவியும் மனமொத்த இணையராய், மலரும் மணமும்போல் வாழ்ந்துவரும் வேளையில், ஒவ்வோராண்டும்
வெகுசிறப்பாய்ப் புகாரில் கொண்டாடப்படும் ‘இந்திரவிழா’ தொடங்கியது. சித்திரை முழுமதி
நன்னாள் தொடங்கி 28 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் அவ்விழாவின் 27-ஆம் நாள் வந்தது.
அன்று நடைபெறவிருந்த மாதவியின் ஆடலைக் காண்பதற்காக புகார் நகரமே ஆவலோடு திரண்டிருந்தது
ஆடரங்கில்.
புகார் நகரத்தில், விமரிசையாகவும், வெகுசிறப்பாகவும் நடைபெற்றுவந்த இந்திரவிழாவின் புகழ் இந்திரலோகம் வரை எட்டியிருந்தது. அதனால், அவ்விழாவைக் கண்டின்புறத் தேவலோகத்தைச் சேர்ந்த விஞ்சையன் ஒருவனும் (விஞ்சையர்கள் பதினெண் கணங்களில் ஒருவர்; இசைவல்ல தேவச் சாதியர்) அவன் காதலியும் மானிட உருவில் புகார் நகருக்கு வந்திருந்தனர். தோரணங்களாலும், மாலைகளாலும் பொலிவுற்று விளங்கிக்கொண்டிருந்த புகாரை இரசித்துக் கொண்டே வந்துகொண்டிருந்த அவர்கள் ஓரிடத்தில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தைக் கண்டதும் சற்று நின்றனர். அப்போதுதான் மாதவியின் ஆடல் அங்கே தொடங்குவதாயிருந்தது.
அதோ! ஆடரங்கை மறைத்திருந்த
இருமுக எழினி (double-sided curtain) விலகுகின்றது. வழக்கமாய் வானில் தோன்றும் முழுமதி
அப்போது மேடையில் தோன்றியது கண்டு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அதுமட்டுமா? அம்முழுமதி தன் தேனொழுகும் குரலில் அனைவருக்கும் முகமன் கூறி அவர்களை வரவேற்கவும்
செய்தது.
பேசும் பொற்சித்தரமாய் மேடையில் ஒளிர்ந்த மாதவியைக் கண்டதும் சட்டென்று அடையாளம் கண்டுகொண்ட விஞ்சையன் பரவசத்தோடு தன் காதலியிடம், ”இவள் யாரென்று தெரிகிறதா?” எனக்கேட்க, அவளோ ”தெரியவில்லை” என்பதாகத் தலையசைத்தாள். நீ கட்டாயம் இவளைத் தெரிந்துகொள்ள வேண்டும். சாதாரணப் பெண்ணா இவள்? தேவ மாதான ‘ஊர்வசி’யின் மரபில் வந்த ஆரணங்கு! ஆடற்கலைக்கு இலக்கணம் வகுத்த கலையரசி மாதவியிவள்!” என்று மாதவியைப் பற்றித் தன் காதலியிடம் கூறியவன், ”சரியான நேரத்துக்குத்தான் இங்கு வந்திருக்கின்றோம். இவள் ஆடலைக் கண்டுகளித்துவிட்டுச் செல்வோம்!” என்று பரபரப்போடு கூறிவிட்டு அவளோடு சென்று பார்வையாளர்கள் வரிசையில் கலந்து அமர்ந்துகொண்டான்.
ஆடல் தொடங்குவதற்குமுன் தேவபாணி (கடவுள் வாழ்த்து) இசைக்கப்பட்டது. அடுத்து மாதவி ஆடியவை அதிஅற்புதமான பதினோருவகை நடனங்கள்! அவற்றை நாமும் கண்டுகளிக்க வேண்டாமா? வாருங்கள்…அரங்கத்திற்குள் செல்வோம்!
தொடரும்...
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மேகலா அருமையான சொல்லாடல்கள்.பதினோராடல்கள்
போனவாரம்தான் முதுகலை மாணவர்களுக்கு ரசித்து நடத்தினேன்.
நீங்களே தொடருங்கள்.----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பகுதி - 2
சிலம்பில், மாதவி ஆடியதாய் இளங்கோவடிகள் குறிப்பிடும் பதினோரு ஆடல்களும் அசுரரைக் கொல்ல அமரர் (தேவர் மற்றும் கடவுளர்) ஆடிய பதினோருவகைக் கூத்துக்களே ஆகும். இந்த ஆடல்கள், நின்றாடல் (நின்றுகொண்டு ஆடுவது), படிந்தாடல் (தரையில் வீழ்ந்து ஆடுவது) என இருவகைப்படும். இவையனைத்துமே புராணக் கதைகளை மையமாக வைத்து மாதவியால் ஆடப்பட்டவை. (புராணக் கதைகளின் தாக்கம் சிலப்பதிகாரக் காலத்திலேயே மிகுந்திருந்ததை இஃது உறுதி செய்கின்றது)
கூத்தில் வல்லானாகிய
சிவபெருமான் ஆடியதாய்க் கூறப்படும் ’கொடுகொட்டி, பாண்டரங்கம்’ எனும் இரு கூத்துக்களை
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆடி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தாள் மாதவி.
’அசுரர்களின் திரிபுரத்தை
(முப்புரம்) எரித்துத் தம்மைக் காக்கவேண்டும்!’ எனும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுத்
’தீ’அம்பைச்
செலுத்தித் திரிபுரத்தை
எரித்தவரும், தேவர்கள் யாவரினும்
உயர்ந்த தேவாதி தேவருமான சிவபெருமான், சுடுகாட்டரங்கிலே ஆடுகின்ற கொற்றவையைப்போல்,
உமையவள் தன் ஒரு பக்கத்தே
இருந்து, பாணி, தூக்கு, சீர் முதலிய தாளங்களைச் செலுத்த (மாதொருபாகனாய்) வெற்றிக்
களிப்பில் கைகொட்டி
நின்று ஆடிய
ஆடலே ‘கொடுகொட்டி’ ஆகும்.
”பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
எரிமுகப் பேர்அம்பு ஏவல்
கேட்ப
உமையவ
ளொருதிற னாக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்” என்கிறார் இளங்கோ.
கொடுகொட்டி ஆடிய இறைவன் பின்பு ஓர் தேரில் ஏறிக்கொண்டு, தம் கோலத்தையும் பைரவிபோல் மாற்றிக்கொண்டு (பெண்வேடங்கொண்டு) அத்தேரைச் செலுத்தும் தேர்ப்பாகனாய் நின்றிருந்த நான்முகன் காணும்படி தம் உடலெங்கும் வெண்ணீற்றையணிந்து ஆடிய ஆடலே பெரிய பாண்டரங்கக் கூத்தாகும். (தேராக விளங்கியவர்கள் தேவர்கள்; தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகள் நான்மறைகள் என்னும் புராணக் கருத்தும் ஈண்டுக் கூறப்படுகின்றது.)
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும் என்கிறது சிலம்பு.
சிவனார் ஆடிய இக்கொடுகொட்டிக் கூத்தையும், பாண்டரங்கக் கூத்தையும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலும் விரிவாய் விளக்கிச்செல்வது இங்கு நினைந்தின்புறத்தக்கது.
படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்காற் கோடுய
ரகலல்குற்
கொடிபுரை நுசுப்பினாள்கொண்டசீர் தருவாளோ
மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து
பண்டரங்க மாடுங்காற்பணையெழி லணைமென்றோள்
வண்டரற்றுங்கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ.
இவை கற்றறிந்தார் ஏத்தும் கலியில்
இடம்பெற்றுள்ள கவின்மிகு வரிகளாகும்.
சீர்த்திமிகு சிவதாண்டவங்களைத் தொடர்ந்து அஞ்சனவண்ணனாகிய திருமால், கஞ்சனின் (கம்சன்) சூழ்ச்சிகளை வென்று அவன் அனுப்பிய யானையின் கொம்பை ஒடித்து மகிழ்ச்சியோடு ஆடிய ஆடல்களுள் ஒன்றான ‘அல்லியத் தொகுதி’யையும், கஞ்சன் ஏவிய அவுணனை (வாணாசுரன்) அழித்தற்பொருட்டு நிகழ்த்திய ’மற்கூத்தை’யும் அடுத்தடுத்து ஆடி அரங்கத்தோர் கண்களுக்குப் பெருவிருந்து படைத்தாள் கலைமாது மாதவி.
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும் அவுணற் கடந்த
மல்லின் ஆடலும்
மாயோனைத் தொடர்ந்து மேடையில் (மாதவி உருவில்) ஆடவந்தவர் சேயோனாகிய முருகப்பெருமான்.
கடல் நடுவில் ஒளிந்த சூரனை (சூரபதுமனை) வென்ற வேலன், கரியகடலின் நீரலைகளையே அரங்கமாகக்
கொண்டு ’துடி’ (உடுக்கை) எனும் வாத்தியத்தை வாசித்தபடி ஆடியதே ’துடிக்கூத்து’ ஆகும்.
அத்துடிக்கூத்தைத் துடியிடையாள் மாதவி ஆடிய நேர்த்தியானது பார்வையாளர்கள் அனைவரையும்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கச்செய்தது.
தொடர்ந்து வந்தது, முருகப்பெருமான் ஆடிய மற்றோர் ஆடலான ’குடைக்கூத்து’. தன்னோடு போர்புரிந்த அவுணர்களின் படைக்கலங்களையெல்லாம் காற்றில் பறக்கச்செய்த முருகவேள், அவர்கள் நிராயுதபாணிகளாய்ச் செய்வதறியாது துன்புற்றுநின்ற வேளையில் குடை ஒன்றைத் தன்முன்பக்கமாக வைத்துக்கொண்டு ஆடிய ’குடைக்கூத்தை’ தத்ரூபமாக மேடையில் ஆடினாள் அந்த ஆடலரசி.
……………………………………………………மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்
படைவீழ்த் தவுணர் பையு ளெய்தக்
குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும் என்பன துடிக்கூத்து
மற்றும் குடைக்கூத்தை விளக்கும் சிலப்பதிகார வரிகள்.
செம்பஞ்சுக் குழம்பணிந்த மென்பாதங்கள் ஆடுதலால் மேலும் சிவக்க, கண்டிருந்தோர் நெஞ்சங்கள் ஆடல்கண்டு பெரிதும் உவக்க, மாதவிப் பொன்மயிலாள் அடுத்து ஆடிய ஆடலென்ன…?
தொடரும்…
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மேலும் ரசிக்கஆடினது சோழநாட்டில் என்றாலும் ஆட்டத்தின் கருப்பொருள் பாண்டியநாட்டைச் சேர்ந்ததாக்கும்அரசவையில் ஆடிய மாதவியின் ஆட்டத்தைக் கோவலன் கண்டிருக்க வாய்ப்பில்லை. தலைக்கோலை வாங்குபவனுக்கே மாதவி சொந்தம் என்ற நிலையில் கலையில் சிறந்த கோவலன் மாதவியின் கலையைச் சொந்தமாக்கிக்கொள்ளத் தலைக்கோலை விலைகொடுத்து வாங்கியிருக்கலாமேஅதைவிட்டு மாதவி ஒரு கணிகை என்றும் கோவலன் ஒரு காமுகன் என்றும் கருத்தாடல் தேவையில்லையேமணிமேகலை கண்ணகி கோவிலில் கண்ணகியை உருவ வழிபாடு செய்யும்போது ஆறத்துக்காகப் பொங்கி எழுந்த நீ இரக்கத்தைப்பற்றிச் சிந்திக்காமல் இருந்துவிட்டாய் என்று கூறியதாகக் குறிப்புண்டுமின்னம்பலத்தான்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அவள் ஆடிய ஆடல்கள் என்னென்ன என்ற விவரங்கள் கட்டுரையின் இரண்டாம் பகுதியையும் நான் அடுத்து வெளியிடவிருக்கும் மூன்றாம் பகுதியையும் படித்தாலன்றோ தெரியவரும்! :-))
எழுத்தாலும் உருவம் காட்டமுடியும் என்பதை உறுதி செய்த அக்காவுக்கு வாழ்த்துகள் .... வரும் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆடல் காணீரோ!
பகுதி 3
முன்னொருகாலத்தில் புகழ்பெற்றிருந்த அசுரர்களில் ஒருவன் வாணாசுரன். இவன் மாபலிச்சக்கரவர்த்தியின் மகனாவான். இவனுடைய மகளாகிய உஷை, காமனின் மகனான அநிருத்தன்மீது காதல் கொண்டாள். (அநிருத்தன் கண்ணனின் மகனான பிரத்யும்னனின் மகன் என்கின்றன வைணவ நூல்கள்; ஆனால் சிலம்பின் உரையாசிரியர்கள் அவனைக் காமனின் மகன் என்றே குறித்துள்ளனர்.)
தந்தைக்குத் தெரியாமல் அவனைத் தன் அரண்மனைக்குத் தோழி சித்ரலேகை உதவியால் கொண்டுவரச்செய்து கந்தர்வமணம் புரிந்து வாழ்ந்து வந்தாள். இதையறிந்த வாணாசுரன் கடுங்கோபம்கொண்டு அநிருத்தனைச் சிறைப்படுத்த, அதையறிந்து, மாயோனாகிய கண்ணன் வாணனின் ’சோ’ நகரத்திற்குச் சென்று அங்கே அவனால் சிறைவைக்கப்பட்டிருந்த அநிருத்தனை மீட்க, மண்ணாலும் உலோகங்களாலுமான பலகுடங்களைக் கையிலேந்தி ஆடியதாய்க் கருதப்படுவது ‘குடக்கூத்து’.
இது விநோதக் கூத்துவகைகளில் ஒன்று; இக்கூத்தாடுவோர் ‘தலையிலே அடுக்குக் குடமிருக்க, இரு தோள்களிலும் இரு குடங்களிலிருக்க, இருகைகளிலும் குடங்களையேந்தி ஆகாசத்திலேயெறிந்து ஆடுவர்’ என்கின்றனர் உரையாசிரியர்கள். ஆடுவதற்கு அதிகப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும் இக்கூத்தை மலர்விழியாள் மாதவி அநாயாசமாக ஆடிக்காட்டினாள் என்றே கூறலாம்.
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும். இவைக் குடக்கூத்தை
விளக்கும் காப்பிய வரிகள்.
இக்குடக்கூத்தைச் சிலப்பதிகாரமேயன்றித் திவ்யப்பிரபந்தமும் பேசுகின்றது. மூன்றாம் திருமொழிப் பாசுரமொன்றில் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான’ ஆண்டாள் எடுத்தாண்டுள்ள, ’குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே’ எனுந்தொடர் கண்ணன் ஆடிய குடக்கூத்தையே குறித்து நிற்கின்றது.
இவ்வாறு, அநிருத்தனை மீட்க முதலில் கண்ணன் ’சோ’ நகரவீதிகளில் குடக்கூத்தாடினான்.
அதுபோல், தன் மகனைச் சிறைமீட்க விரும்பிக் கண்ணனோடு சென்றிருந்த காமனும் (தன் பங்குக்குப்)
பேடிக் கோலத்தில் (இதன் இன்றைய வழக்குமொழி ’திருநங்கை’) ஓர் ஆடலை நிகழ்த்தினான்.
’பேடிக்கூத்து’ எனும் பெயர்கொண்ட அந்தக்கூத்து, நிகழ்ச்சியில் அடுத்ததாக இடம்பெற்றது.
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடலும்….. என்பது சிலப்பதிகாரம்
பேடிக்கூத்திற்குத் தரும் விளக்கம்.
காமன் ஆடிய இப்பேடிக்கூத்தை மணிமேகலைக் காப்பியமும்,
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்…(மணி-3:123-125)
என்று குறிப்பிடுவதை இங்கே ஒப்புநோக்கலாம். (இதில் காமன், திருமாலின் மகனாய்க்
குறிக்கப்படுகிறான் என்பதை அறிக.)
இதுவரை ஆண் கடவுளர், தேவர் போன்றோரின் ஆடல்களையே நிரலாக ஆடிவந்த மாதவி, இப்போது பெண்தெய்வங்கள் ஆடியதாய்ப் புராணங்கள் தெரிவிக்கும் கூத்துக்களை ஆடத் தொடங்கினாள்.
அவற்றில் முதலாவதாய் அவள் ஆடியது ’மரக்கால் கூத்தாகும்’; இக்கூத்தைக் குறிக்கும் சிலம்பின் வரிகளாவன…
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்
வெற்றித் தெய்வமான கொற்றவை, அசுரர்கள் நல்லோர்க்குச் செய்கின்ற கொடுந்தொழில் கண்டு ஆற்றாளாகி அவர்களோடு போர்புரியும் வேளையில், அவ்வசுரர்கள் இறைவியொடு நேருக்குநேர் நின்று போர்புரியும் திறனற்றோராய் அவளை வஞ்சத்தால் வெல்லக்கருதி பாம்பு, தேள் முதலிய கொடிய உயிரினங்களின் உருவில் அவளை அழிக்க முயன்றனர். அதை அறிந்த அம்மை, அவ்வஞ்சத்தைத் தன் சாதுரியத்தால் வெல்லக்கருதி மரத்தாலான கால்களின்மேல் ஏறிநின்று அக்கொடிய உயிரினங்கள் வடிவில் இருந்த அசுரர்களை உழக்கிக் கொன்றாள். பின்பு வெற்றிப் பெருமிதத்தோடு அவள் ஆடிய ஆடலே ‘மரக்கால் கூத்தாகும்’. இம்மரக்கால் கூத்தை சிலம்பின் மற்றொரு பகுதியான ’வேட்டுவ வரி’யில் ஆசிரியர் இளங்கோவே மீண்டும் குறிப்பிடுவது இங்கே எண்ணத்தக்கது.
ஆய்பொன் னரிச்சிலம்பும்
சூடகமும்
மேகலையும்
ஆர்ப்ப
வார்ப்ப
மாயஞ்செய்
வாளவுணர்
வீழநங்கை
மரக்கால்மேல்
வாளமலை
யாடும்
போலும்
மாயஞ்செய்
வாளவுணர்
வீழநங்கை
மரக்கால்மேல்
வாளமலை
யாடுமாயின்
காயாமலர்மேனி
யேத்திவானோர்
கைபெய்
மலர்மாரி
காட்டும்
போலும். (வேட்டுவ வரி)
ஆடுவதற்கு மிகவும் சவாலான இம்மரக்கால் கூத்தையும் சீரிய நாட்டியப் பயிற்சியைச் சிறுவயது முதலே பெற்றிருந்த மாதவி (மரத்தினாலான கால்களைக் கட்டிக்கொண்டு) சிறிதும் தடுமாறாமல் ஆடிக்காட்ட, கண்டோர் அனைவரும் மூக்கின்உச்சி சுட்டுவிரல் சேர்த்து அதிசயித்தனர்.
வீரச்சுவை மிக்கிருந்த மரக்கால் கூத்தைத் தொடர்ந்து, காதற்சுவை (சிருங்கார ரசம்) சொட்டும் ஓர் ஆடலை அரங்கு கண்டது; அதன் பெயர் ’பாவைக் கூத்து’.
போர்க்கோலம் கொண்ட அவுணர்களின் சி(ம)னத்தை மாற்றி, அவர்கள் மேற்கொள்ளவிருந்த
போர்த்தொழிலை நிறுத்தவிழைந்த செய்யோளாகிய திருமகள், ’கொல்லிப்பாவை’போல் (அழகினால் மனத்தைப்
பேதலிக்கச் செய்யும் ஒரு பாவை வடிவம்) தோற்றங்காட்டி அழகிய ஆடலொன்றையும் நிகழ்த்தி
அவர்களின் சித்தத்தைத் தடுமாறச்செய்து யுத்தத்தை நிறுத்தினாள் என்கிற புராணச் செய்தியை
அடியொற்றி அமைக்கப்பட்ட இப்பாவைக் கூத்தைப் பாவை மாதவி ஆட, பார்த்தோர் மனங்களும் பித்தேறி
ஆடின.
செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று பாவைக்கூத்தின்
இயல்பைப் பாங்காய்ச் செப்புகின்றார் ஆசிரியர்.
அடுத்ததாய் மேடையில் இடம்பிடித்தது, உழவர்குலப் பெண்போல் உருமாறிய அயிராணி (இந்திரனின்
மனைவி இந்திராணி) எனும் தெய்வமடந்தை வாணாசுரனின் ’சோ’ நகரத்தின் வடக்கு வாயிலருகே உள்ள
வயலிடத்தே ஆடியதாய்க் கூறப்படும் ‘கடையம்’ எனும் கூத்தாகும்.
வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்
’கடைசியர்’ (உழத்தியர்)
எனும் பெயரான் அன்று அழைக்கப்பட்ட உழவர்குல மகளிரின் நாட்டியமே ‘கடையம்’ என்பது. மாதவி
தன் ஆடல்களின் வரிசையில் கடைசியாக ஆடியது இக்கூத்தையே.
இவ்வாறு தான் ஆடிய பதினோராடலுள் இறைவனாகிய சிவபெருமான் ஆடிய இரண்டினை முன்வைத்தும், மாயோனாகிய திருமால் ஆடிய இரண்டினையும், சேயோன் முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின்பின் வைத்தும், வெற்றி பற்றி நிகழ்ந்த இக்கூத்துக்களின் தொடர்ச்சியாய்க் காமத்தாற் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோனாடிய விநோதக் கூத்தினையும், அதன்பின் காமன் ஆண்மை திரிந்து பேடியுருக்கொண்டாடிய கூத்தினையும், அவற்றின் பின்னர், பெண் தெய்வங்களுள்ளே முறையே கொற்றவையும் திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்து கூத்துக்களை வகையாய் வரிசைப்படுத்தியிருந்த மாதவி, இக்கூத்துக்களையெல்லாம் அவற்றிற்குரிய இலக்கணம் சிறிதும் வழுவாது ஆடியமுறையின் சிறப்பு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
அவளுடைய ஆடற்கலையின்
நயத்தில் கட்டுண்டு, வேறோர் மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், அவள்
ஆட்டத்தை நிறுத்திய பின்பே நனவுலகிற்கு மீண்டனர். ”புகார் நகரம் பெற்றெடுத்த புதையல்
இவள்!” என்று ஒருவருக்கொருவர் வாயூறிப் பேசிக்கொண்டனர். கூட்டத்திலிருந்து ஆட்டத்தை
இரசித்துக்கொண்டிருந்த விஞ்சையனும் அப்போதுதான் தன்னுணர்வு பெற்றவனாகத் தன் காதலியைப்
பார்த்து, ”இப்போதாவது மாதவி ஆடலின் மகத்துவத்தை உணர்ந்தாயா?” என்று கேட்க, அவளோ “ஆகா
பிரமாதம்! இப்படியோர் நாட்டியத்தைத் தேவலோகத்தில்கூட நான் கண்டதில்லையே!” என்று வியக்க,
மகிழ்ச்சியோடு அவ்விருவரும் அரங்கிலிருந்து அகன்று சென்றனர்.
இப்படி, மாதவி ஆடியதாய் இளங்கோவடிகள் நமக்கு அறிமுகப்படுத்தும் பதினோருவகை ஆடல்கள், நம் தமிழகத்தில் நாட்டியக்கலை அன்றே வியத்தகு வளர்ச்சியடைந்திருந்ததைக் காட்டுகின்றன. அத்தோடு, அன்றைய ஆடல்மகளிர் அரங்கில் ஆடுதற்குப் பின்பற்றிய ஆடல்களின் நிரலொழுங்கையும் நாம் அறிந்துகொள்ளப் பெருந்துணை செய்கின்றன.
காப்பியத்தின் கதைப்போக்கின்படி அன்று மாதவி ஆடிய ஆடலே அவள் வாழ்வின் கடைசி ஆடலாகவும் அமைந்துவிட்டது; அதை எண்ணும்போது நம் மனம் வேதனையில் கனக்கவே செய்கின்றது. என் செய்வது? ’All good things must (come to an) end’ என்பதே வாழ்க்கை நமக்குணர்த்தும் பாடமல்லவா?
(முற்றும்)
அன்புடன்,
மேகலா
இக்கட்டுரைத் தொடரை வெளியிட்ட வல்லமை மின்னிதழுக்கு நன்றி!
பகுதி 1: http://www.vallamai.com/?p=55675
பகுதி 2: http://www.vallamai.com/?p=55712
பகுதி 3: http://www.vallamai.com/?p=55791
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Excellently narrated Megala. My greetings to you, I read the book of Dr Kalaikkovan on the technical aspects of Madhavi dance. But your tamil and the way of narration was superb to read. Continue providing the sweet essence of language.
Anbudan
Dhivakar
Sent from my Sony Xperia™ smartphone

Excellently narrated Megala. My greetings to you, I read the book of Dr Kalaikkovan on the technical aspects of Madhavi dance. But your tamil and the way of narration was superb to read. Continue providing the sweet essence of language.
Anbudan
DhivakarSent from my Sony Xperia™ smartphone
--
அழகான உவமானங்களுடன் அருமையான படைப்பு. பாராட்டுகள் மேகலா.அன்புடன்
பவளா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"
--
வேந்தரா இப்படி வினவுவது? நம்பமுடியவில்லை...வில்லை...வில்லை!!!! :-)))(ஆமாம்...3 பகுதிகளையும் படித்துவிட்டீர்கள்தானே?) :-))