மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

265 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 13, 2015, 10:11:48 PM7/13/15
to vall...@googlegroups.com, mintamil, Santhavasantham, housto...@googlegroups.com
http://www.dinamalar.com/news_detail.asp?id=1295784
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். .

வாழ்க்கை வரலாறு: இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் 1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2015, 10:15:29 PM7/13/15
to vallamai
அடக்கொடுமையே

13 ஜூலை, 2015 ’அன்று’ 10:11 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Tulsi Gopal

unread,
Jul 13, 2015, 10:18:57 PM7/13/15
to vall...@googlegroups.com
அஞ்சலிகள்.
என்றும் அன்புடன்,
துளசி

Hari Krishnan

unread,
Jul 13, 2015, 10:31:20 PM7/13/15
to vallamai

2015-07-14 7:45 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
அடக்கொடுமையே

மெல்லிசை மன்னர் இசையைக் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.  மெல்லிசையின் தரம் என்பது என்போன்றோருக்கு எம்எஸ்வியுடன்தான் தொடங்குகிறது.  உணவின் சுவை என்பது குழந்தைக்குத் தாய் கைச் சோற்றுடன் தொடங்குவதைப் போல.

நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.  நிறைவாக வாழ்ந்திருக்கிறார்.  இதில் கொடுமை எதுவுமில்லை.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.


என்றோ ஒருநாள் என்று வரும்போதே, திரும்புவதற்கான பயணச்சீட்டு எடுத்து வந்த வாழ்க்கை.  முடிந்துதானே ஆகவேண்டும்.  அவர் வாழ்நாளில் சாதித்தவை எல்லாம் அவர் பெருமையைப் பேசி என்றென்றும் நிற்கும்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Megala Ramamourty

unread,
Jul 13, 2015, 11:08:36 PM7/13/15
to vallamai, மின்தமிழ்
எங்கள் தலைமுறையில் நாங்கள் இளையராஜாவின் die-hard விசிறிகளாய் இருந்தபோதிலும், மெல்லிசை மன்னர்களின் பாடல்களையும் மிகவும் ரசித்தோம்..இப்போதும் ரசிக்கிறோம். விஸ்வநாதன் - இராமமூர்த்தி இரட்டையர்களின் இசை, கண்ணதாசனின் பாடல் வரிகள் என்றால் அதை விரும்பிக் கேட்காத தமிழரும் உண்டோ?

மெல்லிசை மன்னர்கள் இருவரும் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குப் பிறகு துரதிர்ஷ்டவசமாகப் பிரிந்துவிட்டபோதிலும், எம்.எஸ்.வி ஐயா தனித்தே தர்பார் நடத்திய வல்லமையாளர். தமிழன்றி மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் எம்.எஸ்.வி ஐயா இசையமைத்திருக்கிறார். அத்தோடு நில்லாமல், சிறந்த பாடகராகவும் நடிகராகவும் அவர் திகழ்ந்திருக்கிறார்.

ஹரிகி ஐயா குறிப்பிடுவதுபோல் நிறைவாழ்வு வாழ்ந்து, நிறைய சாதித்த சாதனையாளர் எம்.எஸ்.வி என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. அறிஞர்களுக்கு வயதில்லை. அவ்வகையில் அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய இயலாதவொன்றுதான்.

அவருடைய ஆன்மா அமைதி பெறுவதாக!


அன்புடன்,
மேகலா


Meena Muthu

unread,
Jul 13, 2015, 11:22:13 PM7/13/15
to vall...@googlegroups.com


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.


என்றோ ஒருநாள் என்று வரும்போதே, திரும்புவதற்கான பயணச்சீட்டு எடுத்து வந்த வாழ்க்கை.  முடிந்துதானே ஆகவேண்டும்.  

தெரிந்தும் வருந்துகிறது மனது

அவர் வாழ்நாளில் சாதித்தவை எல்லாம் அவர் பெருமையைப் பேசி என்றென்றும் நிற்கும்.

ஆத்மார்த்தமான அஞ்சலி.

KAVIRI MAINDHAN

unread,
Jul 13, 2015, 11:34:24 PM7/13/15
to vallamai

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்


ஏழிசை ஸ்வரங்களை பாமரரும் உணரும் வண்ணம் ஏந்தி வந்தப் பெருந்தகை! தமிழ் மக்கள்  இதய சிம்மாசனங்களில் வீற்றிருக்கும் மெல்லிசை மன்னர்!


எத்தனையோ  இசை   அமைப்பாளர்களை   திரையுலகம்  கண்டிருக்கலாம்.  கண்டு  கொண்டிருக்கலாம்.   காணவிருக்கலாம்!!   அத்தனை  பேரிலும்  காலத்தின்   கல்வெட்டில் மின்னும் பொன்னொளியாய்   திகழும் பெயர்    எம்..எஸ். விஸ்வநாதன்!


தன்னடக்கம்..  காரணமாய்..  "இறக்கும்  மனிதர்கள்....  இறவாப்  பாடல்கள்" என முத்திரைப் பதித்த பொற்கால இசை சாம்ராஜ்யத்தை நமக்காக உருவாக்கித் தந்தவர்களுள் மிக முக்கியமானவர்.  1950 ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலான தமிழ்த் திரை இசைச் சரித்திரம் நம் மெல்லிசை மன்னரின் புகழ் கூறுகிறது! மனித உணர்வுகளின் பதிவுகள் - சரியான விகிதத்தில் கவிதையோடு இசையமைப்பு பின்னிப் பிணையப்பட்ட காலம்!


ஜீவனுள்ள பாடல்கள்!  அவற்றைத் தாங்கி நின்ற இசை!

 

மொத்தத்தில் அவையெல்லாம் ஜீவசுகம் தந்தவை!

 

அர்த்தமுள்ள வரிகள்!  அதற்கேற்ற பின்னணி!

 

கூட்டணி  வெற்றிகளைக் குவித்தவை!

 

கருத்து முத்துக்கள் ஏராளமாய் கனிந்து குலுங்க..

 

பூக்களைத் தாங்கும் கம்பின் விதமாய் இசைவரிசை!

 

முழுக்க முழுக்க மனித முயற்சியினால் விளைந்த இசைக்கோர்வை!

 

ஒவ்வொரு வாத்தியக் கலைஞரும் தன் பங்களிப்பால் உயிர் தந்த இசைக் கட்டமைப்புகள்!

 

அழகிய கற்சிலை ஓவியமாய்.. 'கவிதை' நின்றதென்றால்..  அதைப் பழகிடும் நற் கலை  மாதர் போல் மாற்றும் -  அவர்தம்  இன்னிசை!

 

ராஜசபையில்  ஓங்கி ஒலிக்கும் அவர்தம்  பாணி!

மெல்லிசை மன்னர் என்கிற பட்டம் அவருக்கே  பொருந்தும்!

எத்தனை எத்தனை சுகமான மெட்டுக்கள்?

ஆயிரமாயிரம் வரிகள் எழுதிப் பாராட்ட வைக்கும்!!

மெல்லிசை மன்னரைத் தந்த ஆண்டவனுக்கே எங்கள் நன்றிகள்!!

அவர் வாழ்ந்திடும் யுகத்தில் வாழ்கிறோம் என்பதே பெருமை!


வார்த்தைகளைச் சிதைக்காமல் வழிந்தோடி வருகின்ற அவரின்  இசை அமைப்பு   என்றும் பொங்கி வரும் தேனாறு.  சரம் சரமாய் எழில் கொண்டு விளங்கும் பல்லவிகள் -  நவிலும் தினம்தோறும் உச்சரிக்கப்படும் பாடங்கள்.  சரியான குரல் தேர்வுகள் செய்த அவரின்  சாதுர்யம் - ஒரு வரலாற்றை அல்லவா படைத்திருக்கிறது?

 

விதம் விதமான இசைக் கோர்வையை கற்பனையால் வடித்துத் தந்த வள்ளலவர்!

நெஞ்சம் மறக்காத அந்த நீலாம்பரிகள்!

நினைவில் தவழும் அற்புத கானங்கள்!

உருகவைக்கும் உன்னதப் பாடல்கள்

உணர்வில் கலக்கும் உயிரோட்டமிக்க  இசை வடிவங்கள்!

கேட்டுக் கேட்டு மயங்கிக் கிடக்கும் எண்களின் இதயங்களில் என்றென்றும் மன்னர் நீங்கள் தானே?

அதிசய ராகங்கள் முதல் அபூர்வ ராகங்கள் வரை..

ஆயிரமாயிரம் பாடல்கள் உலா வரும் இவ்வுலகில்

வாழ்கின்ற இவ்வாழ்க்கையிலே - நாங்கள் கேட்டு ரசிக்கும் தன்மை தந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்!

மக்கள் திலகத்திற்காகவும்

நடிகர்திலகத்திற்காகவும்  மற்றும்  பல  முன்னணி  நடிகர்  நடிகைகளுக்காக  எனப் பட்டியலிட்டுப் பார்த்தால்  அவரின் பரப்பளவு விரிந்துகொண்டே செல்கிறதே!

பக்தி பாடல்களிலும் பரவசமான அவரின்  இசை மனதை ஆள்கிறதே!

கிருஷ்ண கானம் ஒன்றே அதற்கு சத்திய சாட்சி சொல்லுமே!


