ஓதம், ஓதநம்

31 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 15, 2023, 4:17:16 PM9/15/23
to Santhavasantham
ஓதம் - சங்க இலக்கியத்தில்
-----------------------------------------------

ஓதம் ōtam , n. [M. ōtam.] 1. Moisture; dampness, as of a floor; ஈரம். (பிங்.) 2. Flood, inundation, deluge; வெள்ளம். வழிசிதைய வூர்கின்ற வோதமே (சிலப். 7, 35-ஆம் பாடல்). 3. Sea; கடல். ஓதமலி நஞ்சுண்ட வுடையானே (திருவாச. 38, 3). 4. Wave, billow; கடற்றிரை. கடலோதங் காலலைப்ப (திவ். இயற். 1, 16). 5. Affection of the testis, as hydrocele, hernia; அண்டவாதம். (அக. நி.)
ஓத (2)
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர - கலி 134/6
ஓத நீரின் பெயர்பு பொங்க - புறம் 22/23

    ஓதத்து (2)
மலி ஓதத்து ஒலி கூடல் - பட் 98
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று - பரி 23/14

    ஓதம் (14)
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்/இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து - மது 540,541
உலவு திரை ஓதம் வெரூஉம் - நற் 31/11
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர - நற் 117/2
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் - நற் 211/2
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் - குறு 9/5
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்/பெயர்தர பெயர்தந்து ஆங்கு - குறு 340/5,6
ஓதம் வாங்கும் துறைவன் - ஐங் 145/2
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் - பரி 7/29
இரும் கழி ஓதம் போல் தடுமாறி - கலி 123/18
பெரும் கடல் ஓதம் போல - அகம் 123/13
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் - அகம் 220/12
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே - அகம் 300/17
கழியே ஓதம் மல்கின்று வழியே - அகம் 340/9
எறி திரை ஓதம் தரல் ஆனாதே - அகம் 350/2

    ஓதமும் (2)
ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும் - நற் 319/1
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் - நற் 335/3

    ஓதமொடு (2)
ஓதமொடு பெயரும் துறைவற்கு - ஐங் 155/4
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த - அகம் 230/1
துறைமுகங்களில் உயர் ஓதம், தாழ் ஓதம் இருந்துகொண்டே உள்ளது. பூமி, திங்கள், சூரியன் இவற்றின் ஈர்ப்புவிசையில் மாற்றமே இந்த ஓதங்களுக்கு (Tide variation) காரணம்.  இதனை சங்கச் சான்றோர்கள்  தமிழ்ச் செய்யுள்களில் விளக்கியுள்ளனர்.
பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117

கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே,
மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350

செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன்
பல் பூங் கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்  - அகம் 340

ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம்.
https://ta.wikipedia.org/wiki/ஓதம்
கழி (அ) துறைமுக வர்ணனையில் வரும் ஓதம் பற்றிய இலக்கியச் செய்திகளை யாராவது தொகுக்கலாம்.
https://oceanservice.noaa.gov/education/tutorial_tides/tides01_intro.html

https://old.thinnai.com/கடல்_ஓதம்/
எனது வீடு கால்வெஸ்டன், டெக்சாஸ் துறைமுகம் அருகே உள்ளது. அதன் இன்றைய ஓதநிலை:
https://tides4fishing.com/us/texas/galveston-bay-entrance-south-jetty

ஓடு-தல் நீர் போன்ற எல்லாத் திரவங்களுக்கும் பொதுவானது. ஓடை, ஓடம் என்ற சொற்களைக் காண்க.
ஓடி, ஓடிகம் என நெல்லுக்குப் பெயர் உண்டு. நீர் பாய்ந்து/ஓடி விளையும் பயிர் நெல்லம்பயிர். எனவே,
வட இந்தியாவில் “ஓடி(க)” என நெல்லுக்குப் பெயர் உண்டு. CDIAL reference.

Spontaneous Loss of Cerebrals (Th. Burrow, BSOAS). அதன் படி பார்த்தால்,
ஓட- ஓதம் எனத் தோன்றியுள்ளது எனலாம். சந்து (< சாத்து/சாந்து) சந்தனம் என ந-பிரத்தியம்
பெறுவது போலே, ஓத- > ஓதநம்.

~NG
 

N. Ganesan

unread,
Sep 17, 2023, 10:38:11 AM9/17/23
to santhav...@googlegroups.com, vallamai
On Sun, Sep 17, 2023 at 8:01 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
ஓதநம் - என்றால் சமையல்


அரிய செய்தி. நன்றி. பழைய செய்யுள் எதிலாவதோ, தற்கால கட்டுரை, சிறுகதை, நாவலில் ... இருந்தால் தரவும்.

ஓதனம் (MTL - நிகண்டுகளில்),
ஓதனம் ōtaṉam , n. ōdana. 1. Boiled rice; சோறு. (திவா.) 2. Food; உணவு. (பிங்.)

பழைய சோறு, பால் சோறு (ரிக்வேதத்தில் ”க்ஷீரபாகம் ஓதனம்” என்கிறார்கள்).
ஸம்ஸ்கிருதப் பேராசிரியர்கள் ஓதநம் என்பதை boiled rice (சோறு), rice mess (பழைய சோறு), rice gruel (கஞ்சி)
என மொழிபெயர்ப்பதைக் கண்டிருக்கிறேன்.
-------------------------
கவிஞர் இரமணி ஓதனம் - ஓது அனம் எனப் பிரித்தும் ஒரு செய்யுள் தந்தார்
#ரமணி_முச்சொல்
முவ1.18. பூனை பாலன்னம்!
(ஆசிரியத் தாழிசை)

ஆவியில் சமைத்த சோற்றயற் சொல்லெது?
மேவியப் பெழுத்தெது? முலை-அயற் சொல்லெது?
தாவுமென் விலங்கெது? தூதுசெல் பறவையெது?

சூசகக் குறிப்பு:
ஈற்றடி இரண்டாம் வினா விடை: அனம் (அன்னம்)
விடைகள் முறையே:
ஓதனம் (சோறு), ஓ தனம், ஓது அனம்

இதுபோல், செம்பியன்மாதேவி ஊரின் மேல் அமைந்த பழைய வெண்பா உண்டு. தருகிறேன்.
------------------

தமிழ்நாட்டின் பழைய ஆதீனங்களில் மூத்தது திருவாவடுதுறை ஆதீனம். தமிழும், சைவமும் தழைக்கும் இடங்களாக ஆதீனங்கள் விளங்குகின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோதி அழைத்து எல்லா ஆதீனகருத்தரும் தில்லிகை விரைந்தனர். அமெரிக்கக் காங்கிரஸிலே, அமெரிக்க பருந்துச் செங்கோல் 2 நூற்றாண்டாக உள்ளது. அதுபோல், சோழர் கால நந்திச் செங்கோல், பாரதப் பாராளுமன்றில் நிறுவப்பட்டுள்ளது. அப்போது, திருச்சோற்றுத்துறை என்னும் ஓதன வனேசுவரர் திருக்கோவிலில் உள்ள நந்திச் செங்கோல் முன்னடக்க, ஓதுவார் சொல்லும் எச்சரிக்கை: https://twitter.com/naa_ganesan/status/1662582745350959104

*எச்சரிக்கை*: 
*ராஜகெம்பீர, ராஜ மார்த்தாண்ட , சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹார திரோபாவ அநுக்ரஹ மூர்த்தியான ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி எங்கள் திருச்சோற்றுத்துறைப் பெருமான் ஶ்ரீஶ்ரீஶ்ரீ ஓதனவனேசுவர மஹராஜ் பராக், பராக், பராக்*. 
எச்சரிக்கை முடிவில் மங்கலச் சங்கு ஒலிக்கிறது.

இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலம், தலபுராணத்தை, நகைச்சுவை கலந்த நடையில் “அன்னம் படைத்த வயல்” என்று கட்டுரையாய் உவேசா எழுதியுள்ளார். https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0441.html
தன் அஷ்டசகஸ்ர குலத்தைச் சார்ந்த கண்ணுத் தெரியாத பாட்டியிடம் இத் தலபுராணம் கேட்டு, எழுத்தில் வடித்துள்ளார்.
குலம் ரிக்வேதத்திலேயே உள்ள தமிழ்ச்சொல். குலாய. cf. குலை. பங்காளிகளை “ஒருகுலைக்காய்கள்” என்பர்.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 19, 2023, 10:57:58 AM9/19/23
to Santhavasantham, vallamai
ஓதநம் (Cf. ஓதம்)
----------------------------

உழவர்கள் ஏர் ஓட்டி விதைப்பர். வித்து சாரி சாரியாய் வரிசையாக விழுவது சால். ஒரு செவ்வகத்தை முழுதும் ஓட்டினால் விளா எனப்படும். விளா திருவாசகத்தில் வருகிறது. உழவுசால் (அ) படைச்சால் ‘furrow'. கருநாடகத்தில் *சாலத*   திம்மக்காள் என வரிசையாய் பல்லாயிரம் மரங்களை நட்ட பாட்டி இருந்தார். குறுக்குச்சால் ஓட்டுவதும் உண்டு. வடக்கே, ஓடா என்றால்  படைச்சால். ஏர் ஓட்டுவது ஓடா. தண்ணீர் ஓடும் சிறு ஓடை என்கிறோமே, அதுபோல.
CDIAL 2545 *ōḍā 'furrow'. [Conn. with ṓḍha- 'driven near' ŚBr. very doubtful]
    S. oṛa f. 'drawn line, furrow'; L. ōṛ, pl. ōṛã f. 'furrow', P. oṛ
f., Or. oṛibā 'to plough a field once', oṛe cāsa 'one ploughing'.

ஓடம், ஓடை, ... போன்றன தண்ணீரோடு தொடர்புடையன.
CDIAL 2546 ōḍikā-, ōḍī- f. 'wild rice' lex.
    A. uri-dal 'a water grass producing grain like rice', uri-dhān
'wild rice'; B. uṛi, uṛi-dhān 'wild rice'.

ஓதம், ஓதநம்:
ஓதம் = நீர், நீர்க்கசிவு, ஈரப்பதம், tide in harbors, அலை ... நீரின் திரவத்தன்மை எனவே, ஓடை, ஓடம், ... போன்ற சொற்கள் உருவாகி உள்ளன. (1) கடவு > கதவு, (2) கடம்ப > கதம்ப மலர் புறப்பாட்டில் கடம்பன் - முருகனுக்கு விருப்பமான கடம்ப மாலை சூடுகிற வேலன் பூசாரி. குறிஞ்சிக் கிழவன் முருகன். எனவே, கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கடைசியாய் கடம்பை வைத்தார், (3) உடும்பர, > உதும்பரம் (அத்தி - காய்கள் மரத்தை உடுத்து இருப்பதால். உடுவம் > உதுவம் > அதவம்). (4) யாடவர் > யாதவர். யது குலம் எனக் கோனார் குலம், (5) கோடு- (மாட்டுக் கொம்பு ....) > கோதுதல் (கிளி மாம்பழத்தைக் கோதும். கோதிச் சதையைத் தின்னும்), (6) கடலி > கதலி (கடலில் வரும் ஒருவகை வாழை). (7) விளாங்கோடு/விடாங்கோடு > விதாங்கோடு, (8) கூ- கூம்புதல். கூகு = பென்சில் கூகு = pencil tip in the shape of a cone. கூதுதல் - குடைதல்; கூதிர் காலத்தில் கூதல் தோலைக் கூதுவது. trumpet flower வடிவில் உள்ளவை கூதளப் பூக்கள் (9) கடுமை = விரைவு. கடுமான் தோன்றல். விரைவான குதிரைப்படை கொண்ட சேரன், மேலைக் கடற்கரை குதிரைகள் வந்துள்ளன. கடும் > கதும் என ‘விரைவுக் குறிப்பு) (10) நுடுங்கு :: நுடங்கு, நுடும்பு- > நுதும்பு. எரி நுதுப்பேம் எனல் குறள். நுதுப்பு/நுசுப்பு = இடை... போல, ஓடம் > ஓதம். சாத்துவது சாந்து/சந்து. எனவே, சந்தன மரம். இதுபோல், ந பிரத்தியம் பெற்று ஓதநம் என வடசொல்லாக வருகிறது.

ஓடி - நெல், ஓடை - தண்ணீர் ஓடுவது ... இவற்றில் இருந்து ஓதநம் பிறந்து தோன்றிற்று என்பர் மொழியியல் பேராசிரியர். Witzel 1999, Berger 1963: 420, Kuiper 1950. This linguistic phenomenon is explained in detail in:
Th. Burrow, Spontaneous Cerebrals in Sanskrit,  Bulletin of the School of Oriental and African Studies, University of London, Vol. 34, No. 3 (1971), pp. 538-559.

தண்ணீர், பால் போன்றவற்றில் சமைப்பது ஓதனம். பழையசோறு. ஓதனம் வடசொல் இந்தோ-ஐரோப்பியச் சொல் அல்ல என்பர் சம்ஸ்கிருதப் பேராசிரியர் Witzel, Kuiper, Berger ...). ஆனால், ரிக்வேதத்திலேயே உள்ள சொல். ஓதம் >> ஓதநம் ‘பால்சோறு, பழையசோறு, ... போன்றவை. ஓதனம் சிந்துசமவெளியில் வழங்கி, பின்னர் வேதத்துள் உள்ள பழைய திராவிடச் சொல்.
Monier-Williams Dictionary: odana %{as} , %{am} m. n. (%{ud} Un2. ii , 76) , grain mashed and cooked with milk , porridge , boiled rice , any pap or pulpy substance RV. AV. S3Br. MBh. &c. ; m. cloud Nigh. ; (%{I}) f. Sida Cordifolia L.

5000 ஆண்டுகளாக மது (சுரா பானம்) உற்பத்தியில் ஓதனம்:
------------------------------------------

பல ஆயிரம் ஆண்டுகளாக, இந்தியாவில் மதுவைக் காய்ச்சி உள்ளனர். இதனை, சுரா பானம் என்று வேத இலக்கியங்கள் கூறும். சுரீர் என்று, சுர் என, ஏறும் சரக்கு என்பதால் சுராபானம். இப்போது அரசாங்கங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் மதுவிற்பனைக் கடைகளை நடாத்துகிறது. வள்ளுவர், காந்தி எல்லாம் வெறும் சிலைகள் ஆக்கப்பட்டனர். ஐம்பூதங்கள் பிரபஞ்சத்தில் எனப் பல தத்துவங்கள். உலோகாயதம் = Materialism. உலோகாயதர் மாத்திரம் நான்கு பூதங்களைத் தான் ஏற்கின்றனர். ஆகாயம் (Ether) தனியானது என உலோகாயதர்  ஏற்பதில்லை. மற்ற நான்கு பூதங்களின் சேர்க்கை தான் ஆகாயம் என்பர்: நீர் (மேகம்), காற்று (வளிமண்டலம்), நெருப்பு (சூரியன், விண்மீன்கள்), மண் (கிரகங்கள்) சேர்ந்தால் ஆகாயம் என்பர். உயிர் என்பது நான்கு பூதங்களின் சரியான விகிதச் சேர்க்கையால் ஏற்படும் களிப்பு எனக் காட்ட, இரு உவமைகளைக் கொடுப்பர் (1) மது உற்பத்தி செய்முறை (2) வெற்றிலை, பாக்கு/கதிரம், சுண்ணாம்பு, உமிழ்நீர் சேர்ந்தால் வரும் சிவப்புப் போன்றது உடலில் உயிர் என்பர். உ-ம்: மாதவ வித்யாரண்யரின், சருவ தரிசன சங்கிரகம் காண்க.

மணிமேகலையில் உலகாயத வாதம்,
https://www.tamilvu.org/slet/l3200/l3200pd2.jsp?bookid=51&pno=473

சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை        260
ஒன்று அணி கூட்டம் குணமும் குணியும் என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
பூத வாதியை புகல் நீ என்ன
தாதகி பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மது களி பிறந்து ஆங்கு        265
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அ உணர்வு அவ்வவ் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்

உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்        270
அவ்வவ் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே        275
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முற்பிறப்பை எய்த பெறுதலின்

“தாதகிப்பூ-ஆத்திப்பூ. கட்டி - கரும்பின் சாறடுகட்டி. நீலகேசியுரை காரர், "மா முதலாகிய வைந்து திரவியத்தின் கூட்டத்தின் மத்திய சக்தி பிறந்தாற்போல" (858 உரை) என்று கூறுகின்றார். மா முதலாகிய ஐந்தனுள், மாவொடு தாதகியும் கட்டியும் பெறப்படுவதால் ஏனை யிரண்டையும் "மற்றும் கூட்ட" என்பதனால் கொண்டார் என்று கொள்க. அவை இரண்டும் இன்னவெனத் தெரிந்தில. தாதகி முதலிய ஐந்தின் கூட்டத்தால் மதுவிடத்தே களிப்புத் தோன்று மென்றது, ஐம்பூதக் கூட்டுறவால் உணர்வு பிறக்குமென்றற்குவமை. அவ்வப் பூதக் கூறுகள் தத்தம் முதலொடு பிரிந்து சென்று கூடிவிடுதலின், "வெவ்வேறு பிரியு" மென்றும், பூதங்களிற் கூடுந் திறத்தைப் "பறையோசையிற் கெடும்" என்றும் கூறினான். பூதவாதிகட்கு நிலம் நீர் தீ வளி விசும்பு என்ற ஐம்பூதமும் உடன்பாடு; இதனை, "திண்ணென் றீநில நீர் வளி காயத்தாற், கண்ணு மூக்கெடு நாமெய் செவிகளாய், வண்ண நாற்றஞ் சுவையுனொ டூறொலி, எண்ணுங்காலை யியைந்துழி யெய்துமே" (நீல. 857) என்று பிறரும் எடுத்தோதிக் காட்டுவர். இனி, உலகாயதர் விசும்பொழிந்த பூதநான்கையுமே கொண்டு அவற்றின் கூட்டுறவால் உடலுணர்வுண்டா மென்றம், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் கலந்தவழிச் செந்நிறம் பிறத்தல்போலப் பூதக்கலப்பால் உணர்வு பிறக்கு மென்றும் கூறுப. மதுவினிடத்தே களிப்புப் பிறக்குமாற்றினை இவர் கூறியதுபோலச் சாருவாகரும் கூறுகின்றனர். இதனை மாதவர் எழுதிய சருவ தரிசன சங்கிரகத்துச் சாருவாக தரிசனத்துட் காண்க.”

ஐம்பூதத்துக்கு உவமையாக, முதலில் வரும் மா(=மாவு) என்ன மாவு எனத் தெரியவில்லை. வடமொழி நூல்களில் இருக்கக் கூடும். மத்திய சக்தி = madhya (< madhu) shakti.  

மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், பஞ்சமரபு சுவடி கண்டவர். 500 சுவடிகள் சேர்த்தவர். புலவர் செ. ராசு, இரா. நாகசாமி, நீதிபதி ரா. செங்கோட்டுவேலன், ... போன்றோரின் ஆசிரியர். அவரது சுவடி, காராணை விழுப்பரையன் மடல். தமிழில் வளமடல்கள் மிகக்குறைவு. இந்த வளமடல், கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் பாடல். 550 அடியும் ஒரே எதுகை. பாடல் தலைவன் காராணை விழுப்பரையன் ஆதிநாதன். முதல் குலோத்துங்க சோழனின் சேனாபதி. சீரங்கத்தில் கல்வெட்டுகள் இவன் பெயரைக் குறிப்பிடுகின்றன. அருமையான உரையை, பேரா. கரு. முத்துசாமி (மணலூர், (=கீழடி) எழுதி அச்சிட்டுள்ளார்கள். ந. மு. வே. நாட்டார் குறிப்பிடுகிறார்: 4 பொருள்களில் 2 என்னவென்று தெரியவில்லை. அதனை, கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் தெளிவுபடுத்தி உள்ளார். https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0060.pdf
”தாதகியின் மெல்லரும்பும் தண்கரும்பின் கட்டியுமிட்டு
ஓதனம்நீர் என்னும் ஒரு நான்கின் உற்பவிக்கும்

காதல் மதுவின் களிப்புவெளிப் பட்டாற்போல்
மேதினியும் அப்பும் விளைகனலும் காற்றுமெனும்

பூதமொரு நான்கின் புணர்ச்சி விசேடத்தால்
சாதனமாய் உள்ள சரீரத்திலே உணர்வு

போதும் எனவறியீர்; புண்ணிய பாவங்கட்கு
ஏதுவெனத் தோன்றுகின்றது இவ்வுடலே; இவ்வுடலுக்கு

ஆதியுமாய்த் தோன்றுகின்றது அவ்வுயிரே; அவ்வுயிர்க்குச்
சேதனமும் மற்றுஅவ் அசேதனமே இவ்வுடலென்று

ஏதம் அறத்தெளியீர்; இவ்வுடலுக் கிவ்வுணர்வே
ஓதும் உயிர்;மற்று உயிருண்டோ? உண்டாகில்

ஏதுவினால் காட்டீர்காள்! இந்திரியம் கொண்டன்றிச்
சோதிடம்கொண் டென்பீரேல்  தூமத் தினால்நெருப்புண்

டாதல் அறிவோம்; அதுபோல் அனுமானப்
பேதம் பிதற்றிப் பிடித்துயிரைக் காட்டுவிரோ?”
       -உலோகாயதனின் சுபக்கம், https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0060.pdf

McHugh, J. (2021). The Ancient Indian Alcoholic Drink Called Surā: Vedic Evidence. Journal of the American Oriental Society, 141(1), 49–72. The PDF of this paper can be read,
https://lockwoodonlinejournals.com/index.php/jaos/article/view/559/422

ஓதனம், தண்டுலம் (அரிசி) பற்றிய செய்திகளைப் பக்கம் 55, 66-ல் காண்க. தண்டு = paddy stalk. தண்டுலம் = நெல்/அரிசி. தண்டு என்னும் த்ராவிட வார்த்தை நெல்லுக்கு வருகிறது. இன்னொரு செய்தி. பரியோதனம் = ஓதனம் (அரிசிச் சோற்றை) சுற்றியுள்ள வெல்லக்கட்டி, நீர்.

”Then the malted rice, apparently “raised” separately, is added:
viṣaṃ te tokma rohayanto ’bruvan viṣaṃ kumbhe ’va srava |
viṣaṃ ta āmanaṃ sure viṣaṃ tvaṃ hasta āhitā
viṣaṃ pratihitā bhava || 5.10.2
Those who were raising the malted rice (tokma) called you poison. Being poison, flow down
into the jar. Poison is your affection, O Surā; poison are you when taken in the hand. Become
poison when put to [the lips].

Next the rice, perhaps the principal grain, is mentioned as well as a substance called paryodana-,
a hapax, which may refer to the māsara, as Lubotsky suggests. Or maybe this is some
sort of cooked-rice scum like that used for the māsara in the version above, since the word
implies something that is somehow around (pari-) the cooked rice (-odana)? The nagnahu
ferment is also added. As Lubotsky observes, the references to the animals here presumably
allude to the addition of animal hairs to the surā in the Sautrāmaṇī sacrifice:

siṃhas te astu taṇḍulo vyāghraḥ paryodanam |
pṛdākūr astu nagnahur vṛkasya hṛdi saṃ srava || 5.10.3

Let your [rice] grain be a lion, the gruel (paryodana) a tiger, let the ferment (nagnahur) be a
panther. Flow into the wolf’s heart.

The surā is then removed from the pit in which it has apparently been fermented—the verses
below refer to the myth of a boar who lifted up the earth from the ocean (per Lubotsky’s
comments). Surā emerges ready to wreak havoc.”

“siṃhas te astu taṇḍulo vyāghraḥ paryodanam |
pṛdākūr astu nagnahur vṛkasya hṛdi saṃ srava || 5.10.3”
தண்டுலம் எனும் அரிசி சிங்கத்துடனும், பரியோதனம் என்னும் ஓதனத்தைச் சூழும் கரும்புக்கட்டி (வெல்லம்), தண்ணீர் புலியுடனும், நக்னகு (Ferment aid) என்னும் தாதகி (ஆத்தி) மரத்தின் பூ சிறுத்தைக்கும் ஒப்பிடப் படுகிறது. கரடி தேனை விரும்பும், கரடி போல் நிற்கும் மனிதன் இந்தக் கள்ளை விரும்பி மாந்துகிறான்.

Nagnahu (ನಗ್ನಹು):— 1) [noun] any of various proteins, formed in plant and animal cells or made synthetically, that act as organic catalysts in initiating or speeding up specific chemical reactions esp. in fermenting liquors; an enzyme.

கரும்புள்ளி கொண்ட சிறுத்தை:
https://en.wikipedia.org/wiki/Indian_leopard#/media/File:Nagarhole_Kabini_Karnataka_India,_Leopard_September_2013.jpg

தாதகி - திரு ஆத்தி:
https://www.etsy.com/listing/1216335905/bauhinia-tomentosa-yellow-orchid-tree
https://www.ebay.com/itm/403537108073

ஏன் நக்னஹு என்னும் நொதிக்கச் செய்யும் க்ரியா ஊக்கி, சிறுத்தைக்கு ஒப்பிடுகின்றனர்? இதற்கு ஒரு காரணம் தெரிகிறது: சார்வாகம்/உலோகாயத நூல்களில் தாதகி என்னும் Bauhinia மரத்து மலர்கள் சிறுத்தையில் செந்தொல்லில் கரும்புள்ளிகள் இருப்பது போல உள்ளன. முக்கியமாக, திருவாத்தி மரத்தின் பூக்களைப் பாருங்கள். சீதாளிப் பனங்கள்ளு விசேடமானது. இம் மரம் தனியாக சிந்துவெளி Tablets காட்டுகின்றன. ஸ்ரீதாளிப் பனைகளில் விசேடமானது. அது போல, ஆத்தி மர வகுப்புகளில், திருவாத்தி விசேடமானது எனக் கொண்டாடியுள்ளனர். தாதகி tātaki , n. < dhātakī. Common mountain ebony. See ஆத்தி³, 1. தாதகிப்பூவுங் கட்டியு மிட்டு (மணி. 27, 264). ஆத்தி³ ātti , n. 1. Common mountain ebony, s.tr., Bauhinia racemosa; மரவகை. 2 Holy mountain ebony, m.sh., Bauhinia tomentosa; திருவாத்தி. சம்புமகிழாத்தி (சைவச. பொது. 29).

“தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” - வேதாந்த தேசிகர். “siṃhas te astu taṇḍulo vyāghraḥ paryodanam |
pṛdākūr astu nagnahur vṛkasya hṛdi saṃ srava || 5.10.3” இதன் விளக்கம், மணிமேகலை, காராணை விழுப்பரையன் வளமடல் கொண்டு அறியலாகிறது.

-------------
Seishi KARASHIMA, The Meaning of Yulanpen 盂蘭盆 — "Rice Bowl" on Pravāraṇā Day, 2013
https://www.academia.edu/9211768/The_Meaning_of_Yulanpen_盂蘭盆_Rice_Bowl_on_Pravāraṇā_Day
"Then, the question that follows is this: what was and is still offered in such bowls
on the occasion of the Pravāraṇā day in India, Theravāda Buddhist countries and East Asia?
The most popular was and is probably cooked rice, which is called odana in Sanskrit and
Pāli. Odana is what is given when monks are invited. For example, in the Prātimokṣasūtra or
the Pātimokkhasutta in Pāli, dating back to the earliest times of Buddhist history, odana,
meaning “boiled rice”, is referred to together with sūpa (“sauce”) and vyañjana
(“condiments”) as being offered to monks as alms.58 Odana as alms appears everywhere in
Pāli and Sanskrit literature59. Odana is boiled rice without fluid60, though it is defined
sometimes as “rice-porridge”.
60. Cf. Vism 70.18. odana-piṇḍa (“a lump of boiled rice”); Harivaṃśa 60.16. prakāśaudanaparvata (“a mountain
of shining cooked rice”; my thanks are due to Ms. Hiromi Oikawa for drawing my attention to this reference)."
-------------

Chapter Title: Yonder World in the Atharvaveda
Book Title: Vedic Cosmology and Ethics
Book Subtitle: Selected Studies
Book Author(s): Henk Bodewitz
Book Editor(s): Dory Heilijgers, Jan Houben and Karel van Kooij
Published by: Brill
Stable URL: https://www.jstor.org/stable/10.1163/j.ctvrxk42v.16
The relative lateness of the savayajñas also appears from the fact that one of the essential
elements,the rice-mess,uses rice, a product never mentioned in the ṚV. See also Gonda
(1965b,42).Heesterman(1993)unconvincingly tries toa ssociate the savayajñas and their
characteristic odanas with a very early period, observing that “…the odana would seem
to predate the gṛhya-śrauta divide”(106),and referring to“the odana ritual’s pre-śrauta …
character”(108) and to “the odana ritual that does not yet know the ritualistic apparatus
of the śrauta” (190).It is obvious that the savayajñas and the hymns associated with these
rituals in the AV know the details of the śrauta ritual, but form a reaction."

பிற பின்,
நா. கணேசன்
https://nganesan.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages