ஒழுக்கம் விழுப்பம் தரும் (வித்யாசாகர்) கவிதை!

275 views
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
Aug 17, 2012, 3:35:51 AM8/17/12
to edi...@vidhyasaagar.com
ஒழுக்கம் விழுப்பம் தரும்..

ஒரு காலதவத்தின் வரம்
கடவுள் கற்பிக்கும்
கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும்
காரணம்  புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்!

உண்மை நேர்மை கண்ணியத்தின்
வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும்
மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை
மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்!

விலங்கின்
ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும்
உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித
பிறப்பின் அடையாளம்; ஒழுக்கம்!

கல்லின் உயிரையும்
கடவுளின் உண்மையையும் அகக்கண்ணில்
அறிவிக்கும் ஞான திடம்; உயிருள்ள
இடம்நோக்கி மனிதம் பாய்ச்சும் ரதம்; ஒழுக்கம்!

அறிவின் வெளிச்சத்தை அதிகமாக்கி
அடுத்தவர் நலன்குறித்தும் அனைத்துலக
நன்மை குறித்தும் நடுநிலையோடு சிந்திக்கவைக்கும்,
நல்லது கெட்டதை இது இதுவென்று காட்டும்; ஒழுக்கம்!

மிருகத்து புத்தி மாற்றி மனித அறிவின்
தெளிவில் மிளிறி, மேலேறி
கடவுளின் அவசியத்தையும் கைவிட்டு வெல்லும்,
மனிதன் மனிதனாக வாழ்வதையே உயர்வென்று சொல்லும்; ஒழுக்கம்!

கொலை கொள்ளை காமவெறிகளுக்கு
சவப்பெட்டி பூட்டி, நன்னடத்தையின் மூலம்
நாகரீகம் வளர்த்து, உண்மையின் ஆழத்தில்
உலகின் சந்தோசங்களை வெல்லுமாயுதம்: ஒழுக்கம்!

பொறாமை அகன்று கோபத்தை ஆளக் கற்று
உடையும் மனங்களை அன்பினால் ஈர்த்துவைக்க
சீர்மிகு  குணமிது உதவும், பொய்யின் தடமது ஒழிய - ஞாலத்தின்
பெருமைதனை மனிதனைக்கொண்டு உயர்த்தும்; ஒழுக்கம்!
--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Reply all
Reply to author
Forward
0 new messages