பரிசளிப்பு விழா

4 views
Skip to first unread message

Chokkalingam Lakshmanan

unread,
Feb 28, 2026, 2:25:48 AM (11 days ago) Feb 28
to

பரிசளிப்பு விழா 


  ஒழுக்கமே வாழ்வில் உயர்வு தரும்  - மாணவர்களுக்கு அறிவுரை

அறக்கட்டளை நிர்வாகி  பேச்சு 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                                            ஆசிரியர் ஸ்ரீதர்   வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை எஸ். எம். ஏஆர். அறக்கட்டளை நிர்வாகி அருணாச்சலம்  முன்னிலை வகித்தார் . அறக்கட்டளை  நிர்வாகி  சுவாமிநாதன்  பேசுகையில் , கல்வியோடு சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.கண்முன் கஷ்டப்படுவபவர்களுக்கு உதவ வேண்டும்.படித்த பள்ளியை என்றுமே மறக்கக்கூடாது . என்று பேசினார்.போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் லேகா ஸ்ரீ, நந்தனா,ரித்திகா,யோகின் ,அஜய் ஆகியோருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது . நிறைவாக ஆசிரியை வள்ளிமயில் நன்றி கூறினார்.

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை 
எஸ்.எம்.ஏஆர். அறக்கட்டளை நிர்வாகிகள்  அருணாச்சலம், சுவாமிநாதன்  ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 


IMG_4672.JPG
IMG_4684.JPG
IMG_4682.JPG
IMG_4659.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages