நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாத 5 வடவெழுத்துகளை தமிழர்கள் தமிழல்லா அயன்மொழிச் சொற்களை
ட்ரான்ஸ்லிட்டரேட் செய்ய தமிழ் இலிபியில் பாவிக்கின்றனர். இணையம், அச்சு நூல்களில் காணலாம்.
இன்னொன்று: தமிழில் நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாதது: தாதுவேரியல்.
சம்ஸ்கிருதத்தில் நன்கு வளர்ந்த துறை. தமிழில் தாதுவேர் சாஸ்திரம் நன்கு வளர்ந்திருந்தால்
இந்தியாவில் திராவிட பாஷைகள் அழிந்து இந்தோ-ஆர்ய பாஷைகள் மிகுதல் குறைந்திருக்கும்.
அது நடக்கவில்லை. பின்னர் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் இதுபற்றி ஆராய்ந்தார்.
பல காலமாக, சமணர் வழிபாட்டில் உள்ள திருவள்ளுவர் உருவை தங்கக் காசாக வெளியிட்டவர் எல்லீசன்.
அதற்கு முன் சிலர் தமிழில் சில வாசகங்கள் சொல்லிப்போந்தனர்: மணவாள மாமுனிகள்,
மாதவச் சிவஞான யோகிகள், ... குறிப்பிடலாம். தனிநூலாக, ரெவரண்ட் கால்வெல் எழுதினார்.
சான்றார்கள், நெல்லை சரிதம் ஆகிய முக்கியமான நூல்களையும் எழுதியவர் இப் பாதிரியார் ஆவார்.
பின்னர், மாகறல் கார்த்திகேயர், சுவாமி ஞானப்பிரகாசர் (யாழ்), பாவாணர், ....
எல்லாவற்றுக்கும் மேலாக, எமனோ-பர்ரோவின் திராவிட வேர்ச்சொல் அகராதி (DED)
தெலுங்கு, திராவிட மொழியியல் பேரா. பி.எஸ். சுப்பிரமணியம்,
DED-கு பிற்சேர்க்கை நூல் வெளியிட்டுள்ளார். சென்னையின்
செம்மொழி ஆய்வு நிலைய வெளியீடு.
திராவிட மொழியியலில் செய்ய வேண்டிய பணிகள் பல. சிந்துவெளி திறந்துள்ளது.
21-ஆம் நூற்றாண்டில் திராவிட ஒப்பீட்டு மொழியியல் இந்தியாவில், மேலை நாடுகளில்
வளர வேண்டும்.
நா. கணேசன்
got the first error; ஒன்றே that is more on wrong word where the meaning has got across
ok
the second "வினை வேர்கள் ஏன் இப்படி மாறுகின்றன" i didnot mean to say the வேர்கள் change;
bur rather that the word formation is different for similar வேர்கள்
as Mrs kanmani said why not!
the base rule is that make and break a rule!
நில் எனும் தாதுவேர் நின்ற, நிற்ற- என மாறும்.
கல் எனும் தாதுவேர் கற்ற என மட்டும் மாறும். ஏனெனில் கன்றிப்போதல் வேறு பொருள் உடைத்து.
செல் எனும் தாதுவேர் சென்ற என மட்டும் மாறும். ஏனெனில் செற்று ( < செறு- வினை) என்பது
வேறு பொருள் உடைத்து.
Disambiguation is the reason. There should be no ambiguity in the verb usage, that's the idea behind.
There are some examples where Tamil literature is needed to understand the original meaning.
Thanks to Tamil Thaay, we have a good depth in Time, some 2000 years, even though
the subject matters are rather few as we travel back in Time and also the quantity, analysis, area of spread, etc.,
when compared to Indo-Aryan literatures. Like Indo-Aryan, Dravidian languages never had extensive
dhAtu-etyma analysis until the European scholars entered the field.
பத்தர் (யாழின் பத்தர்), பந்தர் (தண்ணீர்ப் பந்தர்) பொருள் வேறுவேறு.
சங்க காலத்திலும், பிற்கால இலக்கியங்களிலும் பத்தர் X பந்தர் வேறுபாடு காட்டுகின்றனர்.
குலை (குலம் என்ற சொல்லோடு தொடர்புடையது), ஆனால் கொலை என்றால் மர்டர்.
குசு, கொசு வேறுபடும். புலை என்ற சொல்லும், பொலி என்ற சொல்லும் வேறுபடுவது சங்க இலக்கியம்,
த்ராவிட ஒப்பீட்டு மொழியியல் காட்டுகிறது. இதை மறைத்து தற்காலத்தில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும்
ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. உ-ம்: அண்மையில் , கணியன் பாலா என்பவர் கட்டுரை பார்க்க நேர்ந்தது.
~NG