Re: [MinTamil] ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உறுதியானது தமிழ் இருக்கை!

77 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 28, 2017, 11:20:34 AM10/28/17
to மின்தமிழ், vallamai
எது நடந்தாலும் அறிக்கை விடும் சீமான் ஹார்வர்ட் தமிழ் சேருக்கு தமிழக அரசின் நிதியை வழங்கிய முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தியுள்ளார்.

For 15 more Universities in Europe, USA, Canada, Korea, Japan, Tamil Nadu govt. & other govt.s in whose countries Tamils live in substantial numbers should support research professorships
in Tamil linguistics, Comparative Dravidian Studies, Art History, History of Religion, Archaeology of South India and Sri Lanka, ... Also, in an important way, Tamil Nadu Govt. can help
Dravidian studies, i.e., by making PDFs of at least 200 K Tamil books, that are usually without any readership and are in a state of dying. This can be done by TN govt. at a very low cost,
and many past Tamil scholars' works can be saved and be available for research worldwide. For example, for the Tamil studies professor that Harvard will choose.

N. Ganesan, PhD

சீமான் அறிக்கை : 28.10.2017
View this email in your browser
                               
அறிக்கை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்! – சீமான் அறிக்கை நாம் தமிழர் கட்சி

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்குத் தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்க முன்வந்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 27-10-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும் எனும் தமிழ்த்தேசிய இன மக்களின் நீண்டநெடு நாள் கனவிற்குச் செயலாக்கம் கொடுத்து மருத்துவர் ஜானகி ராமன் அவர்களும், மருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களும் அரும்பாடாற்றிக் கொண்டிருக்கிற வேளையில் அவர்களின் பெரும்பணிக்கு வலுசேர்க்கும் விதமாய்த் தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியினைத் தருகிறது. தமிழக அரசின் இவ்வறிவிப்பினை பெருமிதத்தோடு வரவேற்கிறேன்.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டிய காலத்தேவையையும், இவ்வரிய வாய்ப்பை தமிழக அரசானது நழுவவிட்டு விடக்கூடாது என்பதனையும் கடந்த 05-10-17 அன்று விடுத்துள்ள எமது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். இதே கோரிக்கையை உலகம் முழுக்கப் பரவிக்கிடக்கிற இனமானத்தமிழர்கள் பலரும் முன்வைத்தார்கள். அவற்றிற்கு மதிப்பளித்து அக்கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அருமைச் சகோதரர் மாஃபா.பாண்டியராஜன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உளப்பூர்வமான நன்றியினைத் தெரிவிக்கிறேன். இத்தோடு, தமிழுக்கும், தமிழர்க்குமான இதுபோன்ற பெரும்பணிகள் தொடர விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வலைதளம்: https://goo.gl/iYbvus

---
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 - 4380 4084
செந்தில்குமார். கு (+91- 9600 70 9263)
மாநிலச் செய்திப்பிரிவு இணை செயலாளர்

N. Ganesan

unread,
Nov 3, 2017, 9:36:31 AM11/3/17
to மின்தமிழ், vallamai
2017-10-29 7:50 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
சீரிய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்.

ஒரு தமிழர் இந்த இருக்கையினை அலங்கரிப்பதைப் பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்.

சுபா

சீரிய முயற்சிக்கு உதவி செய்துள்ள மாண்புமிகு முதல்வர் பழனிச்சாமி கோவையில் உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வருகை தந்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலை முயற்சி பற்றி நன்றிகூறியுள்ளேன்.

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு 10 கோடி உதவி

உலகின் புகழ்பெற்ற  மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சீனம்,சமஸ்கிருதம்  ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த வரிசையில் இதுவரை தமிழுக்கென்று ஒரு இருக்கை இல்லை என்பதை அறிந்த  அமைக்க அமெரிக்காவில் வாழும் டாக்டர்களான ஜானகிராம், சு.சம்பந்தம் ஆகியோர் ஒரு திட்டத்தை தயாரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதியை பெற்று உள்ளனர்.
இருக்கைக்கு தேவையான 33 கோடியில் இதுவரை  ரூ.6 கோடியே 70 லட்சத்தை ஜானகிராமனும் சம்பந்தமும் சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர்.   இதுவரை சுமார் ரூ.21 கோடியை உலகில் உள்ள பலவேறு தமிழ் அமைப்புகளும் , அமெரிக்கவாழ் தமிழர்களும் நிதியாக திரட்டியுள்ளனர். 
இந்நிலையில்  தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.   இந்நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்காய் அமைவது உறுதியாகியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு நிதி தேவைப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  
மொத்தம் எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, மீதித் தொகையைப் பெற தமிழக அரசே முயற்சிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசின் இந்த அறிவிப்பு தமிழர்கள் அனைவருக்கும்  பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு தமிழர்கள் அனைவருக்கும்  பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.​

------------------------

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 5, 2017, 4:55:56 AM11/5/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com

ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் 25,000 டாலர் நன்கொடை!- ஆர்யா கனடா நிறுவனம் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு வழங்கியது

29 Oct 2017

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, கனடாவில் நடந்த இசை நிகழ்ச்சி மூலம் 25 ஆயிரம் டாலர் நிதியுதவியை ஏ.ஆர்.ரஹ்மான் வழங்க, அ.முத்துலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக்கொள்கின்றனர். உடன் பாடகர் ஸ்ரீநிவாஸ்.

சில மாதங்களுக்கு முன்பு, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கனடா வந்திருந்தார். அப்போது, டொரன்டோ நகரத்து மேயர், ‘கனடாவில் ரஹ்மான் குடியேறவேண்டும்’ என்று மேடையிலேயே அவருக்கு அழைப்பு விடுத்தார். ரஹ்மான் பதில் சொல்லவில்லை. பின்னர் தன் முகநூலில் எழுதும்போது, நகரப் பிதாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ‘தான் தமிழ்நாட்டில் சுற்றத்துடனும், நண்பர்களுடனும், ரசிகர்களுடனும் மகிழ்ச்சியாக வாழ்வதாக’ அறிவித்தார்.

சமீபத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு ரஹ்மான் மறுபடியும் டொரன்டோ வந்திருந்தார். கடந்த 21-ம் தேதி பவரேட் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். இரவு 8 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி சரியாக 11 மணிக்கு முடிவடைந்தது. ஏறக்குறைய 20 பாடல்களை அவரும், குழுவினரும் பாடினர். ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் பாடியபோது பின் திரையில் பச்சை, வெள்ளை, செம்மஞ்சள் வர்ணங்கள் ஓடிய காட்சி மறக்க முடியாதது.

‘என்னை அப்படி அழைக்காதீர்கள்’

சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி, ஹரிசரண், சேஷாத்ரி, ஜோனிடா காந்தி, பென்னி தயால் ஆகியோர் சிறப்பாகப் பாடினர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ‘ரோஜா’வில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ படத்துக்கு நடுவே 25 ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும் பாடல்கள் புதிதாகவே இருந்தன. பார்வையாளர்கள் தங்களை மறந்து ஆடினர்.

‘‘என்னை ‘மோசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைத்து சின்ன வட்டத்துள் அடைப்பது மட்டுமல்ல, மோசார்ட்டுடன் ஒப்பிடாதீர்கள்’ என்று முன்பு கூறியிருந்த ரஹ்மானை இப்போது விடாப்பிடியாக ‘ஆசியாவின் மோசார்ட்’ என அவரது ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

260 ஆண்டுகளுக்கு முன்பு மோசார்ட் இயற்றிய இசைக்கோவைகள் இன்றும் புத்துயர்வு பெற்று ஒலிக்கின்றன. ரஹ்மானின் பாடல் களிலும் புதுமை குறைவதில்லை. மோசார்ட் சிறு வயதிலேயே இசையமைக்கத் தொடங்கிவிட்டார். ரஹ்மானும் 9 வயதிலேயே தன் முதல் பாடலுக்கு இசை அமைத்துவிட்டார். ‘இனிவரும் 100 ஆண்டுகளில் இவரைப்போல இன்னொருவரைக் காண்பது அரிது’ என்று மோசார்ட் பற்றி இசை வல்லுநர் ஒருவர் கூறினார். அது ரஹ்மானுக்கும் பொருந்தும்.

இசை நிகழ்ச்சியின் முடிவில், இதை ஏற்பாடு செய்த ‘ஆர்யா கனடா’ நிறுவனத்தின் அதிபர் கிஷான் நித்தி, ரஹ்மானை மேடைக்கு அழைத்தார். ரஹ்மான் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ், ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார்.

கிஷான் நித்தி, ரஹ்மான், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஆர்யா கனடா நிறுவனத்தின் சார்பில் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்க, அதை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் விஜய் ஜானகிராமனும், நானும் சபையோரின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டோம்.

இந்த நிகழ்ச்சியில் மாறாத வியப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் பற்றியும் கூறவேண்டும். ‘மெர்சல்’ படத்தில் வரும் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை ரஹ்மான் பாடியபோது அரங்கமே எழுந்து ஆடியது. மகிழ்ச்சி கரை புரண்டது. ஆனால் ‘உந்தன் தேசத்தின் குரல்’ பாடல் வரிகளை ரஹ்மான் தொடங்கியபோது ஒரு நிமிடத்தில் சபை அப்படியே உருகி மாற்றம் கொண்டது. அரங்கத்தில் இருந்தவர்களில் 90 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களால் நாட்டைப் பறிகொடுத்த வலியையும் இழப்பையும் உணரமுடியும். அப்படியே நெகிழ்ந்து போயினர்.

டொரன்டோ மேயர் கனடாவுக்கு அழைத்தபோது ரஹ்மான் மறுத்த காரணம் புரிந்தது. அயல்நாடு என்பது விடுதிதானே. சொந்த நாடுபோல வருமா? அவர் தமிழ்நாட்டிலே இருந்து இசையைப் பரப்பட்டும். எங்கே இருந்தால் என்ன? அவர் உலகத்துக்குச் சொந்தமானவர்!

- அ.முத்துலிங்கம்

கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்

N. Ganesan

unread,
Nov 5, 2017, 5:24:17 AM11/5/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
எனக்கு தமிழியல், இந்திய மொழிகளில் இயல்கள், தொல்லியல், கலையியல், ... துறைகளில் வெளிவரும் ஆய்வுகளை நுகரும் துய்ப்பறிவும், அநுபவமும் 40+ ஆண்டுகளாய் உண்டு. இணையத்தில் பலரது ஆய்வுகளையும், சொற்களைப் பற்றியும் இணையம் தோன்றிய நாளில் இருந்து - அப்போது தமிழ் யூனிகோட் எல்லாம் இல்லை - எழுதிவருகிறேன். ஹார்வர்டில் தமிழ்ச் செம்மொழிக்கான இருக்கை சீக்கிரம் அமைய இருக்கும் இந்த நல்வேளையில் இதுபோன்ற, ஆனால் இன்னும் செலவு மிகக்குறைந்த, 10-15 இருக்கைகள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், கொரியா, சீனா, தைவான், ... புகழ்மிக்க சர்வகலாசாலைகளில் அமைத்திட தமிழ்ச் சங்கங்களும், தமிழ்நாடு, இந்தியா, மலாயா, சிங்கை, இலங்கை, ... போன்ற தமிழர் பெருவாரியாக வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் முன்வர வேண்டும்.

செம்மொழி தமிழின் சிறப்பு வையமெல்லாம் ஓங்குக!
ஹார்வர்ட் இன்னும் பல (10-15) தமிழ் இருக்கைகள் அமைந்திட்டால்
இந்தப் பாடல் பொருள் கூடும்.

நா. கணேசன்

மெர்சல் படப் பாட்டு - ஆளப் போறான் தமிழன்!

படம்: மெர்சல்
வரிகள்: விவேக்

குரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

--

பாடல் வரிகள்:-

கோரஸ்:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

 பாடல்:

 ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

சரணம்: 
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2017, 9:24:08 AM11/5/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan
ஆள்போற தமிழன் ஆர்வார்டுக்கு என்ன கொடுத்தான்’னு அறிய ஆவல் 

5 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:23 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Nov 30, 2017, 8:04:53 PM11/30/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Fri, Oct 27, 2017 at 3:00 AM, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:

நற்செய்தி. நன்றி சுரேஷ் குமார். இந்த தருணத்தை உலகத்தமிழ்ர்கள் உன்னதமான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இன்னம்பூரான்

ஹார்வர்ட் தமிழ்ப் பீடம் அமைக்க தமிழ்நாட்டு முதலமைச்சர் முதற்கொண்டு உதவிவருகின்றனர்,
எனவே, சீக்கிரம் இந்தப் பதவி தமிழ்ப் பேராசிரியர் ஒருவரால் அணிசெய்யப்படும் என்பது உறுதி.
இன்னும் 15 தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகள் முதலாம் உலக நாடுகளில் அமைய வேண்டும்.
பெர்க்கிலி தமிழ் இருக்கை அமைய உதவியவன் என்ற முறையில், இதனால் ஏற்படும் நன்மைகள் பல.
உ-ம்: முனைவர் மறைமலை இலக்குவனார் போன்றோர் பெர்க்கிலி வருகை தர உதவியது.

நா. கணேசன்

A good statement from Prof. David Shulman:

Statement by Prof. David Shulman

The initiative to found a Chair for Tamil studies at Harvard is a very welcome one, long overdue. Tamil is one of the world's major languages, and the only South Asian language to have evolved continuously from a very ancient past (some 2000 years of astonishing cultural activity) while remaining a living contemporary language spoken by tens of millions of people.

Its literary tradition is among the finest in human civilization, encompassing marvelous love poetry, epic, philosophical texts, the reflexive sciences of grammar, logic, and poetics, historiography, and an enormous religious literature. An infrastructure for Tamil already exists at Harvard; a chair in Tamil will formalize this humanistic field there and impact upon the study of South Asian civilization in other major academic centers throughout the world.

A great university that offers deep study of Chinese, Arabic, Greek, Hebrew, Persian, and many other critically important languages should find a place for Tamil, which belongs in this prestigious series. In a period when chairs in Tamil studies are endangered in several important universities, for the usual reasons, the creation of a Chair for Tamil at Harvard would be a signal to the academic world that south Indian civilization matters, and that Tamil itself merits the depth of scholarly interest that Harvard, perhaps more than any other institution, can provide.

Dr. David Shulman – Indologist. Professor of Humanistic Studies
– The Hebrew University of Jerusalem, Author of 'Tamil – A Biography' 
 
N. Ganesan

unread,
Feb 7, 2018, 3:31:31 AM2/7/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஹார்வர்ட் தமிழ் இருக்கை: திமுக 1 கோடி ரூ உதவி:

சென்னை : சென்னை சாலிகிராமத்தில்,பத்ம பூஷண் விருது பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஹார்வர்டு பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு திமுக ரூ.1 கோடி நிதி அளிப்பதாக கூறி உள்ளது வரவேற்கதக்கது. பல்வேறு தரப்பினரும் நிதி தர முன்வந்துள்ளனர். எட்டி விடும் தூரத்தில் தான் தமிழ் இருக்கை கனவு உள்ளது. புதியதாக 2,500 தமிழ் சொற்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிட உள்ளோம். உலக அளவில் அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சி மும்முரமாக நடந்து வருகிறது. ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்கும் கனவு இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவு பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

N. Ganesan

unread,
Feb 7, 2018, 7:10:06 PM2/7/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஒரு நாள் சம்பளத்தைக் கொடுக்கும் தமிழாசிரியர்கள்!
https://www.vikatan.com/news/tamilnadu/106688-these-tamil-teachers-gave-their-one-day-salary-for-harvard-tamil-chair.html?artfrm=related_article

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் வழங்கிய தமிழ் ஆசிரியர்!
https://www.vikatan.com/news/tamilnadu/108315-harvard-tamil-chair-retired-tamil-teacher-donated-rs-5-lakh.html?artfrm=related_article

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தன்னுடைய
பங்களிப்பாக ஐந்து லட்சம் ரூபாயை வழங்கி பலருக்கும் முன் மாதிரி ஆகி
இருக்கிறார் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 90 வயதாகும் ஓய்வுபெற்ற தமிழ்
ஆசிரியர் கோ.இராமசாமி.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இதற்காக அங்கு வசிக்கும் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு
பங்களித்துள்ளார்கள். தமிழக அரசு பத்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
தமிழ்த் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், விஷால்,
ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் நிதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் ஆர்.வி. பட்டியில் வசிக்கும்
ஓய்வுபெற்ற 90 வயதான தமிழ் ஆசிரியர் இராமசாமி, தன்னுடைய பங்களிப்பாக
ஐந்து லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிப்பதாக தமிழ் இருக்கைக் குழுவுக்கு
தகவல் அனுப்பினார். ஆசிரியருக்கு நன்றி சொல்லவும், நிதியைப் பெறவும்
ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழுவை சேர்ந்தவர்கள் நேரில் வந்து, அவரைச்
சந்தித்தனர். ஆசிரியர் ராமசாமி அவர்களை வாழ்த்தி, நிதியை வழங்கினார்.
''தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் இந்த உலகிற்கு எடுத்துக்கூற
வேண்டும், அதற்கு ஹார்வார்டு தமிழ் இருக்கை செயல்படும் என்பதால் என்னால்
முடிந்த பங்களிப்பு இது'' என்று ஆசிரியர் ராமசாமி கூறினார்.

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கு இன்னும் பத்து கோடி ரூபாய்
தேவைப்படும் சூழலில், மதுரையை சேர்ந்த ஆசிரியரின் பங்களிப்பு அனைவரின்
கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதேபோல் இதே பகுதியில் ஆட்டோ ஓட்டும்
வேங்கடசாமி என்பவர், தன் மகள் மூலம் 1070 ரூபாய் ஹார்வர்டு பல்கலைக்கழக
தமிழ் இருக்கைக்கு அனுப்பி பலரின் பாராட்டுகளை பெற்றார்.

வேந்தன் அரசு

unread,
Feb 7, 2018, 10:35:26 PM2/7/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
இன்றைய நாளில் இன்னும் 0.4 மில்லியன் தேவை

5583 பேரில் 810 பேர்தவிர பிறர் 500 வெள்ளி அளவுவரை சிறு நன்கொடைகளைகொடுத்து ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

7 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:09 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Feb 8, 2018, 9:16:52 AM2/8/18
to vallamai, மின்தமிழ்
ஆர்வர்டு ஒரு போலி பல்கலைகழகம்

தமிழர்களின் கலாசாரகூறுகளை திருடி அப்ராப்ரியேட் செய்துவிடுவார்கள்.

இது ஒரு மிகப்பெரும் ஊழல் முயற்சி

சிவ அய்யாதுரை கடும் தாக்குதல்

வேந்தன் அரசு

unread,
Feb 8, 2018, 12:20:02 PM2/8/18
to vallamai, மின்தமிழ்
அய்யாத்துரையின் உளறலை எவனும் சட்டைசெய்யவில்லை. ஈமெயில் என்ற சொல்லைக்கண்டுபிடித்ததால் ஈமெயிலையே தாந்தான் கண்டுபிடித்ததாக தற்புகழ்ந்துகொண்டு திரிகிறான்,

8 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:16 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 6, 2018, 10:09:17 AM3/6/18
to மின்தமிழ், vallamai
40 கோடி திரண்டது.

திருப்பூரில் இருந்து:

தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் ரூ.81.58 லட்சம் நிதி வழங்கிய கவிஞர் கவிதாசன், திருப்பூர் கொங்கு விளையாட்டுக் குழுத் தலைவர் என்.வேலுசாமி, கவுரவத் தலைவர் ஏ.வெள்ளியங்கிரி உள்ளிட்டோர்.

‘தி இந்து’ செய்தி எதிரொலியால், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கொங்கு மண்டலத்தில் ரூ.92 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரூ.1 கோடி இலக்கு எட்டப்படும் எனவும் கவிஞர் கவிதாசன் தெரிவித்தார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய கல்வித் துறையின் ஒரு அங்கமாக தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில், அமெரிக்காவில் வாழும் மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தொடர்ந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கோவையைச் சேர்ந்த கவிஞர் கவிதாசன் உள்ளிட்டோர், கொங்கு மண்டலத்தில் ரூ.1 கோடி நிதி திரட்ட முயற்சி மேற்கொண்டனர். இதுதொடர்பாக ‘தி இந்து'வில் செய்தி வெளியானது. இந்தநிலையில் விரைவில் இந்த இலக்கு எட்டப்படும் என கவிஞர் கவிதாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைவதன் மூலம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்யப்படும்.

இதுதொடர்பாக ‘தி இந்து'வில் செய்தி வெளியானது. இதையடுத்து, கொங்கு மண்டலத்தில் ரூ.1 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தோம். ஏற்கெனவே தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் ரூ.10.58 லட்சம் வழங்கினோம். அண்மையில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம், திருப்பூர் கொங்கு விளையாட்டுக் குழு உள்ளிட்ட நிறுவனங்கள், கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ.81.58 லட்சத்தை ஒப்படைத்தோம். பல்வேறு அமைப்பினர், கல்வி, தொழில் நிறுவனங்கள் நிதியளித்து வருகின்றன. எனவே, விரைவில் ரூ.1 கோடி இலக்கை அடைவோம். இதற்காக 'தி இந்து'வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

2018-02-09 19:20 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைய டாப் லைட் திரு.வேலுசாமி அண்ணா , திருமதி கௌசல்யாதேவி வேலுசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் கொங்கு அறக்கட்டளையின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றி திருப்பூர் வாழ் தொழில் முனைவோரின் பங்களிப்பாக ரூபாய். 65 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தமிழின் தொன்மையையும் மாண்பையும் காக்க நிதியளித்த அனைத்து மொழியார்வலர்களுக்கும் அன்பும் மகிழ்வும் நன்றியும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 6, 2018, 12:34:01 PM3/6/18
to vallamai, மின்தமிழ்
தாயகத்தமிழர்களிடம் கையேந்தும் நிலையில் அமெரிக்கத்தமிழர்கள் இருப்பது வெட்கம்,

6 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:08 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

jawahar premalatha

unread,
Mar 7, 2018, 12:34:07 AM3/7/18
to vall...@googlegroups.com
 பாராட்டுக்கள். தமிழ் இனி உலகை ஆளும். அதில் தமிழ் படித்த தமிழர்கள் பணியாற்ற வேண்டும். ஏதோ ஒரு நெருடல்...... அரசு கலைக் கல்லூரி களில் தமிழ் துறையில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு சரியான வகுப்பறைகளோ அடிப்படை தேவையான கழிவறைகளோ, கல்லூரிக்குள் நல்ல பாதைகளோ இல்லை. தமிழ் படிக்க வருபவர்கள் மிகவும்  ஏழ்மையில் வாடுபவர்கள்.  அவர்களுக்கு புத்தகம்  வாங்க கூட வழியில்லை. கல்லூரி சாலையைச் சரி செய்ய சொல்லி அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் பேராசிரியர்கள் நடையாய் நடந்து விட்டோம்.. ..

On Tue, 6 Mar 2018, 11:04 p.m. வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:
தாயகத்தமிழர்களிடம் கையேந்தும் நிலையில் அமெரிக்கத்தமிழர்கள் இருப்பது வெட்கம்,
6 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:08 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
40 கோடி திரண்டது.

திருப்பூரில் இருந்து:

தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் ரூ.81.58 லட்சம் நிதி வழங்கிய கவிஞர் கவிதாசன், திருப்பூர் கொங்கு விளையாட்டுக் குழுத் தலைவர் என்.வேலுசாமி, கவுரவத் தலைவர் ஏ.வெள்ளியங்கிரி உள்ளிட்டோர்.

‘தி இந்து’ செய்தி எதிரொலியால், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கொங்கு மண்டலத்தில் ரூ.92 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரூ.1 கோடி இலக்கு எட்டப்படும் எனவும் கவிஞர் கவிதாசன் தெரிவித்தார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய கல்வித் துறையின் ஒரு அங்கமாக தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சியில், அமெரிக்காவில் வாழும் மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தொடர்ந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கோவையைச் சேர்ந்த கவிஞர் கவிதாசன் உள்ளிட்டோர், கொங்கு மண்டலத்தில் ரூ.1 கோடி நிதி திரட்ட முயற்சி மேற்கொண்டனர். இதுதொடர்பாக ‘தி இந்து'வில் செய்தி வெளியானது. இந்தநிலையில் விரைவில் இந்த இலக்கு எட்டப்படும் என கவிஞர் கவிதாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை அமைவதன் மூலம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்யப்படும்.

இதுதொடர்பாக ‘தி இந்து'வில் செய்தி வெளியானது. இதையடுத்து, கொங்கு மண்டலத்தில் ரூ.1 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தோம். ஏற்கெனவே தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் ரூ.10.58 லட்சம் வழங்கினோம். அண்மையில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம், திருப்பூர் கொங்கு விளையாட்டுக் குழு உள்ளிட்ட நிறுவனங்கள், கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ.81.58 லட்சத்தை ஒப்படைத்தோம். பல்வேறு அமைப்பினர், கல்வி, தொழில் நிறுவனங்கள் நிதியளித்து வருகின்றன. எனவே, விரைவில் ரூ.1 கோடி இலக்கை அடைவோம். இதற்காக 'தி இந்து'வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

2018-02-09 19:20 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:

ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைய டாப் லைட் திரு.வேலுசாமி அண்ணா , திருமதி கௌசல்யாதேவி வேலுசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் கொங்கு அறக்கட்டளையின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றி திருப்பூர் வாழ் தொழில் முனைவோரின் பங்களிப்பாக ரூபாய். 65 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தமிழின் தொன்மையையும் மாண்பையும் காக்க நிதியளித்த அனைத்து மொழியார்வலர்களுக்கும் அன்பும் மகிழ்வும் நன்றியும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2018, 10:24:45 AM3/8/18
to மின்தமிழ், vallamai
2018-03-06 9:33 GMT-08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தாயகத்தமிழர்களிடம் கையேந்தும் நிலையில் அமெரிக்கத்தமிழர்கள் இருப்பது வெட்கம்,

அப்படிச் சொல்ல இயலாது. கோயில்கள் கட்டுவது என்றால் பணம் ஒரே நாளில் திரளும்.

ஆனால், தமிழ் திராவிடாலஜிக்கு உயர் பல்கலை ஆய்வுகளுக்கு யார் கொடுப்பார்?
கால்ட்வெல் வேள்நம்பி, கார்த்தி (சேலம்), அன்பரசு நாச்சிமுத்து பெருந்தொகை
உதவியதை அறிவேன். கொங்குநாட்டில் நிதியில் எங்கள் குடும்ப நல்கையும் சேர்த்தி.

சிறு சிறு தொகையாக பொதுமக்களிடம் இம்முறையில் சேர்த்து 1 கோடி ஹார்வர்டுக்கு அளித்தது முன்னோடி முயற்சி.
எப்பொழுதும், 2 ஆண்டுக்கு ஒரு முறை, இவ்வாறு நிதி திரட்டி உலகின் சிறந்த பல்கலைகளில்
திராவிடாலஜி ரெஸெர்ச்சுக்கு பணம் திரட்டி ஆய்வு இருக்கைகளை நிறுவலாம்.

15-20 இருக்கைகள் மேலை நாட்டுச் சீரான பல்கலைகளில் தமிழர்கள், அரசுகள் முயன்றால்
அமைப்பது எளிது. ஹூஸ்டன் பல்கலை, ரைஸ் யுனிவெர்ஸிட்டி பிரஸிடெண்ட்ஸ்
வருகிறார்கள். ஏப்ரல் மாதம் ஒரு இருக்கை அமைக்க எவ்வளவு எனக் கேட்க உள்ளோம்.
ஹூஸ்டனில் தமிழ்/திராவிடவியல் அறிக்கை அமையக்கூடும். 

