சில கோயில்களின் தனித்துவங்கள்

25 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 2, 2024, 1:45:40 AM (5 days ago) Jul 2
to vallamai
இப்படி வேறெங்கிலும் பார்த்தது உண்டா ?

பக்தர்கள் குங்குமமும் புற்று மண்ணும் இட்டுக்கொள்ளும் போது முகம் பார்க்க ஒவ்வொரு தூணிலும் கண்ணாடி ...

சங்கரன் கோயில் - சங்கரலிங்கனார், சங்கர நாராயணர், கோமதி அம்மை என மூன்று கருவறைகளைக் கொண்டு சமய நல்லிணக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் ஒருங்கு போதிக்கும் கோயில்.
'கோமதீஇஇ'  என பாரதியார் வாய்விட்டுப் பாடியது இங்குள்ள அம்மனைத் தான். இது திருமதி. செல்லம்மாள் பாரதியின் தாய் வீட்டார் வாழ்ந்த கடையநல்லூருக்கு மிக அருகில் உள்ளது.
'நெல்கெட்டுச்செவல்' என்று பெயர் பெறும் பூலி(ழி)த் தேவன் போற்றி வழிபட்டு மறைந்த கோயில். பொது மக்களுக்கு 'ழி' உச்சரிக்க இயலாமல் போக; பூலித்தேவன் ஆகி; பின்னர் பொருள் புரியாமல் போக; புலித்தேவன் என்று பெயர் மாற்றம் பெற்ற தலைவனின் பெயர் சொல்லும் கோயில்.
இங்கு தான் கோயிலுக்கு உள்ளேயே பெரிய புற்றும் உள்ளது. அந்த மண்ணின் மருத்துவ குணம் இன்றும் போற்றப்படுகிறது. குழந்தை பிறந்த வீட்டிற்குள் புற்றுமண் கட்டி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் வீட்டில் ஒரு புற்றுமண் கட்டி வைத்து இருப்பேன். பேரப் பிள்ளைகளுக்காகப் பயன்படுத்தியது உண்டு.       


சங்கரன் கோயிலில் புற்றுமண் எடுக்கும் இடம் 

பயமே இல்லாமல் உள்ளே கை விட்டு எடுப்பார்கள். எனக்கு அந்தத் துணிவு வந்ததில்லை.

கீழே இருப்பது பூழித்தேவன் நினைவாக அமைக்கப்பட்ட அறை... முற்றிலும் மர வேலைப்பாடு. உள்ளே- பூழித்தேவனின் உருவம் வரைந்த படம். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி அவர்களது கைக்கு அகப்படாமல் உயிர் தப்பித்த ஒப்பற்ற வீரன் பூழித்தேவனைக் கடைசியாக மக்கள் இந்தக் கோயிலில் தான் பார்த்தார்களாம்! அதன் பிறகு யாருடைய கண்களுக்கும் தென்படவில்லையாம். 


குற்றாலம் சென்று குளித்துத் திரும்புபவர் யாராகிலும் தரிசிக்கும் இரண்டு கோயில்களில் ஒன்று இந்த சங்கரன் கோயில்; இன்னொன்று தென்காசிக் கோயில்.




Raju Rajendran

unread,
Jul 2, 2024, 9:43:17 AM (4 days ago) Jul 2
to vall...@googlegroups.com
கோவையில் வாழைதோட்டத்து ஐயன் கோவிலில் புற்று மண் எடுப்பர். 

திங்., 1 ஜூலை, 2024, 11:45 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv-KcPL5brQiMLyhb6PW9DGf4h%3DXOoeLodzbZ2_nMjVww%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jul 2, 2024, 12:34:45 PM (4 days ago) Jul 2
to vallamai
ஊர்ஊருக்கு நாக வழிபாடும் புற்றுமண் எடுப்பதும் வழக்கம் தான் வேந்தர் ஐயா.
இக்கோயிலின் தனித்துவங்கள்...
1. மூன்று தலைமைத் தெய்வங்களின் கருவறைகள் வரிசையாக... இடது கோடியில் சங்கரலிங்கம்... வலது கோடியில் அம்மன்... இடையில்- 
2. சங்கரநாராயணர் என்ற பெயரில் ஒரு பாதி சிவனும் மறுபாதி பெருமாளும் ஆக இணைந்த திருவுருவம்... சைவ வைணவ நல்லிணக்கம். வலது புறம் சிவன்; இடதுபுறம் பெருமாள். 

3. அம்மன் சன்னிதியில் கோமதி... இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கரிவலம்வந்த நல்லூரில் எழுந்தருளி இருக்கும் அம்மனும் கோமதி அம்மனும் அக்கா தங்கை என்கின்றனர்; அதாவது காளித்தாயும் மாரித்தாயும்... 

4. கோமதிஅம்மன் சந்நிதிக்கு எதிரே தியானம் செய்வதற்கு அமைக்கப்பட்டு இருக்கும் பத்மபீடம். யார் வேண்டுமானாலும் அதில் அமர்ந்து தியானிக்கலாம். அந்தப் பத்மபீடத்தில் நாம் அமரும் இடத்தில் ஒரு துளை  இருக்கும். அத்துளை கோமதி அம்மன் பாதங்களுக்கு அடியில் வைக்கப் பட்டிருக்கும் இயந்திரத்தோடு இணைக்கப் பட்டது என்பர். அதில் அமர நீளமான வரிசை இருக்கும். ஆனாலும் காத்திருந்து என் பேரப் பிள்ளைகளைச் சில மணித்துளிகள் அமர வைப்பேன்; நானும் அமர்ந்து இருக்கிறேன். என் மகனுக்குத் திருமணச் சிக்கல் நேர்ந்த போது கூட அங்கே அமர வைத்து 'நிதானமாக யோசித்து முடிவெடுக்க' வற்புறுத்தி இருக்கிறேன். மனவுளைச்சலோ நிம்மதியின்மையோ; எக் காரணம் ஆயினும் பொதுமக்கள் பெருவாரியாக நம்பிக்கையோடு பின்பற்றும் செயல்பாடு இதுவாகும். இப்போது நாளுக்கு நாள் பெருகும் ஐனத்தொகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அப்பீடத்தில் யாரும் அமர இயலாத படி; கொச்சைக் கயிற்றால் தடுப்புக் கட்டி விட்டனர். 

சக 

kanmani tamil

unread,
Jul 3, 2024, 11:52:17 AM (3 days ago) Jul 3
to vallamai
5. அடுத்த சிறப்பம்சம்: கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறத் தூணில் உள்ள சிற்பம் பற்றிய விபரம். அடியில் ஒட்டி உள்ள உருவத்தின் கீழே எழுதி இருக்கும் பெயர் 'காவல் பறையன் மணிகர்ணீகன்' . (இங்கே ஜாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டிய சூழலில் தான் நான் பயன்படுத்துகிறேனே தவிர வேறு நோக்கம் ஏதும் இல்லை.)
  image.png
(நான் கோயிலுக்குச் சென்ற போது என் கைபேசியை எடுத்துச் செல்லவில்லை; என் மகனைப் படம் எடுக்கச் சொன்ன போது அவனுக்கு அந்தப் பெயரின் மேல் ஆர்வமோ அக்கறையோ இல்லை. வெறும் சிலையை மட்டும் எடுத்து இருக்கிறான்.) மணிகர்ணீகன் என்ற பெயர் காசியில் ஒரு துறைக்கு உரிய பெயர் என்று நினைவு. காவல் தெய்வம் கருப்பசாமியைக் கூடக் கோயிலுக்கு வெளியே தனி இடத்தில் வைத்துத் தான் பல தமிழகக் கோயில்களில் பார்த்து இருக்கிறேன். ஆனால் இங்கு கோயிலுக்கு உள்ளே முதல் தூணில் ... சகல மரியாதையுடன் பார்த்த போது தென்தமிழகத்தின் தனித்துவமும் இந்தக் கோயிலின் தனித்துவமும் புரிந்தது. இன்னும் ஒரு சிறப்பும் இருக்கிறது. நாளை... 
சக  

kanmani tamil

unread,
Jul 4, 2024, 12:42:57 AM (3 days ago) Jul 4
to vallamai

நான் பத்மபீடம் என்று சொன்னது தோற்றத்தை அடியொட்டி நானாக வழங்கும் பெயர் தான். எல்லோரும் அதைச் சக்கரக் குழி என்பர்.

மாரியம்மன் காளியம்மன் வழிபாட்டில் இடம் பெறுவது போலவே பொதுமக்கள் கோமதி அம்மனுக்கும் மாவிளக்கு எடுப்பர்; பூக்குழி இறங்குவர். 

சைவம், வைணவம் இரண்டு சமயங்களின் ஒத்திசைவுக் கோயில் ஆதலால் சங்கர நாராயணர் சந்நிதி முன்னர் பரமபத வாசல் திறக்கும் வைபவம் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும். 

கோயிலில் வெகு விமரிசையாக நடப்பது ஆடித் தபசுத் திருவிழா. ஊர்வலம் வரும் போது பக்தர்கள் அனைவரும் அவரவர் நிலத்தில் விளைந்த பஞ்சைக் கோமதி அம்மன் மீது தூவி வழிபடுவர். 

ஒரு நாட்டார் தெய்வம் (folk deity) பெருந்தெய்வமாக உருவாகி உள்ள வரலாற்றின் எச்சங்களை இங்குள்ள வழிபடு முறைகளில் காண இயல்கிறது. இப்போது இங்கு பூசை செய்வோர் ஐயரும் பட்டரும் தாம் ஆனாலும்; மக்கள் தம் பாரம்பரியமான நடைமுறைகள் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. அதிலும் ஒரு ஆரோக்கியமான மானசீகச் சமநிலை உருவாகி உள்ளதைக் காண இயல்கிறது.

சமுதாயம் நல்ல திசையில் மேனோக்கி நகர்வது தெரிகிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக இக் கோயில் நின்று நிலைத்து ஒரு நாகரிகமான சமூகத்தை உருவாக்கி இருக்கும் இவ்வூரின் சிறப்பு அங்கே கிடைக்கும் பிரியாணியில் இருக்கிறது. ஊருக்குள்ளே சுற்றிலும் தடுக்கி விழுந்தால் பிரியாணிக் கடை தான்.

அரிசி விளையாத; மணப் பொருட்கள் விளையாத; ஏதோ ஒரு மேலைநாட்டு ரெசிபி இல்லை. சீரகச் சம்பா- தமிழ்நாட்டு மண் மணத்துடன்; பட்டை, ஏலம், கிராம்பு என அடுத்த மேலைமலைப் பொருப்பில் விளையும் ஒய்யாரங்களுடன்; இவ் வறண்ட பூமியின் கிடைத்தற்கரிய மேய்ச்சல் நிலத்து ஊட்டத்துடன் வளர்ந்த வெள்ளாட்டங்கறிக் கலவையோடு; கபிலர் 'கறிசோறு' என உம்மைத் தொகையாக அழைத்த தமிழகத்துப் பாரம்பரிய ஊன்சோறு. இந்த ருசியை மிஞ்சத் தமிழகம் முழுவதிலும் எந்த நட்சத்திர உணவகமும் பக்கத்தில் நிற்கக் கூட முடியாது. 

சக 

kanmani tamil

unread,
Jul 4, 2024, 4:42:24 AM (2 days ago) Jul 4
to vallamai

இந்த ஆண்டு திருவிழாவிற்கு உரிய அறிக்கை


Reply all
Reply to author
Forward
0 new messages