திருமூலரின் சிவகுருதரிசனம்

210 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Aug 1, 2014, 12:07:43 AM8/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com

திருமூலரின் சிவகுருதரிசனம்

 

இடுகை 1

 

அன்பர்களே

 

குருவழிபாடு பல்கி இருக்கும் இவ்வேளையில் ஆங்கே நிகழும் பல பாதகங்களைக் கண்டு மனம் நோகாது இருக்க முடியாது. குருவழிபாடே வழிபாடு என்ற அளவிற்கு சைவ சமய வாழ்க்கையும் வீழ்ந்து கிடக்கின்ற நிகலையில் உண்மையான குரு இறைவனே வேறு யாரும் அல்ல என்ற உண்மை தமிழர்கள் சமய வாழ்க்கையில் இல்லாதே போய்விட்டது. அதனை மீண்டும் ஒருவாறு மக்கள் நடுவில் கொண்டு வரும் வகையில் திருமூலரின் 6ஆம் தந்திரத்து  முதற் தொகுதியாகிய ‘சிவகுருதரிசனம்’ எனும் பாடல்கட்கு உரை எழுதலாம் என்ற எண்ணத்தில் இதனைத் தொடங்குகின்றேன்

 

சிவஞானச் சிந்தனையில் அழுந்த வேண்டும் என்னும் விருப்பமும் உண்டு.

 

நான் எடுத்துக்கொண்ட பதிப்பு ஜ். வரதராசனார் உரையோடு கூடிய பழனியப்பா பிரதர்ஸ் அச்சிட்ட பதிப்பாகும். எண்கள் அதனைத் தழுவியதே யாகும்.

 

இங்கு யானே சுருக்கமாக உரை எழுதி பிறகு விளக்கமாக சிலவும் சொல்லி எனக்கே யான் போதித்திகொண்டு விரும்புவார்களும் படித்து மகிழ அனுப்பி வைக்கின்றேன்

 

உலகன்.

 

இறைவனே  ஞானகுரு

 

1573

 

பத்திப் பணித்துப் பரவும் அடி நல்கி

சுத்த உரையால் துரிசு அற சோதித்துச்

சத்தும் அசத்தும் சதசத்துங் காட்டலாற்

சித்தம் இறையே சிவகுரு வாமே

 

உரை (உலகன்)

 

உலகில் நிலவும் எல்லா பொருட்களிலும் யாது சத்து யாது அசத்து யாது இரண்டுமாகிய சத்து-அசத்து என்று தெளிவுறக் காட்டி மேலும்  ஆன்மாவின்  அகத்திலே செறிந்திருக்கும் மும்மலங்களைப் போக்கி சுத்தம் செய்யும் போதகத்தின் வழி  ஞானம் புகட்டி செருக்கெல்லாம் போக்கி அன்பு எனும் பத்தி மேவ பணிந்துத் தொழ திருவடிகளையும் நல்கி என்னை என் சித்தத்தில் இருந்தவாறே ஆட்கொண்ட சிவபெருமானே இதனால் மெய்யான குருவாகும் அறிவாய்.

 

விளக்கம்

 

இப்பாடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க சைவத்தின் கலைசொற்களாகிய ‘சத்து அசத்து சதசத்து’ என்று சொற்கள் பயில்கின்றன. இவை  சுட்டுணர்வின் அடிப்படையில் விளக்கமுறுவன வாகும். இதனை பிற்காலத்தில் மெய்கண்டார் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

 

எந்த சுட்டுணர்விற்கும் எட்டாது அப்பாலாக இருப்பது ‘சத்து” எனப்படும் சத்தறிவாகும். ‘சத்து எதிர் சூன்யம் ‘ என்றார் மெய்கண்டாரும். இதனையே சுட்டுணர்வு யாதுமிலா பார்வையற்ற பார்வையின் போது விளையும் ஞானம் என்று அழிவிலுண்மையில் விளக்கியுள்ளேன்.

 

இனி இந்த சத்தறிவிற்கு வேறாக சாதாரண வாழ்க்கையில் மெய்யே என்று தோன்றி ஆனால காலவுணர்வோடு வருவதின் மாற்றத்திற்கும் பொய் என்று வீழ்தற்கும்  இடந்தரவல்ல அறிவே அசத்தறிவு ஆகும். மலை ஏறும் போது ஓர் படி அடைய அங்கேயே நின்றுவிட்டால காட்சிகள் மாறாது அதுவே நிரந்தரம் என்ற உணர்வை எழுப்பும். ஆனால் படிகளை ஏற தொடங்கிவிட்டால் காட்சிகள் மாறும். நிரந்தரம் என்ற எண்ணமும் விழும்.  அதுபோலத்தான்ன் இந்த அசத்தறிவுகள்,

 

இங்கு ஐரோப்பிய பொற்லிய அறிவியல் தரும் எல்லா  Theoretical Explanation அனப்படும் அனைத்டும் இவ்வாறான அசத்தறிவுகள் தாம், அவை மாறிக்கொண்டே வரும். ஐரோப்பியர்கள் அறிவியல் இதுவரை சத்தறிவைக் கண்டதில்லை, காணவும் முடியாது.

 

இனி இவ்வாறு சத்தறிவு உண்டு என்று ஒருவாறு உணர்ந்து அதனால் அறிவில் நிற்கும் சுட்டுணர்வோடு வருமனைத்தும்  அசத்து என்று அறியும் பொருளே சத்-அசத்தாகிய ஆன்மா வாகும்

 

ஆன்மாவிற்கு மாறி மாறி வரும் இயல்பின் ஊடே என்றும் மாறா இயல்பும் இருக்கின்றது. மாறி வரும் அசத்தறிவுகளை மகிழும் அதே பொழுது என்றும் மாறா இயல்பின் சத்தறிவும் உண்டு என்று அறிந்து அதனை நோக்கிச் செல்வதே மெய்வாழ்க்கை என்றவாறு உணர்ந்து அதற்கிணங்க வாழும் திறத்தது ஆன்மா.

 

எங்கிருந்து இந்த ஞானம் ஆன்மாக்களுக்கு வருகின்றது?

 

எங்கும் போக வேண்டாம், வேதங்கள் ஆகமங்கள் மற்றும் ஏனைய மறைநூற்கள் குரவர்கள் என்றெல்ல்லாம் திரிய வேண்டாம் என்கின்றார் திருமூலர். அவை உதவலாம் ஆனால் கட்டாயம் இல்லை.

 

எல்லார் அகத்தும் இறைவன் அவரரவர் சித்தித்தில் நின்று ஞான குருவாக எழுந்து போதித்துக்கொண்டே இருக்கின்றான். நாம் தான் அந்த போதனையை புரிந்து கொள்ள முடியாதவர்களாக பலவாறு பேதலித்துத் திரிகின்றோன்,

 

ஆனால் அவன் எப்படி போதிக்கின்றான்?

 

நம்மை நாமே சோதிக்துக்கொண்டு நம் செயகைகளையே சிந்தனைகளையே மறித்து நோக்கி பாவமா புண்ணியமா என்று சோதித்து பாவம் எனப்பட்டால் உடன் அவற்றைக் களைந்து புண்ணியம் என்று படுபவற்றையே தொடர்ந்து செய்யுமா ஊக்குவிக்கின்றான் இறைவன்.

 

நம் செயல்களைப் பற்றியே நம்முள் தோன்றும் அறம் பாவம் எனும் சிந்தனையிலேயே இறைவனது போதனை அடங்கி இருக்கின்றது.  

 

இந்த சுயச் சிந்தனை மருத்துப்போகாதும் மங்கிப் போகாதும் திரிபுறாதும் விகாரமடையாதும்  தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்தவே நாம் பணிந்து பத்தி செய்ய இறைவனும் தன் அடி நல்கி உதவுகின்றான். அடி நல்குவதாவது பாவப் புண்ணியச் சிந்தனை விகாரமும் திரிபும் உறாது நலமே செழித்தோங்கி நிற்குமாறு செய்வதாகும்.

 

பெரும் பெரும் பாவங்களைச் செய்துவிட்டு நம் உள்ளுணர்வையே நசுக்கிக் கொன்று பாவமே செய்யவில்லை என்று நம்மை நாமே எமாற்றிகொள்வதும் நடக்கத்தான் செய்கின்றது.  பெரும் பாவங்களை செய்துவிட்டு அவை பாவங்கள் என்று அறியாதே கிடக்கும் பாவமும் உண்டே!

 

தொடரும்

 

உலகன்

 

 

 

K. Loganathan

unread,
Aug 1, 2014, 9:08:08 PM8/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com

திருமூலரின் சிவகுருதரிசனம்

 

இடுகை 2

 

1574 முத்தி முன்னறிவு

 

ஆன்மா தன்னை செவ்வே பிழையின்றி அறிந்த ஒன்றல்ல. தானே தனக்கு ஓர் கேள்விக்குறியாக இருக்கின்ற ஓர் பொருள் அது. அதன் சொரூபம்தான் என்ன, உண்மையான வாழ்க்கையின் நோக்குதான் என்ன என்பதையெல்லாம் தெளிவாக அறியாது பெரும்பாலும் ஓர் குழப்பத்தில் இருக்கும் சித்துப் பொருளே ஆன்மா. அதனது சொரூபத்தை அறிந்து சரியான நாட்டத்தொடு வாழ வைக்க ஓர் ஞான போதனை தேவைப்படுகின்றது. அதனை தருவதாக அனைவர் அகத்தே யாண்டும் நீங்காது இருக்கின்ற சற்குரு இறைவனே என்கின்றார் திருமூலர் கிழ் வரும் பாட்டில்

 

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு

நேசித்த காயம் விடுவித்து நேர்நேரே

கூசற்ற முத்தியில் கூட்டலா நாட்டத்தது

ஆசற்ற சற்குரு அம்பல மாமே

 

உரை(உலகன்)

 

செயல்படா வழி கற்றல் இல்லை என்பதால் செயல்படுமாறு பல உலகியல் பற்றுக்களாகக் கூட்டி பல கற்குமாறு கட்டி அதன் வழி மூல மலமாகிய ஆணவ மலத்தை ஆன்மாவின் அகத்திருந்து நீக்கி, ஆன்மா தனித்த பொருள் அல்ல இந்த உடம்பே என்று தேகான்மவாதியாக இருப்பதிலிருந்து விடுவித்து ஆன்மா ஓர் அநாதிப் பொருள் என்று அறியத் தந்து, நேராக வேறு யாரும் போதிக்கா வகையில் ஆன்மாவின் அடிப்படை ஊக்கமே கூசி மறையும் பண்பில்லா முத்தி அடையுமா உண்மையான ஆன்ம நாட்டத்தை உணர்த்துவது அம்பலத்தே நின்றாடும் எவ்வித மலத் தொடக்கும் அற்ற அநாதியே நின்மலனாகிய  சற்குருவாகிய இறைவனே யாகும்

 

விளக்கம்:

 

இப்பாட்டில் விளக்கப்பட வேண்டிய மையக் கருத்து ‘ கூசற்ற முத்தி” என்பதேயாகும். ‘கூசுதல்’ என்பத் மிகத் தொன்மையான ஓர் சொல், சுமேருத் தமிழில் விளங்கும் ஓர் சொல்லுமாகும். ‘கூசுதல்’ என்றால் ‘இல்லாது போதல்’ எனும் பொருளது. ஆக ‘கூசற்ற முத்தி’ என்றால் என்றும் அழியாத ஆழத்தின் ஆழத்தில் விளங்கும் எல்லா ஆன்மாக்களின் மெய் நாட்டமாகும்.

 

இது எல்லார் அகத்து கிடக்கின்றது ஆனால் சாதாரண முறையில் ஆன்மாவிற்கு எட்டாத முறையில் அது அறியாத முறையில் புதையுண்டு கிடக்கின்றது. இது ஏன் இப்படி எனுங் கேள்வி எழும்போதுதான் ஆன்மா இருக்கின்றது ஆனால் ஆணவ மலமறைப்பால் தனது உண்மையையும் தனது உண்மையான ஆழமான நாட்டத்தையும் அறியாது அஞ்ஞான் இருளில் கிடந்து அல்லற்படுகின்றது என்ற உண்மையும் வெளிப்படுகின்றது.

 

ஆக சகச மலமாகிய ஆணவ மல மறைப்பைப் போக்காவிட்டால் ஆன்மா தன்னைப்பற்றிய மெய்யறிவை வாழ்க்கைப் பற்றிய மெய்ப்பொருளை அறியாதே பலவாறு உழலும்.

 

இந்த அகத்துச் செறிந்திருக்கும் அஞ்ஞான இருளைப் போக்குவதே சற்குருவாக  அநாதிய முத்த சத்துருவாகிய அம்பலதே அயராது அம்மையொடு ஆனந்தக் கூத்தாடும் இறைவனாகும்.

 

இதனை எப்படி இறைவன சாதிக்கின்றான்?

 

உலகியல் வாழ்க்கையை வாழும்போது தானறியாதே பற்பல கற்று அகத்துச் செறிந்திருக்கும் அஞ்ஞான இருளை நீக்கும் வகையில் இறைவன் ஓர் ஆட்டம் ஆடுகின்றான். உடம்பினைத் தந்தும் அகத்தே பல வேட்கைகளைத் தந்தும் அந்த சாதாரன உலகியல் வேட்க்கைகளை அடைந்து மகிழும் பொருட்டு பற்பல செய்ய வைத்து தான்றியாதே கற்கவும் வைக்கின்றான்.

 

இந்தக் கற்றலும் பொருட்கல்வியில் தொடங்கி பின் தன்னைப் பற்றியே தான் அறியும் தற்கல்வியாக உயர்ந்து பின் இன்னும் ஆழஞ் செல்ல இறைக்கல்வியாகவே முடிகின்றது.

 

பதியினைப் போல் பசு பாசம் அநாதி என்பதின் பாசக் கல்வியாகிய பொருட்கல்வி, பசுக் கல்வியாக தற்கல்வி பதிகல்வியாகிய இறைக்கல்வி எனும் முத்திறக் கலவி மெய்யாக, முடிவில் ஆன்மாவும் இறைக்கல்வி வழி அகத்தே செறிந்திருக்கும் ஆணவ மலத்தையும் நீக்கிட, வாழ்க்கையின் மெய்ப்பொருள் வீடுபேறு அடைந்து மீண்டும் பிறவாமை மகிழ்வதே என்று உணர்கின்றது.

 

இந்த ஞானத் தெளிவு வந்த பிறகும் வாழ்க்கைதான் எதற்கு என்ற தெளிவும் வந்துவிட, உடல்தொடர்பான எல்லா பற்றுக்களளயும் போக்கி ஆன்மாவின் ஆழ் நாட்டமாகிய வீடுபேறு அடைவதே வேண்டியது என்றவாறு உணர்ந்து தெளிந்து வாழ்க்கை அதற்கென்றே  என்று வாழும்.

 

இதுவே மெய் வாழ்க்கை authentic existence)  என்றும் உணர்ந்து மகிழும்.

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

K. Loganathan

unread,
Aug 6, 2014, 9:10:26 PM8/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com

திருமூலரின் சிவகுருதரிசனம்

 

இடுகை 3

 

சிவகுருவால் எண் சித்திகளும் சத்திகளும்

 

சாதாரண மானிடர்களை சற்குருவாக ஏற்று அவரது வேடங்கண்டு மயங்கி அவர் வழி செல்லும் மாணவர்கட்கும் உண்மையாக இறைவனே குருவாக அமர்ந்திட அகத்திருந்து அவன் போத்திப்பதையேக்  கேட்டுணர்ந்து அவன் காட்டும் வழியே செல்லும் மாணவர்கட்கும் வேற்றுமைகள் பல உண்டு. இறைவனே போதிக்க மாணவர்கட்கு எண்சித்திகள் புத்திகள் போன்றவை வந்தமையும் என்றெல்லாம் கூறுகின்றார்  திருமூலர். இங்கு திருமூலர் எண் சித்திகளும் புத்திகளும் மகிழ்ந்த பெருஞ் சித்தர் என்பதொடு மந்திரவுலகு புகுந்து மந்திர சாதகம் பல செய்தவர் என்றும் நாம் நினைவு கூரவேண்டும்

 

1575

 

சித்திகள் எட்டொடுந் திண் சிவமாக்கிய

சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்

சத்தியும் மந்திர சாதக போதமும்

பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே

 

உரை(உலகன்)

 

அணிமாதி சித்திகளாகிய எட்டும், மும்மலங்களும் நீக்கிய சுத்தியின் காரணமாக ஆன்மா சிவமாகி நிற்கும் சிவத்துவ நிலையும் அத் தூய்மையின் காரணமாக எண்சத்திகள் அல்லது புத்திகளாக மொகனம் வசியம் ஆகருடம் போன்றவையும் சிவயோகத்தில் ஆழ்ந்து சிவகூத்துத் தரிசனம் மகிழும் சத்தியும் மந்திர வுலகிற் புகுந்து  பல சாதகங்கள் செய்யும் போதனாத்திறனும் இறைவன் பால் உண்மையான அன்பும் அகத்தே குருவாக எழுந்தருளும் சிவனின் அருளினாலேயே ஆன்மாக்களுக்கு உரித்தாகும்.

 

விளக்கம்.

 

அநாதி முத்த சித்டுருவாகிய இறைவன  சற்குருவாக அகத்தெழுந்து போதிக்கவேதான் ஆன்மா வீடுபேறு மகிழ முடியும். ஏனைய சற்குருபோன்று திரியும் மாந்தர்கள் அனைவரும் இதனைச் செய்ய முடியாது என்பதொடு இறையருளாலேயே சாதாரண மாந்தர்கட்கு குருபோன்று நடித்து அவர்களை மெய்யான குருவாகிய இறைவனிடமே கொண்டுசெல்ல உழைப்பவர்கள் ஆகும். இதனை உணராத சிலர் தானே இறைவன் என்று செருக்காடுவர், மக்களில் சிலரும் தம் அறியாமையின் காரணமாக இத்தகைய குரவர்களையே சற்குரு ஜகத்குரு என்றெல்லாம் கூறி மயங்கி தொடர்ந்து அஞ்ஞான இருளிலேயே கிடப்பர்.

 

இவற்றையெல்லாம் ஒதுக்கி மயங்காது தன் அகத்தே தனக்கு புன்ணிய பாவங்களை உணர்த்தியவாறு தனக்கு போதித்துக்கொண்டடேஇருக்கும் இறைவனையே குருவாகக் கொண்டு அவன் போதனை வழியே சென்றால் என்ன நடக்கும்?

 

முதலில் அகத்துச் செறி மும்மலங்களாகிய அழுக்குகள் துகள்கள் அகத்திருந்து முற்றிலும் போக்கப்பட ஆன்மா சுத்தமாகி அணுத்துவம் இழந்து பரத்துவமும் பின் சிவத்துவமும் எய்தி  அன்பே தானாகி நிற்கும்  

 

இங்கு சாதி மத வர்ண பேதங்கள் யாவும் முற்றிலும் அழித்த அருளே தானாக நிற்கும் சுத்தமான அருள் நிலை சாத்தியமாகும்

 

இவ்வாறு அன்பே தானாகி நிற்க தனக்கென யாதும் வேண்டாத அருள்நிலையில் இதுவரை இறைவனுக்கே உரியதாயிருந்த  எண் சித்திகளும் புத்திகளும் அந்த நல்லான்மாவிற்கு உரித்தாக வந்தமையும்

 

தனக்கென இல்லாது துயரும் ஆன்மாக்களுக்கு நல்லது செய்து உபகரிக்கும் வகையில் இந்த எண் சித்திகளும் புத்திகளும் கைவரும் என்பதாம். காட்டாக உச்சாடனம் எனும் ஓர் புத்தி அல்லது ஓர் சத்தியாகும். மிகவும் மோசமான நோயால் பீடிக்கப்பட்டாருக்கு நல்லது செய்யும் வகையில் அந்தப் பிணியை தக்க உபாசனைகள் வழி உச்சாடித்துப் போக்கி அவர் நலமே தொடர்ந்து வாழ வழி செய்வதாகும்.

 

இவ்வாறு வருவதே மந்திர சாதகத்தால் வரும் அரிய ஞானபோதகங்களைப் பெறுதலும் அதனால் உண்மையான தெய்வபத்தியில் சிறந்தோங்கி இறைவனோடு சாயுச்சியமாக ஒன்றித்து இருப்பதுமாகும்.

 

திருமூலர் அனுபவித்த மந்திர சாதக போதகத்தை அவரது நான்காம் தந்திரத்தில் காண்க. அங்கு அக்கரங்கள் அக்கர சக்கரங்கள் யந்திரங்கள்  போன்றவை எல்லாம் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

 

K. Loganathan

unread,
Aug 9, 2014, 9:32:35 AM8/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com

திருமூலரின் சிவகுருதரிசனம்

 

இடுகை 4

 

நற்குரு சுத்த சிவமே

 

இறைவன் என்பான் எல்லாம் அழியத் தான்மாத்திரம் அழியாது இருப்பவன். எங்கும் இருக்கும் அவன் எல்லார் உள்ளத்திலும் இருக்கின்றான். எப்படி இருக்கின்றான்? எப்படி நாம் அதை அறிவது? ஏன் அவன் இப்படி இருக்கின்றான்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடையாக பிறந்தப் பாடலே கீழே வரும் அழகியப் பாடல்,  இங்குதான் ‘சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே” வேறு எந்த தெய்வமும் அல்ல மானிடர்களும் அல்ல என்று திருமூலர் துணிந்து கூறுகின்றார். அரசர்களையும் இருடிகளையும் இறைவனே சற்குருவே என்ற மடமைகள் எல்லாம் போக இறைவனைத் தவிர்த்து வேறு யாரும் சற்குருவல்ல என்று துணிந்து கூறி மக்களின் மடமையைப் போக்குகின்றார் நம் திருமூலர்.

 

1576

 

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்

நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்

எல்லாருக்கும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலாற்

சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே

 

உரை(உலகன்)

 

சுத்த சிவன் எனும் இறைவன் எல்லாவகை உருவங்களையும் கடந்து ஆகவே எல்லா உலகிற்கும் அப்பாலாய் இருந்த போதிலும் உயிர்கள் மேல் கொண்ட கருணையால் பல வடிவங்களை எடுத்து பல மூர்த்தங்களாய் இப்பால் உயிர்கட்குத் தோன்றுவன். அதுபொழுது பாவங்கள் செய்யாது நல்லதாகிய புண்ணியங்கள் செய்வார் அகத்தே பல நலங்களை அருளுவன். இனி சாதி மத வர்ண பேதங்கள் யாதுமின்றி எல்லாரும் வீடுபேறு உற்று பிறப்பறுத்து உய்ய இங்கே ஞானம் அருள்வதால், நல்ல ஞானமே தாங்கி வரும் சொற்கள் நிறைந்த நற்குரு அநாதியே நின்மலனாகிய சுத்த சிவமேயாம், வேறு யாரும் அல்லவாம்.

 

 

விளக்கம்

 

இங்கு நாம் கருதவேண்டியது ‘நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்’ என்ற வரியே நல்லார் யார் என்ற கேள்வியை எழுப்புகின்றது. நல்ல குணங்களைக் கொண்டிருப்போர் என்றும்  அன்பு தயை காருண்யம் போன்ற குணங்களை உடையவர்கள் என்றெல்லாம் சமணர்களைப் போன்று புத்தர்களைப் போன்று கூறுவது ஒக்கும். ஆயினும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய நல்லார் என்றால் வர்ண தரமத்தில் உயர்ந்து நிற்கின்ற பிராமணர்கள் என்றோ, சாதி பேதங்களில் கீழான சாதி மக்களைத் தவிர்த்து மற்ற உயர்ந்த சாதியினர் என்றோ மதங்களில் ஓர் குறிப்பட்ட மத்தத்தைச் சார்ந்து அம்மதம் விதிக்கின்ற அனுஷ்டானங்களை தவறாது பின்பற்றுகிறவர்கள் என்றோ மற்றும் யோகங்கள் விரதங்கள் போன்றவற்றில் சிறந்திருப்போர் என்றோ கூற முடியாது என்றே நினைக்கின்றேன்.

 

அன்பு தயை காருண்யம் போன்றவை சாதி மத வர்ண பேதங்களைச் சார்ந்து வருவதில்லை, பிராமண்னாகப் பிறந்த அனைவரும் அதன் காரணமாக நல்லோர் ஆவதில்லை. சமுதாயத்தில் பொருளாதார நெருகடிகளால அடிமைபோல் ஆக்கப்பட்ட கீழ் சாதி மக்கள் எல்லாருமே தீயவர்கள் இல்லை.

 

அப்படி என்றால் யார்தான் நல்லார்?

 

அநாதிப் பொருளியல் பகர்ந்த திருமுலர் அதன் வழியேதான் சிந்தித்திருப்பார்.

 

யார் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை எனும் மலங்களால பந்திக்கப்பட்டு பொல்லாத கொடூர வீழ்ச்சி வினைகளாக பிறருக்குத் துன்பம் தரும் செயல்களாக செய்கின்றார்களோ அவர்கள் நல்லார்களாக இருக்கமுடியாது. இறைவன் முப்புரம் செற்றனன் என்று கூறி அந்த முப்புரமாவது மும்மலக் காரியம் அல்லவா? என்றுதானே திருமூலர் கேட்கின்றார்.

 

யார் ஆணவமலத்தின் தாக்கத்தால் அணுத்துவப்பட்டு சாதி என்றும் வர்ணம் என்றும்  செவச் செழிப்பு என்றும் அதிககரம் என்றும் போற்றி ஓரு சார் மக்களைக் கீழேத் தள்ளி அவர்கள் உரிமைகளைப் பரிப்பவர்கள் நல்லார்களாக இருக்க முடியாது.

 

இவர்கள் அகத்தே இறைவன் வெளிப்படாது தூரமாகவே நின்று ஆயினும் தக்க தெய்வ வடிவங்கள் எடுத்து போதிக்காகாது விடான். ஆயினும் போதனைகள் பல அவதிகளைத் தரும் தீக்கைகளாகவே இருக்கும்.

 

இதுவும் இறைவனது கருணைதான்-- அவனது மறக்கருணை. தீய வழியில் செல்வாரை அவர்கள் தீய வழியில் செல்கின்றார்கள் என்பதை உணர்த்த பலவாறு தண்டிப்பதும் இறைவனது கருணையே யாகும்

 

இங்குதான் “எல்லாருக்கும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலால்’ என்பது புரிகின்றது. இறைவன் அன்பே வடிவானவன். அவனுக்கு வேண்டுதல் வேண்டாமை இல்லை. நல்லோர் உளத்தில் அனுக்கமாக நின்றாலும் பொல்லார் உள்ளத்தில் அவன் இல்லாமல் இல்லை. அங்கும் தக்க வடிவில் எழுந்து நின்று பல தீக்கைகள் செய்வதின் வழி அவர்களைத் திருத்தி நல்வழி படுத்துவான்

 

இவ்வாறு வேண்டுதல் வேண்டாமை இன்றி சாதி மத வரண பேதங்கள் எல்லாம் பார்க்காது நல்லவரோ தீயவரோ அனைவருக்கும் அவரவருக்கு ஏற்ற முறையில் ஞானபோதம நடத்துகின்றவன் சுத்த சிவனே என, அவனே நற்குரு என்பதொடு உண்மையான சற்குருவும் ஆகும். அநாதியே நின்மலனாயும் அநாதி முத்த  சித்துருவாகவும் இருக்கின்ற சுத்த சிவனைத் தவிர்த்து வேறு யார் சற்குருவாக பக்குவம் அறிந்து போதிக்கின்ற நற்குருவாக  இருக்க முடியும்?

 

தொடரும்

 

உலகன்

 

 

 

 

 

K. Loganathan

unread,
Aug 9, 2014, 8:26:40 PM8/9/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Dear Puru

U think you got the point and the essence of Saiva metaphysics in saying

//The theory of mum.malam, if taken as a development issue one has to pass through as we,grow or progress is interesting than paapa punniya theory. I like it as a development issue for whole of animals, beings including humanity, that is on learning path for ever//

I believe that the concept of Mummalam so characteristic of Saiva Metaphysics and which is part of the Fundamental Ontology is a great achievement of Tamil genius  an metaphysical understanding that has been  not sufficiently emphasized.

I think we Tamils have been very negligent of the achievements in Metaphysics of such great thinkers like Tirumular Meykandar and so forth.

Any way in my AziviluNmai I also take a developmental view and explain the essence of aaNvam kanam and Maayam the Mummlam as kinds of obstructions for the developmental  progress of self.

Very soon I will be talking about such matters in connection with Sutras 11 and 12.

Loga


On Sun, Aug 10, 2014 at 12:09 AM, purushotha...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com> wrote:
 

எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாருக்கும் உய்யக்கொண்டு இங்கே அளித்தலாற் சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே I try to make my way, the one beyond all worlds, but in this world, for everyone to get benefit, he helps those who helps others by his atul, he is beyond words, pure form of shiva, he is the best teacher, perhaps than the so called gurus who,claim.. So, the nallaar are the people who do good to others, perhaps,they are not the kings,or priests and so on. Suppose we take he is helping all to be good and also rejecting paapa punniyaa, cause and effect, we also fail to explain why some are good and some are bad. The theory of mum.malam, if taken as a development issue one has to pass through as we,grow or progress is interesting than paapa punniya theory. I like it as a development issue for whole of animals, beings including humanity, that is on learning path for ever. We can take this as god's designs. Sometimes, I used to wonder, and why?

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (5)
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Aug 11, 2014, 8:59:29 PM8/11/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
 டாக்டர் கணேஷ் அவர்களே

 மிக்க நன்றி, சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள், யானும் ;சுத்த சிவம்" என்றால் என்னவாக இருக்கும் என்று என்னையே நான் கேட்டுள்ளேன் கேட்டுக் கொண்டும் இருக்கின்றேன்

சிந்தனையைத் தூண்டும் தங்கள் கருத்துகட்கு மிக்க நன்றி. தெளிவு பிறந்ததும் இதனைப் பற்றி இன்னும் சிறிது எழுதுகின்றேன்

மெய்கண்டாரும் யார்தான் குரு என்பதைப் பற்றி தனது 8ஆம் சூத்திரத்தில் விளக்கி இருக்கின்றார். ஆகவே மீண்டும் சிந்தித்து ஓர் தனிக் கட்டுரை எழுதின்றேன்

தொடர்ந்து இவ்வாறு தங்கள் கருத்டுக்களைக்  கூறி எனை திருத்தியவாறு இருங்கள், பெரிதும் மகிழ்வேன்.

உலகன்


2014-08-12 1:56 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

அன்புள்ள உலகன்,

உங்கள் விளக்கம் நன்றாக உள்ளதுஆயினும் சிறிது மயக்கம் தருவதாகவும் உள்ளதுசில கேள்விகள் எழுகின்றன.

திருமூலர் சுத்த சிவம் என்று கூறுவதின் பொருள் என்னஅசுத்த சிவம் என்றும் இருக்கிறதாஎல்லா உலகத்துக்கும் அப்பால் இருக்கும் சிவனே குருவாக உள்ளான் என்றால் சாத்திர தோத்திர நூல்களில் வரும் ஞானிகள் குரு இல்லையா? - இத்தகைய கேள்விகள் பொதுவாக பலர் மனதில் எழுபவைஇவற்றுக்கு விடை அளிப்பது பயனுள்ளது.  இது குறித்த எனது கருத்தைக் கீழே தருகிறேன்.
1).திருமந்திரம் சுத்த சைவம்அசுத்த சைவம் என்றெல்லாம் பேசுகிறதுஇப்பிரிவுகள் போற்றும் கடவுளரை  சுத்த சிவன்அசுத்த சிவன் என்ற பெயர்களால்  குறிப்பிட்டிருக்கலாம்

2).சித்தாந்த சைவத்தை சுத்தாத்துவித சைவம் என்று கூறுவதுமுண்டு.  இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள உறவு அத்துவித உறவு என்று வேதாந்திகளும் சித்தாந்திகளும் கூறுவதைக் காண முடிகிறது.  ஆனால் அத்துவிதம் என்பதன் பொருளும் விளக்கமும் வேறு வேறாக உள்ளன.

சங்கரரின் அத்துவிதம் கேவலாத்துவித  அத்வைதம்இராமானுயரினது   விசிஷ்டாத்வைத அத்வைதம்மத்வரினதுதுவைத அத்வைதம் என அழைக்கப்படுகிறதுசித்தாந்திகளினது அத்துவிதம் சுத்தாத்வைதம் எனப்படுகிறது.  இங்கே சுத்தம் என்பதுகேவலம்விசிஷ்டம் போன்றஅடைமொழி இல்லாதது,  என்ற பொருளில் தரப்படுகிறதுஇது போல் சுத்த சிவன்  என்பதும் பரசிவன்அபரசிவன் போன்ற பெயரில்லாதஅனைத்தையும் கடந்தமெய்ப்பொருளைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம்திருமந்திரம் இதனை தற்பரன் என்று குறிப்பிடுவதைக் காணலாம். "தற்பரம் கண்டுளோர்  சைவசித் தாந்தரேஎன்று கூறுகிறார்.   சுத்த சிவன் என்பது இந்த 'தற்பரன்என்றும் கொள்ளலாம்.

3).ஞானிகள் குருவாக வருவதும் அவர்கள் மூலம் இறைவன் மெஞ்ஞானம் கொடுப்பதும் சைவ நூல்களில் காணக்கூடியது. 'குருவே சிவமெனக் கூறினன் நந்தி,  குருவே சிவமென் பதுகுறித் தோரார்என்பது திருமந்திரம்.  இது சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே’ என்பதைக் குறிப்பதாகவுள்ளது.
மேற்கண்ட கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

அன்பன்
க. கணேசலிங்கம்  



From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; vall...@googlegroups.com; Tolkaa...@yahoogroups.com; "meyk...@yahoogroups.com" <meyk...@yahoogroups.com>
Sent: Saturday, 9 August 2014 9:32 AM
Subject: [MEYKANDAR] Re: திருமூலரின் சிவகுருதரிசனம்

__._,_.___

Posted by: "Dr.K.Ganesalingam" <kganes...@yahoo.com>
Messages in this topic (7)

Yahoo Groups
Find Photos and Files in a Flash!
Now you can use the Groups search box to find photo albums and files within your groups

............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Aug 12, 2014, 4:31:35 AM8/12/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com

சிவன் தான் குருவா?

 

முனைவர் கி, லோகநாதன் 12-8-14

 

 டாக்டர் கணேசலிங்கம் அவர்கள் பழுத்த சைவ சித்தாந்தி . சைவத்தை விளக்கி பல நூற்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளவர், ‘திருமூலரின் சிவகுருதரிசனம்” எனும் இந்த தொடர் தொடர்பாக அதுவும் ‘சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே” என்ற வரி விளங்கும் பாடல் 1576 தொடர்பாக கீழே வர் கருத்து.

 

//திருமூலர் சுத்த சிவம் என்று கூறுவதின் பொருள் என்னஅசுத்த சிவம் என்றும் இருக்கிறதாஎல்லா உலகத்துக்கும் அப்பால் இருக்கும் சிவனே குருவாக உள்ளான் என்றால் சாத்திர தோத்திர நூல்களில் வரும் ஞானிகள் குரு இல்லையா? - இத்தகைய கேள்விகள் பொதுவாக பலர் மனதில் எழுபவைஇவற்றுக்கு விடை அளிப்பது பயனுள்ளது.  இது குறித்த எனது கருத்தைக் கீழே தருகிறேன்.//

 

சுத்த சிவன் என்றால் தானேத் தனக்குத் தலைவனாகிய தற்பரன்’ என்கின்றார்.  அத்தோடு சைவம் கூறும் சுத்தாத்வைதம் என்பது வேதாந்தங்களின் அத்துவிதம் விசிடாத்வைதம் துவைதம் போன்றவை அல்ல, என்றும். முத்தி முடிவிலும் மும்முதல் என்ற அநாதிப்பொருளியற்கு ஏற்ப ஆன்மா சுத்தமாகி சிவனோடு வேறின்றி ஆனால் தன்னை இழக்காது இருப்பதே என்றும் கூறுவதாகத் தெரிகின்றது,.

 

//சங்கரரின் அத்துவிதம் கேவலாத்துவித  அத்வைதம்இராமானுயரினது   விசிஷ்டாத்வைத அத்வைதம்மத்வரினதுதுவைத அத்வைதம் என அழைக்கப்படுகிறதுசித்தாந்திகளினது அத்துவிதம் சுத்தாத்வைதம் எனப்படுகிறது.  இங்கே சுத்தம் என்பதுகேவலம்விசிஷ்டம் போன்றஅடைமொழி இல்லாதது என்ற பொருளில் தரப்படுகிறதுஇது போல் சுத்த சிவன்  என்பதும் பரசிவன்அபரசிவன் போன்ற பெயரில்லாதஅனைத்தையும் கடந்தமெய்ப்பொருளைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம்திருமந்திரம் இதனை தற்பரன் என்று குறிப்பிடுவதைக் காணலாம். "தற்பரம் கண்டுளோர்  சைவசித் தாந்தரேஎன்று கூறுகிறார்.   சுத்த சிவன் என்பது இந்த 'தற்பரன்என்றும் கொள்ளலாம்.//

 

அநாதிப் பொருளியலாகிய பதி பசு பாசம் என்ற உண்மைக்கு மாறாக இல்லாத அத்துவித விளக்கமே ‘சுத்தாத்வைதம்’ என்றே படுகின்றது. எல்லா வேதாந்த தரிசனங்களிலூம் இந்த முப்பொருளுண்மையின் அநாதிப் பொருளியல் இல்லை, அதன மறுக்காத அத்வைதக் கோட்பாடே சைவ சிதாந்தத்தின் சுத்தாத்த்வைதம் என்று கூறலாம்

 

இதனை நான் ‘அறிவத்துவிதம்’ என்று கூறி ஆதிசங்கரின் அத்துவிதத்தை ‘பொருளத்துவிதம் என்றும் கூறியுள்ளேன். ஆன்மாவும் இறைவனும் முத்தி நிலையில் ஞான நிலையில் வேறின்றி ஆனால் பொருள்வகையில் வேறாக இருப்பதுவே அறிவத்துவிதம் என்கின்றேன் முத்தி முடிவிலும் ஆன்மா உண்டு. இல்லை எனில் யார் முத்தியை அனுபவிப்பது என்ற கேள்வி எழ ஆன்மா தான் என்று கூற முடியாது போய்விடும் அநாதி முத்த சித்துருவாகிய சிவனுக்கு முத்தி வந்து அமையும் ஒன்றல்ல. இயலபாகவே அவன் முத்தியில் இருக்கின்றான்

 

‘சுத்த சிவன்’ என்பதற்கு நாம் இப்படியும் பொருள் கொள்ளலாம். அநாதியே அவன் முத்தன் என்பதால் அவன் சுத்தனுமாம்

 

ஞானிகள் குருவாகுவரா?.

 

இனி சாத்திர தோத்திர நூல்களில் வரும் ஞானிகள் குரு அல்லையா? என்ற கேள்விக்கு வருவோம். இந்த நல்ல கேள்விக்கு விளக்கம் தருவதாக மெய்கண்டாரின் கீழ் வரும் வெண்பா அமைகின்றது.

 

சிவஞான போதம் 8ஆம் சூத்திரம்

 

மேற்கோள்: இனி, இவ்வான்மாக்களுக்குத் தமது முதல் தானே குருவுமாய் உணர்த்துமென்றது

 
ஏது: அவன் அந்நியமின்றி சைதன்னிய சொரூபியாய் நிற்றலான் 
  
விளக்கம்(உலகன்) 
சத்தறிவேத் தன்னறிவாய், காலத்தாக்கமின்றிய சுட்டுணர்விறந்த பட்டுணர்வினனாய் அனைத்தொடு அந்நியமின்றி நின்று அறிகின்ற இறைவன் சிவஞானமே தன்வடிவாய் நிற்கின்ற, சுத்த சைத்தன்னியச் சொரூபியாம். ஆகவே அநந்நியமாய்  ஆன்மாக்களோடு பிரிப்பின்றி நிற்க, ஆன்மாக்களின் இயல்புகளை  பிழையற காண்பவன் என, ஞானமயனாகிய இறைவன் அருளே வடிவினன் என்பதாலும் சிவஞானபோதத்தை யாண்டும் நடாத்திக்கொண்டே இருப்பவன் என்பதாம்சர்வக்ஞனாகிய அவன் சர்வ வல்லமையுடைய வித்தகனும், தானே தனக்குத் தலைவனாகிய தற்பரனும் ஆகையால், எவ்வெவ் ஆன்மாக்களுக்கு எவ்வெவ்வாறு புகட்டினால் நன்றோ அவ்வவ்வாறே அவ்வவருக்கும் ஞானம் புகட்டி அருள்பாலிப்பன் என்பதாம். இதனால் உலகத்து எல்லாவகை உயிர்கட்கும் அவ்வவை பக்குவத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களில்  இந்த சிவஞானபோதகம் நடந்துக் கொண்டே இருக்கின்றதெனினும் ஆங்கெலாம் இறைவனே, உணர்த்தியருளப்படும் உயிர்கள் மனங்கொள்ளும் வகையில் பல்வேறு வேடங்கள் தரித்து ஏற்புடை வகை ஞானம் புகட்டுவன் என்பதாம். ஒவ்வொரு உயிரின் அறிவின் எல்லைக்கு ஏற்ப இவ்வேடங்களும் அமையும் என்பதாம். 
இனி  சிவஞானம் கொள்ளும் பக்குவ வேறுபாட்டின் காரணமாக ஆன்மாக்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்று வகுத்து அதற்கேற்ப போதனாவியல் வேறுபடும் என்கின்றார். இங்கு 'கலர்' என்பது 'கல்' என்ற அடியிலிருந்து வந்த பழஞ்சொல் -- கற்பவர் என்று பொருள்படும். இங்கு சிவஞானம் கற்பவர்களே கலர் எனப்பட்டனர். 

எடுத்துக்காட்டு 8.2.1 

மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு 
அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் -- மெய்ஞ்ஞானம் 
பின் உணர்த்தும் அன்றி பிரளயா கலர்க்கு 
முன் உணர்த்தும் தன் குருவாய் முன். 

 

இங்கு ஆன்மாக்களை ஆணவ மலமே உள்ள விஞ்ஞனாகலர் என்றும் ஆண்வமும் கன்மமும் உள்ள பிரளாயகலர் என்றும் ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்றும் உள்ள சகலர் என்றும் வகுத்து சகலருக்கு உலகாய் மக்களாய் அவற்றின் உள்ளே  பின் நின்று உணர்த்த  பிரளயாகலருக்கு முன் நின்று உணர்த்த விஞ்ஞனகலருக்கு அப்படியெல்லாம் இல்லாது தானே நேராக அகத்திருந்து போத்திப்பன்  என்கின்றார் மெய்கண்டார்.

 

பின் நின்று போதிக்கும் குருவாய் முன் நின்று போதிக்கும் குருவாய் அகத்திருந்து போதிக்கும் குருவாய் எல்லாம் சிவனே தோன்றுகின்றான் என்று மெய்கண்டர் கூறுவதாகத் தெரிகின்றது.

 

இதனி எப்படி புரிந்துகொளவது?

 

பின் நிற்கும் குரு

 

1.

கற்றல் கற்பித்தல் என்பன வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டே இருக்கின்றது. இதோ என் வீட்டின் பின்பக்கம் வளர்ந்திருக்கும் வேப்ப மரம் எனக்கு ஒவ்வொரு நாளும் எதனையோ எதனையோ  போத்தித்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நான் பழகிப் பேசும் மனிதர்கள் எனக்கு எதையாவது போதித்து கற்க வைத்து என் அறியாமையை நீக்கிய வண்ணம் இருக்கின்றார்கள்.

 

இங்கு நடக்கும் போதனை இறைவனால் நடப்பது. ஆனால் இறைவனை நேராகக் காண முடியாது. இந்த உலகாய் இந்த உலகில் விளங்கும் பொருட்களாய் அங்கு நிகழும் நிகழ்வுகளாய் அவன் இருக்கின்றான். புறவுருவில் அல்ல ஆனால் புதையுருவில் இருக்கின்றான்

 

இவ்வாறு புதையுருவாய் நின்று போதிப்பதால் அவன் பின் நின்று போதிக்கின்ற குருவாய் திகழ்கின்றான்

 

முன் நிற்கும் குரு

 

2.

 

நல்ல ஒரு ஞானியாக ஒருவன் தோன்றி இறைவனேத் தானாக நின்று பிரளயாகலர் போன்ற அறிஞர்கட்கு போதிக்கும் போது அவனே முன்நின்று போத்திக்கின்றான். போதிப்பது மானிட சட்டை சாத்திய ஆன்மா அல்ல. ஆனால் அந்த ஆன்மாவை ஆட்கொண்டு அதுவே தானாக நிற்கும் இறைவனே யாகும். போதனை சூழல் முடிந்ததும் அந்த குரு சாதாரண மானிடன் ஆகிட, சிவன் அவனை தொடர்ந்து ஆட்கொல்லாது தான் தானாகின்றான்.

 

அகத்துள் குரு

 

3.

 

இவ்வாறு பின் நிற்பதும் முன் நிற்பதும் அல்லாது, ஆன்மாவோடு ஆன்மாவாய் அந்நியமின்றி சுத்த சைதன்ய சொரூபியாய் நின்று சிவஞானம் புகட்டிக் கொண்டே இருந்து ஆணவமலம் முற்றிலும் கழிய திரோதகமும் போக்கி அந்த ஆன்மாவிற்கு வீடுபேறு நலகி தன் அடிகீழ் இருத்தல் சிவனை தவிர்த்து வேறு யாராலும் செய்ய  முடியாது. இங்கு நிச்சயமாக எவ்வித ஐயப்பாடும் இன்றி ‘சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே” யாகும்

 

இவ்வாறு நாம் தொகுத்துப் பார்க்கும் போது சிவனைத் தவிர வேறு எச்சத்தியும் குருவாய் இருப்பதாகத் தெரியவில்லை, ஆகையால் கற்றுத் தேர்ந்த ஞானிகள் மாத்திரம் அல்ல இந்த பரந்த உலகத்தின் வழியாகவும் போதிப்பது சிவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்றேத் தெரிகின்றது.

 

சில பிரளயாகலர் குரவர்கள் உண்மையான ஞானம் இல்லாத காரணத்தல், இறைவன் தானே  என்றும் மற்ரும் தானே சகத்குரு மகாகுரு தனக்கு மேல் எக்குருவம் இல்லை என்றெல்லாம் ஆடலாம். ஆனால் இத்தகையோர் பொய்குருவே தவிர மெய்குரு அல்ல.

 

 

 

 



2014-08-12 1:56 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
அன்புள்ள உலகன்,

உங்கள் விளக்கம் நன்றாக உள்ளதுஆயினும் சிறிது மயக்கம் தருவதாகவும் உள்ளதுசில கேள்விகள் எழுகின்றன.

திருமூலர் சுத்த சிவம் என்று கூறுவதின் பொருள் என்னஅசுத்த சிவம் என்றும் இருக்கிறதாஎல்லா உலகத்துக்கும் அப்பால் இருக்கும் சிவனே குருவாக உள்ளான் என்றால் சாத்திர தோத்திர நூல்களில் வரும் ஞானிகள் குரு இல்லையா? - இத்தகைய கேள்விகள் பொதுவாக பலர் மனதில் எழுபவைஇவற்றுக்கு விடை அளிப்பது பயனுள்ளது.  இது குறித்த எனது கருத்தைக் கீழே தருகிறேன்.
1).திருமந்திரம் சுத்த சைவம்அசுத்த சைவம் என்றெல்லாம் பேசுகிறதுஇப்பிரிவுகள் போற்றும் கடவுளரை  சுத்த சிவன்அசுத்த சிவன் என்ற பெயர்களால்  குறிப்பிட்டிருக்கலாம்

2).சித்தாந்த சைவத்தை சுத்தாத்துவித சைவம் என்று கூறுவதுமுண்டு.  இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள உறவு அத்துவித உறவு என்று வேதாந்திகளும் சித்தாந்திகளும் கூறுவதைக் காண முடிகிறது.  ஆனால் அத்துவிதம் என்பதன் பொருளும் விளக்கமும் வேறு வேறாக உள்ளன.

சங்கரரின் அத்துவிதம் கேவலாத்துவித  அத்வைதம்இராமானுயரினது   விசிஷ்டாத்வைத அத்வைதம்மத்வரினதுதுவைத அத்வைதம் என அழைக்கப்படுகிறதுசித்தாந்திகளினது அத்துவிதம் சுத்தாத்வைதம் எனப்படுகிறது.  இங்கே சுத்தம் என்பதுகேவலம்விசிஷ்டம் போன்றஅடைமொழி இல்லாதது,  என்ற பொருளில் தரப்படுகிறதுஇது போல் சுத்த சிவன்  என்பதும் பரசிவன்அபரசிவன் போன்ற பெயரில்லாதஅனைத்தையும் கடந்தமெய்ப்பொருளைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம்திருமந்திரம் இதனை தற்பரன் என்று குறிப்பிடுவதைக் காணலாம். "தற்பரம் கண்டுளோர்  சைவசித் தாந்தரேஎன்று கூறுகிறார்.   சுத்த சிவன் என்பது இந்த 'தற்பரன்என்றும் கொள்ளலாம்.

3).ஞானிகள் குருவாக வருவதும் அவர்கள் மூலம் இறைவன் மெஞ்ஞானம் கொடுப்பதும் சைவ நூல்களில் காணக்கூடியது. 'குருவே சிவமெனக் கூறினன் நந்தி,  குருவே சிவமென் பதுகுறித் தோரார்என்பது திருமந்திரம்.  இது சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே’ என்பதைக் குறிப்பதாகவுள்ளது.
மேற்கண்ட கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

அன்பன்
க. கணேசலிங்கம்  


Subject: [MEYKANDAR] Re: திருமூலரின் சிவகுருதரிசனம்
.

__,_._,___

K. Loganathan

unread,
Aug 12, 2014, 7:13:59 AM8/12/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
முனைவர் வீரபாண்டியன் அவர்களே

 இசைப் புலமையொடு சிவஞானப் புலமையும் வளர்த்துக்கொள்ள துணிந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய ஓர் முடிவாகும். பலவகையான ஞான சாத்திரங்களைக்  கற்று வந்த நான் இப்பொழுது பெரும்பாலும்  தாங்கள் குறிப்பிட்டுள்ள திருமந்திரம் சிவஞான போதம் தேவாரம் போன்ற சைவ நூற்களையே கற்று  இயன்ற வரை ஞானத்தை  வளர்த்து மகிழ்ந்த் வருகின்றேன்.

தங்கள்  சுத்தத் தங்கம் 'அசுத்த" அதாவது கவரிங் தங்கம் என்னும் உவமை சுவையானது.

கலப்பே இல்லாத தங்கள் சுத்தத் தங்கம் என்றால் கலப்புள்ளது அசுத்தத் தங்கம் ஆகலாம். இதில் உள்ளேத் தங்கம் வெளியே வெள்ளி போன்று இருந்தால் உவமை ஒத்துவரும் என்று நினைக்கின்றேன்

இது இறைவடிவம் தொடர்பானது.

இறைவடிவங்கள் அனைத்தும் இரட்டுருவின் நூல் என்று எடுத்துக்கொள்ளலாம். புறவுரு திருமாலாக அதன் உள்ளே புதைந்து கிடக்கும் உருவாக சிவன்  இருப்பார். 

இது அசுத்தத் தங்கம் போன்றது கவரிங் வெள்ளி ஆனால் உள்ளே செம்பொன்.

சுதத சிவம் இவ்வாறு  கவரிங்கே இல்லாதது. உள்ளும் புறமும் ஒன்ரே செம்பொன்னே!

இவ்வாறு என்னை சிந்திக்கத் தூண்டிய தங்களுக்கு மிக்க நன்றி.

மக்களுக்கு இதனை எல்லாம் விளக்க இந்த உவமை உதவும்

உலகன்


2014-08-12 12:28 GMT+08:00 veera pandian pann...@yahoo.co.in [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 

தேவாரம், திருமந்திரம் உள்ளிட்ட சைவ இலக்கியங்களை 'இசையியல்' நோக்கில் தான் நான் படித்திருக்கிறேன்.
எனவே அதைத் தாண்டி, மற்றவற்றில் எனது புலமை குறைவு என்ற புரிதலுடன், 'சுத்த சிவம்' பற்றி எனக்கு தோன்றியதைப் பதிவு செய்கிறேன்.

