மாணவர்களே! ஆசிரியர்களிடம் கேள்வி கேளுங்கள் !
மனிதவள பயிற்சியாளர் அறிவுரை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பேச்சுக்கலை பயிற்சி நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகாசியை சேர்ந்த கட்டிட பொறியாளர்கள் நாகராஜன்,விவேகானந்தன்,வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மனிதவள பயிற்சியாளர் சிவகாசி சிவபிரான் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு கலை பயிற்சி வழங்கி பேசும்போது, நம்ம அடுத்தவங்களுக்கு கைதட்டி பாராட்டும் போது தான் நம்ம அந்தக் கைத்தட்டல் வாங்கணும் என்று தோணும்.
ஒரு அழகான கார் யாராவது ஓட்டிக்கிட்டு போறத பார்த்தோம்னா, நம்மளும் அந்த மாதிரி கார் வாங்கனும்னு நினைச்சா, நம்ம நல்லா படிச்சு சம்பாதிச்சு அதே காரில் போகணும்னு நினைக்கணும்.
நம்ம பள்ளிப்பருவத்தில் பாட புத்தகங்களை மட்டும் படிக்கிறதோட இல்லாம நம்முடைய திறமையை வளர்க்க ஏதாவது ஒரு போட்டியில ஜெயிச்சு நம்ம போட்டோ நியூஸ் பேப்பர்ல வர்றப்ப நமக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும்? அதனை எண்ணி கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டு பிரைஸ் வாங்கிட்டா அதோட போதுமென்று நிற்கக்கூடாது. இன்னும் நிறைய போட்டியில கலந்துக்கிட்டு சாதிக்கணும். அடுத்த இரண்டு வருடத்தில் கண்டிப்பா பல சாதனைகள் படைக்க வேண்டும்.
டிவி பார்க்காதவங்க என்று யாருமே இல்லை. ஆனால் டிவியில அருமையான பாடல்களை .போடச் சொல்லி அதில் வருகிற உச்சரிப்பு எல்லாத்தையும் தினமும் பார்த்து கத்துக்கணும் நம்ம பாடும் போதும், பேசும் போதும் உச்சரிப்பு தெளிவாக இருக்க்கவேண்டும்.
நம்ம பேசுறது தெளிவா புரியணும். நம்ம டிவியில் ஒரு நிகழ்ச்சி 5 நிமிடம் பார்த்துட்டு, ரெண்டு நிமிஷத்துல சொல்லுங்கன்னு யாராவது சொன்னா, இல்லை என்னால் ரெண்டு நிமிஷத்துல சொல்ல முடியாது. நான் தெளிவா 5 நிமிஷம் வரைக்கும் சொல்றேன் சொல்லணும்.
நாம் பேசும் போது நம்முடைய பத்து விரல்களையும் சேர்த்து வைக்கணும். அப்போது தான் நம்முடைய ஆற்றல் வெளியே போகாது.. நம்முடைய கவனமும் சிதறாது .
நம்ம நல்ல நிலைமைக்கு வரனும்னா நிறைய கேள்வி கேட்கணும். முதல்ல எந்திரிக்கணும். தைரியமா கேள்வி கேட்கலாம். அப்போது தான் நம்மள மத்தவங்ககவனித்து பார்ப்பாங்க.
நம்ம ஆசிரியர் கிட்ட எப்போதுமே சந்தேகம் கேட்கணும் . அப்போதான் நம்ம பெரிய ஆளா வரமுடியும். நம்ம ஜெயிக்கணும்னா முதல்ல எழுந்திருக்கணும்.
அப்புறம் வேகமாக செயல்பட தொடங்க வேண்டும். நம்ம கஷ்டப்பட்டு உழைத்தால் தான் நம்முடைய இலக்கை அடைய முடியும். நம்ம சொகுசா உட்கார்ந்து கிட்டு அடுத்த இடத்துக்குப் போக முடியாது.
நல்லா படிக்கணும். கேள்வி கேட்கணும் . கேள்வி கேட்க எப்பொழுதுமே தயங்க கூடாது. உங்க பெயர் என்ன என்று யாராவது கேட்கணும்.
மனதில் எப்போதும் தைரியம் இருக்கணும். ஆசிரியர்கள் மேல நமக்கு இருக்கிறது பயமில்லை. மரியாதைதான்.
. என் நண்பர்களைப் பார்த்து தான் நான் மேடையில் பேச ஆசைப்பட்டேன் ஆனா அவங்கள மாதிரி பேச ஆசைப்படல. நான் எனக்கு, எப்படி பேசணும்னு தோணுதோ அப்படி பேசினேன்.
அவங்கள மாதிரி பேச ஆசைப்பட்டு இருந்தால் ஐந்து நிமிடம், 10 நிமிடம் தான் முடியும். நான் என்னைய மாதிரி பேச ஆசைப்பட்டேன் .. அதனாலதான் இப்போ தொடர்ந்து 4 நாட்களாக பேசுறேன். என்று பேசினார்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மனிதவள பயிற்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகாசியை சேர்ந்த கட்டிட பொறியாளர்கள் நாகராஜன்,விவேகானந்தன்,வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மனிதவள பயிற்சியாளர் சிவகாசி சிவபிரான் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு கலை பயிற்சி வழங்கினார்.