ஜீவபந்து T. S. ஶ்ரீபால்

29 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 27, 2024, 7:32:24 AM (9 days ago) Jun 27
to Santhavasantham, tiruva...@googlegroups.com
https://x.com/naa_ganesan/status/1806066380388581615    For further photos of the Jeevabandhu 124th birthday function.

தமிழ் மொழி எழுத்துள்ள மொழியாக உருவாகச் சமணர்களின் கொடை பெரிது.  வட நாட்டுப் பிராமி, சுமார் கி.மு. 5-ம் நூற்றாண்டிலே கொங்குநாடு வழியாகத் தமிழகம் வந்தடைகிறது. தமிழி எழுத்துக்கொண்ட பானை ஓடுகளில் மிகப்பெரும் பகுதி கொடுமணலில் பேரா. கா. ராஜன் குழுவினர் கண்டவையே [1]. பானை ஓடுகளில் கிடைக்கும் பிராமி எழுத்தில் 12 எழுத்துகள் தொல்காப்பியத்தில் இல்லாதனவாக வடமொழி பிராகிருத எழுத்துகள். தமிழ் பிராமி என ஐராவதம் மகாதேவன் பெயரிட்டமை உலக முழுதும் ஏற்கப்பட்டுள்ளது. https://unicode.org/charts/PDF/U11000.pdf .  தமிழ் மொழியில் எழுதும்போது "தமிழி" என்றழைத்தவர் இரா. நாகசாமி ஆவார். தொல்காப்பியர், திருவள்ளுவர், ... போன்றோரின் சமணப் பின்புலம் காட்டிய தமிழ்ப் புலவர் பலர். ஹார்வர்ட் பல்கலையின் ஓரியண்டல் ஸீரீஸ் மிகுபுகழ் பெற்றது. முதல் முறையாகத் தமிழ் பற்றிய நூல்: Early Tamil Epigraphy, 2003, Harvard Oriental Series, by Iravatham Mahadevan. சங்க காலக் கல்வெட்டுகளில் மிகப் பலவும் சமண முனிவர்களுக்கு அளித்த நிவந்தம்.

ஜீவபந்து T. S. ஶ்ரீபால் தமிழுக்குச் சமணர் கொடையை உலகுக்குப் பல நூல்கள், கட்டுரைகள் எழுதி வெளிக்கொணர்ந்தவர். அன்னாரது 124-ம் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அருணன் எழுதிய திருக்குறள் உரை வெளியிடப்பட்டது. முகப்பில் "திராவிட மொழிக் குடும்பம்" என்ற கருதுகோளை உருவாக்கிய கலெக்டர் F. W.எல்லிஸ் சமணர்கள் வழிவழிக் கொண்டாடிய துறவிக் கோலத்து தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பு. அனைவருக்குமான தேசிய நூல் என அறிவிக்க இந்தியாவின் செம்மொழிகளில் உள்ள ஒரே நூல் திருக்குறள் தான். ஜைந இளைஞர் மன்றம் நடாத்தும் "முக்குடை" இதழிகை தமிழின் முக்கியப் பத்திரிகை. அதன் ஆசிரியர் பேரா. கனக அஜிததாசுக்கு வந்த ஜீவபந்து விழா அழைப்பிதழ் இணைப்பில்.  

[1] K. Rajan et al., https://archive.org/details/early-brahmi-tamil-nadu-k-rajan-2021

தமிழின் உயிர் தொல்காப்பியம்! தமிழனின் உயிர் திருக்குறள்!
நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Jun 28, 2024, 4:56:15 PM (8 days ago) Jun 28
to Santhavasantham, tiruva...@googlegroups.com, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Dr.Krishnaswamy Nachimuthu, George Hart, Jean-Luc Chevillard, Eva Wilden, Nikolay Гордийчук

எல்லிஸ் வெளியிட்ட திருவள்ளுவர் தங்க நாணயம்  (கி.பி. 1818) தமிழ்ச் சமணர் சமுதாயம் வழிவழியாக வள்ளுவரை முனிவராக வணங்கியதைக் காட்டுகிறது. F. W. Ellis was the first one to formulate the theory of the Linguistic Family of Dravidian Languages, that has a deep impact in understanding India's history (Cf. Thomas Trautmann, University of Michigan). ஒரு குடைக் கீழே சமண முனிவர்களை அமைப்பர். இந்தப் பொற்காசில் உள்ளது சிறிய துண்டா? அல்லது, காசு சிறியதாய் இருப்பதால், மார்பைச் சுற்றி அணியும் நீண்ட துண்டின் முனையா? - என அறிய முடியவில்லை. காசின் அளவு சிறிது. எனவே, சமண மடங்களில் நாம் பார்க்கும் நீண்ட துண்டைச் சுருக்கமாய்க் காட்டியுள்ளனர் எனக் கருதலாம்.


சமய திவாகர முனிவர் "எம்மோத்து" எனத் திருக்குறளைக் குறிப்பிட்டுள்ளார்.  எங்கள் வைப்பு என வழிவழிக் கொண்டாடியுள்ளனர். அபிதான சிந்தாமணி சமணர்கள் பரம்பரையாய்க் கூறும் வாழ்த்து வெண்பாவைத் தந்துள்ளது:

முப்பாலும் உண்டோம் முலைப்பால் இனிநுகரோம்
எப்பாலுக் கப்பாலும் ஆயினோம் - எப்பொருளும்
உள்ள படியுணர்ந்தோம் ஓதிக் குறைதீர்ந்தோம்
வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து
                                                                    - ஜைநர் வாழ்த்து

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால்களை விளக்குவதால் முப்பால் என்பது  குறளின் முக்கியமான பெயர். முப்பாலும் உணர்ந்தாருக்கு வீடுபேறு உறுதி. இனிப் பிறவியில்லை என்பது கருத்து.


https://x.com/naa_ganesan/status/1806066380388581615    For further photos of the Jeevabandhu 124th birthday function.


F. W. Ellis (1777 - 1819) wrote first about Dravidian language family. https://en.wikipedia.org/wiki/Francis_Whyte_Ellis .
https://x.com/naa_ganesan/status/1806545770759241798

He also released a gold coin of Tiruvalluvar as a Jaina monk, a form worshipped by Tamil Jains for centuries. Valluvar is in Padmaasanam, and holds his book. In a similar fashion, see Gurunanak in Padmaasanam and holding his Guru Granth Sahib book.
https://x.com/GemsOfINDOLOGY/status/1806741875891814526

N. Ganesan

unread,
Jun 29, 2024, 9:32:16 AM (7 days ago) Jun 29
to vallamai, housto...@googlegroups.com
அறிஞர் கமில் சுவலெபில் இரத்தினச் சுருக்கமாக எழுதிய வள்ளுவர் சமணர் என்பதற்கான குறிப்புகள். பொதுப்படையாய் எல்லோருக்கும் எழுதியுள்ள குறளில் கொல்லாமை, புலால்மறுத்தல், கடவுள் வாழ்த்து, திருவள்ளுவ தேவரின்  சமயத்தைக் காட்டுகிறது. ஜைநர் பரம்பரையாய்க் கூறும் வள்ளுவர் மீதான வழிபாட்டுச் செய்யுள் எவ்வாறு திருவள்ளுவமாலையில் ஒரு வெண்பாவுக்கு மூலமாக அமைந்துள்ளது எனப் பின்னர் பார்ப்போம்.

"Almost every religious community (incl. Christians) have claimed Tiruvaḷḷuvar.  The ethics of T. are to some extent reflection of Jaina moral code, and we do find several purely Jaina technical terms (cf. K. V. Zvelebil, Tamil literature, 1975, 125 ftn 86). However, the moral code is eminently pragmatic and empirical." pg. 670, K. V. Zvelebil, Lexicon of Tamil literature, 1995.

”The epithets for a god used in TK are very Jain-like: cf. *malar micai-y-ēkiṉāṉ* (TK 3)"he who walked on the lotus flower"; according to the Jaina conception, arhat has the lotus flower as his vehicle and is called, in Jaina writings, *pūmēl naṭantāṉ*, and his feet *malarmicai naṭanta malaraṭi*; *eṇkuṇattāṉ* (9) 'he of the eight-fold qualities"; *aṟa-vāḻi-antaṇaṉ* (8) "the antaṇaṉ (who had the wheel of dharma)"; some of the other epithets given by Vaḷḷuvar to the god have a string ascetic flavor (TK 4 *vēṇṭutal vēṇṭāmai ilāṉ* "he who has neither desire nor aversion", TK 6 *poṟi vāyil aintu avittāṉ* "he who has destroyed the gates of the five senses") and suggest a Jaina atmosphere. Camaya Tivvākara Muṉivar (16th century), a Jaina commentator on the Jaina work Nīlakēci, cites the TK frequently as *em ōttu*, "our (i.e. Jaina) authority". The particular place of importance given to vegetarianism (TK 251 - 260) and abstention from killing (*kollāmai* cf. the Jaina a-himsaa, which is the most important of the *vrata-s*, "vows") e.g. TK 321-333, has a Jaina flavor too."
(K. V. Zvelebil, Tamil Literature, pg. 125, E. J. Brill, Leiden/Koln).

Nowadays, as Nations become more civilized, their democratic governments ban the capital punishment altogether. Tiruvalluvar, due to his compassion for all living beings, seems to be the First human on record to call for such a ban by Governments. See Nāmakkal Kaviñar's commentary on TK 550: https://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html

~NG

Reply all
Reply to author
Forward
0 new messages