1) Well, good, excellent; as in सुगन्धि (sugandhi). சு+கந்தி - நறுமணம்
2) Beautiful, handsome; as in सुमध्यमा, सुकेशी (sumadhyamā, sukeśī) &c.
3) Well, perfectly, thoroughly, properly;
5) Much, very much, exceedingly; सुदारुण, सुदीर्घ (sudāruṇa, sudīrgha) &c.
6) Worthy of respect or reverence.
| 5 | |
| முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர் உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறில் முன்றில் கூறுசெய் திடுமார், கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, | 10 |
| அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும் அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே. |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRVgaramgZCvVVVE8pmmPfK15va-7oj7nu-sNddhfgoNQ%40mail.gmail.com.
| காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக், | 10 |
| குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக், |
கழுதில் சேணோன் ஏவொடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,
நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்
நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முளி கழை இழைந்த காடுபடு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து,(மலைபடுகடாம் அ.243-249) என்ற அறிவுரையை இன்றைய நடைமுறைகள் அப்படியே பின்பற்றுவதைக் காணொலிகள் காட்டுகின்றன.
பன்றியை வெட்டிச் சமைக்கும் முன் முடிநீக்கிச் சுத்தம் செய்தல்:
தனக்காகப் போரிட்ட வீரர்க்கு அளித்த விருந்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கலந்து இருந்ததை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடமும் காண இயல்கிறது.சொல்லப் போனால் ஒருபடி மேலே போய் சைவ விருந்து, அசைவ விருந்து இரண்டும் அளிக்கிறான். "செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரைவாலூன் வல்சி மழவர்"க்கு (பதிற்றுப்பத்து- 55)மெய்ம்மறையாக அமைபவன் அவன் ஆவான்.பொருள்கோளின் வகைகளாக நன்னூலார் சொல்பவற்றைக் கருத்தில் கொண்டு இத் தொகை இலக்கிய அடிகட்குப் பொருள் தேடுவது தேவை ஆகிறது.மேற்சுட்டிய பகுதிக்கு உரை எழுதும் போது ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பழைய உரைகாரரைப் பின்பற்றிச்; 'செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையல் ஆதலால்; "வெண்துவை" என்றும்; சிவந்த ஊன் ஆயினும் அத்துவையல் தன் செம்மை தோன்றாது ஆயினமையின்; "செவ்வூன் தோன்றா" என்றும் கூறினார்.' என்கிறார்.பழைய உரைகாரர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை என்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை என்றவாறு...' என்கிறார்.'துவை' = துவையல் என அவர்கள் இருவரும் கூறும் பொருள் பொருந்தவில்லை.
தனக்காகப் போரிட்ட வீரர்க்கு அளித்த விருந்தில் ஊனும் நெல்லரிசிச் சோறும் கலந்து இருந்ததை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடமும் காண இயல்கிறது.சொல்லப் போனால் ஒருபடி மேலே போய் சைவ விருந்து, அசைவ விருந்து இரண்டும் அளிக்கிறான். "செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரைவாலூன் வல்சி மழவர்"க்கு (பதிற்றுப்பத்து- 55)மெய்ம்மறையாக அமைபவன் அவன் ஆவான்.பொருள்கோளின் வகைகளாக நன்னூலார் சொல்பவற்றைக் கருத்தில் கொண்டு இத் தொகை இலக்கிய அடிகட்குப் பொருள் தேடுவது தேவை ஆகிறது.மேற்சுட்டிய பகுதிக்கு உரை எழுதும் போது ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பழைய உரைகாரரைப் பின்பற்றிச்; 'செவ்வூனும் மிக்க துவரையும் கலந்து அரைத்த துவையல் ஆதலால்; "வெண்துவை" என்றும்; சிவந்த ஊன் ஆயினும் அத்துவையல் தன் செம்மை தோன்றாது ஆயினமையின்; "செவ்வூன் தோன்றா" என்றும் கூறினார்.' என்கிறார்.பழைய உரைகாரர் 'செவ்வூன் தோன்றா வெண்துவை என்றது அரைத்துக் கரைத்தமையால் தன்னிற் புக்க செவ்வூன் தோன்றாத வெள்ளிய துவை என்றவாறு...' என்கிறார்.'துவை' = துவையல் என அவர்கள் இருவரும் கூறும் பொருள் பொருந்தவில்லை.'ஊன்துவை அடிசில்' = ஊன் மிகுதியாகக் கலந்த சோறு என இதுகாறும் கண்டோம். அதில் எந்தக் குழப்பமும் வரவில்லை.மொத்தத்தில் (பெயர் தெரியாத இப்) பழையவுரைகாரர் கொழுத்த கிடாய்க்கறியோடு சற்றும் தொடர்பு இல்லாதவர் (வெஜிடேரியன்); தாவரவுணவு மட்டுமே அறிந்தவர்; உண்டவர் எனப் புரிகிறது.'மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என ஔவை சு.துரைசாமிப் பிள்ளை அவர் சொன்ன பொருளை அப்படியே ஏற்றுக் கொண்டு தொடர்கிறார்.கறிக்காகப் பேணி வளர்த்த ஆட்டின் இறைச்சி செந்நிறம் தெரியாத அளவு வெள்ளையாகக் கட்டிக் கொழுப்பு சூழ்ந்து இருப்பதை அசைவப் பிரியர் அறிவர். அதனால் தான் வெண்ணெல்லின் வெள்ளரிசியோடு சேர்த்துச் சமைத்த பிரியாணியைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்;"செவ்வூன் தோன்றா வெண்துவை... வாலூன் வல்சி" எனப் பாடி உள்ளார்.இந்த அசைவ விருந்து மட்டும் இன்றிச் சைவ விருந்தும் அளித்ததை; "முதிரை வாலூன் வல்சி" என விதந்து பொருள் கொள்ள வேண்டும்.
முதிரை = துவரை முதலிய பயறு வகைகள். வெண்ணெல் அரிசியோடு பருப்பு சேர்த்துச் செய்யும் 'அரி(சீம்)சியும் பருப்பு சாதம்' இன்றுவரை மிகவும் போற்றப்படும் உணவு வகையாக உள்ளமை நோக்கற்குரியது. அதற்குக் 'கொங்கு பிரியாணி / கவுண்டர் வீட்டு பிரியாணி' என்ற பெயர்வழக்கு இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
| ....கிணையேம் பெரும! | 10 |
| நெல் என்னாம், பொன் என்னாம், கனற்றக் கொண்ட நறவு என்னும், . . . . மனை என்னா, அவை பலவும் யான் தண்டவும், தான் தண்டான், நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை | 15 |
| மண் நாணப் புகழ் வேட்டு, நீர் நாண நெய் வழங்கிப், புரந்தோன் எந்தை..... |
| மாசு இல் மரத்த பலி உண் காக்கை வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி, அம்பல் யாணர் | 5 |
| விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,..." |
முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு……….
திண்டோள் நன்னர்க்கும் அயினி சான்ம்“ (மலை.465-467).
முள்அரித்து இயற்றிய வெள்ளரி வெண்சோறு……….
திண்டோள் நன்னர்க்கும் அயினி சான்ம்“ (மலை.465-467).
“அருவிதந்த பழஞ்சிதை வெண்காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முழவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழநின்
இன்புளிக் கலந்து மாமோராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து
வழையமை சாரல் கமழத்
துழைஇ
குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி “ (மலை.174-183)
இப் பாடற்பகுதி அருவியில் அடித்து வரப்பட்ட பலாப் பழத்தின் கொட்டைகள், வேட்டையாடிக் கொன்ற கடமானின் கொழுத்த தசையும் பன்றியின் நிணமிக்க தசையும், பெண்நாய் கவ்விக் கொண்டுவந்த உடும்பு என வகைவகையாக அனைத்தையும் சேர்த்துக் குறமகள் மூங்கிலரிசி பிரியாணி சமைத்தமையை விவரிக்கிறது. இதற்கு அவள் மோரை உலையாக ஊற்றுகிறாள். அத்துடன் இனிய புளியைச் சேர்க்கிறாள். மென்மையாக வெந்த அம்மூங்கில் அரிசி வெண்மையாகக் காட்சியளித்து; சுரபுன்னைக் காடுகள் மிகுந்த மலைச்சாரல் முழுதும் மணத்தது என்பதால்; அசைவப் பிரியர்களின் மூக்கைத் துளைக்கும் நுகர்புல உருக்காட்சி அமைந்துள்ளது.
மூங்கிலையே அடுகலனாகப் பயன்படுத்திச் செய்யும் மூங்கிலரிசி பிரியாணி பற்றிய காணொலி:
நவிரமலைக் குறத்தி வேறு அடுகலனைப் பயன்படுத்தினாள். அவள் துழாவிச் சமைத்தாள் என்பதால் அவளது அடுகலன் மூங்கில் குழாய் இல்லை.
‘இன்புளிக் கலந்து’ என்னும் தொடர் சிறப்பான சுவைப்புல உருக்காட்சி ஆகும். புளியின் பெயர்க்காரணமே அதன் புளிப்புச் சுவை என்று இருக்க இங்கு இனியபுளி என்று விரியும் தொடரின் நோக்கம் ஓர்ந்து அறியத்தக்கது. இப்பாடற் பகுதி சுட்டும் இடப்பின்புலம் கொண்கானம் ஆகும். அதற்குச் சற்றே வடக்கில் உள்ள தென்கன்னடத்தின் டும்கூர் புளி வணிகர்கள் இன்றும் போற்றும் விலைமிகுந்த நயம்புளி என்பது நோக்கற்குரியது. அப்புளியின் இனிமை தமிழகத்து நாட்டுப்புளி, கேரளத்தின் கொடம்புளி இரண்டினின்றும் மாறுபட்டு இன்றுவரை மக்கள் தேடிப்பெறும் சுவை மிகுந்த உணவுப்பொருளாகும்.
அரிசியுடன் ஊன்கலந்து ஆக்கும் உணவில் புளிச்சுவை சேர்க்கும் வழக்கம் இன்றும் தொடரும் சமையல்முறையே ஆகும். எந்த பிரியாணியாக இருப்பினும் எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறும் போக்கு இன்றளவும் உள்ள நடைமுறை ஆகும். பின்வரும் காணொலியுள் புளிக்குப் பதிலாகத் தக்காளியும் எலுமிச்சைச் சாறும் பயன்படுத்தி பிரியாணி செய்வதைக் காண்க.
மோரை உலையாக ஊற்றுவதும் இன்றுவரை உள்ள வழக்கமே ஆகும். கோடைகாலத்தில் ஆக்கும் சோறு விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க இன்றும் மோர் சேர்த்துச் சமைப்பது உண்டு. கம்மஞ்சோறு, கேப்பைக்களி முதலியவற்றுக்கு உலையாக மோர் விடும் வழக்கம் தமிழகத்தில் நிலைத்துள்ளது.
மேற்கண்ட காணொலியுள் பிரியாணிக்கு மோரை உலையாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தயிரைச் சேர்த்து அதில் தண்ணீரைக் கலக்கின்றனர்.
அவ்வப்போது சேர்க்கும் நெய் கவனிக்கத் தக்கது.
பிரியாணியின் செய்முறையில் அன்று முதல் இன்று வரை பெருத்த மாற்றம் ஏதும் இல்லை.
மோர்உலை > தயிரும் தண்ணீரும்
புளி > தக்காளியும் எலுமிச்சையும் என்பது போன்ற காலத்திற்கு ஏற்ற சிறு சிறு பதிலிகளே.
அதனால் மலைப்புறம் எங்கும் மணம் வீசத் துழாவி அட்ட பிரியாணியில் தமிழகத்து மலைக்காடுகளில் விளைந்த மணப்பொருட்கள் சேர்க்கப்பட்டன என்று அறுதியிட்டுக் கூறலாம். அதன் காரணமாக அவை யவனர் நாடுகட்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டன.
மரக்கறி பிரியாணியில் பல காய்கறிகளைப் பயன்படுத்துவது போல அசைவ பிரியாணியில் பலவகை ஊனையும் ஒருசேரக் கலந்து சமைப்பதால் இதை சூப்பர் பிரியாணி எனலாம். ஆனாலும் இது 'தம்'பிரியாணி இல்லை.
பிலிப்பைன் தீவுகளில் இறைச்சியுடன் புளி சேர்க்கும் வழக்கம் இன்றும் உள்ளது. Sinigang என்னும் உணவில் இறைச்சியுடன் புளியைக் கலக்கும் வழக்கம் உள்ளமையை வலைத்தளம் காட்டுகிறது
சக
(தொடரும்)
| புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர் தீம்புளிக் களாவொடு துடரி முனையின், மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக், | 10 |
| கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும், பெரும்பெயர் ஆதி, பிணங்கரில் குடநாட்டு, எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை, வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, | 15 |
| இரும்பனங் குடையின் மிசையும் |
ஈன்பிணவு ஒழிய போகி நோன்காழ் 90 இரும்புதலை யாத்த திருந்துகணை விழுகோல் உளிவாய் சுரையின் மிளிர மிண்டி இரு நிலல் கரம்பை படுநீறு ஆடி நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர் பார்வை யாத்த பறைதாள் விளவின் 95 நீழல் முன்றில் நிலஉரல் பெய்து குறும்காழ் உலக்கை ஓச்சி நெடும்கிணற்று வல்ஊற்று உவரி தோண்டி தொல்லை முரவுவாய் குழிசி முரிஅடுப்பு ஏற்றி வாராது அட்ட வாடூன் புழுக்கல் (பெரும்பாணாற்றுப்படை-90-100)
சுள்ளிகளால் ஆன முரிஅடுப்பில் பாத்திரத்தை வைத்துச் சமைக்கும் வழக்கம் இன்றும் உலகளாவியதாக உணவகங்களில் காணப்படுகிறது. பின்வரும் படத்தில் காண்க...
மேற்சுட்டிய படத்தில் உள்ளதுபோல் அடுக்கலனைச் சூழவும் அதன் மூடியின் மேலும் முரிகள் எரிய; வெந்த பிறகு மூடியை லாவகமாகத் தூக்கி… உணவைத் தயாரிப்பது இன்றும் உள்ள நடைமுறையே ஆகும்.
எயிற்றி உப்புக்கண்ட பிரியாணி சமைத்த முறை இதுவே. இந்தச் சமையல் முறையில் உலைநீர் ஊற்ற இயலும்.
இவ்வாறு சமைக்கும் போது மூடியின் மேல் எரியும்; எரிந்த சுள்ளிகளே 'தம்'மாக அமைகின்றன.
எயிற்றியின் உப்புக்கண்ட பிரியாணி பாரம்பரிய 'தம்'பிரியாணி என்பதில் ஐயம் இல்லை.
சக
(நிறைவு)
இதனால் மல்லி கிழான் காரிஆதியும் பெரும்பாணாற்றுப்படை எயிற்றியும் சமைத்த பிரியாணியில் ‘தம்’பிரியாணி வகையைச் சேர்ந்தவை என்று உறுதி ஆகின்றது. நவிரமலைக் குறத்தி துழாவிச் சமைத்ததால் அது பிரியாணி மட்டுமே ஆகும்.
சக
(முற்றும்)