குளிர்த்தல் Vs குளிர்தல்

83 views
Skip to first unread message

என். சொக்கன்

unread,
Jan 25, 2013, 1:57:32 AM1/25/13
to vall...@googlegroups.com

ஒரு திரைப்பாடலில் ‘குடைக்கம்பி குளிர்த்தது’ என்ற வரியைக் கேட்டேன். அதுகுறித்து ஒரு சந்தேகம்!

அது ‘குளிர்ந்தது’ என்றல்லவா இருக்கவேண்டும்? அதுவும் மெட்டில் கச்சிதமாக உட்காருமே, ஏன் ‘குளிர்த்தது’ என்று அவர் எழுதவேண்டும்?

இங்கே ’குளிர்தல்’ என்பதுதான் வேர்ச்சொல், மலர்தல் ==> மலர்ந்தது, அதுபோல, குளிர்தல் ==> குளிர்ந்தது. சரிதானே? ‘மலர்த்தது’, ‘குளிர்த்தது’ என்று வருமா?

கொஞ்சம் தேடினேன். கம்ப ராமாயணத்தில் ‘குளிர்த்தது’ என்ற வார்த்தை கிடைத்தது.

சுந்தரகாண்டத்தில் அனுமனைப் பிடித்த ராவணன் படையினர் அவனுடைய வாலில் நெருப்பு வைக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சீதை அக்கினி தேவனைப் பிரார்த்தனை செய்கிறாள், ‘அனுமனைச் சுடாதே’ என்று வேண்டுகோள் (அல்லது கட்டளை) வைக்கிறாள். உடனே, அனுமனின் வால் குளிர்ந்துவிடுகிறது. இதைச் சொல்லும் கம்பன் வரிகள்: ‘தண்மையால் குளிர்த்தது அக் குரிசில் வால்.’

’அனுமன் வால் குளிர்த்தது’ என்று கம்பன் வர்ணிப்பது சரி என்றால், ‘குடைக்கம்பி குளிர்த்தது’ என்று இந்தப் பெண் பாடுவதும் சரிதான்.

ஆனால், ‘குளிர்ந்தது’க்கும் ‘குளிர்த்தது’க்கும் என்ன வித்தியாசம்? எதை எப்போது பயன்படுத்தவேண்டும்?

அதையும் தேடினேன். எனக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. Logicalலாக யோசித்தபோது தோன்றியதை எழுதுகிறேன், பிழையிருந்தால் சுட்டிக்காட்டித் திருத்துங்கள்.

1. ஒரு கப் காஃபி, சுடச்சுடக் கொண்டுவந்து வைக்கிறேன், அதை அப்படியே மறந்துவிடுகிறேன். ஒரு மணி நேரம் கழித்து, Hot Coffeeயாக இருந்த அது குளிர்ந்த Cold Coffeeயாக மாறிவிடுகிறது.

2. கடையில் குளிர் நீர், ஐஸ் கட்டி போன்றவற்றைப் பயன்படுத்தி நேராக Cold Coffee தயாரிக்கிறார்கள்

இந்த இரண்டுக்கும் ஒரு வித்தியாசம், முதல் காஃபி தானே குளிர்ந்தது, இரண்டாவது காஃபியை நாமாகக் குளிரச்செய்தோம். அதாவது #1 குளிர்ந்த காஃபி #2 குளிர்த்த காஃபி

இங்கே அனுமனின் வால் தானாகக் குளிரவில்லை, அந்தப் பெண்ணின் குடைக் கம்பி தானாகக் குளிரவில்லை, சீதையின் பிரார்த்தனையும், மழைத் தண்ணீரும் அவற்றைக் குளிரச் செய்தன, ஆகவே குளிர்த்த வால், குளிர்த்த குடைக்கம்பி என்று பயன்படுத்துகிறோம். ஆக, குளிர்த்தல் = குளிரவைத்தல்.

இந்த விளக்கம் சரியா? தவறா? தீர்ப்புச் சொல்லுங்கள்!

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு

Anna Kannan

unread,
Jan 25, 2013, 2:51:17 AM1/25/13
to vall...@googlegroups.com
துளிர்த்தது என்கிறபோது தானே துளிர்த்தது என்பதே பொருள்.

சிலிர்த்தது என்கிறபோதும் தானே சிலிர்த்தது என்றே பொருள்.

ஆனால், அழித்தது / அழிந்தது, ஒழித்தது / ஒழிந்தது போன்ற இடங்களில் நாமாகச் செய்தது, தானாக நடந்தது என்ற பொருள் வரும்.

குளிர்த்தது / குளிர்ந்தது என்பதில் இரண்டுமே இறந்த காலத்தைக் குறிக்கின்றன. ஆயினும் அதில் கால வேறுபாடு இருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன். அதாவது, சற்று முன் (Just before) குளிர்த்தது, முன்பே குளிர்ந்தது என்கிறபோது பொருள் பொருந்துகிறது.

மேலும் குளிர்த்தது என்பதை வேறு யாரோ பயன்படுத்தினால் மட்டுமே இன்னொருவர் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. கம்பனுக்கு முன் யார் அச்சொல்லைப் பயன்படுத்தினார்?

1996இல் வெளியான எனது 'பூபாளம்' நூலில், மழைத்தது, தமிழ்த்தது ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன். நாமே சொற்களை உருவாக்கும் வாய்ப்புகள், தமிழில் நிரம்பவும் உள்ளன.

என். சொக்கன்

unread,
Jan 25, 2013, 3:04:04 AM1/25/13
to vall...@googlegroups.com
அண்ணா கண்ணன்,

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி,

நாமே சொற்களை உருவாக்கலாமா என்கிற விவாதம் மிகப் பெரியது. அதற்குள் நான் இப்போது செல்ல விரும்பவில்லை, நான் அறிய விரும்புவது, குளிர்ந்தது / குளிர்த்தது ஆகிய வார்த்தைகளை எங்கே, எப்படிப் பயன்படுத்துவது என்பதைமட்டுமே :)

இதுவரை 2 விளக்கங்கள் வந்துள்ளன, நான் ஊகித்தது ஒன்று, நீங்கள் தந்துள்ளது ஒன்று, இன்னும் பல உதாரணங்கள் / விளக்கங்கள் வரும் என நம்புகிறேன், சுவாரஸ்யமான தலைப்பு இது,

என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

Meena Muthu

unread,
Jan 25, 2013, 5:44:37 AM1/25/13
to vall...@googlegroups.com

ஒரு திரைப்பாடலில் ‘குடைக்கம்பி குளிர்த்தது’ என்ற வரியைக் கேட்டேன்.

துளிர்த்தது என்றல்லவா வரும்




Anna Kannan

unread,
Jan 25, 2013, 5:45:12 AM1/25/13
to vall...@googlegroups.com

என். சொக்கன்

unread,
Jan 25, 2013, 6:09:09 AM1/25/13
to vall...@googlegroups.com
ஃபோனிலும் இணையத்திலும் பலமுறை கேட்டுள்ளேன், பெண் குரல் ‘குளிர்த்தது’ என்றுதான் பாடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அது வழக்கத்தில் இல்லாத வார்த்தை என்பதால் மக்கள் அதைத் ‘துளிர்த்தது’ என்று கேட்டு எழுதியுள்ளார்களோ என்னவோ,

சந்தேகம் தீர ஒரே வழி, ’வைரமுத்து 1000 பாடல்கள்’ புத்தகத்தில் இந்த வரி உள்ளதா என்று பார்க்கலாம் :)

: என். சொக்கன்,
பெங்களூரு.

என். சொக்கன்

unread,
Jan 25, 2013, 6:15:25 AM1/25/13
to vall...@googlegroups.com
நண்பர் பார்த்துவிட்டுச் சொன்னார், அது ‘துளிர்த்தது’தானாம். நான்தான் தவறாகக் கேட்டு எழுதிவிட்டேன். மன்னிக்க!

But my original question remains the same, சினிமாப் பாட்டை மறந்துவிடுவோம், கம்பன் சொன்ன ‘குளிர்த்தது’வுக்கும் நாம் பயன்படுத்துகிற ‘குளிர்ந்தது’வுக்கும் வித்தியாசம் என்ன? :)

என். சொக்கன்,
பெங்களூரு.

Nagarajan Vadivel

unread,
Jan 25, 2013, 6:36:02 AM1/25/13
to vallamai
//அது ‘துளிர்த்தது’தானாம்//

mazhaiththuli theriththadhu enakkullae kuliththadhu

-The raindrops are splashing...and getting chilly within me....

ninaiththadhu paliththadhu kudaikkambi thulirththadhu

-All my wishes are coming true...and the hot iron is cooling..


http://www.youtube.com/watch?v=SQILddRjzFQ

vaan maegam pooppoovaaith thoovum
-The clouds in the sky..are raining flowers..

dhaegam ennavaagum inbamaaga noagum
-How will my body stand it? It will be overcome with joy..

mazhaiththuli theriththadhu enakkullae kuliththadhu
-The raindrops are splashing...and getting chilly within me....

ninaiththadhu paliththadhu kudaikkambi thulirththadhu
-All my wishes are coming true...and the hot iron is cooling..

vaanam muththukkal sindhi
-The sky is showering pearls..

vaazhvu venradhu kaadhal venradhu
-and wishing me a good life...and victory of love..

maegam vandhadhu pookkal sindhudhu
-the clouds have come and showered flowers..

aalumillai saerththedukka moolumillai koarththedukka
-yet there's no one to gather it nor a thread to make a garland

(vaan megam - chorus repeat)

vaanilae vaanilae neerin thoaranangaloa
-The sky, the sky...are these raindrops the decorations?

en manam pongudhae enna kaaranangaloa
-My heart is in ecstacy..what could be the reason?

avan vizhi asaindhadhil ival manam asaindhadhoa
-Because his heart has moved..has mine moved also?

thalirkaram pidikkaiyil malarkkodi silirththadhoa
-When tender hands clasp...will flowers sprout there?

saalai engum ingae sangeedha maedaiyaanadhoa vaadai paadudhoa
-Have all these roads become a stage for music?


thooral poadudhoa thoagai aadudhoa
-Is the rain drizzling, or performing?

boomiyengum kaviyarangam saaral paadum jaladharangam
-With the rain's percussion, the world has become a stage for poets...

Nagarajan


2013/1/25 என். சொக்கன் <ncho...@gmail.com>
--
 
 

வேந்தன் அரசு

unread,
Jan 25, 2013, 9:03:42 AM1/25/13
to vall...@googlegroups.com
கு ளி ர்ந்தது என்பது செய்வினை 
குளிர்த்தது என்பது செயப்பாட்டு வினை 

குடைக்கம்பி தானே குளிர்ந்தால் குளிர்ந்தது 
பிறவினையால் குளிர்ந்தால் குளிர்த்தது 

 தண்மையால்  குளிர்த்தது என்பது சரியே 

உங்க பிள்ளையை நன்றாக வளருங்கள் என்று பரவலாக  கேட்கிறோம் 
வளர்த்துங்கள் என்பதே சரியான வழக்கு 

சில தருணங்களில் எழுவாய் தொக்கி இருக்கும் 
உடல் சிலிர்த்தது என்பது  ஒரு காரணம் கொண்டுதானே 
அவர் பேச்சை கேட்டு மெய் சிலிர்த்தது 

ஒரு வல்லின எழுத்து  செய்வினையை செயப்பாட்டு வினையாக்கிடும் 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jan 25, 2013, 1:56:16 PM1/25/13
to vall...@googlegroups.com

நான் கேட்பது அபத்தமாக இருந்தால் கோபம் கொள்ள வேண்டாம்... தயவு செய்து....
நான் இலக்கணம்  தவிர்த்து வேறு பொருளில் பார்த்தேன்....
http://ta.wikipedia.org/s/jiw <<
செய்வினை என்பது பழங்காலந்தொட்டு இலங்கை,கேரளா மற்றும் உலகின் பல பாகங்களிலும் ஒரு மனித சக்தியினை இன்னொருவரின் பூசை முறையினால் கட்டுப்படுத்தப்படும் செயலாக அழைக்கப்படுகின்றது.இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாத நிலையாகவே உள்ளது.இச்செய்வினை செய்யும் முறையினைப் பலர் உணமையெனவும் சிலர் செய்வினையை ஒரு மூட நம்பிக்கை எனவும் கூறுவர். இருப்பினும் செய்வினை எனப்படுவது மனிதர் ஒருவரின் சாதகக் குறிப்பின்படி அவருக்குப் பகையாக உள்ள கோள்களிற்குப் பலமுறைகள் பூசை செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளே ஆகும்.

...எனக் குறிப்பிடுகிறது.  அப்படியானால் யாராவது செய்விப்பதை  செயப்பாட்டு வினை என்றுதானே சொல்ல வேண்டும்? செய்வினை எனக்குறிப்பது  தவறுதானே ?


அன்புடன்
..... தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages