வடவெழுத்து வடசொல்: யாவை அவை?

285 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Jun 17, 2014, 10:16:43 PM6/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com

வடவெழுத்து வடசொல்: யாவை அவை?

 

முனைவர் கி. லோகநாதன் 18-6-14

 

அன்பர்களே

 

எழுத்து ஆராய்ச்சி எனக்கு கைவந்த கலை அல்ல. தொல்காப்பியத்தில் பொருளதிகாரமும் சொல்லதிகாரமே என்னை மிகவும் கவர்ந்தவை. ஆயினும் சுமேருத் தமிழ் ஆய்வில் ஈடுப்பட்ட காரணத்தல் எழுத்தாய்வும் சிறிது செய்ய வேண்டியக் கட்டாயம்.. இதனால் பிழைகள் இருக்கலாம். திரித்தி பிழைகலைப் போக்கினால் மகிழ்வேன்

 

இந்த கெஸ்த்தின் அன்னா ஆய்வில் பல வகையான சகரக்கிளவிகள் ஆய்விற்கு வந்தன. அவை ஸ் ஷ் ஜ எனும் எழுத்துக்கள் சுமேருத் தமிழில் இருப்பதைக் காட்டுகின்றன.

 

காண்க:

 

https://groups.google.com/forum/?fromgroups#!topic/mintamil/2-oRZ1wPz-s

 

இவை முதற் சங்கத் தமிழ் எழுத்தாக இருக்க, ‘வடவெழுத்து’ என்று தொல்காப்பியர் கூறும் எழுத்துகளில் இவை அடங்கும் என இவை செங்கிருதத்திற்கே உரிய எழுத்துக்களா என்ற கேள்வி எழுகின்றது.  வடவெழுத்து வடசொல் என்பதின் பொருள்தான் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

 

யாவை இந்த சகர வெழுத்துக்கள்?

 

ஸ் : கெஸ்த்தின் அன்னா. தென்.தமிழில்: அகஸ்த்தியம், அகஸ்த்தியர். இவையே அகத்தியர் என்றும் அகத்தியம் என்றும் விளங்குகின்றன.

 

ஷ் : சுமேருத் தமிழ் ‘நிஷபா’ என்று விளங்கும் இச்சொல் ‘நிடபா” என்றும் விளங்குவதைக் காண, இன்றும் வழக்கில் இருக்கும் நஷ்டம்> நட்டம், துஷ்டன்> துட்டன் போன்ற வழக்குகளிலும் இது உண்டு எனத் தெரிகின்றது’

 

ஜி: இதுவும் இன்றும் ஜீவ(சீவன்) ஜலம்(சலம்) போன்ற சொற்களில் விளங்குகின்றது.

 

ஆக செங்கிருதத்தில் இன்றும் ஒதுக்கப்படாது விளங்கும் இவ்வெழுத்துக்கள் சுமேருத் தமிழில் உண்டு என்றும் அங்கு இப்பொழுது நடக்கும் எழுத்து மாற்றங்கள் ( ஷ்> ட். ஜ்> ச் போன்றவை)  நடந்துள்ளது என்றும் தெரிகின்றது.

 

ஆக தொல்காப்பிய வடவெழுத்து வடசொல் என்பவை யாவை? அவை வழக்கிழந்த ஆனால் செய்யுள் புனைவதற்கு  ஏற்றவை என்றாலும்  பட்டுப்போன எழுத்துக்களை ஒதுக்கி அவற்றின் மாற்றுகளோடு  வரும் சொற்கள் என்றும் பொருள் கொள்ள முடியுமா>

 

தொல்காப்பிய சூத்திரங்கள்

 

எச்சவியல்

 

880

 

இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொலென்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

 

பொருள்(உலகன்)

 

புலவர்கள் யாக்கக் கூடிய செய்யுள்கட்கு உரிய சொற்கள் இயற்சொல் திரிசொல் திசைச் சொல் என்பவற்ரொடு வடசொல்லும் அடங்கும்

 

884

 

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே

 

பொருள்(உலகன்)

 

இவற்றில் வடசொல் என்பது வழக்கிழந்து பட்டுப்போன தமிழ் எழுத்துக்களை ஒதுக்கி அவற்றின் மாற்று எழுத்துக்களோடு புணர்ந்த சொல்லாகும் எ-டு நஷ்டம்> நட்டம் அகஸ்த்தியம்> அகத்தியம் ஜீவன்> சீவன்.

 

இங்கு ஷ் ஸ் ஜ் என்ற எழுத்துக்கள் வழக்கிழந்துபோக அவற்றை மாற்றி ட் த் ச் என்ற பெயர்த்து எழுத அவை வடசொல் ஆகின்றன. இவை செய்யுள் யாப்பதற்கு ஏற்றச் சொற்களே யாம்.

 

இவ்வாறு இந்த சூத்திரங்களை புரிந்துகொள்ள முடியுமா? இல்லை இது பிழையா?

 

தமிழ் அறிஞர்கள் ஓர் விளக்கம் தந்தால் மகிழ்வேன்

 

உலகன்

 

 

 

 

 

 

தத்து பித்து

unread,
Jun 17, 2014, 10:42:08 PM6/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
தொல்காப்பியம் பானினிக்கு முன் வாழ்ந்த ஐந்திரன் வகுத்த இஅல்க்கண அடிப்படையில் அமைந்ததாகவும் பானினி பற்றித் தொல்காப்பியக் குறிப்புகள் இல்லாததாலும் தொல்காப்பிஅய் குறிப்பிடும் வட எழுத்து வடசொல் என்ற கருத்துருவை பானினி வகுத்த சமஸ்கிரித இலக்கணத்துக்கு வலிந்து பொருத்துவதுபோல் தோன்றுகிறதே

தத்து பித்து

K. Loganathan

unread,
Jun 18, 2014, 2:59:46 AM6/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
பேராசிரியர் அவர்களே

 தாங்கள் என்னதான் கூற வருகின்றீர்கள் என்று புரியவில்லை,  நான் இந்த சிறிய ஆய்வில் ஸ் ஷ் ஜ்  போன்ற எழுத்துக்கள் தொல்தமிழ் காலத்தில் சுமேரு காலத்தில் தமிழில் இருந்த எழுத்துக்களே என்றும் ஆனால் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிழந்த ஆகவே பட்டுவிட்ட எழுத்துக்கள் என்ற கருத்தில் தான் தொல்காப்பியர் குறிப்பிட்ட சூத்திரங்களை யாத்தார் என்று பொருள் விளக்கம் தந்துள்ளேன்.

'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனும் கிளவிக்கு பலர் பலவிதமாக பொருள் கூறியுள்ளனர். ஆயினும் மொழிக்கு  உலகிலேயே முதன் முதலில் அசை எழுத்துரு தந்த தொல்தமிழர்கள் தொடர்ந்து மொழி ஆராய்ச்சி எழுத்து ஆராய்ச்சி எல்லாம் செய்யாது இருந்திருக்க மாட்டார்கள். தொல்காப்பியம் இந்த சுமேரிய காலத்திலேயே எழுந்துவிட்ட மொழி ஆராய்ச்சியின் விளைவே யாகும்.

பாணினியின் மொழி நூலும் இப்படியே தோன்றி இருக்கலாம்

உலகன்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jun 18, 2014, 3:04:16 AM6/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
உலகிலேயே முதன் முதலில் அசை எழுத்துரு தந்த தொல்தமிழர்கள் தொடர்ந்து மொழி ஆராய்ச்சி எழுத்து ஆராய்ச்சி எல்லாம் செய்யாது இருந்திருக்க மாட்டார்கள்.

~ இது மொழியியலை தவிர்த்த ஊகம் தானே!

இன்னம்பூரான்

K. Loganathan

unread,
Jun 18, 2014, 4:03:38 AM6/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு இ அவர்களே

 இது ஊகம் இல்லை. பலவகையான மொழியில் ஆய்வுகள் சுமேருத் தமிழ் காலத்திலேயே தொடங்கிவிட்டது உணர்ந்தே கூறுகின்றேன். 

1. தொல்காப்பியம் கூறும் 'ஏது நுதலிய முதுமொழி" கருத்து

2. செய்யுளியலின் உறுப்பியல் கருத்து. திங்கிர் சாரா கோயிலில் பண்டரங்கள் எவ்வாறு ஓதப்படும் பாடப்படும் பாடல்கட்கு தெய்வ நலங்கள் கூடி வருகின்ற்ன என்று ஆயதொடங்கியுள்ளது.

4. சூல்கியின் முதரீபியத்தில் ( HymnB )  தொல்காப்பிய மரபியலில் வரும் நூல் உத்தி கருத்தின் தோற்றம் என்றவாறு  வரும் குறிப்புக்கள்

5, மேலும் தொடகத்தில் (கி.மு 4000 வாக்கில்) சித்திர எழுத்து. காட்டாக  'san:  ஒருவன் என்பதற்கு ஓர் மனிதனின் சிரசையே வரைந்தது. இதிலிருந்தே அடுத்த கட்டமாக  asai ezutturu  (syllabic script)   தோன்றியது. இதன் பிறகே தொல் காட்டும் நெடுங்கணக்கு தோன்றி இருக்க வேண்டும், அதில் மெய் எழுத்துக்கள் புள்ளிடன் வேறுபடுத்தப்பட்ட நிலை,

இப்படிப்பட்ட உண்மைகளை வைத்துதான்  மொழியியலின் சுமேருத் தோற்றத்தை பற்ரி கூறியுள்ளேன்.

உலகன்

K. Loganathan

unread,
Jun 18, 2014, 4:24:13 AM6/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 பேராசிரியர் அவர்களே

சுமேரு மொழி தொல்தமிழே,  இருக்கிருதம் அதன் ஓர் திரிபே என்ற கருத்துக்களை முன்மொழிந்து தொடர்ந்து அதற்குரிய பல சான்றுகளையும் கொடுத்துவருகின்றேன். இது உணமை என்றால் செங்கிருதம் இந்தோஆரிய மொழி குடும்பம் தமிழ் திராவிட மொழி குடும்பம் என்ற கருத்து பட்டுபோகின்றது, இரண்டுமே திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த மொழிகள் தான்

இனி இந்தக் கட்டுரையின் நோக்கம் தொல்காப்பியர் தொல்தமிழின் சில கூறுகளை அறிந்திருக்கலாம் என்றும் அவற்றில்  ஸ்>த, ஷ்>ட் ஜ்>ச் என்றெல்லாம் பயில்வதைக் க்ண்டு அதனை முறைப்படுத்த எண்ணி இந்த சூத்திரங்களை யாத்திருக்கலாம் என்று ஓர் கருத்தை பதிவுசெய்துள்ளேன்

செங்கிருத  சொற்களை மாத்திரம் செய்யுள் ஈட்டச் சொல்லாக ஏன் கருத வேண்டும்? அன்று பரந்த அளவில் பாலி போன்ற பிராகிருத மொழிகள் இருந்தனவே?

'வடவெழுத்து" என்பதற்கு 'வழக்கிழந்த எழுத்து' அதாவது 'பட்ட எழுத்து ' என்று பொருள் காண முயல்கின்றேன்

இன்னொன்று/ 'ஆரியம்' என்பது சுமேருத் தமிழில் பயிலும் ஓர் சொல். ' lu-gal ari-a>  உளுகள் ஆரிய    என்று வருவதைக்ம்காட்டியுள்ளேன். இச்சொல் பரவி பலர் தங்களை 'ஆரியர்" என்று அழைத்துக்கொண்டதாக இருக்கலாம்.

பண்டைய ஆரியர்கள் சுமேரியத் தமிழர்களே

உலகன்





2014-06-18 15:15 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
மொழியியல் குறிப்பாக வரலாறு சார் மொழியியல் மொழியின் வளர்ச்சியை நான்குநிலைப்படுத்துகிறது. சமஸ்கிருதம் முழுமையாக வளர்ந்து நான்காம் நிலையை அடைந்த மொழி என்று மொழியியலார் குறிப்பிடுவர்

தமிழ் மொழியில் வளர்ச்சி இரண்டாம் நிலை அளவில் உள்ளது என்றும் அது முழுமையாக வளர்ச்சி அடையாத எளிமையான மொழி​ என்று வரலாற்று மொழியியலார் குறிப்பிடுவர்

இரண்டு மொழிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமை உள்ளது. 

சமஸ்கிரிதத்தில் இருந்து உருவானதே தமிழ் என்று தொடர்ந்து வாதம் நடத்தும் நிலையில் சிலர் தமிழில் இருந்து தோன்றியதே சமஸ்கிரிதம் என்று வாதிடுகிறார்கள்

தமிழும் சமஸ்கிரிதமும் இன்று ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆரிய மொழி திராவிட மொழி என்ற மொழிக்குடும்பங்களைச் சார்ந்தது என்ற கருத்தை மறுத்து இரண்டு மொழிகளுக்கும் ஆதார மொழி சுமேரு மொழி என்று கூறும்போது அதற்கான வாதங்களை முன்வைக்கும்போது வடமொழி வட எழுத்து பற்றி குறிப்பிடும்போது ஆரியம் என்ற சொல் வடபுலத்தைக் குறிப்பதா அல்லது பாரசீகத்தைக் குறிப்பதா என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டியது அவசியம்

நாகராஜன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jun 18, 2014, 6:16:17 AM6/18/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com



17 ஜூன், 2014 10:16 பிற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:
உலகன் ஐயா,

தமிழில் இருந்து பின் பட்டுபோன தமிழ் எழுத்துகள் தெலுகில் உண்டு. அவை ழகரமும் ஓரளவுக்கு றகரமும்

றகரம் ஒற்றுடன் வராத போது அப்படியே பயிலும். காட்டு: வேறு,  ஏறு(ஆறு=நதி)
ஆயின் ஒற்றுடன் வரும்போது டகரமாகும். காட்டு: மாற்றம் = மாட்ட, ஆற்றில் = ஏட்டில், சுற்று= சுட்டு.

ழகரம் ஒன்றா அழியும் அல்லது டகரமாக திரியும்

உழுந்து = உத்து,  கழுத்து = கொத்து (அழியும் இடம்), 
ஏழு= ஏடு, விழு= படு, அழு= ஏடுவு (திரியும் இடம்)

நீங்க சொல்லியவண்ணம் பட்டுபோனது என்றால் இது போன்ற விதிகளைக்கொண்டு அவை என்று என்ன சொற்கள் என சொல்லலாமே

நீங்க குறிப்பிடும் நஷ்டம், இஷ்டம், ஜீவன் போன்றன தமிழ் சொற்கள் இல்லை. அவை வடஎழுத்து ஒரீ வந்த வடசொற்கள்

இது போல சுமேரிஎழுத்து ஒரீ வந்த தமிழ் சொற்கள் பட்டியல் இடுங்க.

 தமிழ் தான் தோன்றி. அது இன்னொரு மொழியில் இருந்து திரியவில்லை. புரோட்டோ திராவிடம் என்பதும் மாயை. பிற திராவிட சொற்கள் தமிழில் இருந்து திரிந்தவையே. 

அதனால் இதுவரை உங்க வாதம் எவையும் என்னால் ஏற்க இயலவில்லை.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

K. Loganathan

unread,
Jun 18, 2014, 7:36:38 AM6/18/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு வேந்தன் அவர்களே

 தங்கள் கூற்று

//நீங்க குறிப்பிடும் நஷ்டம், இஷ்டம், ஜீவன் போன்றன தமிழ் சொற்கள் இல்லை. அவை வடஎழுத்து ஒரீ வந்த வடசொற்கள்//

இவற்றில் பல சுமேருத் தமிழில் உண்டு,  kesda>  கட்டு, கஷ்ட  ji>  ஜி. ஜீ போன்றவை  

இவை சுமேருத் தமிழ் சொல்லும் செங்கிருதத்தில் அழியாது நிற்கும் சொல்லும் ஆகும் மேலும் செய்யுள் வழக்கில் இல்லாது பேச்சு வழக்கில் இன்று இருப்பவையும் ஆகும்.

சுமேரு காலத்திலிருந்து இவை பேச்சு வழக்கில் இருக்கலாம் அல்லவா?  செய்யுள் வழக்கில் ஏதோ ஓர் காரணம் பற்றி வழக்கிழந்து போயிருக்கலாம் அல்லவா?

உலகன்





--

வேந்தன் அரசு

unread,
Jun 19, 2014, 7:34:00 AM6/19/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com



18 ஜூன், 2014 7:36 முற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

 திரு வேந்தன் அவர்களே

 தங்கள் கூற்று

//நீங்க குறிப்பிடும் நஷ்டம், இஷ்டம், ஜீவன் போன்றன தமிழ் சொற்கள் இல்லை. அவை வடஎழுத்து ஒரீ வந்த வடசொற்கள்//

இவற்றில் பல சுமேருத் தமிழில் உண்டு,  kesda>  கட்டு, கஷ்ட  ji>  ஜி. ஜீ போன்றவை  

இவை சுமேருத் தமிழ் சொல்லும் செங்கிருதத்தில் அழியாது நிற்கும் சொல்லும் ஆகும் மேலும் செய்யுள் வழக்கில் இல்லாது பேச்சு வழக்கில் இன்று இருப்பவையும் ஆகும்.

சுமேரு காலத்திலிருந்து இவை பேச்சு வழக்கில் இருக்கலாம் அல்லவா?  செய்யுள் வழக்கில் ஏதோ ஓர் காரணம் பற்றி வழக்கிழந்து போயிருக்கலாம் அல்லவா?

சுமேருகிருதம் என்று சொன்னால் இவை எல்லாம் சொலலமலே விளங்கும். நீங்க தமிழ் என்பதால் தான் பிரச்சனைகள்

 தமிழில் அ விகுதி கொண்ட சொற்கள் இல்லை
ஆனால் வடசொற்களில் அஹ விகுதி இல்லா சொற்கள் மிக குறைவு.

அதனால் kesda> சுமேருகிருதமே.

K. Loganathan

unread,
Jun 19, 2014, 8:15:39 AM6/19/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு வேந்தன் அரசு அவர்க்ளே

 அவரசரப்படாது ஒருசில கூறுகளை வைத்துக்கொண்டு  சுமேருத் தமிழை சுமேரு கிருதம் என்று கூறவது பொருந்துவது அல்ல. ஆனால் நான் கூறுவது போல,  செங்கிருதம் சுமெருத் தமிழின் திரிபு. அங்கு செங்கிருதத்தின் அடிப்படைக் கூறுகள் இருக்கின்றன ஆனால் வாசிப்போருக்கு அது தொல் செங்கிருதம் என்ற உணர்வு பிறக்காது. ஆயினும் அது தொல தமிழ் என்ற உணர்வு பிறக்கின்றது. இப்படித்தான் நான் சுமேரு மொழியை தொல்தமிழ் என்று அடையாளம் கண்டேன்,

கீழே உள்ள கிளவிகளைப் பாருங்கள். இவை செங்கிருதம் என் ற உணர்வை எழுப்புகின்றதா அல்லது தொல்தமிழ் என்ற உணர்வை எழுப்புகின்றதா? மேலும் இப்பொழுது நான் மின்பதிப்பாக்கி வருகின்ற 'தமுஜியின் மம்மு" என்ற நூலின் வரிகலையும் பாருங்கள். அவை தொல் செங்கிருதம் என்ற உணர்வை பிறப்பிக்கின்றதா?

மேலும் இப்பொழுதுதான் உறவுப்பெயர்களை முடித்தேன். அங்கு  மருமான் மச்சான் என்றெல்லாம் இருக்கின்றது. இவை செங்கிருதத்தில் உள்ள உறவுப் பெயர்களா?

உலகன்

1. lugal-e mu-ni nig-du-se
   The king's name, according to what is becoming

    உளுகள்ளே  மோஅன்னை நீடுசேய்

2.u-su-du inim pa-e ag-de
    In order to bring (it) into light , for distant days, by means of the word...

    ஊ சூடு எனம் பார் ஏ ஆக்கிடே

3. Sul-gilugal Uri-ma-ke
    Sulgi's, he king of Ur

    சூல்கி, உளுகள் ஊரிம்மக்கே


--

N. Ganesan

unread,
Jun 21, 2014, 9:47:55 AM6/21/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, June 17, 2014 7:42:06 PM UTC-7, தத்து பித்து wrote:
தொல்காப்பியம் பானினிக்கு முன் வாழ்ந்த ஐந்திரன் வகுத்த இஅல்க்கண அடிப்படையில் அமைந்ததாகவும் பானினி பற்றித் தொல்காப்பியக் குறிப்புகள் இல்லாததாலும் தொல்காப்பிஅய் குறிப்பிடும் வட எழுத்து வடசொல் என்ற கருத்துருவை பானினி வகுத்த சமஸ்கிரித இலக்கணத்துக்கு வலிந்து பொருத்துவதுபோல் தோன்றுகிறதே

தத்து பித்து

பானினி என்றால் பாணினி பற்றிக் குறிப்பிடுகிறீர்களா?

ஐந்திரன் என்று யாரும் இருந்ததாக வடமொழி இலக்கணங்கள் குறிப்பிடுதலில்லை. தமிழில் அகத்தியர் அப்படியோ,
அதுபோல் இந்திரனை வடமொழிக்கு இலக்கியகர்த்தாவாகச் சொல்வர். இந்திரன் இயற்றிய வியாகரணம் ஐந்திரம்.
ஐந்திரம் பாணினி காலத்துக்கு முந்திய வடமொழி (வேதம், ப்ராகிருதங்கள்) கிளைமொழிகளுக்கு இருந்த
இலக்கணங்களைச் சுட்டுகிறது எனலாம். அகத்தியர் எப்படி ஒரு mythical character-ஓ அவ்வாறே இந்திரன்
வடமொழி இலக்கணகாரர் என்பது எனலாம். பழைய இலக்கண விதிகள் (பாணினியில் இல்லாதவையும்
இவற்றில்) எல்லாவற்றுக்கும் இந்திரன் ஆசிரியன் என்பது.

நீங்கள் ஐந்திரன் என்றதும் தமிழ்நாடு அரசாங்கம் அச்சிட்ட “ஐந்திரம்” என்ற சுவடி நூல் நினைவுக்கு வருகிறது.
அது போலியான நூல் என்று ஐராவதம் மகாதேவன் தினமணி நாளிதழில் வாதாடினார்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jun 21, 2014, 11:09:30 AM6/21/14
to vallamai, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com



19 ஜூன், 2014 8:15 முற்பகல் அன்று, K. Loganathan <k.ula...@gmail.com> எழுதியது:

 திரு வேந்தன் அரசு அவர்க்ளே

 அவரசரப்படாது ஒருசில கூறுகளை வைத்துக்கொண்டு  சுமேருத் தமிழை சுமேரு கிருதம் என்று கூறவது பொருந்துவது அல்ல. ஆனால் நான் கூறுவது போல,  செங்கிருதம் சுமெருத் தமிழின் திரிபு. அங்கு செங்கிருதத்தின் அடிப்படைக் கூறுகள் இருக்கின்றன ஆனால் வாசிப்போருக்கு அது தொல் செங்கிருதம் என்ற உணர்வு பிறக்காது. ஆயினும் அது தொல தமிழ் என்ற உணர்வு பிறக்கின்றது. இப்படித்தான் நான் சுமேரு மொழியை தொல்தமிழ் என்று அடையாளம் கண்டேன்,

கீழே உள்ள கிளவிகளைப் பாருங்கள். இவை செங்கிருதம் என் ற உணர்வை எழுப்புகின்றதா அல்லது தொல்தமிழ் என்ற உணர்வை எழுப்புகின்றதா? மேலும் இப்பொழுது நான் மின்பதிப்பாக்கி வருகின்ற 'தமுஜியின் மம்மு" என்ற நூலின் வரிகலையும் பாருங்கள். அவை தொல் செங்கிருதம் என்ற உணர்வை பிறப்பிக்கின்றதா?

மேலும் இப்பொழுதுதான் உறவுப்பெயர்களை முடித்தேன். அங்கு  மருமான் மச்சான் என்றெல்லாம் இருக்கின்றது. இவை செங்கிருதத்தில் உள்ள உறவுப் பெயர்களா?

உலகன்

1. lugal-e mu-ni nig-du-se
   The king's name, according to what is becoming
 

    உளுகள்ளே  மோஅன்னை நீடுசேய்

lugal-e mu-ni nig-du-se= லுகல் இ மு நி நிக் டு செ 

தமிழ்போல இல்லை. என் சிற்றறிவில் தமிழ் சொற்றொடர் இப்படி அமைவதும் இல்லை.
 

ஏற்கனவே சொல்லியது போல் உங்க நோக்கில் போகும் அளவுக்கு என் அறிவு வளரவில்லை ஐயா

N. Ganesan

unread,
Jun 21, 2014, 11:14:47 AM6/21/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
மொழியியல் அறிஞர்களுகோ, தமிழ் மாணவர்களுகோ இப்படி அறிவு இன்னும் வளரவில்லை.
முனைவர் காளைராஜன் காரைக்குடி போன்ற ஊர்களில் நிறுவ உள்ள சுமேரியன் தமிழா? -
என்று ஆராயப் போகிற முனைவர் பட்ட மாணவர்களும் நிறுவிவிடுவார்கள்.

திருவரங்கம் மோகனரங்கனின் இந்த இழை படித்துப் பார்த்தீர்களா? ரங்கனார்க்கு அவ்விழையில்
ஒரு கேள்வி தொடுத்திருந்தேன்:
சு. கோதண்டராமன் ஐயா அவ்விழை படித்தார்களா? - என்றும் கேட்கணும்.

நா. கணேசன்

 
--

K. Loganathan

unread,
Jun 21, 2014, 8:31:40 PM6/21/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 திரு வேந்தன் அரசு அவர்களே

 நான் ஏற்கனவே பன்முறை கூறியுள்ளதுபோல், சுமேரு ஆப்பு எழுத்து பூரத்தியாகாத எழுத்து முறை,. அதில் அழுந்தியவர்கட்கு அது சுறுக்கெழுத்துபோல் தோன்றுகின்றது. திரு புருஷோத்துமன் பிள்ளை இப்படித்தான் கூறுகின்றார்,

 gal  என்பது பல் இடங்களில் பயில்வது போல தமிழ் 'கள்' தான். இதேப் போல kal  என்பது 'கற்றல்" எனும் கருத்துடைய 'கல்" தான். மேலும் 'ilu"  என்றும் வரும் சொல் "இழு> அழு" என்பதுதான்

ஆனால் இந்த வேறுபாடுகள் இருந்தாலும் அக்காடியத்டில் இல்லாதுபோக வாசிப்பில் காட்டப்படாது போகின்றது போலும்

இப்பொழுது வாசிப்பு செமித்திய மொழி ஊடே வந்துள்ள சில குறைபாடுகள் உள்ள வாசிப்ப். இந்த குறைபாடுகளை  சிறிது நீக்கி வாசித்தால் பொருள் விளங்கும். 

ஆயினும் இப்படியும் இல்லாது நேரே தமிழ் என்றே அறிய வரும் எத்தனையோ சொற்களும் இருக்கின்றன.

இப்பொழுது நான் மின்பதிப்பாக்கி வரும் 'தமிழியின் மம்மு" வில் இதைக் காணலாம்

ஆங்கில 'hamilton"  தமிழ் 'அம்பட்டன்' என்று திரிகின்றது. இதைப் போலத்தான் சுமேரியச் சொற்கள் அக்காடிய மொழியின் கூறுகளால் திரிந்தும் உள்ளது.

எனது முயற்சிகள் எல்லாம் இந்த திரிபுகளை ஓரளவு நீக்கி, மூலத்தை காண்பது,

 Dumuzi- யில் ' ambar gu gar-u"   ( என்று வருகின்றது. பொருளிலும் சொல்லுருவிலும் அதிகம் மாற்றம் இல்லாமல் இதனை' அம்பர் கூவ் கரு" என்று காணலாம் இப்படி எத்தனையோ கிளவிகள் எனக்து சுமேரிய தொல்தமிழ் என்று காட்டி நிற்கின்றது.

உலகன்


--

K. Loganathan

unread,
Jun 24, 2014, 8:59:37 PM6/24/14
to MEYK...@yahoogroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, vall...@googlegroups.com
திரு சின்னத்துரை அவர்களே

 எழுத்துகட்கு பிறப்பிடமும் உண்டு ஒலி வடிவமும் உண்டு.  தொல்காப்பியர் இரண்டையும் குறிப்பிட்டுள்ளார். அதனை மறுப்பதற்கில்லை, ஆயினும் நன் பிரச்சினை அதுவல்ல. 

'வடவெழுத்து' என்று அவர் கூறும் எழுத்துக்கள் செங்கிருத எழுத்துக்கள் மாத்திரம்  அல்லாது வழக்கிழந்துபோன தொல்தமிழ் எழுக்துக்களாக இருக்கலாம் என்று தான் நான் கூற முற்படுகின்றேன். 'வட' என்பதற்கு 'வடக்கு' என்ற திசை கருத்தோடு 'வழக்கிழந்த, பட்டுப்போன 'எ ன்ற கருத்துகளும் இருக்கலாம் என்றே கூற முற்படுகின்றேன்

இப்போதுள்ள திராவிடத் தொல்லியல் ஆய்வில் சுமேருத் தமிழிற்கு ஓர் சிறப்பிடம் உண்டு. அது முதற் சங்கத் த்மிழே என்பது என் கூற்று. வடமொழியும் அதன் திரிபே என்பதும் என் கருத்து.

சுமேருத் தமிழில் ஸ் ஷ்  ஜ் போன்ற எழுத்துக்கள் இருந்திருக்க, அவை தென் தமிழில் வழக்கிழந்து போக, செங்கிருதத்தில் பாதுகாக்க்பட்டுள்ளன என்றே கூறு வருகின்றேன்/

இப்படிப்பட்ட ஆய்வில் தாங்களும் சுமேருத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டு அங்கு நிலவிய எழுத்துக்களை வரிசை படுத்தினால் உதவியாக இருக்கும்.

காட்டாக்  சுமேரு அறிஞர்கள் சில ஆப்பு எழுத்துக்களை அ-ம(ama)   என்றும் அ-அ (a-a) என்றும் எழுகின்றார்கள். இவை தாய் தந்தை எனும் பொருளது.

எழுத்துக்கள் இப்படி இருந்தாலும் அவை 'அம்மா" என்றும் 'அய்யா' என்றும் வாசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இதனால் ஆப்பு எழுத்துக்ள் குறில் நெடில் குறிப்பதும், மெய்யெழுத்துக்கள் தனியாக குறிப்பதும் இல்லை என்றாலும், அந்த ஆப்பு எழுத்து ஓர் சுறுக்கெழுத்துப் போலவே செயல்பட்டதாலும்,  உண்மையான வாசிப்பு ஆகவே எழுத்துக்கள் யாவை என்பது ஆய்ந்தறியப்பட வேண்டிய ஒன்றாகும்

கூறியதையே மீண்டும் மீண்டும் கூறுவதால் என்ன பயன்?

சுமேருத் தமிழின் எழுத்துக்கள்தான் யாவை அவை எவ்வாறு ஆப்பு எழுத்துகளால் குறிக்கப்ப்ட்டன என்பது திராவிட தொல்லியல் துறையின் நல்ல ஓர் கேள்வியாகும். அதில் ஈட்டுபாடு காட்டினால் பயனுள்ளதாக இருக்கும்

உலகன்




2014-06-25 4:30 GMT+08:00 Sinnathurai Srivas sisr...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

லோகா,

தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை. (physical speech generators).
வட எழுத்துக் குறிப்பது ஒலிகளை.
எனவே வட எழுத்தை எப்படி தமிழ் எழுத்தில் (transliteration) குறிப்பது என்பதுதான் விபரம்.

அன்றாட பாவனையில் பாவனையில் உள்ள ஒலிகளின் எண்ணிக்கை தமிழில் மட்டும்தான் அதிகம்.

சின்னத்துரை

__._,_.___

Posted by: Sinnathurai Srivas <sisr...@yahoo.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (3)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

Reply all
Reply to author
Forward
0 new messages