திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 16, 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூர் வட்டம், திருக்கோவலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் ஜூலை 5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்கான சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் மேற்கு ராஜ கோபுரத்தின் நுழை வாயிலின் வலது பக்கத்தில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டுபிடித்தனர்.
தொல்லியல் துறை உதவி இயக்குநர் பொ. கோ. லோகநாதன் தலைமையில் , வரலாறு ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன், விழுப்புரம் வீரராகவன், செல்வ கணபதி ஆகியோர் அதனைப் படியெடுத்துப் படித்தனர். தேவஸ்தான பவர் ஏஜெண்ட் ஸ்ரீ . உ. வே. எஸ். கிருஷ்ணன் மற்றும் , மு. அன்பழகன், பா.கார்த்திகேயன், திருஞான சம்பந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
-இக்கல்வெட்டின் தொடக்கத்திலேயே ஸ்ரீமதே ராமானுசாய நம என்று வைணவ சமயத்தின் மாபெரும் தத்துவஞானியும், விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உருவாக்கியவருமான ஸ்ரீராமானுஜரின் திருவடிகளைத் தொழுது இக்கல்வெட்டு சர்வதாரி (கல்வெட்டில் சறுவாதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.) வருடம் பங்குனிமாதம் 10 ஆம் தேதி திருக்கோவலூர் ஆழ்வார்கள் திருக்கோவில் கருவூலத்திற்கு (சீயர்) ஜீயர் சன்னதியில் இருக்கும் ஸ்ரீ வைணவர்களான அல்லுண்டு விருப்புரரி சீயன் உபையமாக (தர்மமாக) தயன் என்பவர் சன்னதி வீதியில் குடியிருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும் மனம் ஒத்து எழுதிக் குடுத்தது என்னவெனில் பாழடைந்த முற்றத்தை (அங்கணம்) கல் வேலை செய்து, உட்பகுதியில் செங்கல் சுவரும், தட்டோடு ஆறுவரிசையும், கரையும் (பூசுவேலை) சாந்து மற்றும் பழுதான மரப் பொருட்களையும் சரி செய்து இந்த முற்றத்தில் போனது மற்றும் வந்ததையும், நீட்டிக்கொண்டு இருந்து வீழ்ந்ததையும், மேல் பகுதியில் ஒழுகினதையும் எல்லாம் சரிசெய்து நல்ல நிலையில் மதில் செய்து எங்கள் பகுதியிலே குடியிருந்து கடமைப்பட்டோம். இந்த பணியினை மேற்கொண்டு தப்பாது காக்கும் ஆழ்வார்களின் திருப்பாதத்தையே சுவாமியின் திருப்பாதமாக தப்பாது காத்துவரும் கோவில் கணக்கு அம்மை நயினார். என்பவர் எழுதி இருக்கின்றார்.
எம்பெருமானரின் ஜீயர் நேசம் விட்டுப் போகவும் கூரத்தாழ்வார், இராசாநாம ஜீயர் ராமன் மகன் நாராயணன், ராமாஞ்சியர், ஆளவந்தார், லஷ்மணியன், திருமலை ஆழ்வார்கள், திருக்கூரம் வேங்கடமுடையார்.
போன்றவர்கள் இதனை வழிவழியாக காத்து வரவேண்டும் என்று மேற்காணும் ஆழ்வார்கள் முன்னிலையில் எழுதி கையொப்ப மிட்டுள்ளனர். என்பதே இக் கல்வெட்டு உணர்த்துகிறது.
இக் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இக் கல்வெட்டின் காலம் கி.பி. 16,17 ஆம் நூற்றாண்டாக. இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.
இடம் மேற்கு கோபுரம் நுழைவாயிலின் இடது சுவர்.
1. ஸ்ரீ மதே ராமானுசாய ந: சறுவாதி ௵ பங்குனி புயதஉ திருக்கோவலூர்
2. நயினார் ஆழ்வார்கள் நயினார் ஸ்ரீ கோயில் பண்டாரத்துக்கு சுவாமி
3. எம்பெருமானார் சீயர் சன்னதியிலே யிருக்கும் சீ வயிஷ்ண வர்கள் அல்லுண்டு விருப்
4. புரரி சீயன் உபையமாக தயன் அங்கணம் சன்னதி வீதியில் குடியிருக்கிற ஸ்ரீ வயி
5. ஷ்ணவர்கள் எல்லாரும் எம்மில்லிசைந்து ஒலை குடுத்தபடி அங்கணம் கல்வேலை
6. உண்டானதும் முதிச்சு செங்கல் அகவாயி சுவரும் எங்கள் முன்பாக பண்
7. ணி வித்து தட்டோடும் ஆறுவரிசை பண்ணி காரையும் போட்டு சாந்தும் பண்ணி
8. தோட்டைக் கொம்மையும் திருது முகி தகையில் யிதுக்கு மேல் யிந்த அங்கண
9. த்தில் எங்கள் எங்கள் நிவேதனத்தில் முன் யிருத்தின அங்கணப் பொன் துவந்தது.
10. கோப்ப நீட்டுக் கொண்டு வீழ்ந்தது ஒழுகினது எல்லாம் நன்றாக மதில் பண்ணி
11. க் கொண்டு புத்திர பேராய முறையாக எங்கள் எங்கள் நிவேசனத்திலே குடியிருக்கக் கடவோமாளு
12) வம் யிந்த படிக்கு தப்பாது நயினார் ஆழ்வார்கள் நயினார் ஸ்ரீ பாதணையே சுவாமி சீ பாதடத்தாணையே சுவாமி சீபாத்தானண
13. யே தப்பாது கோயில் கணக்கு அம்மை நயினார். எழுத்து கல்வெட்டு தானம் பாசாரி அவர்கள்.
14) அவர்கள் அங்கணம் பதிலம் பணமுல் வந்த நேசநம் விட்டுப் போகவும் எம்பெருமான் சீயர் கூர்
15. ந் தாவார் அந்தம் பணம் இராசா நாம சீயர் மென் மகன் சிறால எம்பெருமானார் சன்னதி எதிர்
16. சீயர் ஆச்சிறங்க யாயி ராமாஞ்சியர் ஆளவந்தார் லஷ்மணையன் திருமலை
(17) ஆழ்வர்கள் -திருக்கோவலூர் ராமசீயர் திருக்கூரம் வேங்கடமுடையான்