சிரிப்போம்

30 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Aug 15, 2025, 10:00:21 AM8/15/25
to vallamai
/// #திருநெல்வேலி_குசும்பு: 😆 

தம்பி: (அழைப்பேசியில்) அண்ணாச்சி வணக்கம்... எப்படி இருக்கீய...

நான்: நல்ல இருக்கேன் தம்பி... நீ சொவமா இருக்கீயா? வீட்டுல அப்பா, அம்மா எல்லாம் சொவமா இருக்காவோளா?

தம்பி: ஆமா அண்ணாச்சி அம்புட்டு பேரும் சொவமா இருக்கோம். அப்புறம் அண்ணாச்சி இன்னைக்கு அந்தபக்கம் கொஞ்சம் வேலையா வாறேன். வயக்காட்டுல நடுவைனு சொன்னாவோ, அதான் ஒரு எட்டு வந்து வயலையும் பாத்துட்டு, அப்படி உங்களையும் பாத்துட்டு வரலாம்னு கிளம்புதேன்.

நான்: அப்படியால சரி வா வா... நான் வீட்டுல தான் இருக்கேன். நேரா இங்க வா... அப்புறமா சேர்ந்து வயக்காட்டுக்கு போவோம். நானும் வாரேன்.

தம்பி: சரி அண்ணாச்சி... அப்போ நான் கிளம்பி வாறேன், உங்களுக்கு ஏதும் இங்க பாளையங்கோட்டையில, டவுணுல வாங்கிட்டு வரவேண்டிய சாமான் இருக்கா... சொல்லுங்க வாங்கியாரேன்.

நான்: ஏல மூதி அதெல்லாம் வேண்டாம்ல.. எதுக்கு போட்டு சங்கடபடுத நீ கிளம்பி வா...

தம்பி: அண்ணாச்சி இதுல என்ன சங்கடம், சொல்லுங்க நான் வார பாதைக்கு வாங்கியாரேன்.

நான்: அப்படியா சொல்லுத... உனக்கு ஒன்னும் சங்கடம் இல்லையா... அப்போ ஒன்னு பண்ணு நீ நேரா நம்ம பஜாருல உள்ள கண்ணன் ஸ்வீட்சுக்கு போ, அங்க ஒரு காக்கிலோ காராபூந்தி, அரைக்கிலோ துக்கடா, அரைக்கிலோ ஆந்திராமுறுக்கு, காக்கிலோ நெய்க்கடலை வாங்கிக்கோ... அப்புறம் அப்படியே தெற்க போயி நம்ம ராம் லாலா கடையில ஒரு காக்கிலோ கேரட் அல்வா, ஒரு காக்கிலோ பேரீட்சை அல்வா, ஒரு அரைக்கிலோ மஸ்கோத் அல்வா வாங்கிக்கோ... அப்புறம் நம்ம கோவாலங்கோவில் வழியா வந்து வடக்கே திரும்பினா அங்க ஒரு முறுக்குக்கடை உண்டுலாடே... அதுல ஒரு 25 அச்சு முறுக்கு, ஒரு 25 சுத்து முறுக்கு, ஒரு 25 தேங்குழலு, ஒரு 15 சோமாசி, ஒரு 15 முந்திரிகொத்து, அப்புறம் ஒரு 25 தட்டை வாங்கிக்கோ...

தம்பி: சரி அண்ணாச்சி அப்போ பாத்து வாங்கிட்டு வாரேன்.... (ஏதும் வாங்கனுமானு கேட்டது ஒரு குத்தமா... 🤔)

அண்ணாச்சி: ஏல இருல அதுக்குள்ள யாம்ல பறக்க... இதெல்லாம் வாங்கிட்டு அங்க இருந்து கிளம்பி வரும் போது, அந்த தெரு கடைசியில இருக்க நம்ம கோபாலன் செக்குக்கு போய் அங்க கருப்பட்டி சேர்த்த எள்ளு புண்ணாக்கு முட்டாயினு கேட்டு அதுல ஒரு அரைக்கிலோ வாங்கிக்கோ. அப்புறம் நீ அங்க இருந்து நம்ம ஜங்சன் வழியாதானல வருவ..?

தம்பி: (🙄) ஆமா அண்ணாச்சி.. ஐங்சன் வழியாதான வரனும்.

நான்: அப்போ சேரில நீ நேரா நம்ம ஜங்சன் சாந்தி லாலா கடைக்கு வந்துரு... அங்க நம்ம திருநெல்வேலி அல்வா காக்கிலோ பொட்டலமா ஒரு 6 வாங்கிக்கோல... அப்புறம் சாந்தி கடையிலயே ஒரு அரைக்கிலோ சிப்சு, ஒரு அரைக்கிலோ பர்பி, ஒரு அரைக்கிலோ பாதுசா, ஒரு அரைக்கிலோ ஜாங்கிரி, ஒரு காக்கிலோ மைசூர்பா, ஒரு காக்கிலோ மிளகு காரச்சேவு, ஒரு காக்கிலோ பக்கோடா வாங்கிட்டு அப்படி நாலு கடை தள்ளி நம்ம லெட்சுமி விலாஸ் லாலா கடைக்கு வந்துரு என்னா....

தம்பி: (🙄🙄🤔) லெட்சுமி விலாஸ்ல என்ன அண்ணாச்சி வாங்கனும்?

நான்: ஏல லெட்சுமி விலாஸ் கடையில ஒரு அரைக்கிலோ பாதாம் அல்வா, அப்புறம் ஒரு அரைக்கிலோ பொடி மிச்சரு, ஒரு அரைக்கிலோ பரு மிச்சரு, ஒரு அரைக்கிலோ ஓமப்பொடி, ஒரு அரைக்கிலோ தடியங்காய் முரப்பா, அப்புறம் அங்கையும் ஒரு 4 காக்கிலோ பொட்டலம் நம்ம திருநெல்வேலி அல்வா வாங்கிக்கோல...

தம்பி: (இதெல்லாம் வாங்கிட்டு நான் வந்து சேரதுக்குள்ள நட்ட நாத்து விளைஞ்சு அறுப்பே வந்துரும் 😔) சரி அண்ணாச்சி வாங்கிட்டு வாறேன்....

நான்: ஏல அப்படி டவுண் வழியா வரும் போது நம்ம சநம்ம R S அல்வா கடை கல்லத்தி முடுக்கு தெருல கருக்கல்லுல 6.00 மணிக்குலா தொறப்பான்... ஒரு அரைக்கிலோ திருநெல்வேலி அல்வாவும், ஒரு அரைக்கிலோ பால்கோவாவும் வாங்கிக்கோல... அப்புறம் அந்த முக்குல உள்ள செட்டியார் லாலா கடையில ஒரு அரைக்கிலோ கருப்பட்டி சுத்து முட்டாய், வெள்ளை சீனி சுத்து முட்டாய் ரெண்டும் கலந்து வாங்கிட்டு, ஒரு காக்கிலோ கோவில்பட்டி சேவு இருந்தா அதையும் வாங்கிக்கோல...

தம்பி: (😥) அவ்ளோதானா அண்ணாச்சி.

நான்: அப்படி வர்ற பாதைக்கு நம்ம பூதத்தாரு முக்கு சன்னதி எதிருல நரசுஸ் காபி தூள் கடை இருக்கும்லா அதுல 60க்கு 40 னு சொல்லி ஒரு அரைக்கிலோ காபித்தூளும் வாங்கிருல... அப்படி நம்ம தெற்கு ரத வீதி மாரியம்மன் விலாஸ் கடை திறந்திருந்தா அங்க உளுந்தங்களியும், திருப்பாகமும் வாங்கிக்கோ. சில சமயம் சூடா அங்க போளி போடுவாவோ... அப்படி சூடா போட்டா ஒரு 5 பருப்பு போளியும், 5 தேங்காய் போளியும் வாங்கிருல...

தம்பி: (😷😷😷) ம்ம்ம்ம்ம்....

நான்: என்னல இழுத்துட்டு கிடக்க, சடாருனு கிளம்பி இதெல்லாம் வாங்கிட்டு வந்துசேருல... நான் உனக்கு சூடா அரிசியும் - பருப்பும் உடைச்சு உப்புமா கிண்டி வைக்கேன்... ரெண்டு உருண்டை உப்புமாவ தின்னு ஒரு தம்ளாரு கருப்பட்டி காபிய குடிச்சுட்டு வயக்காட்டுக்கு போவோம்... ஏல கருப்பட்டி காபின உடன தான் ஞாபகம் வருது... கருப்பட்டி வேற காலியாக போவுது, அதனால நீ ஒன்னு செய்... நம்ம அய்யனார் கடைக்கு போயி அங்க ஒரு 3 கிலோ உடன்குடி கருப்பட்டி வாங்கிட்டு, அப்படி ஒரு அரைக்கிலோ பனங்கல்கண்டும் வாங்கிட்டு வந்துருல...

தம்பி: (😔🙄🤔😷) சரி அண்ணாச்சி... எல்லாத்தையும் 🤐😖 வாங்கிட்டு வாறேன்..... வாறேன்.....

நான்: ஏல அப்புறம் வண்டியா மெதுவா மேடு பள்ளம் பாத்து ஓட்டிட்டு வால... பண்டமெல்லாம் நொறுங்கிறாம பத்திரமா கொண்டுவா என்னா.... நான் வைச்சிருதேன்.

தம்பி: 😷😷😷😷😷😷
🤔🤔🤔😋😋😋🤗🤗🤔

*திங்கப்பொறந்தவன் திருநெவேலிக்காரனாக்கும்*

*🙏🏻🙏🏻🙏🙏🙏🤝🙏 ///


வட்டார வழக்கும் சொல்லிச் செல்லும் செய்தியும் 😄😄😄

சக 



kanmani tamil

unread,
Jan 14, 2026, 7:31:06 PMJan 14
to vallamai
வட்டார வழக்குகளில் ஒன்றான சென்னைத் தமிழ் 

/// மெட்றாஸ் பாஷை...

வடசென்னையில்... மீனவர்கள், பிற்படுத்தப்பட்ட; தாழ்த்தப்பட்ட மக்கள் பேசும் பாஷையை தான் நாம் காலம் காலமாக மெட்ராஸ் பாஷை என்றும் சென்னை வழக்கு என்றும் பேசியும் எழுதியும் வருகிறோம். ஆகவே சென்னை கலாச்சாரம் என்றால் அதன் பூர்வகுடிகளான இந்த வடசென்னை மக்களையும் அவர்கள் வாழ்வையும் குறிப்பிடுவதே முறைமை என்பது பலரின் தனிப்பட்ட கருத்து. ......

இந்த பாஷை உருவாக காரணம் ஆங்கிலோ இந்தியர்கள், நவாப் ஆளுகையின் கீழ் வாழ்ந்த உருது, அரபு, தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் வடநாட்டிலிருந்து வந்தவர்கள். இவர்களின் பேச்சு மொழிக் கலப்பு வெகு காலத்துக்கு முன்பிருந்தே வந்திருக்கிறது. இந்த மெட்ராஸ் பாஷையை பிரபலப்படுத்தியதில் தமிழ் சினிமாக்களுக்கு பெரும்பங்கு உண்டு. அதன் வரலாறை பார்ப்பதற்கு முன் சினிமாவில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்களுக்கான அர்த்தங்களை பார்ப்போம். 

சென்னை பாஷையில், உருதுக்கு அடுத்தபடியாக ஆங்கிலச்சொற்கள் அதிகமிருக்கும். காரணம் ஆங்கிலேயர்களிடம் கூலிகளாக வேலை செய்தவர்கள் அங்கு எஜமானர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை வீட்டிலும் பயன்படுத்தினார்கள்.
அங்கு மேடம்… மேடம்… என பெண்களை அழைப்பதை சுருக்கி ஆங்கிலேயர்கள் மேம்… மேம் என அழைத்தனர். அதை பார்த்து மக்கள் வீட்டுப் பெண்களிடம் அப்படியே கூப்பிட நாளடைவில் இன்னாமே…போமே… வாமே… என்றானது.

அந்தாண்ட… இந்தாண்ட…

அந்த எண்டிலிருந்து இந்த எண்ட் வரை என்பதுதான் சுருங்கி அந்தாண்ட இந்தாண்ட என்றானது. 

*அஞ்சலை

வழக்கமாக வடசென்னையில் அஞ்சலை என்ற பெயர் பிரசித்தம். சூர்யா நடித்த ஒரு படத்தில் அஞ்சலை.. அஞ்சலை… அஞ்சலை என்ற பாட்டே உண்டு
அந்த பெயர் எப்படி வந்தது என்றால் ஆங்கிலேயர்கள் வீட்டில் மனைவியை ஏஞ்சல்… ஏஞ்சல்… என கொஞ்சுவதிலிருந்து உருவானது.

கம்னாட்டி,

”ஹே நாட்டி கேர்ல்” என ஆங்கிலத்தில் சிலர் கொஞ்சுவதை பார்த்திருப்போம், இதுதான் எஜமானர்கள் விசுவாசமான குறும்புக்கார வேலைக்காரனை ”கம் நாட்டி பாய்” என அழைக்க அதுவே காலப் போக்கில் கம்னாட்டி என ஆனது.

போடா கஸ்மாலம் என்ற சொல் அடிக்கடி புழக்கத்தில் இருந்தது.

கசியும் மலம் போன்ற அருவருப்பானவனே என்பதுதான் கஸ்மாலம்.

உடான்ஸ், பீலா, டபாய்க்கிற, கலாய்க்கிற, சோமாரி, நாஷ்டா, டோமர் என பல சொற்கள் சுவாரசியமாக பயன்படுத்தப்பட்டு வருபவை.
”பேமானி” என்பார்கள் பேமானி என்பது அபிமானி என்ற சொல்லின் எதிர்ப்பதம். அபிமானி என்றால் நம்பத்தகுந்தவன், பேமானி என்றால் துரோகி

பெரும்பாலும் இந்த சொற்கள் உருது வழி வந்தவை.
இவற்றில் சில தமிழ் தூய தமிழ் சொற்களும் அடங்கும்.

பன்னாடை, குந்து.. போன்றவை அவற்றில் சில

”சர்தான் சித்த நேரம் குந்து மே” என்பார்கள்

உட்காரச் சொல்வதைத்தான் குந்து என்கிறார்கள் என்பது நாமனைவரும் அறிந்த விடயம். அது எப்படி உருவானதென்றால் நாற்காலி போன்ற இருக்கைகள் உருவாகாத காலத்தில் நின்றுகொண்டே பேசும் விருந்தாளிகளை குந்தியிருங்கள் என சொல்ல ஆரம்பித்தனர். இதன் உண்மையான சொல் குண்டியிரு…. குண்டியால் இரு என்பதன் அர்த்தம் இது. நாளடைவில் இது மருவி குந்தியிரு என்பதாகி பின் குந்துவாகிவிட்டது. இதைத்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன் “காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி” என்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.

பன்னாடை என்பது இயற்கை வடிகட்டி.. தென்னங்கள்ளை இறக்கும் போது அதில் இருக்கும் புழுக்களை, தூசி தும்புக்களை வடிகட்ட பயன்படுத்துவது வழக்கம். அது கெட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை கீழேவிடுவதால் அதுபோல கெட்ட விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்பவனை பன்னாடை என திட்டுவது வழக்கம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மெட்ராஸ் பாஷை என்பது நகைச்சுவை. நடிகர்களால்தான் அதிகம் பேசப்பட்டு வந்தது. அது கிண்டலுக்குரிய பாஷையாக அல்லது அதை பேசினாலே சிரிப்புவரும் பாஷையாக தமிழ் சினிமாவில் உலவி வந்தது மிகுந்த ஆச்சர்யமான ஒன்று. சினிமாவின் கர்ப்பகிரகமாக சென்னை இருக்கும் போதே சென்னை பாஷை ஏதோ அன்னியமாக வேற்றுகிரக பாஷை போல உருவாக்கம் கண்டது ஆச்சர்யம் தான்.

kanmani tamil

unread,
Apr 16, 2026, 11:25:06 PM (7 days ago) Apr 16
to vallamai
சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

/// அந்தக் காலத்தில் எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு இப்போது பலருக்குத்  தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்க மேட்டரே.

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி..

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி..

3. அடி வாங்காமலேயே அழுதா விழும் அடி..

4. பெரியவங்க உட்கார்ந்திருக்கும் இடத்தில் நின்னுட்டு இருந்தா அடி..

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உட்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உட்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.

 7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டால் அடி..

8. தட்டில் சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

 9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா, எங்க சுத்திட்டு வர்ரேன்னு ஒரு மொத்து.

10.அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி..

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

 12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி. 

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி..

 14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டேன்னு கூவினா அடி.

 15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.
 
16. அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாலும் அடி. 

17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

 18. பூரணமா சாப்பிடாமல் இருந்தால் அடி

19. சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,
 
20. பேசிட்டே சாப்பிட்டா அடி.

21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி. 

22. விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி. 

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறைத்து பார்த்தா அடி.  

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி.

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி..

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உட்கார்ந்திருந்தாலும் அடி.

 30. சாப்பிட்டபின் தட்டை அலம்பலேன்னா அடி.

 31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டால் அடி.

 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி..

34. நகத்தை கடிச்சா அடி

 34. குளிக்காவிட்டால் அடி. 

35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர். 

36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி.

 37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

 38. தெருவில் போகிற கார் உரசிட்டு போச்சுன்னா அடி. 

39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கிரதைக்கு நாலு அடி.

 40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி.

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

 42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

 43. ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. 

44. அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி 

45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா, இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி

46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்தி ”சொந்தமா என்னடா gas விட்ர”ன்னு சொல்லி அடிக்கும்.

 47. டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கரெக்ட் பதில் எழுதினா வாத்திட்ட ”நீ பெரிய பிஸ்தாவா”ன்னு சொல்லி வாங்கும் அடி.. 

48. வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி.

49 சொந்த காரங்கவீட்ல, நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி.

50 மூன்று தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி.

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார்.

52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.

53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி. 

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள் - பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் இந்த அடிகள் வாங்கியது தான் எங்களுக்கு வாழ்வில் முன்னேற உதவின.

வாழ்க பெற்றோர்கள்.///

https://www.facebook.com/share/17zu7cppdL/

ஆனாலும் 39ம் நம்பர் கருத்து கொஞ்சம் ஓவர் தான் 

தெரிவு:சக 

Raju Rajendran

unread,
Apr 17, 2026, 1:50:51 AM (7 days ago) Apr 17
to vall...@googlegroups.com
தவமிருந்து பிள்ளைபெற்றால் இந்த அடி விழாது. 

வெள்., 17 ஏப்., 2026, 8:55 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcukYLHrcDw0DV9-4Ags5t0Uo%2B7LxXdGxPezLWA-50ND2g%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Apr 21, 2026, 4:40:37 AM (3 days ago) Apr 21
to vallamai
😀😍😇😜😎😝😭😆😂
பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.
ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்.... 
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்.... 
😀😍😇😜😎😝😭😆😂

*மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!
*ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே!
*மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
😀😍😇😜😎😝😭😆😂

*தொண்டன் 1*: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
*தொண்டன் 2*: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரமே இல்லைனு சொல்றாங்களாம்.
😀😍😇😜😎😝😭😆😂

*மருத்துவர்* : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..
*பெண்* : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க.
😀😍😇😜😎😝😭😆😂

எல்லா *stage*'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா *கோமா stage*'ல டான்ஸ் ஆட முடியுமா?
😀😍😇😜😎😝😭😆😂

*டாக்டர்*: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
*நோயாளி*: ஏன் டாக்டர்?
*டாக்டர்*: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..
😀😍😇😜😎😝😭😆😂

*நோயாளி*: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
*டாக்டர்* : இந்த டானிக்கை சாப்பிடுங்க.
*நோயாளி*: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ?
*டாக்டர்*: no no...நல்லா இருமலாம்...
😀😍😇😜😎😝😭😆😂

*டாக்டர்* : தற்கொலைக்கு முயற்சி செஞ்சீங்களாமே? 
*நோயாளி*: ஆமா டாக்டர் வயித்துவலி பொறுக்கமுடியல....
*டாக்டர்*: நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல.... ஒரு நாள் பொறுக்கமுடியாதா....
😀😍😇😜😎😝😭😆😂

*ஒருவர்:* எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
*டாக்டர்*: ஏன்?
*ஒருவர்*: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்...
😀😍😇😜😎😝😭😆😂

*நடிகை*: ''டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !''
*டாக்டர்*: ''பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!''
😀😍😇😜😎😝😭😆😂

*டாக்டர்*: தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்
*ஒருவர்*: இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன... என் மனைவிதான் அதை காபினு சொல்றா..
😀😍😇😅🤭😅😆

''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.''
''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்....'''
😀😍😇😜😎😝😭😆😂

‘‘ஆபரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்... ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’
‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’
😀😍😇😜😎😝😭😆😂

ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸர்ஸையெல்லாம் சுட்டிருக்காரு.
தெரியுமா.?
சோமு :இப்பத்தான் டைனோஸர்ஸே கிடையாதே.!
ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸர்ஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!!!!!
😀😍😇😜😎😝😭😆😂

சார்…மீனுக்கு புழு வாங்கணும், அங்கே பக்கத்துல
கடை இருக்கா..?
ரேஷன் கடை இருக்கு பாருங்க…!!
😀😍😇😜😎😝😭😆😂

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"
மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"
😀😍😇😜😎😝😭😆😂
[11/11, 10:28 PM] S N R: ROFL::

மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
----------------------------------------
2.
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
------------------------------------------
3.
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-----------------------------------------
4.
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------------
5.
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்க தான் தேர்தல்லே நிற்கணுமாமே?
---------------------------------------------
6.
கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...
-----------------------------------------------
7.
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-------------------------------------------------
8.
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்...
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-------------------------------------------------
9.
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
--------------------------------------------
10.
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
-------------------------------------------
11.
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
--------------------------------------------------
12
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
---------------------------------------------------
17.
பல்லு எப்படி விழுந்திச்சு?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
-----------------------------------------------------
18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னா தான் சமையலே ஆரம்பிப்போம்..!
------------------------------------------------------------------
19
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------------------
20
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
------------------------------------------------------
21.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-----------------------------------------------------
22.
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
-------------------------------------------------------------------
23.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகணுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????


தெரிவு:சக 

Raju Rajendran

unread,
5:09 AM (13 hours ago) 5:09 AM
to vall...@googlegroups.com
Best:

டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

செவ்., 21 ஏப்., 2026, 2:10 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages