(மேலூர்?? கழுகுமலை நடுகல் க ல்வெட்டு

181 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Oct 14, 2017, 11:50:15 AM10/14/17
to vallamai, mintamil, thamizayam, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, muthum...@gmail.com, ara...@gmail.com, Vasudevan Letchumanan, SivaKumar, Raji M, Suresh Kumar
நூ த லோ சு

மயிலை\
அன்புள்ள சேசா த்திரி அவர்களுக்கு
மிக்க நன்றி 
என்  தேடலில் நீங்கள் காட்டிய கழுகுமலை நடுகல் கல்வெட்டு SII vol 14 -31 ல் கிட்டியபடி படமாக இங்குகாட்டுகின்றேன் 

நிற்க
கல்வெட்டுக்குறிப்பது மேலூர் தாலுக்கா கோசக்குடி தெரு உள்ள கழுகு மலை  
 மேலூர் தாலுகா கழுகுமலை என்பதுஇந்நாள்  பலர் அறிய  உள்ள கழுகு மலை ஆகாது என்பது என் கருத்து 

 அதாவது  சமணர் படுக்கைகள் வேட்டுவன் கோயில்(குடைவரைக்கோயில்)உள்ளது  மதுரைக்குதெற்காக திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் உள்ளது கோவில்பட்டி தாலுகா தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை 

 மேலூர் மதுரைக்கு வடகிழக்காக உள்ளது
  
இந்த கல்வெட்டு பற்றி கருத்து வைத்த வரலாற்றலாளரும் கூட தவறான புரிதலுக்கு ஆளாகியுள்ளார் எனலாம்  

கோசக்குடி எனும் இடப்பெயர்  கோசர்கள் எனும்சங்கநூல்களின் குறுக்கப்படுபவர்கள் கா  ட்டும்
 இந்நாளையகுயவர் ஆகாது 

கழுகு மலை என பெயரிடுவது எங்கும் பலஇட டத்தும் நிகழலாம் கழுகுகள் மனிதர் நடமாட்டம் இல்லாத நெடும் மலை குன்றுகளின் உச்சியில் கூட்டுக்கட்டி தன இனத்துடன் வாழும் என்பது பலரும் அறிந்தது 

வேறு 
இதனில் எனக்கு -பூந்தண்மலி எனும்பெயர் வழக்கம் ஒன்பதாம் நூற்றாண்டு சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகர் காலகட்டம் (சமீபம்) அதனாலே உள்ளமை சிறப்பிக்க காண்கின்றது 

மலி = மலிந்துள்ள = நிறைந்துள்ள/பரந்துள்ள 

மண் + மலி    = மணலி 
நெல்+ மலி    = நெமிலி 

பூந்தண்மலி = பூம்+தண்/ இரட்டித்தப்பண்பு/ பூந்தண் =மிக்க குளிர்ச்சி (நீராலோ மரம் செடிகொடிகளாலோ) இரன்டும் கலந்தோ   
தண்மை / மலி = குளிர்ச்சி மலிந்தது  / நிறைந்தது /பர ந்து காண்பது 

(3. The members of the assembly of Nedumanal, alias Madanamanjari-chaturvedimangalam, in Nenmali-nadu, (a subdivision) of Arumorideva-valanadu, have to supply two Brahmacharins as temple servants. vide TANJAVUR BRIHADHISWARA TEMPLE INSCRIPTIONS

INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL  SHRINENo. 69. On the outside of the east enclosure.)

தற்காலம் மலிந்து என்றால் விலை குறைவு அதாவது நிறைய வணிகத்திற்கு ல் வந்துள்ளதால் 

Inline image 1

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)

ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு /  கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் /  றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்

நன்று - பெரிதுசிறப்புநல்லதுஎட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன்அரசன் வழங்கும் ஒரு பட்டம்கோயில் – அரண்மனை

பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில் குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.

சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன்.  மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நேச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 12:21:00 PM10/14/17
to mintamil, muthum...@gmail.com, ara...@gmail.com, தமிழ் மன்றம், Banukumar Rajendran, SivaKumar, vallamai, Maravanpulavu K. Sachithananthan, Suresh Kumar, Vasudevan Letchumanan, Raji M, podhuvan sengai, thamizayam

வணக்கம் ஐயா.

மேலூர் அருகே மலம்பட்டியில் "நெவலி"நாதர் என்று ஐயனார் கோயில் உள்ளது. 
மணலி, நெமிலி
இவற்றிற்கான விளக்கம் அருமை.

நன்றி ஐயா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
TimePhoto_20170609_095637.jpg

N D Logasundaram

unread,
Oct 14, 2017, 1:06:13 PM10/14/17
to vallamai
கல்வெட்டுகாரர்கள் மேலூர் தாலுகா கழுகு மலை என்கிறார்களே அதெப்படி என காட்டினாளல் தன நீங்கள் மதுரைக்காரர் ஆகலாம் ( விளையாட்டாகக் கொள்ளவும்) 
இப்பொது பேசப்படும் கழுகு மலை கோவில்பட்டி தாலுக்கா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது 

வட தமிழ் நாட்டில் பலப்பல நெமிலிகள் உள்ளன மணலி சென்னையிலும் தஞ்சையிலும் உண்டு 

நூ த லோ சு
மயிலை
ஊ 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2017, 3:19:59 PM10/15/17
to மின்தமிழ், vallamai

2017-10-15 9:55 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
​இந்தப் பதிவை எழுத்துப் பிழைகள் நீக்கி மின் தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா

ஒரு முக்கியமான பிழை உண்டு. மொழியியல் பற்றிய நூல்களில் Word-initial loss உண்டு. அப்படி
ச் இழக்கும் சொற்கள் தமிழில் பல. உ-ம்: சமணர் > அமணர், சமர் > அமர், சிப்பி > இப்பி ...

Seshadri S. wrote:
>> எட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன்அரசன் வழங்கும் ஒரு பட்டம்
 
சிலமுறை வேந்தன் அரசுக்கு இதன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளேன்.
எப்படி எட்டி என்பதில் திடீரென ச் சேரும்? க், ச், ய், வ், ந், ம் - இந்த முதல் எழுத்துகள் கொண்ட
பல சொற்களில் இந்த ஆறு எழுத்தும் மறைதலும் உண்டு.

உ-ம்: இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இமைத்தல் ‘blinking' ந்- என்ற எழுத்துடன் தொடங்குவதே இல்லை.
எனவே தான் நிமைத்தல் என்னும் சொல் சம்ஸ்கிருதத்துக்கு தமிழ்/த்ராவிடம் தந்தது எனக் கொள்ளவேண்டியுள்ளது.
புலை/புலி, பனை/பனி (பல்/பால் = வெள்ளை), ... என்பதுபோல, நிமை/நிமி என்றெடுத்து
கண் இமைகளில் எப்போதும் இருக்கும் கடவுள் நிமி என்ற புராணமும் https://en.wikipedia.org/wiki/Nimi_(Vedic_king) ,
நிமிஷ என்ற வார்த்தையும் சம்ஸ்கிருதத்தில் உருவாகிறது. கங்கை என்ற சொல்லில் இருந்து முருகுக்கு காங்கேயன்
என்ற தத்திதாந்த நாமம் என்பதுபோல, நிமிஷ என்ற சொல்லில் இருந்து அகஸ்திய முனியுடன்
தொடர்புடைய வனம் நைமிஷாரண்யம் எனப்படுகிறது. நிமை > இமை.

செணில் > சணில் > அணில், ஸஹஸ்ர- > ஸாஸிரம் > சாயிரம் > ஆயிரம், .... இதுபோலவே,
செட்டி > எட்டி. ....

நா. கணேசன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)

ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு /  கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் /  றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்

நன்று - பெரிதுசிறப்புநல்லதுஎட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன்அரசன் வழங்கும் ஒரு பட்டம்கோயில் – அரண்மனை

பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில் குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.

சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன்.  மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நேச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

N. Ganesan

unread,
Oct 20, 2017, 9:04:48 AM10/20/17
to மின்தமிழ், vallamai
2017-10-20 3:17 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
நான் வசிக்கும் சிவகாசியிலிருந்து கழுகுமலை 30கி.மீ.தூரத்தில் உள்ளது.6ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தோடு ஒரு மாலை வேளையைக் கழிக்க அங்கு சென்று வந்தேன் .சிறிய குன்று .அடிவாரத்தில் ஒரு கோயில்.உள்ளே முருகப்பெருமானைப் பார்த்ததாக நினைவு .நான் ஆராய்ச்சி நோக்குடனோ ஆவணப்படுத்தும் நோக்குடனோ செல்லவில்லை .அதனால் இந்த கோபுரத்தைப் பற்றி என்னால் கருத்துரைக்க இயலவில்லை .மீண்டும் ஒருமுறை அங்கு சென்று இந்தப்படத்தைக்  கையோடு கொண்டுபோய்  ஒப்பிட்டால் தான் முடியும்.குன்றின் மேல் தான் சமண தீர்த்தங்கரர் புடைப்புச்சிற்பங்களும் ஒரு குடைவரைக் கோயிலும் உள்ளன.அந்தக் குடைவரைக்கோயில் ஒரு masterpiece.எனக்கு வேறு சொற்கள் கிடைக்கவில்லை .வேறு எங்கும் அப்படி ஒரு திறமையான கைவினையை  நான் கண்டதில்லை .மாமல்லபுரத்துக் குடைவரைக்கோயிலைகள் வேறு வகை .எங்கள் ஊரில் வெட்டுவான் கோயில் என்று தான் சொல்வோம் வேட்டுவன் கோயில் என்று இந்த இழையில் தான் முதல்முதலாகப் பார்க்கிறேன் .நான் தொல்லியல் துறை சார்ந்தவள் இல்லை .அதனால் எனக்கு அந்த அமைப்பை விளக்கத் தெரியவில்லை .நான் தமிழாசிரியை .மதுரை காமராசர் பல்கலைக்கழகப்  பொதுத் தமிழ் செய்யுள்தொகுப்பில் அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து பாடல் இடம்பெறும் .அது இந்த முருகன்மேல் பாடப்பட்டது என்பர் .

கழுகுமலையில் வேட்டுவன் கோயிலோ, நடுகல்லோ இல்லை. இதெல்லாம் புதிதாக எழுதப்படுவது.

பாறையிலே “வெட்டுவான் கோயில்” உள்ளது. வெட்டுவான் கோயில், பாறையை வெட்டிச் செய்த கோயில். இக் கோயிலை முதலில் விரிவான நூல் எழுதினவர் முனைவர் சி. சிவராமமூர்த்தி ஆவார். தில்லியில் நேஷனல் ம்யூஸியம் அமைத்தபோது அதன் இயக்குநர். இந்தோனேசியா கண்டவ்யூஹ சூத்திரத்தின் அடிப்படையில் அமைந்த பெரிய மண்டலஸ்தூபி ஆன போரோபுதூரை காடுகளில் இருந்து மீட்டபோது அங்கு நிபுணராக இந்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டவர் முனைவர் சிவராமமூர்த்தி. அவரது நூலைப் படித்தபின் தான் கண்டவ்யூகத்த்தின் முக்கியத்துவம் தெரிந்தது. காத அளவை கொண்டு பார்க்கிறபோது இளங்கோ அடிகள் கண்டவ்யூஹ உத்தியைப் பயன்படுத்தியமை புரிந்தது. 32 உத்திகள் என வடமொழி இலக்கணங்கள் கூறுவதைத் தொல்காப்பியம் மொழிபெயர்க்கிறது அல்லவா?

கழுகுமலை வெட்டுவான்கோவில் தாக்கம் இந்தியக் கலைவரலாற்றில் பெரிது. பாண்டியர் பெண்களை மற்ற அரசர்கள் மணந்ததால் கர்நாடகமும், அங்கிருந்து எல்லோரா குகைக்கோயிலும்
அமைய மாடல் கழுகுமலை வெட்டுவான் கோயிலே. https://en.wikipedia.org/wiki/Ellora_Caves

பிற பின்,
நா. கணேசன்

4ஆண்டுகளுக்கு முன்னர் திரு.கண்ணன் அவரகள் சிவகாசி வந்திருந்தபோது கவிஞர் திலகபாமா அவரை கழுகுமலைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகக் கூறினார் .அவரகள் சென்றார்களா இல்லையா என்று தெரியவில்லை 
ஒருவேளை குன்றின் மேலிருந்த குடைவரைக்கோயிலினுள்ளே சிவன் இருந்திருக்கலாம் .ஒரு ஐயம் சிவன் வழிபாடு இருந்த இடம் சமணக் கோட்டமாக இருக்க இயலாதா ?திரு.பானுகுமார் அவரகள் என் ஐயத்தைத் தீர்த்து வைத்தால் நலம் .
என் ஐயத்திற்குக் காரணம் உள்ளது.கொல்லிமலையின் உச்சியில் அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளது.சிவன்கோயில் தான் .ஆனால் அறப்பள்ளி என்று சமணர் பள்ளியைத் தானே குறிப்பிடுவோம் .அது சமணர் கோட்டமாக இருந்து சைவக்கோயிலாக மாறியிருக்க வேண்டும்.
கண்மணி 

N. Ganesan

unread,
Oct 26, 2017, 8:44:49 AM10/26/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Wed, Oct 25, 2017 at 11:25 PM, நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
Inline image 1

நன்றி. மேல் தள வரிசையில் உள்ள நான்கு சிற்பங்கள் என்னென்ன?
(1) நரசிம்மர் (2) உமாசகிதர் (3) ? (4) ?
 
கீழே உள்ள தளத்தில்:
(1) சூரியன் (2) பிரமன் (நான்கு கரம்) (3) தட்சிணாமூர்த்தி (4) வைகுண்டவாசன் (விஷ்ணு)

NG

2017-10-26 12:24 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
Inline image 1
Inline image 2

Inline image 5
Inline image 6
Inline image 7

சிவா /விஷ்ணு  /நரசிம்மா / தக்ஷிணா மூர்த்தி 

தாங்கள் அருகன் என்பது  நான்முகன்  சிற்பம் 

நன்றி 

சுரேஷ்குமார் 

N. Ganesan

unread,
Oct 29, 2017, 8:43:47 AM10/29/17
to மின்தமிழ், vallamai, narumpu nathan, உதயன் மு, Banukumar Rajendran

2017-10-28 22:45 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
அன்பின் சுரேஷ்,

வணக்கம்.

தெளிவான படத்தின் மூலம் விளக்கியதிற்கு நன்றி.

சிலை அர்த்த பத்மாசனத்தில் காட்டப்பட்டிருக்கிறது?
யானை சிலை கீழ்க் காட்டப்பட்டிருக்கிறது?
கை முத்திரையை சுதைக் கொண்டு மாற்றப்பட்டிருப்பதுபோலயிருக்கிறது?

போன்றவைகள் என் ஐயத்திற்கு காரணம்.

சரி,

சிவனார் கோயிலில், நான்முகனும், விஷ்ணுவும் வந்தது எப்படி? அப்ப்டியென்றால்,
இக்கோயில் மிகவும் பிற்பட்ட காலமாகயிருக்கும் என்று நினைக்கிறேன்,

கி. பி. எட்டாம் நூற்றாண்டு - கழுகுமலை வெட்டுவான் கோவில்.

ஒரு நாட்டார்கதை வெட்டுவான்கோயில் என்னும் பெயருக்கு இப்பகுதியிலே
வழங்குகிறது. அதை, அழகாக சிறுகதை வடிவிலே யார் எழுதியுள்ளனர்
என அவ்வூர்க்காரர்களை விசாரித்தால் தெரியும். உ-ம்: திரு. நாறும்பூநாதன்.
தந்தை சமணர் சிற்பங்கள் செதுக்க, மகன் அழகாக இந்த ஈசுவரன் கோவிலை
வெட்டிச் செய்தான் ...

எல்லோராவும், வெட்டுவான் கோயிலும் அதிசயமானவை. கீழே இருந்து
கட்டாமல், காஞ்சி கைலாசநாதர், பட்டடக்கல்லு விரூபாக்ஷர் கோவில்
மாடலில், ஆனால் மேலே இருந்து கல்லை வெட்டித் துல்லியமாய்ச் செதுக்கியது
எல்லோரா கைலாசநாதர் கோவில். அதேபோல, பாண்டியன் பராந்தகன்
நெடுஞ்செழியன் தன்னும் தமிழ் மகாராசன் கரிசல் பூமிக்கு, ஏன் தென்னிந்தியாவுக்கே
அளித்த புதுமை கழுகுமலை வெட்டுவான்கோவில்.

இந்த ஈசுவரக் கலைக்கோயில் ஒவ்வொரு கோஷ்டத்திலும் உள்ள விக்கிரகங்கள்
ஒளிப்படமும், இன்னின்ன தெய்வம் என்பதும் அவை நோக்கும் திசையும்
பற்றி சுரேஷ்குமார் போன்றோர் விரிவாகக் கட்டுரை எழுத வேண்டும்.
சி. எம். உதயன் சென்று படம் எடுத்தும் செய்யலாம்.

கழுகுமலை, 
பேரா. கு. அருணாசல கவுண்டர்
ஏ.பி.சி. வீரபாகு மணிவிழா மலர்க் கட்டுரை வாசித்தீர்களா?

நா. கணேசன்
 
இரா.பானுகுமார்

On Thu, Oct 26, 2017 at 8:54 AM, நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:
Inline image 1

Inline image 2

Inline image 5
Inline image 6
Inline image 7

சிவா /விஷ்ணு  /நரசிம்மா / தக்ஷிணா மூர்த்தி 

தாங்கள் அருகன் என்பது  நான்முகன்  சிற்பம் 

நன்றி 

சுரேஷ்குமார் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages