அன்பின் திருமிகு பவளசங்கரி அவர்களே
மின்மடல் குழுக்களில்
தமிழ் வாசனை செழித்தோங்கி
இருந்த காலத்தில்
நானும் என் எழுத்துக்களைக்கொண்டு
உழுது பயிரிட வந்தேன்.
அப்போது என் எழுத்துக்களுக்கு
நீங்கள் காட்டிய ஆர்வம் அளப்பரியது.
"ஓலைத்துடிப்புகள்" என்ற தொடரில்
என் சங்க நடைச்செய்யுள்
கவிதைகள் வலம் வந்தன.
அதற்கு நீங்கள் அளித்த
ஆக்கமும் ஊக்கமும்
என்னால் மறக்க இயலாது.
"அகநானூற்றின்" ஒரு பகுதி
"மணிமிடைப்பவளம்" ஆகும்.
ஆம்.
தமிழ்க்கடலின் அடி ஆழத்து
"பவளத்"திட்டுகளாய் இருந்து
என் போன்ற கவிஞர்களின்
கற்பனை ஊற்றை சுரக்கச்செய்தது
உங்கள் தமிழ் ஆர்வமே ஆகும்.
குறுந்தொகையில்
"கல்பொரு சிறுநுரை"
என்ற ஒரு உவமையை
சந்தித்திருப்பீர்கள்.
அதைப்போல ஒரு
ஆழமான அழகான சொல்
உலக இலக்கியத்தின்
எந்த மூலையிலும் இடம்பெற்றிருக்க
வழியே இல்லை.
அச்சொல்லில்
கடல் இருக்கிறது.
அலை இருக்கிறது.
ஒரு மெல்லிய நுரையும்
இருக்கிறது
ஒரு கூழாங்கல்லோடு
அதனுடைய போரும்
இருக்கிறது.
இவற்றிடையே பின்னிய
தமிழின் சொல் அடர்த்தி
அரிதிலும் அரிதான நயமிக்கது.
இந்த உவமையையே
அந்த கவிஞரின் பெயராக்கி
"கல் பொரு சிறுநுரையார்" என்றார்கள்.
உங்கள் தமிழ்ப்பணி
இந்த பெருங்கடலில்
திவலை போல் காட்டி
ஆழிப்பேரலையாய்
ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது
என்றே நான்
கருதுகிறேன்.
உங்கள் ஆசிரியம் இந்த
மின்மடல்களுக்கு
ஒரு கலங்கரை விளக்கம் தான்.
உங்களுக்கு
என் மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இப்ப்டிக்கு
மீண்டும் வாழ்த்துக்களுடன்
ருத்ரா இ பரமசிவன்.
வெள்ளி, 5 செப்டம்பர், 2025அன்று 10:39:58 AM UTC+5:30 மணிக்கு
cor...@gmail.com எழுதியது: