மிணாளன் மிணாட்டி வேர் பொருள்
கல்வெட்டில் மிணாளன், மிணாட்டி ஆகிய சொற்கள் கணவன் மனைவியை குறிக்க பயன்கொள்ளப்பட்டுள்ளன . இவை மணாளன், மணாட்டி ஆகிய சொற்களில் இருந்து திரிந்ததாக தலைமாறாக சொல்கின்றனர் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேராகார முதலியில்.
முல் > முள் > முட்டு > முத்து > முத்தம் = பொருந்துதல் கருத்து. முள் இகர திரிபில் மில் > மிள் > மிண் ஆகும். மிணாளன் - மிணாட்டி ஒருவரை ஒருவர் கூடும் உரிமை உள்ள கணவன், கணாட்டி (மனைவி) ஆவர். கணவன் என்றால் மனைவியொடு கூடுபவன் என்கிறது அகராதி.
தமிழில் மிணாளன், மிணாட்டி ஆகிய சொற்கள் தவிர வேறு சொற்கள் இல்லை ஆனால் இந்தி மொழியில் மிலா, மிலானா ஆகிய சொற்கள் பண்டு வடக்கே பேசப்பட்ட தமிழின் எச்சமாக இருக்க வேண்டும்.
मिलना milana > mingle, add , match கல, கூட்டு, பொருந்து
முலாகாத் मुलाकात · 1. encounter, meet, சந்தி.