அறநூல் பாடல்களைப் படித்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை அடையலாம் மன ஒருமை கிடைக்க பாடல்களை பொருளுணர்ந்து பாட வேண்டும் முன்னாள் தலைமையாசிரியர் பேச்சு

0 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Feb 13, 2026, 4:56:56 AM (9 days ago) Feb 13
to

அறநூல் பாடல்களைப் படித்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை அடையலாம் 

மன ஒருமை கிடைக்க பாடல்களை பொருளுணர்ந்து பாட வேண்டும்

 முன்னாள் தலைமையாசிரியர் பேச்சு 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மன ஒருமைப் படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

                                          ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  தேவகோட்டை   முத்தமிழ் வேத திருசபையின் துணை செயலர்கள்   ஆதி ரெத்தினம்  மற்றும் மகாலிங்க மூர்த்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர் . அவர்கள் பேசுகையில்,. அறநெறிப் பாடல்களை மனமுவந்து படிக்க வேண்டும் அவ்வாறு படிக்கும்போது  மனம் ஒருமை ஏற்படும். அதனை வீடுகளில் சென்று தொடர்ந்து கூறினால் நமக்கு மிகப் பெரிய வெற்றிகள் கிடைக்கும். எனவே மாணவர்கள் சிறு வயதில் அறநெறிப் பாடல்களை நன்றாக படிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்கள். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறநெறி பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை   முத்தமிழ்வேத திருசபையின் துணை செயலர்கள்   ஆதிரெத்தினம்  மற்றும் மகாலிங்கமூர்த்தி முன்னிலை வகித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=n0t7XDRzUBk



IMG_4574.JPG
IMG_4573.JPG
IMG_4580.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages