வளரிளம் பெண்களுக்கு தொற்றா நோய் , மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு

5 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Nov 13, 2025, 2:28:33 AMNov 13
to

 தண்ணீர் போதிய அளவு பருகுங்கள் 

 மருத்துவர் வேண்டுகோள் 



தேவகோட்டை - பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவ கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.வளரிளம் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொற்றா நோய் மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில் 6,7,8 ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாணவிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி  அனைவரையும் வரவேற்றார்.கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆல் தி சிலன்ட்ரன்  நிறுனத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.கண்ணங்குடி 
 அரசு ஆரம்ப சுகாதர நிலைய  மருத்துவர் மல்லிகை   பெண்களின் உடல் நல பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்து பேசுகையில்,மாணவிகள் ரத்த சோகை நீங்க கடலை மிட்டாய்,பொறி உருண்டை ,பழங்கள்,கீரை வகைகள்,காய்கறிகளை சாப்பிட வேண்டும்.மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும் என்றார்.நிகழ்வில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.செவிலியர் விஜிலா,மருந்தாளுனர் பாரதிக்கனி ஆகியோர் உடன் இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்   நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்றனர்.

                                பொதுவாக நாம் மருத்துவரை சென்று பார்த்தால் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே பேச இயலும்.அதற்குள் நமக்கு சீட்டை எழுதி கொடுத்து விடுவார்கள்.மீண்டும் சந்தேகம் கேட்கலாம் என எண்ணி சென்றோமானால் அவ்வளவு எளிதாக நாம் மருத்துவரை பார்க்கமுடியாது.ஆனால் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  மாணவிகள்,அவர்களின் அம்மாக்கள் ,பெண் ஆசிரியைகள் ஆகியோர் விளக்கமாக இந்த நிகழ்வில் தங்களின் சந்தேகங்களை போக்கி கொள்ள பள்ளியின் வழியாக தொடர்ந்து 1 2ஆண்டுகளாக ஏற்பாடு செய்து  நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடதக்கது. இதில் கலந்து கொண்டு சந்தேகங்களை விளக்கி சொல்லும் மருத்துவர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இந்த பணியை செய்து உதவி வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியது ஆகும்.

                                                இம்முகாமில் பள்ளி வயது மாணவிகள் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம்,அந்த மூன்று நாட்கள் தொடர்பான விளக்கங்கள்,மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள்,மாணவிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் பயத்தை போக்கவும்,மாணவிகளின் அம்மாக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கவும் இந்த ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது .

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கண்ணங்குடி  அரசு ஆரம்ப சுகாதர நிலைய  மருத்துவர் மல்லிகை   மாணவிகளுக்கு தொற்றா நோய் குறித்தும்,மாதவிடாய் தொடர்பாகவும் விளக்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆல் தி சிலன்ட்ரன்  நிறுனத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=0-Sxr_WbOOo

 

IMG_3493.JPG
IMG_3464.JPG
IMG_3473.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages