Re: [MinTamil] Re: ​தாலி அல்லது தமிழர் திருமண மங்கலச் சின்னம்

527 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 23, 2015, 8:44:11 AM3/23/15
to தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, mintamil, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Raji M, mylai rathnavelu, Saravanan Somasundaram, Naga Loga, JayaChandran M
\ தங்கத்தாலான தாலியில் தான் வேட்டையாடி கொன்ற புலிப்பல்லினையும், ஒலிக்கும் மணிகளையும் இணைத்து உருவான தாலி அணிந்தவள் பற்றிய குறிப்பு அகநானூறு 7ஆம் பாடலில் 17, 18 வரிகளில் “ பொன்னோடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி “ என உள்ளது. \\
என்ற குறிப்பைப் பார்க்கையில் அகநானூற்றுக்காலத்திலேயே **தாலி** என்ற சொல் வழக்கத்தில் இருந்துள்ளது தெரிகிறது.  அகநானூற்றுக்காலம் எந்த காலகட்டம்?
-------------------------------------------------------------------------------------
எ னும பகுதியை இந்த மடலாடல் இழையில் கண்டேன் 

புலியின் பல் தொங்க கட்டுவது ஒர்  பொதுவான அணிகலன் மட்டும்தானே அன்றி ஓர் இல்லத்தின் தலைவன்
தலைவி என்னும் பொருளால் குறித்தவாறு நான் காண வில்லை  விடலை ஆண்களும் சிறார்களும் கழுத்திலும் 
இடையிலும் புலிப்பல்லைக்  கட்டும் மரபு இருந்துள்ளது குறித்த அகம் 7 பாடலிலும்  கனவன் மனைவி எனும்
நிலைக் கானவில்லை 

தேவாரக் காலத்தில் இன்று பேசப்படும் தாலிக்கு இணையாக பெண்கள் அணியும் கலன் ஒன்றுண்டு 
அதனை கடவுளரின் திருவுருவங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது (&&)

ஆடல் வல்லா ன் திரு உருவத்தில் நன்றாக உற்று நோக்கினால்
இடது  காதின் துளையில் ஓலைச் சுருளும் 
வலது காதில் மகரக் குழையும் காணலாம் 
Inline image 1  

சிவபெருமான் திரு உருவில்(#) பாதி பெண்ணாகக் காட்டுவது ஒர் உருவ நிலை (மூர்த்தம்) மாதொரு பாகன் என்பர் 
அதன் வழி ஆடல்வல்லன் திரு உருவில் இடது பாகம் பெண்ணாக் கருதப்படும் ஆக அக் காதில் ஒலைச் சுருளும்
தூக்கிய திருவடியாம் (குஞ்சிதபாதம் )இடது காலில் சிலம்பும் அமைப்பர்  வலது காதில் மகரக் குழையும் வலது காலில்
கழலும் ஆண்களுக்குறிய அணிகலன்களாகக் காணலாம்   

தோடுடைய செவியன் எனத்தொடங்கும் அருள் வழிபிறந்த திருஞான சம்பந்தர்  தம் முதல் பாடல் முதல் 
சொல்லில் பெ ண்பாகத்தினைக்கட்டி தொடங்குகின்றார்  தோடு அக்காலத்து தாலிக்கு இணை யனது ஆகும் தோடு  = பனை ஓலைச் சுருள் (##)
தோடு டைய எனும் சொல்லால் ஞானசம்பந்தர் மங்கலக் கரமான  பெண்ணும் ஆணுமாக உள்ளான் எனடக்கா ட்டியே தொடங்குகின்றர் 

மேலும்
சேக்கிழார் பெருந்தகை  தன்  முதல் பாடலில் 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங் குவாம் 

என பெண்பாகத்து தூக்கிய திருவடியாம் சிலம்பணிந்த திருவடியையே
அஃதாவது பெண்கள் அணியும் சிலம்பு எனவே குறித்துள்ளமைக் காண்க 

ஆண்கள் காலில் அணிவது கழல் அதுபோல் கா தில் ஆண்களுக்கு குழை பூணா கும் 

ஐப்பசியில் (தீபாவளித் திருனாளன்று) வட தமிழிழகத்திலும்  ஆந்திரத்திலும்  கொ கோண்டாடும் ஓர் நோன்பு கேதார கௌரி  விரதம் 
இது பெண்கள் தன் கண வன் நீடு வாழ்ந்து தன் தாலி பாக்கியம் சிறக்க வேண்டும் எனும் எண்ணத்தில் நோற்பது 
இதனில் வைத்து பூசிக்கப்படும் பொருள் காதோலையும் கரு மணியும் ஆகும் அதாவது அந்நாளைய தாலிக்கு ஆனது

இன்றும் கூட மதுரையிலும் கேரளத்திலும்  ( சில பெண்கள் ) தொங்கத் தொங்க (%%) அணியும் காதணிக்கு ஓலை என்பதே சொல்லாகும் 
தமிழகத்திலும் ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் மாராட்டத்திலும் கருமணி யும் மி கவும் சிறப்பாக தாலி யுடன்  பயன்கொள்ளப்படுவது  கண்கூடு


தோடு ஓலை மடல் என்பன புல்லினத்திற்கு பயன் கொள்ளும் சினைச் சொல் 
மேலும் மரம் எனும் இனத்திற்கும் தொடர்புடையது ஆகும் தோல்கா ப்பிய நூற்பாக்கள் காண்க (##) 

அந்நாளில் பனை ஓலையில் தான்  எழுதினர்  இ ந்நாளில் எழுதப்பயன்படும் காகிதத்தையும் தாள் எனும் சொல்லலே குறிக்கக் காணலாம்
அதான்று தாள் என்றால் பனைமரம் ஆகும் திருப்பனந்தாள் ( தேவாரப்பாடல் பெற்றத் தல ம் ) 
வடநாட்டில் தாடு ताड़ என்பார் பனைமரத்தை அதனின்று தாடி(TODDY ) பிறந்தது

அன்புடன்
நூ த லோ சு
மயிலை 
----------------------------------
(&&)
இலிங்கம் என்பது அருஉருவம் = உருவம் தான் ஆனால் நம்மைப்போல் கைகால்களுடைய உருவம் அல்லாதஅடையாளக் குறி மட்டும்  ) 
மற்றவை உருவங்கள் = மூர்த்தங்கள் (மூர்த்திகள் )  பல்வேறு நிலைகளில் காணலாம் ஏரூர்தி   கங்கை அணிந்தோன் பிறைமிளிர்ந்தோன் போன்றவை 

(##)
தொல்காப்பியம் மரபியல்
புறக்காழனவே புல் என மொழிப                     86 (monocotyledons ஒற்றை விதையிலை பயிரினம்
                                                                                        அடிமரம் வெளியில் வயிரம் பாய்ந்தது நடுவில் ஒன்றும் இல்லாமலும் இருக்கும் (மூங்கிலில் காண்க 
அகக் காழனவே மரம் என மொழிப                87 ( Dicotyledons) இரட்டை விதையிலை பயிரினம் நடுவில் உறுதியானப் பகுதி கொண்டது (காழ்) 
                                                                                       ஏனைய மரங்களுள் காணலாம் தேக்கு மா புளி  சால் போன்றவை  நடுவில் உறுதியும் புறத்தே பட்டை முதலியன மட்டும் 
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்  88 

இலையே தளிரே முறியே தோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப               89

(%%)
புத்த பிரான் / சமண  தீர்தங்க்காரர்கள் திரு உருவங்களில் அணிகலன்கள் ஏதும் இல்லாமலும் 
துளையிட்ட காதின் அடிப்பகுதி தொங்கக் சிலவற்றில் தோளினையும் தொடும் நிலைக்கு உள்ளமையைக்
காணலாம் அணிகலன்கள் எல்லாம் இருந்தால் தொங்கும் ஆ னால்  அவர்கள் துறந்தனர்  இருக்க வேண்டிய
ஒன்றை துறந்ததைக்கட்ட  ஒன்றும் இல்லாதும் தொங்கும் காதின் துளையா ல்  காட்டுகின்றனர் என நினைகின்றேன் 
  




2015-03-23 12:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்...

திருமண விருந்து 

மணமக்களின் விருப்பம் பற்றி அறிவது


..... தேமொழி 




On Sunday, March 22, 2015 at 11:32:11 PM UTC-7, dhivakar wrote:
//பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு// Selvan
//தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?// Themozhi

திருமணங்களில் ‘தளி’கையைப் பற்றிக் கவலைப்படுவது கூட நம் மரபுதான் :-)



2015-03-23 11:45 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி

தனியைப் பற்றிக் கவலைப்படுவது நமது மரபில்லையா?
;-)

..... தேமொழி 



On Sunday, March 22, 2015 at 11:10:20 PM UTC-7, செல்வன் wrote:

2015-03-23 0:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
காலக்கோட்டில் ஆராய்ந்தால் விழுக்காட்டில் மாறுதல் உண்டு.....இப்பொழுது கட்டாயத் திருமணங்கள்  குறைந்து வருவது  கண்கூடு.

பெரும்பாலான திருமணங்கள் பற்றிதான் பேச்சு


--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

aadal vallan mukam.jpg

N. Ganesan

unread,
Mar 24, 2015, 8:53:31 AM3/24/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai, housto...@googlegroups.com


On Tuesday, March 24, 2015 at 4:41:17 AM UTC-7, Hari wrote:

2015-03-24 16:56 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
அது ஏதோ அடிமைச் சின்னம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறேன். ஒரு காலத்திற் தாலியை ஆண்கள் அணிந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆணானப் பட்ட பெருமாளே அணிந்திருந்ததாய்ப் பெரியாழ்வார் சொல்லுகிறார்.

நன்றாக உரக்கச் சொல்லுங்கள் ஐயா.  வால்மீகி இராமாயணத்தில், தாலி கட்டாமல்தான் சீதையின் திருமணம் நடக்கிறது.  இதைப் பின்பற்றிய கம்பன் தன்னுடைய காப்பியத்தில், கடிமணப் படலத்தில் எல்லாச் சடங்குகளையும் சொன்னாலும், தாலி கட்டுவதைப் பற்றித் தனியே குறிப்பிடவில்லை.

ஆனால், பின்னால் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்தில்:

'கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது, அடுத்த தன்மை,
பெற்றியின் உணர்தற்பாற்றோ? உயிர் நிலை பிறிதும் உண்டோ?
இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள்காண், உன் மங்கலம் காத்த மன்னோ

உன் கழுத்தில் இன்று தாலி இருக்கிறதென்றால், அதற்கு நீ அன்று களைந்த மற்ற அணிகலன்கள்தான் காரணம்.  (நீ அந்த அணிகலன்களை இட்டதால்தான், இராமன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.) என்று அழுத்தமாக வலியுறுத்துகிறான் கம்பன்.

அரக்கியர் கழுத்திலும் தாலி இருந்தது.  அனுமனைக் கட்டுவதற்குக் கயிறு தேடியபோது (சுந்தர காண்டத்தில்) அவனவன் தன் மனைவி கழுத்திலிருக்கும் தாலியைத் தவிர மற்ற எல்லாக் கயிறுகளையும் கொண்டு வந்தானாம்.

மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த-
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார். 

மங்கலம் என்றால் தாலியைத்தான் குறிக்கிறது என்பது இந்தப் பாடலில் வலுப்பெறுகிறது.

மங்கலம் என்ப மனைமாட்சி.  இதுவும் அதுவே அன்றோ.



“ஈகை அரிய இழை அணி மகளிரொடு” - புறம்.
பொருட் கஷ்டம் வந்தால் மற்ற அணிகளைக் கொடுத்துவிடும் சுமங்கலி (உ-ம்: கண்ணகி), தாலியை ஒருபோதும் தரமாட்டாள்.
அது “ஈகை அரிய இழை” என்கிறது புறநானூறு. 
என் அப்பச்சி (அம்மாவின் தந்தை) 1975-ல் இறந்தபோது பார்த்தேன்.
பாட்டியை ஊஞ்சலில் உட்காரவைத்து, அம்பட்டன் “சாமி, இழையை வாங்கணுங்க”
என்று தாலியை வாங்கினான். அதன்பிறகு பொட்டு போய்விட்டது. வெள்ளைச்சீலை அணிந்திருந்தார்கள்.
நிகழ்ந்த இடம்: தேவர்மகன் படத்தில் வரும் சிங்கநல்லூர் வீடு.

-----------------------------------

"யாழ” என்னும் முன்னிலை அசைச்சொல் 
“போடுவையா? யாழ!” > போடுவியாலெ? என்றாகிவிட்டது (நெல்லையில்).
"எலே' என்பது நெல்லை மக்கள் சகஜமாகப் பயன் படுத்தும் ஒரு சொல். அது, பல பாவங்களில் பிரயோகமாகும். "எலே... இந்த வருஷமாவது கலியாணச் சாப்பாடு போடுவியாலே?'  - (அன்பு) "என்னலே நினைச்சுக் கிட்டே!' - (கோபம்) இந்த, "எலே' என்பது "எல்லே' என்ற பழைய தமிழ்ச் சொல்லின் மரூஉ. "எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?' என்று,  திருப்பாவையில், பாடுகிறாள் ஆண்டாள். *** (தினமலர்)

தாழை என்பது palm இன மரங்களுக்குப் பொதுப்பெயர். தெலுங்கில் தாடி என்று
ழகரம் டகரம் ஆகும். இதுவே Toddy liquor. 

பழம் > பலம், யாழ > யாலெ, போல தாழை > தாலம் (தாலி = பனையோலைச் சுருள்).
உள்ள மரங்களிலே மனிதர் போல், ஆண் பெண் பால் உள்ள பனையில்
பெண்ணை குலைஈனும். குலை என்னும் சொல்லோடு தொடர்புள்ள குலம்
தழைக்க தாழம் > தாலம்  (தாலி) அணியத் தலைப்பட்டனர் போலும் தமிழர்கள்.

--------------------
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.

நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த  தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):

நா. கணேசன்

2697நாணுள் ளிட்டுச் சுடர்வீசு
  நன்மா ணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்தணிந்து
  பெருங்கண் கருமை விருந்தூட்டி
நீணீர் முத்த நிரைமுறுவல்
  கடுச்சுட் டுரிஞ்சக் கதிருமிழ்ந்து
தோணீர்க் கடலுட் பவளவாய்த்
  தொண்டைக் கனிக டொழுதனவே.

   (இ - ள்.) நாண் உள்இட்டுச் சுடர் வீசும் நன்மாணிக்கம் நகுதாலி - நாணைத் தன்னுள்ளே அடக்கி, ஒளிவீசும் நல்ல மணிகளிழைத்த நகுகின்ற தாலியை; நல்லார் பேணிக் கழுத்து அணிந்து - மடவார் ஓம்பிக் கழுத்திலே அணிந்து ; பெருங்கண்கருமை விருந்து ஊட்டி - பெரிய கண்ணிலே கரிய மையைப் புதுமைபெற அணிந்து; நீள்நீர் முத்தம் நிரைமுறுவல் - பெரு நீர்மையுடைய முத்தனைய வரிசையான பற்களை; கடுச்சுட்டு உரிஞ்சக் கதிர் உமிழ்ந்து - கடுவைச் சுட்டுத் தேய்த்தலால் அவை ஒளியை வீசி; தோள்நீர்க் கடலுள் பவளவாய் - தோண்டின நீரையுடைய கடலிலுள்ள பவளம் போன்ற வாயை; தொண்டைக் கனிகள் தொழுதன - கொவ்வைக் கனிகள் தோற்று வணங்கின.

 
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 9:03:58 AM3/24/15
to mintamil, Subashini Tremmel, vallamai, housto...@googlegroups.com

2015-03-24 18:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.

நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த  தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):

தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?

N. Ganesan

unread,
Mar 24, 2015, 9:10:10 AM3/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, March 24, 2015 at 6:04:00 AM UTC-7, Hari wrote:

2015-03-24 18:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சுமங்கலிகளைச் சொல்கிறபோது சீவக சிந்தாமணிப் பாட்டும் பார்க்கலாம்.

நாணுக்குள்ளே மாணிக்கம் பதித்த  தாலியைப் பேணி ஓம்பும் நல்லார் (சுமங்கலிகள்):

தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?


இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் மங்கலம் என்று வள்ளுவர் மங்கிலிய சூத்திரத்தைச்
சொல்லுதலும், மங்கிலிய சூத்திரத்தை தாலி என்றே சிந்தாமணி குறிப்பிடுதலும் பார்ப்போம்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Mar 24, 2015, 11:32:20 AM3/24/15
to vallamai
தமிழர்களின் வாழ்வியல் மரபு அரசவை வரலாறு உருவாகும்முன் இயற்கையோடு இயைந்து திணை ஒழுக்கத்திபடி அமைந்திருந்ததால் வாழும் நிலம் சூழல் ஆகியவற்றுடன் இயைந்து பல வேறுபட்ட மரபுகளுடன் அமைந்திருந்தது எனலாம்.  குறிஞ்சி நிலத் தலைவன் களவு கற்பு என வாழ்வியல் மரபில் வாழ்ந்ததைப் படம்பிடித்த இலக்கியங்கள் குறிஞ்சித் தலைவன் காட்டில் வேட்டியாடி வெண்றதன் அடிப்படையில் அவன் வைத்திருந்த புலிநகம் புலிப்பல் கொண்டு உருவாக்கப்பட்ட அணியைத் திருமணத்தில் அவனும் அணிந்து அவன் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கும் அணிவித்து உறவைக் குமுகத்துக்கு வெளிக்காட்ட அமைந்தது பிற்காலத் தாலிக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கலாம்.  திருமணத்தில் அணிந்த நகைகளின் தரவுகளை ஆய்ந்தால் மட்டுமே தமிழர்களின் பலவிதமான திருமண முறைகளை அறிந்துகொள்ள இயலும்

சர்க்கரைச்சீமான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2015, 11:53:28 AM3/24/15
to vall...@googlegroups.com
மின் தமிழில்     "லக்‌ஷ்மி கல்யாண வைபோகமே  "  என்னும்  தொடரில் 

  நான்   கல்யாண மந்திரங்களின்  பொருளை  எழுதிக்கொண்டே வந்தேன்


அதன் நடுவே  கதையையும் இணைத்து   எழுதினேன்

அந்த   இழையை தேடினால்   விவாக மந்திரங்களின்  பொருள் விளங்கும் 

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



N. Ganesan

unread,
Mar 24, 2015, 7:21:16 PM3/24/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, March 24, 2015 at 1:12:09 PM UTC-7, தேமொழி wrote:


On Tuesday, March 24, 2015 at 6:10:08 AM UTC-7, N. Ganesan wrote:
On Tuesday, March 24, 2015 at 6:04:00 AM UTC-7, Hari wrote:
தாலியும் தமிழர்களுக்கு சமணர்கள் தந்த கொடையோ?
இருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல் மங்கலம் என்று வள்ளுவர் மங்கிலிய சூத்திரத்தைச்
சொல்லுதலும், மங்கிலிய சூத்திரத்தை தாலி என்றே சிந்தாமணி குறிப்பிடுதலும் பார்ப்போம்.

இது எங்கு போய் நிற்கும் என இப்பொழுதே  கொஞ்சம் கிலியாக இருக்கிறது.

..... தேமொழி

:-) ரசித்தேன் :-)

----------
திருச்செங்கோடு/தில்லிகை (< தில்லை) கிருட்டிணகுமாருக்காக ஒரு கந்தரலங்காரம்:
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்‌ஷா
பரண
க்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.

-------------

இழை (அ) நாணில் ஓலைச் சுருளில் தாயத்து போன்றவை கோத்துச்
செய்த தாலி (ஆண், பெண், குழந்தை ...) கலியாணத் தாலி என்று
கி.பி. 3-4 நூற்றாண்டுகளில் மலர்ச்சி அடைந்திருக்கணும். ஸ்ரீ
உத்தர காரணாகமத்திலும், லலிதா சகசிரநாமத்திலும் காண்கிறோம்.
’மாங்கல்யம் தந்துநாநேன’ எந்த நூலில், எந்த நூற்றாண்டில் வருகிறது
எனப் பார்க்கணும். தாலி  obviously a Dravidian custom that is widely prevalent
as a substratum element from Northwest India to Ceylon.

இராவணன் இமையத்தை அசைக்கிறான். போர் மூளுமோ என்று
உமை அஞ்சுகிறாள். மங்கிலியம் நிற்குமோ? - என பயம். எனவே,
அந்த situation-ஐ பாடும் பாடல்களில் சேயிழை, ஏந்திழை, ஆயிழை, ... 
என்று பாடுவார்கள் தேவார முதலிகள். இங்கே அச் சொற்களுக்கு
மங்கலநாண் அணிந்த பார்வதி எனப் பொருளுண்டு.

கைலாசத்தைப் பாடுகையில் இந்த நினைவில் அப்பர் 
ஒரே பதிகத்தில் பாடுகிறார்:

களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்தஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்---
திருத்தனாய் நின்ற தேவன்---திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றாமுன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே!

கற்றனன், கயிலைதன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிக்
செற்றவன் எடுத்தஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றாமுன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!

----------------

தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு,
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சிதன்னுள்---
இன்னவற்கு அருளிச்செய்தார்---இலங்கு மேற்றளியனாரே.

தேவாரத்தில் கயிலை பெயர்த்தபோது -இழை என்று
உமையைச் சொல்லும் பாடல்களைப் பார்க்கலாம்.
இங்கே எல்லாம் மங்கல்ய தந்து ரக்‌ஷாபரணம் (அருணகிரிநாதர்)
தான் -இழை எனக் குறிக்கின்றனர் எனக் கருதலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 24, 2015, 7:41:40 PM3/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
சௌந்தர்யலகரி 69:
galē rēkhāstisrō gatigamakagītaikanipuṇē
vivāhavyānaddhapraguṇaguṇasaṁkhyāpratibhuvaḥ
virājantē nānāvidha madhurarāgākarabhuvāṁ
trayāṇāṁ grāmāṇāṁ sthitiniyamasīmāna iva tē ||69|| 

O Devi highly proficient in gatigamaka and gita (the essential elements of music)!  The three lines on your neck corresponding to the three strands of the mangalsutra tied by Shiva on the auspicious occasion of your marriage lead one to imagine that they mark the boundary between the three swaragramas  which are the sources of different sweet ragas (melodies).

N. Ganesan

unread,
Mar 26, 2015, 12:38:44 AM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

தாலி கட்டுதலை திருப் பூட்டுதல் என்பது கலியாணத்தில். கணவன் இறந்தபின், மனைவியை ஊஞ்சலில் இருத்தி
மங்கலன் கீழம்ர்ந்து ஊரார் உறவினர் முன்னிலையில் அத் திருவை வாங்குதலும் ஈமச் சடங்கு. இதனைக்
கம்பன் பாடியுள்ளான்.

5809.

‘ஓங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம்;இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம்; இவன்சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம்’ என்றுஅழும் மாதரார் பலர்.

     ஓங்கல் அம்பெருவலி உயிரின் அன்பரை - ‘மலை போன்ற மிக்க
வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை;
நீங்கலம் - 
இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் -
(இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம்
ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால்
திருவாங்கலம் - 
இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து
இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்’; என்று
அழும் மாதரார் பலர் - 
என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர்.

     ‘தாலி வாங்கும்துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன்
தலையின் மேல் தான் நடத்துவோம்’ என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன்
கூறினர் என்க.                                           (5)

N. Ganesan

unread,
Mar 26, 2015, 1:23:55 AM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


இழை (அ) நாணில் ஓலைச் சுருளில் தாயத்து போன்றவை கோத்துச்
செய்த தாலி (ஆண், பெண், குழந்தை ...) கலியாணத் தாலி என்று
கி.பி. 3-4 நூற்றாண்டுகளில் மலர்ச்சி அடைந்திருக்கணும். ஸ்ரீ
உத்தர காரணாகமத்திலும், லலிதா சகசிரநாமத்திலும் காண்கிறோம்.
’மாங்கல்யம் தந்துநாநேன’ எந்த நூலில், எந்த நூற்றாண்டில் வருகிறது
எனப் பார்க்கணும். தாலி  obviously a Dravidian custom that is widely prevalent
as a substratum element from Northwest India to Ceylon.

இராவணன் இமையத்தை அசைக்கிறான். போர் மூளுமோ என்று
உமை அஞ்சுகிறாள். மங்கிலியம் நிற்குமோ? - என பயம். எனவே,
அந்த situation-ஐ பாடும் பாடல்களில் சேயிழை, ஏந்திழை, ஆயிழை, ... 
என்று பாடுவார்கள் தேவார முதலிகள். இங்கே அச் சொற்களுக்கு
மங்கலநாண் அணிந்த பார்வதி எனப் பொருளுண்டு.

இராவணன் கயிலையை அலைக்கையில், இலங்கிழை என்று பார்வதியை
சொல்லும் தேவாரம்:
உளங்கையில், இருபதோடு ஒன்பதும் கொடு, ஆங்கு
அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை,
தளர்ந்து உடல் நெரிதர, அடர்த்த தன்மையன்
விளங்கிழையொடும் புகும், விசயமங்கையே.

N. Ganesan

unread,
Mar 26, 2015, 10:39:02 PM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
சிலம்பிலே திருமணக்காட்சி - மபொசி

சிலம்பிலே திருமணக்காட்சி

தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்
கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்
சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட
இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்
மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்
காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய
நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது
வருமாறு:

"யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்
அவ்வழி
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்
வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி
யெழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு
உழையதா வெப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ழி உருட்டுவோ னெனவே
(மங்கல வாழ்த்துப் பாடல்)

மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"
என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"
என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்து
வேறுபாடிருக்கவில்லை.

மணணுலக அருந்ததி

ரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றது
என்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளே
திருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்
திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.

இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாக
அருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.
அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்
கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்
கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்
பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்
சடங்கல்ல.

இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்
கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்
திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்
"புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்
வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொது
நம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்.

"மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேத
வழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே
"புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது.

"மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்
இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்
வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.

பொக்கை வாய்ப் புரோகிதர்

பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பது
இந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்
பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.
அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்
நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்
சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்
பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்
தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தை
நடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.

கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்
பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.
ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பது
வரையுள்ள வரிகளுக்கு,
" மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்
வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்ற
இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."
என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.

சிலம்பில் படும் புரோகிதர்

இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்த
அடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத
(இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரான
வணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்
இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலி
அணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்று
கிவிடாது.

கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல
- இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்
என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.

சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" என
வரும் சொற்றொடருக்கு,

"மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறிய
இழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.

சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமை
நெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு

" முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது
குத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"

என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்
நச்சினாக்கினியர்.

சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்ய
சூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்
பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியை
பாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணி
மகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.

பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்
என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்
அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.

வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடு
கண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்
இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.

திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி
கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக
அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.

நன்றி
மபொ சிவஞானம்
தமிழர் திருமணம்
பூங்கொடி பதிப்பகம்


N. Ganesan

unread,
Mar 26, 2015, 10:56:07 PM3/26/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
நெடுநல் வாடையில் (136-7) அரசனைப் பிரிந்த அரசியின் நிலையை வர்ணிக்கின்ற பொழுது ’ஆரந்தாங்கிய அலர்முலை ஆகத்துப் பின்னும் நெடுவீழ் தாழத் துணைதுறந்து’ என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ’முன்பு முத்தாற்செய்த கச்சு சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நாணொன்றுமே தூங்க’ என்று கூறுகிறார். நெடுநல்வாடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஜே.வி. செல்லையா ‘The Marriage Tie’ (தாலி) என்றே மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையே சிலம்பிலும் காண்கிறோம்:
அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியில் பிறிதணி மகிழாள்

புறநானூற்றில் (127) ஈகையரிய இழையணி மகளிரோடு என்று குறிப்பிடப்படுவதற்கு எழுதப்பட்டுள்ள பழைய உரையில் கொடுத்தற்கரிய மாங்கல்ய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே என்று ஈகையரிய இழையணி என்பது தாலி என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

தாலி (< தாழை ‘palm tree') மிகப் பழமையானது. 10-ஆம் நூற்றாண்டு என்பதெல்லாம் சான்றுகளோடு ஒத்துப்போவதில்லை.  யாழ என்ற சங்ககால முன்னிலை மருவி அசைச்சொல் எலெ, எல்லே (ஆண்டாள்), ம்தருவியாலெ/போடுவியாலெ (நெல்லை)  என்பவற்றில்  உள்ளதுபோல தெரிகிறது. அதுபோல், தாலி < தாழையில் உள்ள ழ > ல. பழம் > பலம்-னு சொல்வதுபோல்.

தேவாரத்தில் மங்கல இழை (தாலி)

உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே. 3.78.7

மணவன் காண்! மலையாள் நெடு மங்கலக்
கணவன் காண்! கலை ஞானிகள் காதலெண்
குணவன் காண்! குரங்காடு துறைதனில்
அணவன் காண்! அன்பு செய்யு மடியர்க்கே. 5.63.4
(மங்கலம் என்ப மனைமாட்சி - குறள்)

இராவணன் கயிலைமலையை அசைக்கும்போது
பர்வதராஜகுமாரி கழுத்தில் மங்கல இழை நிற்குமோ?
- எனப் பயந்தாள். எனவே, இந்த நிகழ்ச்சியைப் பாடும்போதெல்லாம்
தேவாரம் பாடிய நாயன்மார்கள் உமையாளை -இழை
என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள். காட்டுகள் சில.

இராவணன் கயிலையை அலைக்கையில், இலங்கிழை என்று பார்வதியை
சொல்லும் தேவாரம் சில:

கறுத்தார், மணிகண்டம்; கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர்கோன் முடிபத்தும்;
அறுத்தார், புலன்ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்---புகலூர்ப் புரிசடையாரே.

வஞ்ச(அ)ரக்கன் கரமும்---சிரத்தொடும்---
அஞ்சும்அஞ்சும்ஓர்ஆறும்நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல்அஞ்சல்! என்றார்---அன்னியூரரே.
இங்கே எல்லாம் மங்கல்ய தந்து ரக்‌ஷாபரணம் (அருணகிரிநாதர்)
தான் -இழை எனக் குறிக்கின்றனர் எனக் கருதலாம். புறநானூற்றில்
“ஈகை அரிய இழையணி” என்பது கொடுத்தற்கரிய மாங்கல்ய சூத்திரம்
என்பதுவும் காண்க. மங்கல அணியில் பிறிதணி மகிழாள் (சிலப்பதிகாரம்).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 27, 2015, 9:24:06 AM3/27/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, March 26, 2015 at 11:34:14 PM UTC-7, meenavan2 wrote:
தாலி பற்றிய ஆய்வு முனைவர் இராசமணிக்கனார் காலம் முதல் ஆய்ந்து ஓய்ந்து போன தலைப்பு.
மங்கல அணி என்பது தாலியா அன்றி வேறு பொருளா ! என்ற ஐயபாடு இன்றுவரை நிலவி வருகின்றது.
நீங்கள் கூறிய எடுத்துக்காட்டுகள் பலவற்றை அனைவரும் கூறியுள்ளனர்.சில்ப்பதிகாரம் புகார்க காண்டத்தில்
இந்திரவிழாக் கொண்டாடும் காலத்தில் நகரப் பெண்டிர் அனைத்து அணிகளையும் அணிந்திருக்கக்
கண்ணகியைச் சுட்டும் போது ” மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் “ என்று சொல்லப்படுகின்றது.
புகார்க் காண்டத்தில் “ அகலுள் மங்கல அணி எழுந்தது “ என்று வருகின்றது.மதுரைக் காண்ட இறுதியில்
கண்வனொடு மதுரை புகுந்த நான் இப்பொழுது வ்றிதே பெயர்கின்றேன்.என்று சொல்லிப் புறப்படும் போது
தன் கை வளையல்களை உடைத்தெறிந்து விட்டுப் போனாள் என்று சொல்லப் படுகின்றது.எனவே மங்கல
அணி என்பது தாலியன்று  கை வளையலே என்பாரும் உளர்.ப்ழ்ங்காலத்தில் அரக்கில் செய்யப் பெற்ற
வளையல்களைப் பெண்ணின் கை அளவு பார்த்துத் திருமணத்திற்கு முதல்நாள் ஒட்டிச் சேர்ப்பது உண்டு
என்று கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் த்ன்னுடைய நெடுங்கதையான “ இராவ் பகதூர் சிங்காரம் “என்பதில்
பதிவு செய்கின்றார்.மங்கல அணி அணியும் வழக்கமுண்டு .அது மெய்யே.ஆனால் அதனை முற்கால
இலக்கியங்கள் சுட்டவில்லை.பிற்கால்த்தில்தான் தாலி அணிதல் வ்ழ்க்கிற்கு வந்துள்ளது என்பாரும் உளர்.
தாலி இருந்த்தா இல்லையா என்ப்தை முடிவு செய்து என்ன செய்யப் பொஆகின்றோம்.இன்னும் அறியப்பட
வேண்டிய வ்ரலாற்றுச் செய்திகள் நிறைய உள.வரலாற்று உண்மைகள் பல திரித்து எழுதப்பட்டுள்ளன.சிவகங்கை
மாவட்டத்தில் ஏராளம் உண்டு.அதனை எழுதுகிறவர்கள் சாதிப் பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.தாலி பற்றி எழுதிக் கால விரையம் செய்வதைவிட இதுவரை வெளிவ்ராத நூல்களை
வெளிக்கொணரும் முயற்சியில் காலத்தைச் செலவிடலாம் என்பது என் கருத்து.யாரையும் குறைத்து
நான் மதிப்பிடவில்லை.தேர்ந்த தமிழறிவு உடைய உங்களின் இலக்கியப் பங்களிப்பு த்மிழிலக்கிய வளர்ச்சிக்குத்
திரும்பட்டுமே என்ற ஆதங்கம்தான் நான் இதை எழுதக் காரணம்.இதில் பிழையிருந்தால் அறிவுசால் நண்பர்களே
பொறுத்தருளுங்கள்.
மீனவன்

நன்றி, மீனவன் ஐயா. பழைய நூல்களை நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம்.

என்னிடம் உள்ள பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் (இசைத்தமிழின்
ஆதார நூலாகிய பஞ்சமரபு படித்திருப்பீர்கள். அதற்கு முன் அடியார்க்குநல்லார்
மேற்கோள்களே கிடைத்திருந்தன.) போன்றார் தேடிக் காத்த ஓலைச்சுவடிகள் உண்டு.
(1) பழனி மதனவித்தாரம். சுப்பிரதீபக் கவிராயர். குறைப்பிரதி. நூலின் கடைசியில் சில
கண்ணிகள் இல்லை. கடிகைமுத்துப்புலவரின் (ஊற்றுமலை) மதனவித்தாரம் அச்சாகியுள்ளது
100 வருஷம் முன்னரே.
(2) படிக்காசுப் புலவரின் மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை.  அடியார்க்கு நல்லாரைப்
புரந்த பொப்பணகாங்கேயன் மரபினரான மோரூர்க் காங்கேயர்களுக்காகப் பாடியது.
மோரூர் திருச்செங்கோட்டின் அருகே. இதர்கு உரையும் இருக்கிறது. முழுநூலும் உள்ளது.
(3) தக்கை ராமாயணம். இதன் அச்சாகாத யுத்தகாண்டம். கம்பனை அப்படியே சுருக்கி
இசைராமாயணமாக செய்த நூல். 

தமிழின் முக்கியமான நூல்களில் ஒன்று. இந்தியாவில் இரண்டே இரண்டு
லோகாயத நூல்கள் தாம் மிஞ்சியுள்ளன. ஒன்று வடமொழியில் ஜெயராசியின்
தத்துவ உபப்லவ சிம்மம். தமிழில் கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டாரின்
காராணை விழுப்பரையன் வளமடல். தமிழில் ஐந்தே ஐந்து வளமடல்கள்தாம்
இயற்றப்பட்டுள்ளன - ஆழ்வார் காலத்திலிருந்து. பாட்டுடைத் தலைவைன்
பெயரின் எதுகை நூல் முழுதும். இந்நூலை 15 வருடம் முன்னரே “மதுரை
திட்டத்துக்கு” அளித்தேன். பெரும்புலவர் வேராதெ சுவடி தான் நூலைக் காத்தது.
இன்றைய விஞ்ஞானம் சொல்லும் உயிர்கள் தோன்றும் விதத்தைச் சொல்லும்
நூல் இது. துறவை எதிர்ப்பதால் சமணத்தைச் சாடுவது. எல்லா மதங்களையும்
எதிர்க்கும் நூல். ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரைகள் பல ஜெயராசியின்
வடமொழி நூலுக்கு வந்துகொண்டுள்ளன. ஆனால், இந்நூல் பற்றி
அர்ச்சனா வெங்கடேசன் விரிவாக பெர்க்கிலி கான்பரன்ஸ் ஒன்றில் பேசியுள்ளார்.

---------------------

என் தொகுப்பின் நோக்கம் “ஈகை அரிய இழை” என்ற புறப்பாட்டுக்கு
தேவாரத்தில் இழை என்ற சொல்லாலேயே, பார்வதியைச் சொல்லி
உள்ளதும் அதன் தொடர்பும் உங்களைப் போன்றோர் ஆராயவேண்டும்
என்று வேண்டுகோளுக்காகவே. எல்லா தேவாரப் பாடல்களும்
பார்த்து, ”கயிலைமலை அலைப்பும், -இழை என அப்பாடல்களில் 
உமைநங்கை அழைப்பும்” முன்னர் நீங்கள் சொல்லிய கட்டுரைகள்
காட்டவில்லை. கணினியால் இதனைச் செய்ய முடிந்திருக்கிறது.

தாலி கட்டும் திராவிட மரபு க்ர்ஹிய சூத்திரங்களில் குறிப்பிடப்படாததால் தாலி பெயர்
சொல்லாமல் இருந்தாலும், இழை, மங்கல அணி என்று சொல்லியுள்ளனர்.
பி. டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், தமிழர் வரலாறு என்னும் முக்கியமான நூலில்.
எல்லா Amulets-மே ஒரு காலத்தில் பனையோலைச் சுருளில் தான்
வைத்துள்ளனர் போலும். எனவே, தாலி என்ற பொதுப்பெயர் (ஐம்படைத் தாலி)
கலியாணத் தாலிக்கும் வந்துவிட்டது. 

தாழை என்பது பனை, தென்னை, ஈஞ்சு, கைதை --- இந்த தாவரங்களுக்குப் பொது.
இந்தச் சங்கச் சொல்வளம்தான் தாலம், தாலி, ஸ்ரீதாலி (70-80 வருஷத்துக்கு
ஒருமுறை பூக்கும். பின்னர் இறக்கும்). ஸ்ரீதாலி மரம் சிந்து சமவெளியில் விசேஷமாக
வளர்த்து கொண்டாடியுள்ளனர். சிந்து முத்திரைகளில் பார்த்திருக்கிறேன்.
தாழை > தாலி என்பது நானறிய யாரும் குறிப்பிடாத சொல்லாராய்ச்சி.
யாழ யாலெ என நெல்லையில் ஆதலும், இந்தியா முழுதும் வடமொழிகளில்
பழம் > பல என்றாதலையும் ஒத்தது. 

நா. கணேசன்
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 27, 2015, 8:25:12 PM3/27/15
to vallamai, மின்தமிழ்
தெலுகில் பனை மரத்துக்கு தாட்டிமான் என்பர். அது தாழை அல்லது தாலம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்

27 மார்ச், 2015 ’அன்று’ 9:24 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 27, 2015, 10:51:37 PM3/27/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, March 27, 2015 at 5:25:14 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தெலுகில் பனை மரத்துக்கு தாட்டிமான் என்பர். அது தாழை அல்லது தாலம் என்பதன் மரூஉவாக இருக்கலாம்

தெலுகில் தாடி என்பர். தாடிக்கொம்பு ஊரில் சௌந்தராஜப்பெருமாள் கோவில் அழகானது. திண்டுக்கல் நாயக்கர்கள்
உருவாக்கிய ஊர். சோழர் = சோட என்பதுபோல், தாழ்- > தாடி.  

தாழ்/தாள்/தாலம் என்பன பனையின் பெயர்கள்:
http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33826 
சோழர் சோட- என்று வடமொழியில் வருதற்போல், தாழ்/தாள் தாட- என்று வட மொழிகளில் ஆகின்றன. எனவே, பனையின் வெண்டோட்டு வளையம் தாடங்கம் என்ற பெயர் பெறுகிறது. ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் சிறப்பு (சௌந்தர்ய லஹரி, தாடங்க மஹிமை). திருக்கடவூர் அபிராமியும் தாடங்கம் கொண்டு அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கினதாக ஐதிஹ்யம். தாடங்கம் = (பனையின்) தாட + அங்கம் (Cf. தாடி (toddy))

பெண்ணை (பெண்பனை) மரத்தில் தூக்கணாங் குருவிகள் கூடு கட்டும்: 

மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பை (நற்றிணை 303). 
தூக்கணங்குரீஇ . . . பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்தொகை 374). 
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங்குரீஇக் கூட்டுள சினையே (இறை. 9) 



எனவே, ஆங்கிலத்தில், தூக்கணங்குருவிக்கு Toddy bird எனப்பெயர்,
ஹாப்ஸன் - ஜாப்ஸன் அகராதி:
TODDY-BIRD , s. We do not know for certain what bird is meant by this name in the quotation. The nest would seem to point to the Baya, or Weaver-bird (Ploceus Baya, Blyth): but the sizealleged is absurd; it is probably a blunder. [Another bird, the Artamus fuscus, is, according to Balfour (Cycl. s.v.) called the toddy shrike.]

[1673. -- "For here is a Bird (having its name from the Tree it chuses for its Sanctuary, the toddy-tree). . . ." -- Fryer, 76.]

c. 1750-60. -- "It is in this tree (see PALMYRA, BRAB) that the toddy-birds, so called from their attachment to that tree, make their exquisitely curious nests, wrought out of the thinnest reeds and filaments of branches, with an inimitable mechanism, and are about the bigness of a partridge (?) The birds themselves are of no value. . . ." -- Grose, i. 48.

தாடி (< தாழை) என்பது ஹிந்தி-உர்துவில் உள்ள பனையின் தமிழ்ப்பெயர் ஆகும்.
TODDY , s. A corruption of Hind. tāṛī, i.e. the fermented sap of the tāṛ or palmyra, Skt. tāla, and also of other palms, such as the date, the coco-palm, and the Caryota urens; palm-wine. Toddyis generally the substance used in India as yeast, to leaven bread. The word, as is well known, has received a new application in Scotland, the immediate history of which we have not traced. Thetāla-tree seems to be indicated, though confusedly, in this passage of Megasthenes from Arrian:

c. B.C. 320. -- "Megasthenes tells us . . . the Indians were in old times nomadic . . . were so barbarous that they wore the skins of such wild animals as they could kill, and subsisted (?) on the bark of trees; that these trees were called in the Indian speech tala, and that there grew on them as there grows at the tops of the (date) palm trees, a fruit resembling balls of wool." -- Arrian, Indica, vii., tr. by McCrindle.

c. 1330. -- ". . . There is another tree of a different species, which . . . gives all the year round a white liquor, pleasant to drink, which tree is called tari." -- Fr. Jordanus, 16.

[1554. -- "There is in Gujaret a tree of the palm-tribe, called tari agadji (millet tree). From its branches cups are suspended, and when the cut end of a branch is placed into one of these vessels, a sweet liquid, something of the nature of arrack, flows out in a continuous stream . . . and presently changes into a most wonderful wine." -- Travels of Sidi Ali Reïs, trans. A. Vambéry, p. 29.]

[1609-10. -- "Tarree." See under SURA.]

1611. -- "Palmiti Wine, which they call Taddy." -- N. Dounton, in Purchas, i. 298.

[1614. -- "A sort of wine that distilleth out of the Palmetto trees, called Tadie."-<-> Foster, Letters, iii. 4.]

1615.-
". . . And then more to glad yee
Weele have a health to al our friends in Tadee."
Verses to T. Coryat, in Crudities, iii. 47.

1623. -- ". . . on board of which we stayed till nightfall, entertaining with conversation and drinking tari, a liquor which is drawn from the coco-nut trees, of a whitish colour, a little turbid, and of a somewhat rough taste, though with a blending in sweetness, and not unpalatable, something like one of our vini piccanti. It will also intoxicate, like wine, if drunk over freely."-<-> P. della Valle, ii. 530; [Hak. Soc. i. 62].

[1634. -- "The Toddy-tree is like the Date of Palm; the Wine called Toddy is got by wounding and piercing the Tree, and putting a Jar or Pitcher under it, so as the Liquor may drop into it." --Sir T. Herbert, in Harris, i. 408.]

1648. -- "The country . . . is planted with palmito-trees, from which a sap is drawn called Terry, that they very commonly drink." -- Van Twist, 12.

1653. -- ". . . le tari qui est le vin ordi- naire des Indes." -- De la Boullaye-le-Gouz, 246.

1673. -- "The Natives singing and roaring all Night long; being drunk with Toddy, the Wine of the Cocoe." -- Fryer, 53.

" "As for the rest, they are very respectful, unless the Seamen and Soldiers get drunk, either with Toddy or Bang."-<-> Ibid. 91.

1686. -- "Besides the Liquor or Water in the Fruit, there is also a sort of Wine drawn from the Tree called Toddy, which looks like Whey." -- Dampier, i. 293.

1705. -- ". . . cette liqueur s'appelle tarif." -- Luillier, 43.

1710. -- This word was in common use at Madras. -- Wheeler, ii. 125.

1750. -- "J. Was vor Leute trincken TaddyC. Die Soldaten, die Land Portugiesen, die Parreier (see PARIAH) und Schiffleute trincken diesen Taddy."-<-> Madras, oder Fort St. George, &c., Halle, 1750.

1857. -- "It is the unfermented juice of the Palmyra which is used as food: when allowed to ferment, which it will do before midday, if left to itself, it is changed into a sweet, intoxicating drink called 'kal' or 'toddy.'" -- Bp. Caldwell, Lectures on Tinnevelly Mission, p. 33.

"The Rat, returning home full of Toddy, said, If I meet the Cat, I will tear him in pieces." -- Ceylon Proverb, in Ind. Antiq. i. 59.

Of the Scotch application of the word we can find but one example in Burns, and, strange to say, no mention in Jameson's Dictionary:

1785.-
"The lads an' lasses, blythely bent
To mind baith saul an' body,
Sit round the table, weel content.
An' steer about the toddy. . . ."
Burns, The Holy Fair.

1798. -- "Action of the case, for giving her a dose in some toddy, to intoxicate and inflame her passions." -- Roots's Reports, i. 80.

1804.-
". . . I've nae fear for't;
For siller, faith, ye ne'er did care for't,
Unless to help a needful body,
An' get an antrin glass o' toddy."
Tannahill, Epistle to James Barr.

கைதையில் பால்பாகுபாடு:
தாழையிலும் ஆண் பெண் வேறுபாடு உண்டு: ஆண் தாழை காய்க்கும், பூக்காது; பெண் தாழை பூக்கும், காய்க்காது. தாழ்- என்னும் வினைச்சொல்லில் பிறந்த தமிழ்ப் பெயர்கள் பனை, தென்னை, கைதை - மூன்று புல்வகைகளுக்கும் உண்டு. தாழை = தென்னை என்பதற்கு உதாரணம்: குலையிறங்கிய கோள்தாழை (புறநா. 17). தாடி (< தாழ்-) = பனை. கைதை = ஈரமான சதுப்பு நிலம், எனவே கைதை/கைதல் தாழைக்கு ஒரு ஆகுபெயர். கைதை > வடமொழியில் கேதகீ என்றாகும். ஏற்றை என்று அஃறிணை ஆண்பாலுக்குப் பேர் என்கிறது தொல்காப்பியம் (மரபியல் சூத்திரம், 50 இளம்பூரணர் உரை: ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக்கண்ணும் கொள்ளப்படும்). எனவே ஆண் தாழையை ஏற்றைத்தாழை என்றும், பெண் தாழையைப்பெண்ணைத்தாழை என்றும் அழைக்கத் தமிழ்மரபு வழிகாட்டுகிறது எனலாம். வீழ் இல் தாழை = தெங்கு, அதில் ஆண், பெண் தனியாய் இல்லை. ஆனால், விழுதுகள் உள்ள தாழையாம் வீழ்தாழையிலே தான் ஏற்றை, பெண்ணை பகுப்புகள் ஈச்சை, பனைபோல உள்ளன

இவை உள்ள பதிவு:

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Mar 27, 2015, 11:23:18 PM3/27/15
to vallamai
தூக்கணங்குரீஇ . . . பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்தொகை 374). 
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங்குரீஇக் கூட்டுள சினையே (இறை. 9) 


மின்னம்பலத்தான்

--

N. Ganesan

unread,
Apr 23, 2015, 8:42:17 AM4/23/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai
எள் + நெய் = எண்ணெய். பின்னர் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ... என சொற்கள் விரிகின்றன. தாலி என்றால் மங்கலவணி என்னும் கலியாணத்தைக் குறிக்கும் அணிகலன் தான். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என விரிவது போல புலிப்பல் தாலி, ஐம்படைத் தாலி, விரலிமஞ்சள் தாலி, ...
என விரிந்தது போலும்.

கொழுநுதி 1, 2, 3 எனக் காட்டும் “குத்துதல் அமைந்த தாலி” ஏர்க்காலுடன் சேர்க்கும் இடத்திலும்
கூராக இருக்கும். இது தாலம் என்னும் பனை  மரத்தால் செய்துள்ளனர். பனை வேளாண் கடவுள் வாலியோனின் சின்னம்.
அவன் கலப்பையை தோளில் சுமப்பவன். கலப்பைக் கொடி தாலக் கொடி - பலராமனுக்கு உண்டு. இந்த வளமைச் சின்னத்தை
தாலி என வடிவமைத்தனர் திராவிட மக்கள். அது ஏன் வளமைச் சின்னம்? - எனப் பின்னர் பார்ப்போம்.

subsoil plough : தாலியின் அடிப்படை வடிவமைப்பு காண:


இழை என்பது தாலியின் ஒரு பெயர். கூடல் இழைத்தல் என்றால் சேர்த்துதல். இழைப்புளி, வேளாண் கருவான harrow - plough's
extension. நச்சினார்க்கினியர் உரை காண்க.


மூன்று கொழு (cf. plough or harrow)































two tipped plough shape































பழைய வடிவம் தாழ்- தால மரத்தால் செய்யும் கலப்பையை அடியொற்றியது.
எள் + நெய் = எண்ணெய். பின்னர் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ... என சொற்கள் விரிகின்றன. தாலி என்றால் மங்கலவணி என்னும் கலியாணத்தைக் குறிக்கும் அணிகலன் தான். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என விரிவது போல புலிப்பல் தாலி, ஐம்படைத் தாலி, விரலிமஞ்சள் தாலி, ...
என விரிந்தது போலும்.


இனி மாறலாம், அணியாகவே இல்லாமலும் போகலாம்.

நா. கணேசன்

On Wednesday, April 22, 2015 at 8:21:57 PM UTC-7, N. Ganesan wrote:

புலிப்பல் தாலி ஆண் அணிவது. ஆனால் கலியாணச் சின்னமாக பெண் அணிவதாகக் காணோம்.
சங்க காலத்திலோ, பின்னரோ.

பனைக் கொடியும், கலப்பையும் கொண்டவன் வேளாண் கடவுளான பலராமன்.
கலப்பைக் கொழுமுனை போல அமைவது தாலி. இதனை சங்க இலக்கிய வரியை
விளக்கும் போது “குத்துதல் அமைந்த தாலி” எனச் சொன்னார் நச்சினார்க்கினியர்.
கலப்பைக்கு fertility symbolism எல்லா வேளாண் சமூகங்களிலும் உண்டு.
முதலில் மான்கொம்பு, பின்னர் இரும்பு இவற்றால் கொழு அமைந்த
கலப்பை பனமரத்தால் செய்யப்பட்டிருக்கும். எனவே, தாலி கலியாணத்தில்
கணவன் கட்டுவது திராவிட மக்கள் தொடங்கியுள்ளனர்.

இன்று பூணூல் அணிந்த சிவாச்சார்ய குருக்கள் தாக்கப்பட்டுள்ளனர்
என்ற அதிர்ச்சியான செய்தி. அவர்கள் வேத வழிப்பட்ட மந்திரங்களில்
தாலியை சம்ஸ்கிருத இலக்கியங்களில் - முதலில் சைவ ஆகமங்களிலே
- சொல்ல முற்படுகின்றனர். அதன் பின்னர் இலளிதை சகசிரநாமத்திலே
பார்வதி தாலி கழுத்தில் அமைந்தது வருகிறது.

ஈருயிர் ஓருயிராய்க் கலப்பதற்கு கலப்பை (தாலி) பொருத்தமான சின்னம் தானே.
கலப்பு நின்றால் தாலி வாங்கப்படுகிறது.

நா. கணேசன்


வேத கால இலக்கியங்களிலே உள்ள தவளைக் கலியாணம். இன்றும் இந்தியா எங்கிலும் நடப்பதாகும்.



தவளைகளுக்கு தாலி கட்டி கொண்டாடிய மக்கள்! 
[Wednesday 2013-10-02 18:00]

கோவை அருகே மழை வேண்டி தவளைகளுக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தடபுடலாக விருந்து தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அன்றே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் கடந்த 2 வருடமாக மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க சின்னவடவள்ளி கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 30ம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி, மறுநாள் தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்றும் தேதி குறித்து ஊர் மக்களுக்கு விழா குழுவினர் அறிவித்தனர்.


அதன்படி நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. ஆண் தவளையை தேவராஜ் என்ற சிறுவனும் பெண் தவளையை சாந்தாமணி என்ற பெண்ணும் ஊர்வலமாக சக்தி விநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். தவளைகளுக்கு புதுத் துணி கட்டி, மலர் களால் அலங்காரம் செய்திருந்தனர். நிஜ திருமணம் போன்றே மாப்பிள்ளை அழைப்பு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. 600 பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. இரவில் பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பின்னர் இரவு முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.

நேற்று காலை 5.30 மணிக்கு தவளைகள் மணமேடைக்கு கொண்டு வரப்பட்டன. மணமேடை வாழை மர தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஐயர் மந்திரம் ஓத கெட்டி மேளம் ஒலிக்க பெண் தவளைக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தடபுடலாக கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்கள் கொடுத்த மொய் பணம் ரூ.3 ஆயிரம் சேர்ந்தது.காலையில் இந்த நிகழ்ச்சி நடந்த நிலையில், மாலையில் வடவள்ளி, ரங்கப்பகவுண்டன் புதூர், பெரியபுத்தூர், கெச்சங்கிணர், பெரிய வடவள்ளி, தேசம்பாளையம்,, குமரன் குன்று பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Reply all
Reply to author
Forward
0 new messages