உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு- செருமனி

82 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 30, 2014, 4:24:05 PM8/30/14
to thiru thoazhamai, imtc...@yahoo.com, IMTC Germany

 

 உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம்

40 ஆவது ஆண்டு நிறைவு விழா

 

12 ஆவது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும்

2014 அக்டோபர் 4,5 ஆம் நாள்களில் செருமனியில் நடைபெற உள்ளது.

 

உலகத் தமிழர் பண்பாடு, கலை,பண்பாடடு, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக

 

உலகளாவிய தமிழ்க்கல்வி

புலம் பெயர் தமிழர்கள்

தமிழர் சமயமும் வழிபாடும்

தமிழர் நாகரிகமும் தமிழ்க் கலைகளும்

தமிழ் மரபுகள்

தமிழ் வளர்ச்சியின் அறிவியல் மேம்பாடுகள்

உலக நாடுகளில் தமிழர் நிலை

உலகத் தமிழர் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு

 

ஆகிய கருப்பொருள்களில் பேராளர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்.

ஏ4 தாள் அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் ஒருங்குகுறி(Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்த கட்டுரையையும் கடைசிப் பக்கத்தில் உள்ள பேராளர் பதிவுப் பகுதியில் உள்ள தகவல்களையும் imtcg...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆவணி 25, 2045 / 10.09.2014 க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மாநாட்டுக் குழு

Conference Program Committee

12th  International Conference Tamil Culture & 40th Anniversary of  IMTC

உலகத்தமிழ்ப்பண்பாட்டுஇயக்கம், ஐரோப்பியஒன்றியம்

International Movement for Tamil Culture, Europe Union

Postfach 2129, 48431 Rheine, Germany.

 

Phone:    0049-597114258                    0049-5211 60523

0049-15211 317329                 0049-15111 557890

0091-98423 74750

 

IMTC-Germany-Conference-2014-Page01

IMTC-Germany-Conference-2014-Page02

 

IMTC-Germany-Conference-2014-Page04 IMTC-Germany-Conference-2014-Page03

அகரமுதல 42


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

N. Ganesan

unread,
Aug 30, 2014, 5:42:39 PM8/30/14
to vall...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, imtc...@yahoo.com, imtcg...@gmail.com, தேமொழி, மின்தமிழ்
செருமனி மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

தமிழர் சமயமும் வழிபாடும் - இத் துறையில் ஒரு கட்டுரை அனுப்புகிறேன்:

”ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர்”

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 30, 2014, 7:14:53 PM8/30/14
to vall...@googlegroups.com, imtc...@yahoo.com, imtcg...@gmail.com
அன்பின் திருவள்ளுவனார் அவர்கட்கு,

மின் தமிழ் உலகினில் சந்தவசந்தம் ஒரு சகாப்தம். தமிழின் இன்றைய பெரிய மரபுக்கவிகள் பலர் அங்கே
எழுதுகிறார்கள். நீங்கள் முற்செலுத்திய மாநாட்டு மலரை அங்கு வெளியிட்டேன்.
நல்ல கட்டுரைகள் செருமனி மாநாட்டுக்கு வரலாம். 

என் மடல் சந்தவசந்தத்தில்:

சந்தவசந்தப் புலவர்களே,

உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மூன்றாண்டுகட்கு ஒருமுறை ஏதாவது
ஒரு நாட்டின் பெருநகரில் - 1977 முதல் - தமிழ்மாநாடு ஒன்றை நடாத்திவருகிறது.

யாப்பு, இலக்கணம், சங்கம், பக்தி இயக்கம், குறள் உள்ளிட்ட நீதிநூல்கள், தமிழ்க் காவியங்கள், திருமுறைகள், நாலாயிரம்,
திருப்புகழ், குமரகுருபரர், தலபுராணங்கள், பிரபந்தங்கள், வண்ணச்சரபம், வள்ளலார், உவேசா பதிப்புகள், ஆறுமுக 
நாவலர், மறைமலை அடிகள், அனுமந்தன்பட்டி மதுரகவியார், ... என்று நல்ல கட்டுரை ஒன்றைத் தாங்கள் ஜெர்மனி மாநாட்டுக்கு அனுப்பலாமே. 

நன்றி பல!
நா. கணேசன்

இம் மாநாட்டுக்கு ஓர் ஆய்வுக் கட்டுரை அனுப்ப உள்ளேன்:
”ஆத்திசூடி அமரும் தேவர் பார்சுவநாதர்”

சந்தவசந்தக் கவிகள் யாருக்காவது படிக்க விருப்பம் இருந்தால் தனிமடல் அனுப்புங்கள் (naa.ganesan[AT]gmail.com)
அச்சானபிறகு இணையத்தில் வெளியிடுவார்கள்.
Reply all
Reply to author
Forward
0 new messages