--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி
என்ற பேச்சே கிடையாது
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.
தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது.
எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு)
இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும்.
ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது.
இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Wed, Apr 22, 2015 at 8:52 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
--தொண்மை என்ற ஒன்றிற்குள்எதனை சேர்ப்பது எதனை விடுவது என்பது ஒரு கேள்வி.தொண்மை என்ற ஒன்றை அது தரும் பின் விளைகளைப் புரிந்து ஏற்பதா விடுபடுவதா என்பது ஒரு கேள்வி.அடிப்படையில் தாலி என்னும் அடையாளச் சின்னம் அணிவதா வேண்டாமா என்பது ஒரு தனி நபர் விசயம்.பல காலங்கள் வழக்கில் இருந்தது என மதித்தல் என்பது ஒரு விசயம். அதனை கட்டாயம் அணிய வேண்டும் என சொல்வதும் அணிய விரும்பாதவரைச் சாடுவதும் சரியல்ல.சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சங்க இலக்கியத்தில் தன் வீரத்தால் புலியை வேட்டையாடிப் புலிநகத்தை மாலையாக அணிந்துகொண்ட வீர்னை மணந்துகொண்டதன் அடையாளமால அணிந்துகொண்ட அணிகலன் தாலியாக மாறி அவர்கள் திருமண முறையில் இடம் பெற்றதாகக் குறிப்புள்ளது
வலைப்பித்தன்
>தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.தாலி என்பது தால மரம் எனும் பனை/பெண்ணை மரத்தின் ஓலையை குறிக்கும். அண்டை மாநிலத்தை எட்டிபபர்த்த்தால், தாலிக்கு தெலுகிலும் தாலிதான் . அங்கு தாட்டி மான் என்றால் பனைமரம்.தாலம் என்பது நாவினை குறிக்கும். நா ஆட்டுதல் = தாலாட்டு
பெண்பால் பெயர்கள் பகரத்தில் வழங்கும் என்றேனால், இல்லை என்பார் கணேசர். ஆனால் பெண்ணை என்றால் பெண் பனை என்றும் தாலாட்டுவார்.
அடடா இங்கு இப்படி ஒரு இழையில் என் கருத்துக்களைப் பற்றி...!!!!!!!!!என்ன பூடகமாகவா?ஆனால் யாரும் இன்னமும் மூன்று முடிச்சுகளின் உட்பொருளை ஏனோ கூறவில்லை.***உங்கள் பாணி உரையாடலே அலாதியானது செல்வன்...ஒரு கற்பனை ...ஒபாமாதான் சிறந்த தலைவரா தேமொழி...ஆமாம் செல்வன்தேமொழி இந்தியப் பிரதமரை மோசமான தலைவர் என அறிவிப்புஒபாமா சிறந்த தலைவர் என்றுதான் நான் சொன்னேன்அப்படியானால் மற்றவர்களெல்லாம் உதாவக்கரை என்றுதானே அர்த்தம்***..... தேமொழி
On Wednesday, April 22, 2015 at 12:17:56 PM UTC-7, செல்வன் wrote:2015-04-22 13:05 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:இதில் தேமொழி எங்கே சொல்லியிருக்கின்றார் தாலி கட்டியோர் அடிமை என்று. அவர் சொல்லியிருப்பது தான் அடிமை வாழ்வை வெறுப்பதாக மட்டுமே.
அவர் அப்படித்தான் பூடகமாக எழுதுவார் :-) நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Wednesday, April 22, 2015 at 10:27:47 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:>தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.தாலி என்பது தால மரம் எனும் பனை/பெண்ணை மரத்தின் ஓலையை குறிக்கும். அண்டை மாநிலத்தை எட்டிபபர்த்த்தால், தாலிக்கு தெலுகிலும் தாலிதான் . அங்கு தாட்டி மான் என்றால் பனைமரம்.தாலம் என்பது நாவினை குறிக்கும். நா ஆட்டுதல் = தாலாட்டுதாழ- > தாட- . (சோழ- > சோட- என்றாவதுபோல்.தாட + அங்கம் = தாடங்கம் {= (பனந்) தோடு }தாடிக்கொம்பு = ஊர்ப்பெயர் தாடி < தாழ்- = பனை(1) தால்- நாக்கு(2) தாழ்- > தாலம் = பனைஇவை இரண்டும் வெவ்வேறான சொற்கள். homophonous words.பெண்பால் பெயர்கள் பகரத்தில் வழங்கும் என்றேனால், இல்லை என்பார் கணேசர். ஆனால் பெண்ணை என்றால் பெண் பனை என்றும் தாலாட்டுவார்.ப- எனத் தொடங்கும் ஒரு பெண்விலங்குப் பெயரும் தமிழில் இல்லை.பிள்- (பிளத்தல்) என்னும் வேரில் தொடங்கும் பிணா, பிணவு, பிடி, பேடு, பெட்டை, பெண், பெண்ணை ... இவை உள,
On Thu, Apr 23, 2015 at 2:46 PM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:2015-04-23 3:08 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:The Mangal sutra is known in different names in different places of the country,and also in some states and regions they don't wear it.In Marathi and Kannada it is called Mangal sutra,in Tamil and Andhra region of Telugu speaking people it is called Tali in Telangana area it is said Pustelu.and muslims says Laccha,(but there will be no knots,it will be just like a neck lace.)In some areas the groom puts three knots,in some areas the groom puts one knot and his sisters puts the remaining two knots(Specially in northern India-personally I have seen it).At every activity in marriage ,irrespective of the caste,region the Pundit/Brahmin reads the mantras in hindu marriages,Khwazi reads Arabic holy words in muslims marriages,and the Father reads the holy words of Bible in the Christians marriage.It is very unfortunate that most of the bride or grooms of all the castes and religions are not known the meaning of the words what they read.
So,
The First knot represents for her obedience to her husband.
Second knot for the obedience to her father and mother in laws.
Third knot for to be respect full and to praying God.தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது .
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க
வேண்டும்
2 - ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்3 - ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும் -இந்த பக்கத்திலேயும் இதே விளக்கம்.சரி.. தாலி என்ற மங்கலச் சின்னம் என்பது ஒரு புறம் இருக்க..மூன்று முடிச்சு போடுதல் என்பது எப்போது தோன்றியது..பின்னர் 3 முடிச்சு இல்லாத தங்க சங்கிலியில் தாலி போட்டுக்கொள்வது எப்போது தொடங்கியது?அறிந்தோர் சொன்னால் நன்று.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Indira Vishvanathan Peterson, The Norton Anthology, World
Masterpieces, p. 958, 1995: "There is reason to believe that the Gita,
originally an independent philosophical dialogue similar to earlier
and contemporary texts such as the Upanishads and the Buddhist
scriptures, was deliberately placed in the popular MBh. epic.., This
new configuration of elements fortified a view that was at once
revolutionary for its time (ca. first century AD) and designed to
preserve the Hindu social hierarchy.
By the end of the first century BC, the Buddhist and Jain religions
had gained a considerable following among the Indian masses and among
kings and merchants as well. Focusing on the problem of karma - the
belief that all actions involve inevitable consequences that must be
suffered thru' many lives- Buddhism in particular offered people from
all walks of life a religious path on which ethical action could be
combined with contemplative spiritual practices, eventually leading to
liberation from the burden of karma.In the Hindu social order, on the
other hand, rigid and hierarchical correlations between birth and
occupation locked people into existential situations that held no such
prospect of ultimate freedom.
.. The Gita appears to have been the response of brahman thinkers who
stood to lose the most from the potential disintegration of the Hindu
social system. Thru' Krishna's teachings, the anonymous author of the
Gita articulates a new doctrine that will justify the hierarchies of
class and social duty (he uses the word lokasaMgraha, social
solidarity) at the same time that it offers universal access to the
ultimate goal of emancipation.
.. The text synthesizes the contemplative vision of the Buddhists and
the sages of the Upanishads..”
5 வருஷம் முன்பு எழுதிய மடலிலிருந்து:
ராஜம் கிருஷ்ணனின் நூல்கள் எனப் படிக்கவும்
On Thursday, April 23, 2015 at 8:29:25 PM UTC-7, தேமொழி wrote:
On Thursday, April 23, 2015 at 5:32:38 AM UTC-7, Suba.T. wrote:
2015-04-23 3:12 GMT+02:00 coral shree <cor...@gmail.com>:தாலியோ, மோதிரமோ, மஞ்சள் கயிறோ எதுவானாலும் அது மங்கலச் சின்னம். இந்த மங்கலச் சின்னம் அணியும் வழமை தொன்மையானது என்றாலும், அதை அணியும் சூழல்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அங்குதான் நம் சடங்குகளும், சம்பிரதாயங்களும் நிற்கின்றன. உறவினர் புடைசூழ, வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கல நாண் சூடும்போது அந்த இணைகளின் மனதில் ஒரு உறுதி தோன்றும். வெறும் மாலை மாற்றும் சடங்காக இருந்தாலும் சரி.. அங்கு மனோநிலை மிகவும் முக்கியம். இன்றைய பெரும்பாலான மண முறிவுகள் ஏற்படுவதற்கு இது போன்ற நாகரீகமான பேச்சுகளும் ஒரு காரணம். மரபு காத்தல் இதில் மிக முக்கியமான பாதுகாப்பு வாழ்க்கை கொடுப்பது என்று அர்த்தம்..
அன்பு பவளா இரண்டு விஷயங்கள் நெருடலாக உள்ளன..1. பாதுகாப்பு - திருமணம் தான் பாதுகாப்பு .. உடல் ரீதிழான பாதுகாப்பு பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. சமூகத்திலிருந்து பாதுகாப்பு என்று குறிப்பிடுகின்றீர்கள் எனக் கருதுகின்றேன்.சரி.. தமிழ் சமூகத்தில் இது மிக மிக மிக அடிப்படை என்பதை நேராக ஒரு பெண்ணாக அறிந்திருக்கின்றேன். வேறு சமூகத்தில் இது ஒரு பிரச்சனை இல்லை. என்னுடைய பின்னனியில் சீன, மலாய், ஜெர்மானிய, ஆங்கிலேய பெண்மனிகள் திருமணம் செய்யாது இருக்கும் சூழலில் பாதுகாப்பு என்பது பிரச்சனையாக எழுவதில்லை. அவர்களை யாரும் கல்யாணம் பண்ணிக்கோ என்று வற்புறுத்துவதும் இல்லை. ஆக பிரச்சனையின் ஆணி வேர் எங்குள்ளது????2. வாழ்க்கை கொடுப்பது - இது என்ன என்று எனக்கு புரியவில்லை. திருமணம் செய்வது என்பதை எதற்கு வாழ்க்கை கொடுத்தல் என்று சொல்கின்றீர்கள். திருமணம் செய்யவில்லை என்றால் வாழ்க்கை இல்லையா?புரியாது இருப்பதே நிம்மதி... இது ஒவ்வொரு திரைப்படத்திலும் வரும் வசனம்..கொஞ்சம் ஆற அமர யோசித்தால் வாழ்க்கை கொடுப்பது என்ன என்பதன் பொருள் புரிந்தால் கொஞ்சம் அறுவருப்பாகக் கூட இருக்கும்.பெண் ஏன் அடிமையானாள் என்பதை கட்டாயத் துணைப்பாடமாக 11, 12, வகுப்பு மாணவர்களுக்கு வைக்க வேண்டும். பிடிக்க வில்லை என்றால் இருக்கவே இருக்கிறது கிருஷ்ணனின் நூல்கள்.சுபா
சாதிவாரித்தாலி தவிர்க்கலாம்.முதல்படிநிலையாக மதக்குறியீடுகளுக்குள் ஒருங்கிணைந்து விடலாம்.பின்னர்
தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்டதாலியை இந்தியா முழுமையும்
பெண்கள் அணிந்து ஒருமைப்பாட்டை முன்னெடுத்துச்செல்வது._இவை எனது கருத்துக்கனவுகள்,
On 22-Apr-2015 10:43 pm, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:தாலி குறித்துஎனக்குத் தனித்த சிலகருத்துகள் உண்டு.1995 _ல் தினமணி க்கதிரில் விஜயாகண்ணன் என்பவர் என்கருத்தைப்பதிவுசெய்து கட்டுரையாக வந்திருந்தது.
*2015-04-22 10:02 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:மின்தமிழில் தாலி கட்டிய பெண்கள் முட்டாள்கள், அடிமைகள் என யார் எங்கே எப்பதிவில் வசி பாடியுள்ளார்கள் என்பதை குறிப்பிடுக.
தாலி பற்றிய இழையில் தேமொழி இவ்வாறு எழுதினார்நன்று. மூன்று முடிச்சுகளின் உட்பொருளைக் கூறுக....அடிமை வாழ்வை வெறுப்பவள் நான். நாமார்க்கும் குடியல்லோம் என்பது எனது வாழ்வு நெறி.தனி நபர் தேர்வு என இங்கே சொல்வது நான் (சுபா). நான் அறிந்து இதுவரை தாலி கட்டிய பெண்கள் முட்டாள்கள், அடிமைகள் என நான் குறிப்பிடவில்லை. நான் எங்கேனும் குறிப்பிட்டிருந்தால் கூறவும்.நீங்கள் சொன்னதாக நான் கூறவில்லை...--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அட கிங்கிசுக்கா சங்கிசுக்கா மங்கிசுக்கா பாயாசுக்கா. என்னை என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும். நான் கேட்டது என்ன?சங்கத (Sanskrit) இலக்கியங்களில் எப்போது திருமணத் தாலி கூரப்பட்டது எனதானே. அதை தவிர எல்லாத்தையும் பேசுறாங்கப்பா.நான் பேசாம சந்நியாசம் போயிரலாம்னு இருக்கேன்.
On Thursday, April 16, 2015 at 4:27:24 AM UTC+5:30, தென்காசி சுப்பிரமணியன் wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.