நா. கணேசன்
 
வேந்தன் அரசு

unread,
Mar 10, 2018, 12:20:22 AM3/10/18
to vallamai, மின்தமிழ்

8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:24 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

15-20 இருக்கைகள் மேலை நாட்டுச் சீரான பல்கலைகளில் தமிழர்கள், அரசுகள் முயன்றால்
அமைப்பது எளிது. ஹூஸ்டன் பல்கலை, ரைஸ் யுனிவெர்ஸிட்டி பிரஸிடெண்ட்ஸ்
வருகிறார்கள். ஏப்ரல் மாதம் ஒரு இருக்கை அமைக்க எவ்வளவு எனக் கேட்க உள்ளோம்.
ஹூஸ்டனில் தமிழ்/திராவிடவியல் அறிக்கை அமையக்கூடும். 

செயற்பாலது.
 
N. Ganesan

unread,
Mar 10, 2018, 7:46:06 AM3/10/18
to வல்லமை
ரேணு கட்டோரை நன்கறிவேன். ஹ்யூஸ்டன் பல்கலை தரத்தையும் வளத்தையும் பெரிதும் வளர்த்தவர்.
வருகிறேன் என்று சொல்லியுள்ளார். அவரது செவ்வி. ஐ.நா.வில் இருந்த சி.வி. நரசிம்மன் (எம்.எஸ்ஸை
ஐநாவுக்கும், இங்கும் அழைத்தவர்), பின்னர் நா. மகாலிங்கம், இருந்த பதவி மீனாக்ஷி கோயில் சேர்மன்,
இப்போது சொக்கலிங்கம் கண்ணப்பன் தலைமை ஏற்கிறார். முதல் முயற்சியாக பெர்க்கிலி,
பின்னர் ஹார்வர்ட், அதற்கிடையிலே நாச்சிமுத்து சாக்ரடீஸ் போன்றோர் கொலம்பியாவில் நடத்தின
பேச்சுகள், பாலாவின் ஸ்டோனி ப்ரூக், டொராண்டோ, ... ஒரு அறிமுக உரை நான் கொடுக்கிறேன்.
பார்ப்போம்.

ரேணுவின் செவ்வி:

NG

N. Ganesan

unread,
Mar 22, 2018, 8:54:16 PM3/22/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Caldwell Velnambi, amu...@gmail.com, Bala Swaminathan, Sam Kannappan, Chitra Mahesh, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Maravanpulavu K. Sachithananthan
தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு,

ஹார்வர்டில் தமிழ் சேருக்கான ரூ. 40 கோடி நல்ல முறையில் விரைவாகத் திரட்டப்பட்டுள்ளது, அதற்கான செய்தி மடல் இணைத்துள்ளேன்.

இவ்வளவு பெரிய தொகையாக இல்லாமல் இன்னும் 20 சேர்கள் திராவிடாலஜி, ஒப்பீட்டு த்ராவிடவியல், தமிழ், ,,,, ஆய்வுகளுக்கு
ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா,  அவுஸ்திரேலியா... நாடுகளில் அமைய வேண்டும். கோவில் கட்டுவது என்றால் மில்ல்யன் கணக்கில் $ 
உடனே சேருகிறது. இதற்கும் குறைவாகவே மற்ற பல்கலைகள் கேட்கும். அதே போல, தமிழன்னைக்கு ஆய்வுப் பீடங்கள் தரமான பல்கலைகளில் அமைய தமிழ்ச்
சங்கங்கள் விடாது முயற்சி எடுக்க வாழ்த்துகள்.

நா. கணேசன்

2017-10-27 2:56 GMT-07:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
http://www.vikatan.com/news/tamilnadu/106106-tamil-chair-likely-to-be-formed-in-harward-university.html
அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முயன்று வந்தனர். இந்நிலையில், 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. 
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில், தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாக தர ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுரேஷ் குமார் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Newsletter_Mar15 FINAL FINAL PDF.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages