தமிழ்நாடு மாநில முருக பக்தர்கள் பேரவை - ஐந்தாவது மாநில மாநாடு

122 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 9, 2022, 8:04:43 AM8/9/22
to Santhavasantham

தமிழ்நாடு மாநில முருக பக்தர்கள் பேரவை - ஐந்தாவது மாநில மாநாடு
image.png

திருமுருக பக்தர்கள் பேரவையின் மூன்று நாள் மாநில மாநாடு, பெருந்துறையில் ஆக., 12ல் துவங்குகிறது.

சிரவணபுரம் கவுமார மடாலயத்தை தலைமையிடமாக கொண்ட மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், ஐந்தாவது மாநில மாநாடு, பெருந்துறை சக்தி மண்டபத்தில் ஆக., 12, 13, 14ல் நடக்கிறது.மாநாட்டில் நம் கலை, கலாசாரம், பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முருக பக்தர்கள் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக்கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்து வருகிறது.மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்கவும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் விருப்பம் உள்ளவர்கள், கவுமார மடாலயத்தை 98656 23817, 93631 58914 என்ற எண்களிலும், பெருந்துறை திருமுருக பக்தர்கள் பேரவையினரை, 77080 85424, 94434 98561 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.


தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் மாநில மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் - கோவையில் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள்
கோவை: திருமுருக பக்தர்கள் பேரவையின் மூன்று நாள் மாநில மாநாடு, பெருந்துறை, சக்தி மண்டபத்தில் ஆகஸ்ட் 12, 13, 14ம் ஆகிய மூன்று நாட்கள் நடக்கவுள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக் கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த மாபெரும் மாநாட்டில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் பக்தர்கள், மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோவை கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:-

பன்னெடுங்காலமாக, நமது முன்னோர் முருக வழிபாட்டை போற்றி கொண்டாடி வருகின்றனர். முருக வழிபாட்டை முன்னெடுப்பதில் பல்வேறு அமைப்புகள், காவடிக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்படுகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
அத்தகைய பக்தர்களை ஒருங்கிணைக்கும் விதமாக, கவுமார மடாலயத்தின் மூன்றாம் குரு மகா சந்நிதானம், 1990ல் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டார்.
அதன் பயனாக, முதலில் 5 மாவட்ட மாநாடும், 1992ல், பழநியில் முதலாம் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடும் நடத்தப்பட்டன. வழித்தடங்களில், தனிச்சாலை சிரவணபுரம் கவுமார மடாலயத்தை தலைமையிடமாக கொண்ட மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், ஐந்தாவது மாநில மாநாடு பெருந்துறை சக்தி மண்டபத்தில் ஆகஸ்ட் 12, 13, 14ம் ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து அச்சுறுத்தல் உள்ளதால், தனிச்சாலை வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, திண்டுக்கல் முதல் பழநி வரை, அப்போதைய எம்.பி., கார்வேந்தன் தனிச்சாலை அமைத்து கொடுத்தார்.
அதேபோன்ற, தனிச்சாலை வேறு வழித்தடங்களிலும் அமைத்து தர வேண்டும், யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும், பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.
அடுத்த தலைமுறைக்கு, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு காப்பீடு வாயிலாக குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அரசு முன் வந்து பக்தர்களிடம் சிறு தொகை பெற்று காப்பீடு வழங்கலாம். இதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது, முருக பக்தர்கள் அறக்கட்டளையின் கோரிக்கை.
இந்த மாநாட்டில் நம் கலை, கலாசாரம், பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணிகளும் மேற்கொள்ளப்படும். முருக பக்தர்கள் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை, திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக்கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஆகியோர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் பக்தர்கள், மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, குமரகுருபர சுவாமிகள் தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்கவும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் விருப்பம் உள்ளவர்கள், முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை தலைமையகமான கவுமார மடாலயத்தை 98656 23817, 93631 58914 என்ற எண்களிலும், பெருந்துறை திருமுருக பக்தர்கள் பேரவையினரை, 77080 85424, 94434 98561 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

N. Ganesan

unread,
Aug 9, 2022, 8:09:28 AM8/9/22
to Santhavasantham


முருக பக்தர்கள் மாநாட்டு மலரில் இடம்பெறும் வாழ்த்துச் செய்தி:
Dr. N. Ganesan
Houston, Texas, USA

அன்புடையீர்,

வணக்கம். சிரவணம்பட்டி கௌமார மடாலயம் குருமகாசன்னிதானங்கள் தமிழ்நாடு மாநிலம் முழுமையும் உள்ள முருக பக்தர்கள் எல்லோரையும் ஒன்றுகூட்டி, ஐந்தாம் முறையாக மாநில மாநாட்டைப் பெருந்துறையில் ஆகஸ்ட் 12-14 நாள்களில் தலைமையேற்று நடாத்துகிறார்கள். ஞானமே வடிவாகிய தமிழ்க்கடவுள் தண்டாயுதபாணி கருணையினாலே சீரும், சிறப்புமாக மாநாடு நடைபெறும். நல்ல விளைவுகள் காவடிக் குழுக்கள், பாத யாத்திரைச் சங்கத்தினருக்கு ஏற்படும். தமிழ்நாட்டு ஆதீனங்கள், தமிழ் அறிஞர்கள், கொடைவள்ளல்கள், அடியார் குழாங்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர்.

தவத்திரு. சுந்தர சாமிகள் பழனியில் மேற்கொண்ட இம் முயற்சி மாநாட்டுக்கு மாநாடு மென்மேலும் பொலிவடைவது காண மகிழ்ச்சி. சுவாமி சச்சிதானந்தர், வேதாத்திரி மகரிஷி, சாந்தலிங்க ராமசாமி அடிகளார், அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஐயா, .. போன்றோர் கலந்துகொண்ட பழைய ஒளிப்படங்கள் மலரும் நினைவுகளைத் தூண்டுகின்றன. கடைசியாக, அவினாசித் தேர்த் திருப்பணி பற்றிச் சுந்தர சாமிகளும், நீதியரசர் ரா. செங்கோட்டுவேலனாரும் கடிதம் எழுதினார்கள். அப்போதெல்லாம், தொலைபேசி, இணையம் இன்று போல் வசதியில்லை. இன்று உலகளாவிய அளவில் முருக பக்தர்கள் மாநாட்டை நிகழும்போதே கணித்திரைகளில் கண்டு, முருகபிரான் திருவருளுக்குப் பாத்திரர் ஆகின்றனர். பூசைகளும், முத்தமிழ் விழாக்களும், குருமகா சன்னிதானங்களின் ஆசியுரை, தமிழறிஞர் ஆய்வுரை எல்லாம் பார்க்கலாம்.

இந்தியாவின் வரலாறு, பண்பாடு அறிய இரு செம்மொழிகள் என ஆஸ்கோ பார்ப்போலா, ஜார்ஜ் ஹார்ட், சுவெலெபில் எனப் பேராசிரியன்மார் வலியுறுத்துகின்றனர். சிந்து சமவெளிக் காலத்தில் இருந்து உள்ள மூத்த தமிழ் ஒன்று. இரண்டாவது வேதம் உள்ள வடமொழி. பாரதத்துக்கு வெளியே புறச் சமயங்கள் போலவே, கௌமாரம் உள்ளிட்ட இந்து சமயத்திலும் இரு செம்மொழிகளுக்கும் இடம் உண்டு. திருமுறைகளிலும், சைவமும், தமிழும் புரந்து வரும் சைவ சித்தாந்த மடங்களிலும் பேணிவருவதைப் பல நூற்றாண்டுகளாகப் பார்க்கிறோம்.  மாதவச் சிவஞான முனிவர், தில்லைக் கூத்தப்பிரானின் டமருக ஒலியில் ஒருபுறம் தமிழும், இன்னொரு புறம் வடசொல்லும் பிறந்ததை வருணிக்கையில், ‘வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி, அதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை’ அகத்தியருக்குக் கற்பித்தார் என்கிறார்.

இம் மாநாட்டில் அச்சாகும் பக்தி நூல்கள் பல நூற்றாண்டு தமிழின் பெற்றி பேசும். புதிய படைப்புக்களோடு, 1850-ம் ஆண்டில் இருந்து வெளியான தமிழின் இலக்கண, பக்தி இலக்கிய நூல்கள் யாவும் முருக பக்தர்கள், புரவலர்கள், கல்லூரிகள் மூலமாக வலையுலாக் காணவேண்டும். இதற்கான அறிவிப்புகளும், முயற்சிகளுக்கும் ஒரு தொடக்கமாக, பெருந்துறை முருகன் அடியார் மாநில மாநாடு அமைவதாகுக. தமிழின் தொன்மை, தொடர்ச்சியாக இளைய தலைமுறைகளைச் சென்றடைய,  முருக பக்தர்கள் நூல்கள், தமிழிசை பரப்புதற்கு இணையத்தைப் பயன்கொள்ளல் அவசியம்.

வாழ்க சீர் அடியார் எல்லாம்!
நா. கணேசன்
ஹூஸ்டன், டெக்சாஸ்   7/8/2022

N. Ganesan

unread,
Aug 9, 2022, 9:37:19 AM8/9/22
to Santhavasantham, thiruppug...@gmail.com, karanthaijayakumar

N. Ganesan

unread,
Aug 10, 2022, 1:47:54 AM8/10/22
to Santhavasantham, thiruppug...@gmail.com

தமிழ்நாடு மாநில முருக பக்தர்கள் பேரவை - ஐந்தாவது மாநில மாநாடு

ஐந்து படங்கள் சேர்த்துள்ளேன். உ-ம்: பழனியில் 1992-ம் ஆண்டு நடந்த முதல் மாநாடு.
இப் பேரவை, சிரவை, பேரூர், பழனி ஆதீனங்கள் அறிவுரையால், தமிழக அரசு
தைப் பூசத் திருநாளை அரசாங்க விடுமுறை நாள் என அறிவித்தது தமிழ்நாடு மாநில
 ஹிந்து சமய வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

image.png

N. Ganesan

unread,
Aug 10, 2022, 4:18:37 PM8/10/22
to Santhavasantham, thiruppug...@gmail.com

சிந்தனை செய் மனமே!
ராகம்: கல்யாணி
https://youtu.be/k5eIb52BADM
(அம்பிகாபதி, 1957)

சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, ஷண்முகனை
சிந்தனை செய் மனமே!

செந்தமிழ்க்கு அருள் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!

சந்ததம் மூவாசைச் சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!

---------
One of the successful projects was to declare Thai Poosam celebrating Muruka Bhakti as a Tamil Nadu Govt. Holiday.  http://nganesan.blogspot.com/2022/07/5th-state-murukan-bhaktarkal-conference.html
WhatsApp Image 2022-08-10 at 1.51.56 PM.jpeg

kanmani tamil

unread,
Aug 10, 2022, 5:01:27 PM8/10/22
to vallamai
///சிந்தனை செய் மனமே!

ராகம்: கல்யாணி
https://youtu.be/k5eIb52BADM
(அம்பிகாபதி, 1957)/// Dr.Ganesan pasted...
அருமையான பாடல்; மிகப் பிரபலமானது.
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfh2v7F3Lwx1TGQjCCSjavaPiS-P1afGM-DqX01-MM3%2BA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 12, 2022, 8:54:23 AM8/12/22
to Santhavasantham, thiruppug...@gmail.com
பெருந்துறையில், ஐந்தாம் முருக பக்தர்கள் மாநில மாநாடு
http://nganesan.blogspot.com/2022/07/5th-state-murukan-bhaktarkal-conference.html

அழகுத் தெய்வமாக வந்து ... காவடிச்சிந்து
---------------------------------------------------------------

செஞ்சுருட்டி ராகம்      -              ஆதி தாளம்
                                   - கவிஞர் ம. ப. பெரியசாமித் தூரன்

https://youtu.be/W_GaxI26hPc       MLV
https://youtu.be/sFnskH_OjUQ        Bombay sisters
https://youtu.be/sWWA-EcvV5Y  
https://youtu.be/vIa2VGpoXfE
https://youtu.be/W-B0OTXDXcY

அழகுத் தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - என்றும்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

குழந்தையாகக் குமரனாகக் கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்தக்
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனைக்
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்

நீல மயில் மீதில் ஏறி ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் - தூய
நித்திலப் புன்முறுவல் வள்ளி நேசன் - அவன்
நீள்நிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் ப்ரகாசன் - *தூரன்*
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்

பத்மபூஷணம் ம. ப. பெரியசாமித் தூரன் பணிகள்:
http://nganesan.blogspot.com/2012/02/kalaikkalanjiyam-cd-release.html
http://nganesan.blogspot.com/2012/02/m-p-thooran-felicitation-1963.html

மாநாடு சிறக்க!
நா. கணேசன்

Pazani1.jpg
Pazani2.jpg

N. Ganesan

unread,
Aug 12, 2022, 10:37:22 PM8/12/22
to Santhavasantham, thiruppug...@gmail.com

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் ஆதீனங்களில் பழமைவாய்ந்த ஒன்று. தற்போது உள்ள சாமிகள் கற்றறிந்த புலமையாளர். துறவு பூணுவதன் முன்னர், பேரூர் சாந்தலிங்க அடிகளாருடன் சிலமுறை பார்த்துள்ளேன். பவானியில் 2018-ல் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பொம்மபுரம் ஆதீனகருத்தர் உரை: https://youtu.be/2bKsjyDvPvY
மறைந்த தொல்காப்பியப் பேரா. செ. வை. சண்முகம், கு. சிவமணி, ... போன்றோரையும் ஒரு காலத்தில் புரந்தது மயிலம் கல்லூரி.  பழைய, இடைக்கால இலக்கியங்கள் ஆய்வுகளுக்கு ஆதீனங்கள் தொண்டு இனி வரும் காலங்களிலும் மிக முக்கியம்.

பவானி < வவ்வானி - வானி யாறு காவிரியை வவ்வுதலான் ஏற்பட்ட பெயர். இதே பெயர் ராஜஸ்தானத்தில் சிந்துவெளி நாகரீகத்திலும் வானியாற்றுக்கு உண்டு. வவ்வானி > பவானி.
நன்றா என்னும் பெயர் நணா என ஆனது என்பார் மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணியார் (பஞ்சமரபு பதிப்பாசிரியர்).

https://ta.wikipedia.org/wiki/மயிலம்_பொம்மபுர_ஆதீனம்
https://ta.wikipedia.org/wiki/மயிலம்_பொம்மபுர_ஆதீன_வெளியீடுகள்

NG

N. Ganesan

unread,
Nov 13, 2022, 9:20:14 PM11/13/22
to Santhavasantham, thiruppug...@gmail.com

தனித்திருந்து ....

                         - கொடுமுடி கோகிலம் கேபிஎஸ்

இதிலிருந்து: https://youtu.be/W9awiRwfpgk
சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய பாடல். கே.பி.சுந்தராம்பாளின் இசையில்.


தனித்திருந்து வாழும் - மெய்த் தவமணியே!
தண்டபாணித் தெய்வமே - தன்னை அறிந்து நீ
தனித்திருந்து வாழும் - மெய்த் தவமணியே!
தண்டபாணித் தெய்வமே

தன்னை அறிந்து நீ
தனித்திருந்து வாழும் - தவமணியே!

அநித்திய வாழ்வு தனிலே அடியேன் மிக
அலுத்து உழைத்த ஜென்மம் போதும் போதும் - இனி நான்
அலுத்து உழைத்த ஜென்மம் போதும் போதும்

இனி நீ
தனித்திருந்து வாழும் - மெய்த் தவமணியே!
தண்டபாணி

வெண்ணீறணிந்ததென்ன?
வேலைப்பிடித்ததென்ன?
கண்மூடி நின்றதென்ன?
காவி உடுத்ததென்ன?

வெண்ணீறணிந்தது என்ன?
வேலைப்பிடித்தது என்ன?
கண்மூடி நின்றது என்ன?
காவி உடுத்தது  என்ன?

வெண்ணீறணிந்தது  என்னயென்ன?
வேலைப்பிடித்தது  என்னயென்ன?
கண்மூடி நின்றது  என்னயென்ன?
காவி உடுத்தது  என்னயென்ன?

வெண்ணீறணிந்தது  என்னயென்னயென்ன?
வேலைப்பிடித்தது என்னயென்னயென்ன?
கண்மூடி நின்றது  என்னயென்னயென்ன?
காவி உடுத்தது  என்னயென்னயென்ன?

வெண்ணீறணிந்ததென்ன?
வேலைப்பிடித்ததென்ன?
கண்மூடி நின்றதென்ன?
காவி உடுத்ததென்ன?

பண்டாரமாய் நின்ற முருகா
பண்டாரமாய் நின்ற பழனியாண்டி ஆகித்
தெண்டாயுதம் தரித்த தேவா தேவா தேவா
தெண்டாயுதம் தரித்த தேவா
தெண்டாயுதம் தரித்த தேவா தேவா தேவா  நீ

தனித்திருந்து வாழும் - மெய்த் தவமணியே!
தண்டபாணித் தெய்வமே

https://youtu.be/W9awiRwfpgk
🙏🙏🙏

On Fri, Aug 12, 2022 at 7:53 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Nov 13, 2022, 11:37:54 PM11/13/22
to Santhavasantham, thiruppug...@gmail.com
Pazani_Dandapani.jpg

kanmani tamil

unread,
Nov 13, 2022, 11:47:43 PM11/13/22
to vallamai
🙏🙏🙏
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages