
கல்வெட்டுடன் கூடிய இந்த நடுகல் , கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டம், அரக்கலவாடி அருகே எணகும்பா கிராமத்தின் வயல் வெளியில் காணப்படுகிறது.
கி.பி.10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த
இக்கல்வெட்டு தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.
பைற்கைப்பாடி (பேற்கைப்பாடி) எனும் ஊரைச் சேர்ந்த கொல்லன் முனிவர கண்டாச்சாரியின் மகனும்
எருமகும்பா (எருமை கும்பம்)கிராமத்தைச் சேர்ந்தவனுமான கொல்லன் சா.......சாரி (பெயர் தெளிவாகத் தெரியவில்லை)எனும் வீரன்,
வேலப்பாடியில் நடைபெற்ற ஆநிரை கவர்தலின் போது இறந்து பட்டதன்
நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டது.
........
நன்றி:
யாக்கை ஹெரிடேஜ் டிரஸ்ட், கோயம்புத்தூர், தமிழ்நாடு.
இயக்குனர்(கல்வெட்டியல்), இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை
Hero stone inscription from Yanakumba,Karnataka
This hero stone inscription is found in the fields of the village Yanakumba,near Arakkalavadi,Chamarajanagara district,Karnataka
It is written in Tamil language and characters of 10th century C.E.
This memorial stone was erected in memory of the hero named Kollan ....chari(name not clear) of Erumaikumba village son of Kollan Munivarakandachari of Pairkaipadi (Perkaipadi) who died during the cattle raid at Velapadi.
Courtesy: Yaakkai Heritage Trust,Coimbatore,Tamil Nadu.
Director(Epigraphy),Archaeological Survey of India
.........................................

கல்வெட்டுப் பாடம்
1. ஸ்வஸ்தி ஶ்ரீ பை(பே)ற்கை
2. பாடி
3. க் கொ
4. ல்லந்
5. முனிவ
6. ர கண்டா
7. சாரி மகந்
8. எருமை கும்-
9. பத்துக் கொ-
10. ல்லந் சா
11. ...ச்
12. சாரி வே-
13. லபாடி னி-
14. ரை தானும்
15. கொண்டு
16. போகத்
17. து எரிந்-
18. து கொன்-
19. று பட்-
20. டான்
...........................

குறிப்புகள்:

எருமை கும்பம் எனும் பெயர், மருவி எணகும்பம் என ஆனது என அப்பகுதி மக்கள் கூறுவதாக வரலாற்று ஆய்வாளர் திரு. ஜான் பீட்டர்
John Peter குறிப்பிடுகிறார்.

பெயருக்கு முன்னால் சாதிய ஒட்டு
(Surname/Prefix) வழங்குவது ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் இன்று வரை தொடரும் வழக்கமாகும். எனவே கொல்லன் என்பது அவ் வீரனின் சாதிப் பெயர் ஆகலாம்.

"கொல்லன்'(golla)என்பதை கன்னடச் சொல்லாகக் கொண்டால் அதற்கு
"ஆயர் குலத்தினர் (மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வரும் சாதியினர்/குருபா/யாதவர்) எனப் பொருள்படும்.
"கொல்லா" என்பது குருபா சாதியின் உட்பிரிவாகும்.

"கொல்லன்'(golla)என்பதை தெலுங்குச் சொல்லாகக் கொண்டால் அதற்கு
"ஆயர் குலத்தினர் (மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வரும் சாதியினர்/கோனார்/யாதவர்) எனப் பொருள்படும்.
தமிழ் நாட்டில் வாழும் ஆயர் குலத்தினரை , இங்கு உள்ள தெலுங்கு பேசுவோர் "கொல்லா","கொல்லவாரு"எனக் குறிப்பிடுவதை இங்கு நோக்கலாம்.

"கொல்லன்' என்பதை தமிழ்ச் சொல்லாகக் கொண்டால் அதற்கு"கைவினைஞர்(ஆசாரி/விஸ்வகர்மா)"எனப் பொருள்படும்.
வீரனின் பெயருக்குப் பின்னால் வரும் "ஆச்சாரி"எனும் பின்னொட்டும் இதனை உறுதிப்படுத்துகிறது.
எனவே அவ்வீரன் கைவினைஞர் சாதியைச் சேர்ந்தவராகலாம்