முரியடுப்புகளும் 'தம்'பிரியாணியும்

205 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Dec 16, 2022, 9:33:59 PM12/16/22
to vallamai
தொகையிலக்கியத்தில் திறக்கப்படாத பக்கங்கள் பல. அவற்றில் ஒன்று இந்த 'தம்'பிரியாணி.

முரியடுப்பு என்ற சொற்றொடர் தொகை இலக்கியத்தில் இடம்பெறுவது என்னவோ ஒரே ஒரு பாட்டில் தான் (பெரும்பாணாற்றுப்படை அ.94-100). ஆனால் முரியடுப்புகள் பற்றிய செய்திகள் பல பாடல்களில் உள்ளன. 

முதலில் முரியடுப்பு என்றால் என்ன என்பதைத் தெளிவாக்கிக் கொண்டு; பிறகு பெரும்பாணாற்றுப்படைப் பாடல் அடிகளை விவரமாகப் பார்க்கலாம். 

முரி என்பதற்கு அகராதி 'வளைத்து ஒடித்தல்/ வெட்டி முரித்தல்/ துண்டாக்கல்/ முழுவதாக உள்ளதில் இருந்து குறைத்தல்' என்ற விளக்கத்தைத் தருகிறது. 
இவ்விளக்கம் சுள்ளிகளுக்குப் பொருத்தமானது ஆகிறது. ஆகையால் எங்கெல்லாம் சுள்ளிகளை வைத்துச் சமையல் ஆகிறதோ; அங்கெல்லாம் 'முரியடுப்பு' எரிவதாகவே பொருள் கொள்ள வழி கிடைக்கிறது.
(தொடரும்)
சக 


seshadri sridharan

unread,
Dec 16, 2022, 11:16:26 PM12/16/22
to vall...@googlegroups.com
சுல் > சுள் > சுள்ளி > சுள்ளை - ஒண்மை கருத்து, வெம்மை கருத்து கொண்டது. சுள் > சொள் > சோள் >  மஞ்சள் நிறத்தில் ஒளிரும் தென்னமெரிக்க கூலம். சுல் > சுள் > சுண்ணாம்பு > காய்ந்த கிளிஞ்சலை நீரில் இட்டால் வேகும் வெள்ளிய கார்ப்பு சுவை உள்ள சுண்ணம்.

சுல் > சொல் > ஒளிரும் நெல். நெல்லும் ஒளிரும் தன்மை கொண்டதே. நெல் > நெருப்பு காண்க. தமிழ்ச் சொல்லாய்வு குழுவில் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் அளித்த விடை இது.
 

seshadri sridharan

unread,
Dec 17, 2022, 12:43:57 AM12/17/22
to vall...@googlegroups.com
வெண்மை கருத்து, ஒண்மை கருத்து - சுல் > சொல் - தெளிவாகப் பேசு. 
பேசு > புல் - புய் > பெய் > பெய்சு > பேசு -  தெளிவாக உரை.   புல் > புலர் > தெளிவதால் வெளிச்சமாதல். பாவாணர் பேசு என்பதை சொல்லாக மழை போல் கொட்டுதல்  என்று பொருத்தமில்லாமல் உரைக்கிறார். 

seshadri sridharan

unread,
Dec 17, 2022, 4:03:08 AM12/17/22
to vall...@googlegroups.com
சுல் என்ற வெண்மை கருத்து வேர் சு என குறுகி சமசுகிருதத்தில் நல்ல என்ற பொருளில் வழங்குகிறது. நல் > நள் > நாள்  வெள்ளொளி கருத்து வேர். நல்ல என நன்மையை குறித்தது. ஒல் > ஒள்  கன்னடத்தில் ஒள்ளெய என நல்ல என்ற பொருளுடன் வழங்குகிறது  
Su (सु).

1) Well, good, excellent; as in सुगन्धि (sugandhi). சு+கந்தி - நறுமணம் 

2) Beautiful, handsome; as in सुमध्यमा, सुकेशी (sumadhyamā, sukeśī) &c.

3) Well, perfectly, thoroughly, properly; 

5) Much, very much, exceedingly; सुदारुण, सुदीर्घ (sudāruṇa, sudīrgha) &c.

6) Worthy of respect or reverence.

kanmani tamil

unread,
Dec 19, 2022, 1:50:48 AM12/19/22
to vallamai


5
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்,
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
10
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.
புறம்.325

ஒடுமரங்களும் இலந்தை மரங்களும் நிறைந்த காட்டில் இருந்த குடியிருப்பு. மன்றத்தில் நின்றது இரத்திமரம் அதாவது; இலந்தை மரம். ஊர்த் தலைவன் வீட்டு வேலிப் படலை வைரம் பாய்ந்த ஒடுமரத்தால் ஆனது. அக் கானவர் தலைவனை வேந்தனே எதிர்த்து வந்தாலும்; தாங்கக் கூடிய வலிமை வாய்ந்ததாகக் கருத்து உரைக்கிறது பாடல். 

வேட்டையாடிக் கிடைத்த முள்ளம்பன்றியையும் உடும்பையும் அம் முற்றத்தில்
சுட்டுக் கூறு போடுகின்றனர் கானவர். சுட்ட ஊன்மணம் ஊர்மன்றம் வரை பரவுகிறது; அங்கே வில் வைத்து விளையாடும் சிறுவர் மூக்கை எட்டுகிறது.  

இதனால் சுடப் பயன்படுத்திய சுள்ளிகளுள் இலந்தைச் சுள்ளிகளும் ஒடுமரச் சுள்ளிகளும் அடங்கும். முல்லைத் திணைமாந்தர் தம் முரியடுப்பை இலந்தை, ஒடுமரம் ஆகியவற்றின் சுள்ளிகளால் கூட்டி எரித்தனர். 
முரியடுப்புச் சமையலுக்கு ஒரு காணொலி.
சக
(தொடரும்) 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRVgaramgZCvVVVE8pmmPfK15va-7oj7nu-sNddhfgoNQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Dec 20, 2022, 12:43:51 AM12/20/22
to vallamai
ஆலத்தூர் கிழார் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கொடைச் சிறப்பைப் பாடும் போது; அவனிடம் பொருள் பெறுமுன்; தான் உண்ட உணவுமுறை பற்றிப் பாடி இருக்கிறார். 

காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்,
10
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,
புறம்.34

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உண்டவர்; இரண்டு வேளையும் வரகுச் சோறு தான். அதில் பாலும் தேனும் ஊற்றிச்; சுட்ட முயல்கறியோடு சுற்றம் சூழ; இலந்தை மரத்தடியில் இருந்த மன்றத்தில் அமர்ந்து பகிர்ந்து உண்ட வாழ்க்கை முறை கிள்ளிவளவனால் மாறியது என்கிறார். 

காட்டு முயலைப் பிடித்துச் சுட்ட மன்றத்தில் இலந்தை மரம் நின்றது என்பதால் சுடுவதற்கு இலந்தைச் சுள்ளிகள் பயன்பட்டன எனத் தெரிகிறது. 

பச்சைக் கறியைக் கிழிப்பது கடினம். சுட்டு வெந்த கறியைக் கிழித்துப் பங்கிடுவது எளிது. எனவே "சூடு கிழித்து..." என்கிறார். 

ஆலத்தூர் கிழார் முயல்கறியை இலந்தைச் சுள்ளிகளாலான முரியடுப்பில் சுடுவது பற்றிப் பேசுகிறார். இன்னொரு முரியடுப்புக் காணொலி; ஊனைக் கல்லில் ஏற்றி வைத்துச் சுடுவது காண்க. 
சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 20, 2022, 12:11:39 PM12/20/22
to vallamai
சோழநாட்டு வீரர்கள் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்த இடத்தில் பனங்கிழங்கைச் சுட்டுத் தின்றனர் (புறம். 225). எதிரி நாட்டில் அவர்கள் உண்ணத் துணையாகச் சுள்ளிகளே கிடைத்திருக்கும். இப்படிப் பனங்கிழங்கைச் சுட்டுத் தின்னும் வழக்கம் இன்றும் நம் சமுதாயத்தில் உள்ளது. பனங்காட்டில் பனஞ்சுள்ளிகளே முரியடுப்பாக அமைய இயலும். இதோ காணொலி:

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 21, 2022, 3:24:22 AM12/21/22
to vallamai
சோழநாட்டில் காவிரி கடலோடு கலக்குமிடத்துப் புகார் நகரம். 
மருத வளமும் நெய்தல் வளமும் ஒருங்கு கிடைக்கும் சங்கமத்துறை. 
அங்கு வீரர் தம்முள் நடத்திக் கொள்ளும் போட்டி. 
போர்வீரரைப் பொறுத்த வரை அது அவர்கள் போர்ப்பயிற்சி எடுக்கும் முன்னோட்டக் களம். 

ஓய்வெடுக்கும் வீரர் அக்களத்தில் வயலாமைப் புழுக்கையும் கடலிறவின் சூட்டையும் ஒருங்கு சமைத்து உண்டனர் (பட்டினப்பாலை அ.61-64). புழுக்கு என்பது நீரிலோ ஆவியிலோ வேக வைப்பது; சூடு என்பது சுட்டது. 

ஒரு புழுக்கும் சூட்டும் சேர்த்து உண்ணும் பண்டைத் தமிழர் பாரம்பரியத்தைத் தொகையிலக்கியத்தில் பரக்கக் காணலாம். 

பண்டைத்தமிழகக் கடற்கரைகளில் நெடுகப் புன்னை மரங்களும் ஞாழல் மரங்களும் அடும்புக் கொடியும் நிறைந்து இருந்தன. 

வீரர் தாமே இறாலைச் சுடுவதற்கும்; வயல் ஆமையை வேக வைப்பதற்கும் பயன்படுத்திய முரிகள் புன்னை, ஞாழல், அடும்பு ஆகிய தாவரங்களின் எச்சங்களாக இருக்கவே வாய்ப்பு மிகுதி. 

முரியடுப்பில் இறாலைச் சுடும் காணொலி இதோ:


ஒரு கல் போதும்; சட்டி/ கரண்டி தேவை இல்லை. 

முரியடுப்பில் வேக வைப்பது பற்றிய காணொலி பின்னர்...
சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 22, 2022, 1:49:16 AM12/22/22
to vallamai
கழனி காவலர் பழனத்தருகில் முரியடுப்பு மூட்ட என்ன கிடைக்கும்?

வைக்கோல் கிடைக்கும். 

காவலில் ஈடுபடுவோர் கொஞ்சம் வயிற்றுக்குள் தீனி போட நினைக்கும் போது; பழனத்து ஆமையைப் பிடித்துச் சுட்டு; நத்தைகளைப் பிடித்து வேகவைத்துப் பசி ஆறுகின்றனர். சட்டியே இல்லாமல் முரியடுப்பில் நத்தை வேக வைக்கும் காணொலி. நத்தைக்கூடே அடுகலனாக அமைந்து...; 
இக்காணொலி வயல் அருகில் எடுக்கப்படவில்லை; அதனால் வைக்கோல் இல்லை. ஆனால் முரியடுப்பு தான். 
 

"பழன யாமைப் பாசடைப் புறத்துக் 
கழனி காவலர் கடுநந்து உடைக்கும்” (நற்றிணை 280)
சுட்டு உண்ட யாமையின் ஓட்டில் நத்தையை உடைத்தனர். யாமையை முரியடுப்பில் சுடுவதற்கு...


இதுவும் வயல்வெளி அருகில் எடுக்கப்பட்டது அன்று.

ஆக எந்த உயிரினத்தையும் விட்டு வைக்காமல் தமிழர் ரசித்து ருசிக்க முரியடுப்புகளைப் பயன்படுத்தி உள்ளனர் என்று தெரிகிறது.

சக
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 24, 2022, 4:24:55 AM12/24/22
to vallamai
புனக்காவலர் பன்றியை வீழ்த்திவிட; அதைச் சுடுவதற்குக் காய்ந்த மூங்கிலை உரசி நெருப்பு உண்டாக்கவும்; பன்றியின் மயிரைச் சீவி நீக்கவும்; கூத்தரை  அறிவுறுத்துகிறது கூத்தராற்றுப்படை

கழுதில் சேணோன் ஏவொடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,

நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்

நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்

இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முளி கழை இழைந்த காடுபடு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து,(மலைபடுகடாம் அ.243-249) என்ற அறிவுரையை இன்றைய நடைமுறைகள் அப்படியே பின்பற்றுவதைக் காணொலிகள் காட்டுகின்றன.

பன்றியை வெட்டிச் சமைக்கும் முன் முடிநீக்கிச் சுத்தம் செய்தல்:


கூத்தர் கடந்த காடு மூங்கில் காடு ஆதலால் அவரது முரியடுப்பில் மூங்கிலின் பயன்பாடு இருந்தது.

மூங்கிலைப் பயன்படுத்திப் பன்றியைச் சுடல்

இதுவரை தமிழ் இலக்கியம் ஆங்காங்கு பேசும் சுடுவதற்குரிய முரியடுப்புகளைக் கண்டோம்.

இனி பிரியாணி, 'தம்'பிரியாணி ஆகியவற்றைத் தமிழ் இலக்கியம் எவ்வாறு ஆங்காங்கு குறிப்பிடுகிறது? / விளக்குகிறது? என ஆழமாகப் பார்த்த பிறகு முரியடுப்பில் நீர் வார்த்துப் புழுக்கியது எங்ஙனம் எனக் காண்போம்.

சக
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 27, 2022, 9:46:20 AM12/27/22
to vallamai
இன்றைய தமிழ்ச் சமூகம் நெல்லரிசிச் சோற்றுடன் ஊனைச் சேர்த்துச் சமைப்பதைப் பிரியாணி என்கிறது. அவ்வூனின் வகையை ஒட்டி அவ்வுணவு வகைகள்  மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி , வான்கோழி பிரியாணி என்றெல்லாம் பெயர் பெறுகின்றன. அத்துடன் காளான், முட்டை, பனீர், காய்கறிகள், தக்காளி, பட்டாணி ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரியாணி செய்யும் நடைமுறையும் உள்ளது.   

தொகையிலக்கியம் நெல்லரிசி மட்டுமின்றிப் புல்லரிசியுடனும் ஊனைச் சேர்த்துச் சமைத்தமை பற்றிப் பேசும் இடங்கள் உள்ளன. 
வலைத்தளக் காணொலிகளுள் (Utube)பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக மூங்கில் அரிசியில் சமைக்கப்படும் பிரியாணி பற்றிய செய்முறைக் குறிப்பு உள்ளது எனினும்; அது இன்று பெருவழக்கில் இல்லை.

ஊனை அரிசியுடன் சேர்த்துச் சமைப்பதே பிரியாணி எனச் சொல்வதில் மாற்றுக்கருத்திற்கு வழி இல்லை. உணவியல் வல்லுநர் பிரியாணியின் பூர்விகம் பற்றிக் கூறும் கருத்து (அது இசுலாமியர் வருகைக்குப் பின்னர் அவரது ஆட்சியின் போது பெருவாரியாக வழக்கில் இருந்தது என்பது...) ஏற்றுக் கொள்ள இயலாதது. ஏனெனில் அதில் பயன்படுத்தப்படும் மணப்பொருட்கள் அத்தனையும் நம் தமிழகத்து மலைக்காடுகளில் விளைபவை. 

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 'ஊன்சோறு' பற்றிப் பேசும் இடங்கள் மிகப்பல (நன்றி: tamil concordance). 'ஊன்துவை அடிசில்' என்ற தொடர் பிரியாணியின் பூர்விகப் பெயர் எனலாம். விளக்கப் பெயராகவும் அமைகிறது. அக்குறிப்புகள் இடம்பெறும் சூழல் அவ்வுணவின் தொடக்க காலச் செய்முறை குறித்த தகவல்களைத் தருகின்றன.      
 
"புகழ் படப் பண்ணிய பேரூன்சோறும்" மதுரைக்காஞ்சியில் இடம்பெறும் குறிப்பு ஆகும் (அடி-533). அந்தக் காலத்திலேயே இந்த பிரியாணிக்கு மவுசு ஜாஸ்தி தான். அதனாலேயே அது புகழ் பெற்ற உணவு என்னும் அடைமொழி பெற்று உள்ளது. பாரம்பரியமான 'தம்'பிரியாணி செய்முறைக்கு ஒரு காணொலி:  


சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 27, 2022, 2:19:09 PM12/27/22
to vallamai
அத்தகைய புகழ் பெற்ற சோறில் மிகுதியான ஊன் 
பெய்து இருப்பதே சிறப்பு என்ற கருத்தும் மேற்சுட்டிய மதுரைக் காஞ்சி அடியில் இடம்பெற்று உள்ளது. அதனால் தான் 'பேரூன்' என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 

இது இன்றுவரை நிலவும் கொள்கையே. நடைமுறையில் பரிமாறும் ஒவ்வொரு கரண்டி பிரியாணியிலும் ஊன்துண்டு விழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. அதனால் தான் பின்வரும் திரைப்படப் பாடல் "சோத்துக்குள்ள கறியா; கறிக்குள்ள சோறா" என மலைக்கும்படி இருந்த பிரியாணி பற்றிப் புனைகிறது. 


(தமிழின் போதாத காலம்- /கறி, கரி/ இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் பொதுவெளியில் இப்படித் தப்புத் தப்பாகப் பரப்புகின்றனர்)

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 27, 2022, 10:55:30 PM12/27/22
to vallamai
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய குமட்டூர் கண்ணனார் அவனிடத்துத் தான் விரும்பி உண்டு மகிழ்ந்த பிரியாணி பற்றிப் பாடுகிறார். 
"மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு" (பதிற்றுப்பத்து-12) மட்டன் பிரியாணி தான். ஏனென்றால் 'மை ஊன்' என்பது செம்மறி ஆட்டுக் கறியைக் குறிப்பது. 

வெண்ணெல் அக்காலத்து நெல்வகை. 

நெல்லரிசியும் ஆட்டுக்கறியும் சேர்த்துச் சமைத்த பிரியாணி விருந்து.

'தம்'பிரியாணி செய்முறைக்கு இன்னொரு காணொலி:
சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 28, 2022, 5:47:50 PM12/28/22
to vallamai
சிலப்பதிகாரம் செங்குட்டுவன் என்று கற்பித்துப் பாடிய கடல்பிறக்கோட்டிய குட்டுவனைப் பரணர் பாடிய பாடல்; 
"சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்" (பதிற்றுப்பத்து-45)
என அவன் தனது வெற்றிக்குக் காரணமான போர் வீரர்க்கு அளித்த விருந்தின் சிறப்பை எடுத்து ஓதுகிறது. 

இங்கே கூர்ந்து நோக்க வேண்டியது பிரியாணியில் இருக்க வேண்டிய சோறு, கறி ஆகியவற்றின் விகிதாசாரம். சோறு வேறு; கறி வேறு என எண்ண இயலாதபடி மிகுந்த ஊன் சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவு. 

 சென்ற பதிவில் பார்த்த திரைப்படப் பாடல் மீண்டும் இங்கு கருதத்தக்கது. 
"சோத்துக்குள்ள கறியா? கறிக்குள்ள சோறா?" என்ற வினாக்கள் இன்று / நேற்றுத் தோன்றியவை அல்ல. 2000 ஆண்டுகட்கு முன்னர் அரசர்கள் அளித்த விருந்தில் தோன்றியவை. 

ஒரு பாரம்பரியமான பிரியாணி செய்முறை (இது 'தம்'பிரியாணி இல்லை) கறிக்குள்ளே சோறுவைத்துச் சமைக்கும் பிரியாணி:


சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 29, 2022, 8:50:02 PM12/29/22
to vallamai
தனக்காகப் போரிட்ட வீரர்க்கு அளித்த விருந்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கலந்து இருந்ததை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடமும் காண இயல்கிறது. 

சொல்லப் போனால் ஒருபடி மேலே போய் சைவ விருந்து, அசைவ விருந்து இரண்டும் அளிக்கிறான். "செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வாலூன் வல்சி மழவர்"க்கு (பதிற்றுப்பத்து- 55)
மெய்ம்மறையாக அமைபவன் அவன் ஆவான். 

பொருள்கோளின் வகைகளாக நன்னூலார் சொல்பவற்றைக் கருத்தில் கொண்டு இத் தொகை இலக்கிய அடிகட்குப் பொருள் தேடுவது தேவை ஆகிறது. 

மேற்சுட்டிய பகுதிக்கு உரை எழுதும் போது ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பழைய உரைகாரரைப் பின்பற்றிச்; 'செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையல் ஆதலால்; "வெண்துவை" என்றும்; சிவந்த ஊன் ஆயினும் அத்துவையல் தன் செம்மை தோன்றாது ஆயினமையின்; "செவ்வூன் தோன்றா" என்றும் கூறினார்.' என்கிறார். 
பழைய உரைகாரர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை என்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை என்றவாறு...' என்கிறார்.

'துவை' = துவையல் என அவர்கள் இருவரும் கூறும் பொருள் பொருந்தவில்லை.

'ஊன்துவை அடிசில்' = ஊன் மிகுதியாகக் கலந்த சோறு என இதுகாறும் கண்டோம். அதில் எந்தக் குழப்பமும் வரவில்லை. 

மொத்தத்தில் (பெயர் தெரியாத இப்) பழையவுரைகாரர் கொழுத்த கிடாய்க்கறியோடு சற்றும் தொடர்பு இல்லாதவர் (வெஜிடேரியன்); தாவரவுணவு மட்டுமே அறிந்தவர்; உண்டவர் எனப் புரிகிறது.

'மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர் சொன்ன பொருளை அப்படியே ஏற்றுக் கொண்டு தொடர்கிறார். 

கறிக்காகப் பேணி வளர்த்த ஆட்டின் இறைச்சி செந்நிறம் தெரியாத அளவு வெள்ளையாகக் கட்டிக் கொழுப்பு சூழ்ந்து இருப்பதை அசைவப் பிரியர் அறிவர். அதனால் தான் வெண்ணெல்லின் வெள்ளரிசியோடு சேர்த்துச் சமைத்த பிரியாணியைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்; 
"செவ்வூன் தோன்றா வெண்துவை... வாலூன் வல்சி" எனப் பாடி உள்ளார். 
இந்த அசைவ விருந்து மட்டும் இன்றிச் சைவ விருந்தும் அளித்ததை; "முதிரை வாலூன் வல்சி" என விதந்து பொருள் கொள்ள வேண்டும். 
முதிரை = துவரை முதலிய பயறு வகைகள். வெண்ணெல் அரிசியோடு பருப்பு சேர்த்துச் செய்யும் 'அரி(சீம்)சியும் பருப்பு சாதம்' இன்றுவரை மிகவும் போற்றப்படும் உணவு வகையாக உள்ளது நோக்கற்குரியது. அதற்குக் 'கொங்கு பிரியாணி / கவுண்டர் வீட்டு பிரியாணி' என்ற பெயர்வழக்கு இருப்பதும் குறிப்பிடத் தக்கது. 

இன்றும் கேரளத்தில் 'சாப்பாடு ஆயிற்றா?' என்பதை 'ஊனு கழிஞ்சோ?' என்று தான் வினவுகின்றனர். இங்கு 'ஊன்' = 'உணவு' ஆகிறது. வெண்ணெல்லின் அரிசியால் ஆன உணவு ஆகையால் "வாலூன்" எனப்படுகிறது. 

'ஊன் வல்சி' இருபெயரொட்டாக அமைந்துள்ளது. 

இறைச்சியின் செம்மையை மறைத்துக் கொழுப்பு மிகுந்து இருக்க; வெண்ணெல் அரிசியோடு சேர்த்துச் செய்த பிரியாணி, துவரம்பருப்பை வெண்ணெல் அரிசியோடு கலந்து சமைத்த பிரியாணி என இருவகை பிரியாணிகளையும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவர்க்கு அளித்தான். 

சக 
(தொடரும்)

seshadri sridharan

unread,
Dec 30, 2022, 2:20:44 AM12/30/22
to vall...@googlegroups.com
On Fri, 30 Dec 2022 at 07:20, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தனக்காகப் போரிட்ட வீரர்க்கு அளித்த விருந்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கலந்து இருந்ததை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடமும் காண இயல்கிறது. 

சொல்லப் போனால் ஒருபடி மேலே போய் சைவ விருந்து, அசைவ விருந்து இரண்டும் அளிக்கிறான். "செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வாலூன் வல்சி மழவர்"க்கு (பதிற்றுப்பத்து- 55)
மெய்ம்மறையாக அமைபவன் அவன் ஆவான். 

பொருள்கோளின் வகைகளாக நன்னூலார் சொல்பவற்றைக் கருத்தில் கொண்டு இத் தொகை இலக்கிய அடிகட்குப் பொருள் தேடுவது தேவை ஆகிறது. 

மேற்சுட்டிய பகுதிக்கு உரை எழுதும் போது ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பழைய உரைகாரரைப் பின்பற்றிச்; 'செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையல் ஆதலால்; "வெண்துவை" என்றும்; சிவந்த ஊன் ஆயினும் அத்துவையல் தன் செம்மை தோன்றாது ஆயினமையின்; "செவ்வூன் தோன்றா" என்றும் கூறினார்.' என்கிறார். 
பழைய உரைகாரர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை என்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை என்றவாறு...' என்கிறார்.

'துவை' = துவையல் என அவர்கள் இருவரும் கூறும் பொருள் பொருந்தவில்லை.

துவ் என்ற வினை வேர் அடித்தல், இடித்தல் என்னும் பொருள் கொண்டது.

துணி துவை என்றால் துணியை கல்லில் மோதி அடிப்பது.
துவக்கம் - ஒன்றை அடித்து நிகழ்ச்சியை தொடங்குவது.
துவையல் - குழவியை இருபுறத்தையும் அம்மியில் இடித்து மசித்து மாவாக்கி திரட்டிய தொகையல். 
துவ்வலித்தல் - பழுக்கக் காய்ச்சிய இரும்பை இரண்டு தட்டுதட்டி நீரில் தோயத்தல். 
அடித்து துவம்சம் செய்தல் என்றால் அழித்தல். இச்சொல் சமசுகிருதம் அல்ல ஆனால் தெலுங்கில் வழங்குகிறது. 

kanmani tamil

unread,
Dec 30, 2022, 1:19:12 PM12/30/22
to vallamai
இந்தப் பதிவு யானைக்கறி பிரியாணி பற்றியது (ஆனால் அது 'தம்'பிரியாணி அன்று.). மிகுந்த ஊனைச் சோற்றுடன் சேர்த்துச் சமைப்பது தானே பிரியாணி.

காட்டு யானையைப் புலி கொன்று தின்றது. பசியாறியதும் எஞ்சியதை விட்டுச் சென்றது. 

காட்டை வாழ்வாதாரமாகக்  கொண்ட மறவர் அதைக் கண்டவுடன் நீண்ட இரும்புக் காழ்களைக் கொண்டு வந்து அவற்றில் முடிந்த மட்டும் அவ் யானைக்கறியை அறுத்துக் கோத்துத் தம் குடியிருப்பிற்கு எடுத்துச் சென்றனர் (அங்கே அதைச் சுட்டுக் கொள்வர்). இன்னும் கறி எஞ்சி இருந்தது. 

உமணர் உப்பு விற்க அவ்வழியாகக் காட்டைக் கடந்தனர். ஆங்காங்கு அடுப்பு மூட்டிச் சமைத்து உண்பது அவரது வாழ்க்கைமுறை. எஞ்சிக் கிடந்த யானைக்கறியைக் கண்டவுடன் தாம் ஏற்றிய உலையில் சோற்றோடு சேர்த்து அக்கறியை (புழுக்கி) வேகவைத்து உண்டனர்.
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்    5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம்
(அகம்.169). 

இன்றும் யானை இறைச்சி உணவு ஆவதை உலகின் பிற நாகரிகத்தாரிடம் காண இயல்கிறது. 
'யானை கறி' விருந்துடன் 91வது பிறந்த நாளை அமர்க்களமாகக் கொண்டாடிய ஜிம்பாப்வே நாட்டு அதிபர் இருக்கிறார்.
சிந்து சமவெளி அகழ்வாய்வாளரும் யானையின் எலும்புகள் கிடைத்து உள்ளமையால் அதன் இறைச்சி உணவாகப் பயன்பட்டு இருக்க வேண்டும் எனக் கருத்து உரைத்து உள்ளனர். தொகையிலக்கியத்தில் யானைக்கறி பிரியாணி ஆகிறது. 


சக
(தொடரும்)

On Fri, 30 Dec 2022, 7:19 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
தனக்காகப் போரிட்ட வீரர்க்கு அளித்த விருந்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கலந்து இருந்ததை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடமும் காண இயல்கிறது. 

சொல்லப் போனால் ஒருபடி மேலே போய் சைவ விருந்து, அசைவ விருந்து இரண்டும் அளிக்கிறான். "செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வாலூன் வல்சி மழவர்"க்கு (பதிற்றுப்பத்து- 55)
மெய்ம்மறையாக அமைபவன் அவன் ஆவான். 

பொருள்கோளின் வகைகளாக நன்னூலார் சொல்பவற்றைக் கருத்தில் கொண்டு இத் தொகை இலக்கிய அடிகட்குப் பொருள் தேடுவது தேவை ஆகிறது. 

மேற்சுட்டிய பகுதிக்கு உரை எழுதும் போது ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பழைய உரைகாரரைப் பின்பற்றிச்; 'செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையல் ஆதலால்; "வெண்துவை" என்றும்; சிவந்த ஊன் ஆயினும் அத்துவையல் தன் செம்மை தோன்றாது ஆயினமையின்; "செவ்வூன் தோன்றா" என்றும் கூறினார்.' என்கிறார். 
பழைய உரைகாரர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை என்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை என்றவாறு...' என்கிறார்.

'துவை' = துவையல் என அவர்கள் இருவரும் கூறும் பொருள் பொருந்தவில்லை.

'ஊன்துவை அடிசில்' = ஊன் மிகுதியாகக் கலந்த சோறு என இதுகாறும் கண்டோம். அதில் எந்தக் குழப்பமும் வரவில்லை. 

மொத்தத்தில் (பெயர் தெரியாத இப்) பழையவுரைகாரர் கொழுத்த கிடாய்க்கறியோடு சற்றும் தொடர்பு இல்லாதவர் (வெஜிடேரியன்); தாவரவுணவு மட்டுமே அறிந்தவர்; உண்டவர் எனப் புரிகிறது.

'மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர் சொன்ன பொருளை அப்படியே ஏற்றுக் கொண்டு தொடர்கிறார். 

கறிக்காகப் பேணி வளர்த்த ஆட்டின் இறைச்சி செந்நிறம் தெரியாத அளவு வெள்ளையாகக் கட்டிக் கொழுப்பு சூழ்ந்து இருப்பதை அசைவப் பிரியர் அறிவர். அதனால் தான் வெண்ணெல்லின் வெள்ளரிசியோடு சேர்த்துச் சமைத்த பிரியாணியைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்; 
"செவ்வூன் தோன்றா வெண்துவை... வாலூன் வல்சி" எனப் பாடி உள்ளார். 
இந்த அசைவ விருந்து மட்டும் இன்றிச் சைவ விருந்தும் அளித்ததை; "முதிரை வாலூன் வல்சி" என விதந்து பொருள் கொள்ள வேண்டும். 
முதிரை = துவரை முதலிய பயறு வகைகள். வெண்ணெல் அரிசியோடு பருப்பு சேர்த்துச் செய்யும் 'அரி(சீம்)சியும் பருப்பு சாதம்' இன்றுவரை மிகவும் போற்றப்படும் உணவு வகையாக உள்ளமை நோக்கற்குரியது. அதற்குக் 'கொங்கு பிரியாணி / கவுண்டர் வீட்டு பிரியாணி' என்ற பெயர்வழக்கு இருப்பதும் குறிப்பிடத் தக்கது. 

kanmani tamil

unread,
Dec 31, 2022, 1:37:35 PM12/31/22
to vallamai
சோழன் நலங்கிள்ளி பாணர்க்கு அளித்த பிரியாணி. 

இளவேனில் காலத்தில் மதுரை மாட்டுத்தாவணிக்குள் நுழையும்போது கூடை கூடையாகக் காணக்கூடியது மல்லிப் பூப்பந்தும் முல்லைப்பூப்பந்தும்... மாலை ஆறுமணிக்கு மேல் தான் அந்தப் பூக்கள் விரியும். விளக்கு வைக்கும் முன்னர் அந்தப் பூப்பந்துகள் மொட்டுக்களால் ஆனவையே. 

அந்த முல்லைப் பூப்பந்தைக் கட்டும் போது; இன்னும் பசுமை அடையாத துளிர்களைச் சேர்த்துக் கட்டினால்... இடையிடையே அந்தத் துளிர்கள் எட்டிப் பார்க்க... 
எப்படி இருக்கும்!!!??? (அது மாந்தளிராகவும் இருக்கலாம்./ பிற தளிர்களாகவும் இருக்கலாம்... typical தமிழக மக்களின் தோல் நிறம்... brown) 
அது மாதிரி வெண்மையான சோற்றுருண்டையில் இடையிடையே ஊன் எட்டிப் பார்க்க; பிரியாணியை உருட்டிப் பாணர்க்கு வழங்கித் தன் வெற்றிகளைச் சிறுசோற்று விழாக்களாகக் கொண்டாடினான் சோழன்.

பிரியாணியில் போட்ட ஊனின் வண்ணம் துல்லியமாகப் பிரியாணிப் பிரியர்களுக்குத் தெரியும். கன கச்சிதமான உவமை!!! வண்ணப்புல உருக்காட்சி. 

கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியைப் பாடுகிறார். 

"ஊன்சோற்று அமலை பாண்கடும்பு அருத்தும்...
வாயில் மாடம் தோறும் மைவிடை வீழ்ப்ப..." புறம்.33 என...

சோழன் நாடு பிடித்தான். எந்தெந்த மன்னரை எல்லாம் தோற்கடித்தானோ அந்தந்த மன்னனது மாடமாளிகையின் வாயிலில் செம்மறிக் கிடாய் வெட்டப்பட்டது. புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது. ஊன்சோறு சமைக்கப்பட்டது. பாடல் அவன் பாண்டிய நாட்டில் ஏழு குறுநில மன்னரின் எயில்களைத் தனதாக்கினான் என்று கூறுகிறது. அந் நாடுகளை ஒட்டிய காடுகளில் இருந்த பாசறைகளில் பாணர் வந்து வஞ்சி பாடினர். 

பாண்டியநாட்டில் நுழைந்ததால் தான் ஆட்டுக்கறி பிரியாணி உருண்டை 'புலராப் பச்சிலை இடையிட்டுக் கட்டிய' பூப்பந்து போன்றது என்ற உவமையைப் பெற்றது போலும்.

முல்லை என்ற குறிப்பு பாடலில் நேரடியாக இடம் பெறவில்லை. பழைய உரையாசிரியர் அப்பூப் பந்தை முல்லைப் பூப் பந்து என்கிறார். சாலப் பொருந்துகிறது.

அதுபோல் பாட்டில் 'சிறு' என்ற சொல்லே இல்லை. பழையவுரைகாரர் 'சிறுசோறு, பெருஞ்சோறு என விழா வகை உண்மையின்...' என்று விளக்கி இருப்பதால் நாமும் இதைச் சிறுசோற்று விழா என்று சொல்லலாம். 

ஏனெனில் பெருஞ்சோற்று விழா நடத்திப் பேர் வாங்கிய வேந்தன் வேறு ஒருவன்... பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இருக்கிறான்.
சக 
(தொடரும்)

 

kanmani tamil

unread,
Jan 1, 2023, 2:26:35 PM1/1/23
to vallamai
வேள்பாரி அளித்த பிரியாணி 

"... மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங்கு ஈயும்" (புறம்.113) எனப் பாரி இறந்த பின்னர் அவனது மகளிரை அழைத்துச் செல்லும் கபிலர் அவன் நாட்டில் உண்டு மகிழ்ந்ததை நினைவு கூர்ந்து பாடுகிறார். 

செம்மறிக் கிடாய்க் கறியோடு சமைத்த கொழுப்பு மிகுந்த ஊன்சோறு எனப் பிரியாணியைப் புனைகிறார். 

பழையவுரையாசிரியர்
"அட்டான்று ஆனா" எனும் தொடர்க்கு 'இடையறவின்றி' மீண்டும் மீண்டும் சமைக்க எனப் பொருள் கொள்கிறார். ஔவை சு.துரைசாமிப் பிள்ளையோ "ஆனாக் கொழுந்துவை ஊன்சோறு" எனச் சேர்த்து 'விருப்பம் அமையாத கொழுந்துவை' ஊன்சோறு எனப் பொருள் கொள்கிறார். 

பாரி கொடுத்த பிரியாணியை உண்ண உண்ண விருப்பம் தீராதாம். 

இப்படி ரசித்து ரசித்து உண்ட பிரியாணியை... அதாவது கொழுந்துவை ஊன்சோறை... 'கொழுவிய துவையையும் ஊனையும் உடைய சோற்றை' எனப் பொருள் கூறித் துவை வேறு; ஊன் வேறு என இருவேறு பண்டங்களாகக் கொண்டு மயங்க வேண்டிய தேவை என்ன? "கொழுந்துவை ஊன்" உம்மைத் தொகை இல்லை. 

"கொழுந்துவை ஊன்சோறு" = மிகுதியாக ஊன்கலந்த சோறு= பிரியாணி எனப் பொருள் கொள்ளும் போது அது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறையோடு ஒத்துப் பொருளும் சிறக்கிறது.
சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 2, 2023, 12:10:42 PM1/2/23
to vallamai
ஔவையாருக்கும் அவர் தலைமை ஏற்று நடத்திய கலைக் குழுவிற்கும் அதியமான் அளித்த பிரியாணி.

அடிக்குறிப்பு ஔவையார் பாடியதாகச் சுட்டும் பாடலடிகள்:
"அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல்..." (புறம்.390); மரபு வழிப்பட்ட; மிகுந்த ஊன் கலந்த; அமிழ்தம் போன்ற பிரியாணியை வெள்ளித் தட்டுகளில் வைத்து; உண்ணச் செய்தான். 

கிணைப்பொருநன் பாடுவது போல் ஔவையார் பாடியதால்; புறப்பாடல்களின் 
வரலாற்று மதிப்பைக் கேள்விக்குறி ஆக்கிய பாடல். 

எனக்கென்னவோ அப்படி ஐயம் எழவில்லை. மேலாண்மை விதிகளும் நிர்வாக உத்திகளும் 2000ஆண்டுகட்கு முன்னரே மிகத் திறம்படக் கையாளப்பட்டதன் அடையாளமாகத் தான் இந்தப் பாடலை நான் பார்க்கிறேன். 

ஔவையின் தலைமையில் பாணரும் பொருநரும் குழுவாகச் சேர்ந்து; நாஞ்சில் நாடு தொடங்கி அதியன் ஆண்ட தருமபுரி வரை நடந்து;  பல நாடுகளையும் (நன்செய் வேளாண்மை நிகழ்ந்த பகுதிகள்) ஊர்களையும்
(கிழார்கள் தலைவராக இருந்த 
உழவர் வாழ்விடங்கள்) தாண்டிக்; குடிமுறைகள் (பிற திணைமாந்தர் வாழ்விடங்கள்)
பலவற்றைக் கடந்து; பிரிந்து சிதறாமல் கட்டுக்கோப்புடன் தொடர வேண்டுமென்றால்; அதற்கு எந்த அளவு நியதிகள் பின்பற்றப்பட்டு இருக்கும்!? அத்தகு நியதிகளில் ஒன்று தான்... கலைக்குழுவில் இருந்த கிணைப்பொருநன் வேந்தனுக்குச் செலுத்திய நன்றிக்கடனாக அமைந்த பாடல் குழுத்தலைவியாகிய ஔவையின் அங்கீகாரம் பெற்றதால்; அவளது
அதிகாரபூர்வமான  போற்றலாக உருப்பெற்று உள்ளது எனக் கருதுகிறேன். 

நிற்க; நிற்க... நாம் பிரியாணிக்கு வருவோம். 

இரண்டு பெருமைகள் இந்த பிரியாணிக்கு உரியன. 
1. அது 'அமிழ்தம்' என்று போற்றத்தக்கது. தேவலோக அமிர்தத்தோடு ஒப்ப வைத்து எண்ணத்தக்கது. (இந்த தேவலோகம், இந்திரன், அமிர்தம் போன்ற தொன்மங்கள் 2000 ஆண்டுப் பழைமை வாய்ந்தவை என்பதற்குப் புறப்பாடல்களே சான்று தருகின்றன.) பசிக்கு மருந்தாகும் உணவு உயிர் காப்பதால்; அது எதுவாயினும் அமிழ்தம் தானே!!!

2. அது பாரம்பரியமான உணவுவகைகளில் ஒன்று. தொகை இலக்கியக் காலத்திற்கு முன்னரே இவ்வாறு தானியமும் இறைச்சியும் சேர்த்து வேகவைத்து உண்ணும் வழக்கம் தமிழ்மண்ணில் வேரூன்றி இருந்தது. (தொடரும் பதிவுகளில் நெல்லரிசி மட்டும் இன்றி பிற அரிசிகளையும் ஊனோடு வேகவைத்து பிரியாணி ஆக்கிய அழகான செய்முறைகளையும் காணலாம்.)

ஆக அரசாண்ட வேந்தனாகிய அதியமான் பிரியாணி கொடுத்துக் கலைக்குழுவை ஆதரித்தான் (இன்றும் அரசியலில் ஒரு கூட்டம் நடக்க வேண்டும்  என்றால் பிரியாணி தானே பேசுகிறது.). 
 சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 3, 2023, 2:02:40 PM1/3/23
to vallamai
சேரர், நலங்கிள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன், அதியமான் முதலிய வேந்தரும் வேள் பாரியும் பிரியாணி விருந்து வைத்ததைக் கண்டோம். அவர்கள் மட்டுமின்றி வேங்கடத்துக் குறுநில மன்னனுக்காக நெல் வேளாண்மை செய்ததோடு; தன் பாரம்பரியம் மாறாமல் புன்செய் வேளாண்மையும் செய்த கரும்பனூர் கிழான் என்ற உழவர் தலைவனும் நாடி வந்தோர்க்கு பிரியாணி விருந்து வைத்ததைக் காண இயல்கிறது. 

இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் அந்த பிரியாணியில் ஊற்றிய நெய்யின் மிகுதி. 

சிதைந்த நிலையில் கிடைத்திருக்கும் அப்பாடலின் பகுதி:
....கிணையேம் பெரும!10
நெல் என்னாம், பொன் என்னாம்,
கனற்றக் கொண்ட நறவு என்னும்,
. . . . மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
15
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கிப்,
புரந்தோன் எந்தை.....
(புறநானூறு 384)

தன்னைக் கிணைப் பொருநனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் புறத்திணை நன்னாகனார் நெல், பொன், நறவு... என அவன் கொடுத்த பொருட்கள் பலவற்றையும் விட மேலானது எனப் போற்றுவது அவன் உண்ணக் கொடுத்த பிரியாணி தான்.

'இது போதும்' என்று கூறிய பின்னும் மேலும் மேலும் அளவின்றிப் பரிசில்கள் பல அளித்த கரும்பனூர் கிழான் பசியாறப் பரிமாறியது; 'கொழுத்த ஊனை மிகுதியாகக் கலந்து சமைத்த சோறு' அதாவது; பிரியாணி. 

நன்னாகனாரின் பாட்டு
'உலகைக் காட்டிலும் மிகுதியான புகழை விரும்பிய கரும்பனூர் கிழான்; 
நீரை விட அதிகமாக நெய் விட்டுச் சமைத்த பிரியாணியை அளித்துப் பெருமைக்கு உரியவன் ஆயினான்' என்கிறது.

தொகையிலக்கியப் பாடல்களின் புனைவில் இயல்பு நவிற்சி பேரிடம் பெறுவது சிறப்பு என்ற கருத்து ஒருபுறம் இருக்க; பிரியாணி பற்றிப் பேசும் போது மட்டும் தற்குறிப்பேற்றம் தலைகாட்ட முனைவது அவ்வுணவின் மேல் தமிழக மக்கள் கொண்டிருந்த விருப்பத்தையும் ரசனையையும் புலப்படுத்துகிறது. 

நீர் சடப்பொருள் ஆகும். அது நாணம் கொள்ளும் அளவிற்குப் பிரியாணியில் நெய் இருந்தது எனப் பாடுவது தற்குறிப்பேற்றம் தானே!!!

ஆக பிரியாணி சமைப்பதில்; அன்று முதல் நெய்க்கு இருந்த சிறப்பு பாடலில் தெரிகிறது. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 5, 2023, 12:00:17 AM1/5/23
to vallamai


வீரர் கொண்டாடிய வெற்றிவிழா வழிபாட்டிலும் பிரியாணி இடம் பெற்றது. 

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம்பல் யாணர்
5
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,..."
(நற்றிணை 281)
குற்றமற்றதாகக் கருதி மக்கள் வழிபடும் மரத்தில் தங்கி; அம்மரத்திற்கு மக்கள் இடும் பலியைத் தானும் உண்ணுங் காக்கை; காற்று மோதுகின்ற நெடிய கிளையோடு சேர்ந்து தானும் அசைந்து; தளிகையாகப் படைத்த உணவை உட்கொள்ளும் போதும்; சோழரது
'கழாஅர்' என்னும் பதியிலே போர்வெற்றியைத் தொடரும் கொண்டாட்டத்தில் கிடைக்கும் அளவில்லாத சோற்றுடன் கூடிய பலவகைப் படையல்களுள்; சொல்லில் அடங்காத பெருமை உடைய; மிகுந்த ஊன் கலந்த பிரியாணியைத் தின்னக் கருதும்...
என்பது பொருள் ஆகும். 

"விடக்குடைப் பெருஞ்சோறு" = ஊன் துண்டங்களை மிகுதியாக உடைய பிரியாணி. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 5, 2023, 3:50:09 PM1/5/23
to vallamai
மனிதர்கள் மட்டுமின்றிக் காக்கையும் விரும்பி ஏங்கும் பெருமைக்கு உரியது பிரியாணி எனத் தன் குறிப்பைக் காக்கை மேல் ஏற்றிப் பாடி இருக்கிறார் கழார்க் கீரன் எயிற்றியார். 

இப்படிப் பிரியாணியைப் பற்றிப் பேசும் போது தான் தொகையிலக்கியத்தில் தற்குறிப்பேற்றம் தலையெடுப்பதைக் காண்கிறோம் ஆதலால்; 2000 ஆண்டுகட்கு முன்னரே பிரியாணி பெற்ற உயரிடம் சொல்லாமலே விளங்குகிறது. 

வாட்டாற்று எழினியாதன் என்ற வேளிர்குலத் தோன்றல் விருந்திற்கு முயல்கறி பிரியாணி அளித்தான்.

"குறுமுயலின் நிணம் பெய்தந்த 
நறுநெய்ய சோறு என்கோ" (புறம்-396) 
என அவனிடம் உண்ட விருந்தில் இடம்பெற்ற பண்டங்களைப் பற்றிய பட்டியலில் வியக்கிறார் மாங்குடி கிழார். 

ஊன்பொரியல் (கொழுந்தடிய சூடு), மட்டு (நறவு/ தேறல்/ கள்), திறந்து மறந்த நெற்கூட்டில் விரும்பிய அளவு முகந்து கொள்ளும் உணவு என்ற வரிசையில் இடையில் சொல்லப்படுவது முயல்கறி பிரியாணி. 

இங்கும் மணம் பொருந்திய நெய்யுடன் ஆக்கப்பட்டது என்ற குறிப்பு உள்ளமை பிரியாணிச் சமையலுக்கு நெய்யின் தேவையை உணர்த்துகிறது. 'குறுமுயலின் நிணம்' என்று குறிப்பிட்டுச் சொல்வது அந்த ஊனின் மென்மையைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 6, 2023, 1:30:27 PM1/6/23
to vallamai
ஓய்மான் வில்லிஆதன் அளித்த பன்றிக்கறி பிரியாணி 

காட்டுப்பன்றியை வேட்டை ஆடுவதன் பெருமையைப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனாரின் கன்னி வேட்டை பற்றிய பகுதி தெரிவிக்கிறது. 

காட்டுப்பன்றி மலைப்பகுதியில் நடக்கும் வேளாண்மைக்கு இடையூறு செய்யக் கூடியது ஆதலால்; புனக்காவலர் அவற்றைக் கொன்றது பற்றியும் கூத்தர் அப்பன்றியை முழுதாக எப்படிச் சுட்டனர் என்பது பற்றியும் 24.12.'22 தேதியிட்ட பதிவில் கண்டோம். 

ஓய்மான் வில்லிஆதன் எனும் வேளிர்குலத் தோன்றல் அளித்த விருந்தில் பன்றியின் ஊனைப் பெய்து அட்ட பிரியாணி பற்றி;
"குறுந்தாள் ஏற்றைக் கொழுங்கண் நல்விளர் 
நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா..." எனப் (புறம்.379) புறத்திணை நன்னாகனார் பாடுகிறார். 

குறுகிய கால்களை உடைய ஆண்பன்றியின் கறியினைப் புத்துருக்கு நெய்யொடு சேர்த்து அன்றைப் போதில் சூடாகச் சமைத்த சோறு = பிரியாணி
பிரியாணி அன்றாடம் சமைத்தே உண்ணற்கு உரியது. 

பழஞ்சோறு அளித்து விருந்து புறந்தந்த நிகழ்வுகள் பற்றிப் பல தகவல்கள் தொகையிலக்கியத்தில் உள்ளன. அவற்றோடு மாறுபட்டுப்; பன்றிக்கறி சேர்த்துச் சமைத்த சுடுசோற்றை விருந்து ஆக்கியதை விதந்து போற்றுகிறார் புலவர். 

புத்துருக்கு நெய்யின் அருமை அறிந்து; சமைத்த உணவின் மணத்தை உணர்த்துவது இங்கு நோக்கற்கு உரியது. 

நாட்சோறு × பழஞ்சோறு 
ஓய்மான் விருந்தாக அளித்தது அன்றாடம் சமைத்த பிரியாணி எனப் பாடி இருப்பது அவன் அளித்த விருந்தின் மேன்மையை மட்டும் இன்றி அவனது வளமான வாழ்க்கையைப் புகழ்வதாகவும் கொள்ள இடம் உளது. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 7, 2023, 9:25:03 AM1/7/23
to vallamai
வேள் நன்னன் உண்ணத்தக்க மீன் பிரியாணி (fish biriyani). 

முள்நீக்கிய மீனின் வெண்தசையை நெல்லரிசியோடு சேர்த்துச் சமைத்த பிரியாணி நன்னன் சேய் நன்னனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஏற்ற உணவு ஆகும். இதைக் கொண்கானத்துக் களமர் கூத்தருக்கு விருந்து ஆக்குவர். 

முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு………. 

திண்டோள் நன்னர்க்கும் அயினி சான்ம்“ (மலை.465-467)

ஆம்; நன்னன் வேளாளன் ஆயினும் வேந்தர் பொறாமைப்படும் அளவிற்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவன். நிறைய பொன் (தங்கம்) வைத்து இருந்தான் (நற்றிணை 391). பொன் ஆபரணங்கள் அணிந்து இருந்தான் (பதிற்றுப்பத்து 40). தம்முடைய தங்கத்தை வேந்தர் கவர்ந்து விடுவார்களோ என்று அஞ்சிய வேளாளர் எல்லாம் நன்னனுடைய பாழியில் (மலையின் மேல் அகழ்ந்து அமைத்த அகழி... முதலைகள் நிறைந்து; அவனது மாளிகையைச் சூழ்ந்து இருந்தது. அகம்.15& மலைபடுகடாம் அ.90-93) அவற்றை நம்பிக்கையோடு ஒளித்து வைத்து இருந்தனர் (அகம். 258). நெல் வேளாண்மை செய்த குறுநில மன்னனாகிய அவனுக்கு யானைகள் இடையூறாக அமையக் கூடியன ஆயினும்; ஆடம்பரத்தின் அடையாளமாக ஒரு யானை வளர்த்தான் (அகம்.50). 

அவ்வளவு சிறப்புடைய நன்னன் உண்ணத்தக்கது என மீன்பிரியாணி பெருமை பெற்றது. 

மீனிறைச்சியுடன் கலந்து சோறு சமைக்கும் வழக்கம் கம்போடியா தேசத்தில் இன்றும் உள்ளது. பிலிப்பைன் தீவுகளில் மீனிறைச்சி கலந்த lugaw எனும் தானிய உணவு உண்டு. சீன தேசத்தில் முள் நீக்கப்பட்ட மீனுடன் சேர்த்துச் சமைக்கும் நெல்லரிசி கஞ்சியாகக் குழந்தைகட்கு உரிய உணவாகிறது.

சக
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 7, 2023, 11:05:30 AM1/7/23
to vallamai
ஓய்மான் வில்லிஆதன் அளித்த பன்றிக்கறி பிரியாணி 

காட்டுப்பன்றியை வேட்டை ஆடுவதன் பெருமையைப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனாரின் கன்னி வேட்டை பற்றிய பகுதி தெரிவிக்கிறது. 

காட்டுப்பன்றி மலைப்பகுதியில் நடக்கும் வேளாண்மைக்கு இடையூறு செய்யக் கூடியது ஆதலால்; புனக்காவலர் அவற்றைக் கொன்றது பற்றியும் கூத்தர் அப்பன்றியை முழுதாக எப்படிச் சுட்டனர் என்பது பற்றியும் 24.12.'22 தேதியிட்ட பதிவில் கண்டோம். 

ஓய்மான் வில்லிஆதன் எனும் வேளிர்குலத் தோன்றல் அளித்த விருந்தில் பன்றியின் ஊனைப் பெய்து அட்ட பிரியாணி பற்றி;
"குறுந்தாள் ஏற்றைக் கொழுங்கண் நல்விளர் 
நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா..." எனப் (புறம்.379) புறத்திணை நன்னாகனார் பாடுகிறார். 

குறுகிய கால்களை உடைய ஆண்பன்றியின் கறியினைப் புத்துருக்கு நெய்யொடு சேர்த்து அன்றைப் போதில் சூடாகச் சமைத்த சோறு = பிரியாணி
பிரியாணி அன்றாடம் சமைத்தே உண்ணற்கு உரியது. 

பழஞ்சோறு அளித்து விருந்து புறந்தந்த நிகழ்வுகள் பற்றிப் பல தகவல்கள் தொகையிலக்கியத்தில் உள்ளன. அவற்றோடு மாறுபட்டுப்; பன்றிக்கறி சேர்த்துச் சமைத்த சுடுசோற்றை விருந்து ஆக்கியதை விதந்து போற்றுகிறார் புலவர். 

புத்துருக்கு நெய்யின் அருமை அறிந்து; சமைத்த உணவின் மணத்தை உணர்த்துவது இங்கு நோக்கற்கு உரியது. 

நாட்சோறு × பழஞ்சோறு 
ஓய்மான் விருந்தாக அளித்தது அன்றாடம் சமைத்த பிரியாணி எனப் பாடி இருப்பது அவன் அளித்த விருந்தின் மேன்மையை மட்டும் இன்றி அவனது வளமான வாழ்க்கையைப் புகழ்வதாகவும் கொள்ள இடம் உளது. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 7, 2023, 11:08:38 AM1/7/23
to vallamai
வேள் நன்னன் உண்ணத்தக்க மீன் பிரியாணி (fish biriyani). 

முள்நீக்கிய மீனின் வெண்தசையை நெல்லரிசியோடு சேர்த்துச் சமைத்த பிரியாணி நன்னன் சேய் நன்னனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஏற்ற உணவு ஆகும். இதைக் கொண்கானத்துக் களமர் கூத்தருக்கு விருந்து ஆக்குவர். 

முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு………. 

திண்டோள் நன்னர்க்கும் அயினி சான்ம்“ (மலை.465-467)

ஆம்; நன்னன் வேளாளன் ஆயினும் வேந்தர் பொறாமைப்படும் அளவிற்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவன். நிறைய பொன் (தங்கம்) வைத்து இருந்தான் (நற்றிணை 391). பொன் ஆபரணங்கள் அணிந்து இருந்தான் (பதிற்றுப்பத்து 40). தம்முடைய தங்கத்தை வேந்தர் கவர்ந்து விடுவார்களோ என்று அஞ்சிய வேளாளர் எல்லாம் நன்னனுடைய பாழியில் (மலையின் மேல் அகழ்ந்து அமைத்த அகழி... முதலைகள் நிறைந்து; அவனது மாளிகையைச் சூழ்ந்து இருந்தது. அகம்.15& மலைபடுகடாம் அ.90-93) அவற்றை நம்பிக்கையோடு ஒளித்து வைத்து இருந்தனர் (அகம். 258). நெல் வேளாண்மை செய்த குறுநில மன்னனாகிய அவனுக்கு யானைகள் இடையூறாக அமையக் கூடியன ஆயினும்; ஆடம்பரத்தின் அடையாளமாக ஒரு யானை வளர்த்தான் (அகம்.50). 

அவ்வளவு சிறப்புடைய நன்னன் உண்ணத்தக்கது என மீன்பிரியாணி பெருமை பெற்றது. 

மீனிறைச்சியுடன் கலந்து சோறு சமைக்கும் வழக்கம் கம்போடியா தேசத்தில் இன்றும் உள்ளது. பிலிப்பைன் தீவுகளில் மீனிறைச்சி கலந்த lugaw எனும் தானிய உணவு உண்டு. சீன தேசத்தில் முள் நீக்கப்பட்ட மீனுடன் சேர்த்துச் சமைக்கும் நெல்லரிசி கஞ்சியாகக் குழந்தைகட்கு உரிய உணவாகிறது.

சக
(தொடரும்}

kanmani tamil

unread,
Jan 8, 2023, 1:34:55 PM1/8/23
to vallamai
நவிர மலைநாட்டினர் கூத்தர்க்கு விருந்தாகக் கொடுத்த வெள்ளாட்டங்கறி பிரியாணி 

இமயவரம்பனும் நலங்கிள்ளியும் வேள்பாரியும் (முறையே 28.12.'22, 1.3.'23, 2.1.23 ஆகிய மூன்று பதிவுகள்) செம்மறிக் கிடாய்க்கறி பிரியாணி அளிக்க; மலையில் நெல் விளைவித்த கொண்கானத்து மக்கள் சமைத்ததோ வெள்ளாட்டு ஊனைப் 'பொடி'அரிசியோடு சேர்த்து நெய்பெய்து அட்ட பிரியாணி. (அளவில் சிறிய அரிசிக்குப் 'பொடிஅரிசி' என்பது இன்றைய பேச்சு வழக்கு.) 

"பொன் அறைந்தன்ன நுண்ணேர் அரிசி
வெண்ணெறிந்து இயற்றிய மாக்கண் அமலை
தண்ணென் நுண்ணிழுது உள்ளீடாக" (மலைபடுகடாம் 440-443)

நன்னனை நாடிச் செல்லும் கூத்தர்க்கு மலைநாட்டு ஊர்களில் வேளாண் தொழிலில் ஈடுபடுவோர் சமைத்துக் கொடுத்த நெல்லரிசியின் இயல்புகள் (physical properties) இங்கு நோக்கத்தக்கன. 

பொன்னைப் பொடியாக்கியது போலச் சிறிதாகவும் நேர்த்தியாகவும் இருந்த மேன்மையான அரிசி. இன்றைய தமிழில் கெடும்பு என அழைக்கப்படும் 'கறுப்பு' (வாணிபத் தமிழ்வழக்கு) இல்லாத அரிசி. குறுணை இல்லாதது... கறுப்பும் குறுணையும் அரிசியின் தரத்தைக் குறைக்கக் கூடியவை. 

'வெண்ணெறிந்து' = வெள்ளாட்டை வெட்டி 

'தண்ணென் நுண்ணிழுது' = நெய் = குளிர்ந்தவுடன் தொட மென்மையாகவும்; காண்பதற்குக் குறுமணல் போலவும் இருக்கும்.
இன்றும் தரமான நெய்க்குரிய விளம்பரம் 'மணல் மாதிரி; குறுணை குறுணையா' இருப்பதாகத் தான் உயர்த்திப் பேசுகிறது. அது தானே நல்ல நெய்க்கு உரிய இலக்கணம்.

பிரியாணிக்கு உரிய மூன்று அடிப்படைப் பொருட்களின் தரத்தையும் ஒருசேரப் பாடி விட்டார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். 

இந்த பிரியாணி பார்க்க எப்படி இருந்தது என்றும் சொல்கிறார். 'மாக்கண் அமலை'...
சோற்றின் இடையிடையே வெள்ளாட்டின் ஊன் கருமையான கண் போன்று தோன்றியதாம். 

இங்கே எனக்கு வியப்பளிக்கும்  செய்தி... பிரியாணிக்குள்ளே கிடக்கும் கறியின் நிறம்.

1.1.23 பதிவு செம்மறிக்கறி பிரியாணியில் எந்த நிறத்தில் கிடக்கும் என உவமை மூலம் கோவூர் கிழார் விளக்கியதைக் காட்டியது. அது புதிதாகத் துளிர் விட்ட தளிரின் நிறம் = brown 

வெள்ளாட்டுக்கறியோ சமைத்த பின்னர் இன்னும் கொஞ்சம் அடர்த்தியான கருமை சேர்ந்து இருக்கும். அசைவம் உண்டு கண்டவர் இந்த உண்மை அறிவர். அதை 'மாக்கண் அமலை' என்ற சொற்றொடர் உணர்த்துகிறது. (இன்றைய கறிக்கடையில் கலப்படமாக வந்த கன்றுக்குட்டிக் கறியாக இருந்தால் மெலிதான சிவந்த வண்ணம் கூடியதாக இருக்கும்). கட்புல உருக்காட்சிகளுள் ஒரு வகையான வண்ணப்புல உருக்காட்சி. 

தொகையிலக்கியம் எந்த அளவு துல்லியமாக நடப்பியல் சார்ந்த செய்திகளைத் தருகிறது என்பதை இதன் மூலம் தெளியலாம்.

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 9, 2023, 1:33:59 PM1/9/23
to vallamai
நவிர மலைக் குறத்தியின் கைமணத்துடன் ஒரு மூங்கிலரிசி பிரியாணி 

“அருவிதந்த பழஞ்சிதை வெண்காழ் 

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை 

முழவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை 

பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ 

வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழநின் 

இன்புளிக் கலந்து மாமோராகக் 

கழைவளர் நெல்லின் அரியுலை  ஊழ்த்து 

வழையமை சாரல் கமழத்

துழைஇ  

குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி “ (மலை.174-183)

இப் பாடற்பகுதி அருவியில் அடித்து வரப்பட்ட பலாப் பழத்தின் கொட்டைகள், வேட்டையாடிக் கொன்ற கடமானின் கொழுத்த தசையும் பன்றியின் நிணமிக்க தசையும், பெண்நாய் கவ்விக் கொண்டுவந்த உடும்பு என வகைவகையாக அனைத்தையும் சேர்த்துக் குறமகள் மூங்கிலரிசி பிரியாணி சமைத்தமையை விவரிக்கிறது. இதற்கு அவள் மோரை உலையாக ஊற்றுகிறாள். அத்துடன் இனிய புளியைச் சேர்க்கிறாள். மென்மையாக வெந்த அம்மூங்கில் அரிசி வெண்மையாகக் காட்சியளித்து; சுரபுன்னைக் காடுகள் மிகுந்த மலைச்சாரல் முழுதும் மணத்தது என்பதால்; அசைவப் பிரியர்களின் மூக்கைத் துளைக்கும் நுகர்புல உருக்காட்சி அமைந்துள்ளது.


மூங்கிலையே அடுகலனாகப் பயன்படுத்திச் செய்யும் மூங்கிலரிசி பிரியாணி பற்றிய காணொலி:

https://youtu.be/tCozVWpAUCc

நவிரமலைக் குறத்தி வேறு அடுகலனைப் பயன்படுத்தினாள். அவள் துழாவிச் சமைத்தாள் என்பதால் அவளது அடுகலன் மூங்கில் குழாய் இல்லை.

‘இன்புளிக் கலந்து’ என்னும் தொடர் சிறப்பான சுவைப்புல உருக்காட்சி ஆகும். புளியின் பெயர்க்காரணமே அதன் புளிப்புச் சுவை என்று இருக்க இங்கு இனியபுளி என்று விரியும் தொடரின் நோக்கம் ஓர்ந்து அறியத்தக்கது. இப்பாடற் பகுதி சுட்டும் இடப்பின்புலம் கொண்கானம் ஆகும். அதற்குச் சற்றே வடக்கில் உள்ள தென்கன்னடத்தின் டும்கூர் புளி வணிகர்கள் இன்றும் போற்றும் விலைமிகுந்த நயம்புளி என்பது நோக்கற்குரியது. அப்புளியின் இனிமை தமிழகத்து நாட்டுப்புளி, கேரளத்தின் கொடம்புளி இரண்டினின்றும் மாறுபட்டு இன்றுவரை மக்கள் தேடிப்பெறும் சுவை மிகுந்த உணவுப்பொருளாகும்.

அரிசியுடன் ஊன்கலந்து ஆக்கும் உணவில் புளிச்சுவை சேர்க்கும் வழக்கம் இன்றும் தொடரும் சமையல்முறையே ஆகும். எந்த பிரியாணியாக இருப்பினும் எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறும் போக்கு இன்றளவும் உள்ள நடைமுறை ஆகும். பின்வரும் காணொலியுள் புளிக்குப் பதிலாகத் தக்காளியும் எலுமிச்சைச் சாறும் பயன்படுத்தி பிரியாணி செய்வதைக் காண்க.

https://youtu.be/H7L-Lw1JdVU


மோரை உலையாக ஊற்றுவதும் இன்றுவரை உள்ள வழக்கமே ஆகும். கோடைகாலத்தில் ஆக்கும் சோறு விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க இன்றும் மோர் சேர்த்துச் சமைப்பது உண்டு. கம்மஞ்சோறு, கேப்பைக்களி முதலியவற்றுக்கு உலையாக மோர் விடும் வழக்கம் தமிழகத்தில் நிலைத்துள்ளது.

மேற்கண்ட காணொலியுள் பிரியாணிக்கு மோரை உலையாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தயிரைச் சேர்த்து அதில் தண்ணீரைக் கலக்கின்றனர்.

அவ்வப்போது சேர்க்கும் நெய் கவனிக்கத் தக்கது.

பிரியாணியின் செய்முறையில் அன்று முதல் இன்று வரை பெருத்த மாற்றம் ஏதும் இல்லை.

மோர்உலை > தயிரும் தண்ணீரும்

புளி > தக்காளியும் எலுமிச்சையும் என்பது போன்ற காலத்திற்கு ஏற்ற சிறு சிறு பதிலிகளே.

அதனால் மலைப்புறம் எங்கும் மணம் வீசத் துழாவி அட்ட பிரியாணியில் தமிழகத்து மலைக்காடுகளில் விளைந்த மணப்பொருட்கள் சேர்க்கப்பட்டன என்று அறுதியிட்டுக் கூறலாம். அதன் காரணமாக அவை யவனர் நாடுகட்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

மரக்கறி பிரியாணியில் பல காய்கறிகளைப் பயன்படுத்துவது போல அசைவ பிரியாணியில் பலவகை ஊனையும் ஒருசேரக் கலந்து சமைப்பதால் இதை சூப்பர் பிரியாணி எனலாம். ஆனாலும் இது 'தம்'பிரியாணி இல்லை.

பிலிப்பைன் தீவுகளில் இறைச்சியுடன் புளி சேர்க்கும் வழக்கம் இன்றும் உள்ளது. Sinigang என்னும் உணவில் இறைச்சியுடன் புளியைக் கலக்கும் வழக்கம் உள்ளமையை வலைத்தளம் காட்டுகிறது

(https://en.wikipedia.org/wiki/Congee). 


சக

(தொடரும்)    

kanmani tamil

unread,
Jan 10, 2023, 1:37:13 PM1/10/23
to vallamai
காட்டுவழியில் இன்னொரு துரித பிரியாணி (fast food biriyani)

உமணர் காட்டுவழியில் கிடைத்த யானைக்கறியைத் துரிதமாக பிரியாணி ஆக்கியதை 30.12.2022 தேதியிட்ட பதிவில் பார்த்தோம் (அகம்.169).

அதுபோல் வழிப்போக்கர் காட்டில் கண்ட மான்கறி உணங்கலை அங்கு சேகரித்த மூங்கில் அரிசியோடு சேர்த்துச் செய்யும் பிரியாணியும் துரித பிரியாணி தான்.

காட்டில் புலி மான்ஏற்றினை (ஆண்மான்) வேட்டையாடியது. வீழ்த்திய மானை வசதியாக ஒரு பெரிய பரந்து விரிந்த கருங்கற் பாறையில் கிடத்தி அதன் வயிற்றுப் பகுதியை உண்டு; பசி அடங்கியவுடன் எஞ்சிய ஊனை அங்கேயே விட்டுச் செல்லக்; கதிரவனின்  வெம்மையில் சிலகாலம் காய்ந்ததால் அவ்வுணங்கல் இயற்கையாகப் பலப்படுத்தப்பட்டு வாடூன் ஆயிற்று. (பண்டு தொட்டுத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்தினர் மிஞ்சிய ஊனை வாடூன் ஆக்கும் வழக்கம் கொண்டு இருந்தனர் என்பதற்குத் தொகையிலக்கியத்தில் ஆதாரமும் செய்முறையும் உள்ளன.) 

இந்த ஊனைக் கண்ட வழிப்போக்கர்களுக்கு மகிழ்ச்சி. வயிற்றுப் பசி தீர வழி பிறந்து விட்டது. 
இப்போது பிரியாணி ஆக்க ஒரு தானியம் வேண்டும். காட்டு வழியில் மூங்கில் புதர்களில் முற்றி வெடித்துச் சிதறிய அரிசி கிடைக்கும். கிடைத்ததை சேகரித்துச்... சமைப்பதற்கு 
உலை ஏற்ற வேண்டும். 

முல்லைநிலம் தன் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்த நிலையில்; ஆயர் தம் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேர்ந்து கிடை போட்டுக் காவல் இருக்க; அவரிடத்தில் கிடைத்த தயிரைப் பெய்து ...

துரித பிரியாணி ரெடி. 

"கருங்கல் வியலறைக் கிடப்பி வயிறுதின்று
இரும்புலி துறந்த ஏற்றுமான்உணங்கல்
நெறிசெல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலிகழை நெல்லின் அரிசியோடு ஓராங்கு
ஆனிலைப் பள்ளி அளைபெய்து அட்ட
வால்நிணம் உருக்கிய வால்வெண் சோறு
புகர்அரைத் தேக்கின் அகல்இலை மாந்தும்" (அகம்.107)

வால்நிணம் = வெண்மையான கொழுப்பு 

நெய் இல்லை; அதற்குப் பதிலாகக் கொழுப்பு உருகி 'இல்லாத நெய்'யின் இடத்தைப் பிடித்து பிரியாணியை முழுமை ஆக்கியது. 

'வால்வெண்' சோறு- ஒருபொருட் பன்மொழி. 

உண்கலம்? 
மழை பொய்த்துப் பாலை ஆன மலைக்காட்டில் ஓங்கி நின்ற தேக்கின் அகன்ற இலையே உண்கலம் ஆயிற்று. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 11, 2023, 2:36:33 PM1/11/23
to vallamai
கபிலர் உண்ட பிரியாணியும்
ஊன் சூட்டும்...
அதாவது அசைவ பிரியாணியும் தந்தூரியும்...

பிரியாணிக்கு அன்றைய வெஞ்சனம் தந்தூரி 

பண்டைத் தமிழரின் வளமான உணவில் வேகவைத்த பண்டம் ஒன்றும் சுட்ட பண்டம் ஒன்றும் இடம் பெறுவதைப் பல பாடல்களில் பரவலாகக் காண இயல்கிறது. 

புழுக்கும் சூட்டும் இணையாக இடம் பெறும் பாடல்கள் பல உள. அவற்றுள் சில வருமாறு: நற்றிணை 83& 280; புறம்.212, 215& 399; பட்டினப்பாலை 61-64

வேகவைத்த உணவு புழுக்கு எனப்படும். சுட்ட உணவு சூடு எனப்படும். 

செல்வக் கடுங்கோ வாழியாதன் கைகளின் வன்மைக்கும் தன் கைகளின் மென்மைக்கும் காரணம் கூறும் கபிலர் ஊன் சூட்டையும் ஊன் பிரியாணியையும் எடுத்து உண்பதைத் தவிர வேறெந்த வேலையும் தன் கைகளுக்கு இல்லை என்கிறார்.

கபிலர் ஊன்சூட்டையும் பிரியாணியையும் இணை சேர்த்துப் புனைந்து உரைக்கும் அழகே தனி. நன்கு அனுபவித்து ருசித்ததன் விளைவு ஆகலாம். 
"புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ ஊன்துவை 
கறிசோறு உண்டு" (புறம்.14)

ஔவை சு.துரைசாமிப்பிள்ளை சூடு, ஊன்துவை கறிசோறு என இரண்டு பதார்த்தங்களாகக் கொள்ளாமல் 'புலால் நாற்றத்தை உடையவாகிய செவ்வித் தடியை பூநாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி அமைந்த ஊனையும் துவையையும் கறியையும் சோற்றையும் உண்டு' எனப் பொருள் உரைக்கிறார். தொடரும்
விளக்கம் 'பூநாற்றம் தாளிதத்தாற் பெற்ற இனிய மணம்' என அமைகிறது. 

பழைய உரையாசிரியர் 'ஊன் துவை கறியொடு கூடிய சோறு' என ஒரே உணவுப் பண்டமாகக் கொள்கிறார்.

'ஊன்' என்ற சொல்லைப் பூட்டுவிற் பொருள்கோளுக்கு ஏற்ப இருபுறமும் இணைக்கும் போது சூடு, பிரியாணி என இரு உணவுப் பண்டங்கள் உம்மை உருபு இன்றி இடம்பெற்று இருப்பதைக் காண இயல்கிறது. 

அத்துடன் இன்னும் சற்றுத் தெளிவாக நன்கு புரிந்து கொள்ள; 'பூநாற்றத்த' என்ற சொற்றொடரின் ஆழத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(1) 'புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்'
என ஊன் என்ற சொல்லைப் பின்னால் இணைத்துப் பொருள் கொள்ளும் போது...

புலவு நாற்றத்த பைந்தடி= கவிச்சி வீசும் பச்சைக் கறியை; 

பூநாற்றத்த புகை கொளீஇ ஊன்= நீறு பூத்த தணலில் சுடுவதால்  புகைமணம் பெற்ற ஊன் 
எனப் பொருள் கிடைக்கிறது. அதாவது; சுட்ட கறிக்கே உரிய கணப்பின் வாசம் பெற்ற ஊன்= கங்கின் நெடி கலந்த ஊன்.  

இங்கு தாளிதத்திற்கு இடமே இல்லை. 
(இன்னொரு முக்கியமான விஷயம்: நன்கு தீப்பற்றாத; காயாத; ஈரச் சுள்ளிகளில் இருந்து எழும் புகை எந்தச் சமையலுக்கும் உகந்தது அன்று; விரும்புதற்கு உரிய சுவையைத் தராது; அப்படிப் புகை மண்டிடின் சமைக்கப்பட்ட உணவில் அதன் வாடை கலந்து விடப்; பாலாயினும் வெந்நீராயினும் கூட அருந்த இயலாது.)

(2) 'ஊன் துவை கறி சோறு' என ஊன் என்ற சொல்லை முன்னர் வைத்துப் பொருள் கொள்ளும் போது...
ஊன்துவை கறிசோறு= ஊன் துவை அடிசில்= அசைவ பிரியாணி என்ற தெளிவுரை கிடைக்கிறது. 

மேற்சுட்டிய பாடலில் பிரியாணி வேக வைத்தது; எனவே புழுக்கு ஆகும். சுட்ட ஊன் சூடு- பக்க உணவு (side dish) ஆகும். 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 12, 2023, 1:35:43 PM1/12/23
to vallamai
இல்லறத்தார் விருந்தோம்பலில் முதலிடம் பெற்ற உணவு பிரியாணி தான்.

குறிஞ்சி வளத்தின் பின்னணியில் பால்வயத்தான் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து விட்டான் நம்ம ஹீரோ.
பதறி நின்றாள் ஹீரோயின். அவளைச் சமாதானப் படுத்துகிறான்.  

"சாறயர்ந் தன்ன மிடாச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலர்உணப்
பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் வான்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது" (குறிஞ்சிப்பாட்டு 201-207)
'உன்னை மணந்து கொள்வேன். நம் இல்லறம் இனிக்க விருந்து ஓம்புவோம்.
திருவிழா கொண்டாடினாற் போன்று; மிடா நிறைந்த சோற்றை வருவோர்க்கு எல்லாம் குறைவின்றிக் கொடுக்கவும்; அவர்கள்  
உண்ணவும்; வசதியாக 
செல்வம் மிகுந்த மனையின் வாயில் பொலிவுற  அகலத் திறந்து இருக்கும். பசிய நிணம் ஒழுகும் நெய் மிக்க அடிசிலை மேன்மையான விருந்தினர் எல்லோரும் உண்ட பின்; எஞ்சியதை உன்னோடு சேர்ந்து உண்பதே இன்பம் ஆகும்' என்று தன் பகல் கனவை... ஆசையை... நோக்கத்தை... விருப்பத்தோடு வெளிப்படுத்துகிறான். 

ஊனும் நெய்யும் மீண்டும் மீண்டும் எல்லாத் தரவுகளிலும் இடம் பெறினும் இங்கே மேலும் இரண்டு செய்திகள் குறிப்பிடத் தகுந்தன. 

(1) இல்லற நெறியில் நின்று; வளமனையில் விருந்து புறந்தரும் போதும்; ஊன் பிரியாணி தான் முதன்மை பெறும் உணவுவகை ஆகும். 

(2) பைந்நிணம் = பசிய கொழுப்பு மிகுந்த ஊன்... அதாவது fresh meat.  வழிப்போக்கர் வாடூனைப் பயன்படுத்திப் பிரியாணியைச் 
சமைத்தனர் என்பதைப் (11.01.'23 தேதியில் - துரித பிரியாணி) பதிவிட்டு இருந்தேன். மேன்மையான விருந்திற்கு உரியதாகப் புத்திறைச்சி பிரியாணியே கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது பொருளாதார அடிப்படையில் ஆன சமூகப் பிரிவினையை அடையாளம் காட்டுவதாக உள்ளது. 

வாடூனைப் (உப்புக்கண்டத்தைப்) பயன்படுத்தி பிரியாணி செய்து விருந்தயரும் சூழலும் தொகையிலக்கியத்தில் உள்ளது என்பது எண்ணத்தக்கது.

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 14, 2023, 8:24:55 PM1/14/23
to vallamai
நவிரமலைக் குறத்தி சமைத்த சூப்பர் பிரியாணியில் (10.01.2023 தேதியிட்ட பதிவு) உடும்புக்கறி இடம் பெற்றதல்லவா?!

இந்த உடும்பு பிரியாணியைத் தான் கொஞ்சம் தேடிக் கஷ்டப்பட்டேன். அது எப்படி கிடைக்காமல் போகும்??!! பாரம்பரியமாக நம் இரத்தத்தில் ஊறிய பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா???!!! குருதியில் ஊறிய உணவுப் பழக்கத்தை லேசுக்குள்ள துடைத்து அழிக்க முடியாது. 

இந்த news18 செய்தித் தொகுப்பில் உடும்பு பிரியாணி செய்து; அதை பந்தாவாக டிக்டாக்கில் போட்டு; போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்ட நம் சகோதரச் செல்வங்களைப் பாருங்கள். 


சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 15, 2023, 1:31:38 PM1/15/23
to vallamai
நவிரமலைக் குறத்தி பிரியாணியில் மான்கறியும் போட்டுச் சமைத்தாள். 

தற்போது நம் தாய்த் திருநாட்டில் மானைக் கொல்வதும் உண்பதும் சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும் ஆதலால்; எந்தக் காணொலியிலும் நம்ம ஊரு மான்கறி பிரியாணி காணக் கிடைக்கவில்லை. 

ஆனால் மான்கறி பிரியாணி ஒரு உலகளாவிய உணவாக உள்ளது. பாருங்கள்...


சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 16, 2023, 6:47:36 PM1/16/23
to vallamai
நவிரமலைக் குறத்தி சமைத்த பிரியாணியில் இட்ட பன்றிக்கறிக்கும் இன்றுவரை தமிழ்மக்கள் உணவுமுறையுள் இடம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதுவும் அவள் சமைத்தது போலவே புளி சேர்த்துச் சமைப்பதைப் பாருங்கள். பன்றிக்கறி பிரியாணிக்கு புளி ரொம்பவே முக்கியம் என்று வலியுறுத்துவதும் காண்க. 


2000 ஆண்டுகளாகத் தமிழர் உணவின் செய்முறையில்  மாற்றம் ஏதும் இல்லை. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 17, 2023, 1:37:15 PM1/17/23
to vallamai
ஆம்; இதுவரை இந்த இழையில் பகிர்ந்த; பண்டைத் தமிழர் உண்ட பிரியாணி வகைகள் அனைத்தும் இன்று வரை தமிழ்ச் சமுதாயத்தில் நடைமுறையில் காணப்படுபவையே. 06.01.2023 அன்று பதிவிட்ட வாட்டாற்று எழினியாதன் விருந்தில் இடம்பெறும் முயல்கறி பிரியாணியும் கீழ்வரும் காணொலியில் பாரம்பரிய முறைப்படி 'தம்'பிரியாணியாகச் சமைக்கப்படுவதைக் காண்கிறோம்.  


சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 18, 2023, 1:31:21 PM1/18/23
to vallamai
நவிர மலைக் களமர் கூத்தருக்கு அளித்த; 'முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு' (07.01.2023ல் பதிந்தது) ஆகிய மீன் பிரியாணி இதோ...


மீனின் முட்களே அதன் எலும்பு மண்டலம் ஆகும். 
சில மீன்களுக்கு அவற்றின் உடலைச் சுற்றி வெளியே  எலும்புக்கூடு (exoskeleton) அமைந்து காணப்படும். அத்தகு மீன்களில் ஒன்று இறால். 
கேரளத்தில் செம்மீன் எனப் பெயர் பெறும் இறாலின் ஒரு வகையை பிரியாணியாகச் சமைப்பதை மேற்சுட்டிய காணொலியால் அறிகிறோம். அதன் தசைப்பகுதியைச் சுற்றியுள்ள கூடு (= முள்) நீக்கப்படுவது 'முள் அரித்து'ச் செய்யப்படும் என்ற இலக்கணத்திற்குப் பொருந்தி உள்ளது. 
'அரி' என வெண்மையான அரிசி (= வெள்ளரி) பாடலில் குறிக்கப்படுவது போன்றே காணொலியிலும் பேசப்படுகிறது. 
சமைத்து முடிந்த பிறகு பிரியாணி வெண்சோறாகக் காணப்படுவதும் கண்கூடு.

சக 
(தொடரும்)


kanmani tamil

unread,
Jan 19, 2023, 7:00:08 PM1/19/23
to vallamai
மல்லிகிழான் காரிஆதி அளித்த முள்ளம்பன்றிக் கறி பிரியாணி
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்,
10
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,
பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு,
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
15
இரும்பனங் குடையின் மிசையும்
(புறம்.177)

மல்லிவளநாடு எனக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மல்லி; இன்று விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிற்றூராகச் சிவகாசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்க்கும் இடையில் உள்ளது. 

சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியிலிருந்து பத்து மணித்துளிகளில் மல்லி சென்று விடலாம். அங்கிருந்து கால்மணி நேரத்தில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றிலும் பனங்காடுகள். 

பாடலில் காரிஆதி இரவலர்க்குப் பனங்குடையில் தான் பிரியாணி அளிக்கிறான். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிறிது தூரத்திலேயே அருவிகளோடு மேற்குமலைத் தொடரின் அடிவாரமும் அங்கிருந்து ஓடிவரும் சிற்றாறும் (காட்டாறு) உள்ளன. இவ்வளம் இவ்வூர்க்கு அருகில் இருக்கும் ஐயனார் மலையில் காண இயல்வதாகும். 

பாடலில் கட்களிப்பால் சிவந்த கண்களை உடைய மக்கள் களாக்கனிகளையும் துடரிப் பழங்களையும் உண்கின்றனர். அலுத்தால் நாவல் கனிகளை ஆற்றின் கரையில் இருந்த மரங்களில் இருந்து பறித்து உண்கின்றனர்.  

ஐயனார் மலையில் பளிங்கர் என அழைக்கப்படும் மலைவாழ் மக்கள் உள்ளனர். இம்மலையில் இருந்து கேரளம் செல்வதற்கு உரிய கணவாயும் உள்ளது (இன்று தூர்ந்த நிலையில்... பல்லிளிச்சான் கணவாய்). ஆங்கிலேயர் ஆட்சியில் போக்குவரத்திற்குப் போடப்பட்ட சாலைகளால் கணவாய் வழியாகக் குடநாட்டுடன் கொண்ட தொடர்பு இன்று இல்லை. ஆனால் முற்காலத்தில் இருந்த தொடர்பின் எச்சமாக இன்றும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் அச்சிடும் போது கொல்லம் ஆண்டையும் சேர்த்து அச்சிடுவது பரவலாகக் காணப்படுகிறது. ஐயனார் அருவியைத் தாண்டி மேலே சென்றால் அடர்ந்த மூங்கில் காடுகள்... மலையும் அதன் மேற்குச் சரிவும் குடநாடு ஆகும். 

எந்த அளவிற்குப் புறநானூற்றில் இடப்பின்புலம் நம்பகத் தன்மையுடன்; உள்ளதை உள்ளபடிப் பாடி இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளவே இந்த பூகோள விவரத்தைத் தருகிறேன் 

பாடலில் மூங்கில் புதர்கள் நிறைந்த குடநாட்டு எயினர் வேட்டையாடிக் கொண்டு வந்த முள்ளம்பன்றியின் கொழுப்பு மிகுந்த புத்திறைச்சியை வைத்து பிரியாணி இரவலர்க்குத் தயார் ஆகிறது. வெண்மையான அவ்வுணவு அன்றாடம் தயாரானதால் 'பசுவெள்ளமலை' என அடைமொழியோடு சிறப்பிக்கப் படுகிறது. (ஓய்மான் வில்லி ஆதன் அளித்த 'நாட்சோறு' போல - 07.01.2023 தேதியிட்ட பதிவு)
பசுவெள்ளமலை × பழம்புகவு (பொம்மல்) 

வேந்தரிடம் கண்கள் பூக்கக் காத்திருந்து பெறும் யானைப் பரிசிலைக் காட்டிலும்; காரியாதியின் முள்ளம்பன்றிக் கறிபிரியாணி மேலானது என்று பாடிப் புகழ்பவர் 
ஆவூர் மூலங்கிழார்.

இப்பிரியாணியைக் காரியாதி முரியடுப்பில் தயார் செய்தான் என்ற உண்மைக்கு ஆதாரமாக அமைவது இன்னொரு புறப்பாடல். 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 20, 2023, 2:38:08 PM1/20/23
to vallamai
காரிஆதி முல்லைத் திணைமாந்தருள் தலைமை சான்றவன். அவனது வாழ்விடத்து நிலத்தில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன். தான் சார்ந்து இருந்த; தன்னை உழுவித்த தலைவனுக்காகக் கரத்தைப் போர் செய்தான் (புறம்.261); நெல் வேளாண்மையும் செய்தான். தனது குறும்பில் கிளைகள் சூழ வாழ்ந்தான். அவரது குடியிருப்பில் வீடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாகத் தம்முள் கள்ளைக் கொடுத்து வாங்கும் அளவு அடுத்தடுத்து இருந்தன. 
அவனது இல்லம் உற்றாரும், உறவினரும் புகுவதற்கு எளிது; பகைவர்க்கு  நுழைய அரிது; தாழ்கள் கோத்த (பொறிகள்) வாயிலை உடையது (புறம்.177).

காரிஆதி தான் வாழுமட்டும் வரையாது விருந்தயர்ந்தான். அவனை உள்ளி வந்தோருள் ஆவூர் மூலங்கிழாரும் ஒருவர். 

அவன் இயற்கை எய்திய பிறகு 
விருந்து புறந்தரல் இடையறவு பட்டது. அவனது 'அடையாப் பேரில்'லின் முற்றத்தில் குவிந்து கிடந்தவை முரிகள் மட்டுமே. அதனால் தான் அவனது இறப்பைப் பாடும் போது;
"வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக" (புறம்.261)
என அவர் புனைந்து உள்ளார். நீரில்லாத ஆற்றில் நிற்கும் ஓடம் எப்படிக் காட்சி அளிக்குமோ அப்படித்தான் 
அவன் வீட்டு முற்றத்தில் முரிக் குவியல் காட்சி அளித்தது என்கிறார்.
எனவே வேந்தர் தரும் யானையைக் காட்டிலும் மேலானது எனப் புகழ் பெற்ற; விருந்தாக அமைந்த முள்ளம்பன்றியின் 'பைந்நிணம் பெய்த பசுவெள்ளமலை' அவன் வீட்டு முற்றத்தில் முரியடுப்பில் தயார் ஆனது என முடிபாகக் கூற இயல்கிறது. 

புறம்.325 முள்ளம்பன்றிக் கறியைக் கூறு போட்ட கானவர் தலைவன் வீட்டு முற்றத்தில் முரியடுப்பு ஏற்றிச் சுட்டதாகப் புனைந்து இருப்பதை ஏற்கெனவே கண்டோம் (19.12.2022 இட்ட பதிவு). 

அதுபோல முள்ளம்பன்றிக் கறிபிரியாணியும் முற்றத்து முரிஅடுப்பில் வேக வைக்கப்பட்டது. எப்படி வேக வைத்தனர் என்பதில் தான் 'தம்'பிரியாணி செய்முறையாகிய  பாரம்பரியத் தோற்றுவாய் அடங்கி உள்ளது. இப்போது எல்லாப் புறமும் ஒரு சுற்றுச் சுற்றி வந்து இழையின் தலைப்பை எட்டிப் பிடித்து விட்டோம். 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 21, 2023, 3:12:52 PM1/21/23
to vallamai
புல்லரிசியில் உப்புக்கண்டம் போட்டு பிரியாணி 

எயினர் குடியிருப்பில்... 
ஈன்பிணவு ஒழிய போகி நோன்காழ்			90
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுகோல்
உளிவாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நிலல் கரம்பை படுநீறு ஆடி
நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவின்			95
நீழல் முன்றில் நிலஉரல் பெய்து
குறும்காழ் உலக்கை ஓச்சி நெடும்கிணற்று
வல்ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவுவாய் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் (பெரும்பாணாற்றுப்படை-90-100)
ஈத்திலை வேய்ந்த குடிசையின் உள்ளே கருஉயிர்த்த எயிற்றி தன் குழந்தையுடன் மான் தோல் படுக்கையில் முடங்கி இருக்கிறாள். மற்ற எயிற்றியர் எல்லாம் ஒருங்கு சேர்ந்து புல்லரிசி சேகரிக்கக் கிளம்பி விட்டனர். 
திரண்டு நீண்ட வலிய இரும்புக் கடப்பாரை- திருத்தமாக ஒரு முனையில் பிடிமானத்திற்கு ஏற்ற பூணும் மறுமுனையில் தோண்டிப் புரட்ட எதுவாக உளி போன்ற அமைப்பும் கொண்டது. அதை வைத்துக் கரம்பை நிலத்தைத் தோண்டிப் புரட்டினர். கரிசலின் புழுதி அவர்களது மேனி எங்கும் படிந்தது. எறும்புகள் சேகரித்த நுண்ணிய புல்லரிசியைக் கண்டுபிடித்து வாரிய போது மகிழ்ந்து வாய்விட்டுச் சிரித்தனர்.

அவரது குடிசை வாயிலில் ஒரு விளாமரம். அதில் எப்போதும் 
பார்வைமான் கட்டப்பட்டு இருப்பதால்   அடிப்புறத்தில் வடுப்போலத் தழும்பு காணப்படும். அம்மரத்தின் அடியில் ஒரு நிலவுரல். அவ்வுரலில் புல்லரிசியைக் கொட்டி வைரம் பாய்ந்த குறிய மரஉலக்கையால் குற்றித் தீட்டினர். இப்போது பிரியாணிக்கு உரிய தானியம் தயார். இனி உலையாக ஊற்ற நீர் வேண்டும்.

நீரின்றி வறண்ட ஆழமான கிணறு; பாலையின் கொடுமை.. . அதன் அடிமட்டம் வரை இறங்கித் தூர்ந்த ஊற்றுக்கண்ணைத் தேடிக் குத்த உவர்நீர் கிடைத்தது. கிடைத்த நீரைச் சுமந்து மேலேறி வந்தனர். 

முரிஅடுப்பு மூட்டினர். உவர்நீரில் புல்லரிசியோடு உப்புக்கண்டத்தைச் சேர்த்து இட்டு வேகவைத்தனர். வடிக்க வேண்டிய தேவை இல்லாமல் பிரியாணி தயார் ஆனது. அதை தெய்வத்திற்குப் படைப்பது போல்; தேக்கிலையில் பரிமாறிப் பாணரை விருந்து அயர்ந்தனர்.  

பார்வை மான் என்பது ஆண்மானைக் கவர்வதற்காகக் கட்டப்படும் பெண்மான். பெண்மானால் ஈர்க்கப்பட்டு வரும் ஆண்மானை எளிதில் கையகப்படுத்தி விடலாம். ஏனெனில் பெண்மான் கட்டிப் போடப்பட்டு இருக்கும். அந்த ஆண்மான் எல்லோருக்கும் உணவு ஆகிவிடும். எஞ்சிய ஊன் பதப்படுத்தப்படும்; உப்புக்கண்டம் ஆகிவிடும். இந்த உப்புக்கண்டத்தையே பாடல் 'வாடூன்' என்கிறது.

இங்கே பிரியாணி பற்றிய குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் அதை 'வடிக்கத் தேவை இல்லை'. எந்த ஒரு பிரியாணியும் வடிக்கப்படாது; வடிக்க இயலாது. இதுவரை கண்ட வகைவகையான பிரியாணிகள் அனைத்தும் வடிக்காமல் அட்டவையே. பிரியாணி அல்லாத தானியப்புழுக்கு எதுவாயினும் அது வடிக்கப்படும் (பிரஷர் குக்கர் பயன்பாட்டிற்கு வருமுன்பு வரை...). 

புல்லரிசியின் பயன்பாடு எங்கும் காணக் கிடைக்கவில்லை எனினும் உப்புக்கண்ட பிரியாணி வழக்கில் உள்ளது தான். இன்றும் அதன் செய்முறை காணொலியில் விளக்கம் பெறுகிறது           

முரிஅடுப்பில் எப்படி வேக வைக்கின்றனர் என்பது தொடரும்... பாரம்பரிய 'தம்' பற்றிய விளக்கமும் வேரும் அடுத்த பதிவில்...
சக 

kanmani tamil

unread,
Jan 22, 2023, 1:47:16 PM1/22/23
to vallamai
முரியடுப்பில் சுட்டுச் சமைத்ததை இந்த இழையின் தொடக்கத்தில் கண்டோம். 

அதுபோல முரியடுப்பில் நீர்/ எண்ணெய்/ ஆவியில் வேக வைத்த சில முறைகளைக் காணொலிகள் காட்டுகின்றன. 
அவற்றுள் ஒன்று...
வேக வைக்க வேண்டிய பண்டங்களை இலையில் பொதிந்து; நாரால் கட்டி; முரிகளை எரித்துச் சமைப்பது.


இக்காணொலி பனை ஓலை(இலை)யில் பொதிந்து பனைநாரால் கட்டி வேக வைப்பதைக் காட்டுகிறது. இந்த முறையில் உலைநீர் ஊற்றிச் சமைக்கவில்லை என்பதும்; இம்முறையில் உலைநீர் ஊற்ற இயலாது என்பதும் கருதத்தக்கது. எனவே இது பாரம்பரியமான முறை எனினும் பிரியாணி சமைப்பதற்கு உரியதன்று. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 23, 2023, 6:01:33 PM1/23/23
to vallamai
இன்னொரு முறையாவது... வாழை இலையில் சமைக்க வேண்டிய பண்டத்தைப் பொதிந்து வாழைநாரால் கட்டி; அப்பண்டம் வெளிவந்து சிந்தி விடாதபடி; குழைத்த களிமண்ணைப் பூசி (sealed) முரியடுப்பில் வேக வைக்கின்றனர்.


இலைக்குள் வைக்கும் உணவுப் பொருளோடு சிறிதே நீர் சேர்க்கப்படுகிறது என்றாலும்; அது உலை ஆகாது ஆகையால்; இதுவும் எயிற்றி பிரியாணி வேகவைத்த முறை ஆகாது. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 24, 2023, 1:57:59 PM1/24/23
to vallamai
முரிஅடுப்பில் எப்படியெல்லாம் வேக வைக்கின்றனர் என்ற காணொலிகள் ஒவ்வொன்றையும் நோக்கி பொருந்தாத ஒவ்வொரு முறையையும் தவிர்த்து (elimination method); எயிற்றியின் சமையல் முறையோடு ஒத்து வருவதை முடிவு செய்யும் நோக்கத்தோடு இழை தொடர்கிறது. 


இளநீருக்குள் பிரியாணி செய்வதற்கு உரிய பொருட்களை நிறைத்து மூடி முரிஅடுப்பில் வேகவைத்து எடுப்பதும் நடைமுறையில் பல காலமாக வழங்கி வருகிறது என்னும் வகைப்பாட்டிற்காக மட்டுமே இந்தப் பதிவு. மற்றபடி எயிற்றி முரிஅடுப்பில் அட்ட பிரியாணியின் செய்முறை இது அன்று. 

சக 
(தொடரும்)

kanmani tamil

unread,
Jan 26, 2023, 1:05:12 AM1/26/23
to vallamai

சுள்ளிகளால் ஆன முரிஅடுப்பில் பாத்திரத்தை வைத்துச் சமைக்கும் வழக்கம் இன்றும் உலகளாவியதாக உணவகங்களில் காணப்படுகிறது. பின்வரும் படத்தில் காண்க...



மேற்சுட்டிய படத்தில் உள்ளதுபோல் அடுக்கலனைச் சூழவும் அதன் மூடியின் மேலும் முரிகள் எரிய; வெந்த பிறகு மூடியை லாவகமாகத் தூக்கி…  உணவைத் தயாரிப்பது இன்றும் உள்ள நடைமுறையே ஆகும். 


எயிற்றி உப்புக்கண்ட பிரியாணி சமைத்த முறை இதுவே. இந்தச் சமையல் முறையில் உலைநீர் ஊற்ற இயலும்.

இவ்வாறு சமைக்கும் போது மூடியின் மேல் எரியும்; எரிந்த சுள்ளிகளே 'தம்'மாக அமைகின்றன.

எயிற்றியின் உப்புக்கண்ட பிரியாணி பாரம்பரிய 'தம்'பிரியாணி என்பதில் ஐயம் இல்லை.



இக்காணொலியின் பின்பாதியில் 'தம்' போடும் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. 
எனவே 'தம்'பிரியாணியின் மூலமாக அமைவது முரிஅடுப்பு ஆகிறது.

சக

(நிறைவு)      


kanmani tamil

unread,
Jan 27, 2023, 1:17:01 AM1/27/23
to vallamai
முரிஅடுப்பு எரியும் போது இப்படித்தான் தோற்றம் அளிக்கும்.


சக

kanmani tamil

unread,
Jan 27, 2023, 11:33:26 PM1/27/23
to vallamai
வெந்து முடித்த பிறகு முரிஅடுப்பு  இப்படித்தான் காட்சி அளிக்கும்.
அதாவது முரிஅடுப்பில் வேக வைத்தால் இயல்பாகவே அது 'தம்' போட்டுச் சமைத்ததாகி விடும்.

  

இதனால் மல்லி கிழான் காரிஆதியும் பெரும்பாணாற்றுப்படை எயிற்றியும் சமைத்த பிரியாணியில் ‘தம்’பிரியாணி வகையைச் சேர்ந்தவை என்று உறுதி ஆகின்றது. நவிரமலைக் குறத்தி துழாவிச் சமைத்ததால் அது பிரியாணி மட்டுமே ஆகும். 


சக 

(முற்றும்)
Reply all
Reply to author
Forward
0 new messages