இறக்கும் மனிதர்கள்.. இறவாப் பாடல்கள் என்று அடிக்கடி கூறும் ஒரு மனிதர்!

 

Music.   Sound,  Voice  =  M.S.V.

 

நவீன உலகில் இசை உருவாக்கம் என்பது கணிணி சார்ந்த ஒன்றாகிவிட்டது.

 

அன்றைய காலக்கட்டத்தில்.. எல்லாமே அந்த ஆர்மோனியக் கட்டைக்குள் இருந்துதான்.. அப்படியென்றால் இசைக்கலைஞனின் மூலையிலிருந்துதான்.. முழுக்க.. முழுக்க..

 

அப்படி.. இசையை கேள்வியறிவின்மூலம் பெற்று.. முன்னணி இசையமைப்பாளரிடம் உதவியாளராய் பணிபுரிந்து.. தனது ஞானத்தால்தெய்வ அருளால்பெரியவர்களின் ஆசியால்.. காலம் கனிந்திட.. கண்ணதாசன் முதலான மாபெரும் கவிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் உயிர்கொடுத்த இசை வழங்கி.. ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கு இசையமைத்து நூற்றாண்டு சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 


இன்றும் நாம் முணுமுணுக்கும் பாடல்கள் அனேகமாக அவர் இசையமைத்ததாகத்தான் இருக்கும்.  தமிழ்த்திரையிசைக்கு.. தென்னக மொழிகளில் இசைத்துறையில் அவர் ஆற்றிய அரும்பணியை இந்திய அரசாங்கம் கெளரவிப்பதென்பது ஒவ்வொரு தமிழனும் .. ஒவ்வொரு இந்தியனும் பெறுகின்ற கெளரவமாகும்.


அன்புகலந்த நன்றியுடன்..

 

 

காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்)

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்

பம்மல், சென்னை 600 075.

kavir...@gmail.com

0097150 2519693

 

Manayangath Subramanian Viswanathan,(also known as M.S.V.), is a Music Director from South India. He is considered to be one of the versatile and significant composers in Kollywood,he is popularly known as "Mellisai Mannar" (Tamil for "the King of Light Music"). He has composed for a total of 700 films composing songs in Tamil, Hindi, Malayalam, Kannada, and Telugu languages.His major works over the past five decades have been in Tamil, Malayalam and Telugu films. We the fan's of MSV request the Government of India to honour this genius by nominating (and awarding) him for the  Padma Vibushan

 

MSV TIMES - MURALI - CHENNAI....






--
கவிஞர் காவிரிமைந்தன் 
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் 
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் 
பம்மல்,  சென்னை 600 075
தற்போது - அபுதாபி - அமீரகம் 
00971 50 2519693
00971 50 4497052

Tthamizth Tthenee

unread,
Jul 13, 2015, 11:50:45 PM7/13/15
to vall...@googlegroups.com
உயர் திரு  எம் எஸ்  விஸ்வநாதன்  அவர்கள் இசை மேதை  

அவர் தொடாத உயரங்களே இல்லை   அவருடன் சேர்ந்து கங்கா யமுனா சரஸ்வதி என்கிற தொலைத் தொடர் நடித்தேன்

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமைதான் மனதுக்கு இதம் , அவர் மறைவுக்கு வருந்துகிறேன்

அன்னாரது ஆன்மா  சாந்தியடையட்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

வேந்தன் அரசு

unread,
Jul 14, 2015, 8:45:14 AM7/14/15
to vallamai


13 ஜூலை, 2015 ’அன்று’ 11:22 பிற்பகல் அன்று, Meena Muthu <ranga...@gmail.com> எழுதியது:



நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.


என்றோ ஒருநாள் என்று வரும்போதே, திரும்புவதற்கான பயணச்சீட்டு எடுத்து வந்த வாழ்க்கை.  முடிந்துதானே ஆகவேண்டும்.  



அவர் வாணாளை இன்னும் ஒரு 10 ஆண்டு நீடித்து இருக்கலாமே. கொடுமை செய்பவனுக்கு  தர்மராஜா என பேர். 

N. Ganesan

unread,
Jul 14, 2015, 10:05:07 AM7/14/15
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, mintamil, Santhavasantham

வாழ்க்கை வரலாறு :

கேரளா மாநிலத்தில்  பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள்.

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள். உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். 

தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை 700 படங்களுக்கு இணைந்து இசையமைத்தார்கள். இவர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளார் . 

1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களிடம் மற்ற இயக்குனர்களை விட அதிகமாக வேலை பார்த்திருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்தபாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார்.

இவரது இசையில் உருவான சில பாடல்கள் :

1. எங்கே தேடுவேன் (பணம்)

2. மயக்கும் மாலை (குலேபகாவலி)

3. குறுக்கு வழியில் (மகாதேவி)

4. முகத்தில் முகம் (தங்கப்பதுமை)

5. செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)

6. தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)

7. ஆடைகட்டி (அமுதவல்லி)

8. ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)

9. தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)

10. ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)

11. பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)

12. பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)

13. அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)

14. ஜல் ஜல் ஜல் (பணம்)

15. காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)

16. மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)

17. மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)

18. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)

19. பால்வண்ணம் (பாசம்)

20. பாலும் பழமும் (பாசம்)

21. உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)

22. வாராய் என் தோழி (பாசமலர்)

23. அத்திக்காய் காய் (பலே பாண்டியா)

24. தேவன் கோயில் (மணியோசை)

25. எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)


N. Ganesan

unread,
Jul 14, 2015, 10:24:07 AM7/14/15
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com

எம் எஸ் வி ஆல்பம்


N. Ganesan

unread,
Jul 14, 2015, 10:25:48 AM7/14/15
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com

விகடன் மேடையில் மறைந்த எம்.எஸ்.வி. அவர்கள் பதில் அளித்து இருந்தார். இதோ பொக்கிஷ பகிர்வாக இங்கே..வாசகர் கேள்விகள்...

 

கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.

 ''இந்தக் காலத்தில் சில திரைப்படப் பாடல் களில் 'காப்பி’ நெடி தூக்கலாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். உங்களிடம் சில ரெக்கார்டுகளைக் கொடுத்து, 'இது மாதிரி இசையமைத்துக் கொடுங்க’னு சொன்னாராமே... உண்மையா?''

'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்க வெளிநாடுகளுக்குப் போன எம்.ஜி.ஆர்., ஒரு மூட்டை நிறைய ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் கொண்டுவந்து கொடுத்து, 'விசு... இதை எல்லாம் கேட்டுப்பார். ஒரு ஐடியா கிடைக்கும்’னார். நான் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவெச்சுட்டு, 'அண்ணே... நான் மெட்டுப் போட்டுத் தர்றேன். அதைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க’னு சொல்லி, கடகடனு நிறைய மெட்டு போட்டுக் கொடுத்தேன். அதையெல்லாம் கேட்டதுமே எம்.ஜி.ஆர். என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டார். அது எல்லாமே சூப்பர் ஹிட் மெட்டு ஆனதுதான் உங்களுக்கே தெரியுமே!''

பா.கீர்த்தனா, சென்னை-63.

''ஜெயலலிதா உங்களுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்ய முன்வந்தும் நீங்கள் மறுத்தது ஏன்?''

''முதல்வர் அம்மா என்கிட்டேயே, 'உங்களுக்கு ஜனாதிபதி விருது கொடுக்க சிபாரிசு செய்யப்போறேன்’னு சொன்னாங்க. என் இசை மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பின் காரணமா அப்படிச் சொன்னாங்க. 'இல்லம்மா... உங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கும். என்னால எதுக்கு உங்களுக்குச் சங்கடம்? வேண்டாம்மா. ஒவ்வொரு ரசிகரும் தன் மனசுல எனக்குக் கொடுத்துருக்கிற இடத்தைவிடவா விருதுகளும் பட்டங்களும் எனக்குச் சந்தோஷம் கொடுத்துடப் போகுது... நீங்க சொன்னதே போதும்மா’னு சொல்லிட் டேன். அது உண்மைதானே!''

க.சந்திரன், திருவண்ணாமலை.  

'' 'அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் வெளிவந்தப்ப, அதைக் கேட்டதும் உங்க மனசுல என்ன நினைப்பு ஓடுச்சு?''

'' சிவகுமார் நடிச்ச பல படங்களுக்கு நான் மியூஸிக் போட்டிருக்கேன். 'அன்னக்கிளி’ பட வேலைகள் ஆரம்பிச்சப்பவே புது மியூஸிக் டைரக்டரை அறிமுகப்படுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. படத்தின் பாடல்களைக் கேட்டுட்டு, 'ரொம்பப் பிரமாதமா... இருக்கே’னு நினைச்சேன். அப்போ எங்கே போனாலும் இதே பேச்சாதான் இருந்துச்சு. தம்பி இளையராஜாவைப் பாராட்டினேன். 'அன்னக்கிளி’ வர்றதுக்கு முன்னயே அவரை எனக்குத் தெரியும். என் ட்ரூப்புல கீபோர்டு வாசிச்சிருக்கார். அற்புதமான மேதை. இன்னொரு விஷயம், யாரையும் நான் பொறாமை யோட பார்த்தது இல்லை. ஆனா, போட்டி இருக்கும்.''

தீன் முகம்மது, பூதமங்கலம்.

''நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன?''

''நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, 'கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ண தாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக் கார். 'டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்!''

அனுசுயா கோவிந்தராஜன், தஞ்சாவூர்.

''நீங்க புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் உங்களுக்கு நிகராக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைப் பற்றி உங்கள் நினைவுகள் என்ன?''

''ரொம்பப் பெரிய மேதைங்க அவர். நான் பெரிசா மதிக்கிற மியூஸிக் டைரக்டர்ல அவரும் ஒருத்தர். அப்போ நான் மியூஸிக் போட்ட ஒரு படத்தோட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சுன்னா... அடுத்ததா அவர் மியூஸிக் போட்ட பாடல்களும் ஹிட் ஆகும். ரெண்டு பேருமே பீக்ல இருந்தோம். முதன்முதலா கோரஸ் பாடுறதுக்கு நான் சான்ஸ் கேட்டுப் போனது கே.வி.மகாதேவன்கிட்டதான். என்னை அவர் சேர்த்துக்கலை. ஆனா, 'ஜூபிடர் பிக்சர்ஸுக்கே மறுபடியும் போய்ச் சேரு’ன்னு சொல்லி... எனக்கு வேட்டி, சட்டைலாம் எடுத்துக் கொடுத்து, கையில் ரெண்டு ரூபாயும் தந்து என்னை அனுப்பிவெச்சது அவர்தான். நான் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர் ஸுக்குப் போய், எஸ்.எம்.சுப்பையா நாயுடுகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். பல பேர் என்னை வழிப்படுத்தி இருக்காங்க. அதில் கே.வி.மகா தேவன் அவர்களுக்கு முக்கியமான இடம் இருக்கு!''

ஆ.பிரணவ், முக்கூடல்.

''இப்போதும் நீங்கள் அடிக்கடி முணுமுணுக் கும் பாடல் எது... ஏன்?''

''ஏன்னு சொல்லத் தெரியலை. ஆனா, 'தேவனே என்னைப் பாருங்கள்...’ பாட்டைத்தான் இப்பெல்லாம் அடிக்கடி முணுமுணுத்துட்டு இருக்கேன்.''

கே.ஆர்.முத்தையா, திருச்சி-4.

''கமல், ரஜினி இருவரும் உங்களிடம் எப்படிப் பழகுவார்கள்?''

''எனக்கு எல்லா வயசுலயும் நண்பர்கள் இருக்காங்க. கமல் என் குட்டி நண்பன். என் குடும்பத்தில் பிறக்காத பிள்ளை. முன்னாடி அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அப்பல்லாம், 'எனக்கு நல்லா பாட வரும். எனக்கு உங்க மியூஸிக்ல பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்’னு கேட்டுட்டே இருப்பார். என்னமோ தெரியலை என் மியூஸிக்ல அவரைப் பாட வைக்கணும்னு எனக்குத் தோணவே இல்லை.

ரஜினி என்னை எங்கே பார்த்தாலும், அவர் வீட்டுல உள்ள ஒரு பெரிய மனிதரை வணங்குற மாதிரி பணிவா வணங்குவார். 'நினைத்தாலே இனிக்கும்’, 'தில்லுமுல்லு’ படங்கள்ல அவருக்காக நான் போட்ட பாட்டைக் கேட்டுட்டு, ஓடி வந்து என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டாரு. இப்பவும் எங்கேயாச்சும் பார்த்தா, 'ராகங்கள் பதினாறு உருவான வரலாறு... நான் பாடும்போது அறிவாயம்மா...’ பாட்டை வாய்விட்டு முணுமுணுப்பார். அன்பான மனுஷன்!''

ப.ராணி, நாகர்கோவில்.

''திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி 'அல்லா... அல்லா’னு பாட்டுப் பாடினீங்க?''

''அல்லா,  இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. 'முகமது பின் துக்ளக்’ படத்துல 'அல்லா... அல்லா...’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். 'சரி... யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. 'சரி... ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது... சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!''

டி.ராகுல், தோப்பூர்.

''கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரராமே... அப்படியா?''

''பிடிவாதம்கிறது பெரிய வார்த்தை... கொண்ட கொள்கைல உறுதியா இருப்பார். அந்தக் கொள்கைக்குச் சரியான நியாயமும் வெச்சிருப்பார். 'யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...’ பாடல் பதிவு. பாடல் வரிகளைப் படிச்சுட்டு கவியரசுகிட்ட நான் சொன்னேன், 'என்ன கவிஞரே... வாடா போடானு மரியாதை இல்லாம எழுதியிருக்கீங்க. இதே மாதிரிதான், 'போனால் போகட்டும் போடா’ன்னும் எழுதிஇருந்தீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ உடனே கண்ணதாசன் பளிச்னு சொன்னாரு, 'டேய்... நீ விஜயவாடாங்கிற ஊரைக்கூட 'விஜயவாங்க’னு சொல்றவன். நான் எழுதறதுக்கு மெட்டு போடுறதுதான் உன் வேலை. அதை மட்டும் ஒழுங்கா பார்த்துக்க.. போதும்’னு பட்டுனு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் நான் எதுவும் பேச முடியுமா என்ன? அவரோட பிடிவாதம்லாம் இப்படித்தான் இருக்கும்.''

 

லதா ராமகிருஷ்ணன், திருச்சி-9.

''சமீபத்தில் வெளியானதில் நீங்கள் மிகவும் ரசிச்ச தமிழ்ப் பாட்டு எது?''

''ஒரு பாட்டு இல்ல... சில பாடல்களைச் சொல்லலாம். தம்பி இளையராஜா இசையமைச்ச 'நீதானே பொன் வசந்தம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைச்ச 'விண்ணைத் தாண்டி வருவாயா’... படப் பாடல்கள் எல்லாம் கேட்குறதுக்கு ரொம்ப இனிமையா இருந்துச்சு. புதுசாவும் இருந்துச்சு!''

- ஆனந்த விகடன்

coral shree

unread,
Jul 14, 2015, 11:57:40 AM7/14/15
to vallamai, நா. கணேசன்
அற்புதமான பகிர்வுகள். எம்.எஸ்.வி. பற்றிய பல தகவல்கள் அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி சார்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

N. Ganesan

unread,
Jul 15, 2015, 3:56:17 PM7/15/15
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, July 15, 2015 at 8:47:04 AM UTC-7, நம்பன் wrote:
எல்லாம் சரி இவரது மனைவி மக்களைப் பற்றி மூடு மந்திரமாக உள்ளதே. எந்த செய்தித் தாளிலும் இக்குறிப்பு இடம்பெறவில்லையே. அப்படியானால் தனிவாழ்வில் தோல்வி கண்டவரா?

நம்பன் 


வறுமையால் இளமையில் தற்கொலை செய்ய முயற்சித்தார். தாத்தா எம்.எஸ்.வி. அவரது தாய் காத்திருக்கிறார்.
பின்னர் எல்லாமே இன்ப மயம்.

அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!
 

2015-07-14 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Jul 15, 2015, 4:02:35 PM7/15/15
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham

தற்கொலை செய்யும் அளவிற்கு வறுமையால் வாடிய எம். எஸ். வி..!
இளம் வயதில் வறுமையால் வாடினார். தாயாருடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்குச் சென்றார். பிறகு எதிர்நீச்சல் போட்டு, புகழின் சிகரத்தை அடைந்தார். அவர்தான் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.

எம். எஸ். விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம். தந்தை பெயர் சுப்பிரமணியன் தாயார் நாராயணி.

கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. மனையங்கக் ஹவுஸ் என்பது எம். எஸ். விஸ்வநாதனின் பரம்பரை பெயர் அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து எம். எஸ். விஸ்வநாதன் ஆனார்.

எம். எஸ். விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். அப்போது தந்தை சுப்பிரமணியன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து வந்தார்.

எம். எஸ். விஸ்வநாதன் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சினை காரணமாக சுப்பிரமணியன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்னர் திருச்சியில் ஜெயில் வார்டர் வேலை கிடைத்தது. தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயரும் அங்கே ஜெயில் வார்டர் பணியில் இருந்தார்.

திருச்சியில் இருந்தபோது சுப்பிரமணியன் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது எம். எஸ். விஸ்வநாதனுக்கு 4 வயது.

தந்தை இறந்த 15 நாட்களுக்குள் இன்னொரு இழப்பும் ஏற்பட்டது. விஸ்வநாதனின் தங்கை வேசம்மாவும் மரணம் அடைந்தார். இந்த சோகங்களை 4 வயதில் விஸ்வநாதன் தாங்க நேரிட்டது.

எனவே ஊரார் விஸ்வநாதனை அதிர்ஷ்டமில்லாதவன் என்று ஏளனமாகப் பேசினார்கள்.

இதனால் விஸ்வநாதனின் தாயார் நாராயணி, மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதனால் ஒரு விபரீத முடிவு எடுத்தார்.

ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு மகன் விஸ்வநாதனை எழுப்பினார் நாராயணி. மகனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலைக்கு சென்றார். ஒரு குளக்கரையில் வந்து நின்றனர்.

மகனை குளத்தில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

என்ன நடக்கப்போகிறது என்பதை லேசாகப் புரிந்துகொண்ட விஸ்வநாதன் ‘நீ முதலில் குதிம்மா’ என்றார்.

‘ஏன்டா, அப்படிச் சொல்றே?’ என்றார் தாயார்.

‘என்னை தள்ளிவிட்டு, நீ அப்புறம் குதிக்காமல் தப்பிச்சுப் போயிட்டா என்ன செய்வது?’ என்றார். விஸ்வநாதன்.

இப்படி தாய்க்கும், மகனுக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது அங்கே தாத்தா கிருஷ்ணன் நாயார் வந்தார். நடந்ததை தெரிந்துகொண்டார்.

நாராயணிக்குட்டி செத்துப்போயிட்டா எல்லாம் சரியா போயிடுமா? இதென்ன பைத்தியக்காரத்தனம் அந்த புள்ளைய குளத்தில் தள்ள எப்படி உனக்கு மனம் வந்தது? நான் இருக்கும்போது உனக்கென்ன கவலை? உங்களையெல்லாம் நான் காப்பாற்றாமல் போயிடுவேனா? வா வீட்டுக்கு’ என்று ஆறுதல் கூறி இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் கிருஷ்ணன் நாயருக்கு திருச்சியிலிருந்து தெற்கு மலபாரான கண்ணனூருக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்தது.

கண்ணனூர் போனவுடன் அங்குள்ள ஒரு பள்ளியில் விஸ்வநாதனை சேர்த்தார். ஆனால் விஸ்வநாதனுக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லை.

பள்ளிக்கு செல்லாவிட்டால் தாத்தா திட்டுவார் என்பதற்காக பையை எடுத்துக்கொண்டு கிளம்புவார்.

மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக விஸ்வநாதன் பெயரை ஆசிரியர் படித்ததும் உள்ளேன் ஐயா என்று குரல் கொடுத்து விட்டு, அடுத்த சில நிமிடத்தில் விஸ்வநாதன் மாயமாய் மறைந்துவிடுவார்.

பள்ளிக்கூடம் அருகே ஓர் இசைப்பள்ளி இருந்தது. அங்கு சென்று ஓரமாக நின்று பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பார். பள்ளிக்கூடம் விடுகிற நேரத்தில் மீண்டும் புத்தகத்தை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புவார்.

எம். எஸ். விஸ்வநாதனுக்கு படிப்பைவிட இசை ஆர்வமே அதிகமாக இருந்தது.

N. Ganesan

unread,
Jul 16, 2015, 10:10:59 AM7/16/15
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com
வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.எஸ்.வி...

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், எம்.எஸ்.வியின் ஆரம்பகால வாழ்க்கையை விவரித்திருக்கிறார். நடிகர் சிவகுமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: 

“1940 களின் பிற்பகுதி. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ.ஜூபிடர் நிறுவனம் ‘கண்ணகி’ -‘ராஜகுமாரி’ – படங்கள் மூலம் அன்று புகழ் பெற்றிருந்தது.

ஒரு புதுப்படத்துக்கு, மியூசிக் டைரக்டர் பாடல் கம்போஸ் செய்து கொண்டிருந்தார். டியூன் திருப்திகரமாக வரவில்லை. நாளை பார்க்கலாம் என்று இரவு 9 மணிக்கு கிளம்பி விட்டார்.

ஆபீசில், மேஜை நாற்காலிகளைத் துடைத்து, அறையைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து, சாமி படங்களுக்கு மாலை போட்டு, பூஜைக்கு தயார் செய்து வைக்கும் ஆபீஸ் பையன் ஹார்மோனியத்தை திறந்து ஒரு டியூன் வாசித்தான். கூட இருந்த சிறுவன் பலே என்றான்.

மறுநாள் மியூசிக் டைரக்டர் வந்தார். ஹார்மோனியம் இடம் மாறி இருந்தது. ‘யார்ரா அவன், பொட்டிய தொட்டது’ – சத்தம் போட்டார்.

ஒரு நிமிட அமைதி. ‘சார், இவன் நேத்து ஹார்மோனியத்தில ஒரு டியூன் வாசிச்சான் சார்’- உடன் இருந்த பையன் போட்டுக் கொடுத்தான். ஒரு வினாடி அவருக்கு கோபம்… ‘இங்கே வாடா’.. நடுங்கிக்கொண்டே வந்தான் சிறுவன். ‘எங்கே அதை வாசிச்சுக்காட்டு’… வாசித்தான்… மீண்டும் ஒரு நிமிடம் அமைதி… ‘ சரி, இந்த டியூனை நீதான் போட்டேன்னு யார் கிட்டயும் சொல்லாதே’…படத்தில், அந்த டியூனில் வந்த பாட்டு ‘ஹிட்’!.. அதே படத்துக்கு சிறுவன் போட்ட, இன்னொரு டியூனும் ‘ஹிட்’! .

அடுத்த படத்திலும் சிறுவன் கம்போஸ் செய்த 3 பாடல்கள் ‘ஹிட்’.. ஆனால், மியூசிக் டைரக்டர் பெயர் மட்டும், டைட்டிலில்… சிறுவனுக்கு சிறு பாராட்டுக் கூட இல்லை.

ஜூபிடர் நிறுவனம் சென்னைக்கு குடி பெயர்ந்தது… காமிரா, லைட், மைக், மேஜை நாற்காலி எல்லாம் வேன்களில் ஏற்றி, வண்டிகள் புறப்படத் தயாராக இருந்தன.

ஓடி வந்த மியூசிக் டைரக்டர் ‘முதலாளி, எதை வேணும்னாலும் விட்டுட்டுப் போங்க. இவனை மட்டும் விட்டுடாதீங்க. இவன், தங்கம், வைரம், வைடூரியம் !! உங்க சமீபத்திய படங்கள்ள ஹிட்டான பாட்டு பூராவும் இவன் போட்டது’, என்றார்.

சிறுவன் கண்களில் ரத்தக் கண்ணீர்… மடார் என்று குருவின் காலைக் கட்டிக்கொண்டு கண்ணீரால் அவர் பாதங்களுக்கு அபிசேகம் செய்தான். அவன் தான் – கேரளாவில் சினிமா தியேட்டரில், வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவக்கி 1200 திரைப் படங்களுக்கும் மேலாக இசையமைத்து, 4 தலைமுறை ஹீரோக்களின் படங்களுக்கு, தன் இசையால் உயிர் கொடுத்த நம் பேரன்புக்குரிய ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. அந்த மியூசிக் டைரக்டர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு..

தன் ஆசானை கடைசி காலத்தில் தன் வீட்டில் வைத்து கவனித்ததுடன் அவர் மறைந்தபோது ஈமச்சடங்கு செய்ததும் இவர்தான் . அத்துடன் எஸ்.எம்.எஸ் மனைவியும் கடைசி மூச்சுவரை இவர் பாதுகாப்பில் இருந்தார்.
நகைச்சுவை வேந்தன் சந்திரபாபு வேண்டுகோளை ஏற்று அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததும் இவரே.


N. Ganesan

unread,
Jul 17, 2015, 1:24:16 AM7/17/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai
பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் உரைப்பெருமையை ‘சோழியன் மென்று துப்பின சக்கை இராமாயணம்’ என்பார்கள். அதுபோலே, மேலைநாட்டு தமிழ்ப் பேராசிரியர்கள் திராவிட மொழிகள், செம்மொழி இலக்கியங்கள் ஒப்பீடுகளால் விளக்கும் சிந்துவெளி, பின்னர் சங்ககாலச் சமயம், சமூகவியல் தெளிவு அடைவதை ‘இந்தியவியல் பேராசிரியர் மென்று துப்பின சக்கை சிந்துவெளிச் சமயம்’ எனலாம். 

எம். எஸ். விசுவநாதன் இசைக்கருவிகளில் எங்கோ மூலையில் கிடந்த சங்கீத இன்பங்களை எல்லாம் திரையிசை ஆக்கி எல்லோரும் பருகத் தந்தவர். இன்றைய ’தமிழ்த் திரையிசை எம்எஸ்வி மென்று துப்பின சக்கை’ என்பதில் ஓர் ஐயமும் இல்லை.

நா. கணேசன்

3ல் முடிவது 300ம் முடியும்: புதிய பறவையில் எம்.எஸ்.வி.யின் வயலின் சாதனை


காலத்தால் அழியாத எண்ணற்ற இசைப் பாடல்களை தமிழுலகுக்குக் கொடுத்த எம்.எஸ். விஸ்வநாதன், அந்த காலத்திலேயே இசையில் பல சாதனைகளைப் படைத்தவர்.

அதில் குறிப்பாக சிவாஜி - சரோஜா தேவி நடத்த புதிய பறவை படத்தில் எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி என்ற பாடலுக்காக சுமார் 300க்கும் மேற்பட்ட வயலின்களை பயன்படுத்தி புதிய சாதனையைப் படைத்தார்.

புதிய பறவையில், 300க்கும் மேற்பட்ட வயலின்களைப் பயன்படுத்தி இசையமைத்த எம்.எஸ்.வி. தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாகப்பிரிவினை என்ற படத்தில் தாழையாம் பூ முடித்து என்ற பாடலில் வெறும் மூன்றே மூன்று இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசையமைத்து ஹிட் கொடுத்தவர்.

திறமையான இசைக் கலைஞனால் எதுவும் முடியும் என்று உலகுக்கு நிரூபித்தவர் எம்.எஸ். வி. அவருக்கு நாமும் நினைவஞ்சலி செலுத்துவோம்.


Reply all
Reply to author
Forward
0 new messages