வழக்கில் 'சுத்த தங்கம்' என்ற சொற்களைப் போல் 'அசுத்த தங்கம்' வழக்கில் இல்லை. சுத்த தங்கமானது, 24 காரட்டில் ஆபரணங்கள் செய்ய முடியாத அளவுக்கு நெகிழ்வுத்தன்மை கொண்டதாகும். குறைந்தது 2 காரட் பிற உலோகம் கலந்து தான் 22 காரட் தங்க நகை செய்ய முடியும். கூடுதலாக 3,4, 5  போன்ற காரட்டுகள் கலந்து  ,21, 20, 19 காரட் தங்க நகைகள் செய்து,  வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்பதும் உண்டு. 2 , 3, 4 போன்ற காரட்டுகள் தங்கத்தை மற்ற உலோகங்கள் மீது மேற்பூச்சாகக் கொண்டு விற்கப்படும் நகைகள் 'கவரிங் தங்க நகைகள்' என்று அழைக்கப் படுகின்றன.

செல்வம், செல்வாக்கு அடிப்படைகளில் 'ஆணவம்,அகந்தை' ஆகிய மலங்களை தமது வாழ்வில் அதிகரித்து, அதற்காக 'சிவனை' வணங்கி வாழ்பவர்களை 'கவரிங் சிவம்' மனிதர்கள் என்று அடையாளம் கொள்ளலாம்.
தமது மலங்களை உணர்ந்து குறைத்து, நற்பண்புகளுடன் 'சிவனை' வணங்கி வாழ்பவர்களை (22 காரட்) மனித சிவமாக வளர்பவர்களாகக் கொள்ளலாம். மலங்கள் சுத்தமாக நீங்கி, சிவனோடு ஐக்கியமாவதை ‍(24 காரட்) 'சுத்த சிவம்' என்பதாகக் கொள்ளலாம்.

செ. அ . வீரபாண்டியன்

__._,_.___

Posted by: veera pandian <pann...@yahoo.co.in>
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Aug 13, 2014, 8:57:50 PM8/13/14
to MEYK...@yahoogroups.com, Tolkaa...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
டாக்டர் கணேஷ் அவர்களே 

 விளக்கங்க்ட்கு மிக்க நனறி. சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள் விளக்கங்கள்,  ப்லரும் படித்து பயன் அடைய எனது ஏனைய குமுழ்மங்கட்கும் அனுப்பி வைக்கின்றேன்

உலகன் 


2014-08-13 21:29 GMT+08:00 'Dr.K.Ganesalingam' kganes...@yahoo.com [MEYKANDAR] <MEYK...@yahoogroups.com>:
 


முனைவர் உலோகநாதன் அவர்களின் விளக்கம் விரிவாக உள்ளது. இது தொடர்பாக எனது கருத்துக்கள் சிலவற்றை மேலும் விளக்க விழைகின்றேன்.

//சுத்த சிவன் என்றால் தானேத் தனக்குத் தலைவனாகிய தற்பரன்என்கின்றார்//

இது எனது கருத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என எண்ணுகிறேன்.

கேவலாத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்பவற்றில் கேவலம், விசிஷ்டம் ஆகிய அடைமொழிகள் உண்டு. இவை ஒவொரு பொருள் தருகின்றன. இத்தகைய (பொருள் தரும்) அடைமொழிகள் இல்லாதது சுத்தாத்வைதம். இக்கருத்துக் கொண்டதாகவே நான் எழுதினேன்.

சுத்த சிவன் என்பது, முனைவர் வீரபாண்டியன் கூறினது போல், சுத்த தங்கம் போன்றது. அதற்கு வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்கள் சேராதது என்றோ, 24 கரட் உள்ளது என்றோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுத்தம் என்ற அடைமொழி இதனை  உனார்த்துகிறது. அதற்கு மேலான ஒன்று இல்லாதது என்பதும்  (உண்மை என்றாலும்) அதன் பொருள் அல்ல.

சுத்த சிவன் என்றால் தானே தனக்குத் தலைவன் இல்லாத தற்பரன் என்பது எனது கருத்தல்ல.

திருவுந்தியாரிலே "அகளமாய் நின்ற இறைவன் சகளமாய்" வருவது பற்றி ஒரு பாடல் வருகிறது. குணம் குறியற்ற நிலை அகள நிலை. சுத்தத் தங்கம் போன்ற சுத்த சிவனின் நிலை இது. (தற்சமயம் நான் இருக்கும் நாட்டில் எந்த ஒரு சித்தாந்த நூலும் இல்லாததனால், முழுப் பாடலையும் தர முடியாதிருக்கிறது).

தற்பரன் என்றால் தன்னிலையிலுள்ள சிவன் (பரன்) – Absolute Being or Absolute God Siva.

சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் இறைவன் குருவாகி வந்து ஞானம் அளிப்பது பற்றிக் கூறுகிறது. - "தம்முதல் குருவுமாய் தவத்தினில் உணர்த்த..." - முன்செய் தவத்தால் எமக்கு முதல்வனான் சிவன் உண்மையை உணர்த்துகிறான் என்பது இதன் பொருள். இது இரண்டு வகையில் நடக்கலாம். ஒன்று, அவனே  உள்நின்று உணர்த்துவது. மற்றையது அவன் குருமூலம் உணர்த்துவது

அவன் குரு ஊடாக உணர்த்தினாலும், உணர்த்தும் நிலையில், குரு சிவத்தின் நிலையில், சிவமாகவே நிற்கிறான்.குருவே சிவமெனக் கூறினன் நந்தி” என்பது திருமூலர் வார்த்தை. இந்த நிலையில் குரு உணர்த்தினான் என்றோ அல்லது சிவம் உணர்த்தினான் என்றோ  சொல்வது இரண்டும் ஒன்றே.

ஒரு பாத்திரம் பாதி நிறைந்திருக்கிறது என்பதும் பாதி வெறுமையாக இருக்கிறது என்பதும் இரண்டும் ஒன்றையே குறிக்கிறது. ஆனால் இதனைத் தெளிவாக  விளக்குவதும் விளங்குவதும் முக்கியமாகிறது..  

முனைவர் உலோகனாதனின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
. கணேசலிங்கம்

From: "'K. Loganathan' k.ula...@gmail.com [MEYKANDAR]" <MEYK...@yahoogroups.com>
To: "meyk...@yahoogroups.com" <MEYK...@yahoogroups.com>; Tolkaa...@yahoogroups.com; "mint...@googlegroups.com" <mint...@googlegroups.com>; vall...@googlegroups.com
Sent: Tuesday, 12 August 2014 4:31 AM
Subject: Re: [MEYKANDAR] Re: திருமூலரின் சிவகுருதரிசனம்
Messages in this topic (15)

Yahoo Groups
Instantly Explore All Attachments Within Each Group Conversation
You can now explore files, preview and download photos directly within each conversation.

............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................

.

__,_._,___

K. Loganathan

unread,
Aug 28, 2014, 2:32:47 AM8/28/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Tolkaa...@yahoogroups.com, meyk...@yahoogroups.com

திருமூலரின் சிவகுருதரிசனம்

 

இடுகை 5

 

முப்பொருளுண்மையின் அநாதிப் பொருளியல்

 

தமிழப் பண்பாடு உலகப் பண்பாடுகளில் ஓர் தனி சிறப்புடையது, சுமேரு காலத்திலிருந்து ‘மெய்பொருள் காண்பது அறிவு” என்றவாறு ஆகவே கற்றலை மையமாகக் கொண்ட பண்பாடாகவே அது வளர்ந்துள்ளது. இங்கு தான் ஓர் அடிப்படையும் சங்க காலத்திலிருந்து தெளிவாகியும் உள்ளது. உலக இயக்கமே  உய்ரிகளின் வாழ்க்கையே இறைவன் காட்ட ஆன்மாக்கள் கண்டு கற்பது என்றவாறு அமைந்திருப்பதுதான் அது. கற்கா வாழ்க்கை வாழ்க்கையே அல்ல என்பதொடு இறைவனே கற்பிக்கின்ற போதகனாகவும் இருக்கின்றான் என்று வற்புறுத்துகின்றது. வாழ்க்கையிலே பல வகையான  ஞானபோதனைகள்! இவ்வாறு வாழ்க்கையில் நடக்கும் போதனைகளை சிந்தித்து உணராது சாத்திரப் பேய்களாக விளங்கும் படியாக மக்களைத் திரித்தது இந்த வேத மரபே என்று தெரிகின்றது. கீழ் வரும் பாடல் மக்களை மீண்டும் வாழ்க்கையை அலசுவதற்கே அழைத்துச் செல்கின்றது. சுருதிகளும் சாத்திரங்களும் இறைவன் யாருக்கோ உபதேசித்தவை இப்பொழுது செத்த பிணங்கள் போல் கிடப்பன. ஆனால் இறைவன் உயிர்ப்போடு வாழும் உயிரகத்து யாண்டும் வாழ்க்கையில் போதித்துக் கொண்டே இருக்கின்றான்.  எப்படி அந்த வாழும் போதனை நடக்கின்றது?

 

 கீழ் வரும் பாடலைப் பாருங்கள்.  

 

1577

 

தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்

யாவரையுங் மூன்றாய் உனக்கண்டு உரையாலே

மூவாப் பசு பாசம் மாற்றியே முத்திப்பால்

யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே

 

உரை(உலகன்)

 

உலகிலும் உயிர்கள்தம் வாழ்க்கையிலும் அவர்கட்கு ஞானம் கொளுத்தும் உபாயங்களாக பல திருவிளையாடல்கள் நடத்தி அவற்றில் தெய்வங்களாகவும் ஆழுண்மைகள் பல உணர்த்தும்  ஞானகுருவாகவும் சுத்த சிவன் விளங்குவான். இதன் வழி சிந்திக்கும் திறத்து மாந்தர்கள் பொருளியல் ஆய்வில் ஈடுபட்டு முறையாக சிந்தித்து உலகில் உள்ள யாவையும் பதி பசு பாசம் எனும் மூன்றாய் விளங்குவதை உண்மையான அநாதிப் பொருளியல் எனக் கண்டு மகிழச் செய்வான். பின் உள் நின்று மந்திரங்கள் வழி நடத்தும் உரையாலே அழியாது யாண்டும் இருக்கும் பசுவின் கண் உள்ள பாசங்களை அவற்றினின்று நீங்கி அகன்று நிற்கும்படிச் செய்து ஆன்மாக்களை சுத்தஞ் செய்து ஏற்கனவே அனைவர் உள்ளத்திலும் இருக்கின்ற முத்தி முன்னறிவு வளம் பெற முத்திபால் அவர்கள் செல்லுமா எல்லா ஞானங்களையும் அவர்கள் மேல் கொண்ட அன்பின் காரணமாகவே இறைவன் குருபரனாக நல்குவன்.

 

விளக்கம்

 

எனக்கு வியப்பாக இருக்கின்றது. எவ்வலவு அழகாக ஆழமாக சைவ சிதாந்தத்தையே திருமூலர் இந்த நாங்கு வரிகளில் அடக்கி விடுகின்றார்?  தமிழ் மொழி ஓர் சாதரண மொழி அல்ல. அதுதான் சுமேருத் தமிழ் காலத்திலேயே அவர்கள் கணித்துளது போல் ‘இம்மே கோ’ ( eme ku) அதாவது தெய்வமொழி யாகும். தெய்வமே வந்தாடுவது மாத்திரம் அல்ல, அற்புதமான ஆழமான ஞானமும் அழகும் அழியா பெருஞ் சிறப்பும் உடையது.

 

இங்கு இறைவனே உயிர்கள் மேல் வைத்த அன்பால் அனைவருக்கும் குருபரனாக வந்தமர்கின்றான் இந்த அற்பத்தனமான அறுவருக்கத் தக்க ஆணவமலத்துச் செறிவால் வருகின்ற பிராமணீயத்தில் வரும் வர்ண  பேதங்களையும் அத்னால் எழுந்த சாதி பேதங்களையும் கடந்து அன்பே தானாக நிற்கும் சுத்த சிவன் அனைவர் அகத்தும் நின்று ஞானம் போதிக்கின்றான்.

 

எப்படி போதிக்கின்றான்?

 

அவன்  பயன்படுத்தும் உபாயங்கள்தான் என்ன?

 

உலகிலும் வாழ்கையிலும் பல திருவிளையாடல்கள்.  இந்த திருவிளையாடல்கள் திருநடங்கள் நடக்காது உலகும் இல்லை உயிர்களின் வாழ்கையும் இல்லை. ஆனால் இவை எல்லாம் ஓர் கேளிக்கையாக பல இனியச் சுவைகளை இன்பங்களைத் தரும் கண்ண லீலைகளா? இவையும் வேண்டும் ஆனால் அவ்ற்றிற்கு மேல் ஆழ சிந்திக்கத் தரும் உன்னத் தரும் பல திருவிளையாடல்களும் இருக்கின்றன. இவை துன்பங்களை வேதனைகளைத் தருவதாக இருக்கும்.

 

இன்பங்கள் அயர்வு போக்கி உற்சாகம் தருகின்றன. ஆனால் வேதனைகள் அகத் தடைகளை மயக்குக்ளை சித்தமாயைகளை எல்லாம் உடைத்து ஆழச் சிந்திக்கத் தருகின்றன. விரக்தி வேதனை துயரம் துக்கம் போன்றவை வழியாக ஒருவனை இன்ப மயக்கிலிருந்து விடுபட வைத்து ஆழச் சிந்திக்க வைக்கின்றான் இறைவன் இவைதான் உண்மைகாயன தீட்கைகள் ஆகும், சிவாச்சாரியார்கல செய்யப்படும் சடங்கள் அல்ல.

 

இதுவே ‘உன கண்டு’ என்கின்றார் திருமூலர்.

 

ஆனால் காண்பது எது? மேலும் ‘காண்பது” என்று ஏன் இதனைக் கூற வேண்டும்?

 

பார்வைகள் பல வகைப்படும் அவற்றைப் பொதுவாக ஊனக்கண் பார்வை என்று ஐம்புலப் பார்வையையும் ஞானக்கண் பார்வை என்று அதற்கு மேற்பட்ட ஆழமான் பார்வைகள் என்றும் வகுப்பர்.

 

பொருளுலகு முற்றிலும் காண் ஊனக்கண் பார்வை மாத்திரம் போதாது, ஞானக் கண் பார்வையும் வேண்டும் அப்படி ஊனக் கண் பார்வையோடு ஞானக் கண்களையும் திறந்து ஞானக் கண் பார்வைகளை அருளி எல்லா பொருட்களையும் இறைவன் காண வைத்து அதன் வழி பதி பசு பாசம் எனும் முப்பொருட்களை எஞ்சாது காண வைத்தும் அநாதி பொருளியலை எல்லா உயிர்களும் அறியும்படி போதிக்கின்றான்

 

இதுவே ‘யாவரையும் மூன்றாய் உனக் கண்டு” எனதின் பொருள்.

 

அப்படியென்றால் ஏகாத்துவிதம் கூறும் வேதாந்தங்கள்  என்றும் நிலைக்கும் பொருளே இல்லையெனும் சௌத்திராந்திக புத்தம், முடிவில் சூன்யமே பொருள் எனும் மத்தியாமிக புத்தம் போன்றவையும் பிழையான வழியில் சென்ற சிந்தைகளின் விளைவு என்று புரிகின்றது. இறைவனது காட்டுகளை காணவேண்டிய முறையில் காணாது சென்றமையால் இந்தப்  பிழையான அநாதிப் பொருலியல்கள்

 

இனி ‘மூவாப் பசு பாசம் மாற்றியே’ என்றால் என்ன?

 

மூவாப் பசு பாசம் என்றால் என்றும் அழியாது அநாதிபொருளாகவே இருக்கும் பொருட்கள் என்று பொருள்படும். முத்தி முடிவிலும் பசுக்கள் இருக்கின்றன பாசங்களும் இருக்கின்றன. பசுவாகிய ஆன்மா திடுமென் இந்த வேதாந்திகள் கூறுவது போல பரப்பிரமம் ஆகி தான் அழிந்துபோகாது.

 

அப்படி என்றால் ‘மாற்றி” என்பதின் பொருள் என்ன?

 

ஆன்மாக்களை பந்தித்து பாசங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்பவை ஆன்மாவை அணுத்துவ பசுவாக கண்டிப்பதிலிருந்து மாற்றுவதே இங்கு மாற்றி என்பதின் பொருள். இந்த பாசத் தலைகளின் கட்டிலிருந்து தக்க ஞானபோதம் வழி ஆன்மாகளை சுத்தமாக்கி அணுத்துவம் போக்கி சிவத்துவம் மகிழச் செய்வதே இங்கு இறைவனால் அருளப்படும் மாற்றம் ஆகும்

 

முற்றிலும் மும்மலத் தொடக்கிலிருந்து விடுபட்டு மீண்டும் மீண்டும் அதனால் பிறந்து உழல்வதிலிருந்து விடுதலைப் பெற்று மீண்டும் பிறவாமை அடைய வேண்டும் என்று முக்திபால் விருப்பினைத் தேற்றுவதும் இதுவே யாகின்றது.

 

இறைவனது போதனையாலேயே ஆன்மாக்கள் சுத்தமாகி அபரவாழ்க்கைக் கழன்று பரவாழ்க்கைத் தொடங்கும் முமுட்சுவாக எழுந்து வீடுபேற்றைத் தவிர்த்து வேறொன்றும் வேண்டா உயர் நிலைக்குச் செல்வதே  குருபரனாக இறைவனது போதனையால் மெய்யாகுவது.

 

இது இறைபோதனையால் மாத்திரம் மெய்யாகக் கூடியது என்றும் இங்கு திருமூலர் நலமே உணர்ந்து அருளுகின்றார்.

 

தொடரும்

 

 

 

 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages