கவிஞர் காசி ஆனந்தன் மகளுக்கு இன்று திருமணம்

18 views
Skip to first unread message

Maravanpulavu K. Sachithananthan

unread,
Feb 12, 2014, 9:39:53 PM2/12/14
to mintamil, vallamai
எமதில்லத்துள் ஒருவர் மாமா என்பேன். 
எமதில்ல நல்ல செயல்கள் எவையும் மாமா இல்லாது நடைபெறுவதில்லை என்பேன்.

என்னவரிடம் இவற்றைச் சொல்லி உங்களை ஏற்கனேவே அறிமுகம் செய்துவிட்டேன் 
என்றார் தேன் அல்லி.

நிறையச் சொன்னார்கள் தேன், 
நீங்களும் எந்தன் தென்மராட்சி அல்லவா 
என்றார் கீத்தார்த்தனன்.

கீத்தார்த்தனன் - தேன் அல்லி திருமணம் இன்று 12.2.14 காலை 0900 - 1030 மணிக்குச் சென்னை, கேளம்பாக்கம், தையூர் ஈசுவரன் கோயிலில்.

கவிஞர் காசி. ஆனந்தன் - சரோசினி தேவி இணையரின் மகள் தேன் அல்லி. திருமணத்தால் மருகர் கீத்தார்த்தனன். மீன்பாடும் தேனாட்டுத் திருமகள் தென்மராட்சியின் மருமகள்.

நேரில் சென்று வாழ்த்துச் சொன்னோம் நானும் என் மகள் சிவகாமியும் பெயரன் அரனுமாய்.

வாழ்த்த வந்தவர்கள் உலகெங்கும் இருந்து வந்த அவர்களின் உற்றவர். மீன்பாடும் தேனாட்டாரும் தெம்மாங்கு பாடும் தென்மராட்சியாரும்.

வைகோ, நெடுமாறன் இணையர், ஓவியர் சந்தானம், விடுதலைச் சிறுத்தைகள் வழக்குரைஞர், பதிப்பாளர் இளவழகன் எனத் தமிழகத்தின் தேசிய உணர்வாளர் திருக்கூட்டமாய் வந்தனர் வாழ்த்தினர்.

நாளை மாலை செம்மண்சேரியில் திருமண வரவேற்பு. தமிழக அரசியலார் பலர் வருவர்.

இன்றைய நிகழ்வுப் பதிவுகள் பார்க்க.


--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
kasi-anandan_0047.gif
kasi-anandan_0011.gif
Reply all
Reply to author
Forward
0 new messages