இன்றைய தமிழின் 'விசில்' = அன்றைய தமிழின் 'வீளை'
நாக்கை மடித்து ஒலியெழுப்பும் செயல் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வழக்காறு.
'விலங்குகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வீளை ஒலி எழுப்பினர். வீளையொலியில் இருந்த இசைக்கூறும் பொருட் கூறும் வியந்து போற்றத்தக்கன.
கோவலரின் வீளையொலி கால்நடைகளுக்குச் செய்தி கூறியது.
“தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே” (நற்.142) எனும் பாடற்பகுதி சொல்லும் நுட்பமான செய்தி என்னவெனில் கோவலரின் வீளையொலிக்கேற்பக் கால்நடை வேற்றுப்புனத்தில் நுழையாமல் காட்டில் மேய்ந்தது என்பதாகும்.'
'விசில்' தமிழாகிய சொல்; அழகு! அருமை!
சக