தாயின் மணிக்கொடி

18 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 11, 2025, 12:06:07 AM (6 days ago) Oct 11
to Santhavasantham, Niranjan Bharathi
தாயின் மணிக்கொடி
---------------

இந்தியாவுக்கு ஒரு கொடி வேண்டும் என்ற முயற்சி 1883-ல் லாகூரில்
தொடங்கியது. அப்போது வடிவமைந்த கொடியைப் பற்றித் தமிழில் யாரும்
எழுதியதாகத் தெரியவில்லை. இந்திய அரசு வெளியிட்டுள்ள பாரத மாதா
நாணயத்தில் உள்ள கொடியின் விளிம்பை ஒத்த விளிம்பு (border) கொண்ட கொடி
இலாகூர்க் கொடி ஆகும். அதன் நடுவிலே சூரியன் ஒளிவீசிக் கொண்டுள்ளது.
https://x.com/naa_ganesan/status/1976857906889822551

பாரத தேவியின் திருத்தசாங்கம், சகோதரி நிவேதிதாவின் வஜ்ஜிரக் கொடிப்
பாட்டைக் கொண்டது. வெளிவந்த தேதி: இந்தியா, 10.10.1908. தொ.மு. சி.
ரகுநாதன் எழுதிய ஆழமான கட்டுரையில் இச்செய்தி குறிப்பிடப்படவில்லை.

கொடி
( ராகம்: கேதாரம்)

கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! குத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.

(வயிரக் கொடி = Vajra Flag, designed in 1906 by Sister Nivedita who was
the Guru of Bharati)

இதற்கு அப்புறமாகப் பாடியது "தாயின் மணிக்கொடி பாரீர்". இது 1908 (அ)
1909 என நினைக்கிறேன். இப்பாட்டின் தேதி என்ன? அறிந்தோர் கூறவும். நன்றி.
இப்பாடலில் பாரதியார் கொடியில் செய்யும் மாற்றம் பற்றியும் ஆராயலாம்.

2009-ல் திரு. ந. பாலு எனக்குச் சந்தவசந்தத்தில் அளித்த பாரதியார் செய்த
பாரதமாதா திருவுருவம்.
https://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html

பாரதியார் பாடலில் உள்ள கொடி வடிவிற்கு ஏற்ப அமைக்கலாம். ~NG
மாதாவின் துவஜம்
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
(தாயுமானவர் ஆனந்தக்களிப்பு வர்ணமெட்டு)

பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

சரணங்கள்

1 ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் 'வந்தே மாதரம்' என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

2 பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்.

3 இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் (தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

4 கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்.

5 அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!

6 செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்,

7 கன்னடர் ஒட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்.
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடை யார்இந்து ஸ்தானத்து மல்லர்,

8 பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்,

9 பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்,,

10 சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

N. Ganesan

unread,
Oct 11, 2025, 7:56:16 AM (6 days ago) Oct 11
to Santhavasantham, Niranjan Bharathi
பழைய கணினியில் 2008-ம் ஆண்டு அச்சான தினமணிக் கட்டுரை ஒன்று கிடைத்தது. ஔவை ந. கண்ணன் (மருத்துவர், மெல்பேர்ன், அவுஸ்திரேலியா) அனுப்பிய மடல் மூலமாகப் பெற்றேன். பத்மஶ்ரீ சீனி. விசுவநாதன் எழுதினது. 

பாரதியார், தாயின் மணிக்கொடி பாரீர், ஜூலை 11, 1908. இந்தியா பத்திரிகையில் வெளியானது. பாரதி புகழ் பரவ உதவிய ஆங்கில அரசு, 2008
"11.7.1908ல் "இந்தியா" பத்திரிகையில் வெளியான "தாயின் மணிக்கொடி பாரீர்" என்று தொடங்கும் பாடலைப் பற்றிய கருத்தும் அரசின் அந்தரங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே பத்திரிகையில் 19.12.1908ல் "தண்ணீர் விட்டா வளர்த்தோம்" என்ற முதல் அடியைக் கொண்ட "ஸ்வதந்திர தாகம்" என்ற பாடலானது வெளியானது.
இப்பாடலுக்கான மொழிபெயர்ப்பும் அரசின் அந்தரங்க அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. "

ஜூலை மாதக் கொடியில் பாரதி செய்த மாற்றமும், அதன் பின்னர் 3 மூன்று திங்கள் சென்றபின் பாடிய பாரத மாதா திருத்தசாங்கத்திலும் பாரதியின் குருபக்தி வெளிப்படுகிறது. அவரது குருநாதர் மார்கரட் நோபிள் என்ற இயற்பெயர் கொண்ட ஐரோப்பியப் பெண்மணி, இந்திய மறுமலர்ச்சிக்குத் துணை நின்றவர். சுவாமி விவேகாநந்தரின் சீடர் நிவேதிதை அம்மையார்.

பாரத நாட்டுக்கு கொடி அமைந்த வரலாற்றை வாழ்நாள் முழுதுமாக ஆராய்ந்து வருபவர் கல்கத்தா பொறியாளர் சேகர் சக்ரவர்த்தி ஆவார். இக் கொடியியல் நிபுணர் (Vexillologist) ஆராய்ச்சிகளால் துலக்கம் அடையும் பாரத தேசக்கொடியின் முக்கிய மைல்கற்களைக் காண்போம்.
Sekhar Chakrabarti sitting at a table, selling patches of India flag and the book he wrote about the flag of India through the postage stamps.  

தாயின் மணிக்கொடி, தொ. மு. சி. ரகுநாதன், பக்.  104-123.
பாரதி: சில பார்வைகள், மீனாட்சி புத்தக நிலையம், 1982, 

N. Ganesan

unread,
5:08 PM (5 hours ago) 5:08 PM
to Niranjan Bharathi, Santhavasantham
On Sat, Oct 11, 2025 at 9:29 PM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
> Hi Uncle,
> நான் எழுதிய "பாரதியாரின் சுதேச கீதங்கள் உரை ( பகுதி -1) " நூலில் 'தாயின் மணிக்கொடி பாரீர்' பாடலுக்கு மிக நீண்ட விரிவுரை எழுதியுள்ளேன்.
>
> The Vajra as a National Flag என்னும் தலைப்பில் 1909 ஆம் ஆண்டு The Modern Review இதழில் சகோதரி நிவேதிதா தேவி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகளை மேற்கோளாகக் காட்டியுள்ளேன்.
> என் நூலிலிருந்து சில பக்கங்களை இந் அஞ்சலில் இணைத்துள்ளேன்.
>
> நன்றி ,
> நிரஞ்சன் பாரதி

நல்ல கட்டுரை, நிரஞ்சன்.

பாரதமாதா திருத்தசாங்கம் வெண்பாவில் நிவேதிதை சமைத்த கொடியையும், ஏன் காங்கிரஸ் கக்ஷி தலைவர் தாதாபாய் நௌரோஜி ஏற்றிய கொடியில் ஒரு புதுமையைச் செய்தார் பாரதியார் என்றும் விளக்கியுள்ளேன்.

இலாகூரில் (இப்போது பாகிஸ்தான்) 1883-ஆம் வருஷத்திலேயே ஒரு கொடியை உருவாக்கியிருந்தார்கள். அதில் பிரிட்டிஷ் அரசாங்கக் கொடியின் "Star of India" இருந்தது. மிகச் சிறிய வட்டத்துள் அந்த முயற்சி அடங்கிப் போனது. தேசியக் கொடி என்று பெரிதாக எங்கும் வளராது போனது.
https://x.com/naa_ganesan/status/1976857906889822551

பாரதியார் கல்கத்தா சென்று நிவேதிதை அம்மையாரைச் சந்தித்ததில் இருந்து அவரைத் தமது குருவாகக் கொண்டாடினார் [1]. இந்தியாவுக்கு என்று தனித்துவமாக ஒரு கொடி அமைக்க நிவேதிதை அம்மையின் பங்கு முக்கியமானது.  டார்ஜிலிங்கில் அம்மையார் நினைவு மண்டபக் கல்வெட்டிலும் வஜ்ரச் சின்னம் (வயிரச் சின்னம்) உள்ளது. 1906-ம் ஆண்டுக் கல்கத்தா  காங்கிரஸ் மாநாட்டில் நிவேதிதாவின் "வயிரக் கொடி" வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அப்போது காங்கிரஸ் கொடி என்னும் புதிய மூவர்ணக் கொடியை, கட்சித் தலைவர் தாதாபாய் நௌரோஜி ஏற்றினார்.  நிவேதிதை வடிவமைத்த கொடியைத் தான் பாரதமாதா திருத்தசாங்கத்தில் பாரதி போற்றுகிறார்.


    கொடி
   ( ராகம்: கேதாரம்)

     கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! குத்திரமும் தீங்கும்
     மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
     நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
     குன்றா வயிரக் கொடி.
 (வயிரக் கொடி = Vajra Flag, designed in 1905 by Sister Nivedita who was the Guru of Bharati)

1906- கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நௌரோஜி ஏற்றிய கொடியின் வடிவம் மூவர்ணம் என்றாலும், என்னென்ன நிறங்கள் அவை என்பதில் இணையத்தில் சிறு குழப்பங்கள் உள்ளன.  1907-ல் ஜெர்மனி நாட்டு ஸ்டுட்கார்ட்  நகரில் மேடம் பிக்காஜி காமா ஏற்றிய கொடி கிடைத்துள்ளதால் அதே வண்ணங்கள் காங்கிரஸ் கொடியில் இருந்தன என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியதாகிறது [2]

காங்கிரஸ் கொடி, 1907, ஸ்டுட்கார்ட், பிக்காஜி காமா:
https://www.pmsangrahalaya.gov.in/digital-museum-archives/pre-independence-flag
இந்தக் காங்கிரஸ் கொடியிலே ஒரு புதுமை செய்கிறார் பாரதியார். அதன் காரணங்களைக் காண்போம்.


பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
[...]

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
      எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் (தாய்)
மந்திரம் நடுவுறத்  தோன்றும் - அதன்
     மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?  (3)

கர்சன் பிரபு மத அடிப்படையில் வங்காளத்தைப் பிரித்ததை இந்திய தேசியர்கள் எவரும் ஒத்துக்கொள்ளவில்லை. நிவேதிதை பிரிட்டிஷாரின் பிரித்தாளும் தந்திரத்தைச் சாடி எழுதினார். இந்துக்களும், இசுலாமியர்களும் எப்பொழுதும் சேர்ந்து வாழ வேண்டும், அப்பொழுதுதான் ஐரோப்பிய ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும்  என்று பாரதியார் அறிவுறுத்தினார். "எங்கள் துருக்கர்" என்று தேசியக் கொடிப் பாட்டில் சொல்லியுள்ளார். அவர்களுக்கு அமைந்த இளம்பிறை பற்றிக் கூறினார். இது வெளிநாடு மத்தியகிழக்கில் உருவான மதத்தின் சின்னம். இந்தியாவில் தோன்றிய மூன்று பழைய சமயங்களிலும் வஜ்ராயுதத்துக்கு ஒரு வலிமையான இடம்  உள்ளது. புத்த சமயத்தில் வஜ்ரபாணி என்ற போதிசத்துவர். சமண சமயத்தில், துருக்கையின் சிங்க வாகனம், வச்சியாயுதம் கொண்ட பத்மாவதி என்னும் யக்‌ஷி, இந்து சமயத்தில் இந்திரனின் ஆயுதம் எல்லாவற்றாலும், தம் குருமணி நிவேதிதை தேர்ந்தெடுத்த வஜ்ரத்தைப் பாடினார். பிரிட்டிஷ் அரசின் "Star of India" போன்ற நட்சத்திரம்/சூரியனை 1906-ல் ஏற்பட்ட காங்கிரஸ் கொடியில் இருந்து அகற்றிவிட்டார். அந்த இடத்தில், நிவேதிதையின் வயிரக் கொடியில் இருந்த வயிரத்தைப் பொருத்தியுள்ளார்.

பாரதியார் செய்த மாற்றத்தோடு ஒரு கொடியை ஓவியமாக எழுதியும், நாணயங்களாகவும் (Tokens) வெளியிடுதல் பாரதிக்கு நாம் செய்யும் மரியாதையாக விளங்கும். அவர் வடிவமைத்த பாரதமாதா சிலையில் அவர் பாடிய மாற்றத்துடன் கூடிய "காங்கிரஸ் கொடியை" இணைத்து வரையவேண்டும்.

நா. கணேசன்

In 1905, the British viceroy, Lord Curzon, declared the partition of Bengal, a move that rapidly proved a turning point for the Indian independence movement and led to a major political crisis for the British Empire in India. The need to unite the whole of India became critical, and along with it the first serious attempt to devise a flag to stir the nation. And it came from someone born outside the country – Sister Nivedita.

Viceroy Curzon did the Bengal partition in 1905. He claimed it is for administrative purposes. But Nationalists in India protested saying this will divide India on religious lines. Sister Nivedita played a pivotal role in organising the anti-partition movement of 1905 and plunged into the Swadeshi movement. She devised a distinctive pan-Indian National Flag to rally around. “India appears to be waking up in these days…. The people are feeling their power. I think Curzon has broken the British Empire” - wrote Nivedita on 13 September 1905.

(1) Bharati's dedicatory statements on Sister Nivedita in his books,
https://x.com/naa_ganesan/status/1964660178286195112

(2)
http://flagstamps.blogspot.com/2010/06/quest-for-national-flag-for-india-first.html
http://flagstamps.blogspot.com/2015/04/the-indian-national-flag-is-work-of.html
http://flagstamps.blogspot.com/2016/04/the-indian-national-flag-designers.html
http://flagstamps.blogspot.com/p/quest-for-flag-for-india-part-iv.html
http://flagstamps.blogspot.com/2012/03/international-womens-day-honours-women.html



Reply all
Reply to author
Forward
0 new messages