NB> ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
> நீடுவாழ் கென்பாக் கறிந்து.
>> இக்குறளில் என்பாக்கு என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
KMS <<< /பாக்கு/ என்ற இடைச்சொல், தொழிற்பெயர் விகுதியாக வந்துள்ளது.
என்பாக்கு - என்று சொல்லுதல்.
குறள் 1127 - இல், கரப்பாக்கு - மறைதல் , ஒளிதல் என்ற பொருளில் வந்தது.
குறள் 1128-இல், வேபாக்கு = வெய்தாக உண்டல் .
குறட்பாக்கள் 136, 164 - இல், ஏதம் படுபாக்கு அறிந்து = குற்றம் உண்டாதல் அறிந்து.
நன்னூல் நூற்பா 343, பாக்கு என்பது அவ்விகுதியையுடைய மொழியை உணர்த்தும் குறிப்புச் சொல் என்கிறது.
ஆக, குறள் 1132 இன் பொருள்,
அவரோடு உரையாடாமால் ஊடியிருந்தேமாக,
யாம் அவரை நெடிது வாழ்க என்று சொல்லுவேம் என்பதை அறிந்து தும்மினார்.
>>>
-பாக்கு என்னும் எதிர்கால வினையெச்சம்
---------------------------------------------------------------
பா- என்னும் மூலச்சொல் பரவுதல், பாய்தல் என்ற அடிப்படையான பொருள்கொண்டது. இயற்கை எல்லாப் பரப்பிலும், ஒளிச்சேர்க்கைக்குப் பாவி/பரவி இருக்கும் நிறம் பாகு/பாசு என்றாகிறது. பாகல் ‘பச்சை நிறக் காய்’, பா- பய்(பை-) என்று குறுகுவதும் உண்டு. Chlorophyll = பாசு/பாகு/பச்சையம். நெசவிலே நூல்களைப் பரப்புவது பாவு. தரையில் பாவுகல். சங்க காலத்தின் பின், பா- என்பதை அடியாகக் கொண்டு, உள்ளம், உடல், நேரம் பாவிச்செய்வதைப் “பாக்கு” (=செயற்கு) என்ற எதிர்காலம் உணர்த்தும் வினையெச்சம் ஆக்கியுள்ளனர். இதைச் செய்தவர் திருவள்ளுவர் ஆகலாம். ஏனெனில், -பாக்கு “செயற்கு” என்னும் பொருள் தரும் வினையெச்சமாக முதன்முதலிலும், அதிகமாகவும் பாவிப்பது திருக்குறளில் தான் காண்கிறோம். -பான் என்னும் எதிர்காலம் உணர்த்தும் வினையெச்சத்திலும் “பா” மூலத்தாதுவாக உள்ளது. -பாக்கு என்ற வினையெச்சம், பா என்னும் தாதுவில் உருவானதே. “கந்தன் உண்பான் வருவான்” = கந்தன் உண்ண வருவான், இதனையே, “கந்தன் உண்பாக்கு வருவான்” என்றாலும் பொருள் ஒன்றே. எனவே, பா- (வேர்) > -பான் அல்லது -பாக்கு என்ற விகுதிகளை ஈனுகின்றது.“பாக்கு ஈற்று வினையெச்சம் ‘செயற்கு’ என்னும் வாய்பாட்டு எச்சத்தின் திரிபாய் பொருட்டுப் பொருளில் வரும்.” (பாவலரேறு ச. பாலசுந்தரம், கரந்தைத் தமிழ்க் கல்லூரி).
கார் நாற்பது
புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,
வணர்ஒலி ஐம்பாலாய்! வல்வருதல் கூறும்
அணர்த்துஎழு பாம்பின் தலைபோல் புணர்கோடல்
பூங்குலை ஈன்ற புறவு. 11
குழற்சியையுடைய தழைத்த கூந்தலையுடையவளே! மேனோக்கி எழும் பாம்பு எடுக்கும் படம் போல பொருந்திய வெண்காந்தள்கள் பூங்கொத்துகளை ஈன்ற இம்மை மறுமையின்பங்கள் பொருந்துதலையுடைய காடுகள். பொருளைக் கொண்டுவர உன்னை பிரிந்து சென்ற தலைவர் இரைந்து திரும்புவதை கூறாமல் கூறி நிற்கின்றன. (ஐம்பால் என கூந்தலைக் கூறுவது.. கூந்தல் ஐந்து பகுப்பினை உடையதைக் கூறுகிறது.அவை, கொண்டை,சுருள்,பனிச்சை,குழல்,முடி)
மேலும்,
ச. அகத்தியலிங்கம், சங்கத் தமிழ் - 4 : வினையியல்
ஆன் ஈறா?
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006042/page/36/mode/2upபாக்கு
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006042/page/38/mode/2up‘அன்ன மரபின் காலம் கண்ணிய கிளவி’ எனவே, பான் - பாக்கு - வான் - வாக்கு என்பனவும் கொள்ளப்படும்.
எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்’ (நான்மணி. 28)
‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ (கார். 11)
‘கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’ (பு. வெ . 99)
கொள்வாக்கு வந்தான்
என இவ்விகுதி ஈற்று வினைச்சொற்கள் எதிர்காலம் காட்டின.
(தொ. சொ. 231 நச். உரை)
http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/C03.htmlசெய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும் ( நன்னூல் 343)
https://www.tamilvu.org/courses/degree/a021/a0212/html/a0212509.htmபாக்கு² pākku , part. 1. Suffix of a verbal derivative, signifying purpose; எதிர்கால வினையெச்ச விகுதி. உண்பாக்குச்சென்றான் (நன். 343). 2. Ending of a verbal noun; தொழிற் பெயர்விகுதி. கரப்பாக்கு, வேபாக்கு (குறள், 1127, 1128).
நா. கணேசன்