அறிஞர் அண்ணா அவனி வந்த நாள்!

555 views
Skip to first unread message

Megala Ramamourty

unread,
Sep 14, 2014, 6:21:18 PM9/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

தமிழக அரசியல் வரலாற்றில் தந்தை பெரியாரின் தொண்டராய்த் திராவிடர் கழகத்தில் (நீதிக் கட்சியே பின்பு திராவிடர் கழகமாக மாறியது) களமிறங்கிய காஞ்சிபுரம் திரு. நடேசன் அண்ணாதுரை அவர்கள் பின்பு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாய்த் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியதும், தி.மு.க என்று அழைக்கப்பட்ட/படுகின்ற அவ்வரசியல் கட்சி பின்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்ததும் தமிழர்களாகிய நாம் நன்கறிந்ததே.


மிகச் சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன்வாய்ந்த திரு. அண்ணாதுரை அவர்கள் ’அறிஞர் அண்ணா’ என்று கழகத் தொண்டர்களாலும், தமிழக மக்களாலும் அன்போடும், ஆசையோடும் அழைக்கப்பட்டவர்.


தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் ’spontaneous overflow’ என்று வியக்கத்தக்க வகையில் ஆற்றொழுக்காகப் பேசக்கூடியவர் அண்ணா. அதுமட்டுமா? மொழிபெயர்ப்புக் கலையிலும் வித்தகர்!

அதற்கான சான்று…


ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.


இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையனான இராபர்ட் கிளைவ் பின்பு இந்தியாவையே கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாக மாறினான் எனும்பொருளில் “He came to India as Robert Clive and became Rober Clive” என்று தன் பேச்சினூடே சொல்விளையாடல் நிகழ்த்தினார் இலட்சுமணசாமி முதலியார். அவையிலிருந்தோர் அனைவரும் இதனை மிகவும் ரசித்ததோடல்லாமல் அண்ணா இத்தொடரை எவ்வாறு தமிழில் மொழிபெயர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் முதலியாருக்கு அருகில் நின்றிருந்த அண்ணாவையே விழி இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனராம்.


அண்ணாவோ, ”திரு. கிளைவாக இந்தியா வந்தவன் பின்பு திருடன் கிளைவாக மாறினான்” என்று அநாயாசமாக அதனை மொழிபெயர்க்கவும் அனைவரும் வியப்பில் விழிவிரிய விண்ணதிரக் கரவொலி எழுப்பினராம். அண்ணாவின் மொழிபெயர்ப்புத் திறன்கண்ட முதலியாரும் அவரை ஆரத்தழுவித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.


அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை அவர் அரசியல் தலைவராக மட்டுமல்லாது திரைப்பட வசனகர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் முத்திரை பதித்துத் தமிழ்நாட்டு ‘பெர்னார்ட்ஷா’ எனும் சிறப்புப் பெற்றவர்.


“வேலையற்றதுகளின் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்; சாலையோரத்திலே சலசலப்பு; மரத்திலே பிணம்; மடியிலே பணம்; அரசே இது காலத்தின் குறி” என்பது (எஸ்.எஸ். ராஜேந்திரன், கே. ஆர். ராமசாமி போன்றோர் நடித்த) ’சொர்க்க வாசல்’ எனும் படத்தில் அவர் எழுதிய புகழ்பெற்ற வசனம்.


மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்பது அண்ணாவின் மற்றொரு புகழ்பெற்ற வசனம்.


தன் மேடைப் பேச்சுக்களால் அனைவரையும் சொக்கவைத்தவர் ஒருவர் தமிழகத்தில் உண்டென்றால் அது அண்ணாவாகத்தான் இருக்கமுடியும்!!


ஒருமுறை அரசியல் கூட்டமொன்றில் பேசுவதற்காக அண்ணா ஓரிடத்திற்குச் (ஊரின் பெயர் நினைவில்லை) செல்லவேண்டியிருந்தது. அவர் வருவதாகச் சொன்னநேரம் கடந்துவிட்டிருந்தது; அவர் பேச்சைக் கேட்க ஆவலோடு வந்தவர்களோ இரவு எத்தனை மணியானாலும் சரி…அண்ணாவின் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் அவ்விடம் விட்டு நகர்வது என்ற உறுதியோடு அங்கேயே பாய், தலையணை சகிதம் உட்கார்ந்துவிட்டனர். கடைசியாக விழா நாயகர் ‘அண்ணா’ வந்தார். தன் கடிகாரத்தைப் பார்த்தார். அப்போது மணி இரவு 10:30.

’சர்’ என்று யாருமறியாவண்ணம் மூக்குப் பொடியை உறிஞ்சினார். :-) தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் வெண்கலக் குரலில்

”மாதமோ சித்திரை

மணியோ பத்தரை

உங்களைத் தழுவுவதோ நித்திரை  

மறக்காது இடுவீர் எமக்கு (திமுக) முத்திரை” என்றாரே பார்க்கலாம். எழுந்த கரவொலியில் வானமே அதிர்ந்ததாம்! 


 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்

போன்றவை அண்ணாவின் புகழ்பெற்ற வேறுசில சொல்லாடல்கள். இவற்றில் ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்பது திருமூலரின் திருமந்திரம்; அண்ணா இதனை அடிக்கடிப் பயன்படுத்தியதால் பலர் இது அண்ணா உருவாக்கிய சொற்றொடர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அண்ணாவின் மொழியாளுமை மக்களைக் கட்டிப்போட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.


அரசியலிலே அண்ணாவை ஓர் மிதவாதி என்றே குறிப்பிடலாம். எதிலும் தீவிரவாதப் போக்கை அவர் கைக்கொண்டதில்லை. (அதனை அவருடைய குறையாகவும் சிலர் விமரிசித்தனர்.) அரசியலில் எதிர்க்கட்சியினரையும் எதிரிகளாய் எண்ணாமல் அவர்களோடும் அன்பாகப் பழகியவர் அவர். தரக்குறைவான சொற்களால் யாரையும் விமரிசிக்காதவர்; அரசியலிலும் நாகரிகத்தைப் பேணியவர்.


கடவுள் மறுப்பிலும் பெரியார் அளவிற்கு அவர் முனைப்புக் காட்டினாரில்லை. நான் ”தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்பதே அண்ணாவின் கொள்கையாக இருந்தது. (It sounds he must be an Agnostic like Pandit Nehru.) :-)


தமிழக முதலமைச்சராக இரண்டாண்டுகள்கூட முழுதாகப் பதவி வகிக்கவில்லை அண்ணா என்பது மிகவும் வருந்தத்தக்கது. எனினும், தான் பதவியிலிருந்த சிறிது காலத்திலேயே ‘மதராஸ்’ எனும் பெயரை மாற்றித் ’தமிழ்நாடு’ எனும் புதிய பெயரைத் தமிழகத்திற்குத் தந்தார். 1968-இல் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.


அசாதாரணத் திறமைகளும், பல்துறை அறிவும், பகட்டற்ற எளிமையும் கொண்ட அறிஞர் அண்ணா எப்போதும் படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவாராம் (he was an avid reader). தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து எமனின் வரவை அவர் எதிர்பார்த்திருந்த வேளையிலும்கூடத் தன் மரணம் பற்றிக் கவலைப்படாமல் தன் தலைமாட்டில் வைத்திருந்த புத்தகங்களைப் படித்துமுடிக்காமல் போகப் போகிறோமே என்றுதான் கலங்கினாராம். :-(


தன் கவிதைகளால் பாமரர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பாரதிபோல், தன் தனித்தன்மை வாய்ந்த மேடைப் பேச்சுக்களாலும், அற்புதமான எழுத்துக்களாலும் பாமர மக்களின் உள்ளங்களில் பாசமிகு ’அண்ணனாக’ இடம்பிடித்தவர் அறிஞர் அண்ணா.


அவருடைய பிறந்தநாளான (செப்.15) இன்று அவருடைய நினைவைப் போற்றுவோம்!


நண்பர்கள் அனைவரும் அறிஞர் அண்ணாவைக் குறித்து நீங்கள் அறிந்த கருத்துக்களை இவ்விழையில் பகிர்ந்துகொள்ளுங்கள்!

(சிவகாமிப் பாட்டியின் பேரனிடமிருந்து அதிகத் தரவுகளை எதிர்பார்க்கிறேன்.) :-))


அன்புடன்,

மேகலா

 


வேந்தன் அரசு

unread,
Sep 14, 2014, 8:06:40 PM9/14/14
to vallamai, மின்தமிழ்
(புகைஇலை)நீறு அணிந்தால் நோய் வரும் என்பதை கற்காவிட்டாலும் அவர் அறிஞரே

14 செப்டம்பர், 2014 6:21 பிற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Sep 14, 2014, 10:18:56 PM9/14/14
to mint...@googlegroups.com, vallamai


On Sunday, September 14, 2014 7:06:46 PM UTC-7, singanenjan wrote:

இலங்கைத் தமிழரைப் பற்றி அண்ணா 1964-ல் எழுதியது:




நா. கணேசன்



Inline image 1

2014-09-15 7:22 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//சர்.ஏ.ராமசாமி
​ முதலியாரோ!!//

அறிஞர் அண்ணா மொழிபெயர்த்தது சர். ஏ. இராமசாமி முதலியாரின் ஆங்கில உரையைத்தான். நான்தான் இவரோடு பிறந்த இரட்டையரும் (twin brother), சிறந்த மருத்துவருமான சர். இலட்சுமணசாமி முதலியாரின் பெயரைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டேன். மன்னிக்க!

சர். இலட்சுமணசாமி முதலியார் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குப் பிரசவம் பார்த்தார் என்று சொல்லப்படுகிறதே...உண்மையா இந்திரரே?

அன்புடன்,
மேகலா

2014-09-14 21:29 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:


2014-09-15 3:51 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
ஒருசமயம், சென்னையில் ஒருவிழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றவிருந்த சிறந்த கல்வியாளரான திவான் பகதூர் சர். இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.


சர்.ஏ.ராமசாமி
​ முதலியாரோ!!

தெளிவுபடுத்தவும்

மதஎசுஇந்திரன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 14, 2014, 11:28:56 PM9/14/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

தேமொழி

unread,
Sep 15, 2014, 2:01:58 AM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

எனக்கு விவரம் புரிந்த வயதில் அண்ணா உயிருடன் இல்லை.

ஆனால் கழக கட்சிகள் அவர் நினைவை மக்களிடம் வைப்பதில் பெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் 

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

........

முதல் கழக முதல்வரும் அவர் பெயரில் தொடங்கிய கழகத்தின் இன்றைய முதல்வரும்

[அவர் நினைத்தாரா இது நடக்குமென்று... அவர் நினைத்தாரா இது நடக்குமென்று?]

அண்ணாவின் கடிதமொன்று...தகவல்கள் இணையத்தில் இருந்து 




நன்றி http://sangam.org/wp-content/uploads/2013/09/Annas-undated-letter-to-singer-S.C.Krishnan-circa-1949.jpg

..... தேமொழி

Ravi Subramanian

unread,
Sep 15, 2014, 3:02:50 AM9/15/14
to vallamai, மின்தமிழ், crazy mohan, eramurukan ramasami, keshav keshav, isaikkav...@googlegroups.com

வணக்கம் வாழியநலம்

ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம்.

அமைதியாக் புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன்.

பார்க்க, ரசிக்க.

சு.ரவி.

2AF87934-9E19-4099-927F-B59DFE82D10B


2014-09-15 3:51 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Sep 15, 2014, 7:02:12 AM9/15/14
to vallamai, மின்தமிழ்
அண்ணாவின் கோட்டோவியத்தை அழகாக வரைந்திருக்கின்றீர்கள் திரு. சு. ரவி. பாராட்டுக்கள்!

அன்புடன்,
மேகலா

You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/GWptKTdBvSE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Sep 15, 2014, 7:04:24 AM9/15/14
to மின்தமிழ், vallamai
பாராட்டுக்கும், மின் தமிழ் மேடையில் இக்கட்டுரையை இணைக்கப் பரிந்துரை செய்தமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சுபா.

அன்புடன்,
மேகலா

2014-09-15 3:13 GMT-04:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​மிக நல்ல முயற்சி மேகலா. பாராட்டுக்கள்.

இந்தக் கட்டுரையை நம் மின்தமிழ் மேடையில் இணைத்து வைக்க பரிந்துரைக்கின்றேன்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 15, 2014, 7:17:59 AM9/15/14
to vallamai, மின்தமிழ்
கம்பரசம் படித்த போது கமபன்மேல் வெறுப்பு ஏற்பட்டது
சங்கப்பாடல்கள் படிக்கும் போது அது ஒழிந்து அண்ணாவின்மேல் வெறுப்பு ஏற்பட்டது

Ravi Subramanian

unread,
Sep 15, 2014, 8:06:00 AM9/15/14
to vallamai

Thanks Ms Mekala.

Su.Ravi

N. Ganesan

unread,
Sep 15, 2014, 9:56:59 AM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அறிஞர் அண்ணா மீது சில criticism-s உண்டு. மேடைப் பேச்சுக்களால் பொதுஜனங்களைக்
கவர்ந்த விதம் அலாதியானது. வெகுஜன மக்கள் தொடர்பு சாதனங்களும், மின்சாரமும்
எல்லா கிராமம், சிறுநகர்களுக்கு சென்ற காலத்தில் ஜனநாயகப் படுத்தினார். பள்ளிகள்
எல்லோருக்கும் கல்வி என அளித்ததால் செந்தமிழ் பற்றி மக்கள் கேட்க விருப்பப்பட,
அதை அரசியலில் அறுவடை செய்தார்.



அண்ணாவின் நிரந்தரமான பங்களிப்பு என்று பார்த்தால் இந்தியாவில் தமிழ், தமிழர்
என்று பார்க்கச் செய்தார். ஆங்கிலத்தை இந்தியாவில் நிரந்தரமாக இடம்பெறச் செய்தார்.
நல்ல கட்டுரை ஆங்லேஷவர் ஐயர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதினார். எடுத்துத் தருகிறேன்.
அதனால் கொட்டும் பல பில்லியன் $ மத்திய கிழக்கு நாடுகளில் கல்நெய் வாங்க
முடிகிறது. இல்லையெனில் ஒரு $ 100 ரூபாய் என்றாகி ஆண்டுகள் பல சென்றிருக்கும்.

இந்தியாவில் ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் இந்தி அவ்விடத்தில் உட்கார்ந்துகொள்ளும்
என்று யோசித்துச் செயல்பட்டார். இப்பொழுது திராவிடக் கட்சிகள் கல்வித்தந்தைகளுக்கு
பள்ளிக் கல்வியும், கல்லூரிக்கல்வியும் பெரும் வருமானம் உள்ள தொழிலாக விற்றுவிட்டனர்.
தமிழ் அடுத்த தலைமுறைக்கு செல்லுமா? - கான்வெண்ட் பள்ளிகளால் என்பதே இன்றைய
கேள்வி. ஜோசியம், பஜனை, சினிமா, இணையம் - ஒருவேளை உதவலாம். தமிழ்த்
தேசியமும் எல்லாக் கக்ஷிகளின் கொள்கைகளைச் சேர்த்த கிச்சடியாக உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 15, 2014, 10:34:22 AM9/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, crazy...@gmail.com, eramu...@gmail.com, kama...@gmail.com, isaikkav...@googlegroups.com, Santhavasantham
On Monday, September 15, 2014 12:02:50 AM UTC-7, Ravi Subramanian wrote:

வணக்கம் வாழியநலம்

ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம்.

அமைதியாக் புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன்.


நல்ல ஓவியம், திரு. ரவி. அண்ணா யேல் பல்கலை வந்த போது எடுத்த மூன்று படங்கள்.
யேல் சென்னையில் பருத்தி வியாபாரத்தில் பணம் ஈட்டிய ஆங்கிலேயர்.
தான் பார்த்தே இராத அமெரிக்காவில் சர்வகலாசாலை நாட்ட நிதியளித்தார்.

நா. கணேசன்

உங்கள் ஓவியத்தின் அசல்:





 














 










 













பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 15, 2014, 10:51:45 AM9/15/14
to வல்லமை, மின்தமிழ்
ரொம்ப அருமையான பகிர்வு மேகலா!.. கருத்துக்களை கோர்வையாகத் தந்த விதம் அருமை!`...கட்டுரையை, மிகச் சரியான கோணத்தில் தந்திருக்கிறீர்கள்!.. பாராட்டுக்கள்..

///நண்பர்கள் அனைவரும் அறிஞர் அண்ணாவைக் குறித்து நீங்கள் அறிந்த கருத்துக்களை இவ்விழையில் பகிர்ந்துகொள்ளுங்கள்!////

என்று தாங்கள் சொன்னதால், எனக்குத் தெரிந்த சில தகவல்கள்..

மேடையில் பேசுவதில் அறிஞர் அண்ணாவின் திறம் குறித்து, என் தந்தை கூறக் கேட்ட நிகழ்வொன்று,

மதுரையில், என் தந்தை படித்த கல்லூரியில் உரையாற்ற வந்த போது, அறிஞர் அண்ணாவை சோதிப்பதற்கென்றே 'கல்' என்ற தலைப்புத் தந்தார்களாம்.. ஆனால் அதை 'படி' என்ற பொருளில் கையாண்டு அவர் ஆற்றிய உரை, மாணவர்கள் மத்தியில் அவருக்கு அளப்பரிய புகழை பெற்றுத் தந்ததாம்!..

ஒரு முறை ஒரு பெரிய அரசியல் தலைவர்,  'I is the..'என்று துவங்கி பேசி விட, அதை கிண்டல் செய்த மற்றவர்களை அறிஞர் அண்ணா கண்டித்தார் என்றும், அப்போது அவர்கள், அவ்வாறு துவங்கும்  ஆங்கில வாக்கியம் ஏதேனும் உண்டா என்று கேட்க அதற்கு,  'I is the ninth letter of English alphabet' என்று கூறினார் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போல்,  'because' என்பது மூன்று முறை தொடர்ந்து வரும் வாக்கியமும் ( No sentence ends in because, because, because is a conjunction) அவர் கொடையே என்று படித்த நினைவு!..

 என் தனிப்பட்ட நினைவொன்று இங்கே பகிரத் தோன்றுகிறது...   மதுரை மாவட்ட அளவில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில் அறிஞர் அண்ணாவைப் பற்றி எழுதியே நான் முதல் பரிசு வாங்கினேன்.. அது தமிழக அரசின் கல்வித் துறையால் நடத்தப்பட்டது. அப்போதைய கல்வி அமைச்சர் திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி அவர்கள் கரங்களால், என் முதல் சான்றிதழ் வாங்கினேன். நிகழ்ச்சி நடந்தது, மதுரை ராம்விக்டோரியா மன்றத்தில்.

சின்ன வயதிலிருந்தே எப்போதும் ஒலி பெருக்கியில் கேட்டுக் கேட்டு மனப்பாடமான பாட்டு ஒன்று.


அற்புதமான பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களை மீண்டும் தெரிவிக்கிறேன்!.. திரு.ரவி அவர்களின் கோட்டோவியமும் அருமை!..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-15 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
​           

Kaviri Maindhan

unread,
Sep 15, 2014, 2:13:41 PM9/15/14
to vallamai, Groups

பேரறிஞர் அண்ணா..


பிறந்தநாள் இன்றுதான் எனும்போதே ஏதோ ஒரு பந்தம் எழுகிறதே உள்ளத்தில்! அவரை நேரில் பார்த்த ஞாபகங்கள் இல்லை! அவரின் நெஞ்சார்ந்த உரைகேட்ட பாக்கியமுமில்லை! அவரின் ஆற்றல்மிக்க அரசாட்சியை அருகிருந்து பார்த்ததில்லை! போற்றுகிறார்.. நாட்டில் உள்ளோர் பலருமே என்பதைவிட பலமான காரணங்கள் ஏதுமில்லை!  மறக்கத்தான் முடியாத மாணிக்கம் அவர்!  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று வார்த்தைகளில் சூட்சுமங்கள் நிறையவைத்து எதிர்ப்போரையும் தன் வசமாக்கிய தமிழ்மகன்! மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்றால் அது அண்ணா!  எந்த ஒரு கருத்தையும் எப்படி எடுப்பது.. எப்படி தொடுப்பது.. எப்படி முடிப்பது என்பதை அணுவணுவாய் அவரிடம் கற்கலாம்!  பாத்திரப் படைப்புகளிலும் பரிட்சயம் உள்ளவராய் அன்றே அண்ணா பற்பல திரைப்படங்களுக்கு கதையெழுதித் தந்திருக்கிறார்.  வேலைக்காரி முதல் வண்டிக்காரன் மகன் வரை அப்படங்கள் கால வரலாற்றைத் தாண்டி இன்னும் பேசப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றன.  மாணவப் பருவத்தில் பள்ளிப்பாடத்தில் படித்த செவ்வாழை என்னும் சிறுகதை அண்ணா எழுதியது என்று அறிந்தது நினைவுண்டு!  சொல்லத்தான் வார்த்தைகள் போதாமல் அவர்பற்றி சுவையான செய்திகள் பரிமாற.. ஏடதனை எடுத்து இன்று ஏதோ ஒரு செய்தியைப் பகிர்தலே வேண்டும் என்கிற உந்துதல் காலை முதலே இருந்தது.. என்றாலும் அலுவலகக் கடப்பாடு அதற்கு வழிவகுக்கவில்லை. 

 

அழகுதமிழ் மொழிதனை அவரெடுத்து ஆளும்திறம் அதற்குப்பின் எவருக்கும் அந்த அளவிற்கு வாய்க்கவில்லை!  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூக்கறுக்க நினைத்தோர் தாமே.. முன்வந்து அண்ணாவை அழைத்து முத்தமிழ் மன்றமிதில் முழங்க வேண்டும் என்று சொன்னார்.  அண்ணணும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி தலைப்புதனை பகர்க என்றார். தருகிறோம் என்று சொல்லி கடன்வாங்கியவர் தருவதற்கு தவணை கேட்பதுபோல்.. தள்ளியே போனது அந்தத் தலைப்பு எனும் விஷயமும்.  அப்படி இப்படி என்று பேசவேண்டிய நாள் வந்தது..  மேடைக்கும் வந்துவிட்டார்.. ஒலிவாங்கியை அவர் கைகளிலும் தந்துவிட்டார்.. என்றாலும் தலைப்பு மட்டும் தராமல் இழுத்தடித்தார்கள்.. கடைசியிலே கறுப்புப்பலகை அங்கே பின்னணியில் இருக்கிறது.. அதை ஒரு திரைச்சீலையிட்டு மறைத்திருந்த மாணக்கார் மனக்கதவுகளை.. அடுத்து வந்த ஒன்றரை மணிநேர ஆங்கில உரையாலே ஆளவந்தார்.. நம் அண்ணா..


ஆம்.. அந்தப் பலகையிலே ஒன்றுமில்லை என்பதுவே உங்கள் தலைப்பு.. உரையாற்றுக.. தமிழில் அல்ல.. ஆங்கிலத்தில் என்று வந்தது ஒரு குரல்!


மடைதிறந்த வெள்ளமென பிரவாகமெடுத்து.. ஒன்றுமில்லை என்கிற தலைப்பிலே அவர் பேசிய பேச்சு இன்றுவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெல்ல முடியாத வரலாறாய் நிற்கிறது! அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாய் அவரை வெல்ல.. துணிந்திருந்த எதிர்க்கட்சி மாமணிகள்.. வெட்கத்தில் தலைகவிழ்ந்தார்!  மாற்றாரை மதித்து மனம்திருந்த வைப்பதிலே தேர்ந்திருந்த அண்ணா.. அவர்தம் உள்ளம் வென்றார்! எவரெல்லாம் அண்ணாவை எள்ளிநகையாட வேண்டும் என்று காத்திருந்தாரோ.. அவரேதான் கைவலிக்க பாராட்டி கரவோசை செய்திருந்த காட்சியை மறக்க முடியுமா?  அண்ணாமலைப் பேருரை என்கிற பெயரில் அவர்தம் உரை சிறுவடிவப் புத்தகமாய் படித்திருக்கிறேன்.. ஆங்கில ஆக்கத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு..


மற்றுமொரு நிகழ்வு ஒன்று மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது அமரர் அண்ணாவைப்பற்றி!  காஞ்சியிலே அவர் வாழ்ந்த வாழ்க்கை எளிமையின் சின்னம்! முதல்அமைச்சர் ஆனபின்னும் அவர்காட்டிய பணிவும்.. தமிழ்நாட்டின்மீதான அக்கறையும்.. புற்றுநோய் என்னும் அரக்கன் வந்து புகழுக்குப் புகழ்சேர்த்த மன்னவனை கொண்டு செல்லாதிருந்தால் தமிழகத்தின் அரசியலில் மறுமலர்ச்சி வந்திருக்கும்! 


ஆம்.. அவர்தான் தன் வீட்டுத்திண்ணையிலே ஒரு நாள் அரசுக் கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாராம்!  அந்நேரம் ஒரு கழக உறுப்பினர் வந்து ஐயா.. என் மகனுக்கு கல்லூரியில் இடம் வேண்டும்.. பிரமுகர் ஒருவரின் பரிந்துரைக் கடிதம் கொண்டுவா.. என்கின்றார்.  ஐயா.. ஒரு கடிதம் கொடுத்தால்.. நன்றாயிருக்கும் என்று சொல்ல.. எழுதிக் கொண்டிருந்த எழுதுகோலை மூடிவைத்து மற்றுமொரு எழுதுகோல் எடுத்த கழகத்தின் கடித ஏட்டில் மடல் வரையத் தொடங்கினாராம்.   ஏன்.. அண்ணா.. இரண்டுமே கறுப்பு மைதானே.. ஏன் எழுதுகோலைமாற்றினீர்கள் என்று அந்தக்கழக உறுப்பினர் கேட்டதற்கு முதலில் நான் எழுதிக் கொண்டிருந்தது அரசாங்க மை!  இப்போது நான் எழுதுவது என் சொந்த மை!! என்பதை எண்ணிப்பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது!


வங்கக்கடலோரம் வரும் அலைகள் தாலாட்ட தங்கத்திருமகன் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் வந்துதித்த மண்ணில்தான் நாமும் பிறந்திருக்கிறோம் என்கிற பெருமை பீறிடுகிறது.. அண்ணா..அண்ணா.. அண்ணா என்று உங்களை ஆராதிப்பதில் அர்த்தமிருக்கிறது! அணையா விளக்கு நீங்கள்.. உங்கள் கல்லறையிலும் அணையாவிளக்கு எரிகிறது!


நினைவலையின் ஓரத்தில் ஒரே ஒரு நொடிப்பொழுது இன்னும் சிறகடிக்காமல் இருக்கிறது தெரியுமா? 

அன்றொரு நாள் அண்ணா நீங்கள்.. அடையாறு = சி.எல்.ஆர்.ஐ. எனப்படும் வளாகத்தில் பேசிமுடித்து புறப்பட்டு வெளியே வருகின்றீர்.. உங்களைக் காண ஓடோடி வந்த சிறுவன் நான்.. அந்த வளாகத்தின் கதவுகள் திறந்திருக்க.. வாயிற்காப்போன் வணக்கம் செலுத்த.. உங்கள் வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த உங்களை ஒரு நொடி பார்த்தேன்.. உயிர்வரை இனித்ததுபோலிருந்தது!


காலம் ஒன்றும் அதிகம் உருண்டோடவில்லை!  நாங்கள் வாழ்ந்த அதே பகுதியில் அமைந்த புற்றுநோய் மருத்துவமனையில் அண்ணா அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி!  நான் என் பள்ளிக்குச் செல்கிற வழிதான்.. அண்ணா உங்களைப்பற்றி அதிகம் தெரியாத வயது! தமிழகத்தின் முதலமைச்சர் இங்கே சிகிச்சை பெறுகிறார் என்பது மட்டும் தெரிய.. வந்ததே அந்தத் துயரச் செய்தி! நெஞ்சிலே விழுந்த இடி!! எந்த ஒரு நாட்டிற்கு இப்படிப்பட்ட தலைவன் கிடைக்க மாட்டானோ.. அவன் கிடைத்திருக்க.. யார் கண் பட்டதோ தெரியவில்லை.. ஊரெல்லாம் ஓலமிட்டு அழுதது!  உங்கள் உயிர்ப்பறவை இவ்வுலகைப் பிரிந்தது! ஒவ்வொரு வீதியின் மருங்கிலும் உங்கள் புகைப்படம்.. மாலை.. கற்பூர ஆரத்தி, ஊதுபத்தி.. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திராவிட இயக்கத்திற்கு புதுவடிவம் தந்தவனே.. உன்னை வழிபட்டது உன் மறைவுச்செய்தி கேட்டு!! அதிர்ச்சி தாங்காமல்.. உறைந்துபோன ஊரை நான் கண்ணாரக் கண்டேன்!  உலகத்தில் ஒரு அரசியல் தலைவன் இறப்பிற்கு மக்கள் கடல் திரண்டு இவ்வளவு வந்தது என்று சொன்னால் அது அண்ணாவிற்குத் தவிர வேறு எவருக்கும் அந்த அளவு இல்லை என்கிற வரலாறு மாற்றமுடியாதது!  


எந்த பந்தமும் இல்லாத நானே முதன் முதலாக ஒரு இறப்புக்கு அழுதது அன்றுதான்!  கதறிஅழுதேன்.. இனம்புரியாத உறவு என்பார்களே.. அண்ணா.. இதுதானா? ஏன் அழுதேன் என்று சொல்ல அன்றைக்கு என்னிடம் வார்த்தையில்லை.. இன்றைக்கு அந்த அழுகைக்குப் பின் எத்தனை நியாயமிருக்கிறது என்று உணர்வுபூர்வமாக உணர்கிறேன்!


சொல்லால்.. பேச்சால், எழுத்தால்.. மக்கள் மனதில்வாழ முடியும் என்று காட்டியவன் நீ! உன் சுவாசக்காற்றின் ஈரம் ஒருதுளி எனக்கு கிடைத்திருக்கிறது போலும்!  எனவேதான் தமிழ் என்றால் மனம் சதிராட்டம் போடுகிறது! உனக்கான இரங்கலைக்கூட இப்படி எழுதிக்காட்ட முடிகிறது! வேறென்ன வேண்டும் எனக்கு?


அன்புடன்

காவிரிமைந்தன்

தேமொழி

unread,
Sep 15, 2014, 3:52:41 PM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
தாய்க்குலம்

அண்ணாவின் அம்மா பங்காரு அம்மா 

பழைய தினத்தந்தி படம் 


..... தேமொழி



சிவகாமிப் பாட்டி வகையறா

unread,
Sep 15, 2014, 8:04:30 PM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

//சிவகாமிப் பாட்டியின் பேரனிடமிருந்து அதிகத் தரவுகளை எதிர்பார்க்கிறேன்.) :-))//

அண்ணாவின் வாழ்க்கை வரலாறு இன்னும் முறையாகத் தொகுக்கப்படவில்லை.  அதன்காரணமாகவே இணையத்தில் பலர் தங்கள் வலைப் பூக்களில் ஆதாரமற்ற செய்திகளை அன்பினாலும் அவர்மீதுள்ல வெறுப்பினாலும் திரித்து வெளியிடும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது

அண்ணாவைப்பற்றி ஆய்வு செய்த முனைவர்களும் அறிஞர்களும் நம்பகத் தன்மை குறைவான ஆவணங்களும் தகவல் தெரிவிக்கும் நபர்களும் மட்டுமே எளிதில் தகவல் பரிமாற்றம் செய்ய உதவுவதாகவும் பல ஆவணங்களும் அண்ணாவை நன்கறிந்த பலரும் வெளிச்சத்துக்கு வராமலே இருப்பதாகவும் குறிப்பிடுவர்

அண்ணா கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தபின் குடும்பப் பொருளாதாரச் சிக்கல் காரணமாகப் படிப்பைத் தொடர விரும்பவில்லை.  ஆயிnuம் அவருடைய ஆசிரியர்கள் வற்புறுத்தியதால் பி.ஏ.ஹானர்ஸ் (அரசியல், வரலாறு, பொருளாதாரம்) படித்து முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.  படிக்கும் காலத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் சங்கத்தின் செயலாளர், பொருளியல் மாணவர் சங்கத்தின் தலைவர்.  பேச்சுப்போட்டிகளிலும் மற்ற மேடைகளிலும் சிறப்பாகப் பேசக்கூடிய பேச்சுஇ திறனும் அருமையாக ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துத் திறனும் உடையவராக விளங்கினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் 1926-ஆம் ஆண்டு திரு எஸ்.ராமனாதன் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதைக் கழகத்தில் நாட்டமுள்ளவராக இருந்தார். சுயமரியாதைக் கழகம் அதனுடைய முதல் மாநில மாநாட்டைச் செங்கல்பட்டில் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் நடத்தியபின் சென்னையில் சுயமரியாதைக் கழக்த்தின் இளைஞர் பிரிவு திருவாளர்கள் சி.கணேசன், சிவஞானம், அரங்கநாதன், புலவர் செல்வராஜ் முத்துப் பிரகாசம் ஆகியோரால் தொடங்கப்பட்டதும் அவர்கள் நடத்தும் கூட்டங்கலில் அண்ணா அடிக்கடி கலந்துகொண்டார்.  அப்போது பெரியாரின் சுயமரியாதை சீர்திருத்தப் பேச்சுக்களால் கவரப்பட்டார்.  அண்ணாவின் ஆங்கில எழுத்து நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் துணை ஆசியராக்கியது

உயர்நிலைப் பள்ளியில் படித்தபின் சிலகாலம் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றபின் வடசென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.  ராஜா.சர். அண்ணாமலை செட்டியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொப்பிளி ராஜா ஒரு பரிந்துரைக் கடிதத்துடன் அண்ணாவைச் செட்டிநாட்டு அரண்மனைக்கு அனுப்பிவைக்க அந்த அரண்மனையின் செல்வச் செழிப்பும் படோடபமும் கண்டு வேலை கேட்காமல் திரும்பினார்.

பெரியாரிம் பேச்சுக்களை அண்ணா தொடர்ந்து கேட்டு அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தாலும் அண்ணா பெரியாரைத் திருப்பூரில் நடந்த இளைஞர் மாநாட்டில் 1935 ஆம் ஆண்டுதான் நேருக்குநேர் சந்தித்துப் பேசினார்.  அரசர்களிடமும் நிலச் சுவான்தாரர்களிடமும் கட்டுண்டிருக்கும் நீதிக் கட்சி மக்கள்கட்சியாக மலர வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து திராவிடக் கழகம் தொடங்கப்பட்டதும் பெரியாரும் அண்ணாவும் இணைந்தனர்.  பெரியாரின் தொடர்பால நவயுகம் குடியரசு விடுதலை ஆகிய தமிழ்ப் பத்திரிக்கைகளில் எழுதவும் பத்த்ரிக்கையை நடத்தவும் நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது

இருவரும் இணைந்தே பணிபுரிந்தாலும் திராவிடர் கழகத்தில் சில கருத்துவேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து இறுதியில் அவர்கள் பிரிவுக்கு வழிவகுத்தது. 

முதல் மோதல் தி.க தலைவர்கள் கருப்புச் சட்டையுடன் மட்டுமே மேஎடயேறவேண்டும் என்பது பெரியாரின் கட்டளை.  அண்ணாவோ கருஞ்சட்டை வரலாற்று அடிப்படையில் தொண்டர்களுக்கு மட்டுமே உரியது என்று கருதினார்.  பெரியாரும் தளராமல் அண்ணாவைக் கருஞ்சட்டை அணியக் கட்டாயப்படுத்தி ஒருமுறை அணிந்துகொண்டு மேடையேறவேண்டிய இக்கட்டான சூழலை ஏற்படுத்தினார்.

இரண்டாவது கருத்து முரண்பாடு தி.கவினர் சுதந்திரத் திருநாளைத் துக்க தினமாக அனுசரிக்க கட்சியினருக்குக் கட்டளையிட்டார்.  நாடு சுதந்திரம் பெற்றால் இந்தியா வெள்ளையர்களிடமிருந்து பிராமணர்களுக்குச் சென்றுவிடும். எனவே அந்நாள் துக்கநாள் என்று பெரியார் கருதினார்.  அண்ணாவோ சுதந்திரப் போராட்டத்தில் திருப்பூர்  குமரன் வ.உ.சி போன்ற அந்தணர்கள் அல்லாதவர்களும் கலந்துகொண்டதால் பெரியாரின் கருத்து சரியல்ல என்று 1947 ஆகஸ் 10 ஆம் நாள் திராவிடநாடு இதழில் 12 பக்கக் கட்டுரை எழுதினார்

மூன்றாவது மணியம்மை திருமணம்.  அது பெரியாரின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும் பெண்கள் முன்னேற்றப் பற்றிப் பேசமுடியாத சூழலை இந்தத் திருமணம் உருவாக்கும் என எழுதினார். பெரியார் எதிர்ப்புகளைப்பற்றிக் கவலைப்படாமல் 1949 ஆம் ஆண்டு சூலை 9 ஆம் நாள் மணியம்மையைத் திருமணம் செதுகொண்டார்


இனிமேலும் ஒன்றாக இருக்க முடியாது என்ற நிலையில் 1949 ஆம் ஆண்டு பெரியரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம்நாள் அண்ணா தி.மு.கவைத் தொடங்கினார்

பெரியாரைப்போல அண்ணாவும் பிள்ளைப் பிராயத்தில் தலையில் பூ, காதில் கடுக்கண் தொங்கத் தலை முடியச் சடையாகப் பின்னி பக்திப்பழமாக வாழ்ந்தவர்.  பெரியாரும் அண்ணாவும் சமுயாத சீர்திருத்தம் சமூக நீதி பொருளாதார முன்னேற்றம் ஆகிய கொள்களில் இணந்தாலும் பெரியாரின் தடாலடி அதிரடி அரசியலை அண்ணா ஏற்றுக்கொளவில்லை.  பெரியாரின் தளபதி என்ற முறையில் அவரின் கட்டளையை மேற்கொண்டு தலைமைக்குக்  கட்டுப்பட்டு பல வேலைகளைச் செய்யவேண்டிய கட்டாயம் அண்ணாவுக்குப் பொருளாதாரக் காரணங்களால் உருவானது.  பெரியாரின்மீது மற்றவர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பிலும் தாக்குதலிலும் சரிபாதி இவருக்குக் கிடைத்தது காலத்தின் கட்டாயம். 

மதஎசுஇந்திரன்

N. Ganesan

unread,
Sep 15, 2014, 8:15:21 PM9/15/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com
நல்ல பதிவு, திரு. காவிரிமைந்தன்

எங்கள் கல்லூரி - கிண்டி பொறியியற் கல்லூரி - முதலில் பேரறிஞர் அண்ணா பல்கலை என்றானது.
ஆனால், தமிழுக்கே உரிய ஞ வடநாட்டார் பலர் வாயில் நுழையவில்லை. வெளிநாட்டிலோ சொல்லவே வேண்டாம்.
எனவே, அண்ணா யுனிவெர்சிட்டி என்று பெயரை மாற்றம் செய்தனர் முனைவர் வாசெகு போன்றோர்.
எங்கள் கிண்டி கல்லூரியின் (அண்ணா பல்கலை) துணைவேந்தர்கள் அனைவரும் இங்கே,

நா. கணேசன்

அண்ணா அவருக்கு விருப்பமான நூற்படிப்பில் ஆழ்ந்திருக்கிறார். ஸ்ரீநாத் போட்டோ:

On Monday, September 15, 2014 11:13:41 AM UTC-7, kaviri2012 wrote:
பேரறிஞர் அண்ணா..

பிறந்தநாள் இன்றுதான் எனும்போதே ஏதோ ஒரு பந்தம் எழுகிறதே உள்ளத்தில்! அவரை நேரில் பார்த்த ஞாபகங்கள் இல்லை! அவரின் நெஞ்சார்ந்த உரைகேட்ட பாக்கியமுமில்லை! அவரின் ஆற்றல்மிக்க அரசாட்சியை அருகிருந்து பார்த்ததில்லை! போற்றுகிறார்.. நாட்டில் உள்ளோர் பலருமே என்பதைவிட பலமான காரணங்கள் ஏதுமில்லை!  மறக்கத்தான் முடியாத மாணிக்கம் அவர்!  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று வார்த்தைகளில் சூட்சுமங்கள் நிறையவைத்து எதிர்ப்போரையும் தன் வசமாக்கிய தமிழ்மகன்! மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்றால் அது அண்ணா!  எந்த ஒரு கருத்தையும் எப்படி எடுப்பது.. எப்படி தொடுப்பது.. எப்படி முடிப்பது என்பதை அணுவணுவாய் அவரிடம் கற்கலாம்!  பாத்திரப் படைப்புகளிலும் பரிட்சயம் உள்ளவராய் அன்றே அண்ணா பற்பல திரைப்படங்களுக்கு கதையெழுதித் தந்திருக்கிறார்.  வேலைக்காரி முதல் வண்டிக்காரன் மகன் வரை அப்படங்கள் கால வரலாற்றைத் தாண்டி இன்னும் பேசப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றன.  மாணவப் பருவத்தில் பள்ளிப்பாடத்தில் படித்த செவ்வாழை என்னும் சிறுகதை அண்ணா எழுதியது என்று அறிந்தது நினைவுண்டு!  சொல்லத்தான் வார்த்தைகள் போதாமல் அவர்பற்றி சுவையான செய்திகள் பரிமாற.. ஏடதனை எடுத்து இன்று ஏதோ ஒரு செய்தியைப் பகிர்தலே வேண்டும் என்கிற உந்துதல் காலை முதலே இருந்தது.. என்றாலும் அலுவலகக் கடப்பாடு அதற்கு வழிவகுக்கவில்லை. 

அழகுதமிழ் மொழிதனை அவரெடுத்து ஆளும்திறம் அதற்குப்பின் எவருக்கும் அந்த அளவிற்கு வாய்க்கவில்லை!  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூக்கறுக்க நினைத்தோர் தாமே.. முன்வந்து அண்ணாவை அழைத்து முத்தமிழ் மன்றமிதில் முழங்க வேண்டும் என்று சொன்னார்.  அண்ணணும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி தலைப்புதனை பகர்க என்றார். தருகிறோம் என்று சொல்லி கடன்வாங்கியவர் தருவதற்கு தவணை கேட்பதுபோல்.. தள்ளியே போனது அந்தத் தலைப்பு எனும் விஷயமும்.  அப்படி இப்படி என்று பேசவேண்டிய நாள் வந்தது..  மேடைக்கும் வந்துவிட்டார்.. ஒலிவாங்கியை அவர் கைகளிலும் தந்துவிட்டார்.. என்றாலும் தலைப்பு மட்டும் தராமல் இழுத்தடித்தார்கள்.. கடைசியிலே கறுப்புப்பலகை அங்கே பின்னணியில் இருக்கிறது.. அதை ஒரு திரைச்சீலையிட்டு மறைத்திருந்த மாணக்கார் மனக்கதவுகளை.. அடுத்து வந்த ஒன்றரை மணிநேர ஆங்கில உரையாலே ஆளவந்தார்.. நம் அண்ணா

தேமொழி

unread,
Sep 15, 2014, 9:14:53 PM9/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///அரசர்களிடமும் நிலச் சுவான்தாரர்களிடமும் கட்டுண்டிருக்கும் நீதிக் கட்சி மக்கள்கட்சியாக மலர வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து திராவிடக் கழகம் தொடங்கப்பட்டதும் பெரியாரும் அண்ணாவும் இணைந்தனர். ///

1944 இல் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடந்தது."ஜஸ்டிஸ் கட்சி" என்ற பெயரைத் "திராவிடர் கழகம்" என்ற மாற்றக்கோரும் தீர்மானத்தை இந்த மாநாட்டில் அண்ணாதான் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது 35 மணிநேரம் காரசாரமாக விவாதம் நடந்தது. பிறகு தீர்மானம் நிறைவேறியது.

தகவல், தினத்தந்தி, வரலாற்றுச் சுவடுகள்.  பக்கம் 396

N. Ganesan

unread,
Sep 15, 2014, 11:30:19 PM9/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

அண்ணாவின் படங்கள் பல இங்கே கிட்டும்:

N. Ganesan

unread,
Sep 16, 2014, 12:48:18 AM9/16/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
பேச்சுக்கு ஒரு கலைஞன்!
      - திருலோக சீதாராம் (1948-ம் அதற்கு முன் சிவாஜி இதழிலும்)

எந்தாய் நறுநாட்டின்
இன்னருமைச் சோதரர்கள்
நொந்தே யழிந்திருக்கும்
நோவிதனுக்கா யிரங்கிச்

சிந்தாத தேன்வார்க்கும்
சிந்தனைகள் செந்தமிழின்
கந்தமடை தான்திறந்து
சாய்த்திடுவான் காணீரோ!

பேச்சுக்கு ஒருகலைஞன்
பேசுங்கால் அதிரவரும்,
ஏச்சுக்குப் பணிவறியா
எண்ணத்து ஒரு சிற்பி

விந்தையவன் உள்ளத்தே
விளைந்துவரும் எண்ணங்கள்
வந்தணையச் சொற்களெலாம்
வழிபார்த்து நின்றிருக்கும்

சொல்லின் சிலம்பசைத்தாற்
சோதிமணிப் பரல்சிதறும்
சொல்லிற் கருவுயிர்க்கும்
செம்பொருளிற் சொல்சிறக்கும்

பேச்சிற் கனலடிக்கும்
பெய்யுமழை காலிரங்கும்
வீச்சொன்றில் அறியாமை
வீழும் அலறித் துடிக்கும்

கூச்சத்தாற் புதுநினைவு
கோணலெனக் காண்பாரும்
பேச்சுக் குழலிசையிற்
பேதுறுவார் அரவெனவே

காணுகின்ற காட்சிகளில்
கருதும் பொருள்களிலே
பேணுமுயர் சிந்தனைகள்
பேசவரும் சித்திரங்கள்

அளந்து வரும் சொற்கள்
ஆழ்ந்த பொருள், இருளுடே 
பிளந்துவரும் மின்வெட்டுப்
பேச்சுக் கொரு புலவன்

அண்ணாவென்றே இளைஞர்
அன்போடரு கணைவார்
பண்புடைய சொல் ஒன்றாற்
பச்சையன்பு பாய்ச்சிடுவார்

சிந்தனையே மாந்தர்க்குச்
சிறப்பருள்வ தாதலினால்
சிந்தனையும் சொல்திறனும்
சேர்க்குமவர்ப் போற்றுகிறோம்.

”இக்கவிதையில் குறிப்பாகப் பின் வரும் வரிகளைக் கவனிக்க வேண்டும்:

‘கூச்சத்தாற் புது நினைவு
கோணலெனக் காண்பாரும்
பேச்சுக் குழலிசையிற்
பேதுறுவார் அரவெனவே.’

அண்ணாவின் கொள்கைகளை ஏற்காதவர்களும் அவரது இனிய பேச்சாற்றலைக் கேட்கையில் மகுடிக்குக் கட்டுப்படும் நாகமென மயங்குவர் என்கிறார், கவிஞர்!” -மலர்மன்னன், திண்ணை, 2010.


பாடத் தெரிவு:
நா. கணேசன்

சிவகாமிப் பாட்டி வகையறா

unread,
Sep 16, 2014, 4:11:52 AM9/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அண்ணா எம்.ஜி.ஆர் பற்றி கண்ணதாசனிடம் சொன்னது

Then, Anna said, “Look here Kannadasan. Karunanidhi was the one who brought MGR into the party, and those fancy titles like Makkal Thilagam and Puratchi Veerar were tagged to him, by you guys. The popularity he has now, was due to your rash deeds. Now, for which reason can I tell that MGR is not needed in our party? If there is any route, let me know.”

What he said was true. It was our fault that knowing that he had faults, we praised him beyond the limits to increase his fan base. For that sin, now we are suffering now.”

http://sangam.org/2011/10/Kannadasan_Booklet.php?uid=4486

கண்ணதாசன் மாலையிட்ட மங்கை படத் தயாரிப்பில் கையைச் சுட்டுக் கொண்டவர்.  வேறு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கவிடாமல் தடுத்தார். தி.மு.க தொண்டர்கள் படம்பார்க்கவென்றே டி.ஆர். மஹாலிங்கம் பாடிய பாடலை அறிமுகப்படுத்தினார்

https://www.youtube.com/watch?v=CG-HAtxZyrY

கலைஞர் கவிஞர் மோதலில் அண்ணா கண்ணதாசனுக்கு உதவவில்லை,  அதனாலேயே தி.மு.கவை விட்டு விலகியவர் அண்ணா மரணப் படுக்கையில் இருக்கும்போது பார்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் தனக்குத் தெரிந்த வழியில் இலைமறை காயாக நலம் விசாரித்ததாகச் சொல்வதுண்டு

https://www.youtube.com/watch?v=tnGQmUuWu3U

மதஎசுஇந்திரன்

Kaviri Maindhan

unread,
Sep 16, 2014, 7:06:44 AM9/16/14
to vallamai, Groups

என் அண்ணா

(கவியரசர் கவிதை)

 

சங்கத் தமிழெடுத்து 

தங்கத்திலே இணைத்து 

எங்கும் தருவாரடி - என் அண்ணா 

இன்பத் தமிழரடி!

 

தென்னவன் பிள்ளையடி..

தீராத தீரரடி!

எண்ணம் நிறைந்தாரடி - என் அண்ணா 

ஏற்றம் மிகுந்தாரடி!

 

முகத்தினில் அழகிருக்கும் 

முல்லைமலர் மனமிருக்கும் 

மொத்தமும் நிறைந்திருக்கும் - என் அண்ணா 

மொழிந்திடும் ஒரு வார்த்தையில்!

 

பகைவரைச் சிரிக்கவைத்தார்..

பாம்பையும் பழக்கிவைத்தார்..

வகையொடுக்கும் நூற்கள் - என் அண்ணா 

மனவளம் மிகவே கொண்டார்!

 

நாட்டிற்கு ஒருவரடி 

நற்றமிழ் அறிஞரடி 

கேட்டவர் அறிவாரடி - என் அண்ணா 

கீழ்குணம் அறியாரடி!

 

(கவியரசர் கண்ணதாசன் கவிதை நூல் 1 & 2)

கவியரசு மின்னஞ்சல்  - 1893


 


N. Ganesan

unread,
Sep 16, 2014, 8:39:59 AM9/16/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Tuesday, September 16, 2014 4:06:44 AM UTC-7, kaviri2012 wrote:
இன்பத் தமிழரடி!
 
தென்னவன் பிள்ளையடி..
   தீராத தீரரடி!
எண்ணம் நிறைந்தாரடி - என் அண்ணா 
   ஏற்றம் மிகுந்தாரடி!
 
முகத்தினில் அழகிருக்கும் 
   முல்லைமலர் மனமிருக்கும் 
மொத்தமும் நிறைந்திருக்கும் - என் அண்ணா 
   மொழிந்திடும் ஒரு வார்த்தையில்!
 
பகைவரைச் சிரிக்கவைத்தார்..
   பாம்பையும் பழக்கிவைத்தார்..
வகையொடுக்கும் நூற்கள் - என் அண்ணா 
   மனவளம் மிகவே கொண்டார்!
 
நாட்டிற்கு ஒருவரடி 
   நற்றமிழ் அறிஞரடி 
கேட்டவர் அறிவாரடி - என் அண்ணா 
  கீழ்க்குணம் அறியாரடி!
 
(கவியரசர் கண்ணதாசன் கவிதை நூல் 1 & 2)

--------------------

நன்றி, திரு. ரவிச்சந்திரன் 

கவிஞர் என்ற பட்டம் கிடைத்தது பொள்ளாச்சியில். அளித்தவர்: கோவை செழியன். அறிவீர்கள்தானே.

கவிஞரின் ‘சொர்க்கத்தில் அண்ணா’ நூலை தட்டச்சியோ (அ) பிடிஎப் செய்து வலையேற்றலாமே.
கவியரசர் எழுத்துக்களுக்கு வலைத்தளம், பிடிஎஃப் and/or ஒருங்குகுறி செய்யுங்கள்.

-------------

சொர்க்கத்தில் அண்ணா! கவிஞர் கண்ணதாசன்.
கலைஞர் பற்றி அண்ணா எழுதியதாக கண்ணதாசன் எழுதிய கட்டுரை, 1969.

கருணாநிதி பற்றி அண்ணா

கவிஞர் கண்ணதாசன்

" நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்தபோது திருவாரூருக்கு ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அப்போது ஒரு மாணவனாக இருந்த கருணாநிதியை அங்கே சந்தித்தேன். அந்தப்பருவத்திலேயே அவனுடைய குறும்புத்தனமான பேச்சு எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது. அப்போது என்னருகிலேயே தம்பி சம்பத்தும் இருந்தான். திரும்பிசெல்லும்போதும் கூட கருணாநிதி பற்றி சம்பத்திடம் பேசிக்கொண்டே போனேன்.

அதன் பிறகு ஒரு சிறிய பத்திரிக்கையின் மூலம் அவன் திராவிடக் கழக தோழர்களுக்கு அறிமுகமானான். அந்தப் பத்திரிக்கையின் பெயரும் 'முரசொலி' தான். சிறு வயதிலேயே அவனிடம் எழுத்துக் கவர்ச்சி இருந்தது. அதே நேரத்தில் கவர்ச்சிகரமாகவும் உருக்கமாகவும் பேசப் பழகி வைத்திருந்தான். கலைத்துறையில் ஈடுபாடிருந்ததால் ஜனங்களுக்கு அறிமுகமானான்.

1949 -ல் திராவிடர் கழகத்தை விட்டு நாங்கள் பிரிந்து தி மு க ஆரம்பித்தபோது முன்னணியிலிருந்த முக்கியஸ்தர்களில் ஒருவனாக அவன் விளங்கினான். என்னைப் பற்றி பேசிப்பேசியே அவன் தன்னை வளர்த்துக்கொண்டது ஒரு வகையான திறமையும் சாமர்த்தியமும் ஆகும். கலைத்துறை ஈடுபாடு அவனை வெகுவிரைவில் தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டது.

கடுமையாக உழைப்பான். எதிலும் தானே முன்னணியில் நிற்க வேண்டுமென்று ஆசைப்படுவான்.

இந்த நேரத்தில் இங்கிலாந்து அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றி அவர் மகன் சொன்ன கருத்து என் நினைவுக்கு வருகிறது,

" பாருங்கள்! என் தந்தை பிரசவித்த வீட்டுக்குப் போனால் தானே குழந்தையாக இருக்க ஆசைப் படுகிறார். பொதுச் சபைகளுக்குப் போனால் தானே தலைவனாக இருக்க ஆசைப் படுகிறார். கல்யாண வீட்டுக்குப்போனால் தானே மாப்பிள்ளையாக இருக்க விரும்புகிறார். கருமாதி வீட்டுக்குப் போனாலும் தானே பிணமாக இருக்க ஆசைப் படுகிறார்" என்றாராமவர்!

கருணாநிதியின் சுபாவம் அப்படிப்பட்டது. அவனது உழைப்பை ஆசை முந்திக்கொண்டு போகிறது.

தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எந்த வழியையும் கடைப்பிடிப்பது அவனுடைய சுபாவம், .அதிலே தோல்வியுற்று அவமானப்பட நேர்ந்தால் அதையும் ஜீரணிப்பது அவன் பழக்கம்.

தனக்கு விளக்கு தூக்குகிறவர்கள் மட்டுமே நண்பர்களாக இருக்க முடியுமென்பது அவன் சித்தாந்தம்.

பிறரை தூண்டிக் காரியம் செய்வான். கலகம் செய்வான். தான்தான் காரணம் என்பதைக் காட்டிக் கொள்ள மாட்டான், கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதற்கு அவன் உண்டாக்கிய கலகமே காரணம். அவர்களெல்லாம் என்னை விசுவாசித்தவர்கள். அவர்களெல்லாம் போன பிற்பாடு என்னையே அவன் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். கட்சிக் கட்டுப்பாடுக்காக அதை வெளியே சொல்ல நான் தயங்கினேன்.

கட்சி எப்படிப்போனாலும் பதவிக்கு வந்தாக வேண்டுமென்று கூட்டணி சேர்ப்பதில் அவன்தான் முன்னணியில் இருந்தான்.

பதவிக்கு வந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலாகா பிரித்துக் கொடுத்தேன். இந்த இருபத்திமூன்று மாதங்களில் மற்ற மந்திரிகளுக்கும் சில இலாக்காக்கள் இருப்பதாகவே அவனுக்கு நினைவில்லை.

எல்லாவற்றிலும் புகுந்து விளையாடினான்.

போலீஸ் மந்திரி நான். உத்திரவிடுவது அவன்.

சகிக்கும்மட்டும் சகித்துப் பார்த்தேன். இனி சகிக்க முடியாது என்ற நிலை வந்தபோது - இறைவா, நீ வாழ்க - நீ என்னை அழைத்துக்கொண்டு விட்டாய்.

அனுசரித்த சம்பிரதாயங்களின் படி முதலமைச்சராக வேண்டிய நெடுஞ்செழியனை இப்போது அவன் ஒதுக்கித் தள்ளி விட்டான்.

நானிருக்கும் காலத்தில் தன் குடும்பக் கவலைகளைக் கூட நெடுஞ்செழியன் என்னுடன் தான் பகிர்ந்து கொள்வான். இப்போது யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் அவன் சொல்ல முடியம். அவனைப்போல என் கட்சியில் என்னை நேசித்தவர்கள் எல்லாம் இனி உள்ளுக்குளேயே புழுங்கிச் சாவதைத் தவிர வேறு வழி என்ன?

கருணாநிதியின் கையில் ஆட்சி வந்து விட்டது. நான் இல்லை என்ற நினைப்பிலாவது அவனுக்கு பொறுப்புணர்ச்சி வரவேண்டும். சேறு மிதிப்பது போல ஆட்சியை நடத்தக் கூடாது. அவன் என்ன செய்யப் போகிறானோ?

போதாக் குறைக்கு ஆதித்தன் வேறு பங்காளியாகி இருக்கிறான். நான் இருக்கும்போது ஆதித்தனை ஒதுக்கியே வந்தேன். இனி எவனும் ஆட்டம் போடுவான்.

இனி ஜனங்களிடமிருந்தும் கிஞ்சித்தும் அனுதாபத்தை அவர்கள் பெறமுடியாது.

-- மனிதன் பேசி முடித்தான்; தேவன் விடைப் பெற்றுக்கொண்டான்.

பிகு: கண்ணதாசன் அவர்கள் சி. என். அண்ணாதுரை அவர்கள் மறைந்த பின் தன் பத்திரிக்கையில் சில கடிதங்கள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு 'சொர்க்கத்தில் அண்ணா' என்று பெப்ரவரி 28 - 1969 அன்று ஒரு சிறு புத்தகமாக கண்ணதாசனுடைய தம்பி இராம முத்தையா அவர்களால் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் 'கருணாநிதி பற்றி அண்ணா' என்று 37-40 பக்கங்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையே இது.



Megala Ramamourty

unread,
Sep 16, 2014, 6:41:04 PM9/16/14
to மின்தமிழ், vallamai
அண்ணாவைப் பற்றி எத்தனை எத்தனை செய்திகள்! அற்புதம் நண்பர்களே!

சுயநலக் கலப்பில்லாத, வாரிசுப் போட்டியில்லாத அரசியல் அண்ணாவுடையது. அவர் எதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்று விரும்பினாரோ, எத்தகைய மக்களாட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்று மனக்கோட்டை கட்டினாரோ, எவற்றையெல்லாம்  மக்கள் பெற வேண்டும் என்று அயராது பேசியும், அழுத்தமாய் எழுதியும் வந்தாரோ அவை இன்றுவரை ஏட்டளவிலேயே நின்றுவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

தமிழக முதலமைச்சர் பதவி தன்னை நாடி வந்தபோதும் அதுகுறித்து ஆனந்தமோ, ஆணவமோ கொள்ளாதவராய், தான் தொடர்ந்து ’தம்பிக்கு’ என்ற தலைப்பில் எழுதி வந்த கடிதங்களை (அலுவல் காரணமாகத்) தொடரமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சியிருக்கின்றார். பதவி, தன்னைச் சூழ்நிலைக் கைதியாக்கித் தன் சுதந்திரத்தைப் பறித்துவிடுமோ என்று பதைபதைத்திருக்கிறார்.

முதலமைச்சர் பதவியில் அமர்ந்து ஆட்சி செலுத்தியதும் மிகக் குறுகிய காலமேயானபோதிலும்,  அதனையும் திறம்பட நிர்வகித்திருக்கிறார். அவர் காலத்தில் சட்டமன்றத்தில் நிகழ்ந்த சுவையான  விவாதங்களையும், கேள்வி பதில்களையும் இன்றும் நாம் அசைபோட்டுக்கொண்டிருக்கிறோம் என்றால்  ‘கேட்டார்ப் பிணிக்கும்’ அண்ணாவின் சொல்வன்மையும், புத்திக் கூர்மையுமே அதற்குக் காரணங்கள்.

அண்ணாவின் மதியூகத்திற்கு ஒரு சான்று...
ஒருமுறைச் சட்டசபையில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர்(?) ஒருவர் அண்ணாவை அளவுகடந்து புகழ்ந்துகொண்டிருந்தாராம். அவ்வருடம் புளியின் விலை சந்தையில் மிகக் குறைவாக விற்கப்பட்டதாம். அதற்கு அண்ணாவின் ஆட்சியே காரணம் என்று அப்பிரமுகர் அண்ணாவைத் தொடர்ந்து புகழ, இப் புகழ்மொழிகளைச் சற்றும் விரும்பாத அண்ணா உடனே எழுந்து “புளியின் விலை அண்ணாதுரையால் குறையவில்லை; அது புளிய மரத்தால் குறைந்தது (மரங்களில் புளியின் காய்ப்பு நிறைய இருந்ததால்தான் புளி விலை குறைந்தது எனும் பொருளில்) என்றாராம். அப்பிரமுகர் அசடுவழிந்தபடி அமர்ந்தாராம். :-)
 
அரசியல்வாதிகளிடம் பொதுவாகக் காணப்படும் ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், தற்புகழ்ச்சி, முகஸ்துதி முதலியவற்றை விரும்பாத (மொத்தத்தில் இன்றைய அரசியல்வாதியாக இருக்கத் தகுதியான குணங்கள் ஏதுமே இல்லாத) :-))) எளிய மனிதராக வாழ்ந்தவர் அண்ணா. தான் எப்போதுமே மக்கள் தொண்டனாக இருக்கவேண்டும் எனும் பெருவிருப்புடையவராக இருந்திருக்கிறார் என்பதையே அவருடைய எழுத்துக்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

சௌமிய’ எனும் தமிழ் வருடத்தில் பிறந்தவராகையால் ’சௌமியன்’ என்ற புனைபெயரிலும் படைப்புக்கள் பல தந்துள்ளார். மீண்டும் ஒரு சௌமிய வருடத்தைச் சந்திக்காமலே (ஒவ்வொரு தமிழ் வருடமும் அடுத்தமுறை வருவதற்கு 60 ஆண்டுகள் செல்லும்) - அதாவது 60 வயது நிறைவுபெறாமலேயே தன் புவி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துச் சென்றுவிட்டார்.

வாழுங்காலத்தில் மட்டுமின்றித் தன் இறப்புக்குப் பின்னும் சாதனை படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆம்...அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை சற்றேறக்குறைய ஒன்றரை கோடி என்று கணக்கிடப்பட்டு அது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருடைய இறப்பைக் கேள்விப்பட்ட தமிழக மக்கள் தாங்கொணாத் துயருடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்து தங்கள் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த அருமைத் தலைவனுக்கு இறுதி மரியாதை செய்துள்ளனர். இரயில்களின் உள்ளே அமர இடம் கிடைக்காத பலர் அதன் மேலேறியும் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு, கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் வழியே வந்துகொண்டிருந்த ஓர் இரயிலின் உச்சிமீது நின்றபடிப் பயணம் செய்து அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் சிலர், அப்பாலத்தின் மீதிருந்த ‘girder'இல் (it is a steel or iron beam used for building bridges) எதிர்பாராதவிதமாக மோதப்பட்டதால் கோரமாக உயிர் துறந்த அவலமும் நிகழ்ந்துள்ளது. அன்று கொள்ளிடம் ஆறு இரத்த ஆறாகவே ஓடியது போலும். :-(

’செயற்கரிய செய்வார் பெரியர்’ என்ற குறளுக்கு இலக்கணமாகத் தன் மரணத்திற்குள்ளாகப் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து, இன்றும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று நிலைத்துவிட்ட அண்ணா ஒரு சகாப்தம் என்றால் மிகையன்று.

வேந்தன் அரசு

unread,
Sep 17, 2014, 7:52:53 AM9/17/14
to vallamai, மின்தமிழ்
அண்ணா என்ன அறிஞர்?
 கலைஞர் என்ற பெயரில் ஒரு கள்ளன் தன் கூட்டத்தில் இருப்பதை கண்டுபிடிக்க இயலாதவர்.


16 செப்டம்பர், 2014 6:41 பிற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kaviri Maindhan

unread,
Sep 17, 2014, 8:01:14 AM9/17/14
to vallamai, மின்தமிழ்


அண்ணா என்ன அறிஞர்?
 கலைஞர் என்ற பெயரில் ஒரு கள்ளன் தன் கூட்டத்தில் இருப்பதை கண்டுபிடிக்க இயலாதவர்.


16 செப்டம்பர், 2014 6:41 பிற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:



-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

பகைவரைச் சிரிக்கவைத்தார்..

பாம்பையும் பழக்கிவைத்தார்..

 

என்னும் கவியரசர் கவிதையில் உண்மை உறைந்திருக்கிறதே..



Megala Ramamourty

unread,
Sep 17, 2014, 10:38:20 AM9/17/14
to மின்தமிழ், vallamai
அண்ணா அரசியலில் இருந்தாலும் ’அரசியல்’ பண்ணத் தெரியாதவராய் இருந்திருக்கிறார். தன் தம்பிகளில் கலைஞரைக் காட்டிலும் நாவலரிடம்(நெடுஞ்செழியன்) அதிக நம்பிக்கையும் அன்பும் கொண்டவராய் இருந்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
என்ன சொல்வது? நாவலரும் அண்ணாவுக்குத் தம்பிதான் அரசியல் சாமர்த்தியத்தில். :-)

அண்ணாவின் மறைவுக்குப் பின் நாவலர் கலைஞரால் ஓரங்கட்டப்பட்டார். தன் பேச்சாற்றலால் மக்களைக் கவர முடிந்த நாவலரால் (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அத்தனையும் அவருக்கு அத்துபடி!) அரசியல் வாழ்வில் வெற்றியாளராய் வலம்வர இயலவில்லை. கட்சியில் எப்போதுமே இரண்டாம் இடம்தான் அவருக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. 

கழகத்தைச் சேர்ந்த தம்பிகளில் அரசியலில் வெற்றிபெறுவதற்கு வேண்டிய அத்தனை ’அகட விகட’ சாமர்த்தியங்களும் கலைஞர் ஒருவருக்குத்தான் வாய்த்திருந்தது என்பதே தமிழக வரலாறு நமக்குக் காட்டும் உண்மை.

அன்புடன்,
மேகலா
 

2014-09-17 10:06 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-09-17 18:56 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
அண்ணா முதல்வராய் இருந்தபோது, எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் தன அறிவாற்றலை காட்டும் முகத்தான், 

அவர்
​ காங்கிரஸ் உறுப்பினர் கே.விநாயகம்.  ஆக்ஸ்போர்டில் படித்ததாகவும் ஷேக்ஸ்பியரில் புலமை மிகுந்தவராகவும் சட்டமன்றப் பேச்சுகளில் குறிப்பிட்டுள்ளார்

மதஎசுஇந்திரன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 18, 2014, 8:57:38 AM9/18/14
to mint...@googlegroups.com, vallamai

அண்ணாவின் இலக்கியம்
சுபவீ

சேலம் தமிழ்ச் சங்கத்தில் சொற்பொழிவு:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 11, 2017, 8:46:44 PM3/11/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
The real story behind the victory of 'Dravidian' party

சும்மா இருந்த சி.என்.அண்ணாதுரையை சி.சுப்பிரமணியம் தூண்டியதன் விளைவுதான், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டது. ‘‘முச்சந்தியில் நின்று முழங்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்க்கு சட்டசபைக்குள் வருவதற்கு தைரியம் உண்டா?” என்று கேட்டார் சி.சுப்பிரமணியம். அதற்காகவே காத்திருந்த அண்ணா, அடுத்து நடந்த திருச்சி தி.மு.க மாநாட்டில், இரண்டு பெட்டிகளை வைத்து, ‘தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா?’ என்று வாக்கெடுப்பு நடத்தினார். பத்து மடங்கு பெரும்பான்மையினர் ‘தி.மு.க, தேர்தலில் போட்டியிடலாம்’ என்று வாக்களித்தார்கள். 1957 சட்டமன்றத் தேர்தலில் வென்று உள்ளே வந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த முதல்நாளே அண்ணா, ‘‘இன்று நீங்கள் அந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறீர்கள். நாங்கள் இந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறோம். காலம் மாறும். வல்லூறுகளை சிட்டுக்குருவிகள் வீழ்த்தும் காலம் வரும். நாங்கள் அந்தப் பக்கம் இருப்போம். நீங்கள் இந்தப் பக்கம் இருப்பீர்கள்” என்றார். மூக்கில் பொடி ஒழுக, நாக்கில் நம்பிக்கை வடிய அண்ணா பேசிய பத்தே ஆண்டுகளில் காலம் மட்டுமல்ல, காட்சியும் மாறியது; ஆட்சியும் மாறியது. அதுதான் 1967.

திராவிட ஆட்சி 50 ஆண்டுகள் - காங்கிரஸ் தலையில் தேய்க்கப்பட்ட எலுமிச்சைப்பழம்!



Reply all
Reply to author
Forward
0 new messages