
Soul
mate..! ஒருவரின் ஆத்மாவின் சரி பாதி இன்னொருவரிடம் தான் இருக்கிறதாம்.
அந்த இரு பாதிகளும் வாழ்வில் சந்தித்து இணையும் போது மனமொத்த
காதலர்களாக..தம்பதியர்களாக வாழ்வில் இணைவார்களாம். அந்த சரிபாதி ஆன்மாவை
உணரும் வரை தேடல்கள் தொடரும். என்னுடைய அமெரிக்க சிநேகிதி ஒருவர் சொன்ன விளக்கம் இது.
வாழ்வில் மனமொத்த தம்பதிகளாக இருப்பது என்பது ஒருசிலருக்கு தான் வரமாக
வாய்த்திருக்கிறது. அப்படியொரு தம்பதியை என் வாழ்வில் காண்பித்த எல்லாம்
வல்ல சக்திக்கு நன்றிகள்..! அவர்கள் சகோதரர் துரையும் சாந்தி துரையும்!!
இணையம் பலரை அறிமுகப்படுத்துகிறது. எல்லோரும் ரயில்பயணங்களில்
சந்தித்தவர்களாக நகர்ந்து கொண்டிருக்கும் போது சில குறிப்பிட்டவர்களுடன்
எங்கள் மனம் முகம் பார்க்காமலேயே ஏதோ ஒரு உறவைச் சொல்லி இணைந்துவிடுகிறது.
அப்படி மனம் ஒன்றியவர்களில் ஒருவர் தான் வள்ளுவனின் குறளுக்கு இரண்டாவது
வடிவம் கொடுத்த எங்கள் குழும வள்ளுவர் சகோதரர் துரை!! இலக்கியக் கடலில்
குதித்து முக்குளித்த தூத்துக்குடி முத்து !
இன்று எங்கள்
காலத்தின் வள்ளுவர் துரை அவர்களுக்கும் அவருடைய வாசுகி சாந்தி துரை
அவர்களுக்கும் திருமணநாள். இன்று போல்
என்றும் எங்கும் வாழும் இனிய தமிழின் இலக்கணமாயும் இலக்கியமாயும் இணைந்து
எல்லா நலனும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இருவரையும் வாழ்த்துகிறோம்.
எங்கள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் இருவருக்கும்!!
அன்று
சொன்னது தான் இன்றும். இன்று சொல்வது தான் என்றும்....எம் இதயம்
தொட்டவர்களுக்கு என்றும் எங்கள் இதயம் இயங்கும் வரை வாழ்த்துகளாகவே.....!!
அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ
ஹே ..எனக்கு மட்டும் ரெண்டு :)))--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


இன்று திருமணநாள் கொண்டாடும் அன்பு அண்ணன், துரை.ந.உ தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்..--.
--நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்த்தென்றல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhthendr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.