வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!

304 views
Skip to first unread message

Megala

unread,
Feb 13, 2014, 8:26:16 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!


தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

 

 

அறத்துப்பால், பொருட்பால்காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

 

 

அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் காமத்துப்பாலிலும் சொல்லப்பட்டுள்ளன. காமத்துப்பாலில்தான் வள்ளுவப் பேராசானின் கற்பனைத் திறனும், காட்சிகளை நாடகப் பாங்கில் நம் கண்முன் நிறுத்தும் ஆற்றலும், ஏன்….அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றன எனலாம். அவரை ஓர் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுவது காமத்துப்பாலே எனலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த காமத்துப்பால் பாக்களில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்பதும், காட்சிப்படுத்துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

 

இனிப் பாடல்களுக்குச் செல்வோம்

 

தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள்.

 

இதனையே,

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

 

இக்குறளைப் படித்தவுடனேயே நமக்கு ஓர் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகின்றது. ஆம்…..”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயேஎன்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தானே அவை?

 

 

இதோ காதல் வயப்பட்ட தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கே வாய்ச்சொற்களுக்கு வேலையேயில்லாமல் போய்விடுகின்றது. (காதல் கடிதங்களும் தேவையற்றன ஆகிவிடுகின்றன). கண்கள் பேசாதவற்றையா வாயும், எழுத்துக்களும் பேசிவிடப் போகின்றன?

 

கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.

 

 

வெண்மதியையும், பெண்ணின் முகத்தையும் ஒப்புமைப்படுத்திப் பாடாத தமிழ்ப் புலவர்களோ, கவிஞர்களோ இல்லை என்றே கூறலாம். வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

 

இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்க வருகின்ற ஓர் தலைவன் (இரவுக்குறி என்று இஃது அகத்திணையில் குறிக்கப்படும்) வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். அங்கே அழகான முழுநிலாக் காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். உடனேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக நிலவைப் பார்த்துஉன்னோடு என் காதலியின் எழில் முகத்தை ஒப்பிடுவதே தவறு. நீயோ களங்கம் உடையாய்! அதுமட்டுமன்று, தேய்கின்றாய்வளர்கின்றாய். ஆனால், என் காதலியின் முகமோ களங்கம் சிறிதுமற்றதுஎன்று தன் காதலிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான். சுவையான அத்திருக்குறள்…..

 

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.”

 

அத்தோடு விட்டானா? நிலவே! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

 

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.

 

 

இப்போதெல்லாம் கணவனும், மனைவியும் தாங்கள் நல்ல நண்பர்கள் போலப் பழகுவதாகக் கூறிக்கொள்கின்றார்கள் அல்லவா? இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் நம் வான்புகழ் வள்ளுவரே.

 

தலைவன் ஒருவன், தனக்கும் தன் தலைவிக்குமுள்ள உறவைப் பற்றிக் காதற் சிறப்புரைத்தல் என்ற அதிகாரத்தில் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்….

 

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.”

மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

 

 

அதே அதிகாரத்திலேயே தலைவனின் இருப்பிடத்தைப் பற்றித் தலைவி கூறும் மொழிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. தலைவி சொல்கின்றாள்…..”என் காதலர் என் நெஞ்சத்திலேயே எப்போதும் குடியிருக்கின்றார். அதனால் நான் சூடான பொருள்களையே உண்பதில்லை. அவை அவரைச் சுட்டுவிடுமோ என அஞ்சுகின்றேன்என்கின்றாள். கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றது இல்லையா? அக்குறள் நம் பார்வைக்கு…

 

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”

 

இதே குறட்பாவைப் படியெடுத்தது (photocopy) போலக் கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வந்தது. “ஹாட்பாக்சில் (hotbox) வைத்த ஃபுட் (food) உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்என்கிறார் கவிஞர்.

 

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் வள்ளுவர் ஆசானாக இருந்து காதல் பாடல்கள் பல எழுதத் துணைபுரிந்து வருகின்றார் என்பதனையே திரைப்பாடல்கள் (அன்றும், இன்றும்) மெய்ப்பிக்கின்றன.

 

 

அடுத்து, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் ஊரிலுள்ளோர்க்குத் தெரிந்துவிடுகின்றது. அவர்கள் அலர் (காதலர்களைப் பொது இடத்தில் அவர்கள் காதுபடப் பழித்தல்) கூறத் தொடங்குகின்றனர். அதனைக் கண்ட தலைவி மிகவும் வேதனையுற்றுநான் என் காதலரைக் கண்டதென்னவோ ஒருநாள் தான், ஆனால் இந்த அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி (சந்திர கிரகணம்) போல் ஊரெங்கும் பரவிவிட்டதேஎன வருந்துகின்றாள்.

 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.”

 

 

மற்றொரு சமயம் தலைவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிய நேரிடுகின்றது. அவன் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி அவன் சென்ற வழியையே பார்த்துச் சோர்ந்து கிடக்கின்றாள். அப்போது அவள் வேதனையை அதிமாக்கும் மாலைப்பொழுது வந்தது. இம்மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தருவது என்று நான் தலைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருந்த காலத்தில் அறியவில்லையே எனப் புலம்புகின்றாள்.

 

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன்.”

 

 

அம்மாலைப் பொழுதின் மயக்கத்திலே தலைவி ஓர் கனவு காண்கின்றாள். அக்கனவில் தன் தலைவனைக் கண்டு மகிழ்கின்றாள். கண்விழித்துப் பார்க்கின்றாள்; தான் தலைவனைக் கண்டது கனவில்தான் என்பதனை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைகின்றாள். அடடா! நனவு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருப்பின் நான் கனவில் என் தலைவனைப் பிரியாமல் இருப்பேனே என்று எண்ணித் துயருறுகின்றாள்.

 

நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன் என்கின்றது வள்ளுவம்.

 

 

தலைவனையே எதிர்பார்த்துக் காத்திருப்பதனால் தலைவியின் அழகமை தோள்கள் மெலிந்தன. உடலில் பசலை படர்ந்தது. (பசலை என்பது உடலில் ஏற்படும் ஓர் பசுமையான நிறமாற்றத்தைக் குறிப்பது, மற்றபடி பசலைக் கீரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கை வளையல்கள் கழன்றன. அழுது அழுது கண்கள் ஒளியிழந்தன. தலைவன் சென்ற நாட்களைக் கோடிட்டுக் குறித்துக் கொண்டே வருவதனால் விரல்களும் தேய்ந்தன. இதனையே வள்ளுவப் பெருந்தகை,

 

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.” என்கின்றார்.

 

 

பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்கின்றாள், “என் இனிய நெஞ்சே, நீ தலைவனை உன்னிடத்தில்தானே வைத்திருக்கின்றாய், பின்பு ஏன் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி உடலை வருத்திக் கவின் இழந்து மெலிந்து வருகின்றாய்என வினவிக்கொள்கின்றாள்.

 

துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின்.”

 

சில காலத்திற்குப்பின், தலைவனும் தலைவியும் மறுபடியும் ஒன்றாய் இணைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகின்றது. அவன் தும்முவதைக் கண்ட தலைவி, வாழ்க! என வாழ்த்துகின்றாள். உடனேயே, ’யார் உம்மை நினைத்தார்கள், ஏன் உமக்குத் தும்மல் வந்தது’ எனத் தலைவனைப் பல கேள்விகள் கேட்டு, அழுது அவனோடு ஊடல் கொள்கின்றாள். இன்றும் நம் கிராமங்களில் யாருக்காவது தும்மல் வந்தாலோ அல்லது புரையேறினாலோ அவ்வாறு செய்பவர்களை யாரோ நினைக்கின்றார்கள் என்று எண்ணும் வழக்கம் உள்ளது தானே?

இவ்வழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகின்றது போலும்.

 

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.” என்கிறார் தெய்வப்புலவர்.

 

 

தலைவனுக்கு மீண்டும் தும்மல் வருகின்றது. (பாவம், சளித்தொல்லையால் அவதியுறுகின்றான் போலிருக்கின்றது!!) தலைவி தன்னைச் சந்தேகிப்பாளே, கோபித்துக்கொள்வாளே என எண்ணித் தும்மலை அடக்க முற்படுகின்றான். அப்போதும் தலைவி அவனை விடவில்லை. உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்க முயல்கின்றீரோ? எனக் கேட்டு அழுகின்றாள்.

 

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.”  என அவர்களிடையே அரங்கேறும் ஊடல் நாடகத்தை நகைச்சுவை ததும்பப் பாடல் வடிவில் நம் கண்முன் நிறுத்துகின்றார் வள்ளுவர்.

 

 

இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க குறட்பாக்கள் பல குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் வான்புகழ் வள்ளுவர் சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம்.

 

(இக்கட்டுரையை முதலில் வெளியிட்ட வல்லமை மின்னிதழுக்கு நன்றி!)

 

 

அன்புடன்,

மேகலா


shylaja

unread,
Feb 13, 2014, 8:32:22 PM2/13/14
to vallamai, மின்தமிழ்
ஆஹா   அருமை மேகலா  இன்றையதினத்திற்கு இதைவிட சிறப்பு வேறென்ன! 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அன்புடன்
ஷைலஜா

Heard Melodies Are Sweet, but Those Unheard Are Sweeter”

 keats



Reply
Forward
 

Megala Ramamourty

unread,
Feb 13, 2014, 8:34:28 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
தங்கள் பாராட்டிற்கு நன்றி ஷைலஜா!

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 13, 2014, 8:41:45 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
எப்பவும் போல மேகலா ஸ்பெஷல்!!!.. என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் சேகரித்து வைக்க வேண்டிய பொக்கிஷங்கள்!!..ஆற்றொழுக்கு நடை என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமென உதாரணம் காட்டலாம்....

காதலும் தமிழும் என்றும் இளமையானவை.. புதுமையானவை..இனிமையானவை.. ஒன்று, மற்றொன்றுக்கு மாலையிடுவது போன்று தங்கள் பகிர்வு!....மீள் பகிர்வு என்றாலும் எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே இல்லை!.. அக்கா சொன்னது போல், இதை விடவும் இன்றைய தினத்துக்கு சிறப்பு  வேறென்ன!.. வாழ்த்துக்களும் நன்றிகளும் மேகலா!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-02-14 7:04 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:


                                                                       

Megala Ramamourty

unread,
Feb 13, 2014, 8:46:29 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பார்வதி!

சென்ற ஆண்டு காதலர் தினத்திற்காக நான் எழுதியது. வல்லமை மற்றும் மின்தமிழ் குழும நண்பர்கள் படிப்பதற்காக இப்போது இங்கே பதிவிட்டேன்.

அன்புடன்,
மேகலா


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 13, 2014, 8:50:47 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
படிக்கும் போதே தோன்றியது!.. நீங்களும் பதிவின் நிறைவில் இதைக் குறிப்பிட்டிருந்தீர்கள்!....ஆனாலும் மீண்டும் மீண்டும் படித்து மகிழத் தூண்டும் பகிர்வு மேகலா... மீண்டும் என் நன்றி!.. மேலும் இது போல பல பகிர்வுகள் தந்தால் மிக மகிழ்வேன்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-02-14 7:16 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
                

Ravi Subramanian

unread,
Feb 13, 2014, 9:52:15 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

செல்லாமை உண்டேல் எனக்குரை;மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை!

ஒன்றரை அடியில் வள்ளுவர் எழுதிய உன்னதக் காதல்(ஊடல்) நாடகக் காட்சி. இதற்கீடு எந்த உலக இகக்கியத்தில் உண்டு?

சு.ரவி

தேமொழி

unread,
Feb 13, 2014, 10:35:23 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
முதல் சில வரிகளைப் படித்தவுடன் நினைவு வந்துவிட்டது, முன்னர் படித்தது என்று. காதலர் தினத்திற்கு இது ஒரு பொருத்தமான கட்டுரை.

தலைவனை தும்முவதற்கும் யோசிக்க வைக்கும் தலைவி எனக்கு மிகவும் பிடித்தவள்.

நன்றி மேகலா.

அன்புடன் 

..... தேமொழி 

Innamburan

unread,
Feb 13, 2014, 10:44:02 PM2/13/14
to vall...@googlegroups.com
Very scholarly,  equally interesting
And well done.

Innamburan


On Feb 13, 2014, at 7:34 PM, Megala Ramamourty <megala.r...@gmail.com> wrote:

தங்கள் பாராட்டிற்கு நன்றி ஷைலஜா!
2014-02-13 19:32 GMT-06:00 shylaja <shyl...@gmail.com>:
ஆஹா   அருமை மேகலா  இன்றையதினத்திற்கு இதைவிட சிறப்பு வேறென்ன! 
2014-02-14 6:56 GMT+05:30 Megala <megala.r...@gmail.com>:

வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!


தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

      

 

அறத்துப்பால், பொருட்பால்காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடையdo இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் yபாடல்கள் அறியப்படவில்லைp

துரை.ந.உ

unread,
Feb 13, 2014, 10:47:13 PM2/13/14
to வல்லமை, மின்தமிழ்
2014-02-14 6:56 GMT+05:30 Megala <megala.r...@gmail.com>:

வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!


வாழ்க அக்கா ... 
உங்கள் இழையில் நானும் இணைந்து கொள்கிறேன் 
​​

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

Inline image 1

​விளக்கக்
 குறள் :

நான்பார்க்கும் வேளை நிலம்பார்ப்பாள்; நான்மறந்தால்

தான்பார்த்து மென்சிரிப் பாள்​​


கண்ணோ

​​
ணொடு​
கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.

 

Inline image 6

விளக்கக் குறள் :

​​
கண்ணோடு கண்கலந்து ஒன்றான பின்வாய்ச்சொல்

என்ன பயனைத் தரும் 

 

 

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.”என்பது குறட்பா.

Inline image 4

விளக்கக் குறள் :

​​
குறையுண்டோ மாதர் முகத்தில்; வளர்ந்து

நிறையுமந்த வான்மதி போல்​​

 

 

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.” என்பது குறட்பா.


Inline image 5
 விளக்கக் குறள் :

​​
சந்திரனே; மாதர் முகம்போல் ஒளிதந்தால்

உன்னையும் காதலிப்பேன் நான்

 

...தொடரும் ....
​​
ஏதாவது தேறுமா ?​
கூறினால் தொடைவதைத் தொடர்வேன் :)​

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Megala Ramamourty

unread,
Feb 13, 2014, 10:55:47 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
மிக நன்று துரை...தொடருங்கள்!


--

Megala Ramamourty

unread,
Feb 13, 2014, 10:59:16 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
Thanks for your compliments 'I' Sir. I am really honored!

-Megala

Megala Ramamourty

unread,
Feb 13, 2014, 11:10:13 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆமாம் தேமொழி....இக்கட்டுரை நான் முன்னரே பதிவிட்ட ஒன்றுதான். வல்லமையில் சென்ற ஆண்டு நீங்கள் இக்கட்டுரையைப் படித்துவிட்டுக் ‘காதலர் தினத்தில்’ இதுபோன்றதொரு இலக்கியக் (காதல்) கட்டுரையைப் படிப்பது இதுவே முதல்முறை என்று குறிப்பிட்டிருந்தது கூட எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 

தலைவனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் வீரத் தலைவியை எனக்கும் பிடிக்கும்.  :-))

அன்புடன்,
மேகலா


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 13, 2014, 11:12:41 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
துரையரசர் பின்றாரு!.. வாழ்க துரையரசர்..(இருங்க பாட்டு தேடிப் போடுறேன்)...மேகலா பர்மிட் பண்ணும்மா ப்ளீஸ்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


Nagarajan Vadivel

unread,
Feb 13, 2014, 11:25:01 PM2/13/14
to vallamai
நல்ல கட்டுரை.  ஒரு ஆண்டுகாலத்துக்குள் ஏதாவது புதிய கருத்துக்களை இணைத்துக் கட்டுரையில் மாற்றங்கள் செய்திருக்கலாம்

வள்ளுவரைப் பற்றிப் பேசும்போது அவர் தன் படைப்புகள் மூலம் உலகனைத்துக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் குமுக விதியை உருவாக முனைந்தாரா அல்லது தமிழர்களுக்கென்று தனித்துவம் மிக்க வாழ்வியலை வலியுறுத்தினாரா என்பதில் குழப்பம் நிலவுகிறதே

Inline image 1

இந்த மேற்கோளின் அடிப்படையில் வள்ளுவரின் காதல் நெறிகள் தமிழக அக இலக்கிய நெறிகளில் இருந்து மாறுபட்டு வடபுல காமம் இன்பம் பற்றிய கருத்துக்களை வேதங்களில் இருந்தும் பிற்காலத்திய வத்ஸாயணர் படைப்பிலிருந்துமே எடுத்துக் கையாண்டார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா இல்லை மறுப்பீர்களா?

மெளனம்


2014-02-14 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 13, 2014, 11:53:12 PM2/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”

(பாட்டு நடுவில் இந்த வரி வருது..

உன்னை நான் பார்க்கும் போது.. மண்ணை நீ பார்க்கின்றாயே..

http://www.youtube.com/watch?v=hJVHq886BOE

கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.” 

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.”

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.”

கிட்டத்தட்ட ஒத்து வர்ற பாட்டு!!..


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.”


நடுவில் வர்ற வரி(நீ உடல் நான் உயிர்)


http://www.youtube.com/watch?v=wvV0WyuU0mM


நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”
 
நெஞ்சில் குடியிருக்கிறார் அன்பர்..



”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.”

(உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்கிது)


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.”


நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்” 



வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.”

துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.”

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்..


வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.”


தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.”  

இது போல் ஊடல் சொல்லுற பாட்டு..


எங்கேயும் காதல்..




அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


Megala Ramamourty

unread,
Feb 14, 2014, 12:07:55 AM2/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
அன்புப் பார்வதி,

பாட்டுப் போடுவதற்கோ அல்லது கருத்துச் சொல்வதற்கோ நான் என்றாவது ’தடா’ போட்டிருக்கிறேனா? புகுந்து விளையாடுங்கள்!

அன்புடன்,
மேகலா


தேமொழி

unread,
Feb 14, 2014, 12:09:48 AM2/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
அடடா..அடடா. எங்கேயோ போயிட்டீங்க நீங்க பார்வதி.  
இப்படி புட்டு புட்டு வைத்தால் இக்காலக் கவிஞர்களுக்கு உங்கள் மீது கோபம் வருமே!!!!!
..... தேமொழி 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 14, 2014, 12:18:33 AM2/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆரு!.. இவுகளுக்கா.. சேச்சே... 'இன்ஸ்பிரேஷன்ல' எளுதினம்னு ஒர்ர்ரேஏஏ போடாப் போட்டுருவாக பாருங்க..(எத்தனையோ இன்ஸ்பிரேஷன் பார்த்திருப்பீங்க.. பிஜிஎம் டியூன அப்புடியே ஒத்தி ஒட்டுறதப் பாத்திருப்பீகளா தெரியல... இருந்தாலும் பாருங்க..)







அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 14, 2014, 12:19:43 AM2/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ரொம்ப ரொம்ப நன்றி மேகலா!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


Megala Ramamourty

unread,
Feb 14, 2014, 12:58:37 AM2/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//ஒரு ஆண்டுகாலத்துக்குள் ஏதாவது புதிய கருத்துக்களை இணைத்துக் கட்டுரையில் மாற்றங்கள் செய்திருக்கலாம்//

செய்திருக்கலாம்...ஏனோ அது தோன்றாமல் போய்விட்டது.  :-(

//இந்த மேற்கோளின் அடிப்படையில் வள்ளுவரின் காதல் நெறிகள் தமிழக அக இலக்கிய நெறிகளில் இருந்து மாறுபட்டு வடபுல காமம் இன்பம் பற்றிய கருத்துக்களை வேதங்களில் இருந்தும் பிற்காலத்திய வத்ஸாயணர் படைப்பிலிருந்துமே எடுத்துக் கையாண்டார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா இல்லை மறுப்பீர்களா?//

நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டேன்; முற்றாக மறுக்கவே செய்வேன். வள்ளுவர் வகுத்த வாழ்வியல்நெறி தமிழரின் அக இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையிலானதே. அதில் வடபுலக் கலப்பென்பது சிறிதும் இல்லை.

சான்றுகள்:

வடநூலார் ’தர்மார்த்த காமமோட்சம்’ (அதாவது அறம், பொருள், இன்பம், வீடு) என்று தங்கள் நூலை நான்காகப் பகுத்துக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தபோது வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டுமே தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். ‘மோட்சம்’ பற்றி அவர் தனியாகப் பிரிவு எதனையும் வகுத்துரைக்கவில்லை; அதனை வலியுறுத்தவும் இல்லை என்பது நோக்கத்தக்கது.

சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரத்தில் வாழ்வில் அல்லது செயலில் அடைகின்ற வெற்றியே முக்கியமானது; அதனை அடையும் வழி முக்கியமில்லை. அறமற்ற வழியில் நடந்தாலும் தவறில்லை; வெற்றியடைவதே குறிக்கோள் என்று கூறியிருக்க, நம் வள்ளுவப் பேராசானோ முற்றிலும் மாறுபட்டுச் செயலில் வெற்றி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அதனை அடையும் வழி என்கிறார். அறவழியில் பெறும் வெற்றியே வெற்றி என்பது நம் வள்ளுவரின் அசைக்கமுடியாத சித்தாந்தம். அதனை வலியுறுத்தவே ‘அறன் வலியுறுத்தல்’ என்றொரு அதிகாரமே செய்துள்ளார் ஐயா.

’அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு’ என்றும்,

‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல’ என்றும் அறவழியைப் பின்பற்றுவதன் அவசியத்தைக் கடுமையாக வலியுறுத்துகிறார். இவையெல்லாம் நீங்கள் வடபுலத்தாரிடம் தேடினாலும் காணக் கிடைக்காதவை.

அடுத்ததாகத் தனிமனித ஒழுக்கத்தை நம் திருவள்ளுவர் வலியுறுத்திய அளவிற்கு வடபுலத்தார் ...ஏன் உலகில் எந்த நாட்டு அறிஞருமே வலியுறுத்தவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. பிறனில் விழையாமையை ஆடவர் கைக்கொள்ளுதல் அவசியம் என்று கூறும் வள்ளுவர் , வரைவின் மகளிரைத் தேடிப் போவோரை மிகக் கடுமையாகச் சாடுகின்றார்.

வேதங்களிலும், வடமொழியில் எழுதப்பட்ட காமநூல்களிலும் தனிமனித ஒழுக்கம் பற்றிய சிந்தனைகளை நாம் பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும். :-))

மனுநீதியில் குலத்திற்கேற்ப நீதியும் மாறும். அதில் அனைவருக்கும் பொதுவான சட்டதிட்டங்கள் கிடையாது. ஆனால் நம் வள்ளுவரின் குறள் அப்படிப்பட்டதல்லவே.

’மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’ என்று துணிந்து கூறியவராயிற்றே நம் தெய்வப்புலவர்.

அதுமட்டுமா? ’பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற புரட்சிச் சிந்தனைக்குச் சொந்தக்காரராயிற்றே! உலகில் வேறு எவருமே இவ்வாறு கூறியதில்லையே ஐயா!

இவ்வளவு சிறப்புக்களும் திருக்குறளில் இருப்பதைக் கண்ட ’மனோன்மணீயம்’ என்ற நாடக நூலின் ஆசிரியரான சுந்தரம்பிள்ளை,

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கொரு நீதி?’ என்கிறார்.
(இதன் பொருள்: வள்ளுவரின் குறளைக் குற்றமறக் கற்றவர்கள் ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும் மனு முதலியோரின் நீதி நூல்களை மனத்தாலும் நினைப்பார்களோ??)

ஆகவே பேராசிரியரே, நம் வள்ளுவப் பெருந்தகையின் வாழ்வியல் சிந்தனைகள் யாரிடமிருந்தும் இரவல் வாங்கப்படாத ‘அக்மார்க்’ ஒரிஜினல் சிந்தனைகளே; அவை நம் தமிழ்/தமிழர் நாகரிகத்தையே சிறப்பாய்ப் பிரதிபலிக்கின்றன.

அன்புடன்,
மேகலா





 

Nagarajan Vadivel

unread,
Feb 14, 2014, 1:25:40 AM2/14/14
to vallamai
நீங்க நல்லாத்தான் சொல்றீங்க.  இதை மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்கள் கருத்து என்னவோ

மெளனம்

Hari Krishnan

unread,
Feb 14, 2014, 2:01:32 AM2/14/14
to vallamai, மின்தமிழ்

2014-02-14 11:28 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு’ என்றும்,


கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து. ~~~~~~~~~~~~~~> ???????

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

PRASATH

unread,
Feb 14, 2014, 3:09:40 AM2/14/14
to vallamai, மின்தமிழ்
nice write up akka...

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Feb 15, 2014, 2:16:06 AM2/15/14
to vall...@googlegroups.com
அன்பின் திருமிகு மேகலா அவர்களே

காமத்துப்பாலா?
இன்பத்துப்பாலா?
எல்லாவற்றிற்கும் 
அப்பால் 
இந்த காதலின் பால்
என்று
இனிக்க இனிக்க‌
எழுதிய வள்ளுவனை
நினைக்க நினைக்க‌
வைத்து விட்டீர்கள்
உங்கள் சொல்லோவியங்களால்.
"வாளற்ற புற்கென்ற.."
என்பதில்
காதலின் நிறம்
பச்சை எனும் பசலை
என்று தாங்கள் எழுதியிருந்த விதம்
சிந்திக்க வைத்தது.

”வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.” 

காதலி தன் விரல் எவ்வளவு கூர்மையானது என்று பெருமை பேசிக்கொண்டிருந்தாள.நான் புல் அறுக்கப்போனால் எனக்கு அரிவாளே தேவையில்லை.தேவை என்றால் என் காந்தள் விரல்கள் கூட "கத்திகள்"
ஆகும் என்று வீரம் பேசிய பொழுதும் தலைவனின் பிரிவுத்துயரம் அவளை வலுவற்றவளாய் வதைத்து விட்டது.அவன் பிரிந்த நாளிலிருந்து கணக்கிட்டு அதை ஒவ்வொரு புள்ளியாய் சுவரில் தேய்த்து தேய்த்து அவள் கைவிரல்கள்
தேய்ந்தே போய்விட்டது.

புல் கென்ற (கெல் =களை பிடுங்குவது போல் பிடுங்குதல்) புற்கென்ற ஆயிற்று.வேரோடு பிடுங்குவது தானே கெல்லுதல் ஆகும்.அத்தகைய வேளாண்
தொழில் அவளுக்கு "கத்தி"யின்றி செய்யும் யுத்தம் தான்.அந்த வலிய விரல்கள் கூட தேய்ந்து போனதாம்.
அருமையான வள்ளுவனின் நயம் இது.

அன்புடன் ருத்ரா
 


On Thursday, February 13, 2014 5:26:16 PM UTC-8, Megala wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages