மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா +++ திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன் : நினைவாற்றல் பயிலரங்கம்

25 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 7, 2016, 7:45:01 PM7/7/16
to thiru thoazhamai

திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன் : நினைவாற்றல் பயிலரங்கம்





திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன்:  

நினைவாற்றல் பயிலரங்கம்

தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் தீலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி,    நடராசபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   திருக்குறள் தீலீபன் மாணவர்களின் முன்பு “புராணக்கால வரலாற்றிலிருந்து காணப்படும் பலவகைக் கலைகளுள் நினைவாற்றலை மனத்தில் நிறுத்தி அதைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவுபடுத்திக் கூறும் கவனகக் கலை ஒன்றாகும். இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்றாகும். கவனகம் என்றால் என்ன? என்பதற்கு ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவமாகும். நமது முன்னோர்கள், நூறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்திச் சொல்லக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்றவர்களாக இருத்திருக்கிறார்கள். நான் சிறு அகவையில் கற்றுக் கொண்டேன். எனது தாயும் தந்தையும் ஆசிரியர்களும் எனக்கு வழி காட்டுதலாக இருந்து என்னை நன்றாக ஊக்கப்படுத்தி இந்த அளவுக்குப் பயிற்சி அளித்தனர். கவனகக் கலை நினைவாற்றலைப் பெருக்கும். மனமும், உணர்ச்சியும் நமக்குத் தனித் தனியாக வழிகாட்டும். ஆனால் மனம் சொல்படிதான் நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி அடைய முடியும். திருக்குறள் பயிற்சி அனைவரும் பெற வேண்டும்.” என்று பேசினார்.
 திருக்குறள் திலீபன் ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, முடிவில் தொகுத்துக் கூறினார். மாணவ,மாணவியர் திருக்குறள்பற்றிய ஐயங்கள் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
நினைவாற்றல் கலை –
திருக்குறளில் முதல் சீரைச் சொன்னால், குறளைச் சொல்லுதல்,
குறளைச்  சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல்,
குறளின் எண்ணைச் சொன்னால், குறளைச் சொல்லுதல்
போன்ற பல்வேறு வகைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்தினார்.
உதடு ஒட்டாத திருக்குறளை வாயில் உதடுகளில் குண்டூசி வைத்துக் கொண்டு சொன்னதைக் கண்டு மாணவர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கிப் போனார்கள்.
   கி.பி.ஒன்று முதல் கி.பி.ஒரு கோடி  ஆண்டுகள் வரையிலான நாளைச் சொன்னால், கிழமையைச்சரியாகக் கூறினார். 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல, அதை நினைவில் நிறுத்தி, 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகக் கூறினார்.வந்திருந்த பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் அவர்களது   பிறந்த நாள் முதல் முதன்மையான நிகழ்ச்சிகள் வரை எந்த நாளைச் சொன்னாலும், உடன் கிழமையைக் கூறிப் பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தினார்.
  உலக நாடுகளின் பெயரைச் சொன்னால், அந்த நாட்டுத் தலை நகரத்தின் பெயரைக் கூறினார். தலை நகரத்தின் பெயரைச் சொன்னால் உலக நாடுகளின் பெயரைச் சொன்னார். பதினாறு வகையான கவனகம் நிகழ்ச்சிகளான குறள் கவனகம், பறவை கவனகம், எண் கவனகம், விலங்கு கவனகம், எழுத்து கவனகம், நூல் கவனகம், கூட்டல் கவனகம், மலர்க் கவனகம், பெயர்க் கவனகம், பழக் கவனகம், ஆண்டுக் கவனகம், நாடுகள் கவனகம், மாயக்கட்ட கவனகம், வண்ணக் கவனகம், தொடு கவனகம், ஒலிக் கவனகம் என அனைத்தையும் மாணவர்கள் முன்பாகச் செய்து காண்பித்ததுடன் அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்.
  பரமேசுவரி, வெங்கட்ராமன், திவ்யசிரீ, இராசேசுவரன், இரஞ்சித்து, பரத்குமார், இராசி, சின்னம்மாள், அபிநயா, சீவா  முதலான பல மாணவர்கள் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார் .நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.+
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். தனிப்படங்கள், உதடுகளின் இடையே குண்டூசி வைத்துக் குறள் சொன்னது.]
மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்02 :manickavasakampalli_thirukkuralthileepan02
மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்06 : manickavasakampalli_thirukkuralthileepan06
மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்03 : manickavasakampalli_thirukkuralthileepan03

மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்04 : manickavasakampalli_thirukkuralthileepan04
மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்07 :manickavasakampalli_thirukkuralthileepan07
மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்01 :manickavasakampalli_thirukkuralthileepan01

மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்09 :manickavasakampalli_thirukkuralthileepan09
மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்05 : manickavasakampalli_thirukkuralthileepan05
மாணிக்கவாசகம்பள்ளி-திருக்குறள்திலீபன்08 : manickavasakampalli_thirukkuralthileepan08
+++++

மா ஓகையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா




மாணிக்கவாசகம்பள்ளி-மாஓகம்01 : manickavasakampalli_oagam01

மா ஓகையில் கலந்து கொண்ட

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்

பாராட்டு விழா 

  தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்(யோகா) கலந்துகொண்டதற்குப் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
   விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கந்தர்சட்டிக் கழகம் சார்பாக நடைபெற்ற மா ஓகையில்  கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகத்தின் சார்பாகச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் இருந்து மாணவர்களை  மா ஓகைக்கு ஒருங்கிணைத்து அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் கருப்பையா, சிரீதர் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை காலவல்லி நன்றி கூறினார்.
மாணிக்கவாசகம்பள்ளி-மாஓகம்02 : manickavasakampalli_oagam02